எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

25
எந்த வயதில் சினிமா பார்க்க

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்? Image Credit

சத்யமா நினைவில்லை. எப்படித் தான் எல்லோரும் நினைவு வைத்துச் சொல்றீங்களோ!!! உண்மையச் சொல்லுங்க இதுல யாராரு புளுகினது 🙂 .

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சரோஜா ..டக்கர் படம். சீரியஸ் ம் காமெடியும் கலந்து ஒரு வித்யாசமான படம். எங்க ஊர்க்காரர் அம்மா கிரியேசன்ஸ் சிவா தயாரித்த படம் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது?

சுப்ரமணிய புரம்

3.ஆ. எங்கே

சிங்கையில் புதிதாக ஆரம்பித்துள்ள “வண்ணத்திரை” சேனலில்

3.இ. என்ன உணர்ந்தீர்கள்

பதிவுலகில் அனைவரும் இதை அருமையாக இருக்கிறது என்று எழுதி இருந்ததால் அதீத எதிர்பார்ப்புடன் பார்த்தேன். பலமுறை பார்க்க முயற்சித்தும் பார்க்க முடியவில்லை.

கடைசியில் தற்போது தான் பார்த்தேன். படம் திரை பூச்சு இல்லாமல் வெயில் போல எளிமையான படம்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

மகாநதி.

இதில் சாதாரண ஒருவரின் மனநிலை மற்றும் நடவடிக்கைகளை அப்படியே பிரதிபலித்து இருப்பார்கள்.தன் பெண்ணைச் சோனா காஜ் ல் கண்டு தூக்கி வரும் போது, அந்தப் பெண் புரோக்கர் கமல் முடியைப் பிடித்து இழுத்து அடிப்பார்.

கமல் எதுவும் செய்ய முடியாமல் விழிக்கும் போது, அங்குள்ள பாலியல் பெண்கள் தங்களிடமுள்ள பணத்தைக் கொடுத்துக் கமல் பெண்ணை மீட்பார்கள்.

அதற்கு கமல் கை கூப்பிக் கொண்டே அவர்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டு நன்றி கூறுவார்..டாப் கிளாஸ் ஆக இருக்கும்.

தவமாய் தவமிருந்து

தவமாய் தவமிருந்து என்னை ரொம்பக் கவர்ந்த பாதித்த படம்.

காரணம் அனைவரும் அம்மா பிள்ளை பாசத்தையே காட்டி படம் எடுத்த போது அப்பா பாசத்தைக் கஷ்டத்தை உணர்வுபூர்வமாக எடுத்துக்காட்டிய படம்.

தீபாவளிக்கு தன் பிள்ளைகளுக்குப் பட்டாசு துணி எடுக்கப் பணம் இல்லாமல் செய்வதறியாது ராஜ்கிரண் இருப்பார்.

கடையை மூடும் நேரத்தில் ஒருத்தர் வந்து போஸ்டர் அடிக்க ஆர்டர் கொடுப்பார் மிகச் மகிழ்ச்சியுடன் கஷ்டப்பட்டு வேலை முடித்துப் பணம் வாங்கித் தன் பிள்ளைகளுக்கு அனைத்தும் வாங்கிக் கொடுத்துத் திருப்தியுடன் களைப்பாய் படுத்து இருப்பாரே! வார்த்தைகளால் விவரிக்கமுடியாத காட்சி அது.

சேரன் தவறு செய்து திருந்தித் தன் பெற்றோரை அதன் பிறகு நன்கு கவனித்துக் கொள்வார், கொடைக்கானலோ ஊட்டியோ எங்கேயோ அழைத்துப் போய் வருவார்.

வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு, அம்மா அப்பாவிற்கு நிறையச் செய்ய வேண்டும் என்று எண்ணி முடியாமல் பிறகு ஒரு நல்ல நிலையை அடைந்த பிறகு நினைத்த விருப்பங்களை நிறைவேற்றும் அல்லது நிறைவேற்ற நினைக்கும் ஒருவரால் மட்டுமே இந்தக் காட்சியை முழுமையாக ரசிக்க மற்றும் உணர முடியும்.

சரண்யா (அம்மா) தூக்கத்திலேயே இறந்து விடுவார். அருமையான இறப்பு, அதற்கு ராஜ்கிரணின் நடிப்பு அற்புதமாக இருக்கும்.

