சிங்கப்பூர் நினைவுகள்!

3
சிங்கப்பூர் நினைவுகள்!

வம்பர் 1 2018 சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து மூன்று வருடங்கள் முடிந்து நான்காவது வருடம் துவங்குகிறது. நாட்கள் போவதே தெரியவில்லை, இப்பத் தான் வந்த மாதிரி உள்ளது, மூன்று வருடங்கள் ஓடி விட்டது 🙂 . Image Credit

எதிர்பார்த்த வாழ்க்கை

சென்னை வந்த பிறகு, மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். நினைத்தால் ஊருக்குச் செல்ல முடிகிறது. கிட்டத்தட்ட இரு வாரங்களுக்கு ஒருமுறை ஊருக்குச் செல்கிறேன்.

பேருந்துக் கட்டணம் கட்டுபடியாகாது. IRCTC வாழ்க 🙂 .

குறிப்பாக அப்பா உடல்நிலை சரியில்லாத சமயத்தில் அடிக்கடி செல்ல முடிந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது. சிங்கப்பூரில் இருந்து இருந்தால், செய்திருக்க முடியாது.

அதே போலக் குடும்பத்தினருடன் ஊரில் அதிக நேரம் செலவழிக்க முடிகிறது. சுருக்கமாக, நான் எதிர்பார்த்த வாழ்க்கை எனக்குக் கிடைத்து இருக்கிறது.

வங்கிப்பணிகள்

நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்த போது சிங்கப்பூரின் வங்கி சார்ந்த பணிகள், கொஞ்சம் கொஞ்சமாகச் சென்னை, புனே, பிலிப்பைன்ஸ் இடங்களுக்கு நகர்ந்து வருவதாகக் கூறினார்.

2020 ல் வங்கி சார்ந்த பணிகள் மிகக்குறைவாகச் சிங்கப்பூரில் இருக்கும் என்றார், இவர் பணியாளர்களை மேற்கூறிய இடங்களுக்கு மாற்றும் மாற்றல் பொறுப்பில் பணி புரிகிறார்.

அதே போலச் சிங்கப்பூர் அரசு அவர்கள் குடிமக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்து வருவதால், இனி வரும் காலங்களில் பணிகளில் பெரியளவு மாற்றங்கள் இருக்கலாம் என்றார்.

நண்பர்கள்

சிங்கப்பூரை விட்டு வந்தாலும் அங்கே உள்ள நண்பர்கள் இன்னும் என்னை மறக்கவில்லை என்பது எனக்கு மிக மகிழ்ச்சி, தற்போதும் தொடர்பில் உள்ளார்கள்.

இரண்டு நாள் முன்பு கூடக் கோகுல் அழைத்து, “அண்ணா! கோவைக்கு மாற்றல் கிடைக்கலாம் போல உள்ளது, இன்னும் முடிவு செய்யவில்லை” என்று கூறினான்.

யோவ்! எனக்கெல்லாம் தற்போது வாங்கும் சம்பளத்தை விடக் குறைவாகக் கொடுத்தாலும், கோவையில் கிடைத்தால் வந்து விடுவேன் ஆனால், கோவையில் எங்களுக்குக் கிளை இல்லை என்றேன்” சிரித்தான் .

கோகுலை நினைத்தாலே எனக்கு லிட்டில் இந்தியா “Moghul Sweet Shop” தான் நினைவுக்கு வருகிறது. “அண்ணா! இங்க இனிப்பு சாப்பிட்டு ஃபினிஷிங் டச் கொடுப்போம்” என்று தள்ளிட்டு வந்துடுவான் 🙂 .

தங்கமான பையன், இவனை ரொம்ப தவற விடுகிறேன்.

சூர்யா, மகேஷ், சரவணன், சுரேஷ், முத்து, கார்த்தி என்று அனைவருமே தொடர்ச்சியான தொடர்பில் உள்ளார்கள் என்பது மகிழ்ச்சியான ஒன்று.

கொசுறு 

கடந்த முறை ஊருக்குச் சென்று இருந்த போது ஒரு வியப்பான ஒற்றுமை அறிந்து கொள்ள முடிந்தது. நான் கட்டிய வீட்டின் குடிபுகுந்த நாளும், அமரர் “லீ குவான் யூ” அவர்கள்  பிறந்த நாளும் ஒரே நாள் (செப்டம்பர் 16). தொடரும் பந்தம் 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

Bye Bye சிங்கப்பூர்

சிங்கப்பூர் உணவகங்கள்

நவீன சிங்கப்பூரின் தந்தை திரு “லீ குவான் யூ”

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. கிரி, உண்மையில் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது என்பதை என்னாலும் நம்ப முடியவில்லை.. வெகு சீக்கிரம் நாட்கள் சென்று விட்டதாக தான் தோன்றுகிறது.. அப்பா உடல்நிலை சரியில்லாத சமயத்தில் அடிக்கடி செல்ல முடிந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது என்று நீங்கள் கூறியிருப்பது மன நிறைவான ஒரு விஷியம்.. இது உண்மையில் பாக்கியம்..

    சிங்கப்பூரை விட்டு வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலும் நண்பர்கள் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.. கடைசியில் வச்சிங்களே பஞ்ச்!!!! ரெண்டு தேதியும் ஒன்று என்று!!! சூப்பர் ஜி, சூப்பர்.. பந்தங்கள் என்றும் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின் ஆமாம், இப்ப தான் வந்த மாதிரி உள்ளது.. டக்குனு போய்டுச்சு.

    எனக்கும் திரு லீ க்கும் ஒரு பந்தம் இருக்கு 🙂 அவர் நாட்டிலே இருந்து தான் கடனை அடைக்க முடிந்தது. அவருக்கு பெரிய நன்றி.

  3. செம்ம

    ///நான் கட்டிய வீட்டின் குடிபுகுந்த நாளும், அமரர் “லீ குவான் யூ” அவர்கள் பிறந்த நாளும் ஒரே நாள் (செப்டம்பர் 16). தொடரும் பந்தம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here