பெண்களுக்கான உடை பற்றி ஏற்கனவே ஒரு முறை எழுதி இருக்கிறேன் பெண்களுக்கான ஜீன்ஸ் லெக்கிங்ஸ் உடை டிப்ஸ் இரண்டாவது. Image Credit
1. ஜீன்ஸ்
ஜீன்ஸ் அனைவருக்கும் கிடைத்த வரப்பிரசாதம்.
எந்த வயதினரும் அணியலாம் குறிப்பாக ஆண்கள். அடிக்கடி துவைக்க வேண்டிய அவசியமில்லை கிழிந்து போகாது அப்படியே கிழிந்து போனாலும் ஃபேஷன் என்று கூறிக்கொள்ளலாம் 🙂 .
இது போல பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. இப்பதிவு ஜீன்ஸ் அணியவிருப்பம் இருந்தும் கூச்சம் காரணமாக அல்லது உடல் அமைப்பு காரணமாக ஜீன்ஸ் அணியாமல் யோசித்துக்கொண்டு இருக்கும் பெண்களுக்கு மட்டும்.
அளவான உடலமைப்பை கொண்டவர்களுக்கு ஜீன்ஸ் அணிந்தால் நன்றாக இருக்கும் அதற்குப் பெரிய டிப்ஸ் தேவையில்லை.
திருமணமான பெண்கள்
திருமணம் ஆகி எடை போட்டவர்களுக்கு மற்றும் நமக்கு ஜீன்ஸ் அணிந்தால் நன்றாக இருக்காது என்று அவர்களாகவே வீண் கற்பனை செய்து கொண்டு போடாமல் இருப்பார்கள்.
திருமணமான பிறகு பெண்கள் “கல்லூரியில் இருக்கும் போது ஜீன்ஸ் அணிந்தோம் இப்ப ஜீன்ஸ் அணிந்தால் அசிங்கமா இருக்கும்” என்று ஜீன்ஸ் அணிவதை தவிர்த்து விடுவார்கள் அல்லது அவர்களது கணவர்கள் “தடா” போட்டு இருப்பார்கள் 🙂 .
குழந்தை பிறந்த பிறகு சிலருக்கு உடம்பு போட்டு விடும் இது போல இருப்பவர்கள் டீ ஷர்ட் பயன்படுத்தக் கூடாது.
காரணம், இடுப்பு வயிறு மற்றும் மார்புப் பகுதி உங்களை அப்பட்டமாக எடுத்துக்காட்டும்.
இதனால் மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நேரலாம். டி ஷர்ட் அணிவதற்கு வயிறு மற்றும் இடுப்புப் பகுதி ப்ளாட்டாக இருக்க வேண்டியது அவசியம்.
2. டாப்ஸ்
“டாப்ஸ்” பற்றி அனைவரும் தெரிந்து இருப்பீர்கள் சுடிதார் போல இருக்கும் ஆனால் சுடிதார் அல்ல இதற்குத் துப்பட்டா கிடையாது.
இதில் பல்வேறு வகையான மாடல்கள் உள்ளன இதில் நமக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம் நமது உடல்வாகிற்கு ஏற்றது போல.
எடுத்துக்காட்டாக உயரம் குறைவானவர்கள் முழுக்கை டாப்சாக இல்லாமல் அரைக் கையாக எடுத்தால் கொஞ்சம் உயரம் கூடுதலாகக் காட்டும்.
காட்டன் வகை டாப்சே சிறந்தது.
Skinny ஜீன்ஸ் அனைவருக்கும் சரியாக இருக்கும் என்பது உத்திரவாதமில்லை என்பதை அறிக.
எனவே நீங்கள் டாப்சும் Straight fit ஜீன்சும் அணிந்தால் நிச்சயம் முன்பை விட அழகாகி விடுவீர்கள் என்பதில் 100 % என்னை நம்பலாம். .
பிறகு வெளியே எங்கு சென்றாலும் சுடிதாரை மறந்து விடுவீர்கள். உங்கள் விருப்பத் தேர்வு இதுவாகத்தான் இருக்கும்.
நம்மை அழாகக் காட்டுவதில் நம் உடையும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. என் பரிந்துரை எப்போதும் Blue ஜீன்ஸ் தான் 🙂 .
3. Leggings
ஜீன்ஸ் எப்படி அழகாக இருக்குமோ அது போல் இன்னொரு உடை Leggings (கால் சட்டை) ஆகும் இது உங்கள் கால்களுடன் ஒட்டி இருக்கும் இதுவும் ஜீன்ஸ் போல டாப்சுக்கு அருமையாக இருக்கும்.
சுடிதாருக்கு தற்போது Leggings யைத்தான் கால் சட்டையாகப் பயன்படுத்துகிறார்கள். இதுவே பிரபலமாக உள்ளது.
நீங்களும் இது போல ஆடைகளை அணியும் போது ரொம்ப கான்ஃபிடன்ட்டாக உணர்வீர்கள்.
இவ்வகை உடைகள் உங்களை நாகரீகமாக அதே சமயம் மாடர்னாகவும் காட்டும்.
கால்கள் ரொம்பக் குச்சியாக இருப்பவர்களும் அணிகிறார்கள் ஆனால், கொஞ்சமாவது [Calf Muscle] சதைப்பிடிப்புடன் இருந்தால் நன்றாக இருக்கும்.
நகரத்து பெண்களுக்கு ஜீன்ஸ், Leggings, டாப்ஸ் உடைகள் அணிவதில் பிரச்சனை இல்லை ஆனால், சிறு நகரமாக உள்ள இடத்தில் இதை அணிவதற்கு கேள்விகள் எழலாம்.
எனவே, சமூக சூழ்நிலையைப் பொறுத்து பெண்களுக்கான ஜீன்ஸ் லெக்கிங்ஸ் அணியலாமா! அல்லது வேண்டாமா!! என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
என்னுடைய நெருக்கமான கூட்டாளி இந்த பதிவை நான் மின் அஞ்சலில் படித்துக் கொண்டு இருக்கேன் என்பதை அறியாமல் இதோ பாருங்க கிரி உங்களுக்காகவே எழுதியிருக்கார். படித்து மனதை மாற்றிக் கொள்ளுங்க என்று அனுப்பி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்க?
நான் தான் முதல் ஆளா?
பெண்கள் வந்து படித்தால் கோவித்து கொள்வார். இருந்தாலும் என் மனதில் உள்ளதை எழுதுகின்றேன்.
என்னைப் பொறுத்தவரையில் தாவணி புடவைக்குச் சமமாக வேறெதும் இல்லை.
ஆனால் பெண்களுக்கு சுடிதார் எல்லாவிதங்களிலும் வசதியானது. குறிப்பாக இரண்டு சக்கரம் ஓட்டும் பெண்களுக்கு, மாணவியர்களுக்கு.
ஆனால் உடல் மற்றும் அங்கங்கள் பெரிதாக உள்ள பெண்கள் இந்த உடையை அணியும் விதம் தான் பிரச்சனையை உருவாக்குகின்றது. அப்புறம் துப்ட்டா என்பது கழுத்தில் சுற்றிக் கொளகிறார்களே தவிர அதை மறைக்க வேண்டியதை பயன்படுத்துவதில்லை. நாகரிகம் என்ற பெயரில்.
மற்றபடி ஜீன்ஸ் நீங்க சொன்ன லெக்கின்ஸ் போன்ற சமாச்சாரங்களை காலம் நேரம் பாரத்து பயன்படுத்தும் அளவிற்கு பெண்களுக்குண்டான சூழ்நிலையில் இங்கில்லை. பெருநகரங்களை தவிர்த்து. நான் பார்த்தவரைக்கும் தனக்கு பொருத்தமான உடைகள் எது என்று தேர்ந்தெடுத்து அணியும் பெண்கள் மிக மிக குறைவு. மற்றவர்களைப் பார்த்து ஈயடிச்சான் காப்பி என்கிற ரீதியில் பல பெண்கள் இருக்கிறார்கள்.
இங்கு தான பிரச்சனையின் தொடக்கம்.
GIRI = MASTER OF ALL SUBJECTS
😀
RAJESH.V
I agree with u !!
கிரி, சுடிதாரை பற்றியும் எழுதி இருக்கலாம். ஒரு ஆணின் பார்வையில் இருந்து வந்து இருக்கும் இந்த பதிவு, நிச்சயம் பெண்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன். சுடிதாரும், ஜீன்சும் உடலை கவர்ச்சியாக காட்டாத உடைகள் என்பது என் கருத்து.
என்னை பொறுத்த வரையில், பெண்ணுக்கு கவர்ச்சியான உடை புடவை தான். ஆனால் நிச்சயம் பட்டு புடவை கவர்ச்சி இல்லை, வெறும் ஆடம்பரம் மட்டுமே. ஏனோ எனக்கு பெண்களை பட்டு புடவையில் பார்க்கவே பிடிப்பதில்லை. பெண்களின் இயற்க்கை அழகை பட்டு புடவையின் ஆடம்பரம் டாமினேட் செய்து மறைக்கிறது என்பது என் கருத்து. வேலைக்கு போகும் பெண்கள், அதிலும் கல்லூரி, பள்ளிக்கு செல்லும் பெண் ஆசிரியைகள் புடவை கட்டிக்கொண்டு போனால், மிக நளினமாக அதே சமயம் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள்.
leggins அணிந்தால் கால்களில் ரத்த ஓட்ட பிரச்சினை ஏற்படும் என்று கேள்வி பட்டேன்.
நல்லா இருக்கு தல இந்த பதிவு
வித்தியாசமா இருக்கு
– அருண்