SAW 3D | ரணகளமான ஹாரர்

31
SAW 3D

ஹாரர் படங்களில் பலரை கதிகலங்க வைத்தது “SAW” படம் தான். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் முதல் பாகம் பார்த்தேன். புரியவில்லை என்றாலும் பிடித்து இருந்தது. தற்போது 7 வது பாகம் saw 3d வரப்போகிறது. Image Credit

SAW கதை

பாதிக்கப்பட்ட ஒருவன், சம்பந்தப்பட்டவர்களைக் கொடூரமான முறையில் தண்டனை கொடுத்துக் கொல்வதே கதை. இதுவரை 6 பாகம் வெளிவந்துள்ளது.

தற்போது இந்தப்படத்தின் 7 ம் பாகம் 3 D யில் வரப்போகிறது.

முதல் பாகம் யாரும் எதிர்பாராத வண்ணம் மாபெரும் வெற்றி பெற்று பெரும் வசூல் சாதனை செய்தது.

தயாரிப்பாளரும், பல ஹாரர் படங்களைத் தயாரித்தவர்களுமான Lion Gates நிறுவனத்தினர் மேலும் பல பாகங்களைத் தயாரித்து வெளியிட்டனர்.

இதில் ஒரு சில பெரும் வெற்றியும், ஒரு சில அவ்வளவாக ரசிகர்களைக் கவராமலும் போனது. இருப்பினும் இதற்குப் பெரும் ரசிகர் கூட்டம் என்னைப்போல உண்டு 🙂 .

பாகத்தை நீடிக்க வேண்டும் என்று எப்படியோ சொதப்பி கதையே புரிந்துகொள்ள முடியாத படி செய்து விட்டார்கள்.

இருந்தாலும் இதில் வரும் தண்டனைகள் மிகத்திறமையாக வடிவமைக்கப்பட்டு இருப்பதால், அதைப் பார்க்கவே பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அனைத்து பாகங்களையும் பார்த்து விட்டேன்.

முதல் பாகம் தவிர (அதுவே அரைகுறை தான்) மற்ற எந்தப் பாகங்களும் புரியவில்லை இருந்தாலும், இன்னும் அடுத்த பாகத்தை ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

Saw என்றால் பார்த்தது என்று அர்த்தம் இருப்பது போல, அறுப்பது என்ற அர்த்தமும் உண்டு என்பதை அறிவீர்கள் தானே!

படத்தின் பெயர்க்காரணம் புரிந்ததா! 🙂 .

I want to play a game

கொடுக்கப்படும் தொழில்நுட்பமான தண்டனைகளை இளகிய மனம் படைத்தவர்கள் பார்க்க முடியாது. படு பயங்கரமாக இருக்கும்.

இதைப்போலத் தண்டனைகளை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்று வியப்பாக உள்ளது.

இதில் Jigsaw என்பவர் தான் தண்டனை கொடுப்பவராக வருவார்.

மாட்டியவருக்கு தப்பிக்கவே முடியாதபடி வாய்ப்பு! கொடுப்பார்.

அந்த வாய்ப்பை ஒரு நிமிடத்திற்குள் பயன்படுத்தி விட்டால் தப்பித்துக்கொள்ளலாம் ஆனால், கனவிலும் தப்பிக்க முடியாதபடி நெருக்கடி இருக்கும்.

யார் மாட்டி இருக்கிறாரோ அவர் முன்னால் தொலைக்காட்சியில் முகமூடி அணிந்து தோன்றி Hello <Name> I want to play a game என்று கூறி,

என்ன தண்டனை? அதில் இருந்து நீ எப்படி தப்பிக்கலாம்! இல்லை என்றால் என்ன ஆகும்! என்று விளக்கி விட்டு Make your choice என்று கூறி விட்டு மறைந்து விடுவார்.

இவர் கூறும் I want to play a game மற்றும் Make your choice வசனங்கள் மிகப் பிரபலம்.

எடுத்துக்காட்டு

ஒரு பெண்ணுக்கு இரும்புக் கொக்கிகளால் ஆன உடை அணிவிக்கப்பட்டு இருக்கும் அதைத் திறப்பதற்கான சாவி ஒரு அமில பாட்டிலில் இருக்கும்.

ஒரு நிமிட அவகாசம் தான் அதற்குள் அமிலத்தில் கையைவிட்டு சாவியை எடுத்துத் திறக்க வேண்டும் இல்லை என்றால் உடல் பிய்த்தெரியப்படும்.

