சாம் சூசைட் பண்ண போறான்

0
சாம் சூசைட் பண்ண போறான்

லைவர் ரசிகரும் ஈழத்தமிழரும் நண்பருமாகிய ஜீவதர்ஷன் இயக்கிய குறும்படம் சாம் சூசைட் பண்ண போறான்.

சாம் சூசைட் பண்ண போறான்

குறும்படம் எடுப்பதில் உள்ள சிரமம், குறைந்த நேரத்தில் ஒரு கதையைச் சுவாரசியமாக அதே சமயத்தில் திருப்தியாகக் கூற வேண்டும்.

காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் சாம் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கதை துவங்கி இறுதியில் ட்விஸ்டில் முடிகிறது.

இலங்கையில் நடைபெறும் கதை நமக்குப் புதிய சுவாரசியமான இடத்தைக் காணத்தருகிறது.

ஆயிரம் பிரச்சனைகள் தற்போது இலங்கையில் இருந்தாலும், இதைக்காண்கையில் அவை எதுவும் நினைவுக்கு வரவில்லை.

அதோடு இலங்கை / ஈழம் என்றாலே வரும் குறும்படங்கள், காட்சிகள் சோகத்தை வரவழைப்பதாகவே இருக்கும் நிலையில் இக்குறும்படம் மாறுதலாக உள்ளது.

ஜீவதர்ஷன்

நண்பர் ஜீவதர்ஷனை பல ஆண்டுகளாகத் தெரியும், நேரில் சந்தித்தது இல்லை. வலைப்பதிவர் & தலைவர் ரசிகர் என்பதால் அறிமுகமாகி நட்பானார்.

பின்னர் Blog வரவேற்பு குறைந்த நிலையில் எழுதுவதை நிறுத்தி WhatsApp மூலமாகத் தொடர்பில் இருந்தார், திறமையாக எழுதுவார்.

தமிழக தமிழர்கள் பலரை விடத் தமிழகத்தின் அரசியல், திரைப்பட செய்திகள் இவருக்கு அத்துப்படி. பல நேரங்களில் வியந்துள்ளேன்.

தலைவர் அரசியலுக்கு வருவதை மிக ஆவலுடன் எதிர்பார்த்தவர் ஆனால், வரவில்லை என்பதில் ஏமாற்றம் இருந்தாலும் பேரன்பு கொண்டவர்.

தற்போதும் இக்குறும்படத்தை அவருக்கு நன்றி கூறித்தான் ஆரம்பித்துள்ளார்.

பல ஆண்டுகள் பழக்கம், குறும்படம் பற்றிப் பலமுறை கூறியுள்ளார் ஆனால், அனுபவமுள்ளவர் போல ஒரு குறும்படம் எடுப்பாரென நினைத்தது இல்லை.

எந்த இடத்திலும் அமெச்சூர்த்தனமான காட்சிகளே இல்லை.

ஒளிப்பதிவு இசை படத்தொகுப்பு

ஜீவதர்ஷன் திறமையாக இயக்கி இருந்தாலும், அவருக்குப் பக்க துணையாக, அவர் எண்ணத்துக்குச் செயல்வடிவம் கொடுத்தது மேற்கூறியவர்களே!

எந்த ஒரு திரைப்படத்துக்கும் குறைவில்லாத ஒளிப்பதிவாக உள்ளது.

ட்ரோன் காட்சிகள் குறும்படத்துக்கு ஒரு RICHNESS கொடுக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஒவ்வொரு கோணமும் அசத்தலாக உள்ளது.

பாடலும், பின்னணி இசையும் திரைப்படத்தின் பின்னணி இசை போலவே உள்ளது. இசை ஒளிப்பதிவு இரண்டுமே சிறப்பாக அமைந்தது சிறப்பு.

“நான் லீனியர்” காட்சியமைப்புகள் என்றாலும், படத்தொகுப்பு எந்தக் குழப்பத்தையும் தராமல் அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி உள்ளது.

குறும்படம் சிறப்பாக அமைந்ததற்கு அனைவரின் திறமை காரணம் என்றாலும், இவை ஒரே சேர அமைந்ததில் இவர்கள் அதிர்ஷ்டசாலிகளே!

எங்கேயுமே நாடகத்தன்மை, அமெச்சூர் நடிப்பு இல்லாமல், ஒப்பனை இல்லாமல் அனைவருமே மிக இயல்பாக நடித்துள்ளார்கள்.

எப்படி இவ்வளவு இயல்பாக நடித்தார்கள்?! நடிக்க வைக்கப்பட்டார்கள்?! என்று வியப்பாக இருந்தது. நடித்தவர்கள் ஏற்கனவே நடித்த அனுபவம் மிக்கவர்களோ!

தரமான முயற்சி

மேற்கூறியவற்றை இயக்குநர் எனக்கு நண்பர் என்பதால் கூறவில்லை, உண்மையாகவே நன்றாக எடுத்துள்ளார்கள்.

எனக்குத் திருப்தியளிக்கவில்லையென்றால், வாழ்த்து கூறியதோடு நிறுத்தியிருப்பேன் விமர்சனம் எழுதி இருக்க மாட்டேன்.

ஆனால், இயக்கம் மட்டுமல்ல அனைத்துமே சிறப்பாக வந்ததால், அனைவரையும் பாராட்ட வேண்டும் என்றே இவ்விமர்சனம் எழுதப்பட்டது.

ஈழத்தமிழ் என்பதால், அவர்கள் பேசும் தமிழ் பல இடங்களில் புரியவில்லை என்பது மட்டுமே இந்தியத் தமிழனாகக் குறை, மற்றபடி எந்தக்குறையும் காணவில்லை.

இக்கூட்டணி அழுத்தமான கதையை இயக்கி, மேலும் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தி அடுத்து வேற லெவல் குறும்படமாக / திரைப்படமாக வர விரும்புகிறேன்.

காரணம், இவர்களிடம் திறமை உள்ளது. எனவே, சரியான வழிகாட்டுதல், வாய்ப்புகள் கிடைத்தால், மேலும் சிறப்பாக முயற்சிப்பார்கள்.

முதல் முயற்சிக்கு வாழ்த்துகள். தரமான சம்பவம்! 👍

தொடர்புடைய திரைவிமர்சனம்

Black Sheep [U/A] A Tamil Web Series [YouTube]

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!