சாரு குமுதம் ஜீவி

22
சாரு குமுதம் ஜீவி

ணையத்தில் நித்தியானந்தருக்கு அடுத்தப் படியாக அதிகம் “அடிபடுவது” எழுத்தாளர் சாருவாகத்தான் இருக்க முடியும். Image Credit

கடவுள் உயரத்திற்கு அவரை உயர்த்தி நித்தியானந்தர் புராணமாகப் பாடிக்கொண்டு இருந்தவர் தற்போது நித்தியானந்தர் லீலைகள் அம்பலமானவுடன் அனைவரிடமும் எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டார்.

சாரு குமுதம் ஜீவி

சாரு தனது நம்பிக்கையைத் தன்னுடனே வைத்து இருந்தால் அவருக்கு இவ்வளவு பிரச்சனைகள் வந்து இருக்காது, தனது தளத்தில் நித்தியானந்தர் படத்தை எல்லாம் வைத்து அவரது புகழ் பாடியது தான் அவருக்கு வில்லங்கமாகி விட்டது.

நித்தியானந்தர் பிரச்சனை ஆனவுடன் இதுவரை தான் ஏமாந்ததும் இல்லாமல் தன் எழுத்துக்களைப் படிக்கும் வாசகர்களுக்கு ஒரு தவறான வழிகாட்டியாக இருந்ததற்கு ஒரு மன்னிப்பு கேட்டு இருந்தால் கூடப் பரவாயில்லை.

அதைச் செய்யாமல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல அவரை விமர்சிப்பவர்களுக்கு வசதியாக மனம்போன போக்கில் எழுதி வருகிறார்.

இதனால் இணையம் முழுவதும் சாருவை சாறு பிழிந்து விட்டார்கள்.

பொதுவில் என்று வந்து விட்டாலே இதைப்போல விமர்சனங்களையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும் வேறு வழி இல்லை. இவர் இது போல எழுதுவதால் வரும் விமர்சனங்களும் மோசமாகிக்கொண்டே வருகிறது.

இவர் கூறிக்கொண்டு இருக்கும் சில கருத்துகள்

ஜீவிக்கு அளித்த பேட்டி

பணம் சம்பாரிக்கணும்னா நான் எப்படி வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன். எவ்வளவு வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன்.

சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு பல தடவை அவனுக்கு நான்தான் தண்டம் அழுதிருக்கேன்.

புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்குப் பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு. இதுக்கிடையில கும்ப மேளாவுக்குப் போறதுக்காக என் மனைவி ஒரு லட்ச ரூபாயை அவன்கிட்ட கொடுத்திருக்கா.

அதையெல்லாம் திருப்பித் தரச் சொல்லித்தான் அவன் மேல நான் வழக்குப் போட போறேன். மத்தபடி சில மாமா பயலுக கிளப்பிவிடுற கதைக்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்

இவர் என்னிடம் பணமே இல்லை என்று தனது தளத்தில் புலம்பிக்கொண்டு இருப்பார்.

இவரது தளத்தைப் படிப்பவர்கள் இவர் மேற்கூறியதை படித்தால் நாக்கை புடுங்குற மாதிரி கேட்கமாட்டார்களா(கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்).

விகடனில் பேட்டி

அந்தக் காட்சி களைப் பார்த்துப் பார்த்து நான் ரொம்பக் கடுப்பில இருக்கேன். ‘ஏன் நீ பெரிய யோக்கியனா’ன்னு நீங்க கேட்கலாம்.

அவன் பண்ணக்கூடாத அந்தத் தப்பை நான் பண்ணலாம். ஏன்னா ‘நானொரு உமனைசர்’னு பகிரங்கமாவே சொல்லி இருக்கேன்.

ஆனா நீ… பிரமச்சர்யத்தைப் போதிச்சிட்டு நடிகையோடு கும்மாளம் போடுறியே?

விகடனின் பேட்டிக்கு பிறகு தனது தளத்தில் இப்படிக் கூறி இருக்கிறார்

அவந்திகா (சாருவின் மனைவி) சாமியாரின் ஆசிரமத்தில் மாட்டிக் கொண்டிருந்த சமயத்தில் மிகுந்த பதற்றத்தில் இருந்த போது கொடுத்த பேட்டி. அதில் என்னை வுமனைசர் என்று சொல்லியிருக்கிறேன். மன்னிக்கவும்.

அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றே எனக்குத் தெரியாது. பெண்களை நேசிப்பவன் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.

எழுத்தில் இருக்கும் வசதி பேச்சில் இல்லை.

எழுத்தில் தவறான வார்த்தைகள் விழுந்தால் அடித்து மாற்றி விடலாம். ஆனால், பேச்சில் பேசியது பேசியதுதான். அப்படி விழுந்த வார்த்தை அது

வுமனைசர்

வுமனைசர் என்பது அர்த்தம் புரியாத வார்த்தையா!

ஆங்கிலம் அரைகுறையா தெரிந்தவர் கூட இதற்கான முழு அர்த்தமும் புரியவில்லை என்றாலும் இதைப்போலக் கூறமாட்டார்.

ஆனால், பல ஆங்கில நாவல்களைப் படிக்கும், மொழி பெயர்க்கும், எடுத்துக்காட்டாகக் கூறி வரும் சாரு இதற்கு அர்த்தம் சரியாகத் தெரியாமல் கூறி விட்டேன் என்கிறார்.

சரி! இது கூட அவரது தனிப்பட்ட விஷயம் பதட்டத்தில் கூடக் கூறி இருக்கலாம். ஆனால் பல விசயங்களை இன்னும் பதட்டத்திலேயே எழுதிக்கொண்டு கூறிக்கொண்டு இருக்கிறார்.

இப்படி இவர் எடுத்துக்கொடுத்துக்கொண்டு இருந்தால் இவரை விமர்சிப்பவர்கள் இன்னும் அதிகம் தான் போட்டுத் தாக்குவார்கள்.

குமுதத்துடன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பிரச்சனை ஏற்பட்ட போது குமுதம் இவரை இன்டர்நெட் பிச்சைக்காரன் என்றும் அதற்கு இவர் குமுதத்தை மஞ்சள் பத்திரிகை என்றும் தாறுமாறாகத் திட்டிக்கொண்டார்கள்.

குமுதம் ரிப்போர்ட்டர்

தற்போது அதே குழுமத்தின் ஒரு பகுதியான குமுதம் ரிப்போர்ட்டருக்கு நித்தியானந்தர் பற்றித் தொடர் எழுதப்போவதாக அறிவித்துள்ளார்.

ஒருமுறை சண்டை போட்டால் மறுபடியும் சமாதானம் ஆகக்கூடாதா!

வாழ் நாள் முழுவதும் விரோதியாகவே தான் இருக்க வேண்டுமா! என்ற நியாயமான கேள்வி எழாமல் இல்லை ஆனால், சமாதானம் ஆகும் விஷயம் தான் விவகாரமாக உள்ளது.

கதவைத் திற காற்று வரட்டும்

விகடனை தொடர்ந்து படிப்பவர்களுக்குச் சுகபோதானந்தாவை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை, அவரது மனசே ரிலேக்ஸ்! கட்டுரைகள் ரொம்பப் பிரபலம்.

விகடன் வெளியிட்ட புத்தகங்களில் இந்தப் புத்தகத்திற்குக் குறிப்பிடத்தக்க விற்பனை உண்டு, மறுபதிப்புகள் பலமுறை வந்துள்ளது.

விகடனுக்கு ஒரு சுகபோதானந்தா என்று இருப்பது போலத் தனக்கு ஒருவர் வேண்டும் என்று குமுதம் நினைத்ததோ என்னவோ!

அதற்கு அவர்கள் பிரபலபடுத்தியது தான் இந்த நித்தியானந்தர். குமுதத்தில் “கதவைத் திற காற்று வரட்டும்” என்று தலைப்பில் பல கட்டுரைகளை எழுதினார்.

குமுதம் விகடன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் தமிழக மக்களிடையே தவிர்க்க முடியாத புத்தகங்களாகவே உள்ளன.

இந்த இரு புத்தகங்களையும் சிலர் கண்டபடி விமர்சித்தாலும் கூடப் படித்துக்கொண்டு தான் உள்ளார்கள்.

விலைக்கு வாங்கிப் படிக்காதவர்கள் கூட இலவசமாகப் படிக்க வாய்ப்பு கிடைத்தால் படிக்க நினைப்பார்கள்.

