சத்யராஜிற்கு ஒரு நியாயம்! மற்றவர்களுக்கு ஒரு நியாயமா!!

55
சத்யராஜிற்கு ஒரு நியாயம்! sathyaraj

மிழே என் பேச்சு! தமிழே என் மூச்சு!! என்று தமிழ் மக்கள் மீது இவர் மட்டும் தான் அக்கறை இருப்பது போலப் பேசிக் கொண்டு இருக்கும் சத்யராஜ் ராமேஸ்வரம் போராட்டத்திற்கு வராமல் போனதற்குக் கீழ் கண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.

சத்யராஜிற்கு ஒரு நியாயம்!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை. என்து வீட்டில் முக்கிய நிகழ்ச்சி இருந்ததால் என்னால் போக இயலவில்லைImage Credit

இதோட விட்டாரா….

இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்துச் சென்னையில் நாளை முதல்வர் தலைமையில் மனித சங்கிலி நடக்க உள்ளது.

இதில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தை நான் வரவேற்கிறேன்.

அவர் சொன்னது போல் இப்போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே லாயக்கற்றவர்கள்

அதெப்படிங்கய்யா! உங்களுக்கு மட்டும் போராட்டத்திற்கு வர முடியலைனா ஒரு காரணம் சொல்வீங்க அதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், வேற யாராவது இதே போலக் காரணம் இருந்து வர முடியவில்லை என்றால் தமிழின துரோகி! சத்யராஜிற்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா!

நல்லா இருக்குங்கய்யா நியாயம்!

தமிழ் நாட்டில் இருக்கவே லாயக்காற்றவர்களா! நல்லா இருக்குங்கய்யா நியாயம்!!

இதே வேறு யாராவது முக்கிய நிகழ்ச்சி இருக்கிறது என்று கூறி வராமல் இருந்ததற்குக் காரணம் கூறி இருந்தால் இந்நேரம் மேடையிலேயே சாமியாடி இருப்பார்.

சத்யராஜிற்கு உண்மையிலேயே ஏதாவது முக்கியக் காரணத்தால் வர முடியாமல் இருக்கலாம், ஏற்றுக் கொள்கிறேன். எப்போது… மற்றவர்களின் உரிமைக்கும் காரணங்களுக்கும் மதிப்பளித்திருந்தால்.

போராட்டத்திற்கு வரவில்லை, தமிழ் நாட்டு மக்களின் பணம் மட்டும் வேண்டும் தமிழ் மக்கள் வேண்டாமா! என்று மேடையில் வாய் கிழிய வசனம் மட்டும் பேசத் தெரிகிறது, ஆபாசமாக நக்கல் அடிக்கத் தெரிகிறது.

தமிழ் உணர்வு

இப்போது மற்றவர்கள் சத்யராஜிற்குத் தமிழ் உணர்வு இல்லை, தமிழ் மக்களை மதிக்கவில்லை அதனால் தான் வரவில்லை என்று ஆளாளுக்கு அறிக்கை விட்டால் ஏற்றுக் கொள்வாரா!

வராமல் போனதற்காக அவ்வாறு கூறுவது தான் நியாயமா!!

இவரைப் போன்றவர்கள் தமிழ் தமிழ் என்று கூறி தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

தங்களுக்குக் கிடைத்து இருக்கும் மேடையைத் தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் போராட்டத்திற்குச் சம்பந்தம் இல்லாமல் விமர்சிக்கப் பயன்படுத்துகிறார்களே தவிரப் போராட்டத்தின் மைய கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.

திரை உலகினர் போராட்டம் என்று அறிவித்தால் அவரைப் பற்றி இவரும், இவரைப் பற்றி அவரும் தான் விமர்சித்துக் கொண்டுள்ளார்கள்.

அவர் வரலை இவர் வரலை என்று குறை கண்டு தங்களைத் தமிழின பிரதிநிதியாகப் பறைசாற்றிக் கொண்டு இருக்கிறார்களே தவிர ஈழ தமிழர்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பதாகத் தெரியவில்லை.

ஊடகங்களிலும் இவர்கள் சண்டை தான் பிரதான செய்தியாக வந்தது.

ஈழ மக்கள்

ஊடகங்களும் விற்பனைக்காக நடிகர்கள் பேட்டியைப் போட்டுத் தங்கள் விற்பனையை உயர்த்திக் காசு பார்க்கிறார்களே தவிர, ஈழ தமிழ் மக்கள் படும் கஷ்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.

போராட்டத்தில் இவர்கள் ஈழ தமிழர்கள் படும் துயரத்தைப் பற்றிப் பேசியதை விட மற்றவர்களைப் பற்றிக் குறை கூறி பேசியதே அதிகம்.

இப்படித் தமிழர்களுக்குள்ளே அடித்துக் கொண்டு அடுத்தவனைக் கிண்டல் செய்து கொண்டு நான் தான் உண்மையான தமிழன்! நீ தான் உண்மையான தமிழன்!! என்று பேசிக் கொண்டு இருப்பதை நிறுத்தி விட்டு உண்மையான பிரச்சனை என்னவோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்காதவரை இவர்களால் பைசா பிரயோஜனமில்லை.

இனி வரப் போகிற நடிகர் சங்க போராட்டத்தில் இவர்கள் என்னென்ன காமெடி செய்யப் போகிறார்களோ! அந்தத் தமிழ் கடவுள் முருகனுக்கே வெளிச்சம்.

உண்மைத் தமிழர்கள்

தமிழ் தமிழ்ன்னு சொல்கிறவர்கள் அனைவரும் உண்மைத் தமிழர்கள் இல்லை.

எதுவும் கூறாமல் உண்மையான அன்பு கொண்டு ஈழ தமிழர்களுக்காக  மனதினுள் கண்ணீர் விடும் மக்களுக்குத் தமிழ் உணர்வு இல்லை என்று அர்த்தம் இல்லை.

