நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே!

19
நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே!

பேருந்துப் பயணம் என்பது மேல்தட்டு மக்களைத் தவிர அனைவரது வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். நண்பர் பிரவின் பேருந்து காதல் என்ற தலைப்பில் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்து இருந்தார். Image Credit

எனக்கு வாழ்க்கையில் அது மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அதை ஒட்டி நடந்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே!

எல்லோருமே காதல் அல்லது காதல் என்கிற பெயரில் உள்ள இனக்கவர்ச்சியை தாண்டாமல் வரவே முடியாது. ஏதாவது ஒரு இடத்திலாவது எதிர்பாலினரிடம் கவரப்பட்டு இருப்போம்.

காதல் மனதை பார்த்துத் தான் வருகிறது என்று கூறினாலும் பெரும்பாலும் அது புற அழகில் தான் தொடங்குகிறது. சில விதிவிலக்காக இருக்கலாம்.

எனக்கு காதல் செய்ய ஆசை இருந்தாலும் அந்த வாய்ப்பு கிடைக்க வில்லை, பெரும்பாலனைவர்களை போல 😉 ஒரு பக்க காதலாகவே!! இருந்து விட்டது.

முதல் காதல்

பிஞ்சிலேயே பழுத்த மாதிரி நான்காம் வகுப்பு படிக்கும் போதே ஐந்தாம் வகுப்பு பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்து விட்டேன் 🙂 .

கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவரா இருக்கா! என்ன பண்ணுறது நீங்க நம்பித்தான் ஆகணும்.

இது தான் என்னோட முதல் காதல்.

அந்தப் பொண்ணு!! ஆறாம் வகுப்பிற்கு உயர்நிலைப் பள்ளி சென்றவுடன் அதோட முடிந்து விட்டது 😀 என்ன கொடுமை சார்.

அதன் பிறகு உடுமலை பேட்டை அருகே உள்ள கரட்டு மடம் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் ஹாஸ்டலில் நானே வம்படியா சென்று சேர்ந்து ஆப்பை வாங்கிக் கொண்டேன்.

அங்கே கொடுத்த தர்ம அடி காரணமாக நானும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது என்று அப்பாவிடம் கூறி இனி இங்கே என்னால் அடி வாங்க முடியாது!

ஊருக்கே அழைத்துச் சென்று விடுங்கள் என்று கூறியதால், வேறு வழி இல்லாமல் எங்கள் ஊரிலேயே அதுவும் ஹாஸ்டலில் சேர்ந்தேன்.

8 கிலோ மீட்டர்ல வீட்டை வைத்துட்டு ஹாஸ்டலில் படித்த ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்.

என்ன பாவம் செய்தேனோ

போன பிறவியில் என்ன பாவம் செய்தேனோ பொண்ணுகளே இல்லாத பள்ளியில் சேர வேண்டியதாகி விட்டது 🙁 .

இந்த வீணாப் போன பசங்களையே காலையிலிருந்து மாலை வரை பார்த்துத் தொலைக்க வேண்டியதாகி விட்டது 😀 .

+2 முடித்த பிறகு சென்னையில் டிப்ளமோ படிக்க வந்து அங்கேயும் பொண்ணுகளே இல்லை.

என்னடா இது! விதி வலியது போல இருக்கே என்று அதையும் முடித்து… ஒரு வழியாக வேலையில் சேர்ந்தேன்.

பட்டாம்பூச்சி

இங்க தாங்க என் வாழ்க்கையில் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது.

பேருந்தில் போகும் போது சைட் அடிப்பதே ஒரு தனி ஜாலி தான் அதுவும் சென்னை பெண்கள் பலர் செம ஃபிகர்ஸ்.

என் பேருந்து வழி ஸ்டெல்லா மேரிஸ், எத்திராஜ் போன்ற பெண்கள் கல்லூரிகள் நிறைந்தது, இனி யாரும் இதைப் பற்றி விளக்கம் கேட்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் 😉

நானும் வழக்கம் போலப் பசங்களோட குலத்தொழிலான சைட் அடிப்பதை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டு இருந்தேன்.