கடைசியில் ராஜ்கிரண் மருத்துவமனையில் இறந்த பிறகு தங்களுக்காகக் கஷ்டப்பட்டு உழைத்த அவரின் காய்ச்சி போன கால் பாதங்களைச் சேரன் தடவி அழும் போது மனதை உருக்கி விடும்.

இந்தப் படத்திற்கு ராஜ்கிரணுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், கிடைக்கவில்லை.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா அரசியல் சம்பவம்

குசேலன்.

ஊடகங்கள் வேண்டும் என்றே தாறுமாறாகப் பொய்யான செய்திகளை வெளியிட்டது, குறிப்பாகச் சன் குழுமம் மற்றும் தின மலர்.

இவை எல்லாவற்றையும் விடப் பதிவுலகத்தில் படத்தைக் கிண்டல் செய்து வந்த சில கீழ்த்தரமான பதிவுகள்.

அதற்கு அதை விடக் கேவலமாகப் பின்னூட்டம் இட்ட ஒரு சில பதிவர்கள். ரஜினியால் லட்சம் லட்சமாகச் சம்பாதித்த திரை அரங்கு உரிமையாளர்கள்.

தனது பாபா படம் தோல்வி அடைந்து போது பணத்தை முழுவதும் திருப்பிக் கொடுத்த நன்றி கொஞ்சம் கூட இல்லாமல், நான்கு சுவற்றுக்குள் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை யாருடைய தூண்டுதலிலோ மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டது

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்

சம்பவம் என்று எதுவுமில்லை.

பழைய விட்டலாச்சார்யா படங்களில் பல மாயாஜால காட்சிகள் பார்த்து, இதை எல்லாம் எப்படி எடுத்து இருப்பார்கள் என்று யோசித்துப் பார்ப்பேன், பார்க்கிறேன்.

அன்பே சிவம் படத்தில் கமல் ஒப்பனை பார்த்து அசந்ததுண்டு. இன்னும் கூட எப்படி இதைப் போட்டார்கள் என்று பிரம்மிப்பாக உள்ளது.

சமீபத்தில் கவர்ந்தது சிவாஜில தலைவர் வெள்ளையானது 🙂 .

மற்றபடி இந்திய சினிமா தொழில்நுட்பத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது என்பது என் கருத்து, இதற்கு படத்தின் பட்ஜெட்டும் ஒரு காரணமாக இருக்கலாம்

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ஒரு செய்தி விட மாட்டேன், கிசு கிசு, குருவியார் முதல் கொண்டு கிடைத்தால் படித்து விடுவேன். தட்ஸ்தமிழ்ல கூடத் திரைப் பகுதி தான் அதிகம் பார்ப்பேன்.

வாரமலரின் கருப்புப் பூனை சொல்றத கேளுங்க, எலீசா போன்றவற்றை விரும்பிப் படிப்பேன்.

தினத்தந்தி கிடைத்தால் திரை செய்திகள் தான் தேடி பார்ப்பேன்.

சில சமயம், நமீதாவை திருமணம் செய்வது போலக் கனவு கண்டேன், பலிக்குமா! போன்ற அறிவுபூர்வமான கேள்விகளையும் படிப்பேன்.

கிசு கிசு பகுதியில் நடிகர் நடிகை பெயர்கள் ரொம்பப் பிடிக்கும்.

உச்ச நடிகர், மேக் அப் நடிகர், பசுநேசன், ஒல்லிபிச்சான் நடிகர், மூணுஷா, வில் நடிகர், குண்டு பூ நடிகை, வாளை மீனு நடிகை, ப்ராமிஸ் கிங், கரடி நடிகர் பேரு எல்லாம் செம காமெடியா இருக்கும்.

இதுல பேர் வைக்கிறதுல டாப்பு வாரமலர் தான்

7.தமிழ்ச்சினிமா இசை

பிடித்த இசை அமைப்பாளர் என்று எவருமில்லை. இசை அமைப்பாளருக்காகப் பாட்டு கேட்பதில்லை. கேட்கப் பிடிக்கும் அனைத்து பாடல்களுமே ஓகே தான்.

அப்போதைய இளையராஜா பாடல்கள் ரொம்பப் பிடிக்கும்

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்

நான் எல்லாம் ஒரு நாளில் திரை அரங்கிலேயே நான்கு படம் பார்த்த ஆளு.

