ஹீசைன் ஓவியங்களை விமர்சித்தால் இந்து வெறியரா!

73
விமர்சித்தால் இந்து வெறியரா!

ஹீசைன் இந்துக் கடவுள்களை நிர்வாணமாக வரைந்து சர்ச்சைக்குள்ளான விஷயம், தவறை விமர்சித்தால் இந்து வெறியரா! என்ற கேள்வி வந்துள்ளது.

கடவுள் நம்பிக்கை

ஹீசைனுக்கு இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்ததால், தனக்கு அனுமதி தந்த கத்தார் நாட்டில் குடியுருமை பெற்று அங்கேயே இருக்கிறேன் என்று கூறி விட்டார்.

கடவுள் நம்பிக்கை உண்டு இல்லை என்பது அவரவர் நம்பிக்கை எண்ணங்கள் சார்ந்த விஷயம். நீ ஏன் கடவுளை நம்புகிறாய்? அல்லது ஏன் கடவுளை வெறுக்கிறாய்? என்று யாரும் யாரையும் கேள்வி கேட்க முடியாது. Image Credit

தங்கள் எதிர்ப்புகளைக் கருத்துகளைப் பதிவு செய்யலாமே தவிர நீ இதைப் பண்ணக்கூடாது சொல்லக் கூடாது என்று கூற எந்த உரிமையும் இல்லை.

கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால், மூட நம்பிக்கை இல்லை.

இரண்டிற்கும் உள்ள இடைவெளி சிறியது தான் ஆனால், அதைப் புரிந்து கொள்வதிலே உள்ளது நம் கடவுள் பற்றிய எண்ணங்கள்.

மதத்தின் மீது மரியாதையுண்டு ஆனால், வெறி இல்லை. கண்மூடித்தனமான நம்பிக்கை இருந்ததில்லை.

கலைக் கண்

ஹீசைன் தனது மாடர்ன் ஆர்ட் மூலம் இந்துக் கடவுள்களை நிர்வாணமாக வரைந்த போது ஆத்திரம் வந்தது.

அதை ஏன் நிர்வாணமாகப் பார்க்கிறீர்கள்? கலைக் கண்ணோடு பாருங்கள் என்று கூறுகிறார்கள்.

கலைக்கண்ணோடு பார்க்கிற அளவிற்கெல்லாம் எனக்குத் தெரியாது, சாதா கண்ணில் தான் பார்க்கத் தெரியும்.

விமர்சித்தால் இந்து வெறியரா!

பல மில்லியன் மக்கள் தங்கள் மனதில் உயர்ந்த இடத்தில் வைத்து இருக்கும் தெய்வங்களை எந்த வித குற்ற உணர்ச்சியும், சங்கடமும் இல்லாமல் ஹீசைன் வரைவாராம் ஆனால், அதை யாரும் தட்டி கேட்கக்கூடாதாம்!

என்னங்கய்யா உங்க நியாயம்? கேட்டால் இந்து வெறியன், ஹீசைன் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் விமர்சிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

ஹீசைன் அல்லாமல் வேறு யார் வரைந்து இருந்தாலும் இதே போலத் தான் இருந்து இருக்கும். அளவில் வேண்டும் என்றால் வேறுபாடுகள் இருக்கலாம் அது இயல்பு.

நாம் மதிக்கும் கடவுளை நிர்வாணமாக வரைவதை விமர்சித்தால் இந்து வெறியரா! இதில் எங்கே இந்து வெறியர் வருகிறார் என்று புரியவில்லை.

ஒரு சிலர் (இந்து அமைப்புகள்) இதைச் சாக்காக வைத்து உண்மையாகவே பிரச்சனை பண்ணலாம். அனைவரும் ஒழுங்கு இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

அதற்காகக் கருத்து கூறினாலே இந்துத்வா என்று கூறுவது கேவலமாக உள்ளது.

ஹீசைன் வரைந்த ஓவியங்களை இந்துக்கள் என்ன ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது! ஹீசைன் மதமான இஸ்லாமை சேர்ந்தவர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மற்ற மதங்களை மதிக்கவே இஸ்லாம் அறிவுறுத்தி உள்ளது புண்படுத்த அல்ல.

ஓவியம் வரைய எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது இது அவசியமா!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் செயல்கள் புனிதமானது அதைக் கலை என்ற பெயரில் இழிவு படுத்துவது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

இதற்கு அறிவுப்பூர்வமான கேள்விகள் வேறு!

இந்துத்வா

ஹீசைன் செய்ததை பற்றிச் சிலரே விமர்சித்துள்ளார்கள். விமர்சிக்கப் பலருக்கு சங்கடம், நம்மையும் இந்துத்வா என்று கூறி விடுவார்களோ! என்று பயம்.

ஹீசைனை ஆதரிப்பவர்களும் நிறைய இருக்கிறார்கள் அது அவர்கள் கருத்து. எதிர்ப்பவர்கள் இருக்கும் போது ஆதரிப்பவர்களும் இருப்பது வழக்கம் தானே!

ஆதரிப்பது அவர்கள் விருப்பம் ஆனால். எதிர்ப்பவர்களை மத வெறியரைப் போலச் சித்தரிப்பது தான் தவறு. இதன் மூலம் என் எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன்.

ஹீசைன் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் அதைக் கலைக் கண்ணோடும் பார்க்க முடியாது காமாலைக் கண்ணோடும் பார்க்க முடியாது.

சாதாரண பொதுமக்களின் பார்வையில் தான் பார்க்க முடியும்.

ஹீசைன் வரைந்த ஓவியங்களைப் பார்த்து நீங்களே ஒரு முடிவிற்கு வந்து கொள்ளுங்கள். எதிர்ப்புகள் நியாயமா இல்லையா என்று!

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒருவர் இந்து வெறியராகத்தான் இருக்க வேண்டுமா!

இந்தப்படங்களை இங்கே மறுபடியும் போட்டு அசிங்கப்படுத்த சங்கடமாகத்தான் உள்ளது ஆனால், ஆதாரம் இல்லாமல் எப்படி குற்றச்சாட்டை வைப்பது.

ஹுசைன் வரைந்த சர்ச்சைக்குள்ளான படங்களை இங்கே மாற்றி வைத்துள்ளேன். நன்றி

படங்கள் நன்றி ராம்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

73 COMMENTS

  1. விமர்சிப்பது அவரவர் ரசனை சார்ந்த உரிமை. வருத்தப்படுவது உணர்வு பொறுத்தது. வெறி பிடித்து மிரட்டுவதுதான் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.வெர்ங்கிருந்தோ வெட்டி ஒட்டி படம் போடலாம், இன்னும் கொஞ்சம் முயன்று ஒவ்வொன்றும் எந்த காலகட்டத்தில் வரையப் பட்டவை என்று சொன்னால் தெளிவாக இருக்கும்.ஹூஸைன் வீணாய்ப் போனால் எனக்குக் கவலை யிலை. இந்தியா வீணாவது எனக்கு மிகுந்த கவலையும் கோபமும் தரும் விஷயம்.உங்களைப் போல் நாகரீகமாக எதிர்வாதம் செய்தால் யாரும் கோபிப்பதில்லை.

  2. என்னை பொறுத்தமட்டில் சரியான பார்வை கிரி.கலை தானென்று எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது வரவேற்கதக்கது அல்ல.கத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

  3. உணர்வுகளை ஒருமித்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கிரி. என்னைப் பொருத்த வரை நான் கூட மத வெறியன் கிடையாது. மதத்தைக் கூட காரண காரியத்தோடு அனுகுவது ஏப்படி என்பதற்கான முயற்சியை செய்பவன் தான். ஆனால் செக்யூலரிசம் என்ற பெயரில் மீடியாக்களும் அரசியல் வாதிகளும் இந்து மதத்தின் மீது ஏறி மிதிப்பதே வேலையாகக் கொண்டிருக்கும் போது அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் போகிறது. போலி செக்யூலர்களை விமர்சித்தால் கூட இவர்கள் மதவாதம்என்ற முத்திரை குத்தி விடுகிறார்கள். அது தான் வேதனை. உங்கள் பணி மேன்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்

  4. நீங்க இந்து வெறியரா இல்லையான்னு எனக்கு தெரியாது, ஆனா ஹேராம் நிச்சயமா ஒரு இந்து வெறியர் தான்! அவர் ப்ளாக்கிலேயே அது அப்பட்டமாக தெரியும்!

