திமுக அரசின் மின் தடை

40
திமுக அரசின் மின் தடை Power cut

ற்போது தமிழகம் முழுவதும் திமுக அரசின் மின் தடை பெரும் பிரச்சனையாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. Image Credit

திமுக அரசின் மின் தடை

தி மு க அரசு ஆட்சிக்கு வந்தால், மின் தடை பிரச்சனை இருக்கும். எப்போதும் ஆற்காடு வீராசாமி அவர்கள் மின்சாரத் துறை அமைச்சர்.

கடந்த முறை அ தி மு க ஆட்சியில் இதைப் போல மின் தடை இருந்ததில்லை.

ஆற்காடு வீராசாமி எப்போது வந்தாலும் மின் தடை பிரச்சனை என்பது வழக்கம்.

மின்வெட்டுத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி 

விஜயகாந்த் ஒரு படி மேல போய் ஆற்காடு வீராசாமி அவர்களை “மின்வெட்டுத் துறை அமைச்சர்” என்று கிண்டலடித்து இருக்கிறார்.

தற்போது மின் தடை பிரச்சனை ஏற்பட்ட போது சரி! கொஞ்ச நாள் இருக்கும் பின் சரியாகி விடும், கோடை காலம் என்பதால் அணையிலும் தண்ணீர் இல்லை.

எனவே, நீரிலிருந்து கூட மின்சாரம் எடுக்க முடியாது. பருவ மழையும் தாமதமாகத் தொடங்கியது. அதனால் கூடிய விரைவில் சரியாகி விடும் என்றே நினைத்தேன்.

மின் தடை அட்டவணை 

தற்போது அட்டவணை போட்டு மின் தடை அறிவிப்பை வெளியிடுவதையும், அவ்வாறு தடை செய்யப்படும் மின் தடையின் நேரம் நாளுக்குநாள் அதிகமாகி கொண்டு செல்வதையும் பார்க்கும் போது விஷயம் பெரியதாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

முதலில் மக்கள் மின்தடை இருந்த போது தினமும் இரண்டு மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி விடுகிறார்களே என்று புலம்பிக் கொண்டு இருந்தார்கள்.

ஆனால், தற்போது அது 6 மணி நேரம் தொடர்ந்து 9 மணி நேரமாக உயர்ந்த போது இரண்டு மணி நேர தடையைப் பெரும் மகிழ்ச்சியில் ஏற்றுக் கொள்ளும் மன நிலைக்கு வந்து விட்டார்கள் அல்லது தள்ளப்பட்டு விட்டார்கள்.

இன்றிலிருந்து (செப்டம்பர் 1) அமுலாக்கப்படும் அரசு மின்சாரத் தடை அட்டவணையைப் பார்த்தால் நமக்குப் பியுஸ் போய்டும் போல இருக்கு.

அட்டவணையே இப்படின்னா உண்மையா எவ்வளோ நேரம் மின்சாரம் இருக்காது என்று நினைத்தால் கண்ணைக் கட்டுகிறது.

மின் தேவை அதிகரிப்பு

இவ்வாறு தடை ஏற்படுவதற்கு அரசு கூறும் காரணங்கள் அதிகளவில் புதிய தொழிற்சாலைகள் உருவாகியது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரத் தேவை அதிகளவில் தேவைப்படுவது, இவையே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

போதுமான மின்சார வசதிகளை உருவாக்காமல் எதற்குத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்?

தற்போது இதனால் அவர்களுக்கும் சரியான அளவில் மின்சாரம் வழங்க முடியவில்லை பொதுமக்களுக்கும் கடும் சிரமம்.

தற்போது இந்தக் காரணத்தால் ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் திருப்பூரும் கோவையும் முக்கிய இடங்கள், இவர்களிடம் கேட்டால் ரத்த கண்ணீரே வடித்து விடுவார்கள்.

ஜெனரேட்டர்

தினமும் ஜெனரேட்டரில், தொழிற்சாலையை நடத்துவது என்பது எந்த ஒரு நிறுவனத்தாலும் முடியாத ஒன்று.

எடுத்துக்காட்டாக முன்பு இருந்த நிறுவன வளாகத்தில் ஜெனரேட்டரில் ஓட்டுவது என்றால் ஒரு நாளைக்கு 35000 ரூபாய் டீசலுக்கு மட்டும் ஆகும்.

பன்னாட்டு நிறுவனங்கள் ஓரளவு இதைச் சமாளிக்க முடியும் (அவர்களுக்கே சிரமம்) இந்நிலையில் சாதாரண நிறுவனங்கள் எப்படித் தங்கள் நிறுவனத்தை நடத்த முடியும்.

உள்ளதும் போனது

தொழில் வளத்தைப் பெருக்குவதாக நினைத்து ஏற்கனவே உள்ளவர்களுக்கு ஆப்பு வைத்து விட்டதாகவே தெரிகிறது. பலர் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த வேலையைத் தவிர எங்களுக்கு வேறு தெரியாது இந்நிலை தொடர்ந்தால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று கூறுகிறார்கள்.

இவை எல்லாவற்றையும் விடக் கொடுமை, நிலைமை சரியாகும் வரை மாலை நேரங்களில் வெல்டிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பம்புசெட்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறி இருப்பதை நினைத்துச் சிரிப்பதா அழுவதா!

நம்முடைய மின்சாரத்தைக் கர்நாடகம் உட்படப் பல அண்டை மாநிலங்களுக்கு நம் மாநிலம் விற்று வருகிறது.

நமக்கே இல்லாத போது மற்றவர்களுக்கு எப்படிக் கொடுக்க முடியும், தனக்கு மிஞ்சியது தானே எதுவும்.

மத்திய அரசிடம் இருந்தும் வாங்குவதாகக் கூறுகிறது, இது பற்றிய உள் விவகாரங்கள் எதுவும் தெரியாததால் இது பற்றி மேலும் விமர்சிப்பது நியாயமாகப் படவில்லை.