தார்மீகப் பொறுப்பு

இப்படிப் பலர் படிக்கும் புத்தகங்களைக் கொடுக்கும் இவர்கள் இருவருக்கும் என்ன வேண்டும் என்றாலும் அவர்கள் விருப்பம் போலக் கொடுக்க உரிமை இருக்கிறது என்றாலும், தார்மீகப் பொறுப்பு அதாவது தன்னை நம்பி படிக்கும் வாசகர்களைத் தவறான வழிக்குக் கொண்டு சென்று விடக் கூடாது என்ற பொறுப்பு உள்ளது.

ஆனால் குமுதம் தன்னுடன் புலனாய்வு பத்திரிக்கையான ரிப்போர்ட்டரை வைத்துக்கொண்டு இப்படிப் படு கேவலமாக ஏமாந்துள்ளது!!

குமுதம் என்ற பெரிய பத்திரிகை பரிந்துரைக்கிறதே என்று எத்தனை பேர் இந்த நித்தியானந்தரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து இருப்பார்கள்.

இதில் எந்த ஒரு சிறு வருத்தமோ கூச்சமோ இல்லாமல் நித்தியானந்தர் மாட்டியவுடன் அவர் ரஞ்சிதாவுடன் இருந்த வீடியோவை பலவித தலைப்புகளில் தனது தளத்தில் ஓடவிட்டுக்கொண்டு இருந்தது.

இது எப்படி இருக்கிறது தெரியுமா!

மாட்டிக்கொண்ட திருடன் தப்பிக்கப் பொது மக்களோடு சேர்ந்து அவனும் கூட்டத்தோடு கூட்டமாகத் திருடனை பிடிங்க திருடனை பிடிங்க என்று கூறுவதைப் போல் உள்ளது.

குறைந்த பட்சம் தன் வாசகர்களைத் தவறான ஒருவரை நல்லவர் என்று கைகாட்டியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டாமா!

நித்தியானந்தர் “லீலைகள்”

தற்போது நாங்களும் அனைவரையும் போல ஏமாந்து விட்டோம் அதனால் நித்யானந்தர் தொடரை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

தொடர்ந்தாலும் இனி யார் படிக்கப் போகிறார்கள்? இனி நித்தியானந்தர் கூறுவதற்கு என்ன மதிப்பிருக்கும்!

ஆனால், அடுத்ததாகத் தற்போதைய பரபரப்பான நித்தியானந்தர் “லீலைகள்” பற்றிச் சாருவுடன் கைகோர்த்து அடுத்தத் தொடர் ஆரம்பித்து விட்டார்கள்!

குமுதம் தனது வாசகர்களைக் கேனையர்கள் என்றே முடிவு செய்து விட்டார்கள்.

எதை எழுதினாலும் படிப்பார்கள் எதைக் கூறினாலும் கேட்பார்கள் அப்புறம் என்ன கவலை! அப்போதைய பரபரப்பு என்னவோ அது தான் செய்தி!

அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் தன் பெயர் நாறி இருந்தாலும் சரி! என்னய்யா பிழைப்பு இது, கேவலமாக இல்லையா.

எப்படிக் கூச்சமே இல்லாமல் இதைப்போலச் செய்ய முடிகிறது.

சாரு குமுதம் ஜீவி

சாருவின் பேட்டியை ஜீவியில் வெளியிட்ட போது “முற்போக்கு எண்ணம் கொண்டவரும் பெரியாரிஸ்ட்டுமான எழுத்தாளர் சாருவை” என்று அவருக்கு முன்னுரை கொடுத்துள்ளார்கள்.

சாமியார் பின் செல்லும் சாருவை எப்படிப் பெரியாரிஸ்ட் என்று கூறினார்கள் என்று புரியவில்லை.

தற்போது இதற்காக ஜீவி தலையும் கொஞ்சம் உருண்டு கொண்டுள்ளது. வரும் நாளில் ஜீவியிலும் நித்தியானந்தர் பற்றிய தொடர் வரலாம்.

நித்தியானந்தர் மாட்டிக்கொண்டு விழிக்கிறார், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று வலிக்காத மாதிரியே பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

அவரை வைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளிப்படையாகக் குமுதம் நக்கீரன் சன் டிவி போன்ற ஊடகங்கள் சம்பாதித்துக்கொண்டுள்ளன.

நித்தியானந்தர் பிரச்சனை மூலம் சன் டிவி ஷேர் உயர்ந்து விட்டது, TRP ரேட்டிங் கூடி விட்டது.

சமயம் பார்த்து ரஞ்சிதா நடித்த ஜெயஹிந்த் படத்தை ஒளிபரப்புகிறது.