உண்மையான அன்போடு ஈழ தமிழர்கள் போராட்டத்தில் (நேரடியாகவும் மறைமுகமாகவும்) கலந்து கொண்டவர்களுக்கும் கலந்து கொள்ளப் போகிறவர்களுக்கும், தார்மீக ஆதரவு அளித்தவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

55 COMMENTS

 1. //முரளிகண்ணன் said…
  உடன்படுகிறேன் கிரி//

  நன்றிங்க முரளி கண்ணன்

  =================================================================

  //நல்லதந்தி said…
  இராமேஸ்வரத்திற்குப் போகாத சத்தியராஜை ஏன் யாரும் திகட்டத் திகட்டதிட்ட வில்லை?//

  அவர் தான் புரட்சி தமிழராச்சே 🙂

 2. //கூடுதுறை said…
  சத்தியராஜ் முதலில் வில்லன் வேடமிட்டார்…பிறகு கதாநாயகன் ஆனார்…ஆனால் இப்போது காமெடியன் ஆகிவிட்டார்.//

  :-))))

  //கொங்கு நாட்டு அவமானம் = சத்யராஜ்//

  பார்த்துங்க பெருமைபடுகிறவர்கள் பொங்கிட போறாங்க :-))))

 3. பாஸ்கர் ரொம்ப சூடா இருக்கீங்க போல :-)))

  ==============================================================

  //மோகன் said…
  கிரி, நானும் இதை பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன்.//

  ஏற்கனவே அதற்க்கு பின்னூட்டம் இட்டு விட்டேன் 🙂

  // இவருடைய சூழ்நிலையை மற்றவர்கள் புரிந்துக் கொண்டு அடக்கி வாசிக்க வேண்டும். ஆனால் இவர் மற்றவர்கள் சூழ்நிலையை புரிந்துக் கொள்ள மாட்டார்.//

  சரியா சொன்னீங்க மோகன். இதையே நானும் கூறுகிறேன்..இவருக்கு இருக்கும் பிரச்சனைகள் போல மற்றவர்களுக்கு இருக்க கூடாதா!

 4. //மோகன் said…
  சத்யராஜ் படத்தில் வரும் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது: என்னோட கேரச்டரையே புரிஞ்சிக்க மாட்டீங்கறீங்களே?//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ====================================================================

  //Simple_Sundar said…
  கிரி, இதுக்கு பேர்தான் நெத்தியடி. அருமையான பதிவு.//

  நன்றி சுந்தர்

  //தமிழ் தமிழ்ன்னு கத்துற இந்த மிருகம், தன்னோட படத்துல நடிக்கிற ஹீரோயின் கண்டிப்பா தமிழ் பொண்ணாதான் இருக்கனும்முன்னு என் சொல்லக்கூடாது? //

  மற்றொருவர் படம் என்பதால் இருக்கலாம், ஆனால் இவர் தயாரிப்பில் வெளி வந்த வில்லாதி வில்லன், லீ போன்ற படங்களில் தமிழ் நடிகையை பயன்படுத்தி இருக்கலாம்

  //அப்போ மட்டும், நக்மா, குஷ்பூ மற்றும் //

  சுந்தர் அவர் போல நாம் ஏன் பேச வேண்டும்? நாம் அவர் அளவுக்கு இறங்கி அவரை போல அசிங்கமாக பேச வேண்டுமா? அப்புறம் அவருக்கும் நமக்கும் வித்யாசம் இல்லாமல் போய்விடும்.

  //உண்மையான தமிழன் இப்படி அடுத்தவங்களை குறை சொல்லமாட்டான்.வந்தாரை மேடையில வெச்சு அவமானபடுத்தமட்டான்//

  சரியா சொன்னீங்க. ஒரு வேளை இவர் புரட்சி தமிழர் என்பதால் இப்படி பேசுகிறாரோ!

  //ஆனா இந்த தடவை இவன் வாலாட்டுனா//

  நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அவர்களே தங்கள் நிலை தாழ்ந்து விடுவார்கள்.

 5. //EE. RAA @ Rams said…
  கிரி வணக்கம்
  அசத்யராஜ் லாடம் விழாவில் சீமான் அமீர் ஆகியவர்களை எதிர்ப்பவர்களுக்கு லாடம் கட்ட வேண்டும் என்றார் .. இன்னிக்கு ஜெயலலிதா அவர்களை உள்ளே போடணும் என்று அறிக்கை விட்டு இருக்கிறார்//

  அப்படியா! நான் இன்னும் படிக்கவில்லை. இவர்கள் இவ்வாறு சண்டை போட்டுக்கொண்டு இவர்கள் சென்ற போராட்டத்தை கேள்விக்குறி ஆக்கி கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் போராட்டம் ஈழ தமிழர்கள் போராட்டம் பற்றியதா இல்லை இவர்கள் உள்ளுக்குள் அடித்துக்கொள்ளும் போராட்டம் பற்றியதா என்று எனக்கு சந்தேகம் வந்து விட்டது.

  //அப்போ அவருக்கும் லாடம் கட்டனுமா? அத சத்யராஜிடம் கேட்க வேண்டும், என்ன மழுப்புராருன்னு பார்க்கணும்.//

  அவருக்கென்ன இரண்டு புரட்சி வசனங்களை பேசி விட்டு வீட்டுல விசேஷம் அப்புறம் பார்க்கலாம்னு போய்டுவாரு 🙂

  //sorry if tamil fonts are not correct from here//

  சரியாக தான் தெரிகிறது ஈ ரா

 6. //Sakthi said…
  இந்த ஆளு பேசினதை படிச்சபோது என் மனசில தோணினதை நீங்க அப்படிய பதிவா போட்டுடீங்க.. ரொம்ப நன்றி கிரி அவர்களே…//

