DTH கட்டணங்களைக் கட்டுப்படுத்த, பயனாளர்களே சேனல்களைத் தேர்ந்தெடுக்கும் முறையைக் கடந்த 2019 ஆண்டு பிப்ரவரி TRAI அறிமுகப்படுத்தியது.
பயனாளர்கள் தேவையான சேனலை மட்டும் தேர்ந்தெடுப்பார்கள், இதன் மூலம் கட்டணங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால், நடந்ததோ வேறு.
எதிர்பார்த்தது போல நிறுவனங்கள் கட்டணங்களைக் குறைக்கவில்லை.
வாடிக்கையாளர்கள் DTH பயன்படுத்துவதைக் குறைத்து Streaming தளங்களான NETFLIX, Hotstar & Amazon Prime Video பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
திறன்பேசியின் (ஸ்மார்ட் ஃபோன்) ஆதிக்கம்
திறன்பேசி (Smart Phone) வழியாகப் பார்ப்பதற்கு பலர் நகர்ந்து விட்டார்கள்.
நீங்களே கவனித்து இருக்கலாம், நம் வீட்டில் உள்ளவர்களே சிலர் திறன்பேசி வழியாகப் பார்த்துக்கொண்டு இருப்பதை, குறிப்பாகப் பெண்கள் & இளையோர்.
இதற்கு மிக முக்கியக்காரணம், ஒளிபரப்பும் நேரத்தில் பார்க்க முடியாததால், தங்களுக்குத் தேவைப்பட்ட நேரத்தில் பார்க்க இணையம் வசதியாக உள்ளது.
இதற்கு TRAI யைக் குறை கூறலாமா?
TRAI நல்ல எண்ணத்தில் தான் கொண்டு வந்தது ஆனால், கட்டணங்கள் அதிகம் என்பதாலும், Streaming தளங்களுக்குக் கிடைத்த வரவேற்பாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மீது மக்களுக்கு ஆர்வம் குறைந்ததாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
DTH நிறுவனங்கள் பிடிவாதமாகக் கட்டணங்களைக் குறைக்காததும் முக்கியக்காரணம்.
Yougov நிறுவனம்
Yougov நிறுவனம் நடத்திய ஆய்வில்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் 40% குறைந்து விட்டார்கள், 20% பேர் DTH இணைப்பைத் துண்டித்து விட்டார்கள்.
1995 – 2002 வருடங்களில் பிறந்தவர்கள் 26 % பேர் Streaming தளங்களுக்கு நகர்ந்து விட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் கட்டண குறைப்பை TRAI அறிவித்ததுக்கு 60% பேர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.
சலுகை
ஏர்டெல் DTH ல் இரண்டு இணைப்புகள் (சென்னை & கோபி) வைத்துள்ளேன், அதில் ஒன்றுக்கு நான் Recharge செய்யவில்லை.
ஏர்டெல்லில் அழைத்து மாதம் ₹168 கட்டணத்துக்கு அனைத்துத் தமிழ் சேனல்களையும் சலுகையில் கொடுத்துள்ளார்கள். முன்பு மாதம் ₹270 கட்டணத்துக்கு, இவர்கள் சலுகையில் கொடுக்கும் சேனல்களைவிடக் குறைவாக வைத்து இருந்தேன்.
தற்போது அனைத்துத் தமிழ் சேனல்களுமே ₹168 க்கு கிடைக்கிறது.
அதிகக் கட்டணம்
இன்னொரு இணைப்பில், மனைவி திறன்பேசியில் பார்த்துக்கொள்கிறார், பசங்க இணையத்தில் கார்ட்டூன் மற்றும் மற்றவை பார்த்துக்கொள்கிறார்கள்.
இந்த இணைப்புக்கு மட்டும் பசங்க பார்க்கும் இரண்டு கார்ட்டூன் சேனல்களுக்காகத் தேவை இல்லாமல் அடிப்படை கட்டணம் ₹153 கட்டிக்கொண்டு இருந்தேன்.
இது மிக அதிகமாக உள்ளது. தற்போது நான் இக்கணக்கிலும் Recharge செய்வதில்லை.
Streaming தளங்களின் வளர்ச்சி
Streaming தளங்களிலும் ஏராளமான நிகழ்ச்சிகளைத் தருகிறார்கள். பார்வையாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
தற்போது இனி எப்படிக் கட்டணங்களைக் குறைத்துப் பயனாளர்களை நிறுத்த முயன்றாலும், குறிப்பிடத் தக்க அளவிலேயே இதற்குப் பலன் இருக்கும்.
இளையவர்களை ஏற்கனவே பெரும்பாலும் இழந்து விட்டார்கள், நடுத்தர வயதினரும் இதில் இணைந்து விட்டார்கள். எனவே, எதிர்காலம் Streaming தளங்கள் தான்.
TRAI அறிவித்த கட்டணத்திருத்தம்
2020 மார்ச் 1 முதல் கட்டணங்களைக் குறைத்து அறிவிக்க வேண்டும் என்று DTH நிறுவனங்களுக்கு TRAI அறிவுறுத்தியிருந்தது ஆனால், ‘டாடா ஸ்கை’ தவிர்த்து வேறு எந்த நிறுவனமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இதன் மூலம் DTH நிறுவனங்கள் தாங்களே தங்களுக்குக் குழி தோண்டிக்கொண்டு உள்ளார்கள். இவர்களின் திட்டம் என்னவென்பது புரியவில்லை.
விளம்பரங்களைக் கண்டு வெறுத்துப் போய்க் கடந்த 10 வருடங்களாகத் தொலைக்காட்சியே பார்ப்பதில்லை, முன்பு இவற்றில் இருந்து YouTube என்னைக் காப்பாற்றியது தற்போது NETFLIX, Hotstar, Amazon Prime Videos 🙂 .