அமிலத்தில் கையை விட்டாலே கை காலி, இதில் உள்ளே உள்ள சாவியை எடுத்துத் திறக்க வேண்டும்.

முதல் கொஞ்ச வினாடிகள் பயந்து யோசித்து பின் வேறு வழி இல்லாமல் சாவியை எடுத்துத் திறப்பதற்குள் நேரம் ஒரு நிமிடத்தைக் கடந்து விடும்.

அந்தப்பெண்ணின் உடலும் பிய்த்தெரியப்படும்.

இதில் இரண்டு விஷயம் ஒன்று, அந்த நபர் தப்பிக்க வாய்ப்பே இல்லாமல் இருக்கும். இருந்தாலும் முயற்சி செய்கிறேன் என்று ஒருமுறை தண்டனை அனுபவிப்பார்.

இரண்டாவது, ஒரு நிமிடம் முடிந்த பிறகு அந்த இயந்திரம் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும்.

ஒரே நபர் அவர் கையால் ஒருமுறை, இயந்திரம் மூலம் ஒருமுறை என்று இருமுறை தண்டனை அனுபவிப்பார்.

எப்படி இவ்வளவு தொழில்நுட்பமாக யோசிக்கிறார்கள் என்று வியப்பாக இருக்கும்.

இன்னும் சில தண்டனைகள் கற்பனையில் கூட நினைத்து இருக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

இத்தண்டனை கொடுக்கும் Jigsaw என்பவருக்குப் பெரிய ரசிகப் பட்டாளமே உள்ளது.

சைக்கோ

ஹாரர் படம் என்றாலே அதைப் பிடிக்காதவர்களின் கருத்து, படம் எடுப்பவர் மற்றும் அதைப் பார்ப்பவர்கள் ஒரு சைக்கோ என்பதாகும்.

இப்படம் எடுத்த இயக்குனரும் இக்குற்றச்சாட்டில் இருந்து தப்பவில்லை. இந்தப்படத்தின் அனைத்து பாகங்களையும் இயக்கியது ஒரே இயக்குநர் அல்ல.

பொதுவாக ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

ஹாரர் படங்கள் அதிகமாகத் தயாரிக்கப்படும் இடம் “ஹாலிவுட்” என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஜப்பானில் தான் அதிகளவில் ஹாரர் படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஜப்பானில் ஹாரர் படங்களுக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

வடிவேல் சொல்லுவாரே “இது ரத்த பூமி” என்று அது மாதிரி அவர்கள் படம் எல்லாம் ஒரே ரத்த மயமாக இருக்கும். கொரியன் ஹாரர் படங்களும் மிரட்டலாக இருக்கும்.

Hostel

முதன் முதலில் பார்த்துப் பயந்த படம் என்றால் இயக்குனர் Eli Roth இயக்கிய “ஹாஸ்டல்” படமாகும் (அதற்கு முன் சிறு வயதில் மோகன் நடித்த “உருவம்” படம்).

Saw படத்துக்குக்கூட அதிகம் பயப்படவில்லை ஆனால், ஹாஸ்டல் படு பயங்கரமான ஹாரர் படம் என்னைப் பொறுத்தவரை.

Hostel | குலை நடுங்க வைக்கும் மரண பயம்

Saw 3D படம் 7 ம் பாகம் வெளியீடு

சும்மா பயமுறுத்தி இவர்களுக்குப் போர் அடித்து விட்டதோ என்னவோ! இந்த முறை ரணகளப்படுத்த Saw 3D யில் கொடுக்க முடிவு செய்து விட்டார்கள்.

சும்மா பார்த்தாலே பீதி கிளப்பும் இதில் Saw 3D யில் பார்த்தால்… அடி! தூள்.

இந்தப்படம் தான் SAW சீரிஸ் ன் கடைசிப் படம் என்று கூறப்படுகிறது 🙁  .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

31 COMMENTS

 1. நண்பரே முதல் பாகத்தை சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன். பிறகு வரிசையாக ஆறு பாகமும். படம் வெளியாகி விட்டது என்றவுடன், டிவிடிக்காக கடை கடையாக அலைவேன் (நம்மூரில்தான் இந்த படம் வெளியிடுவதே இல்லையே?) படத்தின் மொத்த முடிச்சும் கிளைமாசில் வந்து அவிழும். அதிலும் படம் பார்க்கும்போது வசனங்கள் ஒரு அர்த்தத்தில் வரும். அதே வசனம் கிளைமாக்சில் வேறு அர்த்தம் தரும் என்று புரியும். பார்க்க பிரமிப்பாக இருந்தது. ஏழாம் பாகம் பார்க்க ஆவலாக உள்ளேன். டிரைலரை பார்த்தே மிரண்டு விட்டேன்.