இரண்டு நிறுத்தம் தள்ளி, எல்லா ஃபிகரையும் தூக்கி சாப்பிடுற மாதிரி ஒரு ஃபிகர் மின்னல் மாதிரி ஏற… யார்ரா இது! இப்படியொரு டக்கர் ஃபிகர் என்று ஒரு நிமிடம் தடுமாறி விட்டேன்.

சரியான ஃபிகர்

இந்த இந்த இடத்துல தாங்க ஸ்லிப் ஆகிட்டேன். அதுவரை எத்தனையோ பேரைப் பார்த்து இருக்கிறேன் சைட் அடித்து இருக்கிறேன் ஆனால், அதோட மறந்து விடுவேன்.

ஆனால், இந்தப்பொண்ணு எதோ பண்ணிடுச்சு, அதற்கு ஒரு முக்கிய காரணம் எந்த ஒரு எக்ஸ்ட்ரா பில்டப்பும், அதிகளவில் ஒப்பனை இல்லாததும்.

பொண்ணுக தற்போது வைக்க விரும்பாத பூ வைத்து இருந்ததும் கவர்ச்சியான கண்களும் தான், மற்றதும் இருக்கு அதெல்லாம் உங்களுக்கு வேண்டாம்.

மொத்ததுல சரியான ஃபிகர்.

அலுவலகம் சென்றும் இதே நினைவாக இருந்தது, பிறகு அலுவலக வேலையில் மூழ்கியதில் அந்தப்பெண்ணை பற்றி மறந்து போனேன்.

மறுபடியும் அடுத்த நாள் காலையில் அலுவலகம் செல்லப் பேருந்து ஏறிய போது திரும்ப நினைவு வந்தது.

சரி சரி எதோ நேற்று பார்த்தோம்… இன்னைக்குமா வரும்! என்று ஒரு நப்பாசையில் சென்று கொண்டு இருந்தேன்..என்னால் நம்பவே முடியவில்லை! அதே பெண்.

பிறகு தான் தெரிந்தது அந்தப் பெண் கல்லூரிக்கு இதே நேரத்தில் செல்கிறார் என்று.

எப்போதும் Punctual ஆக இருப்பேன் இதனால் என் வேலையில் பயன் இருந்ததோ இல்லையோ இதற்கு ரொம்ப உதவியாக இருந்தது.

உடை

உடை விசயத்தில் எப்போதும் ஆர்வம், நீட்டாக உடை அணிவது எனக்கு ரொம்ப பிடித்தமானது.

நண்பர்கள் பலருக்கு நான் தான் காஸ்டியூம் டிசைனர். இந்தப்பெண் வேறு வருவதால் இன்னும் அதிகம் கவனம் எடுத்து உடை அணிவேன்.

அந்தப்பெண்ணுக்கு அபார உடை ரசனை. ஒவ்வொரு நாளும் அசத்தலாக உடை அணிந்து வருவார்.

ரொம்ப சிம்பிளாகத்தான் இருக்கும் ஆனால், கலக்கலாக இருக்கும். இதுவும் என்னைக் கவர ஒரு முக்கிய காரணம்.

சுமாரான ஃபிகரே சரியான உடை அணிந்தால் கலக்கலாக இருக்கும் சூப்பர் ஃபிகர் அப்படி அணிந்தால்… என்னமோ போங்க! என் மனசு என்கிட்டே இல்லை.

தெரிந்து விட்டது

இப்படியே நானும் அந்தப்பெண்ணை சைட் அடித்துக்கொண்டு இருப்பது அந்தப்பெண்ணுக்கு தெரிந்து விட்டது. பொண்ணுக இதுல ஜெகஜால கில்லாடிக ஆச்சே! 🙂 .

கண்டுக்காத மாதிரி இருப்பாங்க ஆனால், எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துட்டு இருப்பாங்க.

பசங்க பொண்ணுகளை பார்த்தாலே உற்சாகம் ஆகிடுவாங்க.