பொதுமக்கள் சிரமம் அரசியல்வாதிகளுக்குப் புரியாது

தமிழக அரசு இந்தப் பிரச்சனைக்கு ஏதாவது ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும். இதனால் மக்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது.

அரசியல்வாதிகள் வீட்டில் எப்போதும் மின்சாரம் போகாது இதனால் அவர்களுக்குச் சாதாரண மக்களின் மன நிலையும் அவர்கள் படும் கஷ்டமும் புரியுமா!

காலையில் அலுவலகம் செல்லும் போது சட்னி அரைக்க மிக்சிக்கு மின்சாரம் இல்லை என்றால் வரும் ஆத்திரம் இவர்களுக்குப் புரியுமா?

ஃபேன் இல்லை என்றால் குழந்தை இரவில் தூங்காமல் அழுது கொண்டே இருப்பது இவர்களுக்குக் கேட்குமா?

நாடு உயர தொழில் முன்னேற்றம் அவசியம்.

ஆனால், அதற்குண்டான கட்டமைப்பைச் சரிவர ஏற்படுத்தாமல், அனுமதித்தால் ஏற்கனவே உள்ள தொழில்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கும்.

1 கிலோ அரிசி 1 Re எல்லாம் மக்களைத் திருப்தி படுத்தாது அல்லது சமாதான படுத்தாது என்பதை அரசு உணர வேண்டும்.

தற்போது நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு மற்ற மாநிலங்களின் மின்சாரப் பிரச்னையை உதாரணம் காட்டி சப்பை கட்டுக் கட்டாமல், நம் குறைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

40 COMMENTS

 1. //கோவை சிபி said…
  The government can not solve our problems.Actually goverment is our problem//

  :-))

  //The only solution for the current crisis is to allow the private players to get in to the energy market.
  They will try to find ways to produce more electricity and improve the efficiency of the distribution networks//

  நீங்கள் கூறுவது ஏற்று கொள்ள கூடியதே, அரசுக்கு இருப்பதை வைத்து எப்படி ஒட்டி கொண்டு இருக்கலாம் என்று தான் யோசிக்குமே தவிர, நிலைமை உணர்ந்து புதிய முயற்சிகளை எடுக்காது. இதற்க்கு பல கட்டுப்பாடுகளும் திட்டங்களும் என தடையாக நிற்கும். ஓவ்வொரு விசயத்தையும் செயல்படுத்துவது என்றால் பலரிடம் அனுமதி வழி முறைகள் என்று கால தாமதாமாகும். அதுவும் இல்லாமல் நீங்க கூறுவது போல வேலையில் பல தில்லு முல்லுகள் ஊழகள் என்று பல பிரச்சனைகள்.

  //All the innovations(car,TV,phone etc.,) of the mankind came from a individual//

  தனியார் துறை வந்த பிறகே தற்போது கட்டணங்கள் குறைந்துள்ளன. எனவே எதிலும் போட்டி இல்லை என்றால் இதை போலவே சுணக்கம் ஏற்படும்.

  //If we let the free market(without any goverment intervention in the form of regualtions,licenses,permits) to operate, it will solve all our problems in shorter period of time.//

  எனக்கு மின்சார துறையில் தனியாரை அனுமதித்தால் எந்த அளவுக்கு சரிப்பட்டு வரும் என்று எனக்கு ஒரு ஐடியா இல்லை. அதில் உள்ள பிரச்சனைகள் பற்றி எனக்கு ஐடியா இல்லை. இது சாத்தியமா என்று தெரியவில்லை.

  இது பற்றி நீங்களோ அல்லது தெரிந்தவர்களோ கூறினால் நன்றாக இருக்கும்.

  //The nations which adopted the free market system( like Hong Kong,singapore, Malaysia)were able to pull millions of people out of poverty and deprivation in couple of decades.//

  சிங்கையில் மின்சாரம் தனியாரிடமே உள்ளது அரசு கட்டுப்பாட்டில். இவர்கள் வேலையில் ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக விளக்கம் கேட்கப்படுகிறது. கொடுக்கும் காசுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் வழங்குகிறார்கள். சமீபத்தில் மின்சாரம் இல்லை என்று கேள்வி பட்டதே இல்லை, சமீபம் என்றால் இங்கே வருடங்கள். எனவே அரசு நினைத்தால் தடை இல்லாத மின்சாரத்தை கொடுக்க முடியும் சரியான திட்டங்களுடன்.

  யாருக்கும் இதை பற்றிய கவலை இல்லாததால் மக்கள் தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்.

  உங்கள் வருகைக்கும் விரிவான விளக்கத்திற்கு நன்றி கோவை சிபி.

 2. உங்கள் அலசல் காரண காரியங்களை ஆராய்ந்திருப்பதோடு நில்லாமல் ஒட்டு மொத்த மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

  //தற்போது அது 6 மணி நேரம் தொடர்ந்து 9 மணி நேரமாக உயர்ந்த போது இரண்டு மணி நேர தடையை பெரும் சந்தோசத்தில் ஏற்று கொள்ளும் மன நிலைக்கு வந்து விட்டார்கள் அல்லது தள்ளப்பட்டு விட்டார்கள்.//

  கர்நாடகத்திலும் மின்வெட்டு இதே நிலைதான். நீங்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் எல்லா அரசுகளுக்கும் பொருந்துபவையாகத்தான் உள்ளன. இங்கு பீன்யா போன்ற தொழில் ந்கரங்களில் ஒரு கட்டத்தில் ஒட்டு மொத்தமாக எல்லோரும் அல்லல் பட்டு நட்டப் படுவதற்கு பதில் டர்ண் போட்டு இன்ன கிழமைகளில் இந்த தொழிற்சாலைகள் என இயங்குவோமா என்கிற நிலைமைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

  //பன்னாட்டு நிறுவனங்கள் ஓரளவு இதை சமாளிக்க முடியும் (அவர்களுக்கே சிரமம்) //

  இப்போது அவர்களும் டீசல் தட்டுப் பாடினால் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சிறு தொழிற்கூடங்கள் எங்ஙனம் இயங்க இயலும்?

