மாணவர்கள் தகவல்களை விற்கும் பள்ளிகள்

3
மாணவர்கள் தகவல்களை விற்கும் பள்ளிகள்

கவல் திருட்டு என்பது அனைத்து இடங்களிலும் நடந்து வருகிறது. அவ்வாறு நடக்கும் இடங்களில் பள்ளியும் தொடர்ந்து இருந்து வருகிறது. Image Credit

தகவல் திருட்டு

பணத்துக்காக நம் தகவல்களை மற்றவர்களிடம் விற்று விடுகிறார்கள். நாம் ஜெராக்ஸ் கடை உட்படப் பல்வேறு இடங்களில் அடையாளத்துக்காகக் கொடுக்கும் போது அவற்றைக் குறித்துக் கொண்டு விற்று விடுகிறார்கள்.

அதோடு ஒரு இடத்துக்குச் சென்றால், வந்து சென்றதுக்கான அடையாளமாக மொபைல் எண்ணை வாங்குகிறார்கள். அவ்வாறு வாங்குவதை விற்று விடுகிறார்கள்.

கிரெடிட் கார்டு வாங்க மொபைல் எண் கொடுத்தால், அதை மற்ற வங்கிகளுக்கு விற்று அல்லது முகவர்களுக்கு பகிர்ந்து விடுகிறார்கள்.

இது போலக் கல்லூரிகள், கல்வி சார்ந்த நிறுவனங்களிடம் பள்ளிகள் தங்கள் மாணவர்களின் தகவல்களை விற்று விடுகிறார்கள்.

கல்வி நிறுவனங்கள்

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களைக் கல்லூரி சம்பந்தப்பட்ட நிறுவங்களுக்கு பள்ளிகள் விற்று விட்டார்கள்.

கல்லூரிக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணுக்கு (அம்மா / அப்பா) அழைத்துத் தங்கள் கல்லூரியில், கல்வி நிறுவனங்களில் இணைய அழைத்து, scholarship கொடுப்பதாக தொல்லை செய்கிறார்கள்.

Random எண்ணுக்கு அல்ல, மாணவர் / மாணவியின் பெயரோடு அழைக்கிறார்கள்.

இதுவொரு மிகப்பெரிய SCAM. இதுகுறித்துக் கடந்த வருடமே புகார் வந்ததால், அரசு நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்பட்டது ஆனால், எதுவும் நடக்கவில்லை.

எதுவுமே நடக்காது என்று உறுதியாகத் தெரிந்த செய்தியே.

எந்தத் தனிப்பட்ட நபரின் உரிமைக்கும் பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு மீறல் நடந்தாலும் அதற்கான கடுமையான நடவடிக்கையும் இல்லை, இருக்காது.

பெயர், மொபைல் எண் மட்டும் கொடுத்தார்களா? அல்லது ஆதார் எண் உட்பட அனைத்தையும் கொடுத்துத் தொலைத்தார்களா என்று தெரியவில்லை.

தடுக்காது

இதை அரசு கண்டிப்பாகத் தடுக்காது.

காரணம், இது சாதாரணப் பொதுமக்கள் சார்ந்த பிரச்சனை. அரசுக்கு இதுவொரு முக்கியமான விஷயமில்லை.

எனவே, நடவடிக்கை எடுப்பது போல அறிக்கை விட்டுட்டு அப்படியே காலம் கடத்தி விடுவார்கள். கல்வி நிறுவனங்களிலிருந்து தேவை இருக்கும் வரை அழைப்பார்கள் பின்னர் விட்டுவிடுவார்கள், அதன் பிறகு மக்களும் மறந்து விடுவார்கள்.

வெளிநாடுகளில் இதெல்லாம் மிகப்பெரிய குற்றம், தண்டனைகள் கடுமையாக இருக்கும் ஆனால், இந்தியாவில் தான் இதற்கெல்லாம் மதிப்பே கிடையாதே!

DND செயலியில் புகார் அளிப்பது மட்டுமே பொதுமக்கள் செய்யக்கூடியது. இதற்கு மேல் பெரியளவில் நடவடிக்கை எடுக்க வைக்க முடியும் என்று தோன்றவில்லை.

உங்களுக்கு எப்படி எண் கிடைத்தது?‘ என்று அழைப்பவர்களுடன் சண்டையிடுவதெல்லாம் எந்த விதத்திலும் பயனளிக்கப் போவதில்லை மாறாக, மன உளைச்சலே ஏற்படும்.

எனவே, விருப்பமில்லை என்று கூறி, தொடர்பைத் துண்டித்து, DND யில் புகார் அளிப்பது உத்தமம்.

யாரெல்லாம் தங்கள் பிள்ளைகளைப் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்க வைத்துக் கல்லூரிக்கு முயல்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் மேற்கூறியது முழுக்கப் புரியும்.

கடுமையான சட்டம் வரும் வரை இத்தொல்லைகளைச் சகிப்பதை தவிர வேறு வழி இருப்பதாகத் தோன்றவில்லை.

தொடர்புடைய கட்டுரைகள்

தேவையற்ற அழைப்புகளைத் தவிர்ப்பது எப்படி?

