எல்லோருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும், அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்!.
தேவதை
அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக, உங்கள் கண் முன்னாடி “ஏஞ்சல் எனும் தேவதை” வந்து உங்களுக்குப் பத்து வரங்கள் தருகிறது. நீங்கள் என்ன, என்ன வரம் கேட்பீர்கள்?
இப்படி என்னை வரம் கேட்க கூறி தேவதைய நம்ம சிங்கக்குட்டி அனுப்பி இருக்காரு..
பாவம் தேவதைக்கு நேரம் சரி இல்லை போல இருக்கு என் கிட்ட மாட்டிகிச்சு ஹி ஹி
எனக்குச் சமுதாயக் கோபங்கள் ரொம்ப அதிகம்..சமுதாயம் நல்லா இருந்தாலே நாம நல்லா இருப்போம்.
அதனால நான் கேட்கும் டெர்ரரான வரத்தைப் பார்த்து (கேட்டு) தேவதை டென்ஷன் ஆனா அதற்கு நான் பொறுப்பில்ல.
என்னை (தேவதையை) மாட்டி விட்ட சிங்கக்குட்டி தான் அதற்குக் காரணம்..என்ன ஓகே வா! 😉
சும்மா இப்படிக் கேட்டாவது என் மனசை தேத்திக்கிறேன் ஓகே ஸ்டார்ட் மூஜிக்
முதல்
பொதுவா அனைத்து நாடுகளிலும் லஞ்சம் வாங்கறது சட்டத்தை மீறி செய்யும் வேலைக்குத் தான் நடக்கும்.. ஆனா நம்ம நாட்டுல முறையா செய்ய வேண்டிய வேலைக்கே லஞ்சம் கொடுக்கணும்.
அதனாலே எவனெவன் லஞ்சம் வாங்குறானோ அவனுக்கெல்லாம் பேதி ஆகணும், பணத்தைத் திருப்பிக் கொடுத்தா தான் பேதி நிக்கணும். நம்ம முறைமாமன் படக் கவுண்டர் மாதிரி
இரண்டு
நெரிசல் மிகுந்த நேரங்களில் அம்பத்தூர் பஸ் மாதிரியான ரூட்களில் பெண்களிடம் சில்மிஷம் பண்ணுற மற்றும் பாலியல் ரீதியா தொல்லை பண்ணுற பொறம்போக்குக கையெல்லாம் விளங்காம போய்டனும்
மூன்று
நம்ம நாட்டுல இருக்கிற குப்பை சட்டங்களால என்ன தப்புச் செய்தாலும் குற்றவாளி வெளியே வந்துடுறான், அதுனால எவனாவது வன்புணர்வு செய்து இருந்தால், செய்தால் அவனோட ******** காணாம போய்டனும்
நான்கு
எனக்கு எளியோரை வலியோர் வருத்துதல் சுத்தமா பிடிக்காது.அப்பாவிய பிடித்து அநியாயம் பண்ணுவானுக.
இந்த மாதிரி பண்ணுனா அவனோட பாதிப் பலம் எதிராளிக்கு (அப்பாவிக்கு) போய்டனும் (பணமா இருந்தாலும் சரி உடல் பலமா இருந்தாலும் சரி)
ஐந்து
உலகத்துல எந்த நாட்டு மேல அணுகுண்டு போட்டாலும் ஊசி பட்டாசு அளவிற்குக் கூட வெடிக்காம நமத்து போய்டனும்
ஆறு
பொதுமக்களை அநியாயமா கொல்லும் தீவிரவாதிகள் அனைவருக்கும் கண்ணு இரண்டும் அவுஞ்சு போய்டனும். கண்ணு போகணும் என்றால் தான் தீவிரவாதி ஆகணும் என்ற நிலைமை வந்திடனும்
ஏழு
எவனெவன் போக்குவரத்து விதிய மதிக்காம சாலைல கண்டபடி வண்டி ஓட்டுறானோ(ளோ) அவங்க வண்டி, பஞ்சர் ஒட்டும் கடை சுற்று வட்டாராத்துல எங்கேயும் இல்லாத இடத்துல வந்தவுடன் பஞ்சர் ஆகிடனும்.
எட்டு
பொறுப்பில் இருக்கும் எந்த அதிகாரியும் அரசியல்வாதியும் தங்கள் கடமையைச் செய்யவில்லை என்றால் தர்ம அடி விழணும்.
அடி எங்கே இருந்து விழுதுனு தெரியாம குழம்பனும்.
ஒன்பது
அசிங்கமா பதிவு எழுதறவங்க பின்னூட்டம் போடுறவங்க எதுவும் பப்ளிஷ் ஆகாம நிக்கணும்.
