வினோதய சித்தம் (2021) | எல்லாமே என்னால் தான்!

5
வினோதய சித்தம்

றிவுரை வசனம் கொடுப்பதில் பிரபலமான சமுத்திரக்கனி அட்டாகாசமான கதையோடு, கருத்தோடு வினோதய சித்தம் என்ற அழகான படத்தைக் கொடுத்துள்ளார். Image Credt

வினோதய சித்தம்

தான் இல்லையென்றால் எதுவுமே நடக்காது என்று நினைப்பவர் தம்பி ராமையா.

ஒரு விபத்தில் காலமாக, கடவுள் / விதி எதோ ஒன்று போல வரும் சமுத்திரக்கனி, மேலும் 3 மாதங்கள் தம்பி ராமையா கடமைகளை முடிக்க அவகாசம் தருகிறார்.

90 நாட்களே வாழ்க்கையுள்ளது எனும் போது அவர் படிப்படியாக மாறுவதே கதை.

தம்பி ராமையா

துவக்கத்தில் கொஞ்சம் மிகை நடிப்பு செய்துள்ளார். இக்கதாப்பாத்திரம் இவருக்கு முற்றிலும் புதியது. எனவே, இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நிறுவனத்தின் முக்கிய அதிகாரியாக வரும் தம்பி ராமையா கடுமையான உழைப்பாளர். திறமையானவராக இருந்தாலும், தன்னால் தான் அனைத்துமே நடக்கிறது என்று நம்புபவர்.

தன் பிள்ளைகளுக்கு எது சரி எது தவறு என்பதை தீர்மானிப்பதில் தனக்கு தான் அனுபவம் உள்ளது என்று பிடிவாதமாக நம்புபவர்.

சந்தோஷ் சுப்பிரமணியம் படம் பிரகாஷ்ராஜ் போலக் கதாப்பாத்திரம்.

தான் இல்லையென்றாலும் அனைத்தும் சிறப்பாக நடக்கும் என்ற உண்மையை உணரும் போது அதிர்ச்சியாகிறார்.

இதைப் படிப்படியாக அவர் உணரும் காட்சிகள் சிறப்பாக காட்சியமைக்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி

இதுவரை பக்கம் பக்கமாக வசனம் பேசி வந்தவர், இந்தமுறை இரத்தின சுருக்கமாக பேசி அசத்தியுள்ளார்.

தம்பி ராமையா உடனே பயணிக்கும் சமுத்திரக்கனி, ஒவ்வொருமுறையும் அவருக்கு நறுக்கென்று பதிலடி கொடுப்பது ரசிக்கும்படியிருக்கும்.

அதற்குத் தம்பி ராமையாவும் அவர் பாணியில் பதிலளிப்பது சிரிப்பு 🙂 .

கதை

தம்பி ராமையா போல ஒவ்வொருவரும் ஒரு கணத்தில் நடந்து கொண்டு இருப்போம். இவரைப்போலவே அல்ல என்றாலும், தான் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்ற எண்ணத்தில்.

இந்த உலகம் யாருக்காகவும் காத்து இருக்காது. நாம் இல்லையென்றாலும் வேலையை யார் மூலமாவது நடத்திக்கொண்டே இருக்கும்.

அது அலுவலகமாக, குடும்பமாக, நிறுவனமாக என்று எதாக இருந்தாலும்.

இதன் பிறகு எப்படி சமாளிக்கப்போகிறார்கள்? என்று நினைத்த பல சம்பவங்கள் நெருக்கடிகளே இல்லாமல் கடந்து சென்றுள்ளது.

பயப்பட்ட எத்தனையோ நிகழ்வுகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக முடிந்துள்ளது.

எனவே, நம்மால் தான் அனைத்துமே இயங்குகிறது என்று நினைப்பது, முடிவெடுப்பது முட்டாள்தனம்.

யார் பார்க்கலாம்?

இதெல்லாம் லாஜிக்காவே இல்லையே! என்று யோசித்தால், இது படமே இல்லை. ஆனால், சொல்ல வருவது நல்ல கருத்து என்ற அளவில் பார்த்தால் அழகான படம்.

சிறந்த கதை, திரைக்கதை அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றாலும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்படத்தின் ஆழத்தை உணர்ந்து பார்க்க முடியும்.

இளையவர்களுக்கு இப்படம் அனுபவப்பாடமாக இருக்கும். அனுபவத்தில் இப்படத்தின் கருத்தை உணர்வார்கள். ஏனென்றால், பட்டால் தான் புரியும் 🙂 .

கருத்துள்ள, சலிப்பை ஏற்படுத்தாத, அறிவுரைகளை அள்ளித்தெளிக்காத இயல்பான படத்தைக் கொடுத்த சமுத்திரக்கனி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

பரிந்துரைத்தது கோபி மற்றும் ஹரிஷ்.

Zee 5 ல் காணலாம்.

Director Samuthirakani

Producer Abirami Ramanathan

Release Zee 5

இப்படத்துக்கான Wiki பக்கமே இல்லாததால் மேல் விவரங்களைக் கொடுக்க முடியவில்லை.

தொடர்புடைய திரைவிமர்சனம்

Home (2021 மலையாளம்) ஐந்து நிமிடம் பேசலாமா?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

 1. சிறந்த கதை, திரைக்கதை அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றாலும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்படத்தின் ஆழத்தை உணர்ந்து பார்க்க முடியும்.

  உண்மை. அனுபவப்படாத அறிவு கேலிசெய்யும். அனுபவம் தான் ஆசான்.

 2. இந்த படம் பார்க்கும் போது jim carry நடித்த bruce almighty நினைவுக்கு வந்தது. நாம் இந்த பிரபஞ்ச பெருவெளியில் ஒரு சிறு துளியே! நம் வாழ்க்கை எப்படி பிரபஞ்ச இயக்குவிசையால் மாறுகிறது என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

  இந்த உலகம் நாம் பிறப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது நாம் இறந்து பின்பும் பல ஆயிரம் ஆண்டுகள் இருக்கும். ஒருவகையில் நாம் அனைவருமே பயணிகளே. ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றிவிட்டு அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டுவிட்டு அமைவதே நாம் செய்ய வேண்டியது.

  கடமையை செய் செயலின் பயனை இந்த பிரபஞ்ச விசைக்கு விட்டுவிடுவதே நல்லது.

 3. இதுபோல் ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஒரு சிவாஜி படம் வந்தது ஞாபகம்.

 4. @விஜயகுமார் சரியாகக் கூறினீர்கள் 🙂 .

  @ஹரிஷ் 🙂 . பரிந்துரைக்கு நன்றி.

  @மணிகண்டன் “ஒருவகையில் நாம் அனைவருமே பயணிகளே.”

  சரியே. சில விஷயங்கள் அனுபவங்கள் மூலமே புரிகிறது.

  @விஜயகுமார் ஓகே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here