நீங்கள் எப்படி?!
தொடர்புடைய கட்டுரைகள்
‘Online Streaming’ க்கு தான் இனி எதிர்காலம்
வேறு DTH நிறுவனத்துக்கு இனி எளிதாக மாறலாம்!
DTH “Safe Custody” வசதி பற்றித் தெரியுமா?!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
நீங்கள் சமீபத்தில் எழுதியுள்ள பல பதிவுகளில் சிறப்பான ஆக்கபூர்வமான பதிவு இது. ஒரு வருடமாகி விட்டது தொலைக்காட்சி இணைப்பை துண்டித்து விட்டேன். நாம் பணம் கொடுக்கின்றோம். நீ இவையெல்லாம் பார்க்க வேண்டும். இந்தக் கட்டணத்தில் தான் நீ உள்ளே வர வேண்டும் என்கிறார்கள். எம்பூட்டு அதப்பு? கேள்வி கேட்டால் என்ன சார் எல்லோரும் சொன்னவுடன் மாற்றிக் கொண்டு விட்டார்கள். நீங்கள் இத்தனை கேள்வி கேட்குறீங்க? என்றார். கொடுத்த ஆசிர்வாதத்தில் நம் சந்துப் பக்கம் வருவதே இல்லை.
அரசாங்கத்திற்குத் தெரியாதா? இவர்கள் கொள்ளைக்காரர்கள். ஒரு முறை தின்று பழகிவிட்டால் மாறவே மாட்டார்கள் என்று. ஏன் உடனே அடுத்த மாறுதல் சட்டம் கொண்டு வந்து இவர்களை நெருக்கியிருக்க வேண்டாமா? இது தான் பாஜக அரசாங்கத்தின் மிகப் பெரிய குறையாக நான் பார்ப்பது. தொடங்குவார்கள். அடுத்த திட்டத்திற்கு நகர்ந்து விடுவார்கள். இருப்பவர்கள் அடித்துக் கொண்டு சாக வேண்டும். நீங்க சொன்ன மாதிரி வேறு பக்கம் நாம் நகர்ந்து செல்ல வேண்டும்.
ஆனால் காரைக்குடி பக்கம் உள்ள சிறு நகரங்களில் (தமிழகம் முழுவதும்) இன்னமும் தொலைக்காட்சி தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. நீங்கள் சொல்வது எந்த அளவுக்கு உணமை என்றால் நெடுந்தொடர்கள் ஒவ்வொன்றும் யூ டியுப் ல் பத்து லட்சம் பேர்கள் பார்க்கின்றார்கள்.
சன்டிவி கல்லில் நார் எடுக்கும் கலையைக் கற்றவர்கள். இப்போது கொஞ்சம் கொஞ்சம் யு டியூப் ல் வலையேற்றுகின்றார்கள். இளம் தொழில் முனைவோர்கள் கலாநிதி மாறன் மற்றும் அவர் குழுவினரிடம் தமிழக இளையர்கள் கற்றுக் கொள்ள ஏராளமாக உள்ளது.
.டிராய் செய்த முட்டாள்தனம் இதைவிடே வேறு எதுவும் இல்ைலை. ஊடகங்கள் கட்டணத்ைதை ஏற்றுவது தெரிந்தும் எதுவுேமே செய்யவில்ைலை. இன்றுவரை ஏமாந்தவர்கள் நாம்தான். யார் பித்தலாட்டம் எனத் தெரியவில்ல. எவ்வளவு கோடிகள் சம்பாதித்துவிட்டார்கள் தெரியவில்லை..
.TRAI செய்தது மிகப் பெரிய தவறு . ஊடகங்கள் தான் விளம்பரம் மூலம் நிறைய வருமானம் ஈடஈட்டு கின்றன . பிறகு ஏன் வாடிக்கையாளார் களிடம் இருந்து கட்டண கொள்ளை வேறு . ஒரு மணி நேர நிகழ்ச்சியில் அரை மணி ேநரம் விளம்பரம் தான் ஓடுகிறது அந்த விளம்பரத்தைக் காண வாடிக்கையாளர்களான நாம் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்? இந்த சிறிய லாஜிக் கூட வா TRAI க்குத் தெரியவில்லை . இனியாவது System சரியானால் ok .
எட்டு வருடமா மனைவி, பையன் என்கூட இருந்த போது வெளிநாட்டில் டிவி வாங்கவில்லை.. மனைவி இங்கு வந்த புதிதில் ரெண்டுபேரும் பேசி டிவி வேண்டாம் என்று முடிவு செய்தோம்.. கடந்த ஆண்டு மனைவி / பையன் ஊருக்கு செல்லும் வரை வாங்கவில்லை.. தற்போதும் வாங்கும் எண்ணம் இல்லை.. வீட்டுக்கு வரும் நண்பர்கள் அனைவரும் தவறாமல் கேட்கும் கேள்வி.. என் டிவி வாங்கவில்லை??? சின்ன வயசுல எவ்வளவு ரசித்து ரசித்து டிவி பார்த்தேனோ??? தற்போது டிவி நிகழ்ச்சிகளின் காரணமாக டிவி யை சுத்தமாக ஒதுக்கி விட்டேன்.. அதிலும் சில நிகழ்ச்சிகள் எப்படி குடும்பத்தோடு பார்க்கின்றனர் என்று புரியவில்லை.. வட நாட்டு கலாச்சாரம் நம்மை முற்றிலும் ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது.. கடவுள் தான் நம்மை காப்பாற்றவேண்டும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..