  5. எனக்கென்னவோ இது வீண்சர்ச்சை போல் தெரிகின்றது.

    நான் ஹூசைனின் ஓவியங்களைச் சொல்லவில்லை.

    🙂

  6. ஹுஷேன் இஸ்லாமிய தீவிரவாதியா கூட இருக்கலாம்!
    மதம்னு வந்துட்டா எல்லா மட்டையும் ஒரே குட்டையில ஊறுனது தான்!

    மாவோகன்ல குண்டு வச்ச இந்து தீவிரவாதி கோஷ்டி இந்தியாவுல தான் இருக்கு, இஸ்லாமியர்களை கொன்று குவித்த மோடி இன்னும் இந்தியாவுல தான் இருக்காரு, படம் வரைஞ்ச ஆளு மட்டும் இந்தியாவுல இருக்ககூடாதா!?

    அது என்ன மன்னிக்கமுடியாத குற்றம்!?
    உங்க சோத்துல மண்ணை அள்ளி போட்டுட்டாரா ஹுசேன்?

  7. நிர்வாணமா படம் வரைகிரவனும் கலை என்கிறான், சிநிமாகாரனும் கலை சேவை செய்கிறேன் என்கிறான். "கலை"ன்கிற வார்த்தைக்கே அசிங்கம்/ஆபாசம் என்று புது அர்த்தம் கொடுத்து விட்டார்கள் போலிருக்கிறது!

  8. //ஹீசைன் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்//

    இதை அண்ணன் கிரி தான் தன் பதிவில் எழுதியுள்ளார், மன்னிக்க முடியாத குற்றம் என்றால் சோத்தில் மண்ணள்லி போட்டாரா என்பது என் கேள்வி

  9. கிரி ,

    மிக சிறந்த பதிவு ,நாகரிகமாக உங்கள் கருத்தை பதிவு செய்திருகீர்கள் ,கருத்து சுதந்திரம்,பத்திரிகை சுதந்திரம் ,கலை சுதந்திரம் எல்லாமே இங்கே தலை கிழாக புரிந்து கொள்ளபடிருக்கு ,
    தோழர் வால்பையன் அவர்களுக்கு ,
    பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் ,நித்தியின் லீலைகளை காட்டிய சன் டிவி ,மற்றும் நக்கீரனும் ஹுசைனும் ஒன்று தான் என் கருத்து ,சன் மற்றும் நக்கீரனும் செய்தது சரியா? தவறா?தவறென்றால்
    ஹுசைனும் செய்ததும் தவறு தான் …..,

  10. /தோழர் வால்பையன் அவர்களுக்கு ,
    பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் ,நித்தியின் லீலைகளை காட்டிய சன் டிவி ,மற்றும் நக்கீரனும் ஹுசைனும் ஒன்று தான் என் கருத்து ,சன் மற்றும் நக்கீரனும் செய்தது சரியா? தவறா?தவறென்றால்
    ஹுசைனும் செய்ததும் தவறு தான் ….., //

    விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை!

    ஆனால் இல்லாத கடவுளுக்காக கண் முன் இருக்கும் மனிதர்கள் அடித்து கொள்வது பார்க்க நல்லாவா இருக்கு!?

    சன் டீவீ நித்தி விசயத்தில் என்ன செய்ததோ, அதையே இந்துத்துவா பதிவர்கள் இங்கே செய்து கொண்டிருக்கிறார்கள்!?

    சன் டீவீ செய்தது சரியென்றால், இவர்கள் செய்வதும் சரிதான்!

  11. //ஹூசேனை நேர்மையற்ற படைப்பை ஏன் அவர் விமர்சிக்க கூடாது?//

    தாராளமா விமர்சிக்கலாம்!

    எனக்கு கூட ஒரு விமர்சனம் உண்டு, சரஸ்வதியின் தனங்களை ரொம்ப சிறிதாக வரைந்து விட்டார், இன்னும் கொஞ்சம் பெரிய்தாக வரைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!

  12. தோழர் வால்பையன் ,
    நான் கேட்டது அவர்கள் செய்தது சரியா ? தவறா ? சரியென்றால் எல்லாம் இல்லை ,வெட்டு ஒன்று, துண்டு ஒன்று ,என்று பதிவு போடும்,உங்களுக்கு இந்த தள்ளாட்டம் தேவை இல்லை என்று நினைக்கிறேன் ,பதில் மட்டுமே !!!!!

  13. //தோழர் வால்பையன் ,
    நான் கேட்டது அவர்கள் செய்தது சரியா ? தவறா ? சரியென்றால் எல்லாம் இல்லை ,வெட்டு ஒன்று, துண்டு ஒன்று ,என்று பதிவு போடும்,உங்களுக்கு இந்த தள்ளாட்டம் தேவை இல்லை என்று நினைக்கிறேன் ,பதில் மட்டுமே !!!!!//

    சரியென்றும், தவறென்றும் இங்கே எதுவுமேயில்லை, ஆரோக்கியமானதா இல்லையா என்பதே சரியான கேள்வியாக இருக்கும்!

    இந்துதுவாவிற்க்கு நிச்சயமாக ஆரோக்கியமானது அல்ல அந்த ஓவியம், அதனால் தான் இத்தனை துள்ளல்!

  14. ஹூஸைன் அப்படி யொன்றும் புரட்சிக்காரன் அல்ல. விளம்பரப் பிரியந்தான்.அவன் வரைந்தது தவறு என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். ஜெயேந்திரன் மீது கூட ஒரு வழக்கு இருக்கிறது.இந்துமதத்தின் பிரதான மடத்திற்கு அவளால் அவமானம் என்று என் இந்துத்வ கும்பல் குதிக்கவில்லை.இதுதான் இந்துத்வா என்ற பெயரில் உள்ள நரித்தனம்.

  15. அப்புறம் மனம் நொந்த இந்துக்கல்தான் இந்தப் படங்களை மீண்டும் மீண்டும் பதிவுகளில் போட்டுக் காட்டுகிறார்கள். சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் என்று என் நினைக்கிறார்கள்? போய் சொல்லும்போது இப்படித்தான் தன்னம்பிக்கை குறையு.

  16. //வால்பையன் பொதுவானவர். ஹூசேன் என்ற படைப்பாளியின் பாரபட்ச அம்மணம் ஏன் என்பதுதான் அவர் நேர்மையின் மேல் வைக்கும் கேள்வியே? இந்த பாரபட்சம் இல்லாமல் நான் எனக்குப்பிடிக்கவில்லை அம்மனமாக வரைந்தேன் என்று சொல்லலாமே. அதை விடுத்து கலை என்று பாரபட்ச அம்மணத்துக்கு அவர் சொல்வதுதான் நரித்தனம். //

    வரிடம் பாரபட்சம் இருந்ததற்கான அடையாளமாக வரது ஓவியங்கள் மட்டுமே சாட்சியாக உள்லன, எங்கேயும் இஸ்லாத்திற்க்கு ஆதரவாக பேசிய்வது போலவோ, இஸ்லாத்திற்கு சொம்பு தூக்கியது போலவோ செய்திகள் இல்லை!

    அல்லாவுக்கும், சரஸ்வதிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டா எல்லாம் சரியாரும்னு நினைக்கீறேன்!

