உடை என்றாலே பெண்கள் தான் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் அதில் எந்த வியப்புமில்லை.
நான் கூறப்போவது ஆண்களுக்கான உடை அழகு டிப்ஸ். பெண்கள் தங்களுடைய சகோதரர், ஆண் நண்பர் மற்றும் கணவருக்கும் பரிந்துரைக்கலாம்.
நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் உடைகளையே இன்னும் எப்படி சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறேன்.
1. Casual Dress
ஒரு ரிசப்சன் போறோம் அல்லது சிறு விழாவிற்குப் போகிறோம் என்றால், கோட்டு சூட்டுடன் செல்லாமல், ஜீன்ஸ், டி ஷர்ட், காட்டன் சட்டை அணிவது சிறந்தது.
அலுவலக நேரம் தவிர மற்ற எந்த நேரத்திலையும் (அதாவது ப்ரொஃபசனலா நடந்துக்க வேண்டிய இடம் தவிர்த்து) கோட்டு சூட்டு உடைகளை அணியவே கூடாது. professional dresses only for professional places not for casual places.
2. ஜீன்ஸ்
இதை அடித்துக்க உலகத்துலையே எதுவும் கிடையாது. அது பெண்களுக்காக இருந்தாலும் சரி ஆண்களுக்காக இருந்தாலும் சரி! இதற்கென்று உள்ள மதிப்பே தனி.
அடிக்கடி துவைக்க வேண்டிய அவசியமில்லை 🙂 . அணிந்து கொள்ள எளிது பெரும்பாலான சட்டைகளுக்குப் பொருத்தமாக இருக்கும். Image Credit
வயதைக் குறைத்துக்காட்டும்.
3. டி ஷர்ட் & காட்டன் சட்டை
ஜீன்ஸ் க்கு 100% பொருத்தமானது என்றால் யோசிக்காமல் டி ஷர்ட் என்று கூறலாம் அல்லது காட்டன் சட்டையைக் கூறலாம்.
எடுத்துக்காட்டாக ரிசப்சன், திருமணம், நண்பர்கள் பார்ட்டி, சுற்றுலா, பிறந்தநாள் விழா, திரையரங்கு, கடற்கரை இதைப்போல இடங்களுக்குச் சரியான தேர்வு ஜீன்ஸ் + டி ஷர்ட் அல்லது காட்டன் ஷர்ட் மட்டுமே.
டி ஷர்ட்டில் காலர் வைத்தது காலர் வைக்காதது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, திருமணங்களுக்குச் செல்லும் போது காலர் வைத்த டி ஷர்ட் அணிந்து செல்வது நாகரீகமா இருக்கும்.
காலர் வைக்காத டி ஷர்ட்டையும் அணிந்து செல்லலாம் இருப்பினும் அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
டி ஷர்ட் அணிவது என்றால் நம்மில் பெரும்பாலனவர்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனை தொப்பை. இவங்க காட்டன் டி ஷர்ட்டை உபயோகிக்கலாம்.
சட்டையைப் பேன்டுக்குள்ள போட்டுத் திணித்துச் சீராக இல்லாமல் அங்கங்கே ஏற்ற இறக்கமாக இருக்கும். இது போல உடை அணியக் கூடாது.
4. அலுவலக உடை
நீங்கள் எத்தனை பேன்ட் வைத்து இருந்தாலும் தவறாமல் வைத்து இருக்க வேண்டிய பேன்ட் கருப்பு வண்ணமாகும். எந்தச் சட்டைக்கும் பொருந்தக்கூடிய ஒரேநிறம்.
தற்போது உடலோடு ஒட்டிய அல்லது ஓரளவு இறுக்கமான பேன்ட் அணிவதே ஃபேஷனாக உள்ளது (மேலே படத்தில் உள்ளது போல). உங்களை இவை ஸ்மார்ட்டாகக் காட்டும்.
அலுவலகத்திற்கு செல்பவர்கள் வெளிர் நிற சட்டைகளை அதிகம் பயன்படுத்துங்கள்
5. Flat Front
நீங்கள் Flat Front பேன்ட் அணிபவராக இருந்தால் துணியை அயர்ன் செய்யும் போது ஜீன்ஸ் பேன்ட்டை அயர்ன் செய்வது போல (பலர் ஜீன்ஸ் பேன்ட்டையே எப்படி அயர்ன் செய்வது என்று தெரியாமல் உள்ளனர்) பக்கவாட்டில் அயர்ன் செய்ய வேண்டும்.
வழக்கமாக மற்ற பேன்ட்களை அயர்ன் செய்வது போலச் செய்யக் கூடாது.
Flat Front என்பதன் அர்த்தம் முன் பகுதி எந்தப் பிளீட்டும் இல்லாமல் இருப்பது.
அவ்வாறு அயர்ன் செய்தால், பேன்ட் வடிவமைப்பு அர்த்தமே மாறி விடும்.