  நன்றி சக்தி…

  அவர்களேன்னு எல்லாம் சொல்லாதீங்க சக்தி, கிரி போதும் 🙂

 7. Dr. Kalaignar M. Karunanithy
  Chief Minister of Tamil Naad,
  Respected Sir,
  The Tamil People of Sri Lanka are glad that Tamil Naad has started showing interest in the Sri Lankan ethnic problem. But they are disappointed that the concerns of the Tamil People now trapped in the areas under the control of the LTTE are ignored. LTTE is using them as human shield to protect them. The People are also upset and worried that the enthusiasm displayed in Tamil Naad is showing tendencies of confrontation with the majority community the Sinhalese, with whom the Tamils had been living from time immemorial and will have to live in the future as well. Long before his assassination Mahatma Gandhi had warned that India and Ceylon can’t afford to quarrel each other, but more than that being immediate neighbours and having several things in common, Tamil Naad and Sri Lanka should maintain cordial relationship between the two.
  We Sri Lankans remember with gratitude the innumerable detections in Tamil Naad, made by both the “Q” branch of the Tamil Naad Police and the Indian Navy, of several tons of material, including steel balls, aluminum foils, ball bearings and chemicals, used for the manufacture of bombs, claymore mines hand grenade etc. The credit goes to your Police of Tamil Naad and the Indian Navy for the detections, and if those detections had not taken place only God knows as to what would have happened to our countries. We are not un-mindful of what can happen to our country, if the LTTE is allowed to operate freely in Tamil Naad and that is why I re-iterate that both Tamil Naad and Sri Lanka should maintain close relationship between them. We can’t forget so easily as to what happened to Hon Rajiv Gandhi and there is no guarantee that a similar incident will not take place again, if the LTTE is allowed to operate freely in Tamil Naad. Please see that a Jaffna is not created in Tamil Naad.
  The decision of the All Party Conference to seek the help of the Central Government to find an early solution is perfectly alright. But that is not the immediate need of our people trapped and kept under compulsion in Killinochchi by the LTTE. The decision of the All Party conference would have been more appropriate if it had also decided to request the Central Government to compel the LTTE to release the innocent civilians detained by force in areas under their control. The ultimatum of two weeks given to the Central Government to act has caused a furore among the hardliners in Sri Lanka, causing embarrassment to the Sri Lankan Government, which is aware of the compelling need to maintain good relationship with India.
  I hope you will concede that all those who are in the fore-front of the campaign hardly know anything about the happenings in Sri Lanka and act only on the testimony of some LTTE supporters, who themselves are mis-led by some others. They never bother to find out the truth. Tamil Naad should be warned of the danger in acting on the advice of the TNA Members of Parliament who were fraudulently elected as members with the fire power of the LTTE and they act only as proxies of the LTTE. They carry out LTTE’s orders. No one cared to come to Sri Lanka to find out the truth. The people in Sri Lanka live in constant fear and tension due to the LTTE’s claymore- mine, land- mine and hand- grenade attacks that are taking place everyday in some part of Sri Lanka. That had caused the death of several innocent Sinhala Tamil and Muslim people. This is perhaps why no one from India undertakes a trip on a fact finding mission to Sri Lanka. It is this menace that we are trying to get rid of.
  Hope you will recollect our first meeting in early 1976, over thirty years back. I was then the Member of Parliament for Killinochchi. Why we met is irrelevant here. But imagine what my feelings would be to see the people, with whom I lived for very many years, now living under the subjugation of the LTTE, deprived of almost all their rights and detained under compulsion for well over quarter of a century. You say that yo

 8. \\அதெப்படிங்கய்யா! உங்களுக்கு மட்டும் போராட்டத்திற்கு வர முடியலைனா ஒரு காரணம் சொல்வீங்க அதை மக்கள் ஏற்று கொள்ள வேண்டும், ஆனால் வேற யாராவது இதே போல காரணம் இருந்து வர முடியவில்லை என்றால் அவர்கள் தமிழின துரோகி\\

  உடன்படுகிறேன் கிரி

 9. //தமிழ் நாட்டு மக்களின் பணம் மட்டும் வேண்டும் தமிழ் மக்கள் வேண்டாமா! என்று மேடையில் வாய் கிழிய வசனம் மட்டும் பேச தெரிகிறது, ஆபாசமாக நக்கல் அடிக்க தெரிகிறது, இப்போது மற்றவர்கள் சத்யராஜிற்கு தமிழ் உணர்வு இல்லை, தமிழ் மக்களை மதிக்கவில்லை அதனால் தான் வரவில்லை என்று ஆளாளுக்கு அறிக்கை விட்டால் ஏற்று கொள்வாரா! //

  இராமேஸ்வரத்திற்குப் போகாத சத்தியராஜை ஏன் யாரும் திகட்டத் திகட்டதிட்ட வில்லை?

 10. vatha உங்களின் வருகைக்கு நன்றி

  =====================================================================

  //Bleachingpowder said…
  தமிழ்நாட்டோட மானம் கொஞ்ச நாளைக்கு முன்னால் மாநிலம் தாண்டி போன மாதிரி, இந்த முறை கடல் தாண்டியும் போயிருக்கும்.//

  உண்மை தான். அதனால என்ன! அது தான் 1 ம் தேதி நடிகர் சங்க போராட்டம் இருக்கிறதே, அதில் இன்னும் பல காமெடிகள் இருக்கு.

  //எச்சி கையால தமிழனுக்கு காக்க ஓட்டாத சத்தியராஜுக்கு புரட்சி தமிழன், புண்ணாக்கு தமிழன்னு ஒரு பட்டம் வேற…//

  :-))))))))))))))

 11. சத்தியராஜ் முதலில் வில்லன் வேடமிட்டார்…பிறகு கதாநாயகன் ஆனார்…

  ஆனால் இப்போது காமெடியன் ஆகிவிட்டார்.

  கொங்கு நாட்டு அவமானம் = சத்யராஜ்

 12. தன்னை பகுத்தறிவாளன் என்று கூறிக்கொள்பவனிடம் நியாய தர்மங்களை எதிர் நோக்க இயலாது. அவர்கள் கடைந்தெடுத்த சுயநலவாதிகள் .
  அதிலும் இந்த சட்டிய ராஜ் அவர்களில் இன்னும் கேவலமானவன் .!