  17. நியாயமான பதிவு கிரி. இந்த சர்ச்சைகள் வந்த போது , என் மன உணர்வு கடுமையாக பாதிக்கப்பட்டது. எதோ ஒரு வலைதளத்தில் இவ்வாறு தான் ஹீசேன் படங்களை கலை கண்ணோடு பார்க்க சொல்லிருந்தர்கள். நானும் அடுத்து ஹீசேன் அவர் மத சம்பந்தப்பட்டவர்களை நிர்வாணமாக வரைவாரா என கேட்டு இருந்தேன். நான் இந்து மத வெறியன் இல்லை. ஆனால் என் மதத்தின் மீது மதிப்பு கொண்டவன். -பயபுள்ள.

  18. ஹூசைன் செய்ததை மன்னிக்க முடியாத குற்றம் என்று நான் சொல்லமாட்டேன்…மன்னிக்கக்கூடிய குற்றம் தான்..சாதி மாறி திருமணம் செய்து கொண்டாள் என்ற காரணத்துக்காக அவள் கணவனையும் அவன் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரையும் வெறித்தனமாகக் கொலை செய்த குற்றம், மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக மன்னிக்கக் கூடிய குற்றம் என்றால், ஹூசேன் செய்த குற்றமும் மன்னிக்கக் கூடியதுதான்.குஜராத்தில் கலவரம் என்ற பெயரில் முஸ்லிம்களை வேட்டையாடிய மோடியின் கூட்டம் மீண்டும் முதல்வராகும் அளவிற்கு மன்னிக்கக் கூடியது என்றால் ஹுசைனின் குற்றமும் மன்னிக்கக் கூடியது தான்.குடுகுடுப்பை சொல்வது போல ஹூசைன் வழக்கை நேர்மையாக எதிர் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவரை நேர்மையாக எதிர் கொள்ள விட்டிருப்பார்களா?இப்போது உள்துறை அமைச்சர் சொல்கிறார் நாங்கள் பாதுகாப்பு வழங்கியிருப்போம் என்று. அதை அவர் முதலிலேயே வழங்கியிருந்தால் அவர் நாட்டை விட்டுப் போயிருக்க மாட்டார்.குற்றவாளியாக வெளியேறினாரோ இல்லை நிரபராதியாக வெளியேறினாரோ, இந்தக் காரணத்துக்காக ஹூசைன் இந்தியாவை விட்டு வெளியேறி இன்னொரு நாட்டின் குடிமகனானது இந்திய குடியரசுக்கு அவமானம் தான்.தஸ்லிமா நஸ்ரின் வெளியேற்றப் பட்ட போதும், சல்மான் ருஷ்டி வெளியேற்றப் பட்ட போதும், அந்த நாடுகளை நாம் எப்படி கேவலமாகப் பார்த்தோமோ அதே போல நம் நாடு சர்வதேச அரங்கில் இப்போது பார்க்கப்படும் என்பது மறுக்க முடியாது உண்மை.

  19. பயபுள்ள ,
    // நான் இந்து மத வெறியன் இல்லை. ஆனால் என் மதத்தின் மீது மதிப்பு கொண்டவன்.//

    இதே தான் நானும் ,ஆனால் இதை இந்துத்துவம் என்று சொல்கிறார்கள் ,

    தோழர் வால்பையனுக்கு ,

    என் கேள்விக்கு பதிலே இல்லை ,ஆரோக்கியமானது தானா அல்ல விஷயம் ,அவர் காட்டிய பாரபட்சம் நியாயம்தான என்பதே என் கேள்வி

  20. //என் கேள்விக்கு பதிலே இல்லை ,ஆரோக்கியமானது தானா அல்ல விஷயம் ,அவர் காட்டிய பாரபட்சம் நியாயம்தான என்பதே என் கேள்வி//

    யாருக்கு நியாயமில்லையா!?
    யாருக்கு நியாயமாக தெரியவில்லையோ அவர்கள் தான் நாங்கள் நடுநிலைவாதிகள் என்று கூச்சல் போட்டு கொண்டிருக்கிறார்கள்!

    ஒருவர் நிர்வாணமாக வரைந்து விட்டதால் சரஸ்வதியின் கற்பு காணாம போச்சுன்னு என்ன அது கடவுள்!

    ஹுஸேன் வரைந்தது ஒரு ஓவியம், அது சரஸ்வதியா, சங்கடஸ்வரியான்னு யார் முடிவு செய்வது!?

  21. தோழரே ,

    இது நம்பிக்கை சார்ந்த விஷயம் .., ஒருவரின் நம்பிக்கையை விமர்சனம் செய்யும் போது ஏற்படும் வலி தான் இதுவும். கலை சுதந்திரம் என்ற போர்வையில் அவர்கள் செய்கிறார்கள் …,

    ///யாருக்கு நியாயமில்லையா!?
    யாருக்கு நியாயமாக தெரியவில்லையோ அவர்கள் தான் நாங்கள் நடுநிலைவாதிகள் என்று கூச்சல் போட்டு கொண்டிருக்கிறார்கள்!///

    நடுநிலைவாதிகலை எந்த அளவுகோலில் MATHIPIDIGIRIRGAL ,தவறு என்று கூச்சல் போடுகிரவர்களா ,அல்லது கடவுளை நம்பாதவர்களா ?? என்னக்கு தெரியவில்லை ,விளக்கவும்

  22. //நடுநிலைவாதிகலை எந்த அளவுகோலில் MATHIPIDIGIRIRGAL ,தவறு என்று கூச்சல் போடுகிரவர்களா ,அல்லது கடவுளை நம்பாதவர்களா ?? என்னக்கு தெரியவில்லை ,விளக்கவும் //

    கடவுள் மறுப்பாளன் எங்கெயிருந்து நடுநிலையில் வர்றான், அவன் தான் எல்லா மதவாதிகளுக்கும் எதிரியா போயிட்டானே,
    எனக்கு கடுவுள் நம்பிக்கை இருக்கு ஆனா மூட நம்பிக்கையில்லை என்று எவையெல்லாம் மூட நம்பிக்கை , எவையெல்லாம் நல்ல நம்பிக்கை என்று லிஸ்ட் வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் ந(டி)டுநிலைவாதிகள்!

  23. கிரி!நம்ம கடையில எம்.எஃப்.ஹுசைன் தேசதுறவறம் பலகாரம் சாப்பிட்டீங்களா?அல்லது இது போணியாகத கடைன்னு எஸ்கேப் ஆயிட்டீங்களா:)

    ஹுசைனின் ஓவியக் கோட்டுச் சிக்கல் எப்படி துவங்கி இப்ப இப்படியாச்சுன்னு விளக்கியிருக்கிறேன்.பிகாசோ படங்களுக்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அர்த்தம் சொல்வதுண்டுன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.ஹுசைன் ஓவியங்களும் கண்டிக்கத்தக்கது என்ற உங்கள் வாதத்திற்கு துணை புரிவதே ஓவியங்களுக்கான நீங்கள் கொடுத்துள்ள ஆங்கில விளக்கவுரைதான்.அந்த கோனார் நோட்ஸ் இல்லாமல் பார்த்தால் எனக்கு அவை ஓவியக்கோடுகள் மாதிரிதான் தெரிகிறது.