தற்போது ப்ளீட் வைத்துத் தைப்பது எல்லாம் Out of fashion ஆகி விட்டது. எனவே, உங்களுக்கு நான் Flat Front மாடலைப் பரிந்துரைக்கிறேன்.
இது வந்து ரொம்ப வருடங்களாகி விட்டாலும் இன்றும் அதே கவர்ச்சியுடன் உள்ளது.
தொப்பை உள்ளவர்கள் Flat Front மாடல் பேன்ட்டை அணிய முடியாது நன்றாக இருக்காது அவர்களுக்கு ஒரே வழி ப்ளீட் தான் 🙂 .
ஏனோ தானோவென்று உடையணியாமல் சரியாகத் தேர்வு செய்யுங்கள்.
நம் உடை கூட நமக்கு அதிக தன்னம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய காரணிகளுள் ஒன்றாகும். எனவே, இதை அலட்சியப்படுத்த வேண்டாம்.
ஆண்களுக்கான உடை அழகு டிப்ஸ் கட்டுரை 2020 ஏப்ரலில் மேம்படுத்தப்பட்டது.
தொடர்புடைய கட்டுரை
தலைமுடி வெட்டுவது எளிதானது அல்ல
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
நல்ல ஒரு செய்தி..
ஆண்களுக்கான உடை அலங்காரம் பத்தி அத்தனை அழகா சொல்லியிருக்கீங்களே! குறிப்பா, குழந்தைங்க டிரஸ்ஸைப் பத்திச் சொன்னது ரொம்பச் சரி! சீக்கிரம் பெண்கள் டிரஸ் கோட் பத்தி எழுதுங்ணா!
நன்றி.. இதே போல இன்னும் நிறைய டிப்ஸ் ஐ எழுதுங்கள்
சுரேஷ்
சிறப்பான பதிவு
பயனுள்ளது
அடுத்த பதிவுல்
முடிந்தால் இன்னும் சற்று விளக்கமாக பல மாடல்களுடன் பதிவிடுங்கள்
நல்ல பதிவு. சின்னக் குழந்தைகளுக்கு ஒன்றிரெண்டு செட்டாவது பட்டன் வைத்த சட்டை, மொட மொட அரை ட்ராயர் வைத்துக் கொள்ளலாம். அதிலேயும் அவர்களுகேற்ற வண்ணங்கள் டிசைன்கள் வருகின்றனவே. அது ஒரு தனி அழகாத் தெரியும்! ஒருசெட் வாங்கி மகனுக்கு போட்டுதான் பாருங்களேன்:)!
இதன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..!! 🙂
அன்ன . neg -t -shirt போடும் பொது .உள்ளே பனியன் போட வேண்டுமா ? இல்லையென்றால் மேல் பகுதி ஒரு மாதிரி தெரியுதே ?
நல்ல தொடராக இருக்கட்டும்.
எனக்கு இந்த சென்ஸ் ரொம்ப கம்மி.
உபயோகமான தகவல்
idhu nalla thagaval Nandri Giri
சரி சரி !!! வரும் பொது இந்த தம்பிக்கு ரெண்டு செட் டிரஸ் எடுத்திட்டு வாங்க !!!
வாங்க கிரி… இந்த முறை உடை எடுக்கும் பொது உங்களோட சொல் பேச்சு கேட்டு எடுத்துக்குறேன்…
அப்புறம் அந்த I Saw the Devil திரைவிமர்சனத்தையும் எழுதி விடுங்க… பாதி படம் பாத்துட்டேன்..
–> //ஒரு ரிசப்சன் போறோம் அல்லது சிறு விழாவிற்குப் போகிறோம் என்றால் உடனே கஞ்சி போட்டு அயர்ன் பண்ணுன ஒரு மொட மொட னு ஒரு சட்டையை எடுத்து மாட்டிட்டு முழுக்கைச் சட்டையாக இருந்தால் கையைக்கூட மடித்து விடாமல் அலுவலகத்துக்கு போகிற மாதிரி ஒரு கெட்டப்புல வந்து ஹி ஹி னு நின்னுட்டு இருப்பானுக//
–> //அலுவலக நேரம் தவிர மற்ற எந்த நேரத்திலையும் (அதாவது ப்ரொஃபசனலா நடந்துக்க வேண்டிய இடம் தவிர்த்து) இந்த மாதிரி உடைகளை அணியவே கூடாது. professional dresses only for professional places not for casual places//
உங்களின் இந்த கருத்துக்களில் நான் முழுவதும் மாறுபடுகிறேன். உங்கள் வாதப்படி இது சரியென்று வைத்தாலும் அந்த வரவேற்பில் (மேடையில்) நிற்கும் மாப்பிள்ளையும் professional dresses தவிர்த்து ஜீன்ஸ் அணிந்துதானே நிற்க வேண்டும் – அப்போதுதானே வந்தவர்கள் மாப்பிள்ளையையும் கணக்கு மாஸ்டர் என ஒதுக்கி வைக்க மாட்டார்கள்? அனால் அவர் டையும் அணிந்து நிற்கிறாரே!!!