தாறுமாறா படம் பார்ப்பேன், மொக்கை படமாக இருந்தாலும் கடைசி வரை பார்ப்பேன்.

எனக்கு எந்த மொழி படமாக இருந்தாலும் பரவாயில்லை, படம் திரைக்கதை சரியாக இருக்க வேண்டும் அவ்வளோ தான்.

ஹிந்தி படத்தில் பிடித்தது Black, சத்யா, கம்பெனி, சர்கார், சர்கார் ராஜ், DDLJ, லகான்.

ஆங்கிலத்தில் Cast Away, Titanic, Golden Eye, Bruce lee and Jacki films, Saw series, Hostel, The Hills have eyes Part 1, Vacancy, Shooter.

பழிவாங்கும் படங்கள், ஹாரர், த்ரில்லர், வன்முறை மற்றும் சண்டை படங்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பேன்

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

அதெல்லாம் ஒரு தொடர்பும் இல்லை. நான் திருட்டு DVD பார்ப்பதில்லை அது ஒண்ணு தான் தமிழ் திரை உலகம் மேம்பட நான் செய்யும் ஒரே நல்ல காரியம்

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒன்றும் கவலையே படத் தேவையில்லை, நல்லாவே இருக்கும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்?

உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

என்ன ஆகும்! டிவி க்கள் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் திரைக்கு வந்து சில நாட்களே ஆன, சில மாதங்களே ஆன என்று கூவ முடியாது.

சீரியல் இல்லாமல் பலர் சைக்கோவாக மாற வாய்ப்புண்டு.

வீட்டுல பல பேர் போர் அடிக்குதுன்னு வெளியே அழைத்துச் செல்லக் கூறி செலவு வைப்பார்கள். வீட்டிலேயே இருக்கிறவங்க புதிய முயற்சிகளில் ஈடுபட யோசிப்பார்கள்.

அனைவரும் கலகலப்பாகப் பேசிக் கொள்வார்கள், நெருக்கம் அதிகரிக்கும்.

புதிய முயற்சிகளில் ஆர்வம் பிறக்கும். பரீட்சை க்கு நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் வாங்குவார்கள். (ஹி ஹி வார பலன் மாதிரி இருக்கிறதா!!)

குமுதம் ஆனந்த விகடன் குங்குமம் போன்ற பத்திரிக்கைகள் மூட வேண்டிய நிலைமைக்கு வந்து விடும். தினத்தந்தி சந்தாதார்கள் குறைந்து விடுவார்கள்.

sify, behindwoods, india glitz போன்ற தளங்கள் காற்று வாங்கிட்டு இருக்கும்.

பலர் வேலை இழப்பார்கள்.

ஒரு வருடத்தில் டிவி பார்க்காமல் இருந்ததால் இத்தனை நன்மையா என்று அனைவரும் அதிசயித்து இத்தனை நாளா நாம எத்தனை வெட்டியா இருந்து இருக்கிறோம் என்று ரொம்ப ஃபீல் பண்ணுவார்கள் 🙂 .

அப்புறம் ஒருவருடம் கழித்து ஃபீல் செய்ததைக் குப்பையில் போட்டு விட்டு வழக்கம் போல டிவி பார்க்கத் துவங்கி விடுவார்கள்.

இந்தத் தொடருக்காக என்னை அழைத்த இவன், மோகன், நான் ஆதவன் மற்றும் சர்வேசன் ஆகியோருக்கு நன்றி.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

25 COMMENTS

  1. //கயல்விழி said…
    Me the first?//

    யோசிக்கவே வேண்டாம்..ஏன்னா! என் பதிவிற்கு அப்படி யாரும் ஓடி வந்து கமெண்ட் போட மாட்டாங்க :-)))

    //இத்தனை கேள்விகளுக்கு வெற்றிகரமாக பதில் அளித்ததே சாதனை தான் :)//

    ஹா ஹா நம்ம கவுண்டர் பாணி ல சொல்றதுன்னா, டேய்! நாராயணா! இந்த தொடர் பதிவு தொல்லை தாங்க முடியலடா..யாராவது இதை தடுத்து நிறுத்துங்கடா! :-))))

    =======================================================================

    //SurveySan said…
    மூச்சு வாங்குது ;)//

    அதுக்கு தான் எங்களை எல்லாம் கூப்பிட கூடாது :-)))

