Artificial Intelligence Traffic Signal தேவை

4
Artificial Intelligence Traffic Signal

மிழகப் போக்குவரத்து காவல் துறை பல மாற்றங்களைச் செய்து வருகிறது ஆனால், எதுவுமே பெரியளவில் வெற்றிப் பெற்றதாகத் தெரியவில்லை. Image Credit

மாற்றங்கள் சில நாட்களில் பழைய நிலைக்கே திரும்பி விடுகிறது.

Digital Payment (அபராதம்) மட்டுமே வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளார்கள்.

போக்குவரத்தில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial Intelligence செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

Artificial Intelligence

தற்போதைய தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தானியங்கியாகக் கவனிக்க முடிகிறது.

தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, தவறுகள் நேராமல் பார்த்துக்கொள்ள முடிகிறது.

இக்கட்டுரைக்குச் சென்னையை எடுத்துக்காட்டாக வைத்துக் கூறுகிறேன்.

சென்னையில் பல இடங்களில் Traffic Signal பொருத்தமற்ற கால அளவை கொண்டுள்ளது.

எடுத்துக்காட்டுக்கு சில பாதைகளில் 10 நொடிகள் போதுமானதாக இருக்கும் ஆனால், 15 நொடிகள் கொடுத்து இருப்பார்கள்.

சில இடங்களில் 15 நொடிகள் தேவைப்படும் ஆனால், 5 / 10 நொடிகள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கும்.

ஒரு பாதையில் 5 நொடிகள் போதும் என்ற நிலையில் அங்கே 10 / 15 நொடிகள் கொடுக்கப்படும் போது போக்குவரத்து விதிமீறல் ஏற்படுகிறது.

காரணம், குறிப்பிட்ட பாதையில் வாகனம் வரவில்லையென்றால், மற்ற பாதைகளில் உள்ளவர்கள் சிவப்பு விளக்கு எரிந்தும் கடக்கிறார்கள்.

இதற்குக் காரணம், போக்குவரத்துத் துறை சரியான வாகன எண்ணிக்கை அளவை கணிக்காதது.

சில நேரங்களில் நேரத்துக்குத் தகுந்த மாதிரி மாறும்.

எடுத்துக்காட்டுக்கு, நெரிசல் நேரங்களில் 1 நிமிடத்துக்கு வாகனங்கள் வரலாம் ஆனால், Non Peak Hours ல் 30 நொடிகளிலேயே முடிந்து விடலாம்.

இது போல நேரங்களில் வாகனங்கள் வரவில்லையென்று மற்ற திசைகளில் உள்ள வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிகளை மீறுகிறார்கள்.

இல்லையென்றால், அவசியமே இல்லாமல் காத்து இருக்க வேண்டியதாக உள்ளது.

இவற்றைத் தடுக்க Peak Hours, Non Peak Hours, Night Hours என்று நேரங்களைப் பிரித்து நிமிடங்களை, நொடிகளை மாற்றி அமைக்கலாம்.

இது போன்ற மாற்றங்கள் சில இடங்களில் மட்டுமே உள்ளது, அனைத்து இடங்களிலும் (Signal) இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

Artificial Intelligence Traffic Signal

செயற்கை நுண்ணறிவு முறையை வரும் காலங்களில் பயன்படுத்தினால், அதுவே வாகன நெரிசலை கணித்து, நேரத்தைத் தானியங்கியாக மாற்றி அமைத்துக்கொள்ளும்.

ஒரு பாதையில் வாகனம் வரவில்லை என்றால், இதை நிறுத்தி அடுத்தப் பாதைக்கு வழியைத் திறந்து விடும்.

இதன் மூலம் தேவையற்று வாகனங்கள் காத்து இருக்க வேண்டியதில்லை, போக்குவரத்து விதிமீறல்கள் தவிர்க்கப்படும்.

தற்போது போக்குவரத்து விதிமீறல்களை CCTV மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கும் முறை செயல்படுத்தப் போகிறார்கள்.

பரிசோதனை முயற்சியாக அண்ணாநகர் சிக்னலில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது போன்று போக்குவரத்து விதி மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சிறந்த செயல் என்றாலும், மக்களைத் தவறு செய்யாமல் இருக்க முயற்சி எடுப்பது அதைவிடச் சிறந்தது.

