பலர் சிறு தலைவலி, சளி, காய்ச்சலுக்குக் கூட உடனே மருந்து சாப்பிட்டு விடுவார்கள். தலைவலிக்கு மாத்திரை சாப்பிடுவதில் என்ன தவறு இருக்கு! மருந்து உட்கொண்டால் தானே சரி ஆகும்! என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
நான் கூறுவது சிறு தலைவலி மற்றும் தொடக்கக் காய்ச்சலுக்கு மட்டுமே! தீவிரப் பிரச்சனைக்கு அல்ல. Image Credit
எதிர்ப்புச் சக்தி
அடிக்கடி தலைவலி, சளி, காய்ச்சல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் நம் உடலில் எதிர்ப்புச் சக்தி இல்லாததே. இதன் காரணமாகத் தான் சிலருக்கு உடல் நிலை பாதிப்பு அடிக்கடி ஏற்படுகிறது.
கொஞ்சம் தண்ணீர் மாறினாலோ, தட்பவெட்ப நிலை மாறினாலோ இதன் தாக்கம் அதிகமாக இருக்கும், இதற்கு முக்கியக் காரணம் நம் உடல் அந்த மாற்றத்தை ஏற்று கொள்ளக்கூடிய அளவிற்கு திராணி இல்லாததே!
சிலருக்கு அடிக்கடி காய்ச்சல் தலைவலி சளி வந்து விடும். அவர்களைக் கவனித்தீர்கள் என்றால், அவர்கள் அதிகம் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களாக இருப்பார்கள்.
உடனே மருத்துவனைக்குச் சென்று பார்த்து மருத்துவர் “ஒன்றுமில்லை” என்று கூறி அவர் கொடுக்கும் மாத்திரையைச் சாப்பிட்ட பிறகு தான் நிம்மதியடைவார்கள்.
உடலின் கட்டளை
சிலருக்கு இவைகள் அவர்கள் பக்கமே வராது அப்படியே வந்தாலும் விரைவில் சரியாகி விடும் காரணம், இதைப் போல நேர்ந்தால் உடனடியாக மருந்து உட்கொள்ள மாட்டார்கள்.
சூடா காஃபி, தூக்கம் அல்லது ரசம் சாதமோடு முடித்துக் கொள்வார்கள்.
நம் உடலுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையே ஏதாவது நம் உடலுக்கு நேர்ந்தால், அதை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்பது தான்.
நமக்கு ஏற்படும் பிரச்னையைத் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நம் உடல் இருக்கும்.
எனவே, உடல் அதன் பணியைச் செய்து முடிக்கும் முன்பே நாம் மருந்து எடுத்துக் கொண்டால், நம் உடல் அதற்குப் பழகி விடும்.
எனவே பின்னர் வரும் தலைவலி காய்ச்சல் போன்றவற்றை தடுக்க முயற்சிகள் எடுக்காது, அப்படி வந்தவற்றையும் எளிதில் குணப்படுத்தாது.
மாத்திரைகள் தவிர்க்கப் பட வேண்டியவை
மருந்து சாப்பிட்டால் மட்டுமே குணமாகும் என்ற நிலைக்கு உடல்நிலை பழகி விடும்.
முதலில் தலைவலிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டவர்கள், போகப் போக இரண்டு மூன்று சாப்பிட்டால் தான் சரி ஆகும் என்ற நிலைமை வந்து விடும் அல்லது அதிக சக்தி மருந்து உட்கொண்டால் மட்டுமே கேட்கும் படி நம் உடல் பழகி விடும்.
அதோடு இல்லாமல் நமது உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைந்து, அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் போன்றவைகள் ஆக்கிரமித்துக் கொள்ளும், உடனே குணமும் ஆகாது.
இரு வாரத்திற்கு மூக்கை உறிஞ்சுகிட்டு இருக்க வேண்டியது தான்.
எதிர்ப்புச் சக்தி குறைவதே நம் உடலுக்கு வரும் பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணம். நம்முடைய உடலின் “Firewall” தான் எதிர்ப்புச் சக்தி 🙂 .
இந்நிலையை தவிர்க்க மருத்துவரிடம் செல்லாமல் நீங்களே தலைவலிக்கும் சளிக்கும் காய்ச்சலுக்கும் [Saridon, Crosin, Vicks action 500, Metacin, Anacin(temporarily relieves minor aches and pains due to headache)] மருந்து உட்கொள்வீர்கள் தானே!
அச்சமயங்களில் அதற்குப் பதிலாக ஒரு தூக்கமோ, சூடாக ஒரு காஃபியோ அல்லது ரசம் சாதம் மட்டுமோ சாப்பிட்டு நன்கு ஓய்வு எடுத்தாலே போதுமானது.