 13. //மணிகண்டன் said…
  சத்யராஜ் மற்றவர்களை கேள்வி கேட்பது தான் உங்களது குறையா ?//

  கேள்வி கேட்பதில் குறை இல்லை, கேள்வி கேட்கும் முறையில் தான் குறை.

  //இல்லை, அவர் போராட்டத்தில் கலந்துகொள்ளாதது உங்களை எழுதத் தூண்டியதா ?//

  இல்லை, அதற்க்கு அவர் கூறிய காரணம்.

  //அவரும் வந்திருந்தால் இன்னும் சுவையாக இருந்து இருக்கும் என்று நினைக்கிறீர்களா ?//

  என் பதிவை படித்துமா இந்த கேள்வியை கேட்கிறீர்கள் !!!

  //என்னை கேட்டால் சற்று மிதவாத கருத்துக்களை அழகாக பேச தெரிந்த நடிகர்கள் யாரும் வராததே வருத்தம்.//

  மன்னிக்கவும் எனக்கு இந்த மித வாதம் போன்ற வார்த்தைகள் அவ்வளவாக பரிட்சியம் இல்லாதவை.

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி மணிகண்டன்

 14. கிரி, நானும் இதை பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன்.

  சத்யராஜ் புரட்ச்சிதமிழன், மறத்தமிழன் எனவே அவர் செய்வதில் எல்லாம் நாம் குற்றம் குறை காணக்கூடாது. ஆனால் மற்றவர்கள் தவறு செய்தால் பொங்கி எழுந்துடுவாங்கல்ல! இவருடைய சூழ்நிலையை மற்றவர்கள் புரிந்துக் கொண்டு அடக்கி வாசிக்க வேண்டும். ஆனால் இவர் மற்றவர்கள் சூழ்நிலையை புரிந்துக் கொள்ள மாட்டார்.

 15. //குப்பன்_யாஹூ said…
  Let us boycot satyaraj, sibi raj films, Thats the correct way of dealing this issue.//

  ஏங்க! குப்பன் என்னை கிண்டல் செய்கிறீர்களா! இல்லை உண்மையாகவே கேட்கிறீர்களா!! புரியவில்லை.

  ஏங்க! இவங்க படத்தை boycot வேற பண்ணனுமா! யாருங்க இவங்க படத்தை பார்க்கிறாங்க! யாருமே தன் படத்தை பார்க்கலைனு சிபிராஜ் கல்யாணம் செய்து செட்டில் ஆகிட்டாரு. சத்யராஜ், கொடுக்குற பணத்தை கொடுங்கன்னு சொல்லி படத்தில் நடித்துட்டு இருக்காரு. இதுல நாம வேற தனியா boycot பண்ணனுமா! boycot பண்ணுறதுன்னா திரை அரங்கு ஆப்பரேட்டர் தான் boycot பண்ணனும் :-))

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி குப்பன்

 16. சத்யராஜ் படத்தில் வரும் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது: என்னோட கேரச்டரையே புரிஞ்சிக்க மாட்டீங்கறீங்களே?

 17. கிரி, இதுக்கு பேர்தான் நெத்தியடி. அருமையான பதிவு.

  தமிழ் தமிழ்ன்னு கத்துற இந்த மிருகம், தன்னோட படத்துல நடிக்கிற ஹீரோயின் கண்டிப்பா தமிழ் பொண்ணாதான் இருக்கனும்முன்னு என் சொல்லக்கூடாது? அப்போ மட்டும், நக்மா, குஷ்பூ மற்றும் எந்த ஸ்டேட் என்றே தெரியாத கிராஸ் கேசுகள் கேக்குதா இவருக்கு? (அதுக்கு வேற காரணம் இருக்குதுங்கோ!!).

  உண்மையான தமிழன் இப்படி அடுத்தவங்களை குறை சொல்லமாட்டான். வந்தாரை மேடையில வெச்சு அவமானபடுத்தமட்டான். ஆனா இந்த தடவை இவன் வாலாட்டுனா….நாமே ஒட்ட நறுக்கணும்.

  – சுந்தர்
  onlyrajini.com

 18. Giri!

  I knew that he is is just another HYPOCRITE with a BIG FAT MOUTH!

  It took a while to unveil his mask!

  Now that it is REVEALED!

 19. கிரி.வணக்கம்.எப்படியிருக்கீங்க?நீங்க இன்னுமா சத்யராஜ துரத்திகிட்டு இருக்கீங்க:) சரி வந்ததுக்கு உருப்படியா ஏதாவது சொல்லிட்டுப் போகிறேன்.

  போகின்ற பதிவுகளுக்கெல்லாம் இந்த அனந்தசங்கரி ஒரு கடிதத்தை வெட்டி ஒட்டி அனுப்பிகிட்டு இருக்காரு.இவரும் இவர் போன்ற இலங்கை அரசு சார்ந்த அல்லது புலி எதிர்ப்பாளர்கள் ஜனநாயகம் சார்ந்த ஒரு உறுதியான அமைப்பை புலிகளுக்கு மாற்றாக வைத்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.ஆனால் புலி எதிர்ப்பே குறிக்கோளாக இவர்கள் பதிவுகளை சுற்றித் திரிவது ஈழத்து தமிழருக்கு நல்லதல்ல.

 20. கிரி வணக்கம்

  அசத்யராஜ் லாடம் விழாவில் சீமான் அமீர் ஆகியவர்களை எதிர்ப்பவர்களுக்கு லாடம் கட்ட வேண்டும் என்றார் .. இன்னிக்கு ஜெயலலிதா அவர்களை உள்ளே போடணும் என்று அறிக்கை விட்டு இருக்கிறார்…. அப்போ அவருக்கும் லாடம் கட்டனுமா? அத சத்யராஜிடம் கேட்க வேண்டும், என்ன மழுப்புராருன்னு பார்க்கணும்.

