MNP என்று அழைக்கப்படும் Mobile Number Portability வந்த பிறகு நமக்கு விருப்பமான நிறுவனத்துக்கு நம்முடைய Mobile எண்ணை மாற்ற முடிகிறது.
இதற்கு முன் வேறு நிறுவனத்துக்கு மாற வேண்டும் என்றால், நம்முடைய எண்ணை விட்டுக்கொடுக்க வேண்டியதாக இருந்ததால், வேறு வழி இல்லாமல், பிடிக்கவில்லையென்றாலும் அதே நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
ஏனென்றால், பலருக்கு எண்ணைக் கொடுத்து இருப்பதால், மாற்றுவது எளிதல்ல. தற்போது இந்த நிலை மாறி நம் விருப்பம் போல மாற்றிக்கொள்ள முடிகிறது.
இது போல ஒரு வசதியை DTH சேவைக்குக் கொண்டு வர TRAI அமைப்பு முயன்று வருகிறது.
DTH ல் எப்படி இந்த வசதி?!
எடுத்துக்காட்டுக்கு, நான் ஏர்டெல் பயன்படுத்துகிறேன், இவர்களுடைய சேவையில் எனக்குத் திருப்தி இல்லையென்று நான் வேறு நிறுவனத்துக்கு மாற வேண்டும் என்றால், திரும்ப நான் செட்டப் பாக்ஸ்க்கு செலவு செய்ய வேண்டும்.
இதுவே ஒரே செட்டப் பாக்சில் விருப்பப்படும் நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளும் வசதி வந்தால், நமக்கு எளிது தானே! கட்டுப்பாடு இல்லாமல் விருப்பம் போல மாற்றிக் கொள்ளலாம்.
இந்த வசதியை இன்னும் ஒரு வருடத்துக்குள் கொண்டு வர TRAI முயன்று வருகிறது.
இது போல ஒரு வசதி வந்தால், நிச்சயம் அனைவருக்கும் பயனளிக்கும்.
கொசுறு
ஏப்ரல் 1 முதல் (இரு மாத நீட்டிப்புக்குப் பின்) DTH நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வந்து விட்டது. இனி விருப்பம் போல நாம் சேனல்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
சிலர் இதன் மூலம் கட்டணம் குறைந்ததாகவும், சிலர் இதனால் வழக்கமான கட்டணத்தை விடக் கூடுதல் செலவாவதாகவும் கூறியிருக்கிறார்கள்.
எனக்கு இந்த முறை இலாபமே அளித்துள்ளது ஆனால், நண்பர்கள் பலர் அவர்களுக்குக் கட்டணம் உயர்ந்து இருப்பதாகப் புகார் கூறினார்கள்.
அதிகச் சேனல்கள் மற்றும் HD சேனல் மட்டுமே பார்க்கிறவர்களுக்கு கண்டிப்பாகக் கட்டணம் உயர்ந்து இருக்கும். பலர் அவசியமே இல்லாமல் பல சேனல்களைத் தேர்வு செய்துள்ளார்கள்.
இலவச சேனல் பார்க்கிறவர்கள் எண்ணிக்கை 20% உயர்ந்து இருக்கிறது என்று ஆய்வு கூறுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் கட்டணக்குறைப்பு, இலவச சேனல்கள் அதிகரிக்கலாம்.
சில மாதங்கள் சென்றால், கட்டண விகிதங்களில் நிச்சயம் மாற்றம் வரும், பார்ப்போம் 🙂 .
உங்களின் அனுபவங்கள் என்ன? எப்படிப் பயன்படுத்துகிறீர்கள்?