நக்கீரன் ஒரு நாள் முன்பாகவே சிறப்புப் பதிப்பு வெளியிடுகிறது “சப்க்ரைப் பண்ணுங்க முழு வீடியோவைக் காட்டுகிறோம்” என்று கூறுகிறார்கள்.

குமுதமும் அதே போல் செய்கிறது மற்றும் விரைவில் சாருவை வைத்துத் தொடர் ஆரம்பிக்கப் போகிறது.

சாருவை பற்றித் தெரியாதவர்கள் கூடத் தற்போது தெரிந்து கொண்டார்கள் அவரது தள அலெக்சா ரேங்கிங் உயர்ந்து விட்டது.

சாரு குமுதம் ஜீவி செய்வதிலிருந்து என்ன புரிகிறது என்றால்…..

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

22 COMMENTS

  1. பொது மக்களை விழிப்படைய செய்கிறோம் என்று சொல்லி கொண்டு இவர்கள் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்
    இது போல் வேறு ஏதேனும் போலி சாமியார்களை புலனாய்வு செய்து
    மக்களுக்கு எச்சரிக்கை செய்யலாமே

    எனி ஹௌ நல்ல முறையில் அலசியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
    கிரி

  2. அந்த வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது என்றால் லிட்டரலாக அர்த்தம் தெரியாது என்று சொல்கிறார் என எடுத்துக் கொள்ளக் கூடாது 🙂 நான் அப்படிப்பட்டவன் கிடையாது என்பதற்காக ஏற்றிச் சொல்லப்படும் வார்த்தைகள் அவை. நாம் சாதாரண பேச்சு வழக்கிலேயே அப்படிச் சொல்வோமே!

  3. பெரியாரிஸ்ட் என்ற சொல்லையே கேவலப் படுத்திட்டான் இந்தாளு.

  4. பதிவுலகமாவது வெளிப்படையாக இதைப் பேசுகிறதே. இவ்வளவுதான் இப்போதைக்கு முடியும் என்பதல்ல, இங்கே எழுதுவதோடு நிற்காமல் எல்லார்டமும் நேரிலும் பேச வேண்டும்.

  5. ***"அந்தக் காட்சி களைப் பார்த்துப் பார்த்து நான் ரொம்பக் கடுப்பில இருக்கேன். 'ஏன் நீ பெரிய யோக்கியனா'ன்னு நீங்க கேட்கலாம். அவன் பண்ணக்கூடாத அந்தத் தப்பை நான் பண்ணலாம். ஏன்னா 'நானொரு உமனைசர்'னு பகிரங்கமாவே சொல்லி இருக்கேன். ஆனா நீ… பிரமச் சர்யத்தை போதிச்சிட்டு நடிகையோடு கும்மாளம் போடுறியே?***ஜ்யோவ், காமெடி பண்ணாதீங்க. மேல இருக்கற பத்தி தான் அந்த வார்த்தை யூஸ் பண்ணின context. இதுல பெண்களை நேசிப்பவன் பொருந்துதா, womaniser பொருந்துதா ? ஏத்தி சொன்னா அப்படியே விடனும்…சும்மா ஏதாவது சம்பந்தம் இல்லாம திருத்தம் கொடுக்க கூடாது :)- இல்லாட்டி திருத்தமும் சாதாரணமானது தானா ?

  6. மணிகண்டன், வுமனைசர்ங்கற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது – இதுக்கான விளக்கம் நான் சொன்னது. அம்மாதிரி நாமும் பேசுவோம்தானே?ஜூவி பேட்டியின் காண்டெக்ஸ்ட் பத்திச் சொல்லலை.(இங்கு – அதாவது இணையத்தில் – நடக்கும் சாரு bashingஐப் பார்த்தால் தனியாகவே இது குறித்து எழுத வேண்டுமெனக் கை அரிக்கிறது)

  7. சாரு மாதிரி இதற்கு முன்பு வேற தமிழ் எழுத்தாளர்கள் பல்டி அடித்து இருக்கிறார்களா.சுந்தர்ஜி , நித்தி, ரஞ்சிதா மாதாஜி, சாரு குறித்த தங்களின் பதிவை படிக்க ஆவலாக உள்ளேன்.எழுத்தாளர்களின் எழுத்தை மட்டும் படியுங்கள், அவரின் தனிப் பட்ட வாழ்வை, நிலை பற்றி படிக்காதீர்கள் என்று சொல்ல வேண்டாம், தயவு செய்து.

