1. A – Available/Single? Not Available & Not Single : திருமணம் ஆகிவிட்டது.
2. B – Best friend? : நண்பன் சதிஷ். Image Credit
3. C – Cake or Pie?: கேக் தான்.. இரண்டாவது பேரே சரி இல்ல :-).
4. D – Drink of choice? : மோர் ..சரக்கடிக்க ஆசை கம்பெனி இல்லை.
5. E – Essential item you use every day? : கைத்தொலைபேசி பர்ஸ்.
6. F – Favourite colour? : பிம்பிலாக்கி பிளாக்கி அட! கருப்பு வண்ணம் தாங்க.
7. G – Gummy Bears Or Worms?: அப்படின்னா!
8. H – Home town? – சின்னகோடம்பாக்கம் கோபி.
9. I – Indulgence? – நிறைய இருக்கு.
10. J – January or February? பிப்ரவரி தான் சந்தேகம் இல்லாமல் ..பின்ன அந்த மாதத்துல தானே சீக்கிரம் சம்பளம் போடுவாங்க 🙂 .
11. K – Kids & their names? ஒரு வயதில் மகன் பெயர் வினய்.
12. L – Life is incomplete without? – திருமணம், குழந்தை.
13. M – Marriage date? 2007.
14. N – Number of siblings? மூன்று அக்கா.
15. O – Oranges or Apples? இரண்டும்.
16. P – Phobias/Fears? மனசாட்சிக்கு ரொம்பப் பயப்படுவேன்.. இதனால் இழந்தது “பல” 😉 .
17. Q – Quote for today? : எல்லோரும் அவங்கவங்க வேலைய (மட்டும்) பாருங்க போதும்.
18. R – Reason to smile? : இதுக்கெல்லாம் காரணம் வேண்டுமா? என்ன கொடுமை சார்.
19. S – Season? : வசந்த காலம்.
20. T – Tag 4 People? : ஆண்ட்ரு சுபாசு.
21. U – Unknown fact about me? : அது தான் unknown ஆச்சே அப்புறம் எப்படிச் சொல்றது? சின்னபுள்ளை தனமால்ல இருக்கு.
22. V – Vegetable you don’t like? : பாகற்காய் (அக்கா சமைத்தால் ஓகே).
23. W – Worst habit? : ஹி ஹி வெளியே சொல்ல(முடியாது)ப்படாது.
24. X – X-rays you’ve had? : மூன்று வருடம் முன்பு.
25. Y – Your favourite food? : என் மூன்றாவது அக்கா செய்யும் சமையல் எதுவும்.
26. Z – Zodiac sign? : தேள் 🙂 ரொம்பப் பேசுனீங்க? ….. 🙂 .
அன்புக்குரியவர்கள்: குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.
ஆசைக்குரியவர்: ஏம்பா! இப்படி ஏடாகூடமாவே கேள்வி கேட்குறீங்க?
இலவசமாய்க் கிடைப்பது: வேறென்ன அறிவுரை தான்..
ஈதலில் சிறந்தது: பசிக்குணவு கல்விக்குதவி.
உலகத்தில் பயப்படுவது: ஹலோ! இது தான் ஏற்கனவே கேட்டுட்டீங்களே ..கரப்பான் பூச்சி எல்லாம் இல்லை என் மனசாட்சி தான்.
பயப்படுவீங்களா? மாட்டீங்களா?
இந்தக் கேள்வி கேட்டதும் சமீபத்தில் பார்த்த ஒரு ஹாரர் படம் நினைவிற்கு வருகிறது.
ஒரு தொலைக்காட்சி பேட்டில சில பொண்ணுக பசங்க கிட்ட எதுக்குப் பயப்படுவீங்கன்னு கேட்பாங்க அதுல ஒரு சிலர் நாங்க எதுக்கும் பயப்பட மாட்டோம்னு சொல்வாங்க.
இதைப் பார்த்த ஒரு சைக்கோ அப்படிக் கூறியவர்களைக் கடத்தி வித விதமா டார்ச்சர் செய்து இப்ப பயமா இருக்கா இல்லையான்னு கேட்பான்.
எனக்குப் படம் பார்த்துப் பீ(பே)தி ஆகிடுச்சு இப்ப சொல்லுங்க பயப்படுவீங்களா? மாட்டீங்களா? 😉 .