அந்தப் பொண்ணு இவர்களைப் பார்க்கிறது என்று தெரிந்தால் அவ்வளோ தான் அலப்பறை தாங்காது, அந்த நிலை தான் எனக்கு ஆனது.

அந்தப்பெண்ணும் ஓரக்கண்ணால் பார்ப்பதும் சிரிப்பதும் (நல்ல விதமாகத்தாங்க நீங்க எதுவும் தவறா நினைத்துக்காதீங்க) என்று எனக்குள் ரணகளத்தையே ஏற்படுத்தி விட்டது, உலகமே ஆனந்தமாக மாறி விட்டது.

காலையில் அலுவலகம் செல்ல எழவே சிரமப்பட்டுக்கொண்டு இருந்த நான், இதன் பிறகு சுறுசுறுப்பாக தயார் ஆகி விடுவேன்.

சனி ஞாயிறு ஏன்டா வருது

ஒரு பெரிய கொடுமை நான் செல்கிற நேரம் இரண்டு பேருந்து ஒன்றாக வரும் சில சமயம் அந்தப்பெண் வேறு பேருந்தில் ஏறி விடும்.

அப்ப வரும் பாருங்க கடுப்பு… அந்த ஓட்டுனரை மனசுக்குள் கண்டபடி திட்டி விடுவேன்.

ஏன்யா! வேணுங்கற நேரத்துல ஒருத்தரும் வர மாட்டீங்க வேண்டாத நேரத்துல இப்படி ஒட்டு மொத்தமா எல்லோரும் வந்து கழுத்த அறுக்கறீங்களே ! என்று புலம்புவேன்.

இந்த சனி ஞாயிறு ஏன்டா வருது என்று இருக்கும்.

கண்ணெதிரே தோன்றினாள்

ஒரு நாள் நண்பனிடம் இது பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும் போது அவன் பல கேள்விகள் கேட்டுக் கடைசியில் அது நண்பனோட தங்கிச்சிடா! என்று கூறியதும் காற்று போன பலூன் மாதிரி ஆகிட்டேன்.

“கண்ணெதிரே தோன்றினாள்” பிரசாந்த் நிலைமை ஆகி விட்டது.

என்னடா! இது வம்பா போச்சு தங்கச்சினு வேற கூறி இப்படி சென்ட்டிமென்ட் குண்டைத் தூக்கி போட்டு விட்டானே! என்று குழம்பி விட்டேன்.

சரி! அவனுக்கு தானே நண்பன், எனக்கில்லையே அதனால் நாம தொடர்வோம் என்று மனதை தேத்திகொண்டேன்.

இப்படியே ஒரு வருடம் போச்சு! ஆனால் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அதற்குள் அலுவலக சூழ்நிலை காரணமாக வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாக இருந்தது.

அதுவும் இல்லாமல் அந்தப்பெண்ணின் கல்லூரி படிப்பும் முடிந்து விட்டது (இதெல்லாம் என் நண்பன் பிறகு கூறித் தெரியும்).

எனக்கு இது அந்தப்பெண்ணின் மீதுள்ள இனக்கவர்ச்சி மட்டுமே! என்பது புரிந்தாலும் மனது கேட்கவில்லை.

அறிவிற்கு தெரிவது மனதிற்கு தெரிவதில்லையே.

எங்கிருந்தாலும் வாழ்க

அதன் பிறகு ஒரு முறை பேருந்திற்கு அந்தப்பெண் நிற்கும் போது பார்த்தேன், அதுவே கடைசியாக பார்த்தது. அதன் பிறகு பார்க்கவில்லை.

அதன் பிறகு மூன்று வருடம் கழித்து அந்தப்பெண்ணிற்கு திருமணம் என்றும் என்னையும் திருமணத்திற்கு வரும்படி நண்பன் அழைத்தான்.

நான் தான் “எங்கிருந்தாலும் வாழ்க” என்று கூறி விட்டுச் செல்லாமல் இருந்து விட்டேன்.

குடும்ப பொறுப்புகள் அதிகம் இருந்ததால் என்னால் இதற்கெல்லாம் நேரம் செலவழிக்க முடியாது என்று எனக்கே தெரிந்தது.

