தட்ஸ்தமிழ்

27
தட்ஸ்தமிழ்

மிழ் செய்திகளை இணையத்தில் படிப்பவர்கள் மத்தியில் தட்ஸ்தமிழ் பற்றி அறியாமல் இருப்பவர்கள் மிகக்குறைவு.

தட்ஸ்தமிழ்

ஐ டி துறையில் நான் இரண்டாவது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த போது 2001 ஆண்டு அறிமுகமானது இந்தத் தளம்.

அப்போது அதிகளவில் தமிழ் தளங்கள் இணையத்தில் இல்லை, தற்போது இருப்பது போல.

எனவே, செய்திகளுக்காகவும் விவாதங்களுக்காகவும் தினமும் பார்க்கும் ஒரு தளமாக மாறி விட்டது.

முதலில் தட்ஸ்தமிழ் தளம் என்றாலே கொலை வெறி ஆகிடுவேன்.

காரணம் இந்தத் தளத்தில் 2001-03 ஆண்டு வாக்கில் ரஜினியை பற்றிக் கண்டபடி எழுதுவார்கள், அறிவிக்கப்படாத ரஜினி எதிர்ப்பு தளமாகவே இருந்தது.

ரஜினி ரசிகனான எனக்கு அப்போது செம டென்ஷன் ஆக இருக்கும் தற்போது படிக்க ஆரம்பித்தவர்களுக்கு இது பற்றித் தெரியாது.

தற்போதெல்லாம் இருப்பதை விடக் கமெண்ட் பகுதியில் ரணகளமா ஒரே அடிதடியா இருக்கும்.

ரஜினியை போட்டு நொக்கி எடுப்பார்கள் (இப்பவும்), கட்டுரை வேறு ரஜினிக்கு எதிர்ப்பாக இருந்ததால் எதிர்ப்பாளர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாறித் தற்போது யாரையும் குறிப்பிட்டுத் தாக்காமல் சாதாரணமாகச் செய்திகளைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

திரும்ப (2015*) ரஜினி எதிர்ப்பு தளமாக மாறி விட்டது.

திரை செய்திகள்

முன்பு திரை செய்திகள் அதிகம் இருக்கும், நானெல்லாம் அரசியல் செய்திகளை விட வாரமலர் “கருப்புப் பூனை சொல்றதை கேளுங்க” மாதிரிச் செய்திகளை ரொம்ப விரும்பிப் படிக்கிற ஆளு 🙂 .

அதுல கொஞ்சம் தான் உண்மையாக இருக்கும் இல்லைனா அதுவும் இருக்காது, அது தெரிந்து இருந்தாலும் நமக்குப் படிக்க ஆர்வம்.

அதைப் போலத் தட்ஸ்தமிழ் திரை செய்திகளும் அதற்கு அவர்கள் வைக்கும் தலைப்புகளும் ரொம்பப் பிரபலம்.

தற்போது திரை செய்திகள் முன்பு போல அதிகமாக வருவதில்லை என்பது எனக்கு வருத்தம்.

தற்போது இணையத்தில் உலவுபவர்கள் அதிகரித்து விட்டதாலும், இணையத்தின் பயன்பாடு அதிகரித்து விட்டதாலும் இதற்கு வாசகர்களும் கண்டபடி அதிகரித்து விட்டார்கள்.

ஆன் சைட்

வெளிநாட்டில் வசிக்கும் மற்றும் இங்கே இருந்து ஆன் சைட் போகும் நபர்களுக்கும் பெரும் துணை இந்தத் தளம் என்றால் மிகையில்லை.

காலையில் அலுவலகம் வந்தவுடன் தங்கள் வேலைகளைப் பார்க்கிறார்களோ இல்லையோ தட்ஸ்தமிழ் தளத்தைக் கண்டிப்பாக ஒருமுறை பார்த்து விடுவார்கள்.

இந்தத் தளம் பற்றி அறியாமல் இருப்பவர்கள் ஐ டி துறையில் மிக மிகக் குறைவு.

இந்தத் தளத்தில் சூடான செய்தி ஏதாவது வந்து விட்டால் பார்வர்டு மின்னஞ்சல்கள் பறக்கும்.

பல தளங்களிலிருந்து செய்திகளை இவர்கள் எடுத்துப் போடுகிறார்கள் என்ற குற்றசாட்டும் உண்டு.