  ஈ ரா

  sorry if tamil fonts are not correct from here

 21. இந்த ஆளு பேசினதை படிச்சபோது என் மனசில தோணினதை நீங்க அப்படிய பதிவா போட்டுடீங்க.. ரொம்ப நன்றி கிரி அவர்களே…

 22. //அகில் said…
  Giri!
  I knew that he is is just another HYPOCRITE with a BIG FAT MOUTH! //

  விஷயம் உள்ளவர்கள் அதிகம் பேசமாட்டார்கள் 🙂

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி அகில்

  ======================================================================

  //கயல்விழி said…
  //அதெப்படிங்கய்யா! உங்களுக்கு மட்டும் போராட்டத்திற்கு வர முடியலைனா ஒரு காரணம் சொல்வீங்க அதை மக்கள் ஏற்று கொள்ள வேண்டும், ஆனால் வேற யாராவது இதே போல காரணம் இருந்து வர முடியவில்லை என்றால் அவர்கள் தமிழின துரோகி//

  Very good point!!//

  நன்றி கயல்விழி

 23. //ராஜ நடராஜன் said…
  கிரி.வணக்கம்.எப்படியிருக்கீங்க//

  ரொம்ப நல்லா இருக்கேன் ராஜ நடராஜன். நீங்க எப்படி இருக்கீங்க..ரொம்ப பிசி ஆகிட்டீங்க போல. பதிவு எதையுமே காணோமே. புது தளத்தில் மூழ்கி விட்டீர்களா!

  //இன்னுமா சத்யராஜ துரத்திகிட்டு இருக்கீங்க:) //

  அவர் இன்னமும் எங்களை துரத்திட்டு இருக்காரு, அவர் எங்களை விடும் வரை நாங்களும் அவரை விட மாட்டோம் 🙂 அவரை மட்டுமல்ல அவரை போன்றவர்களை

  //போகின்ற பதிவுகளுக்கெல்லாம் இந்த அனந்தசங்கரி ஒரு கடிதத்தை வெட்டி ஒட்டி அனுப்பிகிட்டு இருக்காரு.//

  எனக்கு இது பற்றிய விவரங்கள் அவ்வளவாக தெரியாது, அதனால் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை.

  உங்கள் வருகைக்கு நன்றி ராஜ நடராஜன் அப்பப்ப நேரம் கிடைக்கும் போது பதிவுடுங்க

 24. //pradeep said…
  dhool Tucker,fantastic Marvelous. Good one from you Giri sir. //

  நன்றி பிரதீப்

  //Actually if he had gone to Rameswaram he would have been in jail now//

  :-)))

  //I see you post lots of comments but your postings in your blog has come down.//

  உண்மை தான் பிரதீப்.என் பதிவுகளில் அதிகளவு கமெண்ட் இருக்கும், அதற்க்கு காரணம் நாகரீகமான முறையில் பதிலளிப்பது தான். கூடுமானவரை அனைவருக்கும் பதிலளிப்பேன்.

  //IS it because of time constraints.//

  அதெல்லாம் எதுவுமில்லை, முன்பு புதிதாக இருந்ததால் ஏகப்பட்ட பதிவுகள் எழுதினேன், கொஞ்சம் பதிவுலகில் பிரபலம் ஆனதும் முன்பு போல சுதந்திரமாக எழுத முடியவில்லை. தேவையில்லாத வாக்குவாதங்கள் பிரச்சனைகள் வருகிறது, மன அழுத்தம் ஏற்படுகிறது.

  எப்போதும் பதிவுகள் பற்றிய சிந்தனையே இருப்பதால் அதற்க்கு அடிமையாகி விட கூடாது என்று தான் பதிவெழுதுவதை குறைத்து கொண்டேன். தற்போது குறைந்த பதிவுடன் நிம்மதியாகவே உள்ளேன். விமர்சனங்களை ஏற்று கொள்ள பழகி விட்டேன். இப்படியே தொடரலாம் என்றுள்ளேன்.

  //keep it up boss.//

  உங்கள் அன்பிற்கும் முதல் வருகைக்கும் நன்றி பிரதீப்.

 25. நல்லதந்தி பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கே மீண்டும் பதிகிறேன்.

  வாயை தொறந்தா தமிழு தமிழு புலம்புற இவர் படத்துல ஜோடி சேரரது பெரும்பாலும் கேரளா, மும்பை பொண்ணுங்களுடன் தான். ஏண்டானு கேட்டா, நான் இயக்குனர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை ஒரு டயலாக். சரி நீ தான் ஒரு படத்தை(கருமத்தை) டைரக்ட் பண்ணுனீயே அதுல ஏண்டா ஒரு தமிழ் பொண்ணுக்கு வாய்ப்பு கொடுக்கலேனு கேட்டா மண்டைய சொறியராரு நம்ம புரட்சி தமிழன்.

  சரி போனது போச்சு, நீ தயாரிச்சு உன் பையன ஹீரோவா வச்சு ஒரு படம் எடுத்தில அதுலையாவது ஒரு தமிழ் பொண்னுக்கு வாய்ப்பு கொடுத்தியானா அதுவும் இல்லை. டெல்லியில் இருந்து நிலான்னு ஒரு குட்டிய உன் பையனுக்கு ஜோடியா போட்டாரு.

  அப்புறம் அப்பாவும் பையனும் நமிதா கூட போட்டி ஜோடியா நடிக்குறீங்க.

  இப்படி பிசியா இருக்குற உங்கள போய் ராமேஸ்வரத்திற்கு கூப்பிட்ட பாவம் நீங்க எப்படி போவிங்க.