  //காலையில் அலுவலகம் செல்லும் போது சட்னி அரைக்க மிக்சிக்கு மின்சாரம் இல்லை என்றால் வரும் ஆத்திரம் இவர்களுக்கு புரியுமா?//

  மோட்டர் போடவும் இயலாமல் தண்ணீர் கூட பிரச்சனையாகி விடுகிறது காலை வேளைகளில்.

  //தற்போது நிலவும் மின்சார தட்டுப்பாட்டிற்கு மற்ற மாநிலங்களின் மின்சார பிரச்னையை உதாரணம் காட்டி சப்பை கட்டு கட்டாமல் நம்முடைய குறைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.//

  உண்மைதான மற்ற மாநிலங்களில் உள்ள எந்த நல்ல விஷயங்களையும் முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளாத அரசுகள் சப்பைக் கட்டுக்கு மட்டும் அடுத்தவர்களை காட்டுவார்கள்.

  “மனசாட்சி”யின் குரல் அரசின் மனசாட்சியைத் தட்டி எழுப்பட்டும் கிரி.

 3. //Vidhya said…
  எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் தான், எப்ப மின் தடை இல்லாம இருக்குற காலம் வரும்//

  வித்யா இதுக்கு எனக்கு சத்தியமா விடை தெரியாது …ரொம்ப கஷ்டமான கேள்வி :-))

 4. நியாயமான எதிர்பார்ப்பு…

  இது சம்பந்தமாக விஜயகாந்த் ஒரு கூட்டத்தில் பேசியது, “இனி மின்வெட்டு இருக்குமாம்… இத சொல்றதுக்கு ஒரு மின்துறை அமைச்சர்”

 5. //ஜோசப் பால்ராஜ் said…
  ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் உபயோகத்தில் இருந்த பழைய கம்பிகளை மாற்றி புது கம்பிகளை அமைக்காமையாலும் மேலும் மின்சாரத்தை வீண்டிக்கிறோம்//

  நம்ம செய்கிற பெரிய தவறு, பழையது ஆனாலும் அது பிஞ்சு போகிற வரை பயன்படுத்தாம விட மாட்டோம், பழைய பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நஷ்டம் பற்றி அறியாமல் செலவு ஆகும் என்று வாங்காமல் இருப்பார்கள்.

  //முதலில் இந்த மின்வெட்டு பிரச்சனைகள் தீரும் வரை எந்த அரசியல்கட்சியும் இரவு வேளைகளில் எந்த பொது கூட்டத்தையும் நடத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்.//

  சரியா சொனீங்க..இவனுகளே பாதி மின்சாரத்தை வெட்டி செய்து விடுறாங்க..நம்ம நகராட்சி அதற்க்கு போட்டியா பகல்லயே லைட் போடுரானுக

  //ஏற்கனவே ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு கொடுத்து குட்டிச்சுவராக்கியது போதாது என்று தற்போது 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கப்போகின்றார்களாம். இது இன்னும் மோசமாக சோம்பேறிகளை உருவாக்குமே தவிர எந்த வளர்ச்சியையும் ஏற்படுத்தாது.//

  இலவசம் கொடுத்து கொடுத்தே நம் மக்களை சோம்பேறி ஆக்கி விட்டார்கள்.

  உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜோசப் பால்ராஜ்.

 6. //கோவி.கண்ணன் said…
  கிரி நல்ல அலசல்.
  பாராட்டுக்கள்
  :)//

  முழுசா படித்த மாதிரி தெரியல..;-) சிரிப்பானை வேற போட்டு வைத்து இருக்கீங்க.

 7. //ராமலக்ஷ்மி said…
  உங்கள் அலசல் காரண காரியங்களை ஆராய்ந்திருப்பதோடு நில்லாமல் ஒட்டு மொத்த மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.//

  நன்றி ராமலக்ஷ்மி, சாமானியனின் கஷ்டம் சாமானியனுக்கு தான் புரியும்.

  //கர்நாடகத்திலும் மின்வெட்டு இதே நிலைதான்//

  அப்படியா! நீங்கள் கூறுவது எனக்கு புதிய செய்தி. நான் இந்த பிரச்சனை தமிழ் நாட்டில் மட்டுமே என்று நினைத்து இருந்தேன், செய்திகளில் கூட உங்கள் பகுதியில் மின்சாரம் பிரச்சனை உள்ளது என்று படிக்கவில்லை. ஒருவேளை ஊடகங்களுக்கு வெட்டி செய்திகளை கொடுப்பதே வேலையாக இருந்து விட்டதோ!

  //நட்டப் படுவதற்கு பதில் டர்ண் போட்டு இன்ன கிழமைகளில் இந்த தொழிற்சாலைகள் என இயங்குவோமா என்கிற நிலைமைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.//

  இப்படி இருந்தால் எப்படி தொழில் நடத்துவது, டீசலுக்கும் தட்டுப்பாடு மின்சாரமும் இல்லை என்றால் என்ன செய்வார்கள். இதை எல்லாம் எதிர்ப்பார்க்காமல் ஆட்சியை தக்க வைப்பது எப்படி என்ற யோசனையிலே அனைவருக்கும் பொழுது போய் விடுகிறது. அப்புறம் எங்கே நாட்டு மக்கள் பிரச்சனையில் அக்கறை காட்டுவார்கள்.