–> //மச்சி இவரு கணக்கு மாஸ்டர் மாதிரி இருக்காருடா! நம்மை வாய்ப்பாடு சொல்லச் சொல்லி கேட்பாரு போல இருக்கு கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்துக்க என்று பயப்படும் படி ஆகி விடும்…// இடம் பொருள் அறிந்து உடை அணியவேண்டும் என்பது நிச்சயம் சரிதான். எல்லாரும் casual உடையில் வந்திருக்கும் போது நாம் formal உடையில் போனால் தனிமைப் படுத்தப்படுவோம் (vice versa). மேலும் formal உடை அலுவலகத்துக்கு மட்டும்தான் போட வேண்டும் என்று உங்களுக்கு தவறான புரிதலை உண்டு பண்ணியது யாரோ?
–> //ஜீன்ஸ்: அடிக்கடி துவைக்க வேண்டிய அவசியமில்லை அணிந்து கொள்ள எளிது பெரும்பாலான சட்டைகளுக்கு பொருத்தமாக இருக்கும். அதை விட உங்கள் வயதைக் குறைத்துக்காட்டும் அதைவிட முக்கியமாக உங்கள் அருகில் உள்ளவர்கள் கொஞ்சம் ரிலேக்சாக இருக்க முடியும்// நீங்கள் நக்கல் அடிக்கிறீர்களா எனத் தெரியவில்லை. ஜீன்ஸ் போட்டால்தான் என்றல்ல, formal / casual பேன்ட் போட்டு t-ஷர்ட்/அரைக்கை சட்டை போட்டாலும் இளமையாகத்தான் இருக்கும். அது அவரவர் விருப்பத்தையும் சவுகரியத்தையும் சார்ந்தது. எனக்கு சும்மாவே அதிகமாக வேர்க்கும்; நம்ம ஊர்ல அடிக்கிற வெயிலுக்கு ஜீன்ஸ் போட்டேன்னா பழுத்துடும். என்னைப் போன்ற பலருக்கு ஜீன்ஸ் ஒத்துவருவதில்லை. எங்க அம்மாவுக்கும் நான் ஜீன்ஸ் போடுறது சுத்தமா பிடிக்காது. ஆனாலும் 2 ஜீன்ஸ் வைத்திருக்கிறேன், வெயில் அதிகமாக இல்லாத நாட்களில் அல்லது எனக்கு எப்போதாவது தோணும்போது அணிவதற்கு.
–> //தயவு செய்து தொப்பை இருந்தால் உடற்பயிற்சி செய்தாவது குறையுங்க இப்படி நம்ம இனத்தின் மானத்தை வாங்காதீங்க//
சொல்றது ஈசிங்க… தொப்பை வளத்துப் பாருங்க தெரியும், அதை குறைக்கிறதுன்னா என்னான்னு.
–> //இன்னும் பலர் ஜீன்ஸ் பேன்ட்டையே எப்படி அயர்ன் செய்வது என்று தெரியாமல் உள்ளனர்//
இதைப் படிச்சுட்டு அப்பிடியே ஷாக் ஆயிட்டேன். ஜீன்ஸ் பேன்ட்டை துவைக்கிறதையே கேள்வி பட்டதில்லை, இதுல அயர்ன் வேறையா? 🙂
–> //காரணம் குழந்தைகளுக்கு இதைப்போல அணிந்து இருப்பது உடலை உறுத்தாமல் சவுகரியமாக இருக்கும்//
அவ்வளவுதாங்க, குழந்தைங்க மட்டுமில்ல – நமக்கும் அதேதான். நமக்கு சவுகரியமான உடையை அணியணும், அவ்வளவுதான். இதுதான் பேஷன், இதுதான் இளமையாக காட்டும், இதுதான் நல்லா இருக்கும் என்று பொதுவான விஷயமாக உடையை வகைப்படுத்துவது (ஆணானாலும் பெண்ணானாலும்) ஒத்துவராது. மேலும் “ஒருவரின் உடையை வைத்து அவரை எடை போடுவது மோசமான அணுகுமுறை; எந்த உடையானாலும் அவர் அந்த உடையை அணிந்திருக்கும் விதத்தை வைத்து வேண்டுமானால் அவரை எடை போடலாம்” என்பது என் கருத்து.