    ஹுசைன் துபாய் போனதற்கு அவர் மேல் 1250க்கும் மேலான வழக்குகள் பதிவாகியிருந்ததும் கூட காரணமாக இருக்கலாம்.தனக்கு 40 வயது மாதிரி இருந்திருந்தால் இந்த வழக்குகளை சந்துக்கும் மனவலிமை இருக்குமென்றும்,தள்ளாத வயதில் தள்ளி விட்டாலும் தன்னால் தடுக்க முடியாது என்ற காரணத்தினாலேயே இந்தியா திரும்பாத முடிவை எடுத்ததாகவும் சொல்லியிருந்தார்.தனது ஓவியங்கள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாயும் சொல்லியிருந்தார்.இப்ப விவாதம் கிளம்புவதன் பிரச்சினைல மறுபடியும் எனக்குத் தோன்றுவது "ஹுசைன் நீ ஏன் கத்தார் குடிமகன் ஆனாய்" என்பதே:)

    அப்புறம் கோயில்களில் இருக்கும் சிலைகள் கூட என்னைப் பொறுத்தவரையில் மதம் என்ற வட்டத்துக்குள் சிக்காது கலை என்ற பிரமிப்புக்குள் வந்து விடுகிறது.அந்த சிலைகளின் உழைப்புக்கு முன்னால் ஹுசைன் ஓவியங்கள் வெறும் காகிதக் கோடுகள் மட்டுமே

    பின்னூட்டம் எழுதும் போது அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு பழமொழி வந்து தொலைக்கிறது:)

    (குண்டு குண்டா பின்னூட்டம் போடக்கூடாதுன்னு நினைச்சாலும் பழக்க தோசம் விடமாட்டேங்குது…இட்லி துன்னுட்டு வாரேன்)

  24. தோழரே ,

    //கடவுள் மறுப்பாளன் எங்கெயிருந்து நடுநிலையில் வர்றான், //

    GOOD நீங்கள் நடுநிலைவாதி இல்லை .., அப்பொழுது நீங்கள் விமர்சிக்க தகுதியற்றவர் ஆகிறீகள்?

    BYE ,

    shankar

  25. //GOOD நீங்கள் நடுநிலைவாதி இல்லை .., அப்பொழுது நீங்கள் விமர்சிக்க தகுதியற்றவர் ஆகிறீகள்?//

    ஆனால் விவாதிக்க தகுதியுள்ளவன்!

    உங்களால் முடியலைன்னு நினைக்கிறேன்

    better luck next time!

  26. தோழரே ,

    //உங்களால் முடியலைன்னு நினைக்கிறேன்///

    அப்போ ,விமர்சனம் செய்ய தகுதில்லை என்று ஒத்து கொள்கீர்கள் ,விவாதியுங்கள் நான் வரவேற்கிறேன் ,என்னக்கு பதிவுலகம் மிகவும் புதுசு ,மனதில் உள்ளதை எழுத்தில் கொண்டு வர மிகவும் சிரமபடுபவன் ..,உங்களை போன்றவர்களுடன் விவாதிக்க மிகவும் யோசிக்க வேண்டியுள்ளது ,மனதில் உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் இருக்கிறது ஆனால் எழுத முடியவில்லை ..,

  27. நடுவு நிலைமை கருத்துக்கள் கூற அவன் எந்த மதம் , சாதி அடையாளமும் தேவை இல்லை .கொஞ்சம் மனிதம் தேவை அவ்வளவு தான் . சிறப்பாக கருத்துக்களை எடுத்து வைத்து உள்ளீர்கள்… மீண்டும் மீண்டும் அந்த படங்கள் தேவையா என்பதை அடுத்த பதிவர் யோசிக்கட்டும் . இங்கு வந்த டாக்டரின் கருத்துக்கள் அறிவு நிலையில் வந்துள்ளது ஆராதிக்கப்படுக்கறது … அவராலேயே சிலாகிக்கப்பட்டு , ஊக்கப்படுத்தப்பட்ட அதே எழுத்து பாணியில் எழுதிய நந்தினிக்கு , டாக்டரால் கொடுக்கப்பட்ட பின்னூட்டம் உணர்வு நிலையில் வந்தது. தவிர்க்க முடியாமல் உணர்வு நிலைகளே எதிர் வினைகளாக மாறியது. தாத்தாவின் துவேஷத்தையும் வன்மத்தையும் தயவு செய்து நியாய படுத்த வேண்டாம் என்பதே அங்கு அடி வரியாக இருந்தது.. தற்பொழுது டாக்டரால் போடப்பட்டுள்ள பதிவிற்கு ஆயிரம் நியாயங்களை என்னாலும் சொல்லமுடியும்

  28. Dr.Rudhran said…
    விமர்சிப்பது அவரவர் ரசனை சார்ந்த உரிமை. வருத்தப்படுவது உணர்வு பொறுத்தது. வெறி பிடித்து மிரட்டுவதுதான் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

    வெர்ங்கிருந்தோ வெட்டி ஒட்டி படம் போடலாம், இன்னும் கொஞ்சம் முயன்று ஒவ்வொன்றும் எந்த காலகட்டத்தில் வரையப் பட்டவை என்று சொன்னால் தெளிவாக இருக்கும்.
    //

    எந்தக்காலத்தில் வரைந்தாலும் ஹீசேன் என்ற படைப்பாளியின் நேர்மை இங்கே தெரிகிறது.

    ஹீசேன் நிர்வாணமாக வரைந்த இந்துக்கடவுள்கள் அல்லாத எந்தக்காலத்திலும் வரைந்த படங்களை ஹீசைனின் பகதர்கள் யாராவது தொகுத்து தாருங்கள்.

    மத அடிப்படைவாதம் இந்தியாவுக்கு ஆபத்தானது, போலி செக்யூலரிஸமும் ஆபத்தானதுதான். தஸ்லீமா,சல்மான்,டாவின்ஸிகோடு,ஹீசேன் ஆகிய அனைவரின் கருத்துரிமையையும் ஆதரித்தல் வேறு, நான் செக்யூலரிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு ஹீசேனை மட்டும் ஆதரித்தல் வேறு.

    என் பார்வைப்படி ஹீசேனிடன் நேர்மை இல்லை, அது எந்தக்காலத்தில் வரையப்பட்ட படமாக இருந்தாலும் சரி.

  29. அரசியல் காரணமாகத்தான் இந்தவிவாதமே எழுப்பட்டது ன்னு சொல்றாங்க என்றாலும்..அதுக்கு முன்பு அதைப்பற்றி அறியாத சாதாரணமக்களுக்கு அது தான் கொண்டு வந்து சேர்த்தது .

    \\எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் மூட நம்பிக்கை இல்லை// இப்படில்லாம் நடுநிலைமையில் இருக்கவிடமாட்டேங்கறாங்க..

  30. வால்பையன் on 10:09 AM, March 18, 2010 said…
    நீங்க இந்து வெறியரா இல்லையான்னு எனக்கு தெரியாது, ஆனா ஹேராம் நிச்சயமா ஒரு இந்து வெறியர் தான்! அவர் ப்ளாக்கிலேயே அது அப்பட்டமாக தெரியும்!
    //

    வால் அண்ணே, ஹாய்ராம் பத்தியா இந்தப்பதிவு?
    ஹூசேன் நேர்மையான ஓவியரா? அது பற்றி உங்கள் கருத்து என்ன? இல்லை அவரும் ஹாய்ராம் போன்று மதவெறியரா ?

  31. வால்பையன் on 10:32 AM, March 18, 2010 said…
    ஹுஷேன் இஸ்லாமிய தீவிரவாதியா கூட இருக்கலாம்!
    மதம்னு வந்துட்டா எல்லா மட்டையும் ஒரே குட்டையில ஊறுனது தான்!

    மாவோகன்ல குண்டு வச்ச இந்து தீவிரவாதி கோஷ்டி இந்தியாவுல தான் இருக்கு, இஸ்லாமியர்களை கொன்று குவித்த மோடி இன்னும் இந்தியாவுல தான் இருக்காரு, படம் வரைஞ்ச ஆளு மட்டும் இந்தியாவுல இருக்ககூடாதா!?

    அது என்ன மன்னிக்கமுடியாத குற்றம்!?
    உங்க சோத்துல மண்ணை அள்ளி போட்டுட்டாரா ஹுசேன்?
    //

    நீங்க சொல்றதுதான் சரி. ஏன்னா நீங்க போலி செக்யூலரிஸ்ட் கிடையாது.