  //உண்மைதான மற்ற மாநிலங்களில் உள்ள எந்த நல்ல விஷயங்களையும் முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளாத அரசுகள் சப்பைக் கட்டுக்கு மட்டும் அடுத்தவர்களை காட்டுவார்கள்//

  சரியா சொன்னீங்க ..நம்ம ஆளுங்க நல்ல விசயங்களை முன்னுதாரணமா எடுத்துக்க மாட்டாங்க இதை போல மொக்கை சமாதானம் சொல்ல தான் பயன்படுத்துவாங்க.

  //”மனசாட்சி”யின் குரல் அரசின் மனசாட்சியைத் தட்டி எழுப்பட்டும் கிரி.//

  🙂 அனைத்து மக்களின் மனசாட்சியும் இதில் கொஞ்சமாவது நினைக்கும் என்றே கருதுகிறேன்..

  உங்களின் வருகைக்கும் விரிவான பதிலுக்கும் நன்றி ராமலக்ஷ்மி

 8. //சரவணகுமரன் said…
  நியாயமான எதிர்பார்ப்பு…
  இது சம்பந்தமாக விஜயகாந்த் ஒரு கூட்டத்தில் பேசியது, “இனி மின்வெட்டு இருக்குமாம்… இத சொல்றதுக்கு ஒரு மின்துறை அமைச்சர்”//

  ஜோசப் பால்ராஜ் அவர்கள் கூறியது போல நம்ம ஊர்ல அரசு செய்யுற வெட்டி ஆடம்பரத்தை குறைத்தாலும், அரசியல் வாதிகள் மற்றும் பல தொழிற்ச்சாலைகள் செய்யும் மின்சார திருட்டை தடுத்தாலுமே போதுமானது. குளிர்சாதன வசதி செய்யப்பட அறையில் உட்காந்து கொண்டு மின்சாரம் பிரச்சனை எதுவுமில்லை, இன்னும் இரண்டு நாள்ல சரி ஆகிடும் ஒரு வாரத்துல சூப்பர் ஆகிடும்னு சொல்வதற்கு எதற்கு ஒரு அமைச்சர் ..சரியா தான் கேட்டு இருக்காரு..

  உங்கள் வருகைக்கு நன்றி சரவணகுமரன்

 9. //அகநாழிகை said…
  என்னைப்போல மின்சாரத்தை நம்பி சிறு தொழில் புரிவோர் நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது.//

  உண்மை தான். பெரிய நிறுவனங்களே திண்டாடி கொண்டு இருக்கும் போது உங்களை போன்றவர்களின் நிலை ரொம்ப பரிதாபம் தான்.

  //இன்று முதல் ஐந்து மணி நேர மின் தடையாம் ! நினைக்கவே கொடுமையாக உள்ளது.//

  நான் அவ்வாறு நினைக்கவில்லை, அவர்கள் கூறுவது ஐந்து மணி நேரம், இதை விட அதிகமாகவே இருக்கும் என்றே கருதுகிறேன்.

  டீசல் போட்டெல்லாம் தினமும் நடத்துவது என்பது நடை முறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி அகநாழிகை.

 10. The government can not solve our problems.Actually goverment is our problem.The only solution for the current crisis is to allow the private players to get in to the energy market.
  They will try to find ways to produce more electricity and improve the efficiency of the distribution networks.All the innovations(car,TV,phone etc.,) of the mankind came from a individual
  or private enterprise.I don’t think of anything government invented to improve the standard of life of the people.The private enterprise is motivated by the profit.This may make our comrades in the left uncomfortabel.But this motivation to make profit is what leading the private enterprise to innovate and make the products and services more efficient.
  Our leaders would rather keep the people in dark in the name of protecting the “evil” corporation from making profit from the innocent people than trying to solve the problems of common man.

  If we let the free market(without any goverment intervention in the form of regualtions,licenses,permits) to operate, it will solve all our problems in shorter period of time.
  The nations which adopted the free market system( like Hong Kong,singapore, Malaysia)were able to pull millions of people out of poverty and deprivation in couple of decades.

 11. எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் தான், எப்ப மின் தடை இல்லாம இருக்குற காலம் வரும்

 12. காற்றாலைகள் உற்பத்தி செய்யும் மொத்த மின்சாரத்தையும் வாங்கி விநியோகிக்கும் திறன் கொண்ட கம்பிகள் இல்லை என்பதால் காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்திலேயே ஒரு பகுதியளவு வீணாய் போகின்றது. மேலும் தரமற்ற கம்பிகளை பயன்படுத்துவதாலும், ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் உபயோகத்தில் இருந்த பழைய கம்பிகளை மாற்றி புது கம்பிகளை அமைக்காமையாலும் மேலும் மின்சாரத்தை வீண்டிக்கிறோம். இதற்கு மேல் இன்றளவும் மாறாமல் நம் அரசியல்வாதிகள் நடத்தும் பொது கூட்டங்களுக்கு அமைக்கப்படும் ஆடம்பர மின்விளக்குகளும் அதற்காக திருடப்படும் மின்சாரமும் என பல காரணங்கள் .

  முதலில் இந்த மின்வெட்டு பிரச்சனைகள் தீரும் வரை எந்த அரசியல்கட்சியும் இரவு வேளைகளில் எந்த பொது கூட்டத்தையும் நடத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்.

  செய்யாறு அனல் மின் திட்டம், கடலூர் அனல் மின் திட்டம் என இரண்டு திட்டங்கள் 2 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட வேண்டியது ஆனால் பாமக வின் திருகுதாளங்களால் அவை முடங்கிப்போயின. இப்படி தோழமை கட்சிகள் , எதிர்கட்சிகள் ஆகியோரின் எதிர்ப்பை ஆக்கபூர்வமாக சமாளிக்க முடியாமல் நல்ல திட்டங்களை கிடப்பில் போட்டதும் ஒரு முக்கியமான காரணம்.
  ஏற்கனவே ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு கொடுத்து குட்டிச்சுவராக்கியது போதாது என்று தற்போது 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கப்போகின்றார்களாம். இது இன்னும் மோசமாக சோம்பேறிகளை உருவாக்குமே தவிர எந்த வளர்ச்சியையும் ஏற்படுத்தாது. அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியே ஒரு கூட்டத்தில் பேசும்போது 2ரூ அரிசியும், இலவச டிவியும் பல சோம்பேறிகளை உருவாக்கிவிட்டது என கூறியிருந்தார். ஆனாலும் கலைஞர் அவரது வயோதிக காலத்தில் நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கிக்கொண்டிருக்கின்றார்.

