போலீஸ் அடின்னா இது தானா!

26
போலீஸ் அடின்னா இது தானா !

னக்கு நண்பர்கள் அதிகம், சென்னையில் 12 வருடங்கள் மைலாப்பூரில் நண்பர்களுடன் தங்கி இருந்தேன். Image Credit

ஏன்டா சாலையை அளந்துட்டு போறீங்க!

ஒரு நாள் நண்பர்கள் மூவருடன் கை கோர்த்துக்கொண்டு குளம் அருகில் உள்ள சங்கீத உணவகம் சென்று கொண்டு இருந்தோம்.

அன்று யாரோ முக்கிய நபர் வருவதாக இருந்ததால் போலீஸ் பந்தோபஸ்து அதிகமாக இருந்தது.

நாங்கள் சாலையில் பிக்னிக் பிளாசா அருகில் அளந்து! கொண்டு போனதால் ஒரு போலீஸ்..

டேய்! ஏன்டா சாலையை அளந்துட்டு போறீங்க! ஒழுங்கா போக மாட்டீங்களான்னு சவுண்ட் விட்டாரு.

கூட இருந்த நண்பன் சும்மா இல்லாம திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்துட்டு மறுபடியும் இன்னொரு நண்பன் தோள் மேல கை போட்டு வந்தான், அந்தப் போலீஸ் செம காண்டாகிட்டாரு.

டேய்! இங்க வாங்கடா! ன்னு கூப்பிட்டாரு ஆஹா! மாட்ட விட்டுட்டானேன்னு நொந்துட்டே அவரிடம் சென்றோம்.

சார் சொன்னா கேட்க மாட்டீங்களோன்னு கேட்டுட்டே அவனுக்கு ஒன்னு செவுள்ள விட்டாரு பாருங்க எனக்கு வயித்தை கலக்கி விட்டது…

கூட இருந்த இன்னொரு போலீஸ் டேய்! நீ இங்க வாடானாரு… நான் உயரம் அவர் குள்ளம் அதுனால எகிறி அடிக்கப் போகிறாரான்னு பீதி ஆகி விட்டது.

எங்கடா வீடு?

சார்.. கல்வி வாரு தெரு!

என்னடா பேரு இது.. ம்ம்ம் எங்கடா இருக்குக் கல்வி வாரு தெரு..

சார் லஸ் வைன்ஸ் பக்கத்துல..

எங்கடா இருக்குது லஸ் வைன்ஸ்

சார் இங்க தான் சார் பக்கத்துல

இதை மொதல்லையே சொல்ல வேண்டியது தானே..! ..

இல்ல சார் ஹி ஹி ஹி அப்படின்னு மண்டைய சொறிஞ்சேன்.

ம்ம்ம் துரை ஒழுங்க போக மாட்டிங்களோ.. இந்தப் பக்கம் இனி எங்கயாவது இப்படிப் பார்த்தேன் தொலைச்சு போடுவேன் போங்கடான்னாரு..!

அதுக்கப்புறம் அங்கே நிற்க நமக்கென்ன பைத்தியமா தப்பிச்சோம் பொழைச்சோம்னு போய்ட்டோம். இப்ப கூட இதைக் கூறி நண்பர்கள் சிரிப்பதுண்டு 🙂 .

புத்தாண்டு

புது வருடத்தன்று இரவு அறை நண்பர்கள் மற்றும் எங்கள் மற்ற நண்பர்களுடன் “உற்சாகப் பானம்” அருந்தி விட்டு 🙂 மெரீனா கடற்கரைக்குச் சென்று ஒரு ஆட்டம் போட்டு விட்டு வருவோம் மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல்.

அப்படி ஒரு வருடம் (எந்த வருடம் என்று மறந்து விட்டது) சென்று 12 மணிக்கு பிறகு எல்லோரும் கடற்கரையில் செம ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தோம்.

அதிலும் நானும் நண்பனும் இந்த டான்ஸ் விசயத்தில் ரொம்ப ஈடுபாடு அதனால ரொம்பக் குஷியா ஆடிட்டு இருந்தோம் அனைத்து நண்பர்களுடன்.

திடீர்னு போலீஸ் வந்துட்டாங்க அவங்க வந்ததே எங்களுக்குத் தெரியல, திடீர்னு பசங்க கிட்ட இருந்து சத்தம்..

என்னனு புரியறதுக்குள்ள எனக்குப் பின்னாடி செம அடி.

ஐயோ! அம்மா!! னு கத்திட்டு திரும்பும் போது வயித்துல ஒரு அடி..அடங்கொக்கமக்கா கண்ணெல்லாம் பொறி பறந்துடுச்சு.

சுதாரிச்சு தலை தெறிக்க வழி கிடைத்த பக்கம் அவனவன் ஓடிட்டாங்க.