இரவில் படுக்கும் போது வயிற்று வலி வந்தால், உடலின் உஷ்ணமாகக் கூட இருக்கலாம், இதற்குச் சிறிது வெந்தயத்தை மோரில் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்கினால் சரி ஆகி விடும்.
இதைப் போலச் செய்ய முடியாத நிலைமையில் இருந்தால் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
மருந்து மாத்திரைகளைத் தவிர்த்தால் மட்டுமே (அவசியமான நேரங்களில் அல்ல) நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும், இதைப் போலத் தொந்தரவுகள் நம்மை நெருங்காது.
குறிப்பு
மேற்கூறிய அனைத்தும் தொடக்க நிலைக்கு மட்டுமே. இதற்காக நாமே நம்மை மருத்துவராகக் கருதிக் கொண்டு அலட்சியமாக இருந்து விடக் கூடாது.
அடிக்கடி நேர்கிறது / குணமாகவில்லை என்றால், மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தொடர்புடைய கட்டுரை
வறட்டு இருமலை குணப்படுத்துவது எப்படி?
மன அழுத்தம் எப்படி இருக்கும்?!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
//ஒரு சிலருக்கு இவைகள் அவர்கள் பக்கமே வராது அப்படியே வந்தாலும் விரைவில் சரியாகி விடும், காரணம் இதை போல நேர்ந்தால் உடனடியாக மருந்து உட்கொள்ள மாட்டார்கள். ஏதாவது சூடா காஃபி, தூக்கம் அல்லது ரசம் சாதமோடு முடித்து கொள்வார்கள்//நான் இந்த வகையாரா. எனக்கும் இப் பிரக்ஞை உண்டு, நல்ல பதிவுபடிப்பவர்கள் பயண்டைவார்கள்
டாக்டர் கிரி வாழ்க.நல்ல உபயோகமான பதிவு.ஆனால் மருத்துவர்கள் சளிக்கு நீண்ட நாள் மருந்து உட்கொள்ளச்சொல்கிறார்கள். அதனாலேயே அப்படியே பழகிவிடுகின்றது
டாக்டர் கிரி,
தலைவலி வருவது வேறொரு நோயின் ஆரம்பகட்ட அறிகுறியாகக்கூட இருக்கலாம். சுய மருத்துவம் ஆபத்தானது.
அதிலும் பலசரக்குக் கடையில் வாங்கிச்சாப்பிடும் மாத்திரைகள் மிகவும் ஆபத்து. எக்ஸ்பைரி ஆனது ஆகாதது எதுவும் தெரியாது. அதே போல பாரசிட்டமால் 50 mg வாங்கி 10 வயது குழந்தைக்குக் குடுப்பதை பார்த்திருக்கிறேன். இது மிக மிக ஆபத்தானது. வயதிற்குத் தகுந்த டோஸ்தான் கொடுக்க வேண்டும்.
// ஆ.முத்துராமலிங்கம் said…
நான் இந்த வகையாரா. எனக்கும் இப் பிரக்ஞை உண்டு, நல்ல பதிவு
படிப்பவர்கள் பயண்டைவார்கள்//
நன்றி முத்துராமலிங்கம் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து
=====================================
// கிஷோர் said…
டாக்டர் கிரி வாழ்க.//
ஐயையோ! இது டாக்டர் விஜய் மாதிரியா அவ்வ்வ்வ்
//நல்ல உபயோகமான பதிவு.//
நன்றி
//ஆனால் மருத்துவர்கள் சளிக்கு நீண்ட நாள் மருந்து உட்கொள்ளச்சொல்கிறார்கள். அதனாலேயே அப்படியே பழகிவிடுகின்றது//
சாதாராண சளிக்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் அவ்வாறு கூற மாட்டார்கள்.
================================
//வடகரை வேலன் said…
டாக்டர் கிரி//
நீங்களுமா!
//தலைவலி வருவது வேறொரு நோயின் ஆரம்பகட்ட அறிகுறியாகக்கூட இருக்கலாம். சுய மருத்துவம் ஆபத்தானது.//
சரி தான் வேலன். நம்ம ஆளுங்க தன்னை மருத்துவர் ரேஞ்சுக்கு கருதி கொண்டு செயல்படுவார்கள் அதன் பின் விளைவுகள் பற்றி அறியாமல்.
