அரசு கேபிள் டிவி வருது வருது என்று நீண்ட காலமாகக் கூறப்பட்டுப் பல இடங்களில் வந்து விட்டது மீதி இடங்களிலும் விரைவில் வர உள்ளது. அரசு கேபிள் Vs DTH.
அரசு கேபிள் VS DTH
சன், ஸ்டார் மற்றும் சோனி குழுமங்கள் தங்கள் சேனல்களைத் தராமல் இழுத்தடித்து வருகின்றன குறைந்த கட்டணத்தில் அதிகச் சேனல்களை மக்களை ஏமாற்றாமல் தரவே அரசு கேபிள் தொடங்கப்பட்டது.
இதற்கு மக்களிடையே வரவேற்புள்ளது. தனியாரிடம் வேறு வழி இல்லாமல் அதிகக் கட்டணத்தைக் கொடுத்துத் தெரிந்தே ஏமாறத் தேவையில்லை என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
DTH சலுகைகள்
இந்நிலையில் DTH டிவி க்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு வருகிறது, அதுவும் கேபிள் டிவி களின் போட்டியைச் சமாளிக்கப் பல கவர்ச்சிகரச் சலுகைகளை அறிவித்து வருகின்றன. கட்டண குறைப்பையும் அறிவித்து வருகின்றன.
சன் DTH ஒரு படி மேல போய்ப் பல சலுகைகளை அறிவித்து ஓயாமல் விளம்பரம் செய்து பலரை தன் பக்கம் இழுத்துக்கொண்டு இருக்கிறது.
சென்னை யில் டாட்டா ஸ்கை அதிகளவில் மக்களால் விரும்பப்படுகிறது (சவுத் ஸ்டார்ட்டர் பேக்கிற்கு 50Rs குறைத்துள்ளது). நடுத்தர மக்கள் டிஷ் டிவி மற்றும் சன் DTH வாங்குவார்கள் என்று நினைக்கிறேன் .
எனக்குத் தெரிந்து சென்னையில் டாடா ஸ்கை அதிகம் உள்ளது, எங்கள் ஊர் கோபி பகுதியில் சன் DTH மற்றும் டிஷ் டிவி அதிகம் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது இவை அனைத்திற்கும் போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிக் டிவி வந்துள்ளது, பல நவீன தொழில்நுட்பத்துடன் போட்டியில் குதித்துள்ளது.
இதனுடைய தற்போதைய குறிக்கோளே DTH சேவையில் 40% பங்கைக் கைப்பற்றுவதாகும்.
அதற்கான பிரம்மாண்ட திட்டங்களைத் தயார் செய்து இருப்பதாகக் கூறி உள்ளது. இதன் மூலம் மேலும் கட்டணங்கள் குறையலாம் என்று நம்பலாம்.
இது வாடிக்கையாளர்களுக்குச் சந்தோசம் அளிக்கும் செய்தி. போட்டி இருந்தால் மட்டுமே கட்டண குறைப்பை எதிர்ப்பார்க்க முடியும்.
அரசு கேபிள் டிவி
அரசு கேபிள் டிவி க்கு பெரிய பலம் குறைந்த பணத்தில் கட்டண சேனல்கள் உட்படப் பல சேனல்களை அதிகத் தரத்தில் கொடுக்க முடிவது தான்.
கிராமங்களில் மின்சாரம் பெரும் பிரச்சனையாக உள்ளது.
நம் வீட்டில் மின்சாரம் இருக்கும் போது கேபிள் கட்டுப்பாட்டு அறையில் மின்சாரம் இருப்பதில்லை, அங்கே வரும் போது நம் வீட்டில் மின்சாரம் இருப்பதில்லை.
சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன ஆனாலும் குறைந்த கட்டணத்தில் பெரும்பான்மையான சேனல்கள் தெரிவதாலும் கேபிள் ஆபரேட்டர்கள் தனியாகப் பல (லோக்கல்) சேனல்கள் தருவதாலும் (இதில் பல படங்கள் மற்றும் புதுப் பாடல்கள் போடப்படுகின்றன) மக்கள் பலர் இதிலேயே திருப்தி அடைந்து விடுகின்றனர்.
ஒரு மாதம் பணம் கட்ட தாமதம் என்றாலும் அவர்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். எனவே, இவர்களிடம் DTH எல்லாம் எடுபடுமா என்று தெரியவில்லை.
தற்போது அரசு கேபிள் வந்ததால் பல தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தங்கள் மாத வாடகையைப் பெருமளவில் குறைத்துள்ளதாகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அரசு கேபிள் மாதம் 100 Rs வசூலிக்கிறது (கட்டண சேனல்களையும் தருவதால்).
கேபிள் டிவி யிலேயே திருப்தி படுவார்களா அல்லது இனி பழைய முறையில் அனைத்து வீடுகளிலும் ஏரியல் இருந்தது போல இனி DTH ஆன்ட்டனாக்கள் இருக்குமா என்பது இன்னும் போகப் போகத் தெரிந்து விடும்.