 2. படிக்கும் போதே ரணகளமா இருக்கு..1 இன்னும் படத்துல பார்த்தா சொல்லவா வேனும் ஆவலுடன் காத்திருக்கிறேன் கிரி சார். தழிழ் டப்பிங்ல வருமல்லவா..!!!!????

 3. “ஹாரர் படம்” எனக்கு பிடிக்கும் பல பார்த்து இருக்கிறேன் இங்குள்ளவை இனிதான் பார்க்க வேண்டும்.

  அதே போல இதை எல்லாம் வைத்து நக்கல் பண்ணும் “ஸ்கேரி மூவியும்” எனக்கு மிக பிடிக்கும் எல்லா நான்கு பகுதியும் பார்த்துவிட்டேன், ஐந்தாவது பகுதியை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

  உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி இருக்கிறேன் :-).

  பகிர்வுக்கு நன்றி!.

 4. //அதில் த்ரில்லர், ஹாரர் மற்றும் வன்முறைப் படங்கள் அதிகம் பிடிக்கும்.//
  நானுந்தான்…:))

  என்னிடம் நிறைய கானிபல் மூவிஸ் கலெகஷன் இருக்கிறது. அதில் வரும் நேச்சுரலான கசாப்பு கடை எஃபக்டுக்காக பார்ப்பேன்.
  hostel,wrong turn(1& 2) texas chainsaw masarre, paranormal activity,hills have eyes போன்றவை என்னை மிகவும் பயப்பட வைத்த ஹாரர் படங்கள்…

 5. SAW முதல் இரண்டு பாகம் மட்டும் பார்த்தேன்…முழு பாகங்களும் பார்க்க நினைக்கும் படங்களில இதுவும் ஒன்று…

  எனக்கும் கதை சுத்தமாக புரியல. ஹாலிவுட் பாலாவின் பதிவை படித்துதான் கதையை புரிந்துக்கொண்டேன்…
  நமக்கு கதையா முக்கியம்… ரத்தமும், சதையும்தான் முக்கியம்::)))

 6. “”ஒரே நபர் அவர் கையால் ஒருமுறை, இயந்திரம் மூலம் ஒருமுறை என்று இருமுறை தண்டனை அனுபவிப்பார்”””

  ஐயோ எனக்கு பயமா இருக்கு, வீட்ல இருக்குற பெரியவுங்கலதான் இந்த படத்துக்கு போக சொல்லணும்… 🙂

  இப்படி கொடுமை பண்ற படத்த பார்த்துட்டு எப்புடி ராசா நிம்மதியா உங்களால தூங்க முடியுது..??? 🙂 நான் கொஞ்சம் பயங்கரமான படம் பார்த்தாலே இரவு உறங்கும்போது பேய் வந்து என்னைய அமுக்குற போல இருக்கு…. அமுக்கும்போது கத்த கூட முடியல…. .

  இத படிச்சிட்டு சரியாய் பின்னூட்டம் போடலேன்னா இந்த படத்தில் வர்றது போல என்னோட மொநிடோர் முன்னாடி கிரி திடிர்னு வந்து ஒரு நிமிடம் தண்டனை கொடுதுருவாரோனு நெனச்சி பயமா இருக்குந்கோ … இப்போ நான் அப்பீட்டு……

 7. சிறப்பான விமர்சனம் நண்பரே..

  இப்படத்தின் அனைத்து பாகங்களையும் பார்த்திருக்கேன்.. உங்கள் விமர்சனம் அடுத்த பாகத்தைப் பார்க்க வெகுவான ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது..

  நன்றி..

 8. @பாலா எனக்கு எல்லா பாகமும் குழம்பி விட்டது 🙂 இன்னொரு முறை பார்க்க வேண்டும்.