சரி இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று வடிவேலுக்கு முன்னாடியே ஒரு வசனத்தை நான் கூறி விட்டேன்.

அதுதாங்க “நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே!” என்று.

காதல் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று கொஞ்ச நாள் (அல்ப) சந்தோசமாக இருந்த திருப்தியோடு காதலுக்கு!! மூடு விழா நடத்தி விட்டேன்.

இதுதாங்க என்னோட பேருந்து காதல்!!.. எல்லோருக்கும் இதைப் போல ஒரு சிறு அனுபவமாவது இருக்கும் 🙂 .

19 COMMENTS

  1. //பிஞ்சிலேயே பழுத்த மாதிரி நான் நான்காம் வகுப்பு படிக்கும் போதே ஐந்தாம் வகுப்பு பெண்ணை காதலிக்க ஆரம்பித்து விட்டேன் ///
    நானுந்தான் ,ஆனா சின்ன வித்தியாசம் அந்த பொண்ணு ரெண்டாம் கிளாஸ் படிக்கறது ரெண்டு பேரும் ரொம்ப sincerera லவ் பண்ணோம் !!!!!!!!!

  2. பிஞ்சிலேயே பழுத்த மாதிரி நான் நான்காம் வகுப்பு படிக்கும் போதே ஐந்தாம் வகுப்பு பெண்ணை காதலிக்க ஆரம்பித்து விட்டேன்

    he…he…..

  3. //+2 முடித்த பிறகு சென்னையில் டிப்ளமோ படிக்க வந்து அங்கேயும் பொண்ணுகளே இல்லை..///

    same blood giri ,அதுவும் நான் இயந்திரவியல் துறை கேட்க வேணுமா 🙂 HAMMER ,VICE,SPANNER,WELDING, ரெண்டு வருஷம் ஓடிபோச்சு ….,இப்போ வேலை செய்யற இடத்தில வட்டியும் முதலுமா வழிஞ்சிகிடுருகிரேன்

  4. என்னமோ போங்க! என் மனசு என்கிட்டே இல்லை]]

    என்னமோ போங்க கிரி 🙂

  5. கிரி, எக்மோர் ஆபீஸ் monthly party-la பீர்-அ சாத்திட்டு சுத்தி சுத்தி கும்மி அடிப்பியேய்யா.. அது இந்த பொண்ண நெனச்சுதானா…

  6. கிரி இதுக்கு தான் பஸ்லே வந்துட்டு போனீங்களா… 🙂

  7. Giri…Can I tell you something all love or divine love start as infatuation…meera-vukku kannan mel muthalla vanthathu just attaraction appuram she developed it. kadhalikka neeramillai enbathu ellam saakkku…kathalikka thairuyam illai…antha unmaiyai othukomga.sorry I am rude aanaal next time yaariayaavathu pidithaal…dont ignore , develop it. All the best.

  8. சைட் அடித்த
    சென்னை
    பெண்னை
    பற்றி சொன்னீர்கள்

    சைட் அடித்து
    கொண்டிருக்கும்
    சிங்கை
    மங்கை
    பற்றியும் கொஞ்சம்
    கூறலாமே…
    (வீட்டுக்காரம்மாவுக்கு பயமா? (அவுத்து)விடுங்க கிரி அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா……….)

  9. Wow, giri back to form.

    ரசனையான பதிவு.

    இந்த இதமான வேளைக்கு ஏற்ற அழகான வரிகள்.

    எல்லோர்க்கும் கண்டிப்பாக இது மாதிரி அனுபவம் மழை மாதிரி வராவிட்டாலும் மின்னல் மாதிரியாவது வந்திருக்கும்.

