Unlocked (2023 Korean) | தொலைந்த மொபைலால் வந்த ஆபத்து

0
Unlocked

ம் மொபைல் தவறான நபரிடம் கிடைத்தால் என்ன ஆகும் என்பதே Unlocked.

Unlocked

அனைத்தையும் சமூகத்தளங்களில் பகிர்ந்து, காலை எழுந்தது முதல் தூங்கும் வரை மொபைலுடன் இருக்கும் ஒரு பெண் தன் மொபைலை தவற விடுகிறார்.

இதை ஒருவன் எடுத்து அம்மொபைலை Duplicate செய்து இப்பெண்ணைத் தொடர்ந்து கண்காணிக்கிறான். Image Credit

இறுதியில் இப்பெண்ணுக்கு என்ன ஆகிறது என்பதே Unlocked.

நடைமுறை எதார்த்தம்

இப்படத்தை இணையம், மொபைல் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களோடு தொடர்பு செய்து கொள்ள முடியும். ஏனென்றால், இதில் வரும் அனைத்தையும் பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள் குறிப்பாக இளைய வயதினர்.

Spyware நிறுவி எப்படி நம்மைக் கண்காணிக்கிறார்கள் என்பது வரை கூறியுள்ளார்கள்.

இப்பெண்ணுக்கு ஒரு கட்டத்தில் எல்லாமே தவறாக நடக்கிறது. எப்படி? ஏன்? என்று புரியவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை!

தன் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை தாமதமாக உணர்கிறார் ஆனால், யார் மீது சந்தேகப்படுவது?

சந்தேகம் என்று வந்து விட்டாலே அனைவரையும் சந்தேகிக்கத் தோன்றும். இதனால், நெருக்கமானவர்கள் கூட எதிரியாகத் தோன்றுவார்கள்.

சாட் மூலம் யாராவது எதையாவது கேட்கும் போது சந்தேகமிருந்தால், உடனே அழைத்துப் பேசுவது சரி என்பதை இப்படம் உணர்த்துகிறது.

எனக்கேன் இதைச் செய்தாய்? என்று பாதிக்கப்பட்ட பெண் கேட்கும் போது ஹேக் செய்தவன் கொடுக்கும் பதில் திகிலாக உள்ளது.

நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று புரிய வைக்கிறது.

யார் பார்க்கலாம்?

அனைவரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். த்ரில்லருக்காக மட்டுமல்ல, விழிப்புணர்வுக்காகவும்.

காரணம், மொபைல் எவ்வளவு ஆபத்தானது, சிறு தவறு கூட எவ்வளவு பெரிய சிக்கலில் விடும் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது.

எப்போதுமே குறிப்பிட்ட கால இடைவேளையில் பாதுகாப்பு காரணங்களுக்காக Mobile Reset செய்வேன். இப்படம் பார்த்தவுடன் உடனடியாக Reset செய்து விட்டேன் 🙂 .

சிறு சந்தேகம் வந்தாலும் Reset செய்து விடுங்கள்.

Link க்ளிக் செய்வதையோ, பாஸ்வோர்டு கொடுப்பதையோ தவிர்த்து விடுவதோடு அறிமுகமில்லாதவரிடம் மொபைலையும் கொடுக்காதீர்கள்.

NETFLIX ல் காணலாம்.

Directed by Kim Tae-joon
Written by Kim Tae-joon
Starring Chun Woo-hee, Im Si-wan
Cinematography Kim Yong-seong
Edited by Sin Min-gyeong
Music by Dalpalan
Distributed by Netflix
Release date February 17, 2023
Running time 117 minutes
Country South Korea
Language Korean

தொடர்புடைய திரை விமர்சனங்கள்

Home (2021 மலையாளம்) ஐந்து நிமிடம் பேசலாமா?

Searching [2018] இது நம்ம கதை!

தொடர்புடைய கட்டுரைகள்

ஹேக்கிங் (Hack) பாதுகாப்பு வழிகள் என்ன?

கணினியைப் பராமரிப்பது எப்படி?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here