புதிய கட்டண முறை நன்றாகவே இருக்கிறது. எனக்கு நூற்றிப்பத்து ரூபாய் வரை மிச்சம் (ஒரு மாதத்துக்கு). இதில் உள்ள பிரச்சனை, தேவையில்லாத இருபத்தைந்து இலவச சேனல்களை தலையில் கட்டிவிடுவது. டிடி பங்கலா போன்று. இதையும் டிராய் கருத்தில் கொண்டால் நல்லது. நமக்கு 5 -10 சேனல்கள் பார்க்க முடிந்தாலே அதிகம். தமிழ்ல 5 ரூபாய்க்கு குறைவா உள்ள சேனல்கள், அப்புறம் எனக்குத் தேவையான 5 ஹெச் டி சேனல்கள் என்று தேர்ந்தெடுத்திருக்கிறேன். சீரியல்கள் பார்ப்பதில்லை என்பதால் முக்கியச் சேனல்களுக்கு தடா. ஒருவேளை விலையில் மாற்றம் வந்தால் விஜய் ஹெச்டி பார்க்க வாய்ப்பு உண்டு.
டிடிஹெச் நிறுவனத்தை மாற்றவேண்டிய அவசியம் பெரும்பாலும் வராதுன்னு நினைக்கிறேன். எதுனாலும் காசு கொடுத்துத்தான் வாங்குவதால், எங்க வாங்கினா என்ன?
உங்களின் அனுபவங்கள் என்ன? எப்படிப் பயன்படுத்துகிறீர்கள்?
ஒரு உரையாடல்……….
அண்ணே எனக்கு அந்த ப்ரி சேனல் மட்டும் கொடுங்க.
சரிங்க. நூற்றி அறுபது ரூபாய்ங்க.
பரவாயில்லைங்க.
அது மட்டும் போதுங்களா.
போதும்ங்.
ஏன் சார் விஜய் பேக் போட்டிங்ண்ணா நூற்றி என்பத்தி ஐந்து வரும்.
(மகள்) அதைப் போட்டு விடுங்கப்பா.
சரிங்க அதையும் சேர்த்து விடுங்க.
மறுநாள்
என்ன அண்ணே ஒன்னும் வரவில்லையே
நாங்க இன்னும் கொடுக்கலையே சார்
ஏங்க
எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் கொடுக்குறோம். இருநூத்தி அறுபது ரூபாய். சன்டிவி பேக் சேர்ந்து வரும்ங்க.
அதெல்லாம் வேண்டாங்க.
அப்படியெல்லாம் கொடுக்க முடியாதுங்க.
நன்றி வணக்கம்ன்னா.
தொலைக்காட்சியை நிறுத்தி இரண்டு மாதங்கள் ஆகி விட்டது.
இது வரைக்கும் இலவச channels மட்டுமே. பிராட்பேண்ட் connection இருப்பதால் யூடூப்பில் சன் டிவி சீரியல்கள் பாகின்றோம். என்ன ஆங்கிலச் சீரியல் போச்சு ஸ்டார் வேர்ல்ட், ஸ்டார் மோவிஸ் ஜீ கஃபே ஜீ ஆங்கிலச் மோவிஸ் என்று எல்லாம் ஆங்கிலச் சேல்ஸ் போச்சு அப்பரும் fyi டிவி போன்ற channels போச்சு …
வீட்டில் தொலைக்காட்சி இல்லாததால், தற்போது எனக்கு இதற்கான தேவையில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@நெல்லைத்தமிழன்
எனக்கும் கட்டணம் குறைந்துள்ளது. பசங்களுக்காக நான்கு கார்ட்டூன் சேனல்கள் அவ்வளவு தான்.
கட்டணம் ஒன்று என்று கூற முடியாது.. ஏனென்றால், சில DTH ல் கட்டணங்கள் மாறுபடுகிறது. அதோடு சேவையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
நண்பர் ஒருவர் ஏர்டெல் வைத்து இருந்தார் அதில் அவருக்கு சிக்னல் பிரச்னை வரும் என்பதால், டாடா ஸ்கை க்கு மாறினார்.
இது போல சமயங்களில் மாறலாம்.
@ஜோதிஜி நான் பசங்களுக்காக பயன்படுத்துகிறேன். நம்முடைய விருப்பத்தை ஒரேயடியாக திணிக்க முடியாது என்பதாலும், அவர்களுக்கும் ஏதாவது பொழுது போக்கு வேண்டும் என்பதாலும் கொடுத்து இருக்கிறேன்.
@சரவணன் நாம் புறக்கணிக்க ஆரம்பித்தால் நிச்சயம் கட்டணம் குறையும்.
@யாசின் ரைட்டு 🙂