2021 NEET தேர்வு முடிவுகள் ஏன் சர்ச்சையாகவில்லை?!

4
NEET 2021 தேர்வு முடிவுகள்

NEET தேர்வுக்குக் கடுமையான எதிர்ப்பு என்று கூறிக்கொண்டு இருந்த ஊடகங்கள், 2021 NEET தேர்வு முடிவுகள் வந்த பிறகு அதுபற்றிப் பேச்சே இல்லை. Image Credit

2021 NEET தேர்வு முடிவுகள்

தேர்வு முடிவுகள் வந்த பிறகு முதல் மதிப்பெண் வாங்கிய மாணவர் மற்றும் சிலரை பற்றிச் செய்திகள் வந்ததே தவிரத் தொடர்ச்சியான செய்திகள் இல்லை.

முழுமையான தகவல்கள் கிடைத்த பிறகு வெளியிடுவார்கள் என்று காத்திருந்தது தான் மிச்சம். இதைப் பற்றிய விவாதங்களோ செய்திகளோ இல்லை.

இணையத்தில் தேடிய பிறகே இவர்கள் ஏன் தேர்வு முடிவுகளைப் பற்றிப் பேசவில்லையெனப் புரிந்தது.

NEET தேர்வில் தமிழக மாணவர்கள் அபாரமாக முன்னேறி வருகிறார்கள் என்பது தான் சுருக்கமான உள்ளடக்கம்.

தற்போது எவ்வளவு மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்துள்ளது குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கென்று அறியும் போது தான் தமிழக அரசியல்வாதிகள், ஊடகங்கள் அமைதிக்கான காரணம் புரிகிறது.

கடந்த 2020 ம் ஆண்டு 1,633 மாணவர்களும் 2021 ஆண்டில் 2,675 அரசுப் பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பழங்குடி மாணவர் உட்பட வசதியில்லாத பல அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியுள்ளனர். பயிற்சி வகுப்பு செல்லாமலே பலர் இம்மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

அதிர்ஷ்டம் இல்லா மாணவர்கள்

தமிழகத்தில் தற்போது NEET க்கு எதிராக நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் திமுக சுய கௌரவத்துக்காக (EGO) நடப்பதே.

NEET தேர்வு தமிழகத்தில் துவங்கிய போது, திமுக எதிர்க்கட்சியாக இருந்ததே இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம்.

2010 ல் காங் அரசால் NEET அறிமுகப்படுத்தப்பட்ட போது கூட்டணிக் கட்சியாக திமுக இருந்தது குறிப்பிடத்தக்கது.

திமுக ஆளுங்கட்சியாக இருந்து இருந்தால், NEET க்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களும் நல்லபடியாகத் தொடர்ந்து இருப்பார்கள்.

ஆனால், மாணவர்களின் கெட்ட நேரம், திமுக எதிர்க்கட்சியாக இருந்து விட்டது. அதோடு ஊடகங்களும் திமுக ஆதரவு ஊடங்களாக இருந்து விட்டது.

எதிர்க்கட்சியாக இருந்தால், ஆளுங்கட்சி எது செய்தாலும் எதிர்ப்பது வழக்கம். அது போல எதிர்ப்பில் தான் NEET தேர்வையும் எதிர்த்து இருக்க வேண்டும்.

காரணம், வளர்ச்சி உட்பட இது போன்ற விஷயங்களில் முற்போக்காக சிந்திக்கக் கூடிய கட்சி திமுக.

NEET வைத்தே 2021 தேர்தலிலும் கம்பு சுத்தியதால், தற்போது வேறு வழி இல்லாமல் அதைத் தொடர சமூக நீதி என்று கூறி எதிர்க்க வேண்டிய நிலை.

இதற்குத் துணைக்கு 12 மாநில முதல்வர்கள் ஆதரவை வேண்டி நின்ற போது அவர்களும் அமைதியாக உள்ளார்கள், ஆதரவு கொடுக்கவில்லை.

தாங்கள் சொன்னது சரி என்று நிரூபிக்கவே முடிவு தெரிந்த AK ராஜன் கமிட்டியை உருவாக்கி, அறிக்கை கொடுத்தார்கள்.

NEET தேர்வை நிறுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் இரண்டாவது முறை கூறியும், இன்னமும் மாணவர்களை நம்பிக்கை கூறி ஏமாற்றி வருகிறார்கள்.