கமெண்ட்

திரை உலகினர் அதிகம் பார்க்கும் தளமாக உள்ளது, இங்கே வரும் செய்தி திரை உலகிலும் எதிரொலிக்கும்.

திரை உலகினர் அனைவரும் பயப்படுவது பதிவுகளின் கமெண்ட்டுக்களுக்குத் தான் 🙂 .

உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளையும் அங்கே காணலாம்.

எனவே, அவர்கள் பயப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதை ஏன் தட்ஸ்தமிழ் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று தெரியவில்லை.

புகார் வசதி செய்யப்பட்டது ஆனால் பலனளிக்கவில்லை.

கொஞ்ச மாதங்கள் முன்பு தாறுமாறாகக் கமெண்ட் வந்ததால் கமெண்ட் பகுதியை நிறுத்தி வைத்து இருந்தார்கள், பின் மறுபடியும் தொடர்கிறது.

போர்க்களம்

அதுவும் திரை செய்திகள் ரஜினி, கமல் விஜய் அஜித் பற்றி என்றால் அங்கே போர்களமாக இருக்கும், சிம்புவை எல்லாம் பிரித்து மேய்ந்து விடுவார்கள் 🙂 .

பரம்பரையவே இழுத்து இருப்பார்கள், நடிகைகள் நிலைமை இன்னும் மோசம்.

இளகிய!! மனது உடையவர்கள் அங்கே சென்றால் ஓடியே விடுவார்கள். அரசியலும் விதி விலக்கல்ல குறிப்பாகக் கலைஞர், ராமதாஸ் நிலை திண்டாட்டம் தான்.

இதில் இந்தத் தள எடிட்டர், அட்மின் உட்பட அனைவருக்கும் இதே அர்ச்சனை தான், இதைத் தட்ஸ்தமிழ் இன்று வரை கண்டுகொள்ளாமல் இருப்பது எனக்கு மிக வருத்தம்.

தட்ஸ்தமிழ், கமெண்ட் எழுத அனைவருக்கும் ஐ டி உருவாக்குவது அவசியம் என்று அறிவித்துச் செயல்படுத்தினால் ஓரளவு குறைய வாய்ப்புண்டு.

ஆபாச கமெண்ட் எழுதினால் அந்த ஐ டி யை தடை செய்யலாம்.

எனவே, ஒவ்வொரு முறையும் புதிய புதிய (valid) மின்னஞ்சல்கள் கொடுத்து ஐ டி உருவாக்குவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று. தட்ஸ்தமிழ் இதைப் பரிசீலிக்கலாம்.

தட்ஸ்தமிழில் பலர் அதன் செய்திகளைப் படிக்க ஆர்வம் காட்டுவதை விட அதற்க்கு வந்து இருக்கும் கமெண்ட்டுக்களைப் படிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

ஒரு சில கமெண்ட்டுகள் உண்மையாகவே ரசிக்கும் படி இருக்கும், செம கிண்டலாகவும் நக்கலாகவும் இருக்கும்.

ஆபாச கமெண்டுகள் மட்டும் இல்லை என்றால் இன்னும் பலர் விவாதத்தில் கலந்து கொள்வார்கள், முன்பு பெண்கள் கொஞ்சம் பேர் வந்தனர் தற்போது இந்தப் பிரச்சனையால் கருத்து கூறுவதைப் பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றனர்.

இருப்பினும் தற்போதும் பலரிடையே தட்ஸ்தமிழ் கமெண்ட் பகுதி ரொம்பப் பிரபலம் என்பதை மறுப்பதற்கில்லை

மாடல்கள்

அதே போலத் தட்ஸ்தமிழில் உள்ள நடிகைகள், மாடல்கள்!! கேலரியும் ரொம்பப் பிரபலம், இதில் ஒரு சில படங்கள் எங்க தான் பிடிக்கறாங்கன்னே தெரியல.

இந்தப் படங்களைப் பார்வையிட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து நாம் அந்தப் படத்தைப் பற்றிய ரசிகர்களின்! மனநிலையை!! அறிந்து கொள்ளலாம் 😉 .

தினமும் லட்சக்கணக்கான வாசகர்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.

இது வரை பெரிதாக எந்தத் தொழிநுட்ப பிரச்சனையையும் சந்தித்தது இல்லை, அதே போலத் தளமும் நல்ல வேகத்தில் உள்ளது.