ஊமை கண்ட கனவு: அவரால் மட்டுமே உணர முடியும்.
எப்போதும் உடனிருப்பது: ஜட்டி பனியன்.
ஏன் இந்தப் பதிவு: வெ.இராதாகிருஷ்ணன் ஐயா அழைத்ததால்.
ஐஸ்வர்யத்தில் சிறந்தது: நல்ல உடல் நலம்.
ஒரு ரகசியம்: அது தான் ரகசியம் ஆச்சே! அப்புறம் எப்படிங்க சொல்வது.
ஓசையில் பிடித்தது: மழை சத்தம் பறவைகளின் சப்தம் குழந்தைகள் விளையாட்டுச் சத்தம் (சில நேரம் கடுப்பை வரவழைத்தாலும்).
ஔவை மொழி ஒன்று: நானே தமிழ் மொழி சரியா பயன்படுத்தாம இருக்கேன்னு கவலையில இருக்கேன்..இதுல நான் எங்கே ஔவை மொழிக்கு போவது.
(அ)ஃறிணையில் பிடித்தது: நன்றியுள்ள ஜீவன்.
ஏம்பா! தமிழ் பதிவுலகில் இருந்துட்டு இப்படி இங்கிளிபீச்சில் கேள்வி கேட்டால் எப்படி? தொடர்பதிவை இப்படி எல்லாம் தயார் செய்தீங்க…..அப்புறம் அப்புறம் ..அழுதுடுவேன்னு சொல்ல வந்தேங்க.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
🙂 ம்ம். நல்லாருக்குங்க பதில்கள்..-வித்யா
அண்ணேன் நானும் பிரபலமாகனும் …தொடர்பதிவுக்கு கூப்பிட்டா ..கொஞ்சம் நானும் விளம்பரம் பண்ணிக்குவேன் ..ஹி ஹி …நல்ல யோசிகிறீங்க தொடர்பதிவு..
வீடு மாறி வந்துட்டேனா!படத்துல இருக்கிறது கட்டஞ்சாயாவா,பாலு கலக்காத காபியா,பெப்சியா?
//Gummy Bears Or Worms?: அப்படின்னா!//
அப்படின்னா:))!சபாஷ்!சரியான சந்தேகம்.
//Vegetable you don't like? : பாகற்காய்//
எத்தனையோ தீபாவளி வந்துருச்சு!ஆனா பேச்சிலரா ஒருத்தன் தீபாவளிக்கு பாகற்காய் குழம்பு செஞ்சானே!இணையம் வரை புலம்ப வைக்கும் மறக்க முடியாத தீபாவளி:)
//சமீபத்தில் பார்த்த ஒரு ஹாரர் படம் நினைவிற்கு வருகிறது..ஒரு தொலைக்காட்சி பேட்டில சில பொண்ணுக பசங்க கிட்ட எதுக்கு பயப்படுவீங்கன்னு கேட்பாங்க அதுல ஒரு சிலர் நாங்க எதுக்கும் பயப்பட மாட்டோம்னு சொல்வாங்க..இதை பார்த்த ஒரு சைக்கோ அப்படி கூறியவர்களை கடத்தி வித விதமா டார்ச்சர் செய்து இப்ப பயமா இருக்கா இல்லையான்னு கேட்பான்.. எனக்கு படம் பார்த்து பீ(பே)தி ஆகிடுச்சு இப்ப சொல்லுங்க பயப்படுவீங்களா? மாட்டீங்களா?//
படத்தின் பெயர் என்ன தல!
ஹாஸ்டல் மாதிரி இருக்கும் போலருக்கே!
கலக்கல் பதில்,//சின்னகோடம்பாக்கம் கோபி//நீங்களும் கொங்கு நாட்டு சிங்கம் தானா???நம்ம கடைப் பக்கம் வர்றதேயில்ல.
நல்லா இருக்குங்க பதில்கள் எல்லாம்.
அருமையான பதில்கள் கிரி.:))
நல்ல பதில்கள்:)!
//Cake or Pie?://
//Zodiac sign?//
//ஔவை மொழி//
:))!
//ஓசையில் பிடித்தது//
ஸ்வீட்:)!