 13. //ARUVAI BASKAR said…
  கிரி நடுநிலைமையுடன் நல்ல எழுதியிருக்கிறீர்கள்//

  நன்றி பாஸ்கர். முடிந்த வரை என் பதிவுகள் நடுநிலைமையுடனே எழுத முயற்ச்சிக்கிறேன்.

  //ரொம்ப ரொம்ப கஷ்டபடுகிறோம் !
  தொழில் பண்ணுவது மிகவும் சிரமமாய் இருக்கிறது எங்களைப்போல் சிறுதொழில் செய்பவர்களுக்கு //

  கண்டிப்பாக கஷ்டமாக தான் இருக்கும், புரிந்து கொள்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள். ஆனால் அவ்வாறு இருப்பவர்கள் அரசியல்வாதிகளாக இல்லாமல் என்னை போல சாதாரண பொதுமக்களாக இருப்பது தான் பிரச்சனையாக உள்ளது.

  //எவ்வித கலப்பும் இல்லாத உண்மை !//

  உங்கள் வருகைக்கு நன்றி பாஸ்கர்.

 14. //BALAJI said…
  நண்பர்களே மின்சரா உபயோகத்தை குறைக்க ஒரு எளிதான வழி உள்ளது. மேலை நாடுகளில் உள்ளது போல் வீடுகளுக்கு தனியான line கொடுக்கலாம். //
  //வீடு மற்றும் தொழில் சாலை என இரு lines உருவாகினால், வீடுகளுக்கு தேவையற்ற மின் வெட்டை தவிர்க்கலாம்.//

  பாலாஜி தற்போதும் வீட்டுக்கு தனி, தொழிற்சாலைகளுக்கு தனி மற்றும் விவசாயத்துக்கு தனியாகவே கொடுக்கப்படுகிறது.

  இது பற்றி மேலும் எனக்கு தெரியாததால் கூறவிரும்பவில்லை.

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

 15. //முகவை மைந்தன் said…
  திமுக அரசின் கையாலாகாத செயல் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. எந்த அரசாக இருந்தாலும் இதே நிலை தான். //

  நீங்கள் சொல்வது போல இருக்கலாம், ஆனால் இந்த அளவுக்கு மோசமாக வரும் முன்பும் தி மு க ஆட்சி காலத்தில் மட்டும் இந்த மின்சார பிரச்சனை இருந்தது. ஆற்காடு வீராசாமி வந்தார் என்றாலே மின் பிரச்சனை வரும் என்று பலர் கூறுவார்கள்.

  //பொறுப்பற்ற அறிக்கைகளை விட்டு மேலும் வெறுப்பேற்படுத்துகிறார்.//

  மக்களை சமாதானபடுத்துவதல்ல ஒரு அரசின் கடமை, பிரச்சனைக்கு தீர்வு காண்பதே சிறப்பான ஒன்று.

  //மின்வெட்டு இல்லாத நிலை இன்று முப்பதுகளில் இருப்பவர்களுக்கு தங்கள் ஆயுள் காலத்தில் வாய்ப்பே இல்லை//

  உங்கள் நினைப்பு பொய்யாக இறைவனை வேண்டுகிறேன் 🙂

  //உருப்படியான தீர்வுன்னு எதுவும் இல்லாத நிலையில் எந்த அரசாலும் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்க முடியாது.//

  சரியா சொன்னீங்க ..சரியான தொலை நோக்கு திட்டங்கள் இல்லாமல் எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியாது.

  நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வருகைக்கு நன்றி முகவை மைந்தன்.

 16. உங்கள் கட்டுரை நல்ல பதிவு. என்னைப்போல மின்சாரத்தை நம்பி சிறு தொழில் புரிவோர் நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது. இன்று முதல் ஐந்து மணி நேர மின் தடையாம் ! நினைக்கவே கொடுமையாக உள்ளது.

 17. கிரி நடுநிலைமையுடன் நல்ல எழுதியிருக்கிறீர்கள் .
  ரொம்ப ரொம்ப கஷ்டபடுகிறோம் !
  தொழில் பண்ணுவது மிகவும் சிரமமாய் இருக்கிறது எங்களைப்போல் சிறுதொழில் செய்பவர்களுக்கு !
  அன்புடன்,
  அருப்புக்கோட்டை பாஸ்கர்

 18. //தி மு க ஆட்சிக்கு வந்தால் எப்போதும் ஆற்காடு வீராசாமி அவர்கள் மின்சார துறை அமைச்சர். கடந்த முறை அ தி மு க ஆட்சியில் இதை போல மின் தடை இருந்ததில்லை. ஆற்காடு வீராசாமி எப்போது வந்தாலும் மின் தடை பிரச்சனை வரும் என்று அனைவரும் புலம்புவதை கேட்டு இருக்கிறேன்//
  எவ்வித கலப்பும் இல்லாத உண்மை !

 19. நண்பர்களே மின்சரா உபயோகத்தை குறைக்க ஒரு எளிதான வழி உள்ளது. மேலை நாடுகளில் உள்ளது போல் வீடுகளுக்கு தனியான line கொடுக்கலாம். அதிலும் 110 wats அளவு மின்சாரத்தை வீடுகளுக்கு கொடுப்பது பாதியளவு மின் தேவையை குறைக்கும். மேலும் வீடு மற்றும் தொழில் சாலை என இரு lines உருவாகினால், வீடுகளுக்கு தேவையற்ற மின் வெட்டை தவிர்க்கலாம்.

