பட்டாசுக்கு மட்டும் கட்டுப்பாடு நியாயமா?!

3
பட்டாசுக்கு மட்டும் கட்டுப்பாடு நியாயமா?! Standard fire works

ச்சநீதிமன்றம் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.  Image Credit

பட்டாசுக்கு மட்டும் கட்டுப்பாடு நியாயமா?!

ஏதாவது இரண்டு மணி நேரம் மட்டுமே வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக அரசுக் காலை 6 – 7, இரவு 7 – 8 என்று அறிவித்துள்ளது.

பட்டாசு வெடிப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது, ஒலியின் அளவு அதிகம் இருப்பதால், மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

வருடத்தில் ஒரே ஒரு நாள் இது போலக் கொண்டாடுவதற்குக் கட்டுப்பாடு விதிக்கும் உச்சநீதிமன்றம் ஏன் மற்றவற்றைக் கண்டும் காணாமல் இருக்கிறது என்பதே கேள்வி.

பட்டாசு தயாரிக்கும் போது அதிக ஒலி, புகை கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம், அதைவிடுத்து இரண்டு மணி நேரங்கள் தான் அனுமதி என்பது நியாயமா?

நீர்

தொழிற்சாலைகள் கழிவு நீரை ஆற்றில், வாய்க்காலில் கலந்து விட்டு நீர் ஆதாரத்தைக் கேள்விக்குறி ஆக்குகின்றன.

மணல் திருட்டு நடக்கிறது, நீர் வளம் குறைகிறது என்று மணல் அள்ளத் தமிழகத்தில் நீதி மன்றம் தடை விதித்தால், உச்சநீதிமன்றம் மணல் அள்ளத் தடையை விலக்குகிறது.

ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நீர் வளம் அழிக்கப்படுகிறது, குடிக்க நீரில்லை.

சாயத் தொழிற்சாலைகள் தங்களுக்குண்டான விதி முறைகளைப் பின்பற்றாமல், தண்ணீரை மாசுபடுத்துகின்றன, கேட்பாரில்லை.

நிலம்

தங்களுடைய தொழிற்சாலை கழிவுகளை எல்லாம் நிலத்தினுள் செலுத்தி நிலத்தைக் குப்பையாக்கி விட்டார்கள்.

காற்று

Emission Check என்ற ஒன்றுள்ளதா என்பதே பலருக்கு நினைவில்லை, அந்த அளவுக்கு வாகனங்கள் புகையைக் கக்கியபடி செல்கின்றன, அதிலும் குறிப்பாக அரசுப் பேருந்துகள் செய்யும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல.

தொழிற்சாலைகள் அவர்களுக்குண்டான விதிமுறைகளைக் கண்டுகொள்ளாமல் புகையை வெளியேற்றுகின்றன. இது குறித்து கண்டு கொள்வாரில்லை.

இது போல 365 நாட்களும் நீர், நிலம், காற்று மூன்றையும் அனைவரும் மாசுபடுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், இதற்கு எந்தக் கடுமையான விதிமுறைகளோ கட்டுப்பாடோ பின்பற்றப்படுவதில்லை ஆனால், ஒரு நாள், ஒரே ஒரு நாள் வெடி வெடிப்பது குற்றம்.

இதையெல்லாவற்றையும் விட இப்பிரச்சனையே டெல்லியின் காற்று மாசை அடிப்படையாக வைத்துத் தான்.

அங்கே பிரச்சனைனா அங்கே மட்டும் செயல்படுத்துங்க! அதை விட்டுட்டு இந்தியா முழுக்க கட்டுப்பாடு கொண்டு வருவதில் என்ன நியாயம் உள்ளது?!

பட்டாசுக்கு மட்டும் கட்டுப்பாடு நியாயமா?!

நல்லா இருங்க ஜட்ஜய்யா!

கொசுறு 1

இதெல்லாம் ஒரு பக்கம் என்றாலும், மக்களே தற்போது வெடி வெடிப்பதில் ஆர்வம் குறைந்து வருகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. வருடாவருடம் மக்கள் மற்ற விஷயங்களுக்குச் செலவு செய்ய ஆர்வமாகி விட்டார்கள்.

ஒவ்வொரு வருடமும் வெடி வெடிக்கும் சத்தம் குறைந்து வருகிறது. முன்பெல்லாம் தீபாவளிக்கு இரண்டு வாரங்கள் முன்பு இருந்து பட்டாசு சத்தம் கேட்கும்.

ஆனால், தற்போது தீபாவளிக்கு முதல் நாள் தான் கேட்கிறது அதுவும் எங்கேயாவது டொப் டொப்புனு கேட்குது.

கொசுறு 2

கடந்த இரண்டு வருடங்களாக என் முதன்மைப் பண்டிகையாகப் பொங்கலை மாற்றிக்கொண்டேன். ஏனென்றால், பொங்கலுக்கு ஒருவாரம் விடுமுறை மற்றும் எங்கள் ஊர் “பாரியூர்” தேர்த் திருவிழா இணைந்து வருகிறது.

