WhatsApp Online Status | புதிய வசதிகள் என்னென்ன?

8
WhatsApp Online status

னைவரது வாழ்விலும் தவிர்க்க முடியாத சேவையாக மாறி விட்ட வாட்சாப், Privacy, WhatsApp Online Status, க்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல வசதிகளை அறிமுகப்படுத்தப்போகிறது. Image Credit

Privacy

வாட்சாப் ஏற்கனவே பல வசதிகளைக் கொடுத்துள்ளது. அதில் முக்கியமானது Group ல் இணைய அனுமதி கேட்பது.

அதாவது, முன்பு எவர் வேண்டும் என்றாலும் நம்மை ஏதாவது ஒரு குழுவில் அனுமதி இல்லாமல் இணைத்து விடலாம். இது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது.

ஏனென்றால், நமக்கு விருப்பமில்லாத, கருத்துக்கு ஒத்துவராத குழுவில் கூட இணைத்து விடுவார்கள். வெளியே சென்றால் கோபித்துக் கொள்வார்கள்.

பெரிய தலைவலியாக இருந்தது.

ஆனால், இதைத் தடை செய்யும் வசதி வந்ததும், நிம்மதியானது. அதாவது நாம் விருப்பப்பட்டால் மட்டும் இணையலாம் அல்லது தவிர்த்து விடலாம்.

இது பல பிரச்சனைகளைத் தவிர்த்தது.

WhatsApp Online status

ஆனால், WhatsApp Online Status இருப்பதால், அதைப்பார்த்துப் பதில் உடனே கூறவில்லை, கண்டுகொள்ளவில்லை என்பது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்தன.

அதோடு யார் எந்த நேரத்தில் Online ல் இருப்பார் என்று கண்காணிக்க முடிந்தது.

இதற்குத் தீர்வாக Online Status மறைக்கும் வசதியை WhatsApp படிப்படியாக அனைவருக்கும் கொண்டுவரப்போகிறது. சிலருக்கு ஏற்கனவே வந்து இருக்கலாம்.

கூடுதல் வசதிகள்

  • தட்டச்சுச் செய்யச் சோம்பேறித்தனம், எழுத்துப்பிழை, விரைவாகக் கூற என்று பல காரணங்களால் பலர் Voice Messsage பயன்படுத்துகிறார்கள்.
  • அதிலும் தற்போது Voice வெளியிடும் முன்பு சரிபார்ப்பது, Pause/resume recording, போன்ற வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
  • குழுவில் வெளியேறும் போது மற்றவர்களுக்குத் தெரியாமல் இனி வெளியேறலாம்.
  • இவ்வாறு வெளியேறுபவர்கள் அறிவிப்பு Admin களுக்கு மட்டும் தெரியும்.
  • 100 MB கோப்புகளை முன்பு பகிர முடியும் தற்போது 2 GB வரை அனுப்ப முடியும்.
  • Admin விரும்பினால் எவருடைய Message யையும் நீக்க முடியும்.
  • முன்பு 256 உறுப்பினர்கள் வரை குழுவில் இணைக்கலாம், தற்போது 512 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஒரே நேரத்தில் 32 பேர் வரை Audio Call பேசலாம்.
  • Message களை Screenshot எடுக்கத் தடை.

மேற்கூறிய வசதிகள் படிப்படியாக அனைவருக்கும் வழங்கப்படும். சிலருக்கு ஏற்கனவே வந்து இருக்கலாம், மற்றவர்களுக்கு விரைவில் வரலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

WhatsApp OTP SCAM எப்படி நடைபெறுகிறது?

WhatsApp Pay UPI யை செயல்படுத்துவது எப்படி?

giriblog

giriblog தளம் 16 ஆண்டுகளைக் கடந்து 17 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், YouTube காலத்திலும் என் தளத்தையும் இன்னமும் பட்டியலில் வைத்து இருப்பதற்கு அனைவருக்கும் மிக்க நன்றி.

2010 ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 90% கட்டுரைகளில் கருத்திட்டு என்னை ஊக்குவித்து வரும் நண்பர் யாசினுக்குச் சிறப்பு நன்றி.

தொடர்பில் இருங்கள் 🙂 .

அன்புடன்

கிரி

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. பயனுள்ள தகவல்கள். நன்றி.

    16 ஆண்டுகளாகத் தொய்வின்றித் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். பாராட்டுகளும் 17_ஆம் ஆண்டுக்கு நல்வாழ்த்துகளும்!

  2. Whatsapp குறித்த புதிய தகவல்களை தந்தமைக்கு நன்றி கிரி..புதிய தொழில்நுட்ப பயன்பாட்டில் அதீத ஆர்வம் எனக்கு இல்லையென்றாலும், எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள எப்போதும் ஆர்வமாக இருப்பேன்.. உங்கள் தளத்தின் மூலம் பல தொழில்நுட்ப தகவல்களை கடந்த பல வருடங்களாக தெரிந்து கொண்டு வருகிறேன்..