    //தி.டி.வி.டி பாக்க மாட்டீங்களா? மெய்யாலுமா?//

    மெய்யாலுமே தான்..என்ன ஆனாலும் சரி பார்க்க மாட்டேன். திருடா! திருடி! கூட பேர் ல திருட்டு இருக்குதுன்னு ஒரிஜினலே பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டேனா பாருங்களேன் :-)))))

    //உங்க ப்ரொஃபைல்ல யாருங்க அது? மாளுவா? //

    இப்படி ஒரு கேள்வி கேட்டு எங்க தலைவியை கேவலப்படுத்திய சர்வேசனுக்கு இனி கிடைக்கிற தி.டி.வி.டி எல்லாமே மொக்க ப்ரின்ட்டா இருக்கணும்னு சாபம் விடுறேன்

  2. அதிக படங்கள் பார்ப்பதில்லை என்றாலும் மிக மிக நல்ல படங்கள் என பத்திரிகைகள் பரிந்துரைப்பவற்றை ரொம்ப லேட்டாகப் பார்ப்பதுண்டு. பெரும்பாலும் அவை “முதன் முதலாக” என்ற அறிவிப்புடன் சீக்கிரமே ஒரு பண்டிகைக்கு வீடு தேடி ஏதாவது ஒரு சேனல் புண்ணியத்தில் வந்து விடுவதுமுண்டு:)!

    மகாநதி, தவமாய் தவமிருந்து எனக்கும் பிடித்த படங்கள். இரண்டாவதில் குடும்பத் தலைவனும் தலைவியும் மறைந்த பிறகு அருமையுடன் வெறுமையையும் பிள்ளைகள் உணர, பேரப் பிள்ளைகள் தாத்தா பாட்டியைப் போற்றி பாடல் வாசிப்பதாக முடியும். டச்சிங்.

    குசேலனை நீங்கள் இத்தனை சொல்வதற்காகவே பார்த்தாக வேண்டும் போலிருக்கிறதே:)!

  3. //ராமலக்ஷ்மி said…
    மகாநதி, தவமாய் தவமிருந்து எனக்கும் பிடித்த படங்கள். இரண்டாவதில் குடும்பத் தலைவனும் தலைவியும் மறைந்த பிறகு அருமையுடன் வெறுமையையும் பிள்ளைகள் உணர, பேரப் பிள்ளைகள் தாத்தா பாட்டியைப் போற்றி பாடல் வாசிப்பதாக முடியும். டச்சிங்.//

    உண்மை தான் ராமலக்ஷ்மி. அவ்வாறு கூறுவது தங்கள் பெரியவர்களின் நினைவை மற்றும் அவர்களின் மீதான மரியாதையை உயர்த்த உதவுகிறது. அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள உதவுகிறது. தாத்தா பாட்டியை பற்றி குழந்தைகளிடம் கேட்டால் மண்டையை அவர்கள் சொரிய தேவையில்லை.

    //குசேலனை நீங்கள் இத்தனை சொல்வதற்காகவே பார்த்தாக வேண்டும் போலிருக்கிறதே:)!//

    பார்த்து விட்டு கூறுங்கள். என்னுடைய விமர்சனம் பொய்யில்லை என்று அறிவீர்கள் 🙂

    ============================================================================

    //கூடுதுறை said…
    ரொம்ப லேட்…தொடர்பதிவு….//

    அப்படியே டீல்ல விட்டுடலாம்னு தான் பார்த்தேன், மோகன் டெர்ரர் ஆகிடுவாருன்னு போட்டுட்டேன் 🙂

    //அடுத்து மென்பொருள் தொடர் ஆரம்பித்துவிட்டது… உங்களை மாட்டிவிட நான் சிபாரிசு செய்கிறேன்.//

    ஆளை விடுங்கடா சாமி. நான் தெரித்து ஓடிடுவேன்.

    //நடுராத்திரியில் வந்து me the first கயல்விழி போட்டு இருப்பதை பாருங்களேன்.//

    அவங்களுக்கு என்னங்க இப்ப தான் வீக்கென்ட் முடிந்து இருக்கும், நல்லா ரெஸ்ட் எடுத்து இருப்பாங்க…அதனால வந்து இருப்பாங்க.

  4. மூச்சு வாங்குது 😉

    தி.டி.வி.டி பாக்க மாட்டீங்களா? மெய்யாலுமா?

    உங்க ப்ரொஃபைல்ல யாருங்க அது? மாளுவா? வை?