கூட இருந்த இன்னொரு நண்பன் உற்சாகப் பானம் அதிகமா குடிச்சதால போலீஸ் கிட்ட கை தூக்கி சார்! ஏன் சார்! அடிக்கறீங்க!!ன்னு கேட்டதும் அவனுக்கு முட்டி மேல ஒரு அடி.

அவ்வளவு தான் அவனவன் துண்ட காணோம் துணியக் காணோம்னு தெறிச்சு ஓடிட்டாங்க..

எல்லோரும் கிடைத்த கேப்ல ஒவ்வொரு பக்கம் ஓடியதால் எல்லோரும் எங்க போனானுகனே தெரியல கொஞ்ச நேரம் கழித்து ஒவ்வொருத்தனா வராங்க.

மச்சி! அடி பலமான்னு விசாரிப்பு வேற!

எனக்குப் பின்னாடி விட்ட அடில தீ கங்கு எடுத்து உள்ள போட்ட மாதிரி எரியுது.

இதுல இவனுக வேற நேரம் காலம் தெரியாம விசாரிச்சு டென்ஷன் பண்ணுறானுக.. கை தூக்கி காட்டி முட்டில அடி வாங்கிய இன்னொரு நண்பனுக்கு நல்லா புஸ்ஸ்ஸ் னு வீங்கி விட்டது.

வருஷம் ஆரம்பமே அமர்க்களமா இருக்கேன்னுட்டு, அனைவரையும் கிண்டல் அடித்துக் கொண்டு வந்தது மறக்க முடியாது.

அதற்கு அப்புறம் இரண்டு நாள் உட்கார முடியாம கஷ்டப்பட்டது எனக்குத் தான் தெரியும்.

அப்ப தான் தெரியும் போலீஸ் அடின்னா என்னன்னு 🙂 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

26 COMMENTS

 1. ஆஹா அதான் போலீஸ் செலக்சன் பத்தி அப்படி ஒரு போஸ்ட் போட்டீங்களா?

  உட்கார்ர இடத்துல பிரச்சினைன்ன கொஞ்சம் தள்ளி உட்கார வேண்டியதுதான் :-).

 2. //வடகரை வேலன் said…
  ஆஹா அதான் போலீஸ் செலக்சன் பத்தி அப்படி ஒரு போஸ்ட் போட்டீங்களா?//

  ஹா ஹா வேலன் அந்த பதிவ மறக்க முடியுமா! நீங்க நண்பர் ஆனதே அந்த பதிவில் இருந்து தானே :-))

  //உட்கார்ர இடத்துல பிரச்சினைன்ன கொஞ்சம் தள்ளி உட்கார வேண்டியதுதான் :-).//

  ஒரே குஷ்டமப்பா இல்ல இல்ல கஷ்டமப்பா! :-))

 3. //கூடுதுறை said…
  என்ன கிரி ஈரோட்டில் ஒரு போலிஸ் கொடுத்த அடியை பற்றி சொல்லவேயில்ல…?//

  கொடுத்த அடி இல்ல..கொடுத்து இருக்க வேண்டிய அடின்னு சொல்லுங்க..:-)))) நல்ல வேளை “நம்மோட” நல்ல நேரம் தப்பிச்சோம் ஹா ஹா ஹா

  ====================================================================

  //இறக்குவானை நிர்ஷன் said…
  //புது வருடத்தன்று இரவு என் அறை நண்பர்கள் மற்றும் எங்கள் மற்ற நண்பர்களுடன் “உற்சாக பானம்” அருந்தி விட்டு //

  அது எப்படி இருக்கும்?//

  7 Up குடித்து இருக்கீங்களா? இல்ல பார்த்து! இருக்கீங்களா? :-))) அது மாதிரி இருக்கும். நிர்ஷன் எப்படி இருக்கீங்க..ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கீங்க 🙂

  ====================================================================

  //முரளிகண்ணன் said…
  :-))))))))))))

  கிரி இந்த அனுபவமெல்லாம் இருக்கா உங்களுக்கு//

  ஹா ஹா இன்னும் பல அனுபவம் இருக்கு அதை வெளிய சொல்ல முடியல 🙂

  முரளி கண்ணன் என்ன! விடுமுறையை கொண்டாடிட்டு இருந்தீங்களா! கொஞ்ச நாளா ஆளை காணோம் !!