ரொம்பப் பேசிட்டேனோ? 🙂
சலீம் நந்தினி சுரேஷ் முஸ்தபா ராமலக்ஷ்மி தேவராஜன் பாலா வடுவூர் குமார் லோகன் கோபி ராஜ் தினேஷ் மற்றும் முத்து வருகைக்கு நன்றி
@நந்தினி எழுதுகிறேன்
@ராமலக்ஷ்மி நீங்கள் கூறுவது சரி தான். நான் முன்னரே கூறியபடி அழகு அழாக நிறையை உடைகள் உள்ளன. நீங்கள் கூறிய உடையும் என் மகனுக்கு உள்ளது. நாளைக்கு அப்பா! எனக்கு ஏன் சட்டை போடவில்லை என்று பெரியவன் ஆகி கேட்டால் நான் என்ன செய்வது? 🙂 அதிலும் நான் எடுத்தது குறைவு தான் என் மனைவி இல்லை என்றால் உறவினர் எடுத்ததே சட்டையில் அதிகம்.
@பாலா சரியா கேட்டீங்க. நியாயமாக நானே இதை கூறி இருக்கணும். டி ஷர்ட் போடும் போது பனியன் போடுவதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும் குறிப்பா கை வைத்த பனியன். ரவுண்ட் நெக் பனியனாக இருந்தால் உள் பனியன் போடக்கூடாது போட்டால் அசிங்கமாக இருக்கும்.
@ராஜ் 🙂
@தினேஷ் விரைவில் எழுதுகிறேன். நெட் பிரச்சனையாக உள்ளது.
@முத்து 😀 இந்தாங்க உங்க கேள்விக்கு பதில்
//உங்களின் இந்த கருத்துக்களில் நான் முழுவதும் மாறுபடுகிறேன். உங்கள் வாதப்படி இது சரியென்று வைத்தாலும் அந்த வரவேற்பில் (மேடையில்) நிற்கும் மாப்பிள்ளையும் professional dresses தவிர்த்து ஜீன்ஸ் அணிந்துதானே நிற்க வேண்டும் – அப்போதுதானே வந்தவர்கள் மாப்பிள்ளையையும் கணக்கு மாஸ்டர் என ஒதுக்கி வைக்க மாட்டார்கள்? அனால் அவர் டையும் அணிந்து நிற்கிறாரே!!!//
எப்படிங்க இப்படி எல்லாம் அநியாயத்துக்கு தின்க் பண்ணுறீங்க 🙂 கல்யாண மாப்பிள்ளையும் வந்து நிக்கிறவனும் ஒண்ணா! இந்த இடத்துல கல்யாண மாப்பிள்ளை ப்ரொபசனல். நீங்க இப்ப சில ரிசப்சன்ல கவனித்து இருக்கலாம் மாப்பிள்ளை சிலர் கோட் போட்டு ஜீன்ஸ் பேன்ட் போட்டு இருக்கிறார்கள்..குர்தாவும் போடுகிறார்கள். கால மாற்றத்தில் மாறிக்கொண்டே இருக்கும். விட்டால் கல்யாணத்து அன்னிக்கு மாப்பிள்ளை ஜீன்ஸ் போடாம ஏன் பட்டு வேஷ்டி கட்ட வேண்டும் என்று கேட்பீர்கள் போல இருக்கு 😉
//மேலும் formal உடை அலுவலகத்துக்கு மட்டும்தான் போட வேண்டும் என்று உங்களுக்கு தவறான புரிதலை உண்டு பண்ணியது யாரோ?//
அலுவலகத்துக்கு மட்டும் தான் போடவேண்டும் என்று கூறவில்லை எங்கு தேவையோ அங்கு மட்டும் என்று தான் கூறி இருக்கிறேன் சரியாக படிக்கவும். தவறான புரிதல் என்பது ஒவ்வொருவர் தனிப்பட்ட எண்ணத்தை சார்ந்தது. உங்களுக்கு தவறு எனப்படுவது எனக்கு சரி. எனக்கு சரி எனப்படுவது உங்களுக்கு தவறாக படலாம். நான் என்னோட கருத்தை கூறி இருக்கிறேன்.. நீங்கள் உங்க கருத்தை கூறி இருக்கீங்க.
// நீங்கள் நக்கல் அடிக்கிறீர்களா எனத் தெரியவில்லை. ஜீன்ஸ் போட்டால்தான் என்றல்ல, formal / casual பேன்ட் போட்டு t-ஷர்ட்/அரைக்கை சட்டை போட்டாலும் இளமையாகத்தான் இருக்கும்//
முத்து நீங்க பதிவை சரியா படிக்கவே இல்லைன்னு நினைக்கிறேன் 🙂 உங்களுக்கு பிடிக்காத சில விஷயங்கள் இருந்ததால் சர சரன்னு படிச்சுட்டு வந்துட்டீங்க போல. ஜீன்ஸ் நான் கூறியது ஒரு உதாரணத்திற்கு மட்டுமே. ஜீன்ஸ் மட்டும் தான் அணிய வேண்டும் என்று நான் கூறவில்லை. ஜீன்ஸ் இல்லாமல் காட்டன் பேன்ட் கார்கோ என்று ஏகப்பட்ட வெரைட்டி உள்ளது. நீங்க சொல்வதுப்படி அரைக்கை சட்டை போட்டாலும் நன்றாகத்தான் இருக்கும். படம் கூட இணைத்து இருப்பேன் பாருங்க.