  ஆனா ராமேஸ்வரத்திற்கு போனவங்க எல்லாம் மற கழண்டு மாதிரி ஆயுதம் எடுப்போம், கடலை தாண்டுவோம் உளரிட்டு வந்தாங்க. நீங்க போயிருந்தா என் பொண்டாட்டி கூட நான் படுத்தா உனக்கென்ன சிங்கள அரசாங்கத்தை வாங்கு வாங்குனு வாங்கியிருப்பீங்க. தமிழ்நாட்டோட மானம் கொஞ்ச நாளைக்கு முன்னால் மாநிலம் தாண்டி போன மாதிரி, இந்த முறை கடல் தாண்டியும் போயிருக்கும்.

  இப்பவும் ஒன்னும் கெட்டு போகல. நாளைக்கும் காலையில உங்க விட்டம்மா கோவிலுக்கும் போய் பூஜை, புனர்ச்காரம் எல்லாம் பண்ணிட்டு சூடா இட்லி, வடை, பொங்கல் எல்லாம் செஞ்சு தருவாங்க, ஒரு கட்டு கட்டிட்டு போயிருங்க. சாயாங்கலாம் ஆறு மணி வரைக்கும் தாங்கும்.

  எச்சி கையால தமிழனுக்கு காக்க ஓட்டாத சத்தியராஜுக்கு புரட்சி தமிழன், புண்ணாக்கு தமிழன்னு ஒரு பட்டம் வேற…

 26. சத்யராஜ் மற்றவர்களை கேள்வி கேட்பது தான் உங்களது குறையா ? இல்லை, அவர் போராட்டத்தில் கலந்துகொள்ளாதது உங்களை எழுதத் தூண்டியதா ? அவரும் வந்திருந்தால் இன்னும் சுவையாக இருந்து இருக்கும் என்று நினைக்கிறீர்களா ? என்னை கேட்டால் சற்று மிதவாத கருத்துக்களை அழகாக பேச தெரிந்த நடிகர்கள் யாரும் வராததே வருத்தம்.

 27. இந்த சத்யராஜ் முன்பு ஒருமுறை டிவி பேட்டியில் “எனக்கு யார் புரட்சி தமிழன் பேர் வச்சங்கேனாய் தெரியல, என்னோட மகனும் மகளும் இங்கிலீஷ் ஸ்கூலதான் படிக்கறங்கோ” சிரித்து கொண்டே சொன்னது இன்னும் கண்ணுல இருக்கு. ஹ்ம்ம் வெட்டி விளம்பர பிரியர் வேற என்னத்த சொல்றது, ஈழ தமிழர்களுக்காக இறைவனை வேண்டுவோம்

 28. dhool Tucker,fantastic Marvelous. Good one from you Giri sir. That sotha raj should hang himself.Actually if he had gone to Rameswaram he would have been in jail now. I see you post lots of comments but your postings in your blog has come down. IS it because of time constraints.
  keep it up boss.

 29. //அதெப்படிங்கய்யா! உங்களுக்கு மட்டும் போராட்டத்திற்கு வர முடியலைனா ஒரு காரணம் சொல்வீங்க அதை மக்கள் ஏற்று கொள்ள வேண்டும், ஆனால் வேற யாராவது இதே போல காரணம் இருந்து வர முடியவில்லை என்றால் அவர்கள் தமிழின துரோகி//

  Very good point!!

 30. //எச்சி கையால தமிழனுக்கு காக்க ஓட்டாத சத்தியராஜுக்கு புரட்சி தமிழன், புண்ணாக்கு தமிழன்னு ஒரு பட்டம் வேற…//

  இதுல பேரையும் பட்டத்தையும் மாத்தி மாத்திப் போட்டா தமிழ் திரையுலகில் அனைவருக்கும் பொருந்தும்.

 31. //இப்படி தமிழர்களுக்குள்ளே அடித்து கொண்டு அடுத்தவனை கிண்டல் செய்து கொண்டு நான் தான் உண்மையான தமிழன் நீ தான் உண்மையான தமிழன் என்று பேசி கொண்டு இருப்பதை நிறுத்தி விட்டு உண்மையான பிரச்சனை என்னவோ அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்காதவரை இவர்களால் பைசா பிரயோஜனமில்லை.//

  சரியாகச் சொன்னீர்கள். இவர்கள் பேசுவது யாவும் சுய விளம்பரத்துக்கு என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அல்ல நம் மக்கள்.

  //இனி வர போகிற நடிகர் சங்க போராட்டத்தில் இவர்கள் என்னென்ன காமெடி செய்ய போகிறார்களோ! அந்த தமிழ் கடவுள் முருகனுக்கே வெளிச்சம்.//

  :))!

  //தமிழ் தமிழ் னு சொல்கிறவர்கள் அனைவரும் உண்மை தமிழர்கள் இல்லை, எதுவும் கூறாமல் உண்மையான அன்பு கொண்டு ஈழ தமிழர்களுக்காக (என்றில்லை எந்த தமிழருக்கும்) மனதினுள் கண்ணீர் விடும் மக்களுக்கு தமிழ் உணர்வு இல்லை என்று அர்த்தம் இல்லை.//

  பாயிண்ட் பாயிண்ட்.

  //உண்மையான அன்போடு ஈழ தமிழர்கள் போராட்டத்தில் (நேரடியாகவும் மறைமுகமாகவும்) கலந்து கொண்டவர்களுக்கும் கலந்து கொள்ள போகிறவர்களுக்கும்,தார்மீக ஆதரவு அளித்தவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

  எதைப் பற்றி அலசினாலும் கடைசி பத்தியோ வரிகளோ அனைவரும் வழிமொழியும் வண்ணம் ‘நச்’ என முடிப்பது உங்கள் தனிச் சிறப்பு.

 32. //போராட்டத்தில் இவர்கள் ஈழ தமிழர்கள் படும் துயரத்தை பற்றி பேசியதை விட மற்றவர்களை பற்றி குறை கூறி பேசியதே அதிகம்.//

  நல்லாச் சொன்னீங்க‌!