 4. //பரிசல்காரன் said…
  கிரி..
  நீங்க நண்பர்கள் கூட டான்ஸெல்லாம் ஆடுவீங்களா? நம்பவே முடியல//

  கே கே உங்களுக்கு கிரி யோட பதிவு முகம் தான் தெரியும் … 🙂

  //ரொம்ப ரிசர்வ்டா தெரியறீங்க. ஒருவேளை, வீட்லதான் அப்டியா?//

  வீட்டுல அப்படி இல்ல..பதிவுலகத்துல இப்படி :-))

  வீட்டுல, என்னோட நண்பர்கள் (பதிவுலகம் இல்லாத) கிட்ட என்னை பற்றி கேட்டீங்கன்னா தெரியும் சங்கதி 🙂 நீங்க சொன்னத என் நண்பன் கிட்ட சொன்னேன் ..டேய்! என்னை ஒருத்தரு ரொம்ப நல்லவன்னு,அமைதின்னு சொல்லிட்டாரு ..ன்னு சொன்னேன்..அதற்க்கு அவன்.. யாரு! உன்னையா! அமைதியா! அப்படின்னு தான் கேட்டான்

  கே கே உண்மையில் நான் ரொம்ப ரகளையான ஆளு..பதிவுலகில் அடக்கி வாசிக்கிறேன் அவ்வளோ தான் 😉

 5. இது தான் ‘மனசாட்சி’ பதிவா கிரி?

  பீச்ல போலீஸ் குதிரையில வந்து கூட துரத்துவாங்களே?

 6. //Bhuvan said…
  தமிழ்நாட்டு போலீஸ் பாத்துடீங்க! அப்படியே சி.பி.ஐ , இந்தியன் ஆர்மி-னு வளர என் வாழ்த்துக்கள்!!//

  புவன் எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்..வாங்கின அடியே இன்னும் மறக்கல ..நீங்க என்னடான்னா வாங்க போற அடிக்கு வாழ்த்து சொல்றீங்க..அவ்வவ்

  ====================================================================

  //வெயிலான் said…
  இது தான் ‘மனசாட்சி’ பதிவா கிரி?//

  :-)))

  //பீச்ல போலீஸ் குதிரையில வந்து கூட துரத்துவாங்களே?//

  அது எல்லாம் படத்துல தாங்க..உண்மையாகவே இருக்குதான்னு தெரியல. அனுபவம் கிடைத்தால் !!! சொல்றேன் 🙂

 7. //புது வருடத்தன்று இரவு என் அறை நண்பர்கள் மற்றும் எங்கள் மற்ற நண்பர்களுடன் “உற்சாக பானம்” அருந்தி விட்டு //

  அது எப்படி இருக்கும்?

 8. //Mahesh said…
  அப்பவே உங்க அப்பா சொன்னாரு…”பின்னால” கஷ்டப்படப் போறடான்னு… நீங்க கேக்கல போல… ஆனா வயித்துல அடி வாங்கி “முன்னால”யும் கஷ்டப்பட்டீங்களா?//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதுக்கு போலீஸ் அடியே பரவாயில்ல போல இருக்கே !

  ====================================================================

  //Raj said…
  “Happy New Year sir” அப்படின்னு சொல்லி ஒரு 100 ரூபாயை கொடுத்திருந்தால் இப்படி அடிச்சிருக்க மாட்டாங்கள்ல…!//

  அதற்கெல்லாம் வாய்ப்பே கொடுக்கப்படவில்லை ராஜ். என்ன நடக்கதுன்னு தெரியறதுக்குள்ளே அடி நொங்கு எடுத்தாட்டாங்க 🙂

  ====================================================================

  //Sakthi said…
  இது கிரி அண்ணாவின் இன்னொரு முகம்-னு நினைக்கிறேன் ஹி ஹீ…//

  :-)))

  //rajinifans.com-ல் “தலைவர்” பற்றிய பதிவில்(http://rajinifans.com/detailview.php?title=864) உங்கள் பின்னூட்டம் மிக பொருத்தமாக இருந்தது….//

  நன்றி சக்தி

 9. கிரி..

  நீங்க நண்பர்கள் கூட டான்ஸெல்லாம் ஆடுவீங்களா? நம்பவே முடியல. ரொம்ப ரிசர்வ்டா தெரியறீங்க. ஒருவேளை, வீட்லதான் அப்டியா?

 10. தமிழ்நாட்டு போலீஸ் பாத்துடீங்க! அப்படியே சி.பி.ஐ , இந்தியன் ஆர்மி-னு வளர என் வாழ்த்துக்கள்!!

 11. அப்பவே உங்க அப்பா சொன்னாரு…”பின்னால” கஷ்டப்படப் போறடான்னு… நீங்க கேக்கல போல… ஆனா வயித்துல அடி வாங்கி “முன்னால”யும் கஷ்டப்பட்டீங்களா?

 12. “Happy New Year sir” அப்படின்னு சொல்லி ஒரு 100 ரூபாயை கொடுத்திருந்தால் இப்படி அடிச்சிருக்க மாட்டாங்கள்ல…!