//அது அவரவர் விருப்பத்தையும் சவுகரியத்தையும் சார்ந்தது. எனக்கு சும்மாவே அதிகமாக வேர்க்கும்; நம்ம ஊர்ல அடிக்கிற வெயிலுக்கு ஜீன்ஸ் போட்டேன்னா பழுத்துடும். என்னைப் போன்ற பலருக்கு ஜீன்ஸ் ஒத்துவருவதில்லை. எங்க அம்மாவுக்கும் நான் ஜீன்ஸ் போடுறது சுத்தமா பிடிக்காது. ஆனாலும் 2 ஜீன்ஸ் வைத்திருக்கிறேன், வெயில் அதிகமாக இல்லாத நாட்களில் அல்லது எனக்கு எப்போதாவது தோணும்போது அணிவதற்கு.//
முத்து இதுதான் உங்க பிரச்சனை. நீங்கள் பேசிக்கொண்டு இருப்பது கம்ஃபோர்ட் நான் கூறிக்கொண்டு இருப்பது ஃபேஷன். தலைய வித விதமா வெட்டிட்டு இருக்கும் ஃபேஷன் பற்றி நான் கூறினால் எனக்கு சாதாரணமா முடி வெட்டுவது தான் பிடிக்கிறது என்று கூறுகிறீர்கள். ஃபேஷன் வேண்டும் என்றால் சில விசயங்களில் நீங்கள் கம்ஃபோர்ட் பற்றி சிந்திக்ககூடாது. உங்களுக்கு சரியான தேர்வு நீங்கள் கூறிய உடைகள் தான். ஸ்டைல்! ஸ்டைல்! ஸ்டைல்!! என்ற பதிவில் முடியை எப்படி பேஷனாக மாற்றுவது என்று கூறி இருக்கிறேன் அதுல நீங்க எனக்கு சாதாரணமா வெட்டுவது தான் பிடிக்கும் அது தான் எனக்கு கம்ஃபோர்ட் என்றால் நான் என்ன செய்ய முடியும் அது போலத்தான் நீங்கள் இதில் கூறி இருப்பது. ஒருத்தர் வேலு மிலிடரி ஹோட்டல் ல வந்து எனக்கு சைவம் தான் பிடிக்கும் அது தான் எனக்கு நல்லது என்றால் என்ன சொல்வது. ஹோட்டல் ல கேட்டா.. சார்! லெக் பீஸ் சூப்பரா இருக்கும்னு சொல்வான் 😉
இந்தப்பதிவு மாடர்னா தங்களை மாற்றிக்கொள்ள நினைக்கிறவங்களுக்கு மட்டும் தான் கம்ஃபோர்ட் எதிர்பார்க்கிறவங்களுக்கு இல்லை.
//தொப்பை வளத்துப் பாருங்க தெரியும், அதை குறைக்கிறதுன்னா என்னான்னு.//
நீங்க சொல்வது சரி தான் நண்பர்கள் கூற கேட்டு இருக்கேன் உங்க சிரமும் புரிகிறது LOL
//ஒருவரின் உடையை வைத்து அவரை எடை போடுவது மோசமான அணுகுமுறை; எந்த உடையானாலும் அவர் அந்த உடையை அணிந்திருக்கும் விதத்தை வைத்து வேண்டுமானால் அவரை எடை போடலாம்” என்பது என் கருத்து.//
ஐயையோ! என்னங்க விவகாரமாகவே சிந்திக்கறீங்க. நான் சும்மா ஒரு ஃப்ளோக்கு காமெடிக்காக கூறி இருக்கிறேன். நீங்க தவறா எதுவும் நினைத்துக்காதீங்க. கணக்கு மாஸ்டர் என்பது கூட நகைச்சுவைக்காக தான் நீங்க கணக்கு மாஸ்டர் ஏன் சொன்னீங்க என்று சண்டைக்கு வந்துடாதீங்க ஹா ஹா. இதைப்போல பதிவை படித்தால் அனுபவிக்கனும் ஆராயக்கூடாது 🙂
//ரொம்பப் பேசிட்டேனோ?//
less tension more work 🙂
அச்சச்சோ! கிரி, நான் சண்டை எல்லாம் போடல. டென்ஷனும் ஆகல (ஒரு வேலை என்னோட வார்த்தைகள் அப்பிடி இருந்துச்சோ?). உங்க கருத்துல என்னோட மாற்றுக் கருத்த சொன்னேங்க. தப்பா எடுத்துக்காதீங்க. என்னோட பதில கீழ பாருங்க:
–> //முத்து இதுதான் உங்க பிரச்சனை. நீங்கள் பேசிக்கொண்டு இருப்பது கம்ஃபோர்ட் நான் கூறிக்கொண்டு இருப்பது ஃபேஷன்.//
அப்படின்னா எதுக்கு ரிஷப்ஷனுக்கு அவனுக்கு comfort-ஆ formal-ல வர்றவனை நீங்க கிண்டல் பண்ணனும்? (//கஞ்சி போட்டு அயர்ன் பண்ணுன ஒரு மொட மொட னு ஒரு சட்டையை எடுத்து மாட்டிட்டு முழுக்கைச் சட்டையாக இருந்தால் கையைக்கூட மடித்து விடாமல் அலுவலகத்துக்கு போகிற மாதிரி ஒரு கெட்டப்புல வந்து ஹி ஹி னு நின்னுட்டு இருப்பானுக// & //என்னய்யா மேட்டருன்னு கேட்டா டீசன்ட்டாம்! அது சரி//).