  10. சரவணன் ராமலக்ஷ்மி ஜமால் வருகைக்கு நன்றி

    ஷங்கர் நானே பரவாயில்லை போல இருக்கே! 😉

    சோம்ஸ் அது வேறு இது வேறு 🙂

    சக்தி, இல்லைனாலும் நான் பேருந்தில் தான் வந்தாக வேண்டும் 😉

    அருண் அந்தப்பொண்ணு தப்பிச்சுடுச்சுனு நினைக்கிறேன் 😀

    ராஜி நீங்க சொல்கிற infatuation தான் தொடக்கம், நானும் அதையே கூறுகிறேன். அப்புறம் தைரியம் எல்லாம் எனக்கு ரொம்ப இருக்குங்க.. இருவரும் காதலித்து விட்டு நான் அந்தப்பெண்ணை வேண்டாம் என்று கூறி இருந்தால் நீங்கள் சொல்வது படி தைரியம் இல்லை என்று கூறலாம். நான் அந்த நிலைக்கு முன்பே ஒதுங்கி கொண்டேன். நீங்கள் கூறுவது படி நேரமில்லை என்பது ஒரு சாக்காக இருக்கலாம், குடும்ப சூழ்நிலை உண்மை தான். சில நேரங்களில் நம் ஆசையை விட நிதர்சனம் முக்கியமாகப்படுகிறது.

    அடுத்த முறை என்றால் அடுத்த ஜென்மம் தான், தற்போது எனக்கு திருமணம் ஆகி விட்டது. தற்போது என் மனைவியையும் என் குழந்தையையும் அதிகம் விரும்புகிறேன். இருப்பினும் உங்கள் வாழ்த்துக்கு நன்றி 🙂

    காத்தவராயன் சிங்கை மங்கைகளை பற்றி ஏற்கனவே கூறி இருக்கிறேனே! 🙂 என் மனைவி நீங்கள் நினைக்கும் அளவு பிரச்சனை இல்லை. இந்த விசயத்தில் கிரி கொடுத்து வச்சவன் தான் 😀

    சதா நன்றி 🙂 தளத்தில் இருந்த பிரச்சனைகள் காரணமாக கொஞ்ச நாள் எழுதவில்லை. சரி எழுதும் பதிவு சீரியஸ் ஆக இல்லாமல் கொஞ்சம் ரொமான்டிக்காக எழுதுவோம் என்று இதை எழுதினேன்.

  11. வணக்கம் நண்பரே! இப்பொழுதுதான் இந்த தொடர்பதிர்விற்கான மிகவும் சுவாரஸ்யமான பதிவாகவும் முழுமையடைந்த பதிவாகவும் இந்த பதிவினை நான் கருதுகிறேன். இதை புகழ்ச்சிக்காக கூறவில்லை ஏனெனில் உங்களுக்கு அது பிடிக்காது. உங்களது எழுத்துநடை மிக மிக அருமையாக உள்ளது. படிக்கும் பொழுதே நகைச்சுவையுடன் நீங்களே சொல்லும் இயல்பான பேச்சுநடை அதைவிட அருமை. இந்த பதிவினை நேற்றுதான் படித்தேன். அந்த எழுத்துநடை எனக்குள் பாதிப்பதை ஏற்படுத்தியதை உணர்ந்தேன். ஏதோ எனக்கு தோன்றியதை கூறினேன். இந்த பதிவை படித்தவுடன் நானும் இதற்குசரிபட்டு வரமாட்டேன் என்பதை உணர்ந்தேன். எனது அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி நண்பரே..! இனி தாமதமாக வந்தாலும் தப்பாம வருவோம்ல. (ஏன்னா..? உங்க வெப்சைட் மட்டும்தான் இப்ப அலுவலகத்தில் படிக்க முடிகிறது. மற்றதளங்கள்,blogspot.com அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டது.)

  12. உங்கள் பப்பி லவ் இப்படி சப்பி போனதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் 🙂

    //போன பிறவியில் என்ன பாவம் செய்தேனோ பொண்ணுகளே இல்லாத பள்ளியில் சேர வேண்டியதாகி விட்டது இந்த வீணாப் போன பசங்களையே காலையில் இருந்து மாலை வரை பார்த்து தொலைக்க வேண்டியதாகி விட்டது //

    ஹலோ உண்மைய சொல்லுங்க ? இது பள்ளியில் படித்த பொது கிடைத்த அனுபவமா இல்ல சிங்கையில் பணி புரிந்த பொது கிடைத்த அனுபவமா?

