திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை முழுமை பெறாது. இக்கட்டுரையில் சஷ்டி விரதம் நம்பிக்கைகள் என்னவென்று பாப்போம். Image Credit
குழந்தை இல்லாமல் இருப்பவர்களைப் பார்க்கும் போது மனவருத்தம் ஏற்படும். என்னுடைய எதிரிக்குக் கூட இந்நிலை வரக் கூடாது என்று நினைப்பேன்.
எத்தனையோ செல்வங்கள் இருந்தாலும் குழந்தைச் செல்வம் இல்லை என்றால், அதில் உள்ள வருத்தம் அதை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணரே முடியும்.
மருத்துவ முன்னேற்றம்
தற்போது மருத்துவ துறையில் பல முன்னேற்றங்கள்.
பலரின் உடல் / மன ரீதியான பிரச்சனைகளைச் சரி செய்து குழந்தை பிறப்பதற்கான வழிகளை ஏற்படுத்தித் தருகிறார்கள். சரியான ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவம் எப்படி மிக முக்கியமோ அது போலக் கடவுள் நம்பிக்கையும்.
எவரும் கை விட்டால் நமக்கு நினைவிற்கு வருவது கடவுள் மட்டுமே! கடவுளை மறந்து இருப்பவர்கள் கூடக் கஷ்டம் வரும் போது நினைத்துப் பார்ப்பார்கள்.
யாருமே உதவாத போது கடவுள் உதவுவார் என்ற நம்பிக்கை உண்டு.
சஷ்டி விரதம்
சஷ்டி விரதம் இருப்பதால், வேண்டுதல்கள் நிறைவேறுவதைப் பற்றிக் கேள்விப் பட்டவுடன், அட! இவ்வளவு விஷயம் இருக்கிறதா! என்று தோன்றியது.
சஷ்டி விரதம் தீபாவளி சமயத்தில் ஆறு நாட்கள் இருக்க வேண்டும்.
சிலர் மிகக் கடுமையாக இருக்கிறார்கள் [அப்பவும் ரமலான் நோன்பு அளவிற்கு இல்லை] சிலர் அந்த அளவிற்கு இருப்பதில்லை.
விரதத்தில் ஒவ்வொருவரும் ஒன்று கூறுகிறார்கள். எனவே, தெரிந்தவர்களிடம் கேட்டுச் சரியான வழிமுறைகளை / விரத நாட்களைப் பின்பற்றலாம்.
விரதம் இருப்பதால் நீதி மன்ற வழக்குப் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை, உடல் ரீதியான பிரச்சனை மற்றும் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை போன்ற வேண்டுதல்கள் நிறைவேறுவதாகக் கூறினார்கள்.
முயற்சிப்பதில் தவறில்லையே
குழந்தை இல்லாதவர்கள் எத்தனையோ மருத்துவ முயற்சிகளைச் செய்து இருக்கலாம், அதோடு இதையும் முயற்சித்துப் பார்க்கவும், இதுவரை முயற்சிக்காமல் இருந்தால்.
ஆறு நாட்கள் தானே! லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் இல்லையே.
அக்கா, மனைவி உட்பட மூவர், தங்களுக்கு தெரிந்தவர்களுக்குப் பல வருடங்கள் குழந்தை இல்லாமல் சஷ்டி விரதம் இருந்த பிறகு குழந்தை பெற்றதாகக் கூறினார்கள்.
100 % உண்மை. இதில் பொய் கூறி எனக்கென்ன கிடைக்கப் போகிறது. எனவே, குழந்தை இல்லாதவர்கள் தயவு செய்து ஒரு முறையாவது முயற்சித்துப் பார்க்கவும்.
உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாருக்காவது குழந்தை இல்லையென்றால், சஷ்டி விரதம் பற்றிக் கூறவும். ஒருவேளை அவர்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு.
தீபாவளி நேரத்தில் வருவதால் பல விருந்து கட் ஆகும் 🙂 . ஆறு நாள் வைத்தாலும் “சரியான” நேரத்தில் தாம்பா வைத்து இருக்காங்க!
குழந்தை இல்லாத அனைவருக்கும் விரைவில் குழந்தை கிடைக்க முருகனை வேண்டுகிறேன்.