–> //அலுவலகத்துக்கு மட்டும் தான் போடவேண்டும் என்று கூறவில்லை எங்கு தேவையோ அங்கு மட்டும் என்று தான் கூறி இருக்கிறேன் சரியாக படிக்கவும்//
–> //அலுவலக நேரம் தவிர மற்ற எந்த நேரத்திலையும் (அதாவது ப்ரொஃபசனலா நடந்துக்க வேண்டிய இடம் தவிர்த்து) இந்த மாதிரி உடைகளை அணியவே கூடாது//
உங்களின் மேற்கண்ட கருத்துக்கள் இரண்டையும் படித்து நீங்களே ஒரு முடிவுக்கு வரவும்.
–> //தலைய வித விதமா வெட்டிட்டு இருக்கும் ஃபேஷன் பற்றி நான் கூறினால் எனக்கு சாதாரணமா முடி வெட்டுவது தான் பிடிக்கிறது என்று கூறுகிறீர்கள்// சரி… அப்படின்னா, நீங்க சாதாரணமா முடி வெட்டிக்கிறவனை கிண்டல் பண்ணி, அவனை நோக்கி இந்த பதிவ ஆரம்பிச்சிருக்கக் கூடாது 🙂
–> //ஃபேஷன் வேண்டும் என்றால் சில விசயங்களில் நீங்கள் கம்ஃபோர்ட் பற்றி சிந்திக்ககூடாது//
நிங்க பேஷன் உடைகளைப் பத்தி பொதுவா பேசல, எங்க எப்பிடி போனா அழகா இருக்கும்னு சொல்லி இருக்கீங்க (பேஷன் உடைக்கான ஆலோசனை வேறு; அழகு உடைக்கான ஆலோசனை வேறு). நீங்கள் ஆலோசித்த உடைகளுக்கு மாற்றாக உடை அணிந்தவர்களை கிண்டல் வேற பண்ணி இருக்கீங்க. அதனால நீங்க பதிவின் சாரத்தையும், எனக்கு குடுத்திருக்குற பதில் கமென்ட்-ஐயும் நீங்க மறு பரிசீலனை பண்ணித்தான் ஆகணும். (எப்பூடி?)
–> //ஒருத்தர் வேலு மிலிடரி ஹோட்டல் ல வந்து எனக்கு சைவம் தான் பிடிக்கும் அது தான் எனக்கு நல்லது என்றால் என்ன சொல்வது.//
நான் சைவம்தான் பிடிக்கும்னு சொல்லல கிரி. நான் ஜீன்ஸ், டி-ஷர்ட் போடவே மாட்டேன்னு சொல்லல. casual உடைலதான் ரிஷப்ஷன் / சிறு விழாக்களுக்கு போகணும்னு அப்படின்னு நீங்க சொல்றதை ஏத்துக்க முடியாதுன்னு சொல்றேன். அதாவது வேலு மிலிட்டரி ஹோட்டல்ல லெக் பீஸ்தான் சாப்பிடனும்னு நீங்க சொல்றிங்க, நான் அங்க போயி தோசையும் சாப்பிடலாம்னு சொல்றேன். (முத்து, நீ அசத்துடா) 🙂
–> //ரிசப்சன், திருமணம், நண்பர்கள் பார்ட்டி, சுற்றுலா, பிறந்தநாள் விழா, திரையரங்கு, கடற்கரை இதைப்போல இடங்களுக்கு சரியான தேர்வு ஜீன்ஸ் + டி ஷர்ட் அல்லது காட்டன் ஷர்ட் மட்டுமே.//
இதை நான் எப்படி எடுத்துக் கொள்வது? நீங்கள் பேஷன் பற்றி பேசினீர்கள் என்றால் ஜீன்ஸ் + t-ஷர்ட் / காட்டன் ஷர்ட் மட்டும்தான் பேஷன் என்கிறீர்கள். அப்படியானால் திருமணத்திற்கு formal உடையில் வருபவர்களை out of fashion என்கிறிர்கள் என்றுதானே அர்த்தம்? மேலும் கடற்கரைக்கு பெர்முடாஸில் வருபவர்களை, திரை அரங்கிற்கு rinkle free பேண்ட்டில் வருபவர்களை, நண்பர்களின் திருமண நாள் பார்ட்டிக்கு formal-ல் வருபவர்களை என்னவென்று சொல்வீர்கள்? இதில் பேஷன் எங்கு வந்தது?