கூடவே அவங்க ஏற்கனவே எழுதிய அதிகப் பேர் படித்த ஒரு பதிவும் டெலீட் ஆகிடனும் (பேக்கப் ல இருந்து போட்டாலும் வேலை செய்யக் கூடாது).
அதை அவங்க சரி செய்ய முடியாம மண்டைய பிச்சுக்கணும்.
பத்து
கடைசியா நான்..
பொதுவா நாம விரும்பியது எல்லாமே கிடைத்து விட்டால் வாழ்க்கையே சுவாராசியம் இல்லாம ஒரே மந்தமா இருக்கும்.
கஷ்டம் போராட்டம் சந்தோசம் அதிர்ஷ்டம் ஏமாற்றம் எல்லாமே இருந்தா தான் வாழ்க்கை த்ரில்லிங்கா இருக்கும்.
அதனால எனக்கு எல்லாமே வரணும் ஆனா அதைச் சாமாளிப்பதற்கு எனக்கு நிறையத் தன்னம்பிக்கை மட்டும் வேண்டும்.
இது ஒன்று இருந்தாலே போதும் வாழ்க்கையில பெரும்பாலானவற்றை அடைந்து விடலாம்.. என்ன சொல்றீங்க?
ஹலோ! அவனுக்கு அது போகணும் இது போகணும் என்று கேட்டதற்குப் பதிலா எல்லோரும் நல்லவங்களா இருக்கணும் என்று வேண்டி இருந்தாலே போதுமே!
அப்படின்னு யாராவது கண்டிப்பா யோசித்து இருப்பீங்க!
இதை எல்லாம் ஏற்கனவே நிறையப் பேர் கேட்டுட்டாங்க, கேட்பாங்க. உலகம் முழுவதும் நல்லவங்களாவே இருந்தா செம போர் ஆகி விடுங்க.
எல்லோரும் இருக்கணும் ஆனால், தப்புச் செய்தா தண்டனை கண்டிப்பா கிடைக்கும் என்ற பயம் இருக்கணும்.
சிங்கக்குட்டி சும்மா இல்லாம என்னை வேற தேவதை கிட்ட வரம் கேட்கச் சொல்லிட்டாரு..:… 🙂 நானும் கேட்டுட்டேன்.
இதை எல்லாம் கேட்டுத் தேவதை டென்ஷன் ஆகாம இருந்தா சரி! 🙂 .
நான் எப்போதும் யாரையும் தொடர்பதிவை தொடர அழைப்பதில்லை அப்புறம் கிரி இந்த மாதிரி அழைக்காம இருக்கணும் என்று யாராவது வரம் கேட்டுடுவாங்க என்பதால்… 😉 .
அதனால் விருப்பம் இருக்கிறவங்க தாராளாமா நான் அழைத்ததாகக் கூறி இந்தப் பதிவை தொடரலாம், போன தொடர் பதிவிலேயே கலையரசன் சொல்லி இருந்தாரு.
எனவே, அவரை யாரும் இதற்கு முன்பு இந்தத் தொடர் பதிவிற்கு அழைக்கவில்லை என்றால் அவர் விருப்பப்பட்டால் தொடரலாம்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
வித்தியாசமான வரங்கள். 🙂
//எல்லோரும் நல்லவங்களா இருக்கணும் என்று வேண்டி இருந்தாலே போதுமே! அப்படின்னு யாராவது கண்டிப்பா யோசித்து இருப்பீங்க! 😉 இதை எல்லாம் ஏற்கனவே நிறைய பேர் கேட்டுட்டாங்க, கேட்பாங்க. உலகம் முழுவதும் நல்லவங்களாவே இருந்தா செம போர் ஆகி விடுங்க, எல்லோரும் இருக்கணும் ஆனா தப்பு செய்தா தண்டனை கண்டிப்பா கிடைக்கும் என்ற பயம் இருக்கணும்.//
ம்ம்ம். நல்லாத்தான் இருக்கு உங்க லாஜிக். செம போர் என்பதைவிட எல்லோரும் நல்லவங்களா… என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்பதுதான் உண்மையா இருக்கு. தண்டனை கிடைக்கும் என்கிற பயம் என்னவோ யாருக்கும் இருக்கிற மாதிரி தெரியலை. பார்க்கலாம் உங்க தேவதை டென்ஷன் ஆகாம எப்படி அருள் செய்றாங்கன்னு:)!
பதிவுலக ரமணா வாழ்க வாழ்க 🙂
ஹா ஹா! கோயிலுக்கு முன்னாடி நின்னு மண்ணை வாரி தூத்திச் சொன்னது போல இருக்கு வரங்கள்.
ரசித்தேன்.
பத்தாவது பாயிண்ட்
பிராக்டிக்கல் மற்றும் டச்சிங்!
கிரி,
வணக்கம் சொல்லிட்டு போக வந்தேன். வரட்டா??