எதிர்மறை எண்ணங்கள்

தமிழகத்து அரசியல்வாதிகள் முழுக்க முழுக்க எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள். அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

வேறு விஷயங்களில் எதிர்ப்புத் தெரிவிப்பது வழக்கமான அரசியல் என்று சகித்து நகர்ந்து விடலாம்.

ஆனால், மாணவர்களின் படிப்பிலும் அரசியல் செய்து அவர்கள் வாழ்க்கையை அழிப்பதை என்ன சமாதானம் கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

யாராவது நம்பிக்கை வார்த்தை கூறுகிறீர்களா பாருங்கள்!

அனைத்துமே மாணவர்களின் உற்சாகத்தை இழக்க வைக்கும் பரப்புரைகளே. இவர்கள் செய்த அரசியலில், நெருக்கடியில் பல மாணவர்கள் தற்கொலை.

அனிதா என்ற ஒரு மாணவியின் தற்கொலை பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்துக்குத் தவறான முன்னுதாரணமாக மாறி விட்டது.

சுயநலம்

உற்சாகத்தைக் கொடுக்காமல் மாணவர்களுக்கு வருடம் முழுவதும் அரசியல்வாதிகளும், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் தங்கள் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக எதிர்மறை செய்திகளையே அளிக்கின்றன.

புதியதலைமுறை தொடர்ச்சியாக எதிர்மறை செய்திகளைக் கொடுக்கிறார்கள் என்றால், NEET தேர்வால் அவர்கள் SRM கல்லூரிக்கு நட்டம்.

எனவே, இவர்கள் NEET எதிர்த்துத் தொடர் செய்திகளைக் கொடுத்து வருகிறார்கள். இது மாணவர்கள் மீதான அக்கறையல்ல, அவர்களுடைய சுயநலம்.

இது புரியாமல் மாணவர்கள் தமிழக ஊடகங்களை நம்பி ஏமாந்து வருவது மிக மிக வருத்தமளிக்கிறது.

இதன் பிறகாவது திமுக தனது சுய கௌரவத்தை விட்டுக்கொடுத்து மாணவர்களைப் பொய் வாக்குறுதிகள் கொடுத்துத் திசை திருப்பாமல் NEET தேர்வைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொஞ்ச நாள் அனைவரும் கிண்டலடிப்பார்கள் பின்னர் அவரவர் வேறு சர்ச்சைகளுக்கு மாறி விடுவார்கள். தமிழகத்தில் சர்ச்சைகளுக்கா பஞ்சம்!

NEET தேர்வு

தமிழகப் பாடத்திட்டங்கள் மாறி விட்டது, மாணவர்கள் சிறப்பாகப் படித்து முன்னேறி, அதிக மதிப்பெண்களைப் பெற்று வருகிறார்கள்.

எனவே, அவர்களுக்கு நம்பிக்கை வார்த்தை கூறவில்லையென்றாலும், எதிர்மறை வார்த்தைகளைக் கூறாதீர்கள்.

எதிர்காலத்தில் தமிழக மாணவர்களே முன்னணியில் இருப்பார்கள் ஆனால், தற்போது தவறான பரப்புரைகளால் தாமதமாகி வருகிறது.

நம் மாணவர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஏராளமான சாதனைகளைச் செய்யக் காத்திருப்பவர்களை எதிர்மறையாகப் பேசி முடக்காதீர்கள்.

இவ்வளவு எதிர்மறை பரப்புரைகளுக்கு இடையேயே மாணவர்கள் சாதிக்கிறார்கள் என்றால், அனைவரின் ஆதரவு இருந்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார்கள்.

அரசியல் செய்ய ஆயிரம் வழிகள் உள்ளது, மாணவர்களின் படிப்பில் அரசியல் வேண்டாம்.

இக்காணொளியில் அரசுப் பள்ளி மாணவர்கள் எவ்வாறு முன்னேறி வந்துள்ளார்கள் என்பதை விளக்கமாக, புள்ளிவிவரத்துடன் கூறியுள்ளார்கள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. “கடந்த 2020 ம் ஆண்டு 1,633 மாணவர்களும் 2021 ஆண்டில் 2,675 அரசுப் பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.”

    நீங்கள் கொடுத்திருக்கும் இந்த தகவலுக்கு மூலம்(source) தர முடியுமா?
    தேர்ச்சி என்று நீங்கள் சொல்வது மருத்துவ கல்லூரி சேர்க்கையா?
    நீங்கள் கொடுத்திருக்கும் இந்த தகவலுக்கு source தர முடியுமா அல்லது எங்கிருந்து எடுத்தீர்கள்?