OTP SPAM SCAM | Kotak Mahindra Bank

மொபைல் எண்ணை ஸ்பாம் செய்த SBI வங்கி

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

 1. முன்பை விட தற்போது மிக அதிகமாக spam calls வருகிறது. பெரும்பாலும் முன்னரே ரெகார்ட் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் கால்ஸ் தான் வருகிறது. திட்டவும் முடியவில்லை. DND புகாரைல்லாம் வீண் தான். எந்த நடவடிக்கையும் எடுப்பதேயில்லை.

  முன்னாடி எல்லாம் மொபைல் நம்பர் அல்லது லேண்ட்லைனில் இருந்து கால் செய்வார்கள். அந்த எண் மீது புகார் அளித்தால் அவர்களுக்கு எச்சரிக்கை நிறைய புகார் வந்தால் 30 நாட்களுக்கு அந்த எண்ணை முடக்குவார்கள்.

  இப்போது அவர்கள் upgrade ஆகிவிட்டார்கள்.

  இப்போது வரும் spam call வரும் நம்பர் எல்லாம் virtual நம்பர். Internet வழியாக கால் செய்கிறார்கள். அதற்கு என்று நிறைய software இருக்கிறது என கேள்விப்பட்டேன்.

  ஒவ்வோரு முறையும் புதுப்பது நம்பர் software இல் உருவாக்கி இன்டர்நெட் வழியாக கால் செய்வார்கள். அந்த நம்பர் மீது நீங்கள் புகார்அளித்தாலும் நடவடிக்கை எடுக்க முடியாது.

  இதற்கு தீர்வாக ஐபோனில் ஒரு ஆப்ஷன் உள்ளது. Silence unknown callers. ஆப்ஷனை ஆன் செய்து விட்டால் நம் கான்டாக்ட் இல் சேவ் ஆகாத நம்பரில் இருந்து அழைப்பு வந்தால் அவர்களுக்கு ரிங் அடிக்காது. கட் ஆகி விடும்.

  நமக்கு மிஸ்டு காலில் மட்டும் காட்டும். இதில் ஓரு பிரச்சனை தெரிந்தவர் நமது கான்டாக்ட் இல் இல்லாமல் கால் செய்தாலும் கட் செய்துவிடும். நாம் மிஸ்டு காலில் பார்த்து Truecaller இல் யாரென்று பார்த்து நாம் அழைக்க வேண்டும்.

  ஒரு முறை நாம் அழைத்து பேசி விட்டால் அந்த நம்பரை சேவ் செய்யவில்லை என்றாலும் அவர் மிண்டும் அழைக்கும் போது ரிங் அடிக்கும். கட் ஆகாது. ஒரு முறை அமேசான் டெலிவரி செய்யும் நபர் கால் செய்து கட் ஆகி கட் ஆகி கொண்டே இருந்ததால் கடுப்பாகி விட்டார்.

  நான் Truecaller இல் பார்த்து அழைத்தேன். பிறகு அந்த அமேசான் டெலிவரி பாய் கால் செய்யும் லேண்ட்லைன் நம்பரை சேவ் செய்துவிட்டேன். அமேசானின் ஒரே landline number இல் இருந்து தான் அழைக்கிறார்கள். அதனால் சேவ் செய்துவிட்டேன்.

  Spam calls வந்து வந்து அந்த நம்பர்கள் எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரிந்துவிட்டது.

  Ahmedabad, Gujarat. Bengaluru, Karnataka என்று வந்தாலே அது spam call தான். பெரும்பாலும் இப்படி தான் வரும் 99%. இதே போல சில spam லேண்ட்லைன் நம்பர்ஸ் இருக்கிறது. இதெல்லாம் பார்த்தாலே spammers என்று தெரிந்துவிடும்.

  எப்படியோ spam callers தொல்லையில் இருந்து ஐபோன் காப்பாற்றிவிட்டது.

 2. @ஹரிஷ்

  DND யில் முன்பு எண்ணை முடக்கி விடுவார்கள். தற்போது 6 மாதங்களுக்கு கட்டுப்பாடு மட்டுமே விதிக்கிறார்கள்.

  அதாவது ஒரு நாளைக்கு, இவ்வளோ அழைப்பு, குறுந்தகவல் மட்டுமே செய்ய முடியும் என்று.

  தொடர்ச்சியாக இதே போல செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கணும்.

  Oneplus ழும் இதே போல ஒரு வசதியுள்ளது ஆனால், முக்கியமான வங்கி அழைப்புகளைத் தவற விட வாய்ப்புள்ளதால் இதைச் செய்வதில்லை.

  தொடர்ந்து DND புகார் அளிக்கிறேன். தற்போது அழைப்புகள் குறைந்து வருகின்றன. Automated voice calls தான் அதிகம் வருகின்றன.

 3. கிரி, உங்கள் பதிவின் கருத்தை முழுவதும் உள்வாங்கி கொள்ள முடிகிறது.. மிகவும் நேர்த்தியான பதிவிது.. பெற்றோர்களின் தரப்பிலிருந்து படிக்கும் போது உண்மையில் வேதனையான ஒன்று.. நிச்சயம் அரசு இது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here