பதில்கள் ரசிக்கும்படியா நல்லாருக்கு கிரி…
பிரபாகர்.
வித்யா ஆண்ட்ரு சுபாசு ராஜநடராஜன் பிரபாகர் அருண் தராசு சுந்தர் ஷண்முகப்ரியன் பாலா ராமலக்ஷ்மி சிவா மற்றும் ஈரா வருகைக்கு நன்றி
@ராஜநடராஜன்
😉 பீர் பீர்
@ஆண்ட்ரு சுபாசு
உங்கள் ஆசைப்படி பெயரை சேர்த்து விட்டேன், நீங்க தொடர்பதிவை தொடரலாம் விருப்பப்பட்டால், அப்புறம் உங்கள் தளத்தினுள் வந்தால் கூகிள் க்ரோம் வைரஸ் என்று சொல்கிறது..கொஞ்சம் கவனிங்க
@அருண்
நான் ஒரு குத்துமதிப்பா தேடி பார்த்தேன், பெயர் மறந்து விட்டது. நினைவு வரும் போது கண்டிப்பா சொல்றேன்
@தராசு
நம்ம ஊரா நீங்க..வந்துடுவோம் 🙂
@சிவா
என்னோட இழப்பே வேற 🙂 ஹி ஹி
ஈதலில் சிறந்தது: பசிக்குணவு கல்விக்குதவி//
இது அருமை,கிரி.
எனக்கு நெம்ப பிடிச்சது அந்த பின் குறிப்பு அது தொடர்பான படமும் தான் கிரி – பயபுள்ள.
''என் மனசாட்சிக்கு ரொம்ப பயப்படுவேன்.. இதனால் இழந்தது "பல" ;-)''
நானும் உங்களை போல் தான் கிரி பழாப் போன மனசாட்சியால் பலபல சோதனைகளை கண்டு இருக்கிறேன் ஆனா அதுக்காக வருத்தப்பட்டது கிடையாது .
:-))))
/ஈதலில் சிறந்தது: பசிக்குணவு கல்விக்குதவி//
பளீர் பதில்…
நல்லாருக்கு கிரி, ஆனால் எங்கள் தலைவர் V.T.R ஐ இப்படியா நக்கல் அடிப்பது,
ஹி ஹி இன்னும் கொஞ்சம் அதிகமா எதிர்பார்க்கிறோம்
:))))))))))))
பாகற்காய் (என் அக்கா சமைத்தால் ஓகே)
-Appa Wife samacha?
Thanks,
Arun
கிறுக்கல் கிறுக்கன் பயபுள்ள ராஜ் மற்றும் அருண் வருகைக்கு நன்றி
@அருண்
யாராக இருந்தாலும் 🙂
மனசாட்சிக்கு பயப்படுவது நல்ல விடயமே கிரி …
நல்லா இருக்கு கிரி. நீங்க பதிவு போட்ட உடனே பார்த்து விட்டேன்.
ஆனால் சமிபத்தில் நானே கேட்டு ஒரு "ஆப்பை" வாங்கி கொண்டதால், இப்போது வார இறுதியில் வீட்டில் இருந்தால் ம்ட்டுமே பின்னூட்டம் போட முடிகிறது.
அதனால் தான் நண்பர்களுக்கு மற்ற நாட்களில் வெறும் ஓட்டு மட்டும் போடுகிறேன்.
//நட்புடன் ஜமால் said…
மனசாட்சிக்கு பயப்படுவது நல்ல விடயமே கிரி ..//
🙂 நன்றி ஜமால்
========================================================
// சிங்கக்குட்டி said…
இப்போது வார இறுதியில் வீட்டில் இருந்தால் ம்ட்டுமே பின்னூட்டம் போட முடிகிறது.
அதனால் தான் நண்பர்களுக்கு மற்ற நாட்களில் வெறும் ஓட்டு மட்டும் போடுகிறேன்.//
சிங்கக்குட்டி விருப்பப்பட்டு பின்னூட்டம் இடுங்கள், போட்டே ஆக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை 🙂
paiyyan peru vinay supera irukku !!! enna thamizh pera illama pochi 🙂
நல்ல யோசிக்ரிங்க.
வொர்க் பண்ணு ரூபா கண்ணடிப கவனம் தேவை.