டெஸ்ட் |ஒருதினப்போட்டி | Twenty-20 | IPL

20
டெஸ்ட் |ஒருதினப்போட்டி | Twenty-20 | IPL

 

ந்தியாவில் சாப்பாடு கூடச் சாப்பிடாம இருந்துடுவாங்க ஆனா ஒரு சிலரை கிரிக்கெட் பார்க்காம இருக்கக் கூறினால் அவ்வளவு தான் டென்ஷன் ஆகிடுவாங்க!

அதென்னமோ தெரியல என்ன மாயமோ புரியல…… நம்ம ஆளுங்களுக்குக் கிரிக்கெட் என்றால் அப்பிடி பிடிக்குது. Image Credit

இந்தியா கேவலமாகத் தோற்கும் போது பல முறை கண்டபடி திட்டிக் காறித்துப்பி இனி கிரிக்கெட்டே வேண்டாம்னு முடிவு செய்து, ஒரு போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தம் அடிக்கிறவங்க உறுதிமொழி கணக்கா பல்டி அடித்து விடுவேன்.

அப்புறம் மச்சி! சச்சின் செம அடில! சேவாக் பின்னிட்டான் என்று வசனம் ம்ஹீம்.. திருந்த வாய்ப்பே இல்ல 🙂 .

டெஸ்ட் |ஒருதினப்போட்டி | Twenty-20 | IPL

கிரிக்கெட்டை கண்டு பிடித்தது இங்கிலாந்துக்காரன் ஆனா இன்று வரை ஒரு உலகக் கோப்பை கூட வெற்றி பெறவில்லை! என்ன கொடுமை சார்.

லகான் படத்துல மாதிரி இந்தியாக்காரனுக கிரிக்கெட்ல பெப்பரெப்பேன்னு இருந்த காலம் சென்று இன்னைக்குக் கிரிக்கெட்டை ஆட்டி படைக்கிற சக்தியா மாறி இருக்குனா அதற்குக் காரணம் இந்தியர்களோட கிரிக்கெட் ஆர்வம் தான்.

உலகக் கிரிக்கெட் போர்டே இந்திய கிரிக்கெட் போர்டை பார்த்து விழி பிதுங்கி நிற்கிறது.

நம்மைப் பகைத்துக்கொள்ள முடியாது என்கிற நிலமையில தான் அவங்க இருக்காங்க.

இந்தியாவை எதை வைத்து மிரட்டினாலும் நம்ம ஆளுங்க கிரிக்கெட்டை வைத்து அனைவர் கண்ணிலும் விரலை இல்ல குச்சியை விட்டு ஆட்டராணுக.

ஆஸ்திரேலியாக்காரன் என்ன தான் தைய தக்கான்னு குதித்தாலும் நம்மிடம் எடுபடவில்லை.

இந்த வகையில் எனக்கு ஒரு சிறு அல்ப மகிழ்ச்சி தான். அதுவும் IPL Twenty-20 தாறுமாறா ஹிட் ஆனதும் அவனவன் வெலவெலத்து போய் இருக்கான்.

உலகிலேயே பணக்கார விளையாட்டு வாரியமாக நம்ம கிரிக்கெட் வாரியம் இருக்குதுன்னா பார்த்துக்குங்களேன்!

இங்க நடந்த எதோ அரசியல்ல இந்த முறை பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்காமல் விட்டு விட்டார்கள், அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாரியமும் செம கடுப்புல இருக்காங்க.

சரி! இப்ப கிரிக்கெட் சாதகப் பாதகங்களைப் பற்றிப் பார்ப்போம்

டெஸ்ட் போட்டி

கிரிக்கெட் என்றாலே அது டெஸ்ட் போட்டி தான் என்று இருந்தது.

பிறகு அதைச் சுவாராசியமாக்க 50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டி வந்தது. இப்ப அதற்கும் வேட்டு வைக்கும் விதமாகத் தற்போது Twenty-20 பட்டையைக் கிளப்பிக்கொண்டு உள்ளது.

