WhatsApp பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள பெரிய பிரச்னை, நம்மிடம் அனுமதி கேட்காமலே ஏதாவது ஒரு குழுவில் நம்மை இணைத்து விட்டு விடுவது தான்.
அதில் இருந்து விலகினால் சம்பந்தப்பட்ட நபருக்கு வருத்தம், சண்டை என்று பெரிய தொல்லை. நமக்கும் எப்படி வெளியே வருவது? என்ற நெருக்கடி இருக்கும்.
இத்தொல்லைகள் இனிமேல் இல்லை. Image Credit
WhatsApp Group Restriction
இனி நம்மை யாராவது குழுவில் சேர்க்க வேண்டும் என்றால், நம்மிடம் அனுமதி பெற வேண்டும் என்ற வசதியைக் கொண்டு வந்துள்ளது.
அதாவது, யாரெல்லாம் நம்மை ஒரு குழுவில் சேர்க்கலாம், சேர்க்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை நம் விருப்பம் போல மாற்றியமைக்கலாம்.
Everyone, My Contacts, Nobody ஆகிய வசதிகள் இருக்கும். இதன்படி நம் விருப்பங்களை மாற்றியமைக்கலாம்.

ஓரிரு வருடங்களுக்கு முன்பே பெரும்பாலான குழுக்களில் இருந்து விலகி விட்டேன். தற்போது மிகச்சில குழுக்களில் மட்டுமே உள்ளேன்.
இனி கூடுதலாகக் குழுக்களில் இணையும் திட்டமில்லை.
எனவே, முதல் வேலையாக “Nobody” தேர்வு செய்து விட்டேன் 🙂 .
விருப்பப்பட்டால் எப்படி குழுவில் இணைவது?
Nobody என்பதிலிருந்து My Contacts / Everyone என்று மாற்றி வைக்கலாம் அல்லது அவர்களை “குழு அழைப்புச் சுட்டி”யை (Group Invite Link) அனுப்பக்கூறி இணையலாம்.
தற்போது சோதனை (Beta) பதிப்பில் உள்ளது, விரைவில் இவ்வசதி அனைவருக்கும் செயல்படுத்தப்படும்.
தொடர்புடைய கட்டுரைகள்
இந்த வசதி வந்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.. நான் ஒன்றிரன்டு குழுக்களில் மட்டுமே இணைத்துள்ளேன்.. வார இறுதியில் விடுமுறையில் கிரிக்கெட் விளையாடி வருகிறேன்.. அனைவரும் ஒரு whatsapp குழுவில் இருக்கிறோம்.. சில சமயங்களில் வெற்றி தோல்வி குறித்த விவாதங்கள் வரும்.. சில நேரங்களில் குழுவை விட்டு வெளியேறினாலும், யாராவது ஒருவர் மீண்டும், இணைத்து விடுவார்.. சில நேரங்களில் தலைவலியாக இருக்கும்.. இந்த வசதி வந்தால் மிகவும் சிறப்பு!!! ஒன்று இரண்டு குழுவுக்கே இந்த நிலை என்றால் பல குழுக்களில் இருப்பவர்களின் நிலை பரிதாபமே…பகிர்வுக்கு நன்றி கிரி..
பல குழுக்களில் இருப்பவர்கள் வேறு வேலையே பார்க்க முடியாது 🙂