    //காற்று போன பலூன் மாதிரி ஆகிட்டேன்//

    அப்போதுமா?

  13. என்னமோ போங்க கிரி, அப்பவே நீங்க எனக்கு பழக்கமாகி இருந்தால் காதல் தூது போய் அதே பெண்ணை உங்களுக்கு கட்டி வைத்து இருப்பேன் :-).

    என் நண்பனுக்காக அவன் காதலியை பதிவு திருமணம் செய்து வைக்க போய் காவல் நிலைய அனுபவமெல்லாம் எனக்கு இருக்கு.

  14. காலையில் அலுவலகம் செல்ல எழவே சிரமப்பட்டுக்கொண்டு இருந்த நான், இதன் பிறகு சுறுசுறுப்பாக தயார் ஆகி விடுவேன்.

    எப்படி நாம இப்படி சுறுசுறுப்பாக இருக்கோம்

  15. பிரவின் உங்கள் பாராட்டிற்கு நன்றி. முடிந்த வரை இயல்பான எழுத்து நடையிலே எழுத முயற்சிக்கிறேன் (எனக்கும் அது தான் வரும்)

    //உங்க வெப்சைட் மட்டும்தான் இப்ப அலுவலகத்தில் படிக்க முடிகிறது. மற்றதளங்கள்,blogspot.com அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டது//

    உண்மை தான் பெரும்பாலான அலுவலகங்களில் blogspot தளங்களை முடக்கி விட்டார்கள். என்னுடையது custom Domain ல் இருப்பதால் வேலை செய்கிறது. விரைவில் இதற்கும் தடை வரலாம் (பெயரில் blog இருப்பதால்)

    என்னை இந்த தொடர்பதிவிர்க்கு அழைத்தமைக்கு நன்றி. பதிவில் கூற மறந்து விட்டேன் 🙁

    =====================================================

    //Logan April 29, 2010 at 11:13 PM [edit]

    உங்கள் பப்பி லவ் இப்படி சப்பி போனதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் //

    😀

    //ஹலோ உண்மைய சொல்லுங்க ? இது பள்ளியில் படித்த பொது கிடைத்த அனுபவமா இல்ல சிங்கையில் பணி புரிந்த பொது கிடைத்த அனுபவமா?//

    🙂 லோகனையே பார்த்துட்டு இருந்தா என்ன ஆவது.. அதனால அதற்கும் பொருந்தும் ஹி ஹி

    //அப்போதுமா?//

    இது நீங்க நினைக்கிற விஷயம் இல்லை, மனசு 😉

    ====================================================

    //சிங்கக்குட்டி April 30, 2010 at 10:17 AM [edit]

    என்னமோ போங்க கிரி, அப்பவே நீங்க எனக்கு பழக்கமாகி இருந்தால் காதல் தூது போய் அதே பெண்ணை உங்களுக்கு கட்டி வைத்து இருப்பேன் //

    தூது போவது பிரச்சனை இல்லை.. இது குடும்ப சூழ்நிலை காரணமாக 🙂

    //என் நண்பனுக்காக அவன் காதலியை பதிவு திருமணம் செய்து வைக்க போய் காவல் நிலைய அனுபவமெல்லாம் எனக்கு இருக்கு//

    அப்படியா! அடி வாங்கிய அனுபவம் இருக்கா 😉

    ===================================================

    சரவணன் ஃபிகர் என்றால் சுறுசுறுப்பாகி விடுவோமே! 😉

  16. நான் இந்த கிளைமாக்ஸ எதிர்பார்க்கலை அண்ணா…

    அந்த பெண் தான் தாங்களின் மனைவியாக அமைந்திருப்பார்கள் #( அந்தப்பெண்ணும் ஓரக்கண்ணால் பார்ப்பதும் சிரிப்பதும் (நல்ல விதமாகத்தாங்க நீங்க எதுவும் தவறா நினைத்துக்காதீங்க) என்று நினைத்துக்கொண்டே தான் படித்துவந்தேன் .. செம ஷாக் ஆயிட்டேன் ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here