தொடர்புடைய கட்டுரைகள்
வேறு DTH நிறுவனத்துக்கு இனி எளிதாக மாறலாம்!
DTH “Safe Custody” வசதி பற்றித் தெரியுமா?!
DTH க்கு டாடா காட்டும் பயனாளர்கள்
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
//விஜய் ஆனந்த் said…
நல்ல அலசல் & தகவல்கள்.தமிழக மக்களோட உளவியலையும் சரியா சொல்லியிருக்கீங்க!!!!//
நன்றி விஜய் ஆனந்த்.
//கூடுதுறை said…
சீக்கிரமே அதிகபட்ச பிராட்பேண்டு வந்தால் அதில் டீவி பார்த்துக்கொள்ளலாம் வேறு எதுவும் வேண்டாம்…//
அதுக்கெல்லாம் பல காலம் ஆகும் கூடுதுறை. நம்முடைய இணைய வேகம் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டும், தடையில்லா நெட்வொர்க் தரும் வரை இது நடக்க வாய்ப்பே இல்லை.
உங்கள் வருகைக்கு நன்றி.
நல்ல அலசல் & தகவல்கள்…
தமிழக மக்களோட உளவியலையும் சரியா சொல்லியிருக்கீங்க!!!!
//Indian said…
மின்சாரம் கரெக்டா உடுங்கடான்னா இவனுங்க கேபிள் கநெக்ஷன் கொடுத்திட்டு இருக்காங்க.//
:-)))
//சிங்கப்பூர்ல broadband ஸ்டேண்டர்டு 100 mbps -ஆமே. நெசமா?//
அடப்பாவிகளா! இதை யாருங்க கிளப்பி விட்டது.
சிங்கப்பூர் ல் 12 mbps (mega bits per second, mega bytes per second அல்ல) தான் இருக்கிறது.
உங்கள் வருகைக்கு நன்றி இந்தியன்
சீக்கிரமே அதிகபட்ச பிராட்பேண்டு வந்தால் அதில் டீவி பார்த்துக்கொள்ளலாம் வேறு எதுவும் வேண்டாம்…
மின்சாரம் கரெக்டா உடுங்கடான்னா இவனுங்க கேபிள் கநெக்ஷன் கொடுத்திட்டு இருக்காங்க.
//அதுக்கெல்லாம் பல காலம் ஆகும் கூடுதுறை. நம்முடைய இணைய வேகம் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டும், தடையில்லா நெட்வொர்க் தரும் வரை இது நடக்க வாய்ப்பே இல்லை.
//
சிங்கப்பூர்ல broadband ஸ்டேண்டர்டு 100 mbps -ஆமே. நெசமா?
விஜய் ஆனந்த் said…
//நல்ல அலசல் & தகவல்கள்…//
வழிமொழிகிறேன். கிரி, உங்கள் பதிவுகளின் சிறப்பே அதுதான். பெங்களூரில் கேபிள் ரூ.200 வசூலிக்கறாங்க. இந்த கரெண்ட் போனா…பிரச்சனையாலேயே பலரும் கேபிளுக்கு டாட்டா சொல்லிட்டு டாடா ஸ்கைக்கு மாறிட்டு இருக்காங்க.
//இனி பழைய முறையில் அனைத்து வீடுகளிலும் ஏரியல் இருந்தது போல//
ஆமாம்ல:))!
//மங்களூர் சிவா said…
தமிழ்நாட்டில் கேபிளுக்கும் டிடிஎச்-க்கும் கட்டணம் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் நான் இருக்கும் மங்களூரில் (கர்நாடகா) கேபிள்க்கு 220 ரூபாய் மாதம் ஆனால் டிடிஎச் 75 ரூபாய்முதல் (சன் டிடிஎச்) நம் விருப்பத்திற்கு தேர்ந்தெடுக்க முடிகிறது.//
வாங்க சிவா ரொம்ப நாளா ஆளை காணோம் 🙂
தமிழ் நாட்டில் அரசு கேபிள் ஆக இருந்தால் கண்டிப்பாக வித்யாசம் வரும், ஏனென்றால் 100 Rs க்கு அனைத்து முக்கிய சேனல்களும் வரும் (இந்த சன், ஸ்டார் மற்றும் சோனி பிரச்சனை முடிந்து விட்டால்), DTH ல் இதை விட அதிகமாகவே வரும்.
உங்களுக்கு பெரும் பிரச்சனை தான், காரணம் தமிழ் நாடு கர்நாடகா பிரச்சனை என்றால் தமிழ் சேனல்களை தடை செய்து விடுகிறார்கள், அது பெரிய தொல்லை. அது இல்லாமல் ஒரு சில இடங்களில் தெளிவில்லாமல் வரும் ஒளிபரப்பு. அதனால் உங்களுக்கு கண்டிப்பாக DTH சிறந்தது என்பது என் கருத்து.