உங்களுக்கு அந்தத் தேவதை பத்து வரங்களையும் அருளட்டும் என்று பதினொன்றாவது வரமாக நான் கேட்கிறேன்,கிரி.
// அதனால எனக்கு எல்லாமே வரணும் ஆனா அதை சாமாளிப்பதற்கு எனக்கு நிறைய தன்னம்பிக்கை மட்டும் வேண்டும். இது ஒன்று இருந்தாலே போதும் வாழ்க்கையில பெரும்பாலானவற்றை அடைந்து விடலாம்.. என்ன சொல்றீங்க?\\அதையே தான் நானும் சொல்றேங்க
உங்களுடைய சமுதாய வரங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு… எதாவது ஒன்று நடந்தால் கூட போதும் எனக்கு…
// வானம்பாடிகள் said…
வித்தியாசமான வரங்கள். :)//
நன்றி சார்
=================================================
// பிரேம்ஜி said…
கிரி,
வணக்கம் சொல்லிட்டு போக வந்தேன். வரட்டா??//
போகறதுக்கு வந்தீங்களா! போறீங்கன்னா… வரேன்னு கேட்கறீங்க!
அப்பாடா! ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு மொக்கையை போட்டுட்டேன் ஹி ஹி
==================================================
// ராமலக்ஷ்மி said…
ம்ம்ம். நல்லாத்தான் இருக்கு உங்க லாஜிக். செம போர் என்பதைவிட எல்லோரும் நல்லவங்களா… என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்பதுதான் உண்மையா இருக்கு. //
வரம் கேட்க காசா பணமா! சும்மா கேட்டு வைப்போம் 😉
//தண்டனை கிடைக்கும் என்கிற பயம் என்னவோ யாருக்கும் இருக்கிற மாதிரி தெரியலை.//
அந்த பயம் வரணும் என்றால் நம்ம வரம் ஓகே ஆகணும் ஹா ஹா ஹா
=================================================
// ஷண்முகப்ரியன் said…
உங்களுக்கு அந்தத் தேவதை பத்து வரங்களையும் அருளட்டும் என்று பதினொன்றாவது வரமாக நான் கேட்கிறேன்,கிரி//
நன்றி சார்
================================================
// பாசகி said…
பதிவுலக ரமணா வாழ்க வாழ்க :)//
ரமணாவ விட நாங்க டெர்ரர் 😉
================================================
// வெ.இராதாகிருஷ்ணன் said…
ஹா ஹா! கோயிலுக்கு முன்னாடி நின்னு மண்ணை வாரி தூத்திச் சொன்னது போல இருக்கு வரங்கள். //
இந்தியன் படத்துல மனோரமா கேமராவ பார்த்து சாபம் விடுவாங்களே! அது மாதிரியா! 🙂
==================================================
// வால்பையன் said…
பத்தாவது பாயிண்ட்
பிராக்டிக்கல் மற்றும் டச்சிங்!//
நன்றி அருண்
====================================================
// ஈ ரா said…
நல்ல வேளை ஒரு சுவாரசியமான வரத்தை கேட்டுக்கிட்டீங்க.//
இல்லைனா ரொம்ப நல்லவன் ஆகிடுவேனாம் :-)))
=====================================================
// Mahesh said…
சூப்பர் கிரி…. எந்த வரமுமே வேண்டாம்… அந்த 10வது வரம் மட்டும் போதுமே…//
நமக்கு எந்த வரமும் வேண்டாம்..ஆனா மற்றவங்களுக்காக மற்ற ஒன்பது வரம் வேண்டும் 🙂
====================================================
// தேவன் மாயம் said…
வரங்கள் எல்லாம் நல்லாக் கேட்டீங்க!
பத்தாவது ரொம்ப கஷ்டம்!//
அது ஒன்னு தான் நடக்கிற மாதிரி கேட்டு இருக்கேன்..அது கஷ்டம்னு சொல்லிட்டீங்களே! அவ்வ்வ்வ்வ்
====================================================
// கிறுக்கல் கிறுக்கன் said…
அதையே தான் நானும் சொல்றேங்க//
நன்றி (உங்க பேரை வேற சொல்ல முடியல)
===================================================
// சிங்கக்குட்டி said…
ஹ..ஹ..,ஹா…படிச்சு முடிச்சும் சிரிப்பு அடங்காம…கண்ண மூடிகிட்டு சிரிச்சேன் ..ஆனா …படத்துல ஊர்ல எதோ ஆச்சி கைல குச்சிய வச்சுக்கிட்டு திட்டுரமாதிரி வருது கிரி :-)) அருமை அருமை ….//
:-))) நன்றி சிங்கக்குட்டி
//கிரி ஒரு ஆளா இல்ல ஒரு குரூப்பா? எப்படி எல்லா பின்னூட்டதுக்கும், பதிலும் போட்டு மத்த எல்லாருடைய பதிவையும் படிச்சு பின்னூட்டம் போட முடியுது?//
இதை நீங்க இப்படியும் நினைக்கலாம்..நாம இரண்டு பெரும் பெரும்பாலும் படிக்கிற பதிவர்கள் ஒண்ணா இருக்கலாம்..