    ஹீசைன் என்பவரை இந்தியாவை விட்டு நாடுகடத்தச் சொல்லியிருந்தால் கண்டிப்பாக தவறு. ஆனால் தான் நம்பும் சாமியை மட்டும் அம்மனமாக வரையும் ஒரு ஓவியனை கண்டிப்பது /வழக்கு போடுவது எந்த விதத்திலும் தவறு அல்ல. உங்கள் பார்வையில் கிரி என்ன ஹீசேனை நாடு கடத்த சொன்னாரா? இல்ல அவர் திங்கற சோத்துல மண்ணல்லி போட்டாரா? ஹூசேன் என்ற நேர்மையான படைப்பாளி நேர்மையாக வழக்கை சந்திதிந்திருக்கலாம்.

  32. வால்பையன் on 10:48 AM, March 18, 2010 said…
    //ஹீசைன் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்//

    இதை அண்ணன் கிரி தான் தன் பதிவில் எழுதியுள்ளார், மன்னிக்க முடியாத குற்றம் என்றால் சோத்தில் மண்ணள்லி போட்டாரா என்பது என் கேள்வி
    //
    அவர் ஒரு சாதாரண மனிதர், தன் கண்டனத்தை பதிவு செய்கிறார். அவர் நாடு கடத்தவோ, அவரை வன்முறையில் கையாளவோ மனதாலும் சொல்லியிருக்கமாட்டார். ஹூசேன் ஒரு நேர்மையற்ற படைப்பாளி என்பதை கொண்டுவருவது மட்டும்தான் இங்கே அவரது நோக்கம்.ஹூசேனை நேர்மையற்ற படைப்பை ஏன் அவர் விமர்சிக்க கூடாது?

  33. வால்பையன் on 10:59 AM, March 18, 2010 said…
    //ஹூசேனை நேர்மையற்ற படைப்பை ஏன் அவர் விமர்சிக்க கூடாது?//

    தாராளமா விமர்சிக்கலாம்!

    எனக்கு கூட ஒரு விமர்சனம் உண்டு, சரஸ்வதியின் தனங்களை ரொம்ப சிறிதாக வரைந்து விட்டார், இன்னும் கொஞ்சம் பெரிய்தாக வரைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்//

    வால்பையன் பொதுவானவர். ஹூசேன் என்ற படைப்பாளியின் பாரபட்ச அம்மணம் ஏன் என்பதுதான் அவர் நேர்மையின் மேல் வைக்கும் கேள்வியே? இந்த பாரபட்சம் இல்லாமல் நான் எனக்குப்பிடிக்கவில்லை அம்மனமாக வரைந்தேன் என்று சொல்லலாமே. அதை விடுத்து கலை என்று பாரபட்ச அம்மணத்துக்கு அவர் சொல்வதுதான் நரித்தனம்.

  34. இந்துதுவாவிற்க்கு நிச்சயமாக ஆரோக்கியமானது அல்ல அந்த ஓவியம், அதனால் தான் இத்தனை துள்ளல்!
    //

    இந்துத்துவத்தை எக்ஸ்போஸ் பண்ண வரைந்தேன் என்று சொல்லிவிட்டு வரைந்திருக்கலாம் ஹூசேன்.

  35. இந்த ஓவியம், இந்த சண்டையெல்லாம் தமிழ்மணம் தாண்டி இருக்கிறதா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது:)

    இந்துத்துவா அப்படின்னு ஒரு ஒருமித்த கருத்தை கொண்டு வரவே முடியாது.நான் இந்து என்று அடையாளப்படுத்திக்கொண்டாலும் என் மேல் இந்து மத விதிகள் என்று எதை புகுத்தினாலும் ஏற்கமாட்டேன்.

  36. ரொம்ப ரொம்ப நியாயமா, அருமையா உங்களுடைய வாதத்தை எடுத்து வைத்திருக்கிறீர்கள் !நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள வித்யாசம் மாதிரி தான் பகுத்தறிவுக்கும் மூடப் பகுத்தறிவுக்கும் உள்ள வித்யாசம். மூடப் பகுத்தறிவுவாதிகளின் கிலுகிலுப்பை விளையாட்டு தான் ஹூசைன் வாதம்!

  37. பின்னூட்டங்கள் காரசாரமா நல்லா போயிட்டுருக்கு… தொடரட்டும்…(மின்னஞ்சல் ஃபாலோஅப்புக்காக)

  38. @ ஹேராம்

    இந்துத்துவாவிற்கு ஆதரவு அளிப்பது வேறு, பிற மதங்களை சாடுவது வேறு, உங்கள் வலைப்பூவின் முகவரியை தான் நான் இங்கே தரணும்!
    என்னை பற்றி இங்கே எல்லோருக்கும் தெரியும்! உங்க ப்ரோபைலில் தான் ஒன்னையும் காணோம்!

  39. //வால்! அவருக்கு பிடித்த கடவுளர் படங்களையும், இந்து மத சம்பந்தமான அவருக்குப் பிடித்த சில நல்ல கட்டுரைகளையும் போட்டிருந்தால் இந்துமத வெறியரா?. விட்டால் சாமி கும்பிட்டால் கூட இந்து மத வெறியர் அப்படின்னு சொல்லுவீங்க போல!. இந்த போலி செக்கியூரிலிஸ இம்சைக்கு பயந்துதான் நாடே நடுங்கிக்கிட்டு இருக்கு!.//

    இது மட்டும் தான் நீங்க அவர் ப்ளாக்கில் பார்த்ததா!?

    இந்த நடுநிலைவாதிகள் தொல்லை தாங்க முடியலயே, யாராவது காப்பாத்த வாங்க!

  40. இதை கலை என்பவர்களே, உங்கள் குடும்பத்து பெண்களை நிர்வானபடுத்தி யாரவது வரைந்தாலும் அதை கலை என்பீர்களா?அதேபோலத்தால் இதுவும் , மதத்தை தங்களுக்கும் மேலாக நேசிப்பவர்களுக்கு இது தாங்கமுடியாத அபச்சாரமாகத்தான் இருக்கும். பெரும்பான்மையினரின் மனதை நோகடித்துத்தான் கலையை ரசிக்க வேண்டுமா? உங்களுக்கு கடவுள்மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், அதற்காக உலகின் அறுதிபெரும்பான்மையினர் நம்பும் கடவுள்களை (எந்த மதமாக இருந்தாலும் ) நிர்வாணமாக்கி கலையை வளர்ப்பது கிரி சொல்வதுபோல மன்னிக்க முடியாத குற்றமே.

    கடவுள் இல்லை என்று நீங்களும் நிரூபிக்க முடியாது, இருக்கின்றார் என்று நாங்களும் நிரூபிக்க முடியாது. இது நம்பிக்கை சம்பத்தப்பட்ட உணர்வு. உங்களுக்கு நம்பிக்கை இல்லாதிருக்கலாம் அதகாக நம்பிக்கை உள்ளவர்களின் உணர்வுகளை சாகடிகாதீர்கள்.

  41. //Dr.Rudhran on 11:18 AM, March 18, 2010 said…
    ஹூஸைன் அப்படி யொன்றும் புரட்சிக்காரன் அல்ல. விளம்பரப் பிரியந்தான்.
    அவன் வரைந்தது தவறு என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். ஜெயேந்திரன் மீது கூட ஒரு வழக்கு இருக்கிறது.
    இந்துமதத்தின் பிரதான மடத்திற்கு அவளால் அவமானம் என்று என் இந்துத்வ கும்பல் குதிக்கவில்லை.
    இதுதான் இந்துத்வா என்ற பெயரில் உள்ள நரித்தனம்.
    //

    மருத்துவர் ருத்ரன் ஐயா,

    ஜெயேந்திரனைப் பற்றி பல பதிவர்கள் தங்கள் விமர்சனக் கருத்துக்களை வைத்திருக்கிறார்கள்.

    கிரி அவர்களுக்குக் கூட ஜெயேந்திரன் என்கிற சுப்பிரமணி மீது விமர்சனம் இருக்கும்.