// பலசரக்குக் கடையில் வாங்கிச்சாப்பிடும் மாத்திரைகள் மிகவும் ஆபத்து. எக்ஸ்பைரி ஆனது ஆகாதது எதுவும் தெரியாது.//
மிக மிக உண்மை
=========================
பிரேம்ஜி மற்றும் சுரேஷ் கருத்திற்கு நன்றி 🙂
hi giri,nan ungal fan.neengal eluthiya anaithu pathivaiyum udaney padithu viduven.karuthukal therivika vendum endru asai than aanal atharkul system problem endru evanavathu kuptu viduvan nan poitu varuvatharkul page close agi irukum kadupagi viduven.enaku ungal eluthu nadai migavum pidikum manathil patathai solividuvirkal. nanaum ungal ragam than athanal niraiya pirachanaiyum santhichu iruken.neengal ithai kuda oru pathivaga podalam.nan system engineer aga chennai il velai seikiren.ini kandipaga en karuthukal ungal pathivil irukum.
doctor giri,neengal intha pathivu pota neramo ennavo enaku cold.nan eppothum tablet sapdamaten.giri oru chinna help tamilil karuthugal eluthuvatharku idea kudukavum.nalla pathivu aanal sila perai matra mudiyathu.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று சொல்வார்கள். அந்த அளவு என்பதற்கு அளவு கோல் கொடுப்பவர் மருத்துவர். மூன்றுநாள் என்பது நீண்டகாலமா குறுகிய காலமா என்று முடிவுசெய்பவர் மகா மருத்துவர்.(மருத்துவருக்கு சம்பளம் தரும் நோயாளி)
சித்த வைத்தியம் ஆரம்பிச்சுட்டீங்க!மரம் எப்ப வெட்டுவீங்க:)
எனக்கு தலைவலின்னா தூக்கம்தான் மருந்து!பெரும்பாலும் தூக்க மருந்து நல்லாவே இருக்கும்.
எனக்கு மிகவும் உபயோகமான பதிவு!!நன்றி கிரி
//கொஞ்சம் (நிறைய) பேருக்கு, இப்படின்னா காய்ச்சல் தலைவலி சளி வந்து விடும் அவர்களை கவனித்தீர்கள் என்றால் அவர்கள் அதிகம் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களா இருப்பார்கள்.//
காய்ச்சலை விடுங்க, சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும், அது தான் தலைவலிக்கும் காரணமாக இருக்கும். அதற்கு காரணம் சைனஸ் ப்ராபளம்.
அதனை சரி செய்தால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்
//ஒரு தூக்கமோ, சூடாக ஒரு காஃபியோ அல்லது ரசம் சாதம் மட்டுமோ சாப்பிட்டு நன்கு ஓய்வு எடுத்தாலே போதுமானது.//
நண்பரே காப்பிக்கும் மாத்திரைக்கும் பெரிய வித்தியாசமில்லை. அதனை சேர்க்க வேண்டாம்.
உபயோகமான பதிவு.மிக்க நன்றி கிரி.
நாட்டு வைத்தியர் கிரி, 🙂
இதுதான் all round performance-ஆ, கலக்குங்க!
சளி, காய்ச்சலுக்கு நான் மருத்துவர்கிட்ட போயி ஏழெட்டு வருசமாச்சு…
நல்ல உபயோகமான பதிவு.
டாக்டர் ஒரு போதும் மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள் என சொல்ல மாட்டாரே:))! ஆகையால் நீங்கள் டாக்டர் இல்லை சரியா:))? பயனுள்ள பதிவு. உஷ்ணத்துக்கு வெந்தயத்தை மோரில் முன்னிரவே ஊறவைத்து காலை வெற்று வயிற்றில் நன்கு சவைத்து சாப்பிட்டு அந்த மோரையும் குடிப்பது நல்ல பலன் தரும்.