–> //இந்தப்பதிவு மாடர்னா தங்களை மாற்றிக்கொள்ள நினைக்கிறவங்களுக்கு மட்டும் தான் கம்ஃபோர்ட் எதிர்பார்க்கிறவங்களுக்கு இல்லை// அலுவலக வேலைகளுக்கு formal உடையும் மற்ற நேரங்களில் casual உடையும் மட்டும்தான் அணியணும்… அதுதான் மாடர்ன் என்கிறீர்களா? இந்த ஒத்த கருத்த வச்சுதான் என்னோட எல்லா கம்மென்ட்-டும் நிக்குது. 🙂
//அப்படின்னா எதுக்கு ரிஷப்ஷனுக்கு அவனுக்கு comfort-ஆ formal-ல வர்றவனை நீங்க கிண்டல் பண்ணனும்?//
இது என்னங்க வம்பா இருக்கு 🙂 எனக்கு அப்படி வருவதைப் பார்த்தால் காமெடியா இருக்கு அதனால் எழுதினேன்.
//உங்களின் மேற்கண்ட கருத்துக்கள் இரண்டையும் படித்து நீங்களே ஒரு முடிவுக்கு வரவும்//
சரியாத்தானே கூறி இருக்கிறேன் “அதாவது ப்ரொஃபசனலா நடந்துக்க வேண்டிய இடம் தவிர்த்து” ப்ரொபசனல் இடம் என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும் நான் என் பார்வையில் பட்டதை கூறி இருக்கிறேன். உங்களுக்கு ரிசப்சன் ப்ரொஃபசனலா தென்பட்டால் அதற்க்கு நான் என்ன செய்ய முடியும். அது உங்க விருப்பம்.
//நீங்க சாதாரணமா முடி வெட்டிக்கிறவனை கிண்டல் பண்ணி, அவனை நோக்கி இந்த பதிவ ஆரம்பிச்சிருக்கக் கூடாது//
எப்படி ஆரம்பிப்பது என்பது நான் தானே முடிவு செய்ய முடியும் 🙂
//சிறு விழாக்களுக்கு போகணும்னு அப்படின்னு நீங்க சொல்றதை ஏத்துக்க முடியாதுன்னு சொல்றேன்//
நீங்க ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று நான் எதையும் கட்டயாப்படுத்தலையே! இப்படி இருந்தால் என் பார்வையில் நன்றாக இருக்கும் என்று கூறுகிறேன். இல்ல நான் வேற மாதிரி போவேன் என்றால் சரி! நான் அதற்க்கு என்ன பண்ண முடியும்.
//திருமணத்திற்கு formal உடையில் வருபவர்களை out of fashion என்கிறிர்கள் என்றுதானே அர்த்தம்? //
இதை அணிந்து சென்றால் நன்றாக இருக்கும் என்று கூறுகிறேன் இல்லை பார்மல் உடையில் தான் செல்வேன் (அலுவலகத்தில் இருந்து நேராக செல்பவர்கள் எதுவும் செய்ய முடியாது) என்றால் அது அவரவர் விருப்பம். நான் கூறுவது டிப்ஸ் தான் கட்டாயம் கிடையாது. “ஆண்கள் அணிய வேண்டிய உடை” என்பதல்ல என் தலைப்பு “உடை அழகு டிப்ஸ்” தான். தலைப்பிலேயே அது சாய்ஸ் என்று கூறி விட்டேன்.
இதில் கட்டாயம் எதுவும் கிடையாது விருப்பம் இருந்தால் பின்பற்றலாம் இல்லை என்றால் ஒதுக்கி விட்டு சென்று விடலாம் அவ்வளவே.
//கடற்கரைக்கு பெர்முடாஸில் வருபவர்களை, திரை அரங்கிற்கு rinkle free பேண்ட்டில் வருபவர்களை, நண்பர்களின் திருமண நாள் பார்ட்டிக்கு formal-ல் வருபவர்களை என்னவென்று சொல்வீர்கள்? இதில் பேஷன் எங்கு வந்தது?//
முத்து நான் ஏற்கனவே நான் கூறி இருக்கிறேன் இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. உங்களுக்கு பேஷன் இல்லை என்பது இன்னொருவருக்கு பேஷனாக இருக்கலாம். அதனால் தான் பின்வருவனவற்றை என் பதிவிலேயே கூறி இருக்கிறேன். இது ஒரு எடுத்துக்காட்டு தான் மற்றபடி அனைத்து விசயங்களுக்கும் பொருந்தும்.