    ஆனால் அதுவல்ல இப்போது விவாதிக்கப் படுவது.

    பொறுப்பான விமர்சனத்தை வைத்திருக்கும் கிரியின் பதிவின் மீது உங்களுடைய கருத்தை தெரிவிக்காமல், ஜெயேந்திரனை இழுப்பது எதற்காக?

    கருணாநிதியை விமர்சிக்க வேண்டுமென்றால் ஜெயலலிதாவை விமர்சித்து விட்டு வந்து விமர்சியுங்கள் என்று சொல்லப்படும் பொது புத்தியைப் போன்றதா?

    இந்துத்துவா குப்பலுக்கான அளவுகோலை இவ்வளவு எளிதாக வகை(மிகை)ப்படுத்தி விட்டீர்களே!

  42. Robin said…
    நிர்வாணமா படம் வரைகிரவனும் கலை என்கிறான், சிநிமாகாரனும் கலை சேவை செய்கிறேன் என்கிறான். "கலை"ன்கிற வார்த்தைக்கே அசிங்கம்/ஆபாசம் என்று புது அர்த்தம் கொடுத்து விட்டார்கள் போலிருக்கிறது!
    //

    100% உண்மை!

  43. படங்களைத் தவிர்த்திருக்க வேண்டும்!

    தரவுகள் தேவைப்பட்டால் சுட்டி கொடுத்திருக்கலாம்!

  44. I would like to see muhammad nabi without clothing, with artistic eyes.Will MF Hussein draw that picture for me?oh, will Qatar accept him. then?

  45. என் அன்பு நண்பன் வால்பையன் என்னை மத வெறியன் என்று வாஞ்ஜையோடு அழைக்க காரணம் இருக்கிறது. வாலார் தனது வலைப்பூவில் இந்துக்கடவுளை மிகக் கொச்சையான வார்த்தையில் குறிப்பிட்டிருந்தார். அவர் பதிவில் அதைக் கடுமையாக (அவர் பானியிலேயே) எதிர்த்தவன் நான் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் என்ன அருமையான பதிவு, என்ன பகுத்தறிவு என்று புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அதனால் வாலுக்கு என் மீது கோபம் இருப்பது ஞாயமே. நான் மதவெறியன் என்று அவரால் குறிப்பிடப்படுவதும் பொது புத்தியின் வகையில் ஞாயமே. ஏனினில் இந்துவாக இருப்பவன் தன் மத உணர்வு அவமானப்படுத்தப்படும் போது எதிர்க்ககூடாது என்பது பொதுபுத்தி ஆயிற்றே!

    வாலின் அந்தப் பதிவுடைய சுட்டியை நண்பர்கள் விரும்பினால் அவரே தருவார். படித்துப் பார்த்துச் சொல்லுங்கள். வால் மற்றும் போலி பகுத்தறிவு வாதிகள் மற்றும் போலி செக்யூலர்களின் முன்னால் , இந்து மத துவேஷிகளின் முன்னாலும் என் போன்றவர்கள் மத வெறியர்களாக இருப்பது எதார்த்தமாக நிகழ்ந்துவிடக்கூடியதே. அதைத் தூண்டுவதும் அவர்களே.

    என்னை எப்படி அழைத்தாலும் சரி..வால்
    I love you my friend.

  46. ***வால்பையன் on 10:59 AM, March 18, 2010 said…

    //ஹூசேனை நேர்மையற்ற படைப்பை ஏன் அவர் விமர்சிக்க கூடாது?//

    தாராளமா விமர்சிக்கலாம்!

    எனக்கு கூட ஒரு விமர்சனம் உண்டு, சரஸ்வதியின் தனங்களை ரொம்ப சிறிதாக வரைந்து விட்டார், இன்னும் கொஞ்சம் பெரிய்தாக வரைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!***

    Vaal:

    You are really irritating here. You could contact him and ask him to to draw as you wish and publish that in your blog. Not only this but whatever modification you want to do. When it hurts someone else, why it is hard to understand for you?

  47. //ஹூசேனை நேர்மையற்ற படைப்பை ஏன் அவர் விமர்சிக்க கூடாது?//

    அவர் கண்னோட்டத்தில் அவர் விமர்சிக்கிறார், என் கண்ணோட்டட்தில் நான் விமர்ச்சிக்கிறேன்!

    என் ப்ளாக்கில் எழுதும் போதும் நிச்சயமாக விமர்சிப்பேன், எல்லாரும் ஆமாஞ்சாமி போடுறதுக்கு எதுக்கு ப்ளாக், மாற்று கண்ணோட்டமும் வேண்டும்!

  48. ***வால்பையன் on 10:57 PM, March 18, 2010 said…

    //ஹூசேனை நேர்மையற்ற படைப்பை ஏன் அவர் விமர்சிக்க கூடாது?//

    அவர் கண்னோட்டத்தில் அவர் விமர்சிக்கிறார், என் கண்ணோட்டட்தில் நான் விமர்ச்சிக்கிறேன்!

    என் ப்ளாக்கில் எழுதும் போதும் நிச்சயமாக விமர்சிப்பேன், எல்லாரும் ஆமாஞ்சாமி போடுறதுக்கு எதுக்கு ப்ளாக், மாற்று கண்ணோட்டமும் வேண்டும்!****

    இது மாற்றுக்கண்ணோட்டமா இல்லை விதண்டாவாதமா? :)))

  49. //இது மாற்றுக்கண்ணோட்டமா இல்லை விதண்டாவாதமா? //

    அவரவர் கண்ணோட்டத்தை பொறுத்து!

  50. ***குடுகுடுப்பை on 10:17 AM, March 18, 2010 said…

    வால்பையன் on 10:09 AM, March 18, 2010 said…
    நீங்க இந்து வெறியரா இல்லையான்னு எனக்கு தெரியாது, ஆனா ஹேராம் நிச்சயமா ஒரு இந்து வெறியர் தான்! அவர் ப்ளாக்கிலேயே அது அப்பட்டமாக தெரியும்!
    //

    வால் அண்ணே, ஹாய்ராம் பத்தியா இந்தப்பதிவு?
    ஹூசேன் நேர்மையான ஓவியரா? அது பற்றி உங்கள் கருத்து என்ன? இல்லை அவரும் ஹாய்ராம் போன்று மதவெறியரா ?***

    I am sure he is getting carried away by "Heyram" and anothe moron calling himself as "parayan".

    Vaal sit down and THINK!

    I dont think there is anything wrong in this "concern"! 🙂

  51. நான் உட்கார்ந்துகிட்டு தான் இருக்கேன் வருண்!

    ஹுஸைனை பற்றி எழுதும் பதிவில் தற்காப்புக்காக நான் இந்த்துவா வெறியன் அல்ல என்று தனக்கு தானே சர்டிபிக்கேட் கொடுத்து கொள்வது, இந்த படங்களை அண்ணன் ஹேராம் வலைதளத்தில் எடுத்தேன் என்பதே அந்த கமெண்ட் போட வைத்தது!

    அனைத்தும் இந்த பதிவிற்குண்டான எதிர்வினைகளே! நான் எங்கேயும் ரசினிகாந்தின் மேட்டிமை தனத்தை பற்றி இங்கே பேசவில்லை!

  52. ***வால்பையன் said…

    நான் உட்கார்ந்துகிட்டு தான் இருக்கேன் வருண்!

    ஹுஸைனை பற்றி எழுதும் பதிவில் தற்காப்புக்காக நான் இந்த்துவா வெறியன் அல்ல என்று தனக்கு தானே சர்டிபிக்கேட் கொடுத்து கொள்வது, இந்த படங்களை அண்ணன் ஹேராம் வலைதளத்தில் எடுத்தேன் என்பதே அந்த கமெண்ட் போட வைத்தது!

    அனைத்தும் இந்த பதிவிற்குண்டான எதிர்வினைகளே! நான் எங்கேயும் ரசினிகாந்தின் மேட்டிமை தனத்தை பற்றி இங்கே பேசவில்லை!