பெரியளவில் தொழில் நுட்ப பிரச்சனை இல்லாமல் ஒரு தளத்தை நடத்துவது என்பது பாராட்டத் தக்க விஷயம் தான்.

ஆங்கிலப் பெயர்

இந்தத் தளம் தமிழ் தளமாக இருந்தாலும் இதில் ஆங்கிலப் பெயர் இணைந்து இருப்பதில் பலருக்கு வருத்தம்.

இதன் பல மொழி தளங்களிலும் (தெலுங்கு, கன்னடம், மலையாளம்) இந்தப் பெயர் (thats) பொதுவாக இணைந்து இருப்பதால் நடைமுறையில் இதை மாற்றுவது என்பது இயலாத செயலாகவே தோன்றுகிறது.

முன்பு thatstamil.com ஆக இருந்து பின் http://tamil.oneindia.com/ ஆக மாறி விட்டது.

இவர்கள் வலைதளங்களுக்குத் தொடுப்பு கொடுக்க ஆரம்பித்தவுடன் அது வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தத் தளத்தைப் பிடிக்காதவர்கள் கூடத் திட்டிக்கொண்டு தான் இருப்பார்களே தவிரப் புறக்கணிக்க முடியவில்லை, இதுவே அவர்களின் வெற்றி எனலாம்.

முதலில் தட்ஸ்தமிழ் கமெண்ட் பகுதியில் விவாதங்களில் கலந்து கொள்வேன்.

அதில் பலர் என் எழுத்தை ஊக்கப்படுத்தியதாலே இதைப் போன்ற வலைத்தளங்களில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.

என் எழுத்துக்களுக்கு முன்னோடி என்றால் அது தட்ஸ்தமிழ் தான் அந்த வகையில் தட்ஸ்தமிழுக்கு என் நன்றிகள்.

தட்ஸ்தமிழ் மீது சில குற்றசாட்டுகள் உண்டு என்றாலும் பலரும் தவிர்க்க முடியாத தளமாகவே இருந்து வருகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

தங்கள் தளத்தின் தரத்தை மேம்படுத்த இன்னும் ஈடுபாடு காட்ட வேண்டும் என்பது என்னைப் போன்ற தட்ஸ்தமிழ் ரசிகர்கள் பலரின் விருப்பம்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

27 COMMENTS

  1. கிரி

    சரியான நேரத்துலதான் தட்ஸ்தமிழ் பத்தி ஞாபம் படுத்தினீங்க. இதோ படிங்க, அவங்களோட நடுநிலைமையான லேட்டஸ்ட் நியூஸ்.

    //http://thatstamil.oneindia.in/movies/specials/2009/07/20-bujjigadu-now-in-chennai.html

    'புஜ்ஜிகாடு- மேட் இன் சென்னை' என்று கடந்த ஆண்டு தெலுங்கில் ஒரு படம் வெளியானது. ரஜினிதான் இந்தப் படத்தின் ஆடியோவை வெளியிட்டார், அதுவும் சென்னையில்.

    ஒரு தெலுங்குப் படத்தின் ஆடியோ தமிழகத்தில் வெளியாகக் காரணம் என்ன?.

    "இதில் படத்தின் நாயகன் ரஜினியின் தீவிர ரசிகனாக நடித்திருக்கிறார். ரஜினி ரசிகன்தான் படத்தின் பிரதான பாத்திரம் எனும்போது, படத்தின் ஆடியோவை ரஜினி இருக்கும் தலைநகர் சென்னையில் வைப்பதுதானே முறை… அதனால்தான் இங்கு வைத்தோம். இன்னொன்று படத்தின் நாயகன் மட்டுமல்ல, படத்தை உருவாக்கிய நானும் ஒரு தீவிர ரஜினி ரசிகன்தான்", என்று பதிலளித்தார் இயக்குநர் பூரி ஜெகன்நாத்.

    இந்தப் படம் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் பெரும் தோல்வியடைந்தது. இப்போது அதை அப்படியே தமிழில் "குமரன்- ரஜினி ரசிகன்" என டப் செய்து வெளியிடுகிறார்கள்.

    இந்தப் படத்தில் ரஜினியின் மெகா ஹிட் படங்களான பாட்ஷா மற்றும் படையப்பாவிலிருந்து அதிரடி காட்சிகளை சேர்த்து வெளியிட்டிருந்தனர்.