  @பிரவின் தமிழ் ல இதை டப் பண்ணமாட்டாங்க என்று நினைக்கிறேன்.. செய்தால் யாரும் நம்ம ஊர்ல பார்க்க மாட்டாங்க.. இதைப்போல படங்கள் மேலை நாடுகளில் தான் அதிகம் விரும்பி பார்ப்பார்கள். நம்ம ஊரில் இவற்றிக்கு வரவேற்ப்பு குறைவு தான்.

  @சிங்கக்குட்டி “ஸ்கேரி” மூவி செம காமெடி! 🙂 அது ரணகளமா இருந்தா இது ரகளையா இருக்கும் 🙂

  @ராஜ் டேய்! யாரு அங்கே! தூக்குங்கடா ராஜ் ஐ “SAW” படத்துக்கு! 😀 மவனே! ராஜ் கதறுனாலும் படத்தை பார்க்காம விடக்கூடாது ஹி ஹி

  @நாஞ்சில்பிரதாப் தலைவரே! பின்னிட்டீங்க! கனிபால் படம் எல்லாம் வைத்து இருக்கீங்களா! சூப்பர் போங்க! நானும் ஒரு HDD முழுவதும் ஹாரர் த்ரில்லர் படமா வைத்து இருக்கேன். என்னோட நண்பர் படம் காபி செய்யுறேன் என்று வாங்கி வெலவெலத்து போயிட்டாரு.. ஐயோ! கிரி ஆளை விடுங்க.. ஒரே ரத்த மயமா இருக்கு! தூங்கும் போது பயங்கரமான கனவெல்லாம் வருதுன்னு கூறி ஒரே காமெடி! 🙂

  நீங்க சொன்ன அனைத்து படங்களும் பார்த்து விட்டேன்..Hills have eyes கூட ரொம்ப நல்லா இருக்கும். ஏகப்பட்ட லிஸ்ட் எங்கிட்ட இருக்கு.

  ஹாலிவுட் பாலா விமர்சனம் படித்தும் எனக்கு saw கதை புரியல.. அவர் கிட்டேயும் சொல்லிட்டேன். அவர் பிளாக் வேற டெலிட் பண்ணிட்டாரு..இல்லேன்னா அந்த லிங்க் கொடுத்து இருப்பேன்.

  @ராஜகோபால் ஹாஸ்டல் ஒரு கலக்கல் படம் என்னோட பார்வையில்.

  @RK ஹாஸ்டல் படம் பார்த்து மட்டும் ஒரு நாள் தூங்க பயப்பட்டேன்..அதன் பிறகு அனுபவம் ஆகி விட்டது. ஹாஸ்டல் படமே பார்த்தாச்சு இனி சிங்கம்டா என்று நானே முடிவு செய்து கொண்டேன் 🙂

  சரி உங்களை அமுக்கியது பெண் பேய் தானே! ஹா ஹா ஹா உண்மைய சொல்லுங்க 😀

  @அப்துல்காதர் நானும் தாறுமாறா! காத்து இருக்கிறேன் 🙂

  @எஸ்.கே நன்றி 🙂

 9. எனக்கு இந்தமாதிரி படமெல்லாம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கல :((

 10. தன் காலையே உடைத்து கொள்ளும் காட்ச்சியைத்தான் முதன் முதலில் பார்த்தேன்

  6பகுதிகளையும் வைத்துள்ளேன் – இன்னும் முழுதுமா பார்க்கலை

 11. ஆஹா ஆஹா …,இந்த saw பட ரசிகரா நீங்க …,தல same blood இங்கயும் …,இந்த படத்த ஒரு நாள் சாயங்காலம் இந்த படத்தை பார்த்துட்டு இருந்தேன் …,எங்க பக்கத்துக்கு வீட்டு FIGURE வந்து கால் மணி நேரம் பாத்துட்டு ஓடி போய்டுச்சு ; ) ஆனா நான் FULL படத்தையும் பார்த்தேன் ( நைட் பாத்ரூம் போக பயமா இருந்துச்சு அவ்ளோ தான் )…ரணகளம் படம் …,ஆமா அந்த கன்னிபால் லிஸ்ட் ஒன்னு எடுத்து விடுங்களேன் …,

 12. கிரி, சா படத்தின் அடிநாதம் என்னன்னா , எந்த தப்பும் பண்ணாத ஒரு மனிதன் கொடுமையான ஒரு நோய்க்கு அடிமையாகி சாவை எதிர்பர்துகொண்டு இருப்பான். ஆனா சில பேர் எல்லாம் நன்றாக இருந்தும் தவறாக நடந்து கொள்வார்கள். அந்த மாதிரி ஆட்களை கடத்தி, உயிரோட இருக்கனம்னா எதையாவது ஒன்ன அவர் இழக்கணும்கறதுதான் கேம்.