    நான் முன்பே கூறியது போல் தான், இணையத்தில் நீங்கள் எழுத போகும் கடைசி பதிவிலும் என்னுடைய பின்னூட்டம் (இறைவன் எனக்கு உலகில் சுவாசிக்க வாய்ப்பளித்தால்) கண்டிப்பாக இருக்கும்.. உங்கள் எழுத்துக்கள் தொடரும் வரை, ஒரு வாசகனாக நானும் உங்களை தொடர்ந்து கொண்டே வருவேன்..

    கிரி.. என்ன தான் பீசா,kfc,பர்க்கர் என மேற்கத்திய உணவுகள் சுவைக்கு நாம் அடிமையாகி போனாலும், இடையில் எப்போதாவது பழைய கஞ்சியையும், கெட்டி தயிரையும், ஊறுகாய் மிளகாய்யுடன் சாப்பிடும் சுவை இருக்கிறதே அலாதி சுவை.. எனக்கு உங்கள் எழுத்துக்கள் அது போலத்தான்.. ஒரு பணியை இத்தனை ஆண்டுகள் நீங்கள் தொடர்ந்து சலிக்காமல் செய்து வருகிறீர்கள்.. அதுவே 90% ஆட்களால் செய்ய முடியாமல் போகும்.. ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வம் படிப்படியாக குறைந்து போகும்.. ஆனால் நீங்கள் எதையும் யோசிக்காமல் தொடர்ந்து இயங்கி வருவது உண்மையில் வியப்பான ஒன்று.

    நானும் ஒரு சமயத்தில் மெத்த படித்த மேதாவிகள் சிலரை இணையத்தில் பின் தொடர்ந்து அவர்களின் எழுத்துக்களை வாசித்து வந்தேன்.. ஒரு கட்டத்தில் சிலரது எழுத்துக்களில் அவர்களது வன்மம் வெளிப்படுவதை கண்டுள்ளேன். சிலர் அவர்களின் மேதாவி தனத்தை எழுத்துக்களில் காட்டுவதை பார்த்திருக்கிறேன்..

    இது போல ஏற்பட்ட சில கசப்பான எண்ணங்களால் உங்களையும், அ.முத்துலிங்கம் ஐயாவை தவிர வேறு யாரையும் தொடர்வது இல்லை.. இணையத்தில் அரிதாக எப்போதாவது சிலரது கட்டுரைகள் படிப்பதுண்டு.. உங்கள் பணி இன்னும் வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக தொடர என் வாழ்த்துக்கள் & பிராத்தனைகள்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @யாசின்

    உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    நான் கூறுவது மிகையாக இருக்கலாம் அல்லது நீங்கள் கூறியதுக்கு பதில் அளிக்க உயர்த்தி கூறுவதாக நினைக்கலாம் ஆனால், அப்படியில்லை.

    எழுதுவது எனக்கு Passion எனவே நான் தொடர்ந்து எழுதுவது பெரியவிஷயமில்லை.

    ஆனால், இவ்வளவு வருடங்களாக ஒருவரைத் தொடர்வது, அதை விட முக்கியமாக கருத்திடுவது உண்மையிலேயே பெரிய விஷயம்.

    உங்களைப்போலப் பலர் தொடர்ச்சியாக படிக்கிறார்கள். ட்விட்டரில் கூட ராம்குமார் என்பவர் 2008 ல் இருந்து படிப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

    எனவே, இவர் போல பலர் உள்ளனர் ஆனால் தெரிவதில்லை.

    ஆனால், தொடர்ச்சியாக கருத்திடுவது என்பது இயலாத ஒன்று யாசின். உங்கள் நிலையில் நான் இருந்தாலும் இதே போலத் தொடருவேன் என்பது நிச்சயமில்லை.

    எனவே தான் கூறுகிறேன் நீங்கள் செய்வது மிகப்பெரிய விஷயம் என்று.

    கருத்திடுவதிலும் எதோ கருத்திட வேண்டும் (template comment) என்றில்லாமல் ஒவ்வொரு கருத்தையும் விரிவாக, உங்கள் அனுபவங்களையும் சேர்த்து கருத்திடுகிறீர்கள்.

    இதெல்லாம் சாதாரண செயல் இல்லை யாசின். சிலர் ‘கிரி நாங்களும் தான் படிக்கிறோம் ஆனால், நீங்க யாசினை மட்டும் சொல்றீங்க’ என்று கூறும் போது அவர்களுக்கு கூறுவது இது தான்.

    நீங்க சம்திங் ஸ்பெஷல்.. சும்மா பேச்சுக்காக கூறவில்லை.