  5. ரொம்ப லேட்…தொடர்பதிவு….

    அடுத்து மென்பொருள் தொடர் ஆரம்பித்துவிட்டது… உங்களை மாட்டிவிட நான் சிபாரிசு செய்கிறேன்.

  6. //நான் திருட்டு DVD பார்ப்பதில்லை அது ஒண்ணு தான் தமிழ் திரை உலகம் மேம்பட நான் செய்யும் ஒரே நல்ல காரியம்//

    அப்ப திருட்டு வி.சி.ஆர், வி.சி.டி பார்க்கிற பழக்கம் இருந்துச்சா????
    :-)))

    கூப்பிட்டதும் (உடனே இவ்வளவு சீக்கரமா) பதிவு போட்டதற்கு நன்றி கிரி..:-)))))

  7. //நான் ஆதவன் said…
    அப்ப திருட்டு வி.சி.ஆர், வி.சி.டி பார்க்கிற பழக்கம் இருந்துச்சா????
    :-)))//

    🙂

    //கூப்பிட்டதும் (உடனே இவ்வளவு சீக்கரமா) பதிவு போட்டதற்கு நன்றி கிரி..:-)))))//

    எப்படியோ! பதிவை போட்டேனேன்னு சந்தோசப்பட்டுக்குங்க

  8. Giri,
    Today I read your “Know about Singapore” article. Could you please provide me with some detail on “How to apply for a VISA to Singapore” that should be much helpful for a guy in Tamilnadu like me. Sorry if it is not relevant to you.

    Thanks,
    Arun

  9. அருண், நான் கன்சல்டன்சி மூலமாக வந்தேன், அவர்கள் தான் எனக்கு அனைத்தையும் செய்து கொடுத்தார்கள்.

    நீங்கள் சென்னை சிங்கப்பூர் தூதரகத்தை (நீங்கள் தமிழகத்தில் இருந்தால்) தொடர்பு கொண்டால் மேலும் விவரங்களை பெறலாம்.

  10. தவமாய்த் தவமிருந்து எனக்கு மிகவும் பிடித்த படம் கிரி.

    சேரனின் படங்களில் இது மிக நல்ல படம்.

    சுப்பிரமணியபுரம் உங்களுக்கு அப்பீல ஆகாதுன்னு எனக்குத் தெரியும். ஏன்னா கொங்கு மண்வாசனையும் மதுரை மண்வாசனையும் நேரெதிர்.

  11. Oh! God!

    //
    குமுதம் ஆனந்த விகடன் குங்குமம் போன்ற பத்திரிக்கைகள் மூட வேண்டிய நிலைமைக்கு வந்து விடும். தினத்தந்தி சந்தாதார்கள் குறைந்து விடுவார்கள். sify, behindwoods, india glitz போன்ற தளங்கள் காற்று வாங்கிட்டு இருக்கும். பலர் வேலை இழப்பார்கள்.

  12. கிரி அற்புதம்
    உங்களோட பதிலுனு நினைச்சிங்களா , அதான் எனக்கு தெரியுமே நீங்க நல்லாவே பதில் அளிபிங்கனு
    நான் சொன்னது இந்த புகைப்படம் “தலைவர், உலகன் நாயகன் அவர்களோட குரு” … அழகா இருக்கு … அற்புதம்…
    உங்களோட பழகினதுல கற்ற நல்ல விழியம் … திருட்டு DVD பார்ப்பதில்லை…அரங்கில் மட்டுமே …

  13. //அப்படியே டீல்ல விட்டுடலாம்னு தான் பார்த்தேன், மோகன் டெர்ரர் ஆகிடுவாருன்னு போட்டுட்டேன் //

    என்னது டெர்ரர்-ஆ? ஹாரர் ஆகி இருப்பேன். நீங்க வேற ஹாஸ்டல் படத்தை பத்தி ரொம்ப பேசி இருக்கீங்க. வாங்க ஸ்லோவேகியா போலாம்.

  14. //வடகரை வேலன் said…
    தவமாய்த் தவமிருந்து எனக்கு மிகவும் பிடித்த படம் கிரி.
    சேரனின் படங்களில் இது மிக நல்ல படம். //

    ரொம்ப சரி வேலன். சேரன் பல நல்ல படங்களை கொடுத்து இருந்தாலும் இந்த படம் என்னை ரொம்ப கவர்ந்தது.