  8. கிசு கிசுவுக்கு முன்னோடியான குமுதத்துக்கே நித்தியானந்தாவின் லீலைகள் கண்ணில் படவில்லையே

  9. ***ஜ்யோவ்ராம் சுந்தர் said…
    அந்த வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது என்றால் லிட்டரலாக அர்த்தம் தெரியாது என்று சொல்கிறார் என எடுத்துக் கொள்ளக் கூடாது 🙂 நான் அப்படிப்பட்டவன் கிடையாது என்பதற்காக ஏற்றிச் சொல்லப்படும் வார்த்தைகள் அவை. நாம் சாதாரண பேச்சு வழக்கிலேயே அப்படிச் சொல்வோமே!

    2:30 PM, March 12, 2010***

    ***(இங்கு – அதாவது இணையத்தில் – நடக்கும் சாரு bashingஐப் பார்த்தால் தனியாகவே இது குறித்து எழுத வேண்டுமெனக் கை அரிக்கிறது)***

    In nidhya issue charu bashing is a deserved one.

    * It is him who advertised him as God!

    * Now it is him he takes the other side.

    He dug his own grave! I dont think you or anybody can save him now!

    He advised others how careful one needs to be when writing in "internet blogs". It was very careless of him than any other bloggers. Only "virus" is helping him now! LOL!

    If one does not bash him for his ugly stand in this issue, then there is something really wrong with that idividual!

  10. //இதில் இருந்து என்ன புரிகிறது என்றால்….//குமுதம்,சன் டி.வி,விகடன்,ரிப்போர்டர்,சாரு,ஞானி ………….மலத்தின் மீது மொய்க்கும் ஈக்கள்.

  11. wom·an·izer: wom·an·ize [wmmə nz](past wom·an·ized, past participle wom·an·ized, present participle wom·an·iz·ing, 3rd person present singular wom·an·iz·es) vi constantly look for sex: to be constantly in search of casual sex with women (disapproving) (refers to men) -wom·an·iz·er, n Microsoft® Encarta® Reference Library 2004. © 1993-2003 Microsoft Corporation. All rights reserved.

  12. //குமுதம் விகடன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் தமிழக மக்களிடையே தவிர்க்க முடியாத புத்தகங்களாகவே உள்ளன. இந்த இரு புத்தகங்களையும் சிலர் கண்டபடி விமர்சித்தாலும் கூட படித்துக்கொண்டு தான் உள்ளார்கள்.//

    பஸ் பயணத்தின் நேரத்தை பின் எப்படி கழிப்பது?நடுப்பக்கத்துல இன்னும் படம் வருதா?போன வாரத்தின் தொடரும் என்னவாச்சோ?மனசே சரியில்லங்க!விண்ணைத் தேடி வருவாயா விமர்சனம் எப்படின்னு பார்த்துட வேண்டிய வேண்டியதுதான்.

  13. இவர்கள் நம்மை வைத்து காமெடி/கீமெடி பண்ண ஆரம்பித்தும், நாம் காமெடியர்களாக ஆகி நெடுநாளும் ஆகி விட்டது…

  14. //அப்போதைய பரபரப்பு என்னவோ அது தான் செய்தி! அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் தன் பெயர் நாறி இருந்தாலும் சரி! என்னய்யா பிழைப்பு இது, கேவலமாக இல்லையா. எப்படி கூச்சமே இல்லாமல் இதைப்போல செய்ய முடிகிறது.//பாஸ்,இந்தக் கருமம் தான இப்ப நடந்துகிட்டு இருக்கு.நல்ல,நடுநிலையான பத்திரிக்கைன்னு ஒன்ன காட்டுங்க பாப்போம்.பத்திரிக்கைகாரங்க எல்லாம் சிங்கமா இருந்தது அந்தக்காலம்.இப்போ எல்லாம் எலும்புத் துண்டுக்கு அலையுற நாய்ங்க தான் மிச்சம் இருக்கு.

  15. //நித்தியானந்தர் பிரச்சனை ஆனவுடன் இதுவரை தான் ஏமாந்ததும் இல்லாமல் தன் எழுத்துக்களை படிக்கும் வாசகர்களுக்கு ஒரு தவறான வழிகாட்டியாக இருந்ததற்கு ஒரு மன்னிப்பு கேட்டு இருந்தால் கூட பரவாயில்லை அதை செய்யாமல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல அவரை விமர்சிப்பவர்களுக்கு வசதியாக மனம்போன போக்கில் எழுதிக்கொண்டு இருக்கிறார்.// சாரு பேசாம ஒரு சாரீன்னாவது சொல்லீட்டு போயிருந்திருக்கலாம்னு சொல்றீங்க !!!