    11:14 PM, March 18, 2010***

    Good luck vaal! You seem to know what you are doing! Pardon my ignorance if you can! 🙂

  53. //உங்கள் வலைப்பூவின் முகவரியை தான் நான் இங்கே தரணும்!//

    தந்திருக்கிறேன் நண்பா! முந்தைய கமெண்டில் பாருங்கள். ப்ரொஃபைல் தெரிவதில்லை என்பதாலேயே ப்ளாக் முகவரியை எழுதுவது வழக்கமாகிவிட்டது. இந்த தளத்திலிருந்தும் என் தளத்திற்கு இன்று மூவர் வந்திருக்கிறார்கள் ஏற்கனவே!. தங்கள் அன்பிற்கு நன்றி.

  54. //வால்பையன் on 10:09 AM, March 18, 2010 said…
    நீங்க இந்து வெறியரா இல்லையான்னு எனக்கு தெரியாது, ஆனா ஹேராம் நிச்சயமா ஒரு இந்து வெறியர் தான்! அவர் ப்ளாக்கிலேயே அது அப்பட்டமாக தெரியும்!//

    வால்! அவருக்கு பிடித்த கடவுளர் படங்களையும், இந்து மத சம்பந்தமான அவருக்குப் பிடித்த சில நல்ல கட்டுரைகளையும் போட்டிருந்தால் இந்துமத வெறியரா?. விட்டால் சாமி கும்பிட்டால் கூட இந்து மத வெறியர் அப்படின்னு சொல்லுவீங்க போல!. இந்த போலி செக்கியூரிலிஸ இம்சைக்கு பயந்துதான் நாடே நடுங்கிக்கிட்டு இருக்கு!.

    கிரி உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது. வழக்கம் போல மரியாதையான கட்டுரை. 🙂

  55. கிரி உங்கள் கருத்து சரி.ஆனாலும் நீங்க ரொம்ப சாப்ட்,ஹுசைன் போன்ற நாய்கள் நாட்டுக்கு தேவை இல்லை. நாலு பேர் திரும்பி பாக்கணும்கிரதுக்காக மதசார்பின்மை பத்தி பேசுரவங்களையும் தூக்கி அரபிக்கடல்ல போட்டா நாடு நல்லா இருக்கும்.

  56. கிரி,

    சர்சையில் இருந்து ஒதுங்கி இருப்பிங்க, என்ன ஆச்சு ? இப்பதான் வழிக்கு வந்தீர்களா ?

    🙂

  57. ருத்ரன் சார் ,
    நன்றி சார் ,என்னக்கு English லேசா தான் சார் வரும் ,யோசிக்கறது எல்லாமே தமிழ்ல யோசிச்சிட்டு ,அதை ஆங்கிலத்துல கொண்டு வரதுக்கு சிரமமா இர்ருக்கு சார் ,I will try Sir ,

    தோழர் வால் பயனுக்கு ,

    //better luck next time!//
    என்னக்கு அதிர்ஷதில் எல்லாம் நம்பிக்கை இல்லை தோழரே ,அதிர்ஷ்டம் என்று இருப்பதாய் நினைகீரகள?,மேலும் என் நிலை இது தான் ,பல கோடி பேர் மதிக்கும் ஒரு விஷயத்தையோ ,செய்யலையோ அவமதிக்கும் (கவனிக்க- விமர்சிக்க ,விவாதிக்க அல்ல ) படைப்பு ,படைப்பே அல்ல என்பது என் தாழ்மையான கருத்து ,இதே அளவில் தான் ,வர்ணாசிரமத்தை சொல்லும் புராணத்தையும் ,பெண்ணை அவமதிக்கும் புராணத்தையும் நான் nirthatchanyamai othukuvaen karanam manithanai manithanaai mathikka theriyatha ethaiyum ennal ettru kollamudiyavillai ennal .,,,athu matham ,kadavul,puranam,ethuvayirunthalum sari ..,

  58. //என்னக்கு அதிர்ஷதில் எல்லாம் நம்பிக்கை இல்லை தோழரே ,//

    போன ஐபிஎல்லில் ஸ்ரீசாந்த் ஹர்பஜனிடம் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சொல்லி அறை வாங்கிய நியாபகம் வருகிறது, எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை!

    மதம் என்றாலே அதில் பெண்ணடிமை தான் மிஞ்சும், எந்த மதத்தில் பெண்ணடிமைதனம் இல்லை என்று நினைக்கிறீர்கள்!?

  59. என்னோட எதிர்ப்பை நான் பதிவு செய்கிறேன். ஹீசைன் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் அதை கலைக் கண்ணோடும் பார்க்க முடியாது சாதாரண பொதுமக்களின் பார்வையில் தான் பார்க்க முடியும்.

  60. தோழரே ,
    எவற்றிலுமே இல்லை !!மனிதாபிமனாதிற்கு ஆண் ,பெண் என்றல்லாம் பிரித்து பார்க்க தெரியாது எல்லோருமே சக மனிதர்கள்

  61. Whoever supports hussian please checkout his paintings.Whenever he draws Hindu gods or hindu humans they are naked. for ex: durga, lakshmi, saraswati, shri parvathi,even naked hanuman, sita naked on lap of naked ravana, naked hindus, etc.But now comes the contradiction, whenever he draws muslim rulers, muslim ladies, mother therasa, prophet's daughter fatima, his own mother, daughter they are all well clothed. In particular, when he draws a muslim ruler, he draws a naked hindu behind.This shows Hussain's perversion and hypocrisy. According to Hussain ' s own statement nudity in art depicts purity and is in fact an honour ! But this purity of art is used only against hindus & hindu gods.Can he draw naked mary, jesus, prophet, etc and enter any country and awarded the citizenship?Will any muslim or christian talk the same tone if his paintings depict the same against their gods?

  62. நல்ல நாகரீகமான எதிர்ப்பு கிரி…எனக்கு ஒன்றுமட்டும் புரியவில்லை… நிறைய பேர் கலைக் கண், கொலைக் கண் என்று பம்மாத்து பண்ணி எழுதி அந்த வக்கிரம் பிடித்த ஓவியனுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். முதல் விஷயம்.. முக்கியமான விஷயம்-கலை என்பதே அதனை ஆக்குகிறவனுக்கானதல்ல… நுகர்பவனுக்கானது.மக்களுக்காகத்தான் கலை வடிவங்கள். தன் வக்கிரத்தை கலையாக்கி அதை தானே பார்த்து ரசித்துக் கொள்ளும் மனநோயாளிகள் சமூகத்துக்குத் தேவையில்லை.பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை குத்திப் பார்ப்பதும் இன்ஸ்டன்ட் விளம்பரமும்தான் இந்த ஓவியங்களின் உடனடி நோக்கமாகத் தெரிகிறது. மாதிரி தீக்ஷித், பாஞ்சாலி, சரஸ்வதி – விநாயகன் என எளிதில் தன்னை சர்ச்சை வெளிச்சத்துக்கு கொண்டு செல்லும் ஆபத்தில்லாத வடிவங்களேஹூஸைனுக்கு வேண்டும். நபிகளை நிர்வாணப்படுத்தி கல்லடி பட அவருக்குத் தெம்பில்லை.சாலையில் அழகழகாக கடவுள்களை வரைந்து ஐந்துக்கும் பத்துக்கும் கையேந்துபவனை கண்டு கொள்வதேயில்லை… அதே கடவுள்களை அம்மணமாக்கி, குற்றங்களிலிருந்து தப்பியோடும் வக்கிர கலைஞனுக்கு எத்தனை உசத்தியான விளம்பரம், ஆடம்பரம்… அறிவு ஜீவித்தனம், பகுத்தறிவு எனும் பெயரில் இந்த மாதிரி கிறுக்கர்களை ஆதரிக்கும் கூட்டமும் ஹுஸைனுடன் போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! -வினோ

  63. நான் வினோவின் கருத்தை ஆதரிக்கிறேன். "அறிவு ஜீவித்தனம், பகுத்தறிவு எனும் பெயரில் இந்த மாதிரி கிறுக்கர்களை ஆதரிக்கும் கூட்டமும் ஹுஸைனுடன் போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!" – நிதர்சனமான உண்மை. – பயபுள்ள.