    //சுப்பிரமணியபுரம் உங்களுக்கு அப்பீல ஆகாதுன்னு எனக்குத் தெரியும். ஏன்னா கொங்கு மண்வாசனையும் மதுரை மண்வாசனையும் நேரெதிர்.//

    அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க வேலன். எனக்கு பருத்தி வீரன் பிடித்து இருந்தது (க்ளைமேக்ஸ் தவிர). இந்த படத்துல சுவாராசியமா எனக்கு காட்சிகள் படலை, இந்த காட்சிகள் தான் வரும் என்று முன் கூட்டியே ஒரு ஊகத்திற்கு வர முடிந்தது (கஞ்சா கருப்பு கொலை தவிர) அதனால் இருக்கலாம். மற்றபடி செட்டிங்ஸ் மேக்அப் எதுவுமில்லாமல் இயல்பான படம்.

    =====================================================================

    //இளவேனில் said…
    நான் சொன்னது இந்த புகைப்படம் “தலைவர், உலகன் நாயகன் அவர்களோட குரு” … அழகா இருக்கு//

    ஆமாம் சக்தி, ரொம்ப அழகான படம்.

    //உங்களோட பழகினதுல கற்ற நல்ல விழியம் … திருட்டு DVD பார்ப்பதில்லை…அரங்கில் மட்டுமே …//

    அப்படியா! இன்னும் பார்க்காமல் தான் இருக்கிறீர்களா! இப்படியே தொடரவும் 🙂

    நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்கீங்க. அப்பப்ப வாங்க. வேலை எப்படி போகுது, புதுசா UNIX ஆளு எடுத்து இருக்காங்களா?

  15. //இவன் said…
    கடைசில எப்படியோ தொடர் பதிவு போட வைச்சாச்சு//

    ஒரு முடிவோட தான் இருக்காங்கய்யா! இனி எதுவும் சிக்க வைத்து விடாதீங்க..தொடர் பதிவு என்றாலே பீதி ஆகுது.

    =========================================================================

    //மோகன் said…
    என்னது டெர்ரர்-ஆ? ஹாரர் ஆகி இருப்பேன். நீங்க வேற ஹாஸ்டல் படத்தை பத்தி ரொம்ப பேசி இருக்கீங்க. வாங்க ஸ்லோவேகியா போலாம்//

    மோகன் மொதல்ல அந்த படத்தை பாருங்க, அப்புறமா முடிவு செய்து சொல்லுங்க ஸ்லோவேகியா போலாமா இல்ல வேண்டாமா என்று :-)))

  16. //தமிழ்நெஞ்சம் said…
    Oh! God!

    //
    குமுதம் ஆனந்த விகடன் குங்குமம் போன்ற பத்திரிக்கைகள் மூட வேண்டிய நிலைமைக்கு வந்து விடும். தினத்தந்தி சந்தாதார்கள் குறைந்து விடுவார்கள். sify, behindwoods, india glitz போன்ற தளங்கள் காற்று வாங்கிட்டு இருக்கும். பலர் வேலை இழப்பார்கள்.//

    வாங்க தமிழ்நெஞ்சம் ஓவரா சொல்லி விட்டேனா!! எனக்கு இப்படி தான் தோன்றியது 🙂

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி

    =======================================================================

    // இளைய பல்லவன் said…
    நல்லாருக்குங்க கிரி//

    ரொம்ப நன்றிங்க இளைய பல்லவன் (உண்மைய தான் சொல்றீங்களா? :-))) )

    //லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர்றதுன்றது இதுதானா?:)//

    ஹி ஹி ஹி வஞ்ச புகழ்ச்சி இல்லைன்னு நினைக்கிறேன் 🙂

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி

  17. Thanks Giri. If possible please suggest some good agencies that would be much helpful, because my friend already tried through an agency named vibrant and they cheated him to the extreme. That’s why I am asking this.

  18. அருண் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள், விவரங்களை தர முயற்சி செய்கிறேன்

  19. //கூடுதுறை said…
    //Blogger கிரி said…
    அருண் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள், விவரங்களை தர முயற்சி செய்கிறேன்//

    எனக்கெல்லாம் தரமாட்டிங்களா?//

    நீங்க கேட்கவே இல்லையே!

  20. //Blogger கிரி said…
    அருண் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள், விவரங்களை தர முயற்சி செய்கிறேன்//

    எனக்கெல்லாம் தரமாட்டிங்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here