இன்னும் போகிற போக்கைப் பார்த்தால் Ten-10 போட்டி எல்லாம் வரும் போல இருக்கு.

உண்மையில் டெஸ்ட் போட்டி தான் ஒருவருடைய முழுத் திறமையை வெளிக்கொணரும் விளையாட்டாக இருந்தது இருக்கிறது.

ஆனால், தற்போது பாஸ்ட் ஃபுட் காலம் என்பதால் ஐந்து நாட்கள் எல்லாம் காத்திருக்க நம்ம மக்கள் தயாராக இல்லை.

ஒருதினப்போட்டி & Twenty-20

எனவே தான் ஒருதினப்போட்டிக்கு ஆதரவு தெரிவித்தார்கள்…. கால மாற்றத்திற்கு ஏற்பத் தற்போது அது Twenty-20 யில் வந்து நிற்கிறது.

Twenty-20 எல்லாம் பார்க்க விறுவிறுப்பாக இருக்குமே தவிர ஒரு போட்டியாளரின் முழுத் திறமையை வெளிக்காட்டுவதாக அமையாது.

அவருடைய நேரம் சரி இருந்தால் அன்று சரவெடி இல்லை என்றால் நமத்து போன பட்டாசு தான்.

காரணம் ஃபார்ம் ஆக எல்லாம் அங்கே வாய்ப்பே இல்லை, வரும் போதே ஃபார்ம் ஆகத்தான் வந்தாக வேண்டும்.. வார்ம் அப் என்கிற பேச்சுக்கே இடமில்லை.

இதில் மிகவும் பாவப்பட்டவர்கள் பந்து வீச்சாளர்கள் தான் இவர்கள் எப்படிப் போட்டாலும் மட்டையாளர்கள் கொண்டாட்டமாக அடி பின்னிப் பெடலெடுப்பார்கள்.

மக்களும் விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்ப்பதால் வீரர்களும் அடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

Twenty-20 வந்த போது அதற்குப் பலத்த எதிர்ப்பு வந்தது ஆனால், அதற்குக் கிடைத்த வரவேற்பை பார்த்த கிரிக்கெட் வாரியங்கள் அனுமதிக்க வேண்டியதாகி விட்டது.

அதுவும் Twenty-20 உலகக்கோப்பையை இந்தியா வென்ற பிறகு அதற்கான வரவேற்பு பல மடங்கு உயர்ந்து விட்டது.

IPL

இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு தற்போது ஆயிரக்கணக்கான கோடியில் ஏலம் எடுக்கப்பட்ட அணிகள்.

இப்படி எல்லாம் பணம் கொட்ட யாரும் இளிச்சவாயர்கள் அல்ல அந்த அளவிற்கு டிவி, விளம்பபரங்கள் என்று பணம் குவிகிறது.

தற்போதைய IPL 3 போட்டியில் பல ஆயிரம் கோடிகள் வருவாய் கிடைத்துள்ளது.

விளையாட்டு என்ற நிலை போய் வியாபாரமாகவே கிரிக்கெட்டை ஆக்கி விட்டார்கள்.

அதுவும் சென்ற முறை IPL நடத்த பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி மத்திய அரசு மறுத்த போது லலித் மோடி பிடிவாதமாக நடத்தியே தீருவேன் என்று, இந்தியாவில் இல்லை என்றால் என்ன! தென் ஆப்ரிக்காவில் நடத்தி காட்டுறேன் என்று அதைச் செய்தும் காட்டி விட்டார்.

அதற்குப் பலத்த எதிர்ப்பு வந்தது ஆனால், போட்டி ஆரம்பம் ஆகியதும் அதில் இருந்த சுவாரசியத்தில் எதிர்ப்புகளும் அடங்கி விட்டது.

கோடிகளில் சம்பாத்தியம்

டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டியில் லட்சக்கணக்கில் சம்பாதித்த வீரர்கள் இதில் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதால் இதற்கே முக்கியத்துவம் தருகிறார்கள்.