    படத்தைப் பார்த்த பிரபல பாடகர் மனோ, அதன் தமிழ் உரிமையை வாங்கி, எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிடுகிறார்.

    பிரபாஸ், த்ரிஷா நடித்துள்ள இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மோகன்பாபு.//

    செய்தியின் நாலாவது பாராவை ஒருமுறை / இருமுறை படிப்பது நல்லது…..

    இதுதான் தட்ஸ்தமிழ் ஸ்டைல்……….

  2. தட்ஸ் தமிழுக்கு இன்னைக்கு தான் முதன்முதலா போறேன்!

  3. விரைவான செய்திகளுக்கு நான் சென்று பார்க்கும் தமிழ் தளம் இது தான்

  4. //ரஜினியை போட்டு நொக்கி எடுப்பார்கள்(இப்பவும்), கட்டுரை வேறு ரஜினிக்கு எதிர்ப்பாக இருந்ததால் எதிர்ப்பாளர்களுக்கு கொண்டாட்டம் தான் 🙂
    //
    அந்த சமயத்தில் ரஜினியை நொக்கியவர்களில் நானும் ஒருவன் 🙂 அனேகமாக முன்னாடி கமெண்ட் போட்ட ஜோவும் அதில் இருந்திருக்க வாய்ப்புண்டு

  5. முன்பு அடிக்கடி செல்லும் தளமாக இது இருந்தது.
    இப்போது போவதில்லை.
    தாறுமாறாக எழுதப்படும் பின்னூட்டம் தான் காரணம்.
    இவற்றை வாசித்து கோவப்படுவதை விட அந்த தளத்திற்கு செல்லாமல் இருப்பது நல்லது என்பதால்.
    சில பின்னூட்டங்கள் நகைச்சுவையாகவும் இருக்கும்.

  6. அண்ணே,
    நீங்க சொன்னிகனு இப்ப தான் நேரா அங்க போயிட்டு வரேன் பாவம் நே விஜய் ரொம்ப கிளிக்கிரங்க,ரொம்ப நல்ல நல்ல கேட்ட வார்த்தையா இருக்கு

  7. //அனேகமாக முன்னாடி கமெண்ட் போட்ட ஜோவும் அதில் இருந்திருக்க வாய்ப்புண்டு//
    உண்டு ..ஆனா இதுவரை அங்கே கமெண்ட் போட்டதில்லை.

  8. உங்கள் தளத்தின் 'வேகம்' காரணமாகவே உள்ளே வரத் தயக்கமாய் இருந்தது. ஆனால் புதிய டெம்ப்ளேட்டில் இப்போது சற்று விரைவாக உள்ளது. தட்ஸ்தமிழின் ரசிகன் என்ற முறையில் அது முன்பு போல் இல்லை என்பதில் எனக்கும் வருத்தமே

  9. நான் சுமார் 5 வருடமாக இந்த தளத்திற்கு செல்கின்றேன், அதில் ஜே ஜே என்ற பெயரில் பல பின்னுட்டம் எழுதி இருக்கின்றேன்… ஆனால் இப்போ என்னவோ தெரிய வில்லை எனது கணினி இல் இருந்து ஏதும் பின்னுட்டம் இட்டால் அங்கு தெரிவது இல்லை. அதனால் நான் அங்கு இப்பொது போவதில்லை.

  10. // நட்புடன் ஜமால் said…
    இதுவரையில் வாசித்த அனுபவம் இல்லை, இனி வாசிப்போம்.//

    அப்படியா! தமிழிஷ் ல தான் அடிக்கடி லிங்க் கொடுப்பாங்களே!

    =====================================================

    //ஜோ/Joe said…
    விரைவான செய்திகளுக்கு நான் சென்று பார்க்கும் தமிழ் தளம் இது தான்//

    உண்மை தான் ஜோ, என்னுடைய தவிர்க்க முடியாத செய்தி தளம்.

    ======================================================

    //குழலி / Kuzhali said…
    அந்த சமயத்தில் ரஜினியை நொக்கியவர்களில் நானும் ஒருவன் 🙂 //

    ஹி ஹி ஹி குழலி சொல்ல முடியாது நம்ம இரண்டு பேருமே சண்டை போட்டு இருந்து இருக்கலாம், என்ன சொல்றீங்க 😉

    //அனேகமாக முன்னாடி கமெண்ட் போட்ட ஜோவும் அதில் இருந்திருக்க வாய்ப்புண்டு//

    ஜோ சண்டை போட்டு இருந்து இருக்கலாம், கண்டிப்பா அசிங்கமா கமெண்ட் போட்டு இருக்க மாட்டாரு அது sure

    =========================================================

    //SUREஷ் (பழனியிலிருந்து) said…
    அது அப்படித்தான்//

    என்னங்க சுரேஷ் அவள் அப்படி தாங்கற மாதிரி சொல்றீங்க 🙂

    ==========================================================

    //R.Gopi said…
    கிரி

    சரியான நேரத்துலதான் தட்ஸ்தமிழ் பத்தி ஞாபம் படுத்தினீங்க. இதோ படிங்க, அவங்களோட நடுநிலைமையான லேட்டஸ்ட் நியூஸ்.//

    🙂 கோபி அவங்கள கிண்டல் பண்றீங்களா இல்ல பாராட்டறீங்களா!

    //செய்தியின் நாலாவது பாராவை ஒருமுறை / இருமுறை படிப்பது நல்லது…..

    இதுதான் தட்ஸ்தமிழ் ஸ்டைல்……….//

    இதை வைத்து நீங்க பாராட்டறீங்கன்னு முடிவு செய்துக்கறேன் 🙂

    ====================================================

    //குறை ஒன்றும் இல்லை !!! said…
    அண்ணே.. இந்த தளத்தின் மூலமே நான் உங்களது பதிவுகளை படிக்க நேர்ந்தது.. //

    வாங்க ராஜ் அப்ப தட்ஸ்தமிழை திட்டறீங்களா? இல்ல :-))

    //நானும் இந்த தளத்தின் தீவிர ரசிகன்..//

    ரிப்பீட்டு

    =====================================================

    //வாசுகி said…
    முன்பு அடிக்கடி செல்லும் தளமாக இது இருந்தது.
    இப்போது போவதில்லை.
    தாறுமாறாக எழுதப்படும் பின்னூட்டம் தான் காரணம்.//

    உண்மை தான் வாசுகி..முன்பு நிறைய பெண்கள் விவாதத்தில் கலந்து கொள்வார்கள் தற்போது இதற்க்கு பயந்தே யாரும் வருவதில்லை 🙁

    =======================================================

    //வால்பையன் said…
    தட்ஸ் தமிழுக்கு இன்னைக்கு தான் முதன்முதலா போறேன்!//

    ஜ்மாலுக்கு கூறியதே உங்களுக்கும்

    =======================================================

    // கைபுள்ள said…
    அண்ணே,
    நீங்க சொன்னிகனு இப்ப தான் நேரா அங்க போயிட்டு வரேன் பாவம் நே விஜய் ரொம்ப கிளிக்கிரங்க,ரொம்ப நல்ல நல்ல கேட்ட வார்த்தையா இருக்கு//

    விஜய பஜ்ஜி ஆக்கி இருப்பாங்க 🙂

    =======================================================

    // ஜோ/Joe said.
    உண்டு ..ஆனா இதுவரை அங்கே கமெண்ட் போட்டதில்லை.//

    ஜோ நீங்க கமெண்ட் போட்டதில்லையா! ஒருவேளை அங்கே நடக்கிற கேவலமான சண்டைகளை பார்த்து வெறுத்து போயிட்டீங்களோ! நானும் கொஞ்ச நாள் (மாதம்) சண்டை போட்டேன் அப்புறம் சலித்து போய் விட்டுட்டேன்

    =========================================================

    //நாகா said…
    உங்கள் தளத்தின் 'வேகம்' காரணமாகவே உள்ளே வரத் தயக்கமாய் இருந்தது. ஆனால் புதிய டெம்ப்ளேட்டில் இப்போது சற்று விரைவாக உள்ளது.//

    அப்படியா! என்னங்க நாகா சொல்றீங்க..நான் டெம்ப்ளேட் மாற்றி ரொம்ப மாசம் ஆச்சே! தேவையில்லாத எல்லாவற்றையும் பிடுங்கி எறிந்திட வேண்டியது தான் :-)) (ஆணி பற்றி யோசிக்க கூடாது :-D)

    ==========================================================

    //எம்.எம்.அப்துல்லா said…
    கமெண்ட்களால் வெறுத்துப்போய் நான் அங்கு இப்போதெல்லாம் போவதேயில்லை.//