எனவே, ஒரு வாரம் கொண்டாட்டமாக இருக்கும், அனைவரையும் சந்திக்க முடியும். தீபாவளி ஒரே நாளில் முடிந்து விடுவதால், ஆர்வமில்லை.

பசங்களுக்கு மட்டும் துணி, பட்டாசு எடுப்போம், நான் மற்றும் மனைவி கொண்டாடுவதில்லை, சாமி கும்பிடுவதோடு சரி.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. காப்பிரேட் நாட்டுல எதுவும் சடடமாக்கலாம். இந்தியா மட்டுமல்ல இலங்கையிலும் தான் ரணில்விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலகி மகிந்த ராஜபக்ச பிரதமரானது.
    இன்னும் இருக்கு but கூட அரசியல் பேசி உங்களை அலுப்படிக்க விரும்பல தோழா.

  2. கிரி, எங்கள் பகுதியில் எனக்கு நினைவு தெரிந்த வரை முன்பெல்லாம் தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெடி சத்தம் ஆரம்பித்து விடும்.. நான் ஒரு ராக்கெட் பொறியாளனு சொன்ன நம்புவீங்களா??? ராக்கெட் மட்டும் இல்ல துப்பாக்கி, வெடி எல்லாவற்றையும் நானே நண்பர்களின் உதவியுடன் செய்து தீபாவளியை கொண்டாடினோம்..

    அடுப்பெரிக்கவே காசு இல்லாதபோது பட்டாசு வெடிக்க, வீட்ல எங்க காசு கொடுப்பாங்க???, எங்களுக்கான தேவையை நாங்களே பூர்த்தி செய்து மகிழ்ந்து திரிந்தோம் அன்று!!! அந்த நாட்களின் நினைவுகளை தற்போது நினைத்தாலே மனது துள்ளிக்குதிக்கிறது..

    பட்டாசு அதிகம் வெடிக்கும் வீட்டில், லட்ஷிமி வெடிக்கு திரி கிள்ளி கொடுப்பது போல் கொடுத்து கொஞ்சம் பட்டாச ஆட்டடைய போடுறது!!! வெடிக்காத வெடிகளை 4 / 5 தெரு முழுக்க பொறுக்கி மருந்தை எடுத்து நாங்களே பட்டாசு செய்வது!!! முழு நீள சரவெடி வெடிக்கும் போது புகைக்கு நடுவில் புகுந்து சினிமா ஹீரோ போல் பாதி சாரத்தை தெரியாமல் எடுப்பது!!! (தற்போது என் மனைவியிடம் சொன்னால்.. நீங்களா!!! என்று சட்டுனு சிரிச்சிடுவாங்க)..

    எதிர் வீட்டில் வரும் தீபாவளி பலகாரத்தை வாங்கும் போதே கொஞ்சம் பலகாரத்தை டவுசர் பாக்கெட்டில் போடுவது!!! முகத்தை பாவமா வச்சிக்கிட்டு வெடி வெடிக்கிறவங்க வீட்டு முன்னாடி போயி கொஞ்சம் பட்டாச வாங்கி கொண்டு வருவது!!! ஊரு முழுக்க பெரிய வெடியோட பேப்பர் எல்லாம் பொறுக்கி வந்து எங்க வீட்டுக்கு முன்னாடி போட்டுக்குறது!!! என தீபாவளியின் நினைவலைகள் தொடர்ந்து கொண்டே போகும்!!!!

    பண்டிகை என்பது செலவுக்கு நிகழ்வு மட்டும் அல்ல!!! அது நம் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் மறக்காமல் நம் தலைமுறையினருக்கு கற்று கொடுக்க வேண்டிய வாய்ப்பு !!! அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!

  3. @பிரதீபன் ஆமாம் எங்களுக்கே வியப்பு.. எப்படி இது போல டக்குனு பிரதமரே மாற முடியுது. ஒன்றுமே புரியலை.

    @யாசின் இந்த முறை வெடிச்சத்தம் ரொம்பக் குறைவு.

    இருப்பினும் தீபாவளி அன்று வேண்டும் என்றே வைத்தார்களா என்று தெரியவில்லை.. வெளுத்து வாங்கினார்கள்.

    “முழு நீள சரவெடி வெடிக்கும் போது புகைக்கு நடுவில் புகுந்து சினிமா ஹீரோ போல் பாதி சாரத்தை தெரியாமல் எடுப்பது!!! ”

    இதை கேட்டதும்.. துப்பாக்கி பட விஜய் காட்சி தான் நினைவுக்கு வருகிறது 🙂

    உங்க அனுபவம் செமையா இருக்கு.. இந்த முறை, எந்த முறையும் இல்லாத அளவுக்கு தீபாவளி எனக்கு சிறப்பாக இருந்தது.

    அப்பா இறந்ததால் நான் கொண்டாட முடியாது என்றாலும் பசங்க கொண்டாட்டத்தை தடுக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here