” டி ஷர்ட்டில் காலர் வைத்தது காலர் வைக்காதது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. எடுத்துக்காட்டாக திருமணங்களுக்கு செல்லும் போது காலர் வைத்த டி ஷர்ட் அணிந்து செல்வது நாகரீகமா இருக்கும். காலர் வைக்காத டி ஷர்ட்டையும் அணிந்து செல்லலாம் இருப்பினும் அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.”
//அலுவலக வேலைகளுக்கு formal உடையும் மற்ற நேரங்களில் casual உடையும் மட்டும்தான் அணியணும்… அதுதான் மாடர்ன் என்கிறீர்களா?//
மாடர்ன் என்பதை யாரும் வரையறை செய்ய முடியாது. ஒருவருக்கொருவர் மாறுபடும். என்னோட கருத்து அலுவலக நேரம் மற்றும் தேவைப்படுகிற விஷயங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் கேசுவல் உடை அணிவது நன்றாக இருக்கும்.
ஒரு ஒழுங்கே இருக்காது சட்டையை பேன்டுக்குள்ள போட்டு திணித்து வைத்ததைப்போல பெப்பரப்பேன்னு நின்னுட்டு இருப்பாங்க //
செம காண்டுல இருக்கீங்க போல …ஹி ..ஹி ..ஹி..
நான் எந்த டிரஸ் போட்டாலும் நல்லா இருக்க மாட்டுதுங்க …
நானும் பல நாள் யோசிச்சிருகன்.. தென்னிந்திய பெண்களுக்கு ஏன் மிடி செட் ஆகலன்னு …
பதிவு அருமை
ஆனந்த் நீங்க உடையை சரியா தேர்வு செய்தால் நிச்சயம் நன்றாக இருக்கும். சந்தேகமே வேண்டாம். நமது உடல் வாக்கிற்கு தகுந்த உடையை தேர்வு செய்ய வேண்டும்.
🙂
அதாங்க எந்த உடல் வாகிற்கு எந்த டிரஸ் நும் சொநிங்கனா நல்லா இருக்கும் . .
பாலன் கண்டிப்பாக எழுதுகிறேன். இதே ரொம்ப பெரிய பதிவாகி விட்டதால் அனைத்தையும் குறிப்பிட முடியவில்லை.
ரொம்ப சரி கிரி,
அதிலும் பல சமயங்களில் நம்மாளுக பண்றது இருக்கே கொடுமையா இருக்கும், அதெல்லாம் சரிதான் முதல்ல உடை செலக்ட் பண்றதுக்கு முன்னாடி உங்க உடம்பை சரி பண்ணுங்க ன்னு சொல்றீங்க . .
ம் ம் ம் ம் அதுதானே சரி, நீங்க சொல்ற மாதிரி டைட்டா டி சர்ட் போட்டுகிட்டு தொப்பையோட வருவாங்க பாருங்க – ம் ம் ம் என்னத்த சொல்ல ,
எனக்கும் சின்னதா இருக்கு குறைக்கணும் ஹி ஹி ஹி
தயவு செய்து தொப்பை இருந்தால் உடற்பயிற்சி செய்தாவது குறையுங்க
=====================================================
i am expecting a article on the above advice. i too a member of the above group. [:p]
சில தொப்பை பார்டிங்க ப்ளீட் வைக்காத பேண்டை போட்டு, டைட் டி ஷர்டை இன் பண்ணிக்கிட்டு, ஸ்னீக்கர் ஷூ போட்டுக்கிட்டு வீக் டேஸ் லேயே ஆபீசுக்கு வருவானுங்க. முன் பக்கம் பெல்ட்டை பாக்கவே முடியாது. அது அவனுங்க தொப்பைய சுத்தி இருக்கா இல்லே கீழ இருந்து தொப்பையை தாங்கிக்கிட்டு இருக்கான்னு சந்தேகமா இருக்கும்.
தொப்பையும், வழுக்கை மண்டையும், என்ன தான் டிரஸ் போட்டாலும் கொஞ்சம் டர்ரா தான் இருக்கும். வழுக்கையை நம்மால தடுக்க முடியாது. ஆனா தொப்பையை முயற்சி எடுத்தா தடுக்கலாம்.
தொப்பை இல்லாம ஸ்லிம்மா இருந்தா வழுக்கை கூட பெரிய விஷயம் இல்லே …. ரஜினி மாதிரி.
@ரெஜோலன் 🙂 டைட் சட்டை வித் தொப்பை ஹா ஹா ஹா
@ராஜேஷ் 🙂
@பாமரன் ஹா ஹா ஹா நீங்க சொன்னதை படித்து எனக்கு சிரிப்பு தாங்கல..:-) செம காமெடி போங்க 😀
லேட்டஸ்ட் ஆ …உடை டிப்ஸ் பதிவு போடவே இல்லை..எதிர்பார்கிறேன் ..!
பாலா இன்னும் கொஞ்ச நாள் கழித்து எழுதுகிறேன்.