இதனால் நேரமும் மிச்சமாகிறது. நெரிசலும் குறைகிறது.

நான் சரியாகத் தான் வந்தேன் ஆனால், அபராதம் விதித்து விட்டார்கள்‘ என்ற குற்றச்சாட்டு, புலம்பல்களைத் தவிர்க்கலாம்.

போக்குவரத்துக் காவலர்கள்

தமிழகத்தில் போக்குவரத்துக் காவலர்கள் எண்ணிக்கை குறைவு.

போக்குவரத்துக் காவலர்கள் மழை, வெயில் என்று அனைத்துக் காலச் சூழ்நிலையிலும் பரிதாபமாக நின்று பணி புரிவார்கள்.

போக்குவரத்தில் எவ்வளவோ சிறப்பான மாற்றங்களை, புதிய திட்டங்களைச் செயல்படுத்தப்பட வேண்டியவர்கள் மழை, வெயிலில் காய்வது வருத்தம் அளிக்கிறது.

இது போலப் பணிகளைக் குறைத்தால் தான், போக்குவரத்தில் மேம்படுத்தலைக் கொண்டு வரும் விஷயங்களில் கவனம் செலுத்த முடியும்.

பணி நேரத்தை வழக்கமான பணிகளுக்கே செலவழித்து விட்டால், புதிதாகச் சிந்திக்க, மேம்படுத்த, செயல்படுத்த எப்படி முடியும்?!

எப்போதுமே நம் உழைப்பை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டுமே தவிர, இது போல மாற்று வழியுள்ள இடத்தில் உழைப்பை விரயம் செய்யக் கூடாது.

Artificial Intelligence traffic signal என்பது சிலருக்குத் தற்போது நகைப்புரியதாகத் தோன்றலாம் ஆனால், எதிர்காலத்தில் இவை தவிர்க்க முடியாததாக இருக்கும்.

எனவே, தமிழகம் முன்னோடியாகச் செயல்படுத்துவதில் பெருமையடையலாம் அதோடு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக மாறலாம்.

தற்போதைய தேவை Hard Work அல்ல, Smart Work தான்.

தொடர்புடைய கட்டுரை

சைபர் கிரைம் புகாரளிப்பது எப்படி? [FAQ]

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. Artificial Intelligence traffic signal என்பது சிலருக்குத் தற்போது நகைப்புரியதாகத் தோன்றலாம் ஆனால், எதிர்காலத்தில் இவை தவிர்க்க முடியாததாக இருக்கும். உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.. கண்டிப்பாக எதிர்காலத்தில் இந்த மாற்றம் நிகழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை..

    வெளிநாடுகளில் நிறைய பணம் செலவு செய்து இது போன்ற வசதிகளை ஏற்படுத்துகின்றனர்.. அதற்கு பலனாக வீதிகளை மீறும் போது அபராதமும் கடுமையாக விதிக்கப்படுகிறது.. இதன் மூலம் தவறுகள் கணிசமான ஆண்டுதோறும் குறைந்து வருகிறது..

    நமது நாட்டில் இதெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வி வரலாம்.. எதுவும் சாத்தியமே!!! 5 வருடத்துக்கு முன்பு டிஜிட்டல் PAYMENT வசதி என்றால் என்ன என்று நிறைய பேருக்கு தெரியாது.. ஆனால் தற்போது எல்லா இடங்களிலும் பரவலாகி விட்டது.. அரசாங்கம் நினைத்தால் எதுவும் சாத்தியமே!!!!

    இந்த பதிவை படிக்கும் போது பரத் என்னும் நான் படத்தின் காட்சி நினைவுக்கு வருகிறது.. இது போல கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் போது தான், மக்களுக்கு விழிப்புணர்வு வரும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. அபராதம் அதிகமாக இருந்தால் மக்கள் தானாக போக்குவரத்து விதிகளை மதிப்பார்கள். மத்திய அரசு அபராத தொகையை அதிகப்படுத்த சில முயற்சிகளை எடுத்தது ஆனால் அரசியல் காரணங்களால் அதுவும் கிடப்பில் போடப்பட்டது. மக்கள் மற்றும் காவல் அதிகாரிகளின் சுய ஒழுக்கம் ஒன்றே இதற்கு தீர்வு.