======================================================================
//Indian said…
போன வாரமோ, அதுக்கு முந்திய வாரமோ, பிசினஸ்-வேர்ல்டு பத்திரிகையில ஆதங்கத்தோடு போட்டிருந்தாங்க. அதான் கேட்டேன்.//
அப்படியா! அவங்க எந்த கணக்குல போட்டாங்கன்னு தெரியலையே… ஆனால் இங்கு இணைய இணைப்பு சிறப்பாக இருக்கிறது.
//ராமலக்ஷ்மி said…
பெங்களூரில் கேபிள் ரூ.200 வசூலிக்கறாங்க. இந்த கரெண்ட் போனா…பிரச்சனையாலேயே பலரும் கேபிளுக்கு டாட்டா சொல்லிட்டு டாடா ஸ்கைக்கு மாறிட்டு இருக்காங்க.//
மின்சார பிரச்சனை, சிவா அவர்களுக்கு கூறியது போல கன்னட வெறியர்கள் பிரச்சனை என்று எப்போதும் தொல்லை. பெங்களூர் ல் என் நண்பன் கூட டாட்டா ஸ்கை க்கு மாறப்போவதாக கூறி இருக்கிறான். நகரத்தை விட்டு தள்ளிய வீடுகள் என்றால் ஒளிபரப்பு சிறப்பாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு. இந்த அரசு கேபிள் தமிழகத்தில் மட்டுமே உள்ளது.
உங்கள் வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி
தமிழ்நாட்டில் கேபிளுக்கும் டிடிஎச்-க்கும் கட்டணம் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் நான் இருக்கும் மங்களூரில் (கர்நாடகா) கேபிள்க்கு 220 ரூபாய் மாதம் ஆனால் டிடிஎச் 75 ரூபாய்முதல் (சன் டிடிஎச்) நம் விருப்பத்திற்கு தேர்ந்தெடுக்க முடிகிறது.
//அடப்பாவிகளா! இதை யாருங்க கிளப்பி விட்டது.
சிங்கப்பூர் ல் 12 mbps (mega bits per second, mega bytes per second அல்ல) தான் இருக்கிறது.
//
போன வாரமோ, அதுக்கு முந்திய வாரமோ, பிசினஸ்-வேர்ல்டு பத்திரிகையில ஆதங்கத்தோடு போட்டிருந்தாங்க. அதான் கேட்டேன்.
கிரி, நீங்கள் சொன்னது போல சின்ன நகரங்களில் உள்ளூர் தொலைக்காட்சிகள் சிறப்பாக செயல் பட்டு வருகின்றன. அவர்கள் உள்ளூர் நிகழ்ச்சிகள், செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். எனவே இம்மாதிரியான இடங்களில் DTH சேவைக்கு மாறுவது கடினமே. ஆனால் பெங்களுரு போன்ற இடங்களில் எதாவது பிரச்சினை என்றால் முதலில் கை வைப்பது தமிழ் சேனல்கள் மீது தான். இம்மாதிரி இடங்களில் DTH சேவை உண்மையாகவே வரபிரசாதம் தான். உங்கள் பதிவில், பின்னூட்டம் இடுவதற்கு OpenID (wordpress, etc) க்கும் வாய்ப்பளிக்கலாமே?மோ. மோகன் குமார்.
//மோகன் Mohan said…
பெங்களுரு போன்ற இடங்களில் எதாவது பிரச்சினை என்றால் முதலில் கை வைப்பது தமிழ் சேனல்கள் மீது தான். இம்மாதிரி இடங்களில் DTH சேவை உண்மையாகவே வரபிரசாதம் தான்.//
உண்மை தான் இதையே தான் ராமலக்ஷ்மி மற்றும் சிவா வின் பின்னூட்டத்தில் கூறி உள்ளேன்.
//உங்கள் பதிவில், பின்னூட்டம் இடுவதற்கு OpenID (wordpress, etc) க்கும் வாய்ப்பளிக்கலாமே?//
நான் ஒரு சில சென்சிடிவ் பதிவுகளும் எழுதுகிறேன், அதனால் மன சங்கடம் ஏற்படும் பின்னூட்டங்கள் வரலாம் (இது வரை வந்ததில்லை) அதனால் எதற்கு அந்த கஷ்டம் என்று தான் அதற்க்கு இடமளிக்கவில்லை. உங்களை போல wordpress பதிவர்களுக்கு சிரமமான ஒன்று தான் மறுக்கவில்லை.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி மோகன்.
கிரி, இது என்னுடைய முதல் வருகை அல்ல. முதல் பின்னூட்டம். இந்த பிரச்சனையால் தான் இதுவரை நான் பின்னூட்டம் இட வில்லை.
//மோகன் Mohan said…
கிரி, இது என்னுடைய முதல் வருகை அல்ல. முதல் பின்னூட்டம். இந்த பிரச்சனையால் தான் இதுவரை நான் பின்னூட்டம் இட வில்லை.//
அப்படியா! நன்றி மோகன். பின்னூட்டம் எதுவும் உங்களுடையது பார்க்கவில்லை என்பதால் முதன் முறையாக வந்துள்ளீர்கள் என்று நினைத்தேன்.
அரசு கேபிள் மக்களுக்கு பாதகமா சாதகமா