இந்திய ஊடகங்கள் | காறித் துப்பிய இலங்கை

8
இந்திய ஊடகங்கள் fake-news

லகில் இந்திய ஊடகங்கள் போல ஒரு கேவலமான ஊடகங்களைக் காண முடியாது என்பது என் எண்ணம். அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இப்பிரச்சனை உள்ளது என்றாலும் இந்திய ஊடகங்களை மிஞ்சுவது கடினமே!

இந்திய ஊடகங்கள்

மும்பை தீவிரவாத தாக்குதலின் போது அங்கே நடந்ததை அப்படியே நேரலை செய்து, அதைத் தீவிரவாதிகள் பார்த்து எச்சரிக்கையான சம்பவம் போல உலகிலேயே எங்கும் நடந்திராது. Image Credit

அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் செய்து, பேட்டி அது இதுன்னு அங்கேயே சுற்றி அவர்களுக்கு இடைஞ்சல் கொடுத்து… இப்ப நினைத்தாலும் கொதிக்குது.

நேபாள் நிலநடுக்கம்

நேபாளில் நில நடுக்கத்தின் போது கும்பலாக இந்திய ஊடகங்கள் அங்கே சென்று உட்கார்ந்து கொண்டு, TRP க்காகப் பொய் பொய்யாக எழுதிக்கொண்டு இருந்தார்கள்.

பொறுமை இழந்த மக்கள் “எங்கள் பிரச்சனையை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என்று காறித்துப்பாத குறையாக அவர்களை நாட்டை விட்டு வெளியேறக் கூறி அனுப்பி வைத்தனர்.

செருப்பால அடிச்ச மாதிரி இருந்து இருக்கணும் ஆனால், தொடைச்சு போட்டுட்டு அதே தவறை அதன் பிறகும் செய்தார்கள் ஆனால், இந்த முறை இந்தியாவில் இருந்து கொண்டு.

என்ன ஏதுன்னே தெரியாது ஆனால், Breaking News என்று கிளம்பிடுவாங்க. ஆளாளுக்கு மைக்கை தூக்கிட்டு வந்துடுவாங்க, பார்க்கவே எரிச்சலாக இருக்கும்.

ஏகப்பட்ட செய்தி சேனல்களை ஆரம்பித்து, என்ன செய்தியைக் கூறுவது என்று தெரியாமல் கண்டவனை எல்லாம் பெரிய ஆள் ஆக்கி விட்டாச்சு.

அவனவன் தன்னைப் பெரிய ஆளாக நினைத்து வாய்க்கு வந்ததை விவாதத்தில் பேசிக்கொண்டு இருக்கிறான், பேட்டி கொடுக்கிறான்.

இலங்கை குண்டு வெடிப்பு

தற்போது நேபாள் போல, இந்திய ஊடகங்கள் பொய் செய்திகளைப் பரப்பி வருகின்றன என்று இலங்கை காறித் துப்பியுள்ளது. இந்த அசிங்கம் தேவையா!

ஊடகங்களே! உங்களுக்கெல்லாம் வெட்கமாவே இருக்காதா! வாயை திறந்தால் பொய்! அவர்களே குண்டு வெடிப்பில் நொந்து போய் இருக்கிறார்கள், அவர்கள் வேதனையைக் காசாக்க முயல்கிறீர்களே! நீங்கள் எல்லாம் என்ன ஜென்மம்.

உங்களால எங்களுக்கும் அசிங்கம்! கேவலமா இருக்கு.

தயவு செய்து அவர்களுக்கு உதவி செய்யவில்லையென்றாலும் உபத்திரம் செய்யாமல் இருங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

சாவு வீட்டில் விளம்பரம் | மும்பை தாக்குதல் [2008] மும்பை தாக்குதல்

தமிழ் ஊடகங்களின் தமிழ் அழிப்பு [2014]

ஊடகத்துறை அசிங்கப்பட யார் காரணம்? [2019]

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. //தற்போது நேபாள் போல, இந்திய ஊடகங்கள் பொய் செய்திகளைப் பரப்பி வருகின்றன என்று இலங்கை காறித் துப்பியுள்ளது. இந்த அசிங்கம் தேவையா!//

    இலங்கை விஷயத்தில் – தேசிய தவ்ஹீத் ஜமாத்து எனப்படும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய இயக்கம் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இஸ்லாமிய isis தான் செய்ததாக அறிவிக்கிறது. அப்படி இருக்க இந்திய ஊடகங்கள் பொய் செய்திகளைப் பரப்பி வருகின்றன என்று இலங்கை காறித் துப்பியுள்ளது எதற்காம்?

  2. @வேகநரி

    எந்த நாட்டில் இது போல தாக்குதல்கள் நடந்தாலும், அவர்கள் சந்தேகப்படும் முக்கிய அமைப்பை தான், இவர்களாக இருக்கலாம் என்று கூறுவார்கள்.

    இந்தியா புல்வாமா தாக்குதலின் போதும் பல்வேறு அமைப்புகள் பெயர் கூறப்பட்டது. இது அந்தந்த நாட்டின் உள்விவகாரம்.