  நானும் இந்த மாதிரி படங்களை விரும்பி பார்பேன். 🙂

 13. கிரி,
  பதிவு நல்லா இருக்கு… saw பாத்துடுவோம் …

  அப்புறம் ஞானி அவர பத்தி கொஞ்சும் ஒரு போடு போடுங்க .. ரொம்ப பன்னுறாரே

 14. @அருண்
  //////அப்புறம் ஞானி அவர பத்தி கொஞ்சும் ஒரு போடு போடுங்க .. ரொம்ப பன்னுறாரே ///

  அருண் வெயிட் பண்ணுங்க …,யாரவது பதிவு போடறாங்களா பாப்போம் …,அங்க இருக்குது கச்சேரி …,உங்களுக்கு லிங்க் தரேன் ..,அது வரை வெயிட் ப்ளீஸ் ..,

 15. @ஜீவதர்ஷன் என்ன பெரிய வாய்ப்பு.. நாமலே உருவாக்கிக்க வேண்டியது தான் 🙂

  @ஜமால் கண்டிப்பாக பாருங்க.. செமையா இருக்கும்.

  @சங்கர் ஹா ஹா ஹா அது கன்னிபால் இல்லைங்க கனிபால் …நீங்க விவகாரமான லிஸ்ட் கேட்பீங்க போல இருக்கு 😀 சரி கனிபால் ” Cannibal Holocaust ” படம் பாருங்க.. ஆனால் ரொம்ப கொடுமையா இருக்கும்.

  @பாலாஜி உங்க விளக்கத்திற்கு நன்றி 🙂

  @இளவரசன் நன்றி

 16. கிரி,
  அந்த லிங்க் எல்லாம் பாத்துட்டேன் ஆனா உங்க ஸ்டைல் ல ஒரு பஞ்ச் வேனும்ம்ம் கிரி முடிஞ்ச பண்ணுங்க தேங்க்ஸ்

 17. “”””சரி உங்களை அமுக்கியது பெண் பேய் தானே! ஹா ஹா ஹா உண்மைய சொல்லுங்க”””””””

  ஐயோ ஏனுங்க இப்புடி???? பேயின்னாலே பயம் இதுல, ஆனா பெண்ணான்னு வேறைய???? உங்க குறும்புக்கு அளவே இல்லாம போச்சி… 🙂

  “கன்னிபால் ” விவகாரமான லிஸ்ட் கேட்பீங்க போல இருக் ஹா ஹா ஹா …. எழுத்து பிழையா இருக்க போது தலைவா…

  கடைசியா உங்க பதிவ எல்லாம் பார்த்து நானும் “”The Tortured.2010″” டவுன்லோட் பண்ணிட்டேன்…. இந்த படத்த பார்த்து எனக்கு எதாவது ஒன்னு ஆச்சின்னா அதுக்கு நீங்கதான் காரணம்னு எழுதி வச்சிட்டு படம் பார்க்க போறேன்….. 🙂 🙂

  தான் பெற்ற இன்பம் பெருக இவ்வய்யகம்…. (sorry 4 the spelling mistakes)

 18. அட நீங்களும் SAW ரசிகரா? But இம்மேடியாட்டா ஹாலிவுட்ல பட்டய கேளபிட்டு இருக்குற படம் Paranormal Activity 2 (3D ). நான் இன்னும் பாக்கலை. முடிஞ்சா அதுக்கு ஒரு review எழுதுங்க கிரி.

 19. @அருண் (வால்பையன்) இப்படி பச்ச மண்ணா இருக்கீங்களே! 😉 சரி நீங்க ஒரு வாட்டி ஒரு படத்தை பற்றி கேட்டீங்களே! நான் கூட அன்று மறந்து விட்டேன்.. அந்த படம் பேரு “Are you scared”

  @அருண் ஞானி எல்லாம் பழைய மேட்டர் ஆகிடுச்சு! எனக்கு நேரமுமில்ல.. அடுத்த வாரம் ஒரு ரஜினி இடுகை போடுவேன் 🙂

  @லோகநாதன் கண்டிப்பா பாருங்க

  @RK அது எழுத்து பிழை என்று தெரியும்.. சும்மா லுலுலாயிக்கு 😉 அப்புறம் படம் பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க உங்க “அனுபவத்தை” 🙂

  @தினேஷ் அந்தப்படம் சிங்கப்பூர் ல இன்னும் வரலைன்னு நினைக்கிறேன். இந்த வாரம் saw வந்தால் அதற்க்குப்போகப்போகிறேன்.