கடவுளை நம்புங்கள் அதோடு மருத்துவக் கடமைகளையும் சரியாகச் செய்யுங்கள். சஷ்டி விரதம் நம்பிக்கைகள் வீண் போகாது என்று நம்புவோம்.
தொடர்புடைய பதிவுகள்
ஓதி மலை முருகன் அற்புதங்கள் [July 2008]
அழகன் முருகன் [Feb 2012]
superbah sonnenga
சபரிமலைக்கு மாலை போட்டு அடக்க ஒடுக்கமா இருக்கணும் என்று இருந்த போது தான் தெரிந்தது, ஒரு நாளைக்கு நாம எத்தனை ஃபிகரை சைட் அடிச்சுட்டு இருந்து இருக்கோம்னு
NOV 14th அன்னக்கி பதிவு எழுதீட்டு Children’s Day பத்தி எதுவும் சொல்லலையே…..
கிரி.. எனக்கு இயல்பாகவே கடவுள் பக்தி உண்டு. நான் பல கோவில்களுக்கு என் நண்பன் சக்தியுடன் சென்று உள்ளேன். ஆனால் இன்று வரை மதம் சம்மந்தமான எந்த ஒரு உரையாடலையும் இருவரும் பேசியது கிடையாது. என்னை பொறுத்தவரை அடுத்தவர்களின் நம்பிக்கையை என்றும் நான் தடுத்ததில்லை. நம்பிக்கை என்ற பொதுவான ஒரு விஷியம் இன்று நம்மில் பல பேரை வாழ வைக்கிறது அதை தடுப்பது சரியல்ல….என்பது எனது விருப்பம்..
உண்மை கிரி! மிகவும் அற்புதமான 6 நாட்கள். வயிற்றுக்கு ஓய்வு,மனதிற்கு நிறைவு. நான் gulf ல் இருக்கிறேன். இந்த நாட்கள் மிகவும் புனித மானவை (like their Ramadan month) தீபாவளியை விட இதற்காக காத்திருப்போம்.
நன்றி கிரி..அருமையான பதிவு.சஷ்டி விரதம் பற்றி தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள உதவும்.
பகிர்விற்கு நன்றி கிரி,
நல்ல பதிவு அனைவருக்கும் சஷ்டி பற்றி அறிய வைத்தீர்கள்…
முருகா என் அப்பனே சரணம்
நன்றி
இதைத்தான் சட்டியில் (சஷ்டியில்) இருந்தால் அகப்பையில் (உள்ளே இருக்கும் பையில்) வரும். என்றார்கள். ஆதாரம் : வாரியார் ஸ்வாமிகளின் உபந்யாசத்திலிருந்து.
ரொம்ப வித்தியாசமா இருக்கு தல இந்த பதிவு
முருகன் பிள்ளையார் இப்படி எல்லா கடவுளுமே எனக்கு புடிக்கும்
அதனால உங்க கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது
– அருண்
விரதம் இருக்கிறோம் என்று சாப்பிடாம இருப்பது எனக்கு பெரிய விசயமில்லை ஆனால், சைட் அடிக்காம இருக்கிறது தான் எனக்கு மிகப் பெரிய சிரமம்,
—————————————————————————–
adhunaladhan என் அண்ணன் கிரி எனக்கு பதிலாக இனி வருடா வருடம் எனக்கும் சேர்த்து விரதம் இருப்பார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
அனைவரின் வருகைக்கும் நன்றி
@கௌரிஷங்கர்
இரண்டு வாரம் கழித்து ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.. அதைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே 🙂
@யாசின் இது தான் பிரச்சனை இல்லாதது.
@அனு நீங்கெல்லாம் கூறும் போது தான்.. நான் எவ்வளவோ தவற விட்டு இருக்கிறேன் என்று தோன்றுகிறது.
“இரண்டு வாரம் கழித்து ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.. அதைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே”
நீங்க எப்போதும் சூப்பரா பதிவு எழுதுவீங்க, அதிலும் உங்களுக்கு புடிச்ச மேட்டர பத்தி எழுதும்போது சொல்லவாவேனும். முருகன் எனக்கும் Favorite-தான்.