உலகிலேயே இந்தியாவில் தான் தேவையற்ற (SPAM) அழைப்புகள் அதிகளவில் வருகிறது என்று சமீபத்தில் True Caller நிறுவனம் கணிப்பு நடத்திக் கூறியது. தேவையற்ற அழைப்புகளைத் தவிர்ப்பது எப்படி? என்று பார்ப்போம். Image Credit
தேவையற்ற அழைப்புகளைத் தவிர்ப்பது எப்படி?
DND (Do Not Disturb)
ஒவ்வொரு தொலைபேசி நிறுவனமும் TRAI அறிவுறுத்தல் படி DND வசதியை வைத்து இருக்க வேண்டும்.
அதாவது இச்சேவையில் நம் தொலைபேசி எண்ணை பதிவு செய்தால், தேவையற்ற அழைப்புகள், குறுந்தகவல்கள் வரக் கூடாது. அப்படி வந்தால், TRAI சட்டப்படி குற்றமாகும்.
இதில் நாம் எந்தெந்த அழைப்புகள், குறுந்தகவல்கள் வரலாம் என்று வரையறுக்கலாம் அல்லது எந்த விளம்பர அழைப்புமே வரக் கூடாது என்றும் பதியலாம், இது நம் விருப்பம்.
என்னுடைய பரிந்துரை, ஆணியே பிடுங்க வேண்டாம் என்பது தான். எந்த விளம்பர அழைப்பும், குறுந்தகவலும் வேண்டாம்.
http://www.airtel.in/forme/dnd
மற்ற நிறுவனங்களுக்கு http://www.dndstatus.com/activate-dnd.php
இதில் பதிந்தும் அழைப்பு வருகிறதே?
1. விளம்பர அழைப்புகளை மேற்கொள்ளும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் DND யில் பதிவு செய்யப்பட்ட எண்களை அழைக்க மாட்டார்கள்.
ஆனால், அங்கீகரிக்கப்பட்ட விளம்பரதாரர்களாக இல்லாமல் குத்து மதிப்பாக விளம்பரம் அனுப்புவர்கள் தான் பிரச்சனை.
இவர்கள் எந்த வரைமுறையும் பார்க்க மாட்டார்கள், இங்கி பிங்கி பாங்கி போட்டு அனுப்பும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது, புகார் அளித்து முடக்கலாம் அவ்வளவே.
2. துணிக்கடைக்கோ, பீட்சா கடைக்கோ செல்லும் போது “சார் / மேடம் உங்க எண்ணைக் கொடுங்க” என்பார்கள். இங்கே தான் நிறைய மாட்டிக்கொள்கிறார்கள்.
இவ்வாறு வாங்குபவர்கள் தங்கள் விளம்பரங்களை அனுப்புவதோடு மற்றவர்களுக்குத் தகவல்களைப் பணத்துக்கு விற்று விடுவார்கள்.
எனவே, மிகவும் தவிர்க்க முடியாத / முக்கியமான இடங்களில் மட்டுமே உங்கள் எண்ணைக் கொடுக்க வேண்டும்.
3. மிகப்பெரிய நிறுவனங்களே நம்முடைய தகவல்களைப் பணத்துக்கு விற்று விடுகின்றன.
DND யில் பதிவு செய்தும் வரும் அழைப்புகளைத் தவிர்ப்பது எப்படி?

1. எங்கும் எண்ணைத் தேவையற்றுக் கொடுக்கக் கூடாது
DND யில் பதிவு செய்தும் வருகிறதென்றால் மேற்குறிப்பிட்டது போல எங்கும் நம் எண்ணைக் கொடுக்கக் கூடாது. Image Credit – MobiGyaan.com
2. DND புகார்
இது போல வரும் அழைப்புகளைக் குறுந்தகவல்களை உங்கள் தொலைபேசி நிறுவனத்துக்குப் புகார் அனுப்பி முடக்க வேண்டும்.
ஏர்டெல் என்றால் <1909@airtel.com> முகவரிக்குப் புகார் அனுப்ப வேண்டும். அதிகபட்சம் 7 வேலை நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பார்கள் (உறுதியாக).
அழைப்பு / குறுந்தகவல் வந்த மூன்று நாட்களுக்குள் புகார் அளிக்க வேண்டும்.
நான் இது போலக் குறைந்தது 20 எண்களைப் புகார் அளித்து முடக்கி இருப்பேன். அடிக்கடி செய்வதால், Gmail Canned response வசதியைப் பயன்படுத்துகிறேன்.