    டிராபிக் சிக்கனலில் கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிப்பது சற்று சவாலான விஷயம் தான். செயல் முறையில் பல எதிப்புகள் நேராகவோ மறைமுகமாகவோ மக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து வரலாம். சென்னை வீதிகளில் பாதுகாப்பு கேமரா வைக்க ஊக்குவிக்கும் காவல்துறை அவர்களின் ஸ்டேஷனலில் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலை.

    தானியங்கி போக்குவரத்து கண்காணிப்பு முறையை ஆதரிக்கிறேன். ஆனால் செயல் படுத்தும் திறனை பொறுத்தே அதன் பலன் இருக்கும்.

  3. @யாசின்

    “தற்கு பலனாக வீதிகளை மீறும் போது அபராதமும் கடுமையாக விதிக்கப்படுகிறது.. இதன் மூலம் தவறுகள் கணிசமான ஆண்டுதோறும் குறைந்து வருகிறது..”

    தொழில்நுட்பம் / அபராதம் மூலம் மட்டுமே தவறுகளைக் குறைக்க முடியும்.

    “5 வருடத்துக்கு முன்பு டிஜிட்டல் PAYMENT வசதி என்றால் என்ன என்று நிறைய பேருக்கு தெரியாது.. ஆனால் தற்போது எல்லா இடங்களிலும் பரவலாகி விட்டது.”

    சரியாக கூறினீர்கள். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் UPI பரிவர்த்தனை அளவே கூறும், மக்கள் எந்த அளவுக்கு இவற்றை பயன்படுத்துகிறார்கள் என்று.

    இதை கிண்டலடித்து பலரே டிஜிட்டல் வசதியை பெருமளவு பயன்படுத்தி வருகிறார்கள்.

    டிஜிட்டல் பற்றி கட்டுரை எழுதிய போது பலர் கிண்டலடித்தார்கள் ஆனால், இன்றோ நிலைமையே வேறாக உள்ளது.

    Artificila Intelligence Traffic Signal கூட இது போல பின்னாளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் ஆனால், எப்போது என்பது அரசாங்கம், காவல்துறை கைகளில் தான் உள்ளது.

  4. @மணிகண்டன்

    அபராதம் குறைக்கும் நிறுத்தாது. நீங்கள் கூறியது போல மக்களுக்கே சுய ஒழுக்கம் வேண்டும். போக்குவரத்து விதிகளைப் பின்பற்றினால் நகைப்புரியவர்களாக தான் தற்போது உள்ளோம்.

    பின்னாடி ஒலி எழுப்பி விதியை மீற வற்புறுத்துகிறார்கள்.

    “மத்திய அரசு அபராத தொகையை அதிகப்படுத்த சில முயற்சிகளை எடுத்தது ஆனால் அரசியல் காரணங்களால் அதுவும் கிடப்பில் போடப்பட்டது.”

    வழக்கம் போல இதிலும் அரசியல் தான்.

    இவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இருக்கலாம், தடால் என்று ஏகப்பட்ட அபராதம் போட்டது, பெரிய எதிர்ப்பாகி விட்டது.

    “தானியங்கி போக்குவரத்து கண்காணிப்பு முறையை ஆதரிக்கிறேன். ஆனால் செயல் படுத்தும் திறனை பொறுத்தே அதன் பலன் இருக்கும்”

    எதுவுமே வந்த பிறகு தான் fine tune ஆகும்.

    FasTag க்கு எல்லோரும் அப்படி குதித்தார்கள், தற்போது எளிதாகி விட்டது.

    இன்னும் இதில் சரிப்படுத்த வேண்டியது ஏராளம் உள்ளது, வரும் காலங்களில் சரி செய்யப்படும் என்ற நம்பிக்கையுள்ளது.

    குறிப்பாக சில இடங்களில் சென்சார் சரியில்லை.

    இது போல முயற்சிகளை எடுக்கும் போது தான் படிப்படியாக குறைகளை சரி செய்ய முடியும். எதுவுமே செய்யாமல் முயற்சிக்காமல் இருந்தால், எந்த மாற்றமும் நடக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here