 20. ஹாய்.. தேங்க்ஸ் 4 பகிர்வுக்கு. அனைத்து பாகங்களையும் டொராண்டு வழியாகவே இறக்கி பார்த்து விட்டேன். நீங்கள் சொல்வது போல கதை சற்று புரியாமல் இருப்பினும் கொடூர தண்டனைகளை பார்ப்பதற்கே திரும்ப திரும்ப பார்த்திருக்கிறேன். நான் மென்மையானவன் தான். ஆனால் இம்மாதிரி படங்களை பார்ப்பது பிடித்துள்ளது.

  நானும் சில படங்களை ஹாரர் பிரியம் ஏற்பட்டு சேகரித்து வருகிறேன். கீழே காணவும்.
  wrong turn 3 parts, dawn of the dead, one missed call, 88 minutes, 28 days / month later, 30 days of night, dairy of the dead, dead girl, the ruins, the descent, the eye,
  quarantine, Dark floors, amitywille, bloody valentine, from hell, graveyard,
  rise of the dead, the grudge, the hills have eyes, The breed, black water,
  captivity, condemned, eden lake, grind house, hannibal raising, last house on the left, mid night meat train, mirrors, the contract, wolf greek, holloween zombie

  உங்கள் கமெண்டுகளை படித்த பிறகு அதில் ஹாஸ்டல் பற்றி தெரிந்து கொண்டேன். அதை இதோ இப்பவே டவுன்லோட் செய்ய ஆரம்பித்துவிட்டேன். இது போன்ற மேலும் பல வினோத படங்களின் பெயர்களை tamilnenjam@gmail.com க்கு மின்னஞ்சல் செய்யும்படி கேட்கிறேன்.

  நன்றி

  TS

 21. ஹாய் கிரி,

  நான் இதுவரை இந்த சா படத்தை பார்த்ததில்லை (என்னிடம் உள்ள chinese dvd யில் உள்ளது இன்று பொய் பார்க்க போகிறேன்.. let me see how good the movie is.. for your info I don’t see horror films at all.. naan paartha horror padam Mummy (சிரிக்காதீங்க)

 22. கிரி….

  என்னிடம் அனைத்து பாகங்களும் உள்ளது…. பார்த்திருக்கிறேன்….

  சில சமயம் திகிலூட்டும்….சில சமயம் குமட்டும்….

 23. @டெக் ஷங்கர் கோதாவுல இறங்கிட்டீங்களா! 😉 ரைட்டு

  நான் உங்களுக்கு இந்தப்படங்களை மின்னஞ்சல் செய்கிறேன்.

  @அருண் 🙂

  @காமேஷ் ஹி ஹி ஹி நீங்க ஒரே தமாசு தான் போங்க! 😀 விட்டா நான் பார்த்த கடைசி ஹாரர் படம் சுறா ன்னு சொல்வீங்க போல இருக்கு! உங்களுக்கு ஹாஸ்டல் படம் DVD பார்சல் அனுப்பினா தான் சரிப்பட்டு வருவீங்க போல! 😉

  @கோபி மற்ற ஹாரர் படங்களையும் பார்த்து “இன்புற” வேண்டுகிறேன். ஞாம் பெற்ற இன்பம்! பெருக வையகம் 🙂

 24. ஹாய் tech சங்கர் மச்சான்

  என்னக்கு கழு மரம் , தலை வெட்டி மரண தண்டனை போன்ற காக்சிகள் புடிக்கும். அதுவும் அந்த கால நாகரீகம் அற்ற மனிதர்கள் ஒன்னு கூடி சுத்தி நின்னுகிட்டு குற்றவாளியை கொண்டு வந்து நல்லா கழு மரத்த prepare செய்யும் போதும் வீரர்கள் அவர்களுக்குள் பேசி சிரித்து கொண்டு வக்கனையா கூடி, வாகா ஒக்காந்து கிட்டு அசிங்கமா கும்மாளம் போடுவது நல்லா இருக்கும். மெயில் பண்ணுங்க மச்சான் நிறைய பேசுவோம்
  aan_kaalai @yahoo .com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here