இப்பல்லாம் குறைத்து கொண்டேன்
//nilalgal said… nan ungal fan.neengal eluthiya anaithu pathivaiyum udaney padithu viduven//என்னையா இது! நமக்கும் ஒரு விசிறியா!!// atharkul system problem endru evanavathu kuptu viduvan //ஹா ஹா ஹா உங்கள் கஷ்டம் புரிகிறது. நானும் ஒரு சிஸ்டம் அட்மின் தான் (முன்பு)//nan system engineer aga chennai il velai seikiren.//நான் சென்னையில் 10 வருடம் பணி புரிந்து இருக்கிறேன் சிஸ்டம் அட்மினாக.//ini kandipaga en karuthukal ungal pathivil irukum//நன்றி :-)//giri oru chinna help tamilil karuthugal eluthuvatharku idea kudukavum.//என்பதிவிலேயே அதற்க்கு வசதி இருக்கு, ==================================================//SUREஷ் said… மூன்றுநாள் என்பது நீண்டகாலமா குறுகிய காலமா என்று முடிவுசெய்பவர் மகா மருத்துவர்//ஒரு சிலர் தேவையில்லாமல் அதிக நாட்கள் மருந்து கொடுப்பதாக ஒரு உணர்வு எனக்கு =====================================================//நட்புடன் ஜமால் said… இப்பல்லாம் குறைத்து கொண்டேன்//நல்ல காரியம் செய்தீங்க ========================================================//ராஜ நடராஜன் said… சித்த வைத்தியம் ஆரம்பிச்சுட்டீங்க!மரம் எப்ப வெட்டுவீங்க:)//மரமா!!!!! //எனக்கு தலைவலின்னா தூக்கம்தான் மருந்து!பெரும்பாலும் தூக்க மருந்து நல்லாவே இருக்கும்.//சிறந்த மருந்து :-))=========================================================//இனியவள் புனிதா said… எனக்கு மிகவும் உபயோகமான பதிவு!!நன்றி கிரி//மருந்து நிறையா சாப்பிடுறீங்களா! 🙂 குறைத்துக்குங்க =============================================================//வால்பையன் said… நண்பரே காப்பிக்கும் மாத்திரைக்கும் பெரிய வித்தியாசமில்லை. அதனை சேர்க்க வேண்டாம்.//எப்பவாது குடிப்பதில் தவறில்லை அருண் ======================================================//பாசகி said… நாட்டு வைத்தியர் கிரி, :)இதுதான் all round performance-ஆ, கலக்குங்க!//ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் =======================================================//ராமலக்ஷ்மி said… டாக்டர் ஒரு போதும் மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள் என சொல்ல மாட்டாரே:))! ஆகையால் நீங்கள் டாக்டர் இல்லை சரியா:))? //:-)))) ஆமாம் //உஷ்ணத்துக்கு வெந்தயத்தை மோரில் முன்னிரவே ஊறவைத்து காலை வெற்று வயிற்றில் நன்கு சவைத்து சாப்பிட்டு அந்த மோரையும் குடிப்பது நல்ல பலன் தரும்//இது மிக மிக நல்லது.நான் முதலில் field வேலையில் இருந்தேன், சுற்றி கொண்டே இருக்க வேண்டும், அந்த சமயத்தில் என் முதலாளி (குடும்ப நண்பர் தான்) யின் வீட்டில் இரவு தங்க நேர்ந்த போது எனக்கு வயிற்று வலி வந்தது, அப்போது அவரின் அம்மா தான் இது உஷ்ணமாக இருக்கும் வெந்தயம் கொடுத்து மோருடன் சேர்த்து குடிக்க கூறினார்கள், அதன் பிறகு தூங்கி விட்டேன், வலியும் போய் விட்டது. அன்றிலிருந்து இன்று வரை இதை போல நேர்ந்தால் முதலுதவியாக இதை தான் பின்பற்றுகிறேன்.
நல்ல கருத்துக்கள்,…. நண்பரே தலைவலி என்பது நோய் இல்லை.. ஒரு நோய்க்காண வெளிப்பாடு அல்லது ஒரு நோயின் வெளிப்பாடாகும்.. மற்றும் மன அழுத்தம் போன்றவற்றாலும் வரலாம்… முதலில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று தலைவலி,.. அலச்சியம் செய்யக்கூடாது…. பகிர்விற்கு நன்றி கிரி
பாதி படிகர்த்துகுள்ள ஒரே தலைவலி, இருங்க ஒரு அனாசின் போட்டுட்டு வந்து மீதி பதிவ படிக்கிறேன்
very nice informative article Giri
Thanks,
Arun
அண்ணே எப்ப டாக்டரானிங்க..
ஆமா கண்டபடி மாத்திரை எடுத்தா கூடாதுன்னுதான் சொல்லாறங்க…
ஆமா இந்த டென்ஷனை குறைக்கிற மாத்திரை ஏதாவது இருக்கா… 🙂
//ஆ.ஞானசேகரன் said…
முதலில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று தலைவலி,.. அலச்சியம் செய்யக்கூடாது…. //
வழிமொழிகிறேன்
======================================================
//தமிழன்-கறுப்பி… said…
அண்ணே எப்ப டாக்டரானிங்க..//
நாங்க எல்லார் மாதிரியும் கொஞ்ச நேரம் மாறுவோம் … 😉 (ரொம்ப யோசிக்க கூடாது :D)
//இந்த டென்ஷனை குறைக்கிற மாத்திரை ஏதாவது இருக்கா… :)//
மாத்திரை இல்லை ஆனா ஒரு வழி இருக்கு அது தான் “யோகா”
=====================================================
//Logan said…
பாதி படிகர்த்துகுள்ள ஒரே தலைவலி, இருங்க ஒரு அனாசின் போட்டