அவமானம் என்பது அனைவருக்கும் ஒரு பொதுவான விஷயம், அவமானம் என்ற வார்த்தையில் சம்பந்தப்படாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். Image Credit
ஏதாவது ஒரு வகையில், விசயத்தில் இதை நாம் சிறிதளவேனும் சந்தித்து இருப்போம் அல்லது சம்பந்தப்பட்டு இருப்போம்.
அந்தச் சமயத்தில் நமக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் சொல்லி மாளாது.
எதையுமே பிடிக்காது வாழ்க்கையே வெறுத்து போய் இருப்போம் கொஞ்ச நாட்களுக்கு, எனக்கும் இதைப் போலப் பல நடந்துள்ளது,
அப்போதெல்லாம் அடைந்த மன உளைச்சல்கள் கணக்கில்லாதது, அந்தச் சமயத்தில் சரியான அனுபவம் இல்லாததால் அதிகளவில் கோபமே ஏற்பட்டது, புறம் தள்ள தெரியவில்லை.
பொதுவாக எனக்குக் கஷ்டப்படுவது பிடிக்கும் அல்லது சவால்களை எதிர் கொள்வது பிடிக்கும். எனக்கு எதிரில் இருக்கும் சவாலைப் பொறுமையுடன் எதிர்கொள்வேன்.
தற்போது ஓரளவு பக்குவம் அடைந்து விட்டேன்.
அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
எதிலும் அவசரப்படக் கூடாது என்பதும் கிண்டலடிப்பவர்களைப் பற்றியோ நம்மைப் பற்றி அவதூறு கூறுபவர்களைப் பற்றியோ கண்டுகொள்ளக் கூடாது என்பதும் நான் தெரிந்து கொண்டதில் குறிப்பிடத்தக்கது.
நாம் தவறு செய்து இருந்தால் நம் தவறை சரிபடுத்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாகக் கருதுங்கள்.
நம்மைக் கிண்டலடித்தவர்கள் அல்லது அவமானபடுத்தியவர்கள் முன்பு நம்மை நிரூபித்துக் காட்ட கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே இதைக் கருத வேண்டும்.
நான் எதையும் பேச மாட்டேன், யாரை பற்றியும் கூற மாட்டேன். என்னைப் பற்றி என் செயல்களில் காட்டவே எனக்கு விருப்பம்.
எனக்கு இதில் நல்ல ரோல் மாடல் என்றால் அது ரஜினி தான்.
ரஜினி சந்திக்காத பிரச்சனைகளா! அவமானங்களா!! எதற்கும் அசைந்து கொடுக்காமல் அமைதியாக இருப்பார். இது என்னை மிகவும் கவர்ந்த விஷயம்.
அமைதி காப்பதே நல்லது
நம்மைக் கிண்டலடிக்கும் போதோ அல்லது வெறுப்பேற்றும் போதோ அமைதி காப்பதே நல்லது.
நாம் நம் கட்டுப்பாட்டை இழக்கும் போது புது வகையான சிக்கல்களில் வலிய போய் நாமே சிக்கி கொள்கிறோம்.
நாம் எதையும் கண்டுகொள்ளவில்லை என்றால் அவ்வாறு செய்தவர்கள் வெறுத்து போய் அமைதியாக இருந்து விடுவார்கள்.
நம் செயல் நேர்மையாக நியாயமாக நம் மனசாட்சிக்குச் சரியாக இருந்தால் போதுமானது யாரை பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.
இதை உறுதியாக நம்புங்கள்.
நான் இணையத்தில் படித்துக் கொண்டு இருந்த போது லேனா தமிழ்வாணன் அவர்களின் இந்தப் பதிவைப் படிக்க நேர்ந்தது.
இதில் என் மனதில் இருந்ததை அப்படியே கூறியது போலவே இருந்ததால் உங்களுடன் பகிர்கிறேன்.
இதை நான் கூறியதாகவே கூறி இருக்கலாம் இருந்தாலும் அனுபவம் மிக்க ஒருவர் இதைக் கூறுவதைக் கேட்கும் பொழுது அதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேறாக இருக்கும்.
இனி லேனா தமிழ்வாணன் அவர்கள்
“நம்மைக் கேலி செய்து மகிழ்கிறவர்கள் உண்டு. இவர்களைப் பெருந்தன்மையோடு விட்டுவிடலாம்.
ஆனால், நம்மை அவமானப்படுத்துகிறவர்களை என்ன செய்வது என்றே தெரியாதவர்கள் உண்டு.
நறநற என்று பல்லைக் கடிப்பவர்கள்; உனக்கு வச்சிருக்கேன், இரு, வரட்டும் என்று பதிலுக்குச் சந்தர்ப்பம் தேடுகிறவர்கள்; இந்த அவமானத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை என்று அழுகிறவர்கள் ஆகியோர் அவமானங்களைக் கையாளத் தெரியாதவர்களே!
அவமானப்படுத்துகிறவர்கள் இந்த மூன்று செயல்களையும் கண்டு முன்னிலும் மகிழ்கிறார்கள்.
நறநற என்று கடிக்கிறவர்களைப் பார்த்தும், அழுகிறவர்களைப் பார்த்தும் அட நம் முயற்சிக்கு நல்ல பலன் என்று பூரிக்கிறார்கள்.
பதிலுக்கு அவமானப்படுத்த முன்வந்தாலோ, முன்னிலும் தீவிரமான அவமானப்படுத்தல்களுக்குக் களங்களை உருவாக்குகிறார்கள்.
இதற்கு ஈடுகொடுக்கக்கூடிய ஆற்றல் எத்தனை பேருக்கு இருக்கிறது? இவர்கள் எடுக்கும் வீரிய ஆயுதங்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாதவர்கள் எதற்காக அடுத்தக் கட்டத்திற்குப் போக வேண்டும்?
அப்படியானால் இவர்கள் செய்வதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போகச் சொல்கிறீர்களா? என்கிற கேள்வி எழுகிறது. நியாயமான கேள்வி.
அவமானப்படுத்துகிறவர்களைச் சக்கையாக ஏமாற்றவும்; அடங்கிப் போகவும்; இது வீண் வேலை என்று ஒதுங்கிப்போகவும் செய்ய ஒரே வழி.
இவர்கள் தரும் அவமானங்களை ஏற்றுக்கொண்டு சற்றும் பிரதிபலிக்காமலும் பொருட்படுத்தாமலும் அலட்சியப்படுத்தியும் நடந்து கொண்டால், சே! இது வீண் வேலை என்று வெறுத்துப் போகிறார்கள்.
வீசிய பந்தைத் திருப்பி அடித்தால்தானே எதிராளி மறுபடி வீசுவான்?”
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி..பதிவில் ஐந்தாவது பாரா அருமையாக எழுதப்பட்டிருக்கிறது!ஒரு திருத்தம்.. நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரை லேனா தமிழ்வாணன் எழுதியது. தமிழ்வாணனின் மகன். நீங்கள் போட்டிருக்கும் படமும் லேனாவுடையதுதான்.மிக நல்லதொரு பதிவு கிரி!
superuuuuuuuu
நல்ல பதிவு.
அவமானம் உண்மையில் நம்மை உயர்த்தும் படிக்கல் …நமது தவறுகளை திருத்த நமக்கு வாய்ப்பு….
பயனுள்ள அருமையான கட்டுரை. நன்றி.
ஆம் நீங்கள் சொல்லவது நூறு சதவிதம் உண்மை.. நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கின்றேன் அனுபவித்திருக்கின்றேன்… அவர்கள் குறைசொல்லவதையும் பச்சைப்பொய்களால் உங்களை குத்திகொலைசெய்வதையும் அனுபவித்து ரசியுங்கள் அவர்கள் வெறுத்து பொய் ஒடிவிடுவார்கள்.. அன்புடன்,தமிழ். சரவணன்
ரொம்ப நல்ல விஷயம்.. நன்றி
இன்னா செய்தாரை ஒறுத்த்ல் அவர்நாணநன்னயம் செய்து விடல்
நான் எப்பவுமே அப்படித்தான்!
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை கிரி! இதை என் அனுபவத்தில் சொல்கிறேன்! மிகச் சரியான கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி!
//அத்திவெட்டி ஜோதிபாரதி said…
இது யாரையாவது ஞாபகப் படுத்துனா அதுக்கு கம்பெனி பொருப்பல்ல.
நான் – கம்பெனி//
ஹி ஹி ஹி
=================================================================
//பரிசல்காரன் said…
ஒரு திருத்தம்.. நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரை லேனா தமிழ்வாணன் எழுதியது. தமிழ்வாணனின் மகன். நீங்கள் போட்டிருக்கும் படமும் லேனாவுடையதுதான்//
சுட்டி காட்டியமைக்கு நன்றி கே கே மாற்றி விடுகிறேன்
==================================================================
ராஜ், ஐந்திணை, இனியவன் என்.உலகநாதன், கிறுக்கன்(ஏங்க! நாங்க கூப்பிடுற மாதிரி பெயர் வைக்க கூடாதா! 🙁 ) பாலா, தமிழ் பிரியன், பிரேம்ஜி, விஜி, ஜமால், தமிழ் வெங்கட் மற்றும் அருண் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி
===================================================================
// எம்.எம்.அப்துல்லா said…
ஆனா கிரி அண்ணே இதெல்லாம் மதருக்குத்தான் சரி. நம்ப இந்த மாதிரி திருப்பி சொன்னா என்ன நக்கலான்னு ரிவிட் அடிப்பாங்க :)//
அண்ணே! நீங்க கூறியது எல்லாம் இவர்களை போல இருப்பவர்களுக்கு தான் நம்மை போல சாதாரண மக்களுக்கு அல்ல 🙂 அந்த அளவிற்கு நான் பொறுமையாலனும் அல்ல. நீங்க சொன்ன மாதிரி நக்கலான்னு தான் கேட்பாங்க :-))))
====================================================================
//தமிழ். சரவணன் said…
ஆம் நீங்கள் சொல்லவது நூறு சதவிதம் உண்மை.. நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கின்றேன் அனுபவித்திருக்கின்றேன்… அவர்கள் குறைசொல்லவதையும் பச்சைப்பொய்களால் உங்களை குத்திகொலைசெய்வதையும் அனுபவித்து ரசியுங்கள் அவர்கள் வெறுத்து பொய் ஒடிவிடுவார்கள்.. //
உண்மை தான் சரவணன். மற்றவர்கள் கூறுவதை கேட்டு உணருவதற்கும் அனுபவ பூர்வமாக உணருவதற்கும் மிக பெரிய வித்யாசம் இருக்கிறது. இதை போன்றவற்றை அடி பட்டு மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்..வெறும் வார்த்தைகளால் எழுத்துக்களால் சரியாக உணர முடியாது. அனுபவம் கிடைத்த பிறகு இதை படிக்கும் போது நமக்கு இன்னும் பூஸ்ட் ஆக இருக்கும்.
===========================================================
நன்றி மோகன், சரவணன் அவர்களுக்கு கூறியதே உங்களுக்கும் 🙂
இயேசுநாதர் சொன்ன 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு' என்பதற்கும் விவேகாநந்தர் சொன்ன 'ஒரு கன்னத்தில் அறைந்தால் அடித்தவனின் இரு கன்னத்திலும் அறைந்துவிடு' என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. எல்லா இடங்களிலும் அமைதி காப்பது என்பது நம்மை நாமே அழித்துக்கொள்வதாகும். சீற்றம் கொள்ளுமிடத்து சீற்றம் கொள்ள வேண்டும், அவமானம் என வரும்போது புத்தர் சொன்னதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். 'நம்மை, நாம் அனுமதித்தால் அன்றி எவரும் நம்மை அவமானப்படுத்த இயலாது'
நல்லதொரு அருமையான பதிவுக்கு நன்றி கிரி.
சூப்பர் கிரி…!
அவமானம் தடைக்கல்லல்ல…
படிக்கல்…
இது யாரையாவது ஞாபகப் படுத்துனா அதுக்கு கம்பெனி பொருப்பல்ல…
நான் – கம்பெனி
நானும் அப்படி நினைப்பது துண்டு.. ஆனால் சில சமயங்களில் கோவம் பீறிக்கொண்டு வரும்.. உடனே தண்ணிய ஊத்தி off பன்னிருவோம்-ல..!!
அண்ணே… இந்த வாரத்தை நல்லதொரு செய்தியுடன் ஆரம்பித்துள்ளீர்.. நன்றி..
மதர் தெரசா ஒருமுறை கல்கத்தாவில் உள்ள ஒரு செல்வந்தரிடம் சென்று அவர்கள் இல்லத்தில் உள்ள தொழுநோயாளிகளுக்கு உதவி செய்யுமாறு கையேந்துகிறார். ஏதோ ஒரு ஆத்திரத்தில் அந்த நபர் மதர் அவர்களின் கையில் எச்சிலைத் துப்பி இதுதான் இருக்கின்றது, எடுத்துச் செல் என்றார். மதர் அவரிடம் நீங்கள் எனக்கு அளித்ததை நான் அன்போடு பெற்றுக்கொண்டேன்.ஆனால் என் இல்லத்தில் இருப்பவர்களுக்காக நான் கேட்டதை நீங்கள் இன்னும் தரவில்லை என்றாராம்.வெட்கிய அவர் மதருக்கு பெரும் நிதியுதவி தந்து அனுப்பி வைத்திருக்கின்றார்.
ஆனா கிரி அண்ணே இதெல்லாம் மதருக்குத்தான் சரி. நம்ப இந்த மாதிரி திருப்பி சொன்னா என்ன நக்கலான்னு ரிவிட் அடிப்பாங்க 🙂
நல்ல கட்டுரை!
//நானும் அப்படி நினைப்பது துண்டு.. ஆனால் சில சமயங்களில் கோவம் பீறிக்கொண்டு வரும்.. உடனே தண்ணிய ஊத்தி off பன்னிருவோம்-ல..!!//ஹி ஹி ஹி வழி மொழிகிறேன்
நல்ல விஷயத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கிரி.
நல்ல பார்வை கிரி.
இன்னா செய்தாரை …
// விவேகாநந்தர் சொன்ன 'ஒரு கன்னத்தில் அறைந்தால் அடித்தவனின் இரு கன்னத்திலும் அறைந்துவிடு'
//
இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 🙂
நல்ல கருத்துக்கள் தல… பகிர்ந்தமைக்கு நன்றி…உங்கள் "சைக்கிள் கேப்பில் லாரி ஒட்டிய சத்திய ராஜ்" கட்டுரையை மறக்கமுடியாது..அப்போது onsite til இருந்தேன். அடிக்கடி உங்கள் வலைப்போவை மேய்வேன்…அப்போ அடிக்கடி நீங்களும் ஜோசப் பால்ராஜ் என்பவரும் ஜாலி யா சண்டை போடுவீர்கள் தானே…. 🙂
பயனுள்ள அருமையான பதிவு !
நல்ல பதிவு கிரி…. ஆனா சமயத்துல ரௌத்திரமும் பழக வேண்டியிருக்கு… இல்லைன்னா நம்மளை கேனப்பயன்னு நினைச்சுடறாங்க…
நீங்கள் ஓரளவு பொறுமையானவர் என்பது உங்களது பதிவை வாசிப்பவர்களுக்கு தெரிந்தது தான்.
குறிப்பாக ரஜினி பற்றி எழுதும் தாறுமாறான பின்னூட்டங்களை நீங்கள் எதிர்கொள்ளும்
விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உங்களது பொறுமையால் வெற்றியடைந்திருக்கிறீர்கள்.
ரஜினியின் பொறுமையும் ஆச்சரியமாக இருக்கும். அதுக்கெல்லாம் ஒரு பக்குவம் வேண்டும்.
எனக்கு பொறுமையெல்லாம் கிடையாது :((. கன காலமாக திருந்த முயன்று கொண்டிருக்கிறேன். ஹி ஹி
நல்ல பதிவு.
//வெ.இராதாகிருஷ்ணன் said…
சீற்றம் கொள்ளுமிடத்து சீற்றம் கொள்ள வேண்டும், அவமானம் என வரும்போது புத்தர் சொன்னதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். 'நம்மை, நாம் அனுமதித்தால் அன்றி எவரும் நம்மை அவமானப்படுத்த இயலாது'//
ரொம்ப அருமையாக கூறி இருக்கீங்க. பாரதியார் அவர்கள் சொல்வதை போல "பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா" என்று கூற்று தான் நினைவிற்கு வருகிறது. அமைதியாக இருப்பது பயத்தினால் அல்ல. முட்டாள்களுடன் வாக்குவாதம் செய்வது நமக்கு தான் இழப்பு. அதற்காக மறுகன்னத்தை காட்டும் அளவிற்கு நாம் ஒதுங்கி போக கூடாது என்பதும் தற்போது உண்மை. அவை எல்லாம் சான்றோர்களுக்கு சாமானியர்களுக்கு அல்ல.
============================================================
// எம்.எம்.அப்துல்லா said…
இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :)//
அப்ப! யாருக்கோ அடி கொடுக்க தயாரா இருக்கிற மாதிரி தெரியுது 😉
============================================================
கார்த்திக் மற்றும் ரெட் மகி
சூப்பரப்பு! 😉
============================================================
//அருப்புக்கோட்டை பாஸ்கர் said…
பயனுள்ள அருமையான பதிவு !//
நன்றி பாஸ்கர் ..ரொம்ப நாளா ஆளையே காணோம்
============================================================
// Mahesh said…
நல்ல பதிவு கிரி…. ஆனா சமயத்துல ரௌத்திரமும் பழக வேண்டியிருக்கு… இல்லைன்னா நம்மளை கேனப்பயன்னு நினைச்சுடறாங்க.//
உண்மை தான் மகேஷ்
============================================================
//வாசுகி said…
குறிப்பாக ரஜினி பற்றி எழுதும் தாறுமாறான பின்னூட்டங்களை நீங்கள் எதிர்கொள்ளும்
விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது//
பொறுமையாக கூறுவதால் கோபமாக வந்த சிலர் நண்பர்களாகி போனதும் உண்டு. புரிந்து கொள்ளாதவர்களை பற்றி நாம் கவலைப்படத்தேவையில்லை
=============================================================
// சம்பத் said…
உங்கள் "சைக்கிள் கேப்பில் லாரி ஒட்டிய சத்திய ராஜ்" கட்டுரையை மறக்கமுடியாது..அப்போது onsite til இருந்தேன். அடிக்கடி உங்கள் வலைப்போவை மேய்வேன்…அப்போ அடிக்கடி நீங்களும் ஜோசப் பால்ராஜ் என்பவரும் ஜாலி யா சண்டை போடுவீர்கள் தானே…. :)//
வாங்க சம்பத். பழைய பதிவை நினைவு வைத்து கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் கிட்டத்தட்ட ஒருவருடம்.
ஜோசப் பால்ராஜ் கூட அந்த ஒரு பதிவு மட்டும் தான் அதன் பிறகு எதுவும் இல்லை, நல்ல நண்பர் தான் இப்போதும், அந்த சமயத்தில் ஒரே ரணகளமாக இருந்தது 🙂 குறிப்பாக என் பதிவுகள், ஒருத்தர் விடாம எல்லோரையும் போட்டு தாக்கிட்டேன் :-)) (குறிப்பா சத்யராஜ்) இருந்த கடுப்புல :-))
நீங்க அவ்வப்போது என் பதிவுகளை படிப்பதற்கு நன்றி
//திலும் அவசரப்படக்கூடாது என்பதும் கிண்டலடிப்பவர்களை பற்றியோ நம்மை பற்றி அவதூறு கூறுபவர்களை பற்றியோ கண்டுகொள்ள கூடாது என்பதும்//
நல்ல பகிர்தல்.
//வீசிய பந்தைத் திருப்பி அடித்தால்தானே எதிராளி மறுபடி வீசுவான்?"//
சூப்பர்.
//அனுபவம் மிக்க ஒருவர் இதை கூறுவதை கேட்கும் பொழுது அதற்க்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் வேறாக இருக்கும்.//
இருக்கலாம். ஆனால்…
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருளில் மெய்ப்பொருள் காண்பவர் நாங்கள். அனுபவ ரீதியாக நீங்கள் சொல்லியிருப்பதும் அழுத்தமாக ஆணித்தரமாக அமைந்துள்ளது.
//என்னை பற்றி என் செயல்களில் காட்டவே எனக்கு விருப்பம்.//
நைஸ் பாயின்ட்! ஐ லைக் இட்!
என்ன ஒரு அருமையான விஷயத்தை சும்மா அசால்ட்டா சொல்லிட்டீங்க கிரி. தொடர்ந்து இது போன்ற எளிமையான சுயமுன்னேற்ற கட்டுரைகளை அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன். நன்றி.
கீழே விழுவது அவமானத்திற்கு உரியது அல்ல
அருவியை பாருங்கள் என்னவொரு குதுகலத்துடன் விழுகிறது
இது ஆனந்த விகடன் இதழில் படித்தது
பெஸ்கி ராமலக்ஷ்மி சுந்தர் மற்றும் சரவணன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
நல்ல நல்ல கருத்துக்கள் நன்றி.
நம் செயல் நேர்மையாக நியாயமாக நம் மனசாட்சிக்கு சரியாக இருந்தால் போதுமானது யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. இதை உறுதியாக நம்புங்கள். இவர்கள் தரும் அவமானங்களை ஏற்றுக்கொண்டு சற்றும் பிரதிபலிக்காமலும் பொருட்படுத்தாமலும் அலட்சியப்படுத்தியும் நடந்து கொண்டால், சே! இது வீண் வேலை என்று வெறுத்துப் போகிறார்கள்.கண்டிப்பாக கிரி சார், சரியான நேரத்தில் உங்களின் இந்த பதிவை படித்தேன்… கடந்த ஒரு மாத காலமாகவே நான் பட்ட அவமானமெல்லாம் உங்களின் இந்த ஒரு பதிவு மூலம் என்னை ஓரளவு மாற்றி விட்டது என்றே சொல்வேன் .. புகழ்ச்சிக்காக கூறவில்லை கிரி சார் , உங்கள் பதிவுகளை இத்தனை நாட்கள் படிக்காமல் இருந்தது என்னுடைய துரதிர்ஷ்டம்.. ஒரு கை தேர்ந்த எழுத்தாளரைப் போல் எழுதி இருக்கீறீர்கள்..இந்த வகையான தன்னம்பிக்கை பதிவுகளை மேலும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் உங்கள் அன்பு ரசிகன் காயத்ரிநாகா…
நல்ல பதிவு கிரி சார்…
இதையே தான் தலைவர் சந்திரமுகி படத்தில் சொல்வர்.
-உன்னை பற்றி யாரு, என்ன சொன்னால் என்ன? இந்தக்காதில் வாங்கி அதை அந்தக்காதில் தள்ளு…