  16. //நித்தியானந்தர் பிரச்சனை ஆனவுடன் இதுவரை தான் ஏமாந்ததும் இல்லாமல் தன் எழுத்துக்களை படிக்கும் வாசகர்களுக்கு ஒரு தவறான வழிகாட்டியாக இருந்ததற்கு ஒரு மன்னிப்பு கேட்டு இருந்தால் கூட பரவாயில்லை அதை செய்யாமல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல அவரை விமர்சிப்பவர்களுக்கு வசதியாக மனம்போன போக்கில் எழுதிக்கொண்டு இருக்கிறார்.//

    சாரு பேசாம ஒரு சாரீன்னாவது சொல்லீட்டு போயிருந்திருக்கலாம்னு சொல்றீங்க !!!

  17. //குமுதம் தன்னுடன் புலனாய்வு பத்திரிக்கையான ரிப்போர்ட்டரை வைத்துக்கொண்டு இப்படி படு கேவலமாக ஏமாந்துள்ளது!!//

    ஆஹா !

  18. கிரி ,
    இங்கு பத்திரிகை சுதந்திரம் என்பது தலை கிழாக புரிந்து கொள்ளபட்டிருகிறது ,சாரு அவரை பற்றி என்ன சொல்ல இருக்கிறது ,அதான் புடி புடி என்று இணையம் முழுவதும் கிழிகிறர்களே,என்ன சொல்ல ,

    Google operating system ஒன்று வருகிறதாமே அதை பற்றி சொல்லவும் ,பதிவு போடவில்லை என்றாலும் பராவில்லை.. link கொடுத்தாலும் நன்று ,என் மெயில் id இது mailmesankar2009@gmail.com,நேரம் இருந்தால் மெயில் அனுப்பவும்

  19. கிரி,மிகவும் அருமை. சாரு அடித்தது சாதாரண பல்டி அல்ல. அந்தர் பல்டி. சாரு அடித்த கூத்து சாதாரணம் கிடையாது. கடவுளைக் கண்டேன் என்ற தொடர் கட்டுரைகள் ஒரு சாதாரண போலி கபட வேடதாரியை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி துதி பாடியது. இப்போது அப்படியே அந்தர் பல்டி. குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்த மாதிரி, குமுதம் reporter ல் தொடர் கட்டுரை வேறு. இந்த சாரு மாதிரி தரம் இல்லாத ஆட்களுக்கு ஜால்ரா அடிக்க ஒரு கூட்டம். மஹா கேவலம்….நீங்கள் சொனன மாதிரி, ஒரு பக்கம் பணம் பணம் என்று பிச்சை. இன்னொரு பக்கம் சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு கப்சா…வேறு என்ன சொல்ல ? இந்த சாரு மாதிரி ஆட்கள் ஒரு சாபக் கேடு தான்….

  20. //ஆங்கிலம் அரைகுறையா தெரிந்தவர் கூட இதற்கான முழு அர்த்தமும் புரியவில்லை என்றாலும் இதைப்போல கூறமாட்டார், ஆனால் பல ஆங்கில நாவல்களை படிக்கும், மொழி பெயர்க்கும், எடுத்துக்காட்டாக கூறி வரும் சாரு இதற்கு அர்த்தம் சரியாக தெரியாமல் கூறி விட்டேன் என்கிறார்.//அட…அவருக்கு இங்கிலிபீசு தெரியாதுன்னு நினைக்காதீங்க…அவரு இங்கிலிப்பீசுல ஒரு கதையே எழுதிருககாராம்…அவரே சொன்னாரு…நித்தியானந்தா மேட்டரு வெளிய வர்றதுகு மின்னாடியெ நான் இங்கிலீபீசுல ஒரு கதை எழுதிட்டேன்னு ஒரு கதைய உட்டாரு…ஆனாலும் அண்ணனுக்கு உமனைசருக்கு மீனிங்கு தெரியாது…பச்ச புள்ள…:0)))

  21. // சாமியார் பின் செல்லும் சாருவை எப்படி பெரியாரிஸ்ட் என்று கூறினார்கள் என்று புரியவில்லை. //அது விகடனோட நக்கல்..ஆனா நக்கல் பண்ணது சாருவ இல்ல..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!