    அப்துல்லா அண்ணே! அதுவும் உங்க தலைவரை பிரிச்சு மேஞ்சுருவாங்களே! :-))

    ============================================================

    //Mohamed said…
    நான் சுமார் 5 வருடமாக இந்த தளத்திற்கு செல்கின்றேன், அதில் ஜே ஜே என்ற பெயரில் பல பின்னுட்டம் எழுதி இருக்கின்றேன்… ஆனால் இப்போ என்னவோ தெரிய வில்லை எனது கணினி இல் இருந்து ஏதும் பின்னுட்டம் இட்டால் அங்கு தெரிவது இல்லை. அதனால் நான் அங்கு இப்பொது போவதில்லை.//

    எனக்கு கூட சில சமயங்களில் கமெண்ட் எழுதினால் வருவதில்லை..அதனால் கமெண்ட் போடுவதை நிறுத்தி விட்டேன்

  11. டி.ராஜேந்தரை விட்டுட்டீங்களே…..இவருக்கு கவிதையா அர்ச்சனை விழும்.

    எலெக்ஷன் ரிசல்ட் வந்தன்னைக்கு ராமதாஸுக்கு மட்டும் 32 பக்கம் கமெண்ட்ஸ் வந்திருந்தது. இரவெல்லாம் சிரித்து சிரித்து வயிறு வலி வந்ததுதான் மிச்சம்.

    கோபக்காரபயபுள்ளன்னு ஒருத்தர் போடுற கமெண்ட்ஸ் சூப்பரா இருக்கும்.

  12. //ஜோ நீங்க கமெண்ட் போட்டதில்லையா!//
    கமெண்டுகளை படிப்பேன் ,வாசகர் கருத்து எப்படி இருக்கிறது என பார்ப்பதற்கும் ,சில நேரங்களில் மிகவும் நகைச்சுவையாக வரும் சில கமெண்டுகளுக்காக .ஆனால் ஏனோ கமெண்டு போடவில்லை.
    //ஒருவேளை அங்கே நடக்கிற கேவலமான சண்டைகளை பார்த்து வெறுத்து போயிட்டீங்களோ!//

    அது ஒரு முக்கிய காரணம் ..வலைப்பதிவில் என்றால் யாரென்று ஓரளவு தெரிந்து விவாதம் செய்யலாம் ..அங்கே எப்படி மறுவினை வரும் என்றே சொல்ல முடியாது .

  13. கமெண்ட் எழுத அனைவருக்கும் ஐ டி உருவாக்குவது அவசியம்

    – Good Suggestion Giri. I am also a regular reader of thatstamil site. Actually there is a link to register and subscribe to their newsletter, may be they don't like to make the Login as mandatory for comments.

    This site is maintained by oneindia.in and they are giving news in Hindi, English, Tamil, etc.. If possible forward your suggestion to their admin, so that they might consider this.

    Thanks,
    Arun

  14. //காத்தவராயன் said…
    டி.ராஜேந்தரை விட்டுட்டீங்களே…..இவருக்கு கவிதையா அர்ச்சனை விழும்.//

    ஹி ஹி ஹி

    //இரவெல்லாம் சிரித்து சிரித்து வயிறு வலி வந்ததுதான் மிச்சம்.//

    :-))) நானும் படித்தேன்

    //கோபக்காரபயபுள்ளன்னு ஒருத்தர் போடுற கமெண்ட்ஸ் சூப்பரா இருக்கும்//

    ஆமாம் அவரை போல நிறைய பேர் எழுதறாங்க..ரஜினி ரசிகர் Karadi BOMMAI னு ஒருத்தர் எழுதுவார், ரொம்ப அருமையா எழுதுவார் அதே சமயம் டீசன்ட்டா.

    ===================================================

    //ஜோ/Joe said…
    அது ஒரு முக்கிய காரணம் ..வலைப்பதிவில் என்றால் யாரென்று ஓரளவு தெரிந்து விவாதம் செய்யலாம் ..அங்கே எப்படி மறுவினை வரும் என்றே சொல்ல முடியாது //

    ஆமாம் ஏடாகூடமா ஏதாவது சொல்லிடுவானுக 🙂

    ====================================================

    //♠புதுவை சிவா♠ said…
    ||"கருப்பு பூனை சொல்றதை கேளுங்க" மாதிரி செய்திகளை ரொம்ப விரும்பி படிக்கிற ஆளு :-)||

    :-)))))))))))))))))//

    😉

    ===================================================

    //உடன்பிறப்பு said…
    தட்ஸ்தமிழ் ஃபோரம் பற்றி தெரியுமா? இன்னும் அதற்கு இணையாக எந்த தளமும் வந்ததில்லை//

    நாங்க எல்லாம் அதுல பட்டய கிளப்பினோம் ஆனா இப்ப இல்ல.