    இதில் சென்று தாங்கள் புலானய்வு செய்து கூறுவது எல்லாம் பக்கத்து நாட்டு ஊடகங்களுக்கு அவசியமில்லாதது அதுவும் இது போன்ற பதட்டமான சூழ்நிலையில்.

    ஏற்கனவே, பல பொய் தகவல்கள் பரவிக்கொண்டு இருக்கும் நிலையில், இவர்களும் தங்களுக்கு வந்த செய்திகள் என்று கண்டதையும் தொடர்ச்சியாகக் கூறிக்கொண்டு இருப்பது கூடுதல் பதட்டத்தையும் குழப்பத்தையுமே ஏற்படுத்தும்.

    இந்தியாவில் ஒரு செய்தியை உருப்படியாக இவர்களால் கொடுக்க முடியவில்லை, இவர்களுக்கு எதற்கு பக்கத்து நாட்டு விஷயம் அதுவும் பதட்டமான சூழ்நிலையில்.

    ISIS செய்து இருப்பதாக அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தாலும் , இவ்வளவு பெரிய தாக்குதலை அதாவது தொடர் குண்டு வெடிப்பை, உள்ளூரில் உள்ளவர்கள் ஆதரவு இல்லாமல் செய்து இருக்க முடியாது.

    இது தொடர்புடைய தகவல்கள் பின்னர் வரலாம்.

    நேற்று புதியதலைமுறை ரஜினியின் தர்பார் அதிகாரப்பூர்வ ஸ்டில் என்று fan made போஸ்டரை செய்தியாக போடுகிறது. இந்த நிலையில் தான் இருக்கிறது இவர்களின் ஜர்னலிசம்.

    ஒரு சாதாரண பொதுஜனம் கண்டுபிடிக்கும் வித்யாசம் கூட தெரியாமல் தங்கள் செய்தித் தளங்களில் வெளியிடுகிறார்கள்.

    எல்லாவற்றிலும் அவசரம், யார் முதலில் கூறுவது என்று.

    கூறப்பட்ட செய்தி தவறு என்றால், சத்தமில்லாமல் அதை அப்படியே விட்டு விடுவது. இதனால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதைப் பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை.

    செய்தி ஊடகங்கள் யார் முதலில் கூறுவது என்று காட்டும் முனைப்பை கூறப்படும் செய்தி உண்மையா என்பதில் காட்டினால் பல பிரச்சனைகள் ஒன்றுமில்லாமல் போய் விடும்.

    • கிரி,
      இந்தியாவில் நடைபெறும் செய்திகள வெளியிடுவதில் இந்திய ஊடகங்கள் நடந்து கொள்கின்ற தவறான முறை என்கின்ற உங்க குற்றசாட்டை ஏற்று கொள்கிறேன்.
      என்ன ஏதுன்னே தெரியாது ஆனால், Breaking News என்று கிளம்பிடுவாங்க. ஆளாளுக்கு மைக்கை தூக்கிட்டு வந்துடுவாங்க, (:

      2009 வரையில் இலங்கையில் நடந்த கொடூரமான போரை வைத்து தமிழக ஊடகங்கள் பல மிகவும் நன்றாக வியாபாரம் செய்தவர்கள் தான். இலங்கையில் போர் முடிந்ததே முடிவுற்றதே அவர்கள் கவலை.
      ஆனால் இலங்கை குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் இஸ்லாமிய மதஅடிப்படைவாதிகள் என்கின்ற உண்மையை வெளியிட்ட இந்திய ஊடகங்களை காறித் துப்பியுள்ளது யாரக இருக்கும் எனபது புரிந்து கொள்ள கூடியதே.
      நம்ம ஸ்டாலினும் குண்டு வெடிப்பு நடந்த உடனேயே அவசரபட்டு அண்மையில் நியூசிலாந்து நாடு தொடங்கி உலகின் பல நாடுகளிலும் பெருகிவரும் வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து தாக்கும் போக்கு மனிதநேயத்திற்கு விடப்பட்ட பெரும் சவாலாகும் என்று கண்டித்து விட்டார்.

      • @வேகநரி இந்திய ஊடகங்கள் உண்மையை வெளியிட்டார்களா.. அவர்கள் எது கிடைத்தாலும் வெளியிடுவார்கள் 🙂 . அவர்களுக்கு தேவை TRP மட்டுமே அது உண்மையா பொய்யா என்பது பற்றிய அக்கறையில்லை.

        நான் முன்னரே கூறியபடி தற்போது உள்ளூரில் இதற்கு துணை போனவர்களை கண்டுபிடித்துள்ளார்கள்.

        “ISIS செய்து இருப்பதாக அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தாலும் , இவ்வளவு பெரிய தாக்குதலை அதாவது தொடர் குண்டு வெடிப்பை, உள்ளூரில் உள்ளவர்கள் ஆதரவு இல்லாமல் செய்து இருக்க முடியாது.

        இது தொடர்புடைய தகவல்கள் பின்னர் வரலாம்”

        தேசிய தவ்ஹீத் ஜமாத்து க்கு தடை விதித்துள்ளார்கள். உள்ளூரில் தாக்குதலுக்கு துணை இருந்தவர்களை ISIS அமைப்பே ஒப்புக்கொண்டு படத்தை வெளியிட்டுள்ளது.