 13. இது கிரி அண்ணாவின் இன்னொரு முகம்-னு நினைக்கிறேன் ஹி ஹீ…

  rajinifans.com-ல் “தலைவர்” பற்றிய பதிவில்(http://rajinifans.com/detailview.php?title=864) உங்கள் பின்னூட்டம் மிக பொருத்தமாக இருந்தது….

 14. //குடுகுடுப்பை said…
  சிங்கப்பூர் பிரம்படி போலிஸ் கிட்ட மாட்டிக்காதீங்க.:)//

  தமிழ்நாடு போலீஸ் னா இரண்டு நாள் தான் உட்கார முடியாது..சிங்கப்பூர் னா இரண்டு மாசத்துக்கு உட்கார முடியாது :-))))))))

 15. தமிழ்நாட்டு போலீஸ் பாத்துடீங்க!

  சிங்கப்பூர் பிரம்படி போலிஸ் கிட்ட மாட்டிக்காதீங்க.:)

 16. என்னையும் போலீஸ்காரன் அடிச்சிட்டான் நானும் ரவுடிதான் என்னு காலர தூக்கிகிட்டு போக வேண்டியதுதான் கிரி… ஹி ஹி ஹி

 17. ஹே! இவன் சொல்லிட்டாரு ..எல்லோரும் கேட்டுக்குங்க .இனி நானும் ரவுடி தான்! ரவுடி தான்!! ரவுடி தான்!!! :-)))

 18. //சினிமா நிருபர் said…
  கிரி… நீங்களும் மயிலாப்பூர் பிக்னிக் பிளாஸாவுல் தண்ணியடிச்ச பார்ட்டி தானா?//

  ஹி ஹி ஹி

  //நானும் சென்னையில் இருந்தப்ப மயிலாப்பூர்லதான் 8 வருஷம் தங்கியிருந்தேன். கச்சேரி சாலை பகுதியில்//

  நானும் அங்கே தான்.

  //நானும் பல இடங்களில் போலீஸ் லத்தியடியை பார்த்திருக்கேன். ஆனா ஒரு தடவை கூட வாங்குனதில்லை//

  கவலைப்படாதீங்க :-))))

  //என் மனதை பாதித்த போலீஸ் அடி… கலைஞர் கைதை கண்டித்து சென்னையில் நடந்த பேரணியில் போலீசார் நடத்திய தடியடிதான்.//

  உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கும் ..அதாவது நிருபர் என்பதால் நீங்க நிறைய பார்த்து இருப்பீங்கன்னு

 19. கிரி… நீங்களும் மயிலாப்பூர் பிக்னிக் பிளாஸாவுல் தண்ணியடிச்ச பார்ட்டி தானா? நானும் சென்னையில் இருந்தப்ப மயிலாப்பூர்லதான் 8 வருஷம் தங்கியிருந்தேன். கச்சேரி சாலை பகுதியில். நானும் பல இடங்களில் போலீஸ் லத்தியடியை பார்த்திருக்கேன். ஆனா ஒரு தடவை கூட வாங்குனதில்லை. என் மனதை பாதித்த போலீஸ் அடி… கலைஞர் கைதை கண்டித்து சென்னையில் நடந்த பேரணியில் போலீசார் நடத்திய தடியடிதான்.

 20. பாத்தா பச்சபுள்ல மாதிரி இருந்துகிட்டு இம்ம்புட்டு வேல செய்ரிங்களா

  இர்ரோட்டில் ஒரு போலிஸ் அடி பார்த்தோமே.

 21. ஹி ஹி ஹி .. நம்ப வடிவேலு மாதிரி சூனா.பானா .. இது எல்லாம் சகஜம் அப்பா என்று சொல்லி கொண்டே போக வேண்டியது தான் .. ஹி ஹி

 22. //பிரபாகர் சாமியப்பன் said…
  ஹி ஹி ஹி .. நம்ப வடிவேலு மாதிரி சூனா.பானா //

  ஹா ஹா ஹா

  ====================================================================

  //வால்பையன் said…
  பாத்தா பச்சபுள்ல மாதிரி இருந்துகிட்டு இம்ம்புட்டு வேல செய்ரிங்களா//

  புயலுக்கு பின் அமைதி 🙂

  //இர்ரோட்டில் ஒரு போலிஸ் அடி பார்த்தோமே.//

  இது என்ன புது ரோடா இருக்கு :-))

  இருவரின் முதல் வருகைக்கும் நன்றி.

 23. இது மாதிரி ஒரு அனுபவம் எங்கள் கல்லூரிக்காலத்தில் நடந்தது. நாள் மிக முக்கியமான நாள். டிசம்பர் 12. அம்மா ஆட்சி. நான் ஒரு பதிவு தயார் செய்து வைத்திருந்தேன்..என் நண்பன் அட்வைஸின் படி டெலீட் செய்துவிட்டேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here