One City One Card

2
One City One Card

One City One Card திட்டத்தைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து செயல்படுத்தியுள்ளது. Image Credit

One City One Card

இந்த மின்கட்டண அட்டையைப் பயன்படுத்திச் சென்னை, கான்பூர், பெங்களூரு, டெல்லி உட்பட மெட்ரோ ரயில்நிலையங்களில் பயன்படுத்த முடியும்.

எதிர்காலத்தில் புறநகர் ரயில், மாநகரப் பேருந்து, சில்லறை விற்பனை கடைகள் உட்படப் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரப்பேருந்தில் 2024 முதல் காலாண்டின் இறுதியில் இந்த வசதி வரும் என்று கூறப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் என்றால், எப்படியும் 2024 இறுதிக்குள் வந்து விடும் என்று நினைக்கிறன்.

இவ்வசதி வந்தால், பேருந்து நடத்துனர்கள் அனைவர் கையிலும் இந்தச் சாதனம் இருக்கும். கட்டணத் தொகையை இந்த அட்டை வழியாகச் செலுத்தி விடலாம்.

இதனால், சில்லறை பிரச்சனை அறவே இருக்காது. பல வருடங்களாக இந்த வசதியை எதிர்பார்த்துக் காத்துகொண்டு இருக்கிறேன்.

இத்திட்டம் சிங்காரச் சென்னை திட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.

Easy Link

சிங்கப்பூரில் Easy Link அட்டையின் மூலமாக இதே போலக் கட்டணங்களைச் செலுத்தும் வசதி பல காலமாக உள்ளது.

அட்டையை மெட்ரோ, பேருந்துகளில் (Contactless) பயன்படுத்தலாம்.

மின்னணு பரிவர்த்தனையில் உலகின் தலைச்சிறந்த நாடாக இந்தியா இருந்தாலும், உட்கட்டமைப்பு வசதியில் மிகப் பின்தங்கி இருப்பதாலே, நம்மால் Easy Link போன்ற வசதியைச் செயல்படுத்த முடியவில்லை.

எடுத்துக்காட்டுக்கு, நம் தமிழகப் பேருந்துகளில் Digital Ticketing முறை கொண்டு வந்தார்கள். அதாவது கையில் வைத்துக் கிழித்துக் கொடுக்காமல், சாதனத்தின் மூலம் கொடுத்தார்கள்.

ஆனால், நாளடைவில் சாதனங்கள் பழுதடைந்து இவற்றின் பயன்பாடு குறைந்து திரும்ப வழக்கமான முறைக்கே திரும்பி விட்டது.

சில பேருந்துகளில் மட்டும் இச்சாதனம் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, One City One Card யைப்பேருந்தில் செயல்படுத்துவது பெரிதல்ல, அதைத் தரமான சாதனங்கள் மூலம் தொடர்வதே முக்கியம்.

வசதிகள்

  • KYC செய்தால், 2 லட்சம் வரை வைத்துக்கொள்ள முடியும்.
  • தினமும் அதிகபட்சம் ₹50,000 வரை செலவு செய்ய முடியும்.
  • ATM போலவும் பயன்படுத்த முடியும்.
  • அட்டையைப் பயன்படுத்தக் கட்டணம் கிடையாது.

அட்டையை எங்கே வாங்குவது?

சென்னை கோயம்பேடு, சென்ட்ரல், விமான நிலையம், உயர் நீதிமன்றம், ஆலந்தூர், திருமங்கலம், கிண்டி மெட்ரோ ரயில் நிலையங்களில் அட்டையைப் பெறலாம்.

https://transit.sbi/ தளத்தில் பதிவு செய்து Recharge செய்து கொள்ளலாம்.

கொசுறு

2021 ம் ஆண்டு ‘Artificial Intelligence Traffic Signal தேவை‘ கட்டுரையில் கேட்டுக்கொண்டு இருந்தபடி சென்னை போக்குவரத்தில் AI வசதி வரப்போகிறதாம்.

இதன் மூலம் தேவையற்று சிக்கனலில் காத்து இருப்பது தடுக்கப்படும்.

சிகப்பு விளக்கு தாண்டிச் செல்பவர்கள் உட்பட விதிகளை மீறுபவர்களுக்கு அபராத கட்டணம் தானியங்கி முறையில் விதிக்கப்படும்.

ஏற்கனவே இம்முறை அமலில் உள்ளது ஆனால், வசூல் செய்ய மட்டுமே பயன்படுகிறது, விதிமீறல்கள் குறைந்தது போலத் தெரியவில்லை.

தொடர்புடைய கட்டுரை

சிங்கப்பூரில் வசித்த போது FlashPay | நம்ம ஊருக்கு எப்போது வரும்? என்ற கட்டுரையை 2015 ல் ‘இந்த வசதி நம்முடைய பேருந்தில் வந்தால் எப்படி இருக்கும்?‘ என்ற எதிர்பார்ப்புடன் எழுதி இருந்தேன்.

இவ்வசதி நம்ம ஊருக்கும் வரப்போகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. மேலைநாடுகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வசதிகளும் வெகு விரைவில் நமது ஊருக்கும் விரைவில் வரும் என்பதில் துளியும் ஐயமில்லை.. உங்கள் பதிவிற்கு நன்றி கிரி..

  2. @யாசின்

    எதிர்பார்த்ததை விட வேகமாக வருகிறது. உட்கட்டமைப்பில் தான் மிகவும் பின் தங்கியுள்ளோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here