    சில கருத்துகள் உங்களுக்கு உடன்பாடில்லையென்றாலும் மன்னித்து இவ்வளவு வருடங்கள் தொடர்ந்து கருத்திடவும் மனது வேண்டும் யாசின். அது உங்களுக்கு உள்ளது.

    என்றாவது ஒருநாள் கருத்து வேறுபாடுகளால் நான் எழுதுவதும் பிடிக்காமல் போகலாம், அப்போது ஒருவேளை நீங்கள் படிப்பதை நிறுத்தினாலும் எனக்கு வருத்தம் இருக்குமே தவிர கோபம் இருக்காது.

    காரணம், கிட்டத்தட்ட 12+ வருடங்களாக தொடர்கிறீர்கள். இதுவே பெரிய விஷயம், இனி தொடர்வது எனக்கு போனஸ் தான்.

    இதுவரை உங்களை தொடர வைத்ததே எனக்கு சாதனையாக உள்ளது.

    எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் தனிப்பட்ட வளர்ச்சியில் தடைக்கல்லாக கூட சில நேரங்களில் என் எழுத்து எனக்கு உள்ளது.

    இருப்பினும் எழுதுவதை நேசிக்கிறேன், இதில் புதிதாக கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

    எழுத்து, தொழில்நுட்பம் இரண்டுமே எனக்கும் பிடிப்பதும் இந்த இரண்டுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பாக உள்ளதும் இதை விட முடியாததற்கு காரணம்.

    நேரமின்மையால், பணியால் சில காலங்களில் எழுதுவது குறையலாம் ஆனால், நிறுத்த மாட்டேன்.

    மற்றவர்கள் என்னைக் கட்டுப்படுத்துவதை, நெருக்கடிக்கு ஆளாக்கி எழுதுவதை என்றும் விரும்புவதில்லை. சுதந்திரமாக, எனக்கு சரி என்று படுவதை எழுதவே விரும்புகிறேன்.

    எனவே, இந்தச் சுதந்திரம் எனக்கு விமர்சனங்களை எளிதாக கடக்க உதவுகிறது, பலவற்றை கற்றுக்கொள்ள உதவுகிறது, தவறு இருந்தால் மாற்றிக்கொள்ள உதவுகிறது.

    எனவே, இதே போல மேலும் தொடர்வேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி 🙂 .

    • அனுபவமில்லா மனிதன் இங்கு யார்??..கிரி. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அனுபவங்களும், ஆயிரமாயிரம் கதைகளும் புதைந்து கொண்டிருக்கிறது. அவைகள் தாம் நம்முள் இருக்கிற மனிதத்தை செதுக்குவதாக நம்புகிறேன்.. கண்ணதாசன் ஐயா கூறியது “அனுபவம் தான் கடவுள்”..எவ்வளவு சத்தியமான வார்த்தை.. என்னுடைய அனுபவத்தை உங்கள் தளத்தில் பகிர்ந்து கொள்ள என்னை அனுமதித்தமைக்கு நன்றி. மேலும் நீங்கள் என்னை பற்றி குறிப்பிட்டதை படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது..நன்றி கிரி.

  4. உங்களின் தொழில் நுட்பம் மற்றும் வாழ்க்கை முறை எழுத்தை நான் பாராட்டுகிறேன்.
    உங்கள் சித்தாந்தத்திலிருந்து நான் தள்ளிப் போகிறேன்.ஆனால் என்னுடைய அறிவின்படி வெகு சிலரே வலைப்பதிவைத் தொடர்கின்றனர்.தயவுசெய்து இதை நிறுத்தாதீர்கள்.இது தவம்.இது பரிசு

  5. @விஜயகுமார்

    “உங்களின் தொழில் நுட்பம் மற்றும் வாழ்க்கை முறை எழுத்தை நான் பாராட்டுகிறேன்.”

    நன்றி

    “ங்கள் சித்தாந்தத்திலிருந்து நான் தள்ளிப் போகிறேன்.”

    எல்லோரும் ஒரே மாதிரி சிந்தித்து விட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் ஏது? 🙂

    “என்னுடைய அறிவின்படி வெகு சிலரே வலைப்பதிவைத் தொடர்கின்றனர்.தயவுசெய்து இதை நிறுத்தாதீர்கள்.இது தவம்.இது பரிசு”

    நிறுத்தும் எண்ணமில்லை. சொல்லப்போனால் தொழில்நுட்ப ரீதியாக தளத்தை மேம்படுத்தப் புதிதாக பலவற்றை முயற்சித்து வருகிறேன்.

    எனவே, எழுதுவது எப்படி எனக்கு சுவாரசியமாக உள்ளதோ அதே போலத் தளத்தைத் தொழில்நுட்பத்தில் மேம்படுத்துவதும் சுவாரசியமாக உள்ளது.

    எனவே, தொடரும் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here