    உடன்பிறப்பு நீங்க தவறாம படிப்பீங்கன்னு நினைக்கிறேன்..அரசியல் செய்திகளுக்கு சரியான தளம்.

    =====================================================

    //arun said…
    – Good Suggestion Giri. I am also a regular reader of thatstamil site. Actually there is a link to register and subscribe to their newsletter, may be they don't like to make the Login as mandatory for comments.//

    அருண் கட்டாயம் ஆக்கவில்லை என்றால் இதை போல கமெண்ட்ஸ் ம் தவிர்க்க முடியாது.. ஏதாவது ஒன்றை இழந்து தான் ஒன்றை பெற முடியும் எனவே…

    //If possible forward your suggestion to their admin, so that they might consider this. //

    அருண் இதை ஏற்கனவே சரியான நபரிடம் கூறி இருக்கிறேன், அவர்கள் பார்ப்பதாக கூறியதாக கூறினார். பார்ப்போம்.

    அப்புறம் ரொம்ப நாளா உங்களை காணோம்…பிசியா..அடுத்த மாதம் சென்னை வருகிறேன்…முடிந்தால் உங்களை சந்திக்கிறேன் (கண்டிப்பாக தொலைபேசியில் அழைப்பேன்)

  15. THAT'S GIRI!

    எதைப் பற்றி எடுத்துரைத்தாலும் விரிவான விவரங்கள், தெள்ளத் தெளிவான கருத்துக்கள், அதற்குச் சொன்னேன்:)!

    இந்தத் தளம் பற்றி கேள்விப் பட்டுள்ளேன். அதிகம் சென்றதில்லை. நேரம் கிடைக்கையில் முயற்சிக்கிறேன்.

  16. தட்ஸ்தமிழ் கருத்துரைகளில் நாகரீகம் பொதுவாக இருப்பதில்லை…மேற்பார்வை செய்யாமல் வேணுமென்றே விடுகிறார்களா..?

  17. //ராமலக்ஷ்மி said…
    THAT'S GIRI! //

    டைமிங்கா சொல்லிட்டீங்க 🙂

    //எதைப் பற்றி எடுத்துரைத்தாலும் விரிவான விவரங்கள், தெள்ளத் தெளிவான கருத்துக்கள், அதற்குச் சொன்னேன்:)!//

    நன்றி ராமலக்ஷ்மி

    =======================================================

    //’டொன்’ லீ said…
    தட்ஸ்தமிழ் கருத்துரைகளில் நாகரீகம் பொதுவாக இருப்பதில்லை…மேற்பார்வை செய்யாமல் வேணுமென்றே விடுகிறார்களா..?//

    தட்ஸ்தமிழுக்கே வெளிச்சம்..டொன் லீ சிங்கை வந்தாச்சா!

    ======================================================

    //Arangaperumal said…
    நீங்க சொன்னமாதிரி ஃபோட்டோ நல்லாயிருக்கும்.ஆனா tooooooo much badwords….//

    வடிவேல் சொல்ற மாதிரி No bad words 🙂

    ======================================================

    //கீழை ராஸா said…
    தகவலுக்கு நன்றி..கிரி//

    வருகைக்கு நன்றி கீழை ராசா 🙂

    ======================================================

    //எம்.எம்.அப்துல்லா said…
    நான் போகாத காரனத்தைக் கண்டுபுடுச்சுட்டீங்களே!!//

    Why blood same blood :-))))

  18. //அப்துல்லா அண்ணே! அதுவும் உங்க தலைவரை பிரிச்சு மேஞ்சுருவாங்களே! :-))

    //

    நான் போகாத காரனத்தைக் கண்டுபுடுச்சுட்டீங்களே!!

    :))))))

  19. கிரி தட்ஸ் தமிழ் நான் தினமும் படித்து வருகிறேன் இருந்தாலும்
    உங்களது இந்த பதிவின் முலமாக அந்த தளத்தை பற்றி முழுவதுமாக
    அறிய முடிந்தது நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here