ஒருமுறை இதில் என்ன என்பதைப் பதிவு செய்து விட்டால் Template போல மாறி விடும், ஒவ்வொருமுறையும் அனைத்தையும் தட்டச்சுச் செய்ய வேண்டியதில்லை.
How to create Canned response? Click Here
குறுந்தகவல் என்றால் Screenshot மட்டும் சேர்த்தால் போதுமானது. அழைப்பு என்றால், அழைத்த நிறுவனத்தின் எண், பெயர் மற்றும் என்ன கூறினார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
தற்போது தேவைற்ற அழைப்புகள் குறுந்தகவல்கள் மாதத்துக்கு 3 வந்தாலே அதிகம்.
இதையும் புகார் அளித்து முடக்கி விடுவேன்.
DND யில் இருக்கும் போது நமக்கு இது போல அழைப்புகள் வந்தால், அது நம்முடைய தனியுரிமையை (Privacy) மீறும் செயல். எனவே, TRAI சட்டப்படி இது குற்றமாகும்.
எனவே புகார் அளித்தால், கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணை முடக்கவில்லை என்றால் மேல்முறையீடு செய்யலாம்.
அல்லது
DND என்ற செயலியை நிறுவி, புகார் அளிக்கலாம். இது மிக எளிது.
3. தற்காலிக எண்
உதவி தேவைப்படும் சமயத்தில் இதற்கு என்றே தற்காலிக முன்கட்டண (Prepaid) எண் வைத்துக்கொள்ளுங்கள்.
ஒருமுறை சமூகத்தளங்களில் வந்து விட்டால், உங்கள் எண்ணை மறந்து விடுவதே நல்லது. தற்காலிக எண் என்றால், முடக்கி விட்டு வேறு எண்ணைப் பெற்றுக்கொள்ளலாம்.
அதுவும் WhatsApp ல் வந்து விட்டால், செத்தோம். WhatsApp போராளிகள் அனைவருக்கும் பரப்பி, “கடமையை” செய்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்.
4. True Caller
உங்கள் திறன்பேசியில் True Caller செயலியை அவசியம் நிறுவி வையுங்கள்.
இச்செயலி குறித்துப் பலரும் பலவிதமாகக் கூறிப் பயமுறுத்தினார்கள் ஆனால், மிக மிகப் பயனுள்ளதாக உள்ளது.
அறிமுகம் இல்லா எண்களில் இருந்து வரும் போது அது யார் என்று செயலி கூறுவதால், நாம் மனதளவில் கொஞ்சம் முன்னேற்பாடாக இருக்கலாம்.
தேவை என்றால், எடுக்கலாம் இல்லையென்றால் தவிர்க்கலாம், இணையம் அவசியம்.
தேவையற்ற அழைப்பு என்றால் True Caller செயலியில் SPAM என்று குறிப்பிடலாம்.
SPAM அழைப்பு என்றால் செயலியே சிவப்பு வண்ணத்தில் நம்மை எச்சரிக்கும். நமக்குத் தெரிந்த நிறுவனம் என்றால், எடுக்கலாம்.
சில பயனுள்ளவையும் இருக்கும்
எடுத்துக்காட்டுக்கு எனக்கு ஏர்டெல் DTH ல் இருந்து அழைப்பு வரும், அதுவும் SPAM என்பது போலக் காட்டும் ஆனால், இதை எடுத்துப் பேசி எனக்கு DTH சேவையில் சிறப்புத் தள்ளுபடி கிடைத்தது.
சுருக்கமாக, சோம்பேறித்தனம் பார்க்காமல் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், SPAM தொல்லையிலிருந்து விடுபடலாம்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
தேவையற்ற அழைப்புகள் சில நேரங்களில் மண்டையை சூடாக்கி விடும். இந்த கட்டுரையை படித்து கொண்டு இருக்கும் போதே அலைப்பேசி மணி அடிக்கிறது. எடுப்பதற்குள் ஒலி நின்று விட்டது. எண்ணை பார்த்தால் அதிர்ச்சி. சாலமோன் தீவிலிருந்து யாரோ அழைத்துள்ளார்.
சில நேரங்களில் அலைப்பேசி ஒலிக்கும் போதே, எடுக்கலாமா?? வேண்டாமா?? என்ற குழப்பம் இருக்கும். 95 % வரும் அழைப்புகளை எடுத்தாலும் சில சமயங்களில் தேவையில்லாதவை என்று, சில வேண்டிய அழைப்புகளை தவற விட்டதுண்டு. விளக்கமாக எழுதி உள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி கிரி.
True Caller இருப்பது பல பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது.
அதோடு மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றுவதால், தொந்தரவுகள் மிகக் குறைவு.