ரயில் போய்டும் போல இருக்கே..!

4
ரயில் போய்டும் போல

சென்னை சென்ட்ரல் பெயரை “புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்” என்று மாற்றிய போது பலரும், “இவ்வளவோ பெரிய பெயரா!” என்று சமூகத்தளங்களில் கிண்டலடித்தனர். Image Credit

ரயில் போய்டும் போல

பெயரைக் கூறி பயணச்சீட்டு வாங்குவதற்குள் ரயில் போய்டும் போல என்று மீம் போட்டார்கள்.

தானியங்கி முறையில் கூறப்படுகிறது என்றாலும், ரயில் நிலையத்தில் இப்பெயரை அறிவிக்கும் நபர் நிலை தான் பரிதாபம் என்று கூறப்பட்டது.

இதைக் கூறிய போது பெரிய விஷயமாகத் தோன்றவில்லை ஆனால், கடந்த வாரம் ஊருக்குச் சென்று, திரும்பச் சென்னை வரும் போது ஈரோடு ரயில் நிலையத்தில் இப்பெயரை ஒவ்வொரு முறை கூறும் போதும் கொடுமையாக இருந்தது.

“புரட்சித் தலைவர்! புரட்சித் தலைவர்!!” என்று கூறும் போது, ரயில் நிலையத்தில் உள்ளோமா, அதிமுக அரசியல் கூட்டத்தில் உள்ளோமா என்று சந்தேகம் வந்து விடும்.

ரயில் கிளம்பும் நேரமென்றால், அறிவிப்பு அடிக்கடி வருவது இயல்பு அதனால், ஒவ்வொரு முறையும் இவ்வளோ பெரிய பெயரையும் கேட்டுக் கடுப்பாகி விட்டது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த ரயில் நிலையத்தின் பெயரைப் பலரின் எதிர்ப்பை மீறி மாற்றியதே தவறு. இதில் இவ்வளோ நீளமா பெயரை வைத்து அதோடு புரட்சி தலைவரையும் சேர்த்து.. !

இதுல ஒரு எழுத்தில் உலகின் நீளமான ரயில் நிலையம் பெயர் என்ற சாதனையை இழந்து விட்டதாம்.. ரொம்ம்ம்ப முக்கியம்.

இந்தக் கூத்தில் இவர்கள் சென்னை என்பதையே சேர்க்க மறந்து விட்டார்கள்!

புதிதாகச் சென்ட்ரல் வருபவர்களுக்கு அறிவிப்புப் பலகையில் சென்னை என்பதே இல்லையென்றால், எங்கே நின்று கொண்டு இருக்கிறோம் என்பதே தெரியாதே!

இது குறித்துப் பலரும் விமர்சித்து இருக்கிறார்கள்.

MGR Chennai CTL

இதனால் பயணச்சீட்டுகளில் MGR Chennai CTL என்று (இடமில்லாததால்) குறிப்பிடப்படுகிறது.

எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்” என்று பெயரை மாற்றினால் போதாதா? இவ்வளோ பெரிய பெயரை வைத்து ஏன்யா இப்படி உசுரை வாங்குறீங்க!

நமக்கே கடுப்பாகுது, உடன் பிறப்புகள் இதை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் அவர்களுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல இருக்கும்.

கேட்பவன் எல்லாம் இனி எம்ஜிஆரை தான் திட்டிட்டு இருப்பான்.

தொடர்புடைய கட்டுரைகள்

சென்ட்ரல் பெயர் மாற்றமும் ரயில்வே தேர்வு ஊழலும்!

பெயர் மாற்ற அடாவடிகள்

4 COMMENTS

 1. உங்கள் பார்வை தவறு. இன்று ரயில் நிலையத்தில் முதல் முறையாக அறிவிப்பு வழியாகக் கேட்டேன். ரயில் வருவதற்குள் இருபது முறை கேட்டு இருப்பேன். பல விதமாக சென்னை எக்ஸ்பிரஸ் என்பதுடன் நீங்க சொன்ன மாதிரி மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.

  இந்த யோசனையை எவர் சொல்லியிருப்பார் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

  காரணம் எவர்கள் மனதில் எவரின் பெயர் தினந்தோறும் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டுமோ? அதை மிகத் தெளிவாக அழகாக செய்துள்ளார்கள். முக்கியமான அரசியல் நகர்வு இது.

  நிச்சயம் எழும்பூர் நிலையமும் அந்தப் பெண்மணி பெயர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 2. இன்னும் கொஞ்ச வருஷம் பொறுங்க.. நாம கின்னஸ் சாதனை படைப்போம். “மாண்புமிகு புரட்சி தலைவி இதய தெய்வம் செல்வி ஜே ஜெயலலிதா ரயில் நிலையம்” .. எப்புடி..!

 3. ஒவ்வொரு முறையும் இவ்வளோ பெரிய பெயரையும் கேட்டு, போதுண்டா சாமி என்றாகி விட்டது.

  செம கடுப்பு தான் ஆகிறது.எப்பொழுது ரயிலில் ஏறுவோம் என்றாகிவிடுகிறது.

 4. @ஜோதிஜி

  “உங்கள் பார்வை தவறு.”

  இது சரியா தவறா என்பதை பற்றி இல்லை ஜோதிஜி. ஒரு பயணியாக என்னுடைய கடுப்பை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

  “இந்த யோசனையை எவர் சொல்லியிருப்பார் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.”

  உங்களுக்கும் அதிமுக வினருக்கும் வேண்டும் என்றால் காதில் இன்பத்தேன் வந்து பாயலாம், எங்களுக்கு காது உள்ளே குச்சியை விட்டு ஆட்டுற மாதிரி தான் இருக்கு 🙂 .

  கீழே லீலா சொன்ன மாதிரி வெளியே இதை சகிக்க முடியாமல், ரயிலினுள் சென்று அமர்ந்து கொண்டேன்.

  “காரணம் எவர்கள் மனதில் எவரின் பெயர் தினந்தோறும் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டுமோ? அதை மிகத் தெளிவாக அழகாக செய்துள்ளார்கள். முக்கியமான அரசியல் நகர்வு இது.”

  தினந்தோறும் ஒலித்துக்கொண்டு இருப்பதற்காகவும், மக்களிடையே எம்ஜிஆர் பெயரை வைத்த இருக்கவும் செய்தாலும் வாக்களிப்பவன் வாக்களித்தால் மட்டுமே பயன்,

  அதெல்லாம் அந்தக்காலம் இப்பெல்லாம், பல விசயங்களை அவனவன் யோசிக்கிறான்.

  “நிச்சயம் எழும்பூர் நிலையமும் அந்தப் பெண்மணி பெயர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”

  எனக்கும்

  @செந்தில் மிக அதிக வாய்ப்புள்ளது, திமுக ஆட்சிக்கு வரும் போது கலைஞர் பெயர் வந்தாலும் வியப்பில்லை.

  இதுக்கு ஒரே ஒரு வழி தான். ஆணியே புடுங்க வேண்டாம் என்று தலைவர்கள் பெயருக்கு தடை போடுவது தான்.

  @லீலா சரியா சொன்னீங்க 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here