குறிப்பாக இதில் காயம் அதிகம் ஏற்படுவதில்லை இதுவும் ஒரு காரணம், செய்கூலி உண்டு சேதாரம் இல்லை. எனவே, இதை அனைவரும் தேர்வு செய்வதில் எந்த வித ஆச்சரியமும் இல்லை.

Twenty-20 வந்த போது, பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் விளையாடுகிறார்கள் தங்கள் நாட்டிற்காக விளையாடும் போது நாட்டு உணர்வோடு விளையாடுவார்களா! என்று பல கேள்விகள் வந்தது.

ஆனால், அதன் பிறகு இந்தியா பல போட்டிகளில் வெற்றி பெற்றுத் தற்போது முதல் இடத்தைப் பிடித்துள்ளது, அதனால் அந்தக் குற்றச்சாட்டும் எடுபடாமல் போய் விட்டது.

கமர்சியல்

தற்போது இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டுக் கிரிக்கெட்டை வியாபாரமாக்கி விட்டார்கள்.

விளையாட்டு என்ற ஒன்றை தொலைத்து விட்டார்கள் என்பது தான், பணம் புரளும் சூதாட்டம் போல ஆகி விட்டது.

அதை இன்னும் கவர்ச்சியாக்க திரையரங்கில் ஒளிபரப்பு, சீயர் லீடர், அதிரடியாக மைதானத்தில் திரைப்படப்பாடல்கள் என்று கமர்சியலாக்கி விட்டார்கள்.

மறைமுகமாக இருந்தவை எல்லாம் தற்போது வெளிப்படையாகவே நடக்க ஆரம்பித்து விட்டன.

ஆனால் இது பற்றிப் பல விமர்சனங்கள் இருந்தாலும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது என்பதைப் போல Twenty-20 யும் தவிர்க்க முடியாததே.

கிரிக்கெட்டை எந்த மாதத்தில் வைத்தாலும் இதே மாதிரி தான் அனைவரும் பார்ப்பாங்க.

இதைக் கொஞ்சம் தள்ளி அல்லது முன்னாடி வைத்தால் என்ன குறைந்தா போய்டுவாங்க. கிரிக்கெட்டிற்குக் குழந்தைகள் முதற்கொண்டு ரசிகர்கள் உண்டு.

சின்னப் பசங்க தானே! என்ன தான் படிப்பு என்றாலும் மனதினுள் இருக்கும் இயல்பான ஆர்வத்தைத் தடுக்க முடியுமா! படிக்கிற நேரத்துல கூடச் சச்சின் எவ்வளோ ரன் அடித்து இருப்பார் தோனி விளையாடி இருப்பாரா சென்னை கிங்க்ஸ் ஜெயிக்குமா! என்று மனதின் ஓரமாக ஒரு சிந்தனை ஓடிக்கொண்டு தான் இருக்கும்.

இது அவர்களது வாழ்க்கையைப் பாதிக்காதா! பெறப்போகும் மதிப்பெண்களின் அளவை குறைக்காதா!

கிரிக்கெட் என்ற மதம்

விமர்சனங்கள் வேறு நிதர்சனம் வேறு…. ஆயிரம் காரணங்கள் கூறப்பட்டாலும் கிரிக்கெட்டும் இந்தியாவும் பிரிக்க முடியாதது.

கிரிக்கெட் தான் எப்போதும் பெரும்பாலான இந்தியர்களின் விருப்பமாக உள்ளது.

மாற்றங்கள் என்றும் தவிர்க்க முடியாதது என்பதைப் போலக் கிரிக்கெட்டில் வரும் மாறுதல்களும் தவிர்க்க முடியாததே.

கால மாற்றத்திற்க்கேற்ப விருப்பங்களும் ரசனைகளும் மாறுவதால் இதை ஒரு பெரிய விசயமாக எடுத்துக்கொண்டு வருந்தத் தேவையில்லை.