  //புலி எதிர்ப்பே குறிக்கோளாக இவர்கள் பதிவுகளை சுற்றித் திரிவது ஈழத்து தமிழருக்கு நல்லதல்ல.//

  நல்லதோ, கெட்டதோ…. இந்தியாவும் உலக அண்ணனும் ஏன் இந்த பிரச்சினைய ஜவ்வு இழு இழுக்குறாங்க…. எதோ ஒன்னு, சீக்கிரமா முடிச்சு வைக்கலாம்.

 33. //Logan said…
  ஈழ தமிழர்களுக்காக இறைவனை வேண்டுவோம்//

  வழிமொழிகிறேன். என்னங்க லோகன் ரொம்ப நாளா ஆளையே காணோம்!!

  ===================================================================

  //பழமைபேசி said…
  //போராட்டத்தில் இவர்கள் ஈழ தமிழர்கள் படும் துயரத்தை பற்றி பேசியதை விட மற்றவர்களை பற்றி குறை கூறி பேசியதே அதிகம்.//

  நல்லாச் சொன்னீங்க‌!//

  நன்றி பழமை பேசி

  //நல்லதோ, கெட்டதோ…. இந்தியாவும் உலக அண்ணனும் ஏன் இந்த பிரச்சினைய ஜவ்வு இழு இழுக்குறாங்க…. எதோ ஒன்னு, சீக்கிரமா முடிச்சு வைக்கலாம்.//

  நல்ல முடிவே கிடைக்கும் என்று நம்புவோம்.

 34. //வடகரை வேலன் said…
  இதுல பேரையும் பட்டத்தையும் மாத்தி மாத்திப் போட்டா தமிழ் திரையுலகில் அனைவருக்கும் பொருந்தும்//

  :-)))))))

  வாங்க வேலன். எப்படி இருக்கீங்க? நீண்ட நாட்களுக்கு பிறகு என் பதிவிற்கு வந்து இருக்கீங்க..அப்பபோ வாங்க

 35. //ராமலக்ஷ்மி said…
  சரியாகச் சொன்னீர்கள். இவர்கள் பேசுவது யாவும் சுய விளம்பரத்துக்கு என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அல்ல நம் மக்கள்.//

  அனைத்து மக்களும் இவர்கள் பேசுவதை புரிந்து கொள்வார்களா என்பது சந்தேகமே! இந்த நிலை தொடர்ந்தால் நீங்கள் சொல்வது கண்டிப்பாக நடக்கும்.

  //எதைப் பற்றி அலசினாலும் கடைசி பத்தியோ வரிகளோ அனைவரும் வழிமொழியும் வண்ணம் ‘நச்’ என முடிப்பது உங்கள் தனிச் சிறப்பு.//

  நன்றி ராமலக்ஷ்மி. உங்களை போன்றவர்களின் தொடர்ச்சியான ஊக்குவிப்பே சிறப்பாக எழுத வைக்கிறது.

  உங்களின் தொடர் வருகைக்கும் உற்சாகப்படுத்தும் வார்த்தைகளுக்கும் நன்றி.

 36. நல்ல பதிவு கிரி…
  இந்த ஈனப்பிறவிக்கு எவ்வளவு திட்டினாலும் சொரணை கிடையாது. காரணம்… அவன் மகா ‘நடிகனாச்சே’!
  பார்த்துக் கொண்டே இருங்கள்… இவன் வந்து நம்ம தலைவர் காலில் விழத்தான் போகிறான்!

 37. நான் உடைச்சால் பொன்குடம்
  அடுத்தவன் உடைச்சால் மண்குடம்.

  (பொன்னைத் திருப்பி உருக்கிக் குடமாக்கிடுவென்லெ!)

 38. கிரி, ஒன்னு சொல்ல மறந்துட்டேன்…. உங்களுக்கு இனி உடுமலை அனுசம் திரயரங்கத்துல இடம் கெடையாது போங்க…. இனியென்ன செய்வீங்க? இனியென்ன செய்வீங்க??

  ஏன்னா, அது அவரோட மாமனாரோடது…. ஹி! ஹி!!

 39. //Vaanathin Keezhe… said…
  நல்ல பதிவு கிரி…//

  நன்றி வினோ. தரம் என்பது, பேசும் பேச்சில் மட்டுமல்ல தாங்கள் நடந்து கொள்ளும் முறையிலும் இருக்கிறது என்பதை இவரை போன்றவர்கள் எப்போதோ உணர்வார்களோ தெரியவில்லை!

  =====================================================================

  //Kuyavan said…
  GOOD. KEEP WRITING. I REALLY FED UP WITH FAKES…//

  நீங்கள் மட்டுமல்ல பலருக்கும் இதே நிலை தான் என்பது என் கருத்து. உங்கள் முதல் வருகைக்கு நன்றி குயவன்.

  =====================================================================

  //புதுகை.அப்துல்லா said…
  varikku vari udan padukiren//

  நன்றி அப்துல்லா

 40. //துளசி கோபால் said…
  நான் உடைச்சால் பொன்குடம்
  அடுத்தவன் உடைச்சால் மண்குடம்.
  (பொன்னைத் திருப்பி உருக்கிக் குடமாக்கிடுவென்லெ!)//

  நல்லா சொன்னீங்க மேடம் 🙂 மொத்த பதிவையும் சுருக்கமா சொல்லிட்டீங்க

  ====================================================================

  //பழமைபேசி said…
  கிரி, ஒன்னு சொல்ல மறந்துட்டேன்…. உங்களுக்கு இனி உடுமலை அனுசம் திரயரங்கத்துல இடம் கெடையாது போங்க…. இனியென்ன செய்வீங்க? இனியென்ன செய்வீங்க??
  ஏன்னா, அது அவரோட மாமனாரோடது…. ஹி! ஹி!!//

  :-)))))))))))))

  அவர் மாமனார், மருமகன் படத்தை நம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி இந்த திரை அரங்கத்தை வாங்கி இருப்பாரோ..:-)))

  நான் என்னோட 7 வது மற்றும் 8 வது உடுமலை கரட்டு மடத்தில் தான் படித்தேன்..