  64. நல்ல பதிவு.//பதிவுலகில் ஹீசைன் செய்ததை பற்றி ஒரு சிலரே விமர்சித்து இருக்கிறார்கள் விமர்சிக்க பலருக்கு சங்கடம்//இவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்? இவர்களெல்லாம் "செக்யூலரிஸ்டுகள்".முன்பொருமுறை சதாமை அவர் நிர்வாணமாக வரைந்தார். காரணம் கேட்ட போது அவர் கூறியது, "ஒருவரை அதிகமாக கேவலப்படுத்துவது என்பது அவரை நிர்வாணமாக வரைவது தான். அதனால் தான் இப்படி வரைந்தேன்" என்றார். மற்றும், நபிகளாரின் திருமகள், அன்னையர் திலகம் பாத்திமாவை எவ்வளவு மட்டும் கண்ணியமா வரைஞ்சார் ஹுசைன்?//ஹீசைன் என்பவரை இந்தியாவை விட்டு நாடுகடத்தச் சொல்லியிருந்தால் கண்டிப்பாக தவறு. ஆனால் தான் நம்பும் சாமியை மட்டும் அம்மனமாக வரையும் ஒரு ஓவியனை கண்டிப்பது /வழக்கு போடுவது எந்த விதத்திலும் தவறு அல்ல. உங்கள் பார்வையில் கிரி என்ன ஹீசேனை நாடு கடத்த சொன்னாரா? இல்ல அவர் திங்கற சோத்துல மண்ணல்லி போட்டாரா? ஹூசேன் என்ற நேர்மையான படைப்பாளி நேர்மையாக வழக்கை சந்திதிந்திருக்கலாம்.//அட! இது ஒரு ஸ்டன்ட். அதாவது, இந்தியாவில் இருகும் இந்து வெறியர்கள் அவரை நாட்டை விட்டே ஓட ஓட விரட்டிவிட்டார்கள் என்றும், ஒரு இஸ்லாமிய தேசம் தான் மற்றொரு இஸ்லாமியருக்கு அடைக்கலம் கொடுக்கிறது போலவும் காட்ட ஒரு கதைக்களம் தேவை படுகிறது. அவ்வளவு தான்.தஸ்லீமாவுக்கும், ருஷ்டிக்கும் இதே போல அடைக்கலம் கொடுக்கப்படும் என்று எல்லாம் வல்ல அல்லாவை வேண்டுவோம்…//சரியென்றும், தவறென்றும் இங்கே எதுவுமேயில்லை, ஆரோக்கியமானதா இல்லையா என்பதே சரியான கேள்வியாக இருக்கும்!இந்துதுவாவிற்க்கு நிச்சயமாக ஆரோக்கியமானது அல்ல அந்த ஓவியம், அதனால் தான் இத்தனை துள்ளல்!//அதானே! கடைசி வரை பதில் மட்டும் வராதே…//நானும் அடுத்து ஹீசேன் அவர் மத சம்பந்தப்பட்டவர்களை நிர்வாணமாக வரைவாரா என கேட்டு இருந்தேன். நான் இந்து மத வெறியன் இல்லை. ஆனால் என் மதத்தின் மீது மதிப்பு கொண்டவன்.////இதே தான் நானும் ,ஆனால் இதை இந்துத்துவம் என்று சொல்கிறார்கள்//அட நீங்க வேற பயபுள்ள. இவனுங்களோட பாலிசியே "யூ ஆர் எய்தர் வித் மீ, ஆர் அகெய்ன்ஸ்ட் மீ". இவர்களுக்கு ஆகாதவர்களையெல்லாம் முத்திரை குத்துவஹு தான் இவர்களின் தொன்று தொட்ட வழக்கம். நீங்க சாதாரனமா இந்து மதத்துக்கு சப்போர்ட் பன்னினாலும் நீங்களெல்லாம் இந்துத்வா கோஷ்டி தான். அது தான் உங்க "தமிழ்மண" தலையெழுத்து.//என் அன்பு நண்பன் வால்பையன் என்னை மத வெறியன் என்று வாஞ்ஜையோடு அழைக்க காரணம் இருக்கிறது. வாலார் தனது வலைப்பூவில் இந்துக்கடவுளை மிகக் கொச்சையான வார்த்தையில் குறிப்பிட்டிருந்தார். அவர் பதிவில் அதைக் கடுமையாக (அவர் பானியிலேயே) எதிர்த்தவன் நான் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் என்ன அருமையான பதிவு, என்ன பகுத்தறிவு என்று புகழ்ந்து கொண்டிருந்தார்கள். //தமிழமணத்துக்கு நீங்க புதுசா? ;)//வால் மற்றும் போலி பகுத்தறிவு வாதிகள் மற்றும் போலி செக்யூலர்களின் முன்னால் , இந்து மத துவேஷிகளின் முன்னாலும் என் போன்றவர்கள் மத வெறியர்களாக இருப்பது எதார்த்தமாக நிகழ்ந்துவிடக்கூடியதே.//சேம் ப்ளட்.//You are really irritating here. You could contact him and ask him to to draw as you wish and publish that in your blog. Not only this but whatever modification you want to do. When it hurts someone else, why it is hard to understand for you?//அதான் (அறுந்த) வால் 😉

  65. nalla pathivu giri.. naan unga team than giri intha visayathula (yeppavume than:))..

    romba aarvama intha comments section la unga bathil la yethir pakurenn.. unga usual comments yelarukum irukum la…

  66. //நட்புடன் ஜமால் said… என்னை பொறுத்தமட்டில் சரியான பார்வை கிரி.கலை தானென்று எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது வரவேற்கதக்கது அல்ல.கத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்//Well Said Jamal….

  67. மிகுந்த சர்ச்சைக்குள்ளாகும் விஷயங்களில் இதுவும் ஒன்று…

    கிரியின் விமர்சனம் நன்றாக உள்ளது.

    யாரிடமும் எந்த துவேஷமும் கொள்ள வேண்டாம்… பகைமை பாராட்ட வேண்டாம்…

    இறை நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும்… அதை நம்பு, இதை நம்பாதே என்று யாரிடமும் புகுத்த முடியாது…

    இறை நம்பிக்கை உள்ளவர்கள் இறையை நம்பாதவர்கள் சொல்வதை கேட்க வேண்டாம்… அதே நம்பிக்கை இல்லாதோர்க்கும் பொருந்தும்…

  68. Giri, I am fully in agreement with what you say. Hussain did portray Hindu Gods in an offending manner. That he is now very old and that he is an ace artist will not mitigate his wrong-doing. Being a secularist does not mean accepting indignities towards our religion or our Gods. The current status of having to be away from his mother land at his very ripe age unfortunately has been brought upon by himself.

  69. prachana ennana….avan hindu kadavulai mattum yen varaigiraar.. jesus, mary christuva kadavulai varanindal.. avar europe, US, UK pakkam poga mudiyathu…hindu ilichavayannu avar nenaikirar pola.. ennamo ponga giri onnum solla mudiyala..

  70. ஹுசைன் அவன் செய்தது ஆரம்பம்…….. அவனை கல்லால் அடித்தே கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் கேட்பதற்கு யாரும் இல்லை என்று எதுவும் செய்வார்கள் இவனைப் போன்றவர்கள்.

  71. ஹுசைனின் படங்களை கலைக்கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்களின் குடும்ப அங்கத்தவர்களை நானும் கலைக்கண்ணோடு வரைகிறேன். சேர்ந்து ரசிப்போமா???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!