 20. //அப்படியா! நீங்கள் கூறுவது எனக்கு புதிய செய்தி. நான் இந்த பிரச்சனை தமிழ் நாட்டில் மட்டுமே என்று நினைத்து இருந்தேன், செய்திகளில் கூட உங்கள் பகுதியில் மின்சாரம் பிரச்சனை உள்ளது என்று படிக்கவில்லை. //

  கர்நாடகத்தில் தமிழகம் போல ஒரு ஆக்டிவ் அரசியல் இல்லாததும் இச்செய்திகள் அதிகம் வெளிவராது போவதற்கு ஒரு காரணம். எதற்கெடுத்தாலும் சும்மா அரசியல் பண்றாங்கன்னு சொல்பவர்கள் சொன்னாலும் தமிழகத்தில் எதிர்கட்சிகள் எல்லாவற்றையும் தட்டிக் கேட்ட வண்ணம் இருப்பதும் பாராட்டத் தக்க விஷயம்தான் என்பது எனது கருத்து.

 21. திமுக அரசின் கையாலாகாத செயல் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. எந்த அரசாக இருந்தாலும் இதே நிலை தான். ஆனால் அமைச்சர் கையாளும் விதம் முதல்வரின் தேர்வுத் திறனையும், ஒரு வேளை அவரால் கண்டு கொள்ள முடியாத நிலையோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்துகிறது.

  பொறுப்பற்ற அறிக்கைகளை விட்டு மேலும் வெறுப்பேற்படுத்துகிறார். மின்வெட்டு இல்லாத நிலை இன்று முப்பதுகளில் இருப்பவர்களுக்கு தங்கள் ஆயுள் காலத்தில் வாய்ப்பே இல்லை.

  உருப்படியான தீர்வுன்னு எதுவும் இல்லாத நிலையில் எந்த அரசாலும் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்க முடியாது.

 22. //Bleachingpowder said…
  //காலையில் அலுவலகம் செல்லும் போது சட்னி அரைக்க மிக்சிக்கு மின்சாரம் இல்லை என்றால் வரும் ஆத்திரம் இவர்களுக்கு புரியுமா? குழந்தை ஃபேன் இல்லை என்றால் இரவில் தூங்காமல் அழுது கொண்டே இருப்பது இவர்களுக்கு கேட்குமா? //

  சத்தியமான வார்த்தைகள்.//

  உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

 23. //மோகன் Mohan said…
  200% சதவிகிதம் உண்மை. அவர்கள் விட்டால் அக்கம்பக்கமுள்ள வீடுகளிலிருந்துக் கூட மின்சாரம் எடுத்துக் (திருடிக்) கொள்வர்.//

  அக்கம் பக்கம் வீடுகளில் எடுக்க மின்சாரம் இருக்குமா என்று தெரியவில்லை, ஜெனரேட்டர் போட்டே கலக்குவாங்க..அவங்க வீட்டு காசா என்ன?

  //புதியதாக வரும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் அனுமதி கொடுக்கவேண்டியது, அதற்கு தேவையான கட்டமைப்பு இல்லாமலேயே,பின்னர் திண்டாடுவது//

  இதுவே பாதி பிரச்சனைகளுக்கு காரணம்

  //பெங்களூருவிலும் மின்வெட்டுப் பிரச்சினை உள்ளது. இது இவ்வாண்டு மட்டுமல்ல. நான் இங்கே வந்ததிலிருந்து(2003) மின்வெட்டுப் அமுலில் இருக்கிறது//

  இவர்கள் சரியான திட்டமிடுதல் மூலம் இதை தவிர்க்கலாம்..ஆனால் யாருக்கு மக்கள் மீது அக்கறை இருக்கிறது.

  உங்கள் வருகைக்கு நன்றி மோகன்

 24. //Puduvai Siva 🙂 said…
  Dear Kiri
  well article keep it up//

  நன்றி சிவா.

  //and you give suggession use invetor in cheep price.
  it is more demant now in tamilnadu //

  உண்மை தான் நானும் செய்திகளில் பார்த்தேன், ஆனால் இதை எத்தனை பேர் வாங்க முடியும் என்று தெரியவில்லை தவணை முறையில் கொடுத்தாலும்.

  உங்கள் வருகைக்கு நன்றி தொடர்ந்து வாருங்கள்..

 25. //Mahesh said…
  இதுல அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்படுதுங்கறதாவது இவங்களுக்கு உறைக்குதான்னு தெரியல//

  இப்படி எல்லாம் யோசித்து இருந்தால் நம் ஊர் தான் எப்போதே முன்னேறி இருக்குமே. அடுத்த தலைமுறையில் மட்டுமே வாய்ப்பு இருக்கிறது என்று கருதுகிறேன்.

  //ஆமா….கிரி….கோவி.கண்ணன் பதிவுல ஃபோட்டோ பார்த்தேன்… நீங்க டெமினாஸ் கிரிதானே? //

  நன்றி மகேஷ் என்னை கண்டு கேட்டதற்கு. தொடர்பில் இருங்கள்.

 26. //ராமலக்ஷ்மி said…
  உங்கள் பார்வைக்கு ஒரு சில சுட்டிகள்://

  நன்றி ராமலக்ஷ்மி.

  //கர்நாடகத்தில் தமிழகம் போல ஒரு ஆக்டிவ் அரசியல் இல்லாததும் இச்செய்திகள் அதிகம் வெளிவராது போவதற்கு ஒரு காரணம்.//

  இதில் சாதகமும் உள்ளது பாதகமும் உள்ளது. ஒன்றும் இல்லாத விசயத்துக்கெல்லாம் அறிக்கை விட்டுக்கொண்டு இருப்பார்கள்.