 41. //paarvai said…
  உங்க பதிவுகள் அனைத்தும் அருமை.மிகவும் நாகரீகமாக உங்கள் கருத்துக்களை சொல்கிறீர்கள்//

  மிக்க நன்றி பார்வை.

  விவாதம் என்பது நாகரீகமாக இருந்தால் மட்டுமே அதை பற்றி விவாதிப்பது ஆரோகியமானதாக இருக்கும். நமக்கு மற்றவர்கள் கருத்து பிடிக்கவில்லை என்றாலும் அதை சரியான முறையில் தெரிவிப்பதே முறை. எனக்கு ஒருசிலரை பிடிக்கவில்லை என்றாலும் கண்மூடித்தனமாக எதிர்க்க மாட்டேன்.

  //நான் பதிவுலகிற்கு புதியவன்.//

  வாருங்கள் நல்ல பதிவுகளை கொடுங்கள். ஹிட்டிற்க்காகவும், பரபரப்பிற்காகவும் தரமில்லாத பதிவுகளை கொடுத்து விடாதீர்கள் என்பது என் வேண்டுகோள்.

  //உங்கள் ப்ளாக்கில் உள்ளவற்றை படிக்கவே எத்தனை நாள் ஆகுமோ//

  என்னுடைய பதிவுகளை விட பல நல்ல பதிவுகள் நிறைய பதிவர்கள் எழுதுகிறார்கள், அவர்களுடைய பதிவுகளையும் படித்து உங்கள் எழுத்து திறமையை வளர்த்து கொள்ளுங்கள்.

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி பார்வை.

 42. உங்க பதிவுகள் அனைத்தும் அருமை. மிகவும் நாகரீகமாக உங்கள் கருத்துக்களை சொல்கிறீர்கள். நான் பதிவுலகிற்கு புதியவன். உங்கள் ப்ளாக்கில் உள்ளவற்றை படிக்கவே எத்தனை நாள் ஆகுமோ….நன்றி.

 43. Nobody knows what is going on in srilanga.what information the outside world gets are only corrupted biassed report of Medias and srilankan government. There is no cordination between the tamils living in srilanka.on any matter.tamilians are divided by religion,caste,and the group affiliated by them. In india also the situation is the same. All the political parties here will take this issue to divert the peoples attention to rouse the emotion of the people for their selfisg gains.They will take the tamil issue whenver it is needed.unless untill all the tamils in srilanga burry their differences and united to fight for their rights they cannot achieve anything and any help from outside will be useful to them.

 44. //தமிழ்நெஞ்சம் said…
  Hi. Giri,
  I like your Blog Template..Superb.//

  நன்றி தமிழ் நெஞ்சம்

  ==========================================================================

  //Sakthi said…
  “புரட்சி தமிழன் புரட்சி தமிழன் அப்படிங்கறாரே, அப்படி என்னத்த புரட்சி பண்ணினாரோ”…(இதை “அவன் வித்துவான் வித்துவான்கரானே அப்படி என்னைத்தை வித்தானோ”-னு நம்ம கோவை சரளா அக்கா சொல்லற மாதிரி படிக்கோணும்…) :-)//

  :-)))))))))))

  எனக்கும் புரியல! யாராவது சொல்லுங்கய்யான்னாலும், சரியான பதில் தர மாட்டேங்குறாங்க 🙂

 45. “புரட்சி தமிழன் புரட்சி தமிழன் அப்படிங்கறாரே, அப்படி என்னத்த புரட்சி பண்ணினாரோ”…(இதை “அவன் வித்துவான் வித்துவான்கரானே அப்படி என்னைத்தை வித்தானோ”-னு நம்ம கோவை சரளா அக்கா சொல்லற மாதிரி படிக்கோணும்…) 🙂

 46. அருமையான பதிப்பு கிரி!! புரட்சி தமிழன் அவரால் புரட்சியை வீட்டிலேயே செய்ய முடியவில்லை. ‘பெண் வீட்டின் வேண்டுகோளுக்கு இணங்க (!)’ சிபி-க்கு ஆத்திக முறைப்படி திருமணமாம். ஆனால் நம் தலைவர் மட்டும் பாபாஜியை கும்பிடகூடாதாம். என்னங்கடா உங்க நியாயம்? நாளைக்கு நடிகர் சங்கம் நடத்துற போராட்டத்துல இன்னும் எதாவது லூசு தனமா பேசுவாரு!

 47. //Bhuvan said…
  அருமையான பதிப்பு கிரி//

  நன்றி புவன்

  //நாளைக்கு நடிகர் சங்கம் நடத்துற போராட்டத்துல இன்னும் எதாவது லூசு தனமா பேசுவாரு!//

  இதனால தான் யாரும் வாயை திறக்க கூடாதுன்னு கண்டிப்பா கூறி இருக்காங்க..அதையும் மீறி புரட்சி தமிழன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவாருன்னு நினைக்கிறேன். ஏன்னா! நடிகர்கள்ல இவர் ஒருத்தர் தானே உண்மை தமிழன் 😉

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி புவன்.

 48. //harijana said…
  Netru oru news parthean “Kalaingar avarhal vendokol kurippaha sathyarajai pesvidatheerhal endru”//

  ஆமாம் நானும் படித்தேன்.

  //Nattil evvalavu nalla peyar eduthirukkirar.//

  🙂

  //Eppadi ravadi thanama pesavillai yendral ivereallam irukkum idam theriyathu //

  இப்படி பேசுவதாலும் இருக்கும் இடம் தெரியாமல் போக போகிறார்.

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி harijana

 49. Giri,
  PAVAM SATHYARAJ

  Netru oru news parthean “Kalaingar avarhal vendokol kurippaha sathyarajai pesvidatheerhal endru”

  Nattil evvalavu nalla peyar eduthirukkirar.

  Eppadi ravadi thanama pesavillai yendral ivereallam irukkum idam theriyathu Pavam thannudiya Iruppai therivikka sila nerangalil naihal kurraikkathan seiyum.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here