        எனக்கு மட்டும் என்னங்க.. ஊடகங்கள் மீது தனிப்பட்ட விரோதமா இருக்கப்போகிறது. செய்திகளை நேர்மையாக கொடுத்தால், நான் ஏன் விமர்சிக்கப் போகிறேன்.

        தினம் தினம் இவர்கள் பொய் செய்திகளை படித்து கோபம் தான் அதிகரிக்கிறது. அதையே நான் வெளிப்படுத்தினேன் அவ்வளவே.

  3. ரொம்ப ஓவராக பொங்காதீங்க

    இந்திய ஊடகங்களை மட்டும் குறை சொல்லுகிண்றீர்கள்
    ஏனைய நாட்டு ஊடகங்கள் மட்டும் யோக்கியமா?
    ஸ்ரீலங்கா ஊடகம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஆபாசமாக கார்டுன் வரையவில்லையா ? அப்போ எந்த கிரகத்தில் இருந்தீர்கள் ?

    ………………………..

    “ISIS செய்து இருப்பதாக அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தாலும் , இவ்வளவு பெரிய தாக்குதலை அதாவது தொடர் குண்டு வெடிப்பை, உள்ளூரில் உள்ளவர்கள் ஆதரவு இல்லாமல் செய்து இருக்க முடியாது.”
    .
    ஸ்ரீலங்காவை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்னும் அமைப்புடன் சேர்ந்து செய்துள்ளதாக ஸ்ரீலங்கா அரசு அறிவித்துள்ளது
    அப்புறம் என்ன

    இதைத்தான் இந்திய ஊடகங்கள் முந்திகிட்டு சொன்னது அதில் என்ன தவறு ?
    —————————

    இந்திய புலனாய்வு நிறுவனம் குண்டு வெடிக்க போவதை பல நாள்களுக்கு முன்பே ஸ்ரீலங்கா அரசுக்கு அறிவித்தது உங்களுக்கு தெரியுமா ?

    தாக்குதல்தாரிகளின் முதல் இலக்கு தமிழ்நாடு
    தமிழ்நாட்டு பாதுகாப்பு கெடுபிடி காரணமாக இங்கே தாங்குதல் செய்யவில்லை
    மேலதிக தகவல் உங்களுக்கு

  4. @Rajendra

    “ரொம்ப ஓவராக பொங்காதீங்க”

    ஊடகம் மட்டும் பொங்கலாம்.. நாங்கெல்லாம் பொங்க கூடாதா 🙂

    “இந்திய ஊடகங்களை மட்டும் குறை சொல்லுகிண்றீர்கள் ஏனைய நாட்டு ஊடகங்கள் மட்டும் யோக்கியமா?”

    நான் எங்கும் அப்படி கூறவில்லையே!

    “ஸ்ரீலங்கா ஊடகம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஆபாசமாக கார்டுன் வரையவில்லையா ? அப்போ எந்த கிரகத்தில் இருந்தீர்கள் ?”

    இதே கிரகத்தில் தான் இருந்தேன், நான் இதை சரி என்று கூறி நீங்கள் படித்தீர்களா?

    “இதைத்தான் இந்திய ஊடகங்கள் முந்திகிட்டு சொன்னது அதில் என்ன தவறு ?”

    உங்க வீட்டு சண்டைக்கு நீங்க முந்திகிட்டு கருத்து சொல்லலாம் ஆனால்,பக்கத்துக்கு வீட்டு பிரச்சனைக்கு அல்ல.

    அப்படியே கூறினாலும், கூறும் முறை என்ற ஒன்றுள்ளது.

    “இந்திய புலனாய்வு நிறுவனம் குண்டு வெடிக்க போவதை பல நாள்களுக்கு முன்பே ஸ்ரீலங்கா அரசுக்கு அறிவித்தது உங்களுக்கு தெரியுமா ?”

    நல்லா தெரியும். இலங்கை அரசே கூறியதே!

    “தாக்குதல்தாரிகளின் முதல் இலக்கு தமிழ்நாடு. தமிழ்நாட்டு பாதுகாப்பு கெடுபிடி காரணமாக இங்கே தாங்குதல் செய்யவில்லை. மேலதிக தகவல் உங்களுக்கு”

    மேலதிக தகவலுக்கு நன்றி, இது எனக்குத் தெரியாது ஆனால், இது கட்டுரைக்கு சம்பந்தமில்லாதது.

  5. இந்தியன் மீடியா , Sterlite காப்பர்கு எதிரே நியூசுபோடும். கம்பெனி advt பேப்பர்ல வரும்.

  6. பாரதி அது அவர்களுடைய தொழில், அதில் குறை காண முடியாது. செய்திகளை சொல்வது தான் அவர்கள் வேலையே தவிர, அதற்காக ஒவ்வொன்றுக்கும் இது போல பார்த்தால், அவர்கள் நிறுவனத்தையே நடத்த முடியாது.

    அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட எந்த விளம்பரத்தையும் அவர்கள் வெளியிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!