  //எதற்கெடுத்தாலும் சும்மா அரசியல் பண்றாங்கன்னு சொல்பவர்கள் சொன்னாலும் தமிழகத்தில் எதிர்கட்சிகள் எல்லாவற்றையும் தட்டிக் கேட்ட வண்ணம் இருப்பதும் பாராட்டத் தக்க விஷயம்தான் என்பது எனது கருத்து.//

  நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தாலும், இவர்கள் செய்யும் குடைச்சலால் பல நல்ல திட்டங்கள் கிடைக்காமல் போனது வருத்தமான செய்தி.

  எனக்கு தெரிந்து அரசியல்வாதிகள் மக்கள் மீதுள்ள அனுதாபத்தில் இவ்வாறு கேட்பதில்லை அடுத்த ஆட்சியை பிடிக்க இப்படி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இது எங்கேயும் ஒன்று தான் என்பதால் இதில் நாம் கூற எதுவுமில்லை. பிரச்சனை எப்படியோ வெளியே தெரிகிறதே என்று சந்தோஷ பட்டுக்கொள்ள வேண்டியது தான்,

  உங்கள் வருகைக்கும் தொடர் கருத்திற்கும் நன்றி ராமலக்ஷ்மி.

 27. //காலையில் அலுவலகம் செல்லும் போது சட்னி அரைக்க மிக்சிக்கு மின்சாரம் இல்லை என்றால் வரும் ஆத்திரம் இவர்களுக்கு புரியுமா? குழந்தை ஃபேன் இல்லை என்றால் இரவில் தூங்காமல் அழுது கொண்டே இருப்பது இவர்களுக்கு கேட்குமா? //

  சத்தியமான வார்த்தைகள்.

  மூத்த பதிவர்கள் எல்லாம் சினிமா விமர்சணமும் அதை சார்ந்த விவாதங்களிலும் மட்டுமே ஈடுபட்டிருக்கும் வேளையில் உங்களுடய இந்த பதிவை பார்த்தாவது அவர்களும் தங்களுடைய கண்டனங்களை பதியட்டும். சும்மா எதாச்சும் செய்யனும் பாஸ்னு டயலாக் உட்டா மட்டும் பத்தாது

 28. //அரசியல்வாதிகள் வீட்டில் எப்போதும் மின்சாரம் போகாது
  200% சதவிகிதம் உண்மை. அவர்கள் விட்டால் அக்கம்பக்கமுள்ள வீடுகளிலிருந்துக் கூட மின்சாரம் எடுத்துக் (திருடிக்) கொள்வர்.

  //நாடு உயர தொழில் முன்னேற்றம் அவசியம் தான், ஆனால் அதற்குண்டான கட்டமைப்பை சரிவர ஏற்படுத்தாமல் இதை அனுமதித்தால் ஏற்கனவே உள்ள தொழில்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்பது தவிர்க்க முடியாதது
  இப்பிரச்சினை எல்லா மாநிலங்களிலும் உள்ளது. புதியதாக வரும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் அனுமதி கொடுக்கவேண்டியது, அதற்கு தேவையான கட்டமைப்பு இல்லாமலேயே. பின்னர் திண்டாடுவது. உதாரணாத்திற்கு பெங்களூருவில் தொழிற்துறை முன்னேறிய அளவு, சாலை கட்டமைப்பு முன்னேறவில்லை. இப்போது தான் முயற்சித்துக் கொண்டுள்ளனர். பெங்களூருவிலும் மின்வெட்டுப் பிரச்சினை உள்ளது. இது இவ்வாண்டு மட்டுமல்ல. நான் இங்கே வந்ததிலிருந்து(2003) மின்வெட்டுப் அமுலில் இருக்கிறது.

  மோ. மோகன் குமார்
  http://pathivu.wordpress.com

 29. இதுல அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்படுதுங்கறதாவது இவங்களுக்கு உறைக்குதான்னு தெரியல…..இந்த மூன்றாம் காலாண்டுல மின் வாரியத்துக்கு 35%க்கு மேல வருமானம் குறைவு… இது ஒரு ‘அவலான்ச்’ விளைவு மாதிரி தொடரும்…. இதே நிலை தொடர்ந்தா அடுத்த வருடம் மின் நிலயங்களின் பராமரிப்பு செலவுக்கு கூட வருமானம் இருக்காது.

  ஆமா….கிரி….கோவி.கண்ணன் பதிவுல ஃபோட்டோ பார்த்தேன்… நீங்க டெமினாஸ் கிரிதானே? அப்படின்னா எனக்கு 81275347-க்கு ஃபோன் போடுங்க…

 30. கிரி கொஞ்சம் விடுப்பில் போனதால இங்க வர காலதாமதம் ஆகிப்போச்சு.மன்னிக்கவும்.

  யார் அரசாக இருந்தாலும் இதுதான் நிலை. விரிவாக உங்க மெயிலுக்கு வருகிறேன். 🙂

 31. //புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
  கிரி கொஞ்சம் விடுப்பில் போனதால இங்க வர காலதாமதம் ஆகிப்போச்சு.மன்னிக்கவும்.//