  2. Giri, I used to love your writing, but recently in order to support BJP and rajni you started writing baseless articles. Getting pass in neet does not mean getting an MBBS seat… tell us how many government school students without going to coaching got the medical seat? You can’t give the number because that will break your baseless article

  3. @Srini

    “நீங்கள் கொடுத்திருக்கும் இந்த தகவலுக்கு மூலம்(source) தர முடியுமா?”

    தமிழ்நாட்டில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அதிகரிப்பு –> என்று கூகுளில் தேடினாலே பல செய்தி தளங்களின் மூலம் கிடைக்கும்.

    அதோடு இணைக்கப்பட்ட காணொளியிலும் கூடுதல் விவரங்கள் உள்ளன.

    “தேர்ச்சி என்று நீங்கள் சொல்வது மருத்துவ கல்லூரி சேர்க்கையா?”

    தேர்ச்சி என்பது NEET தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே. அதாவது 2020 வருடத்தை விட 2021 ம் ஆண்டில் அதிகமாக எவ்வளவு அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பது.

    சேர்க்கை விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்று நினைக்கிறேன்.

  4. @Vaithees

    “Giri, I used to love your writing,

    நன்றி

    “but recently in order to support BJP and rajni you started writing baseless articles.”

    இத்தளத்தில் துவக்கத்தில் இருந்தே வலது சாரி செயல்களைப் பெரும்பாலும் ஆதரித்தே வந்துள்ளேன்.

    நான் ரஜினி ரசிகன் தான். இதுவும் என் தளத்தைத் தொடர்ந்து படிக்கும் அனைவருக்கும் தெரியும்.

    https://www.giriblog.com/neautral-is-possible-or-not/ இதில் விளக்கமாக என் நிலை கூறப்பட்டுள்ளது.

    ஆனால் நீங்கள் கூறும் Baseless கட்டுரைகளை, தவறான தகவல்களை என்றும் எழுதியதில்லை. ஒருவேளை தவறுதலாக எழுதி இருந்தால், சுட்டிக்காட்டினால் திருத்தி இருப்பேன்.

    “Getting pass in neet does not mean getting an MBBS seat…”

    அப்படி எங்காவது நான் குறிப்பிட்டுள்ளேனா?

    “tell us how many government school students without going to coaching got the medical seat? You can’t give the number because that will break your baseless article”

    நீங்கள் கேட்கும் கேள்விக்கு என்னால் மட்டுமல்ல யாராலும் பதில் கூற முடியாது.

    வெற்றி பெற்ற மாணவர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் கூறப்படுவது.

    பல மாவட்டங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளியிலேயே பயிற்சி அளித்ததால் கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள். இவர்கள் தனியார் பயிற்சி வகுப்பு செல்லவில்லை.

    (மேல் உள்ள காணொளியில் பள்ளி / மாவட்ட / மாணவர்கள் எண்ணிக்கை விவரங்கள் உள்ளது).

    இது போல அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி அளித்தால், நிச்சயம் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.

    நீங்களாக ஒன்றை புரிந்துகொண்டு Baseless article என்று குற்றம்சாட்டுவது சரியல்ல. சந்தேகம் இருந்தால் தெளிவுபடுத்திக்கொண்டு விமர்சனத்தை முன் வைப்பதே சரி.

    மேலே தேர்ச்சியா / சேர்க்கையா என்று srini அவர்கள் கேட்டது போல.

    எழுதிய நான்கு வரிகளில் இரு முறை Baseless article எழுதுவதாக கூறியுள்ளீர்கள்.

    அப்படி என்ன Baseless ஆக எழுதியுள்ளேன் என்பதை விளக்கவும்.

    இதுவரை என் தளத்தில் விமர்சனங்களை முன் வைத்துள்ளேன், தவறான தகவல்களைக் கொடுத்ததில்லை.

    எனவே, உங்களுக்குச் சவாலாகவே கூறுகிறேன்.

    எந்தக் கட்டுரையை Baseless ஆக எழுதி உள்ளேன்? என்ன விவரங்கள் என்பதை இங்கே Link கொடுத்துக் கேள்வி கேட்கவும்.

    என்னால் அதற்குப் பதில் அளிக்க முடியும். எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here