அப்புறம் என்னோட பதிவுல பதில் கூற காரணம்..நான் சாதா பதிவர்ங்க பிரபல பதிவர் இல்ல..பதில் அளிக்காம இருக்க 🙂 நீங்க என்னை மதித்து பின்னூட்டம் போடுறீங்க..அதற்க்கு நான் பதில் போடலைனா நல்லா இருக்குமா..அதுனால நேரம் கிடைக்கும் போது மொத்தமா ஒரே பின்னூட்டமா போட்டு விடுவேன், அதுவும் இல்லாம எனக்கு வரதே கொஞ்சம் பின்னூட்டம் அதுக்கு கூட பதில் போடலைனா எப்படி! 😉
//ஒரு நாலு நாளா நானும் உங்களுக்கு முன்னாடி ஒரே ஒரு பதிவருக்கவது பின்னூட்டம் போட முயற்சி பண்ணி முடியல என்னால?//
இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கு 😉 ஆனா எனக்கு மூன்று நாளா விடுமுறை..விடுமுறை முடிந்தால் பின்னூட்டமும் குறைந்து விடும்.
===============================================
// பாலகுமார் said…
உங்களுடைய சமுதாய வரங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு… எதாவது ஒன்று நடந்தால் கூட போதும் எனக்கு…//
உண்மை தாங்க பாலகுமார்… அந்த அளவிற்கு பொதுமக்களாகிய நாம் வெறுத்து போய் இருக்கோம்
ஏழு வரத்துல எதையுமே தலைவரு வச்சுக்கல… எங்க நீங்களும் அப்படி ஒண்ணையுமே வச்சுக்க மாட்டீங்களோன்னு நினைச்சேன்…நல்ல வேளை ஒரு சுவாரசியமான வரத்தை கேட்டுக்கிட்டீங்க…
சூப்பர் கிரி…. எந்த வரமுமே வேண்டாம்… அந்த 10வது வரம் மட்டும் போதுமே…
தலைவர் ஒண்ணு கேட்டா நூறு குடுத்த மாதிரி…
வரங்கள் எல்லாம் நல்லாக் கேட்டீங்க!
பத்தாவது ரொம்ப கஷ்டம்!
ஹ..ஹ..,ஹா…படிச்சு முடிச்சும் சிரிப்பு அடங்காம…கண்ண மூடிகிட்டு சிரிச்சேன் ..ஆனா …படத்துல ஊர்ல எதோ ஆச்சி கைல குச்சிய வச்சுக்கிட்டு திட்டுரமாதிரி வருது கிரி :-)) அருமை அருமை ….
உங்க கிட்ட இன்னொன்னு கேட்கனும்னு ஆசை, கிரி ஒரு ஆளா இல்ல ஒரு குரூப்பா? எப்படி எல்லா பின்னூட்டதுக்கும், பதிலும் போட்டு மத்த எல்லாருடைய பதிவையும் படிச்சு பின்னூட்டம் போட முடியுது?
ஒரு நாலு நாளா நானும் உங்களுக்கு முன்னாடி ஒரே ஒரு பதிவருக்கவது பின்னூட்டம் போட முயற்சி பண்ணி முடியல என்னால?
nice!
ஏண்ணே!!! நீங்க எல்லாம் தேவதை வந்தா வரமா கேட்பீங்க? போங்க இம்புட்டு அப்பாவியா நீங்க?
nalla iruku giri
"Kurai onrum illai" avaroda comment supero super…….
appuram, "என்னோட பதிவுல பதில் கூற காரணம்..நான் சாதா பதிவர்ங்க பிரபல பதிவர் இல்ல..பதில் அளிக்காம இருக்க :-)" —>> Yaar antha பிரபல பதிவர்??:)
//மங்களூர் சிவா said…
nice!//
வருகைக்கு நன்றி சிவா
================================================
// குறை ஒன்றும் இல்லை !!! said…
ஏண்ணே!!! நீங்க எல்லாம் தேவதை வந்தா வரமா கேட்பீங்க? போங்க இம்புட்டு அப்பாவியா நீங்க?//
பேச்சு பேச்சா இருக்கணும் 😉
=================================================
// arun said…
nalla iruku giri//
நன்றி அருண்
//Yaar antha பிரபல பதிவர்??//
அதை குறை ஒன்றும் இல்லையை தான் கேட்கணும் ..அவர் தான் சொல்லிட்டு இருந்தாரு 😉