  அப்படியா! விடுமுறையை நல்லா கொண்டாடினீர்களா? 🙂

  //யார் அரசாக இருந்தாலும் இதுதான் நிலை.//

  உண்மை தான் அப்துல்லா நான் மறுக்கவில்லை, புரிந்து கொள்பவர்கள் எவரும் இதை ஒப்புக்கொள்வார்கள். ஆனால் தற்போது உள்ள பிரச்சனைக்கு நாம் தற்போதுள்ள அரசை தானே பொறுப்பேற்று பேச முடியும், போன ஆட்சியில் அவர்கள் சரியாக செய்யவில்லை என்று கூறி கொண்டு இருப்பதில் பயனில்லையே. அதுவும் இல்லாமல் தற்போதைய பிரச்னையை விடுங்கள் இது இல்லாமல் எப்போது ஆற்காடு மின்துறை அமைச்சராக இருந்தாலும் மின் தடை பிரச்சனை உண்டு என்பது பொதுவான குற்றசாட்டு. இதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நானும் இதை உணர்ந்து இருக்கிறேன். அரசு இதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து கண்டிப்பா இனி நடவடிக்கை எடுக்கும் என்றே நம்புகிறேன். எனென்றால் நாமே இவ்வளோ யோசிக்கும் போது பல முனை தாக்குதலில் சிக்கி இருக்கும் அரசு இந்த பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்பலாம். எனென்றால் எதிர்கட்சிகள் என்னமோ அவர்கள் ஒழுங்கு போல இது தான் சமயம் என்று கேள்வி மேல் கேள்வி, அறிக்கை மேல் அறிக்கை என்று விட்டு மக்கள் மீதான “அக்கறையை” காட்டுவார்கள்.

  உங்கள் வருகைக்கு நன்றி அப்துல்லா.

 32. சரி,நீங்க அதிமுக வா? இல்லை “அவாளா”? கழகத்தின் பொற்கால ஆட்“சீ”யப் பத்தி பொய்யுரை எழுத எவ்வுளவு “கை” யூட்டு பெற்றீர்கள்?? மாயவரத்தார் எழுதியது போல “சோமாலியா”ல மின் வெட்டு உள்ளது. நமது தொலைக்காட்சியில் வரும் நமீதா நிகழ்ச்சியால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இது போன்ற பொய்யுரை மூலம்…….

  அய்யய்யோ…. கிரி, மன்னியுங்கள். இதை “அவர்” படித்தால் என்ன பதில் வரும் என்று நினைத்துப் பார்த்தேன். வேறொன்றுமில்லை!

 33. //Vijay said…
  அய்யய்யோ…. கிரி, மன்னியுங்கள். இதை “அவர்” படித்தால் என்ன பதில் வரும் என்று நினைத்துப் பார்த்தேன். வேறொன்றுமில்லை!//

  விஜய் இப்படி பீதிய கிளப்புறீங்க..நான் உள்ளதை தானே கூறினேன்..எதையும் அதிகமாக சொல்லவில்லையே 🙂

 34. //dinesh said…
  Whenever Kalingar’s Party come as a Ruling party, We are facing like this problems//

  தினேஷ் நீங்க கூறுவது சரி தான்..ஆனால் இதை போல பிரச்சனை ஏற்படுவது இதுவே முதல் முறை. முன்பு சிறு சிறு மின்சார பிரச்சனை இருக்கும்..இந்த முறை கண்டபடி இருக்கிறது.

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

 35. //மங்களூர் சிவா said…
  மின்சார திருட்டையும் மின்சார இழப்பையும் (transmission loss) தவிர்த்தாலே பெருமளவு மின்சாரம் வீணாவது தவிர்க்கப்படும்//

  சிவா மக்கள் தொகை மிகுந்த ஊழல்கள் மலிந்த இங்கு, இந்த பிரச்னையை தவிர்க்கவே முடியாது. நாம் ஆதங்கம் தான் பட முடியும்.

  உங்கள் வருகைக்கு நன்றி சிவா.

 36. மின்சார திருட்டையும் மின்சார இழப்பையும் (transmission loss) தவிர்த்தாலே பெருமளவு மின்சாரம் வீணாவது தவிர்க்கப்படும்

 37. ஆற்காடு வீராசாமிக்கு மின் துறையை நிர்வகிக்க திறமை போதாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.(கலைஞர் பாணியில் சொல்வதானால்)இருந்தும் அவர் ஏன் தொடர்ந்து அந்த துறை அமைச்சராக உள்ளார் என்பதுதான் புதிர்.திமுக அமைச்சரவை பதவி ஏற்க போகிறது என்றால் இவர் இவர்தான் அந்தந்த துறைக்கு அமைச்சர் என்பதை உடன் பிறப்பு முதல் உதவாக்கரை வரை அனைவரும் கூறி விடுவார்கள்.மாற்றம் என்பதே அங்கு கிடையாது.(Its a stale ministry) படிப்பறிவு என்று பார்க்க போனால் கூட அதிமுக அமைச்சர்கள் இவர்களை விட அதிகம் படித்தவர்களாகவே இருக்கிறார்கள்.
  மேலும் படித்தவர்களையும் செயல் திறன் மிக்கவர்களையும் பதவியில் அமர்த்தும் பழக்கமும் திமுகவில் இல்லை.
  சென்னை மானகராட்சியை எடுத்து கொள்ளுங்கள்.அதன் மேயர் மிகவும் செயல் திறன் மிக்கவராக இருக்க வேண்டும்.அதிகம் அறியப் படுகிற நபராக இருக்க வேண்டும். (High profile and highly indipendent) ஆனால் ஸ்டாலின் தனனை விட அந்த பதவியில் வேறு யாரும் பெயர் வாங்கி விட கூடாது என்பதற்காவே தற்போதைய மேயரை தேர்ந்தெடுத்திருப்பதாகவே தோன்றுகிறது.
  மேலும் ஜாதிக்கொரு மந்திரிதான் முக்கியமே தவிர அவர் அத்துறைக்கு திறமையானவரா என்பதை பற்றி தமிழ் மக்கள் அதிக அக்கறை காட்டுவது இல்லை.
  எனவே நமது ஜாதிய உணர்வும் ஜன நாயக் குறைகளுமே இதற்கெல்லாம் காரணம்.
  அமெரிக்காவில் உள்ளது போல் ஒரு அமைச்சர் பதவி ஏற்கு முன்பாக அவர் அத்துறையை நிர்வகிக்க தகுதியானவரா என்பதை நிபுணர் குழு சோதனைக்கு உட்படுத்தி கண்டறிந்த பின்னரே அவரை பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here