இன்று மாற்றம் வரவில்லை என்றாலும் நாளை வரத்தான் போகிறது. இது விளையாட்டிற்கு மட்டுமல்ல அனைத்திற்கும் பொருந்தும்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

20 COMMENTS

 1. // முகிலன் said…
  இன்னைக்கும் டெஸ்ட் போட்டிக்கு மவுசு குறையல பாஸ்.. அதை கல்கத்தால நடந்த டெஸ்ட் போட்டிக்கு கடைசி மூணு நாள் வந்திருந்த கூட்டமே சொல்லும்.//

  வாங்க முகிலன்.

  பாருங்க நீங்க கூட உதாரணத்திற்கு நம்ம நாட்டை தான் சொல்றீங்க! நம்ம ஊர்ல எந்த மொக்கை போட்டி என்றாலும் கிரிக்கெட் என்றால் போதும். எப்படியும் கூட்டம் வரும். வெளிநாடுகள்ல பாருங்க ஒருதினப்போட்டிக்கே ததிங்கனத்தோம் போடுது. நான் முன்னமே சொன்ன மாதிரி நம்ம ஆளுங்க கிரிக்கெட் வெறியர்கள்.

  //பி.சி.சி.ஐ டெஸ்ட் போட்டியை வளர்க்கணும்னா, சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா மாதிரி இடங்கள்ல மேட்ச் நடத்தனும். அதை வுட்டுட்டு நாக்பூர், அகமதாபாத்னு தேடித்தேடி நடத்துறாங்க.//

  கண்டிப்பாக. இதை ஏற்றுக்கொள்கிறேன்.. அவங்க ஏனோ சென்னையை கண்டுக்கறதே இல்லை. சரியா மழை வருகிற நேரமா பார்த்து தான் வைக்கறாங்க! 😉

  //மத்தபடி 20-20 டெஸ்டை அழிச்சிடும்னெல்லாம் நம்புறவன் நான் இல்லை.. :)))//

  நானும் நம்பலை ஆனால் அதற்காக பெயரவிலே நடத்தப்படும் விளையாட்டாகவே நடக்கும். டெஸ்ட் போட்டியும் இருக்கு பார்த்துக்குங்க என்பதை போலத்தான் இருக்கும். டெஸ்ட் போட்டிக்கான ஆர்வம் மக்களிடையே கண்டிப்பாக குறைந்து விடும் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை.

 2. வழக்கம் போல விரிவான அலசல்.
  பெங்களூரில் IPL திரையரங்கிலும் காட்டப் படுகிறது.

 3. Yes, Cricket is a religion in India. India's status on world stage has gone high mainly because of I.T. Industry, Bollywood and Cricket. What I admire in both Bollywood (in fact, in cinema industry in India) and Cricket, there is no difference due to caste, creed or religion. Real secularism rules in both. All forms of cricket, Test, 50 overs or T20 are necessary for different segments, and I don't think one will vanish because of the other. TV did not diminish the importance of theaters – now they are all in multiplexes/malls with captive audiences. Hats off to Modi who is the prime mover for IPL – this man is a shrewd player and a go-getter. Such people are needed in politics and government.

 4. /சீயர்ஸ் லீடர்/

  அய்யய்யோ. அது சீயர் லீடர்ஸ் கிரி:))ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. ஒரு ஸ் இடம் மாறி உக்காந்தா அர்த்தமே மாறி போகுது:))

 5. எனக்கு கிரிக்கெட்டை விட கார்,பைக் ரேஸ் தான் ரொம்ப பிடிக்கும்!

  ஒருவருக்கு என்ன விளையாட்டு பிடிக்கும் என்பதிலேயே அவருடய மனநிலையை தெரிந்து கொள்ளலாம்!

  கிரிக்கெட் பிடித்தவர்கள் குழுவாக செயல்பட நினைப்பார்கள் அதே நேரம் கொஞ்சம் சோம்பேறிகள்!

 6. இன்னைக்கும் டெஸ்ட் போட்டிக்கு மவுசு குறையல பாஸ்.. அதை கல்கத்தால நடந்த டெஸ்ட் போட்டிக்கு கடைசி மூணு நாள் வந்திருந்த கூட்டமே சொல்லும்.

  பி.சி.சி.ஐ டெஸ்ட் போட்டியை வளர்க்கணும்னா, சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா மாதிரி இடங்கள்ல மேட்ச் நடத்தனும். அதை வுட்டுட்டு நாக்பூர், அகமதாபாத்னு தேடித்தேடி நடத்துறாங்க.

  மத்தபடி 20-20 டெஸ்டை அழிச்சிடும்னெல்லாம் நம்புறவன் நான் இல்லை.. :)))

 7. // ராமலக்ஷ்மி said…
  வழக்கம் போல விரிவான அலசல்.//

  நன்றி ராமலக்ஷ்மி

  =====================

  // Chandramouli said…

  Yes, Cricket is a religion in India.//

  உண்மை தான்.. 🙂

  //All forms of cricket, Test, 50 overs or T20 are necessary for different segments, and I don't think one will vanish because of the other//

  நானும் இதை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் போட்டிகளின் மீதான ஆர்வம் குறைந்து விடும்.

  //TV did not diminish the importance of theaters – now they are all in multiplexes/malls with captive audiences. //

  உண்மை தான் ..முன்பு பலரும் இதனால் பாதிப்பு வரும் என்று கூறினார்கள்.. கமல் மட்டுமே இதற்க்கு ஆதரவு தந்தார்.

  //Hats off to Modi who is the prime mover for IPL – this man is a shrewd player and a go-getter.//

  இவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும் சாதித்து விட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் 🙂

  ================================

  // வானம்பாடிகள் said…

  அய்யய்யோ. அது சீயர் லீடர்ஸ் கிரி:))ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. ஒரு ஸ் இடம் மாறி உக்காந்தா அர்த்தமே மாறி போகுது:))//

  ஹி ஹி ஹி நன்றி சார் மாற்றி விட்டேன். சுட்டியமைக்கு நன்றி.

  ============================

  // வால்பையன் said…

  எனக்கு கிரிக்கெட்டை விட கார்,பைக் ரேஸ் தான் ரொம்ப பிடிக்கும்!//

  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம்

  //ஒருவருக்கு என்ன விளையாட்டு பிடிக்கும் என்பதிலேயே அவருடய மனநிலையை தெரிந்து கொள்ளலாம்!//

  இது அனைவருக்கும் பொருந்தாது என்பது என் கருத்து

  //கிரிக்கெட் பிடித்தவர்கள் குழுவாக செயல்பட நினைப்பார்கள் அதே நேரம் கொஞ்சம் சோம்பேறிகள்//

  நான் குழுவிலும் (பதிவுலகத்தில் கூட :-D) இல்லை சோம்பேறியும் இல்லை 😉

  ===========================

  // Srinivas said…

  INDIA la Match paathadhaan match maadhiri irukkum..//

  நூறு சதவீதம் உண்மை.. இங்கே பாருங்க ஒரு பரபரப்பே இல்லாம இருக்கு.. இதே நம்ம ஊருனா கலக்கலா இருக்கும்.

  //So, Nalla vilayaadinaa, People wil watch :)//

  🙂 உண்மை தான் ஆனால் அதையும் தாண்டி கிரிக்கெட் மீது நம்மவர்களுக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதும் உண்மை.

 8. ///எனக்கு இருக்கிற ஒரு கடுப்பு இந்த வெண்ணை வெட்டிக போட்டியை சரியா மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்கும் சமயம் நடத்துறாங்க அது தான் கடுப்பை கிளப்பது.///

  same blood

 9. INDIA la Match paathadhaan match maadhiri irukkum..

  Watching INDIA vs PAKISTAN in KOLKATTA = Thalaivar padatha First Day First Show Namma Oorla ( Trichy) paakara maadhiri..

  ellaarum, National game Hockey a kandukka maatengaraanga nu solraanga..

  Innum oru World cup kooda vaangala..

  After 1983 only, Cricket became very popular in INDIA..

  So, Nalla vilayaadinaa, People wil watch 🙂

  – Cricket Fan
  ( Test , Oneday and T20 )

 10. ***நண்பர் வருண் கிரிக்கெட் தொடர்பதிவு எழுத அழைத்து இருந்தார் அவருக்கு என் நன்றி. அதில் எனக்கு பிடித்த வீரர்கள் நடுவர்கள் அப்படி இப்படின்னு நிறைய பட்டியல் இருந்தது.. அதைக்கூறி உங்களுக்கு என்ன ஆகப்போகுது இருக்கிற கொஞ்சம் பேரைத்தான் சுற்றி சுற்றி எழுத வேண்டும் அதனால இப்படி ஒரு இடுகையாக போட்டு விட்டேன், வருண் மன்னிப்பாராக ;-)***

  நல்ல வித்தியாசமான முயற்சி, கிரி! நன்றி! :-)))

 11. 10 -10 ஆகி 5-5 ஆகி கடைசியில் காசு சுண்டுவது மட்டும் நடக்கும் தல.., அதைப்பார்க்க டிக்கட், யார் ஜெயிப்பார்கள் என்று டிக்கட் சூப்பராக இருக்கும் தல..,

 12. ////கிரிக்கெட் பிடித்தவர்கள் குழுவாக செயல்பட நினைப்பார்கள் அதே நேரம் கொஞ்சம் சோம்பேறிகள்//
  //

  கிரிக்கெட் குழு விளையாட்டு மாதிரி ஆனால் அது தனிநபர் விளையாட்டு.

  வலிமையான குழுவிடம் மட்டுமே இந்த தனிநபர் அணி தோற்றுப் போகும். இரண்டூ அணீகளிலும் எத்தனை தனிநபர் சிறப்பாக ஆடுகிறார்களோ அந்த அணி வெற்றி பெறும். மிக அபூர்வமாக இது குழுவிளையாட்டாக நடக்கிறது

 13. என்ன தல… இந்த பதிவில் பேட்டுகளை மட்டும் சென்சாரில் கட் பண்ணி விட்டீர்கள்?? 😉

 14. எனக்கு எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட்தான், எனக்கு பந்துவீச்சுத்தான் துடுப்பாட்டத்திலும் பார்க்க பிடிக்கும், பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள் இன்னும் மிச்சமிருப்பது டெஸ்ட் போட்டிகளில்தான்.

  //வால்பையன்

  கிரிக்கெட் பிடித்தவர்கள் குழுவாக செயல்பட நினைப்பார்கள் அதே நேரம் கொஞ்சம் சோம்பேறிகள்!//

  மன்னிக்கணும் , கார்ரேஸ் பைக்ரேஸ் தனியாக ஒருவர் பங்குபெறும் விளையாட்டில்லை, அது ஒரு டீம் வேர்க் ஒருவர் டயர் மாற்றும்போது சொதப்பினாலே கேம் ஓவர், அதுதவிர அது எஞ்சின், டயர் என்பவற்றின் தன்மையிலும் தங்கியுள்ளது. டெனிஸ்தான் உண்மையில் ஒருவரது முழுப்பலத்தையும் வெளிக்கொண்டுவரும் ஒருவர் சார்ந்த விளையாட்டு என்பது என் கருத்து.

 15. அனைவருக்கும் ஒரு கருத்து இருக்குமே ரோஸ்விக், இதில் மன்னிப்பெல்லாம் எதுக்கு!

  தவறு என் மீது கூட இருக்கலாம்!

 16. வணக்கம். தலைவா..! அது எப்படி உங்களால மட்டும் முடிகிறது, ஒரு தலைப்பு கொடுத்தா.. பகுதி பகுதியா பிரித்தது அலசிவிடுறீங்க…! பாராட்டுகள்.! தொடரட்டும் தங்கள் அசத்தல் அலசல்…!

 17. கிரிக்கெட் பற்றிய உங்கள் தொகுப்பு சூப்பர்.
  இது t20-t20 சீசன் என்பதால் அது பற்றியே உங்கள் பார்வையும் இருந்தது போன்று ஒரு பீல்.

  தேர்வுகள் நடக்கும் சமயம் நடத்துறாங்க? இது ஒரு நல்ல கேள்வி தான். ஆனால் அவர்கள் weather ஐ ஒரு காரணமாக சொல்லிவிடுவார்கள். அதே சமயம் மற்ற நாட்டு கிரிக்கெட் அட்டவணை யும் ஒரு முக்கிய காரணம் என நான் நினைக்கிறேன்.

 18. ஷங்கர் வருண் சரவணன் பிரவீன் வருகைக்கு நன்றி

  =======================

  // SUREஷ் (பழனியிலிருந்து) said…
  10 -10 ஆகி 5-5 ஆகி கடைசியில் காசு சுண்டுவது மட்டும் நடக்கும் தல.., அதைப்பார்க்க டிக்கட், யார் ஜெயிப்பார்கள் என்று டிக்கட் சூப்பராக இருக்கும் தல.//

  ஹி ஹி ஹி

  =============================

  // ரோஸ்விக் said…

  என்ன தல… இந்த பதிவில் பேட்டுகளை மட்டும் சென்சாரில் கட் பண்ணி விட்டீர்கள்?? ;-)//

  :-))) இப்படி எல்லாம் விவகாரமா யோசிக்க கூடாது.

  =====================

  // எப்பூடி … said…

  டெனிஸ்தான் உண்மையில் ஒருவரது முழுப்பலத்தையும் வெளிக்கொண்டுவரும் ஒருவர் சார்ந்த விளையாட்டு என்பது என் கருத்து//

  உண்மை தான்.. உடன் ரொம்ப ஸ்டெமினா தேவைப்படுகிற விளையாட்டு கூட.

  ==================================

  // வால்பையன் said…

  அனைவருக்கும் ஒரு கருத்து இருக்குமே ரோஸ்விக், இதில் மன்னிப்பெல்லாம் எதுக்கு!//

  அருண்! அது ரோஸ்விக் அல்ல "எப்பூடி" 🙂

  ========================

  // Sadhasivam said…

  இது t20-t20 சீசன் என்பதால் அது பற்றியே உங்கள் பார்வையும் இருந்தது போன்று ஒரு பீல்.//

  உங்க ஃபீல் சரி தான் 🙂

  //ஆனால் அவர்கள் weather ஐ ஒரு காரணமாக சொல்லிவிடுவார்கள். அதே சமயம் மற்ற நாட்டு கிரிக்கெட் அட்டவணை யும் ஒரு முக்கிய காரணம் என நான் நினைக்கிறேன்//

  இருக்கலாம், ஆனால் அதை விட மாணவர்களின் படிப்பு முக்கியம் தானே! என்ன செய்வது இவர்கள் முடிவே இறுதியானது.

 19. கிரிக்கெட் எப்போதும் சோம்பேறி விளையுடுத்தான். அதில் எப்போதும் consistent ஆக விளையுடும் அணி தான் வெற்றி பெரும், india எப்போதும் நன்றாக விளையாடுவார்கள், குறிப்பாக, பிட்ச் சாதகமாக இல்லாவிட்டால் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று சொதப்பி விடுவார்கள், எப்போதும் டெஸ்ட் மேட்ச் england தான் என்பதில் சந்தேகம் இல்லை, இந்தியர்கள் one டே matches இல் வெற்றி பெற வாய்ப்பு உண்டு, இந்தியன் bowlers டெஸ்ட் matchesil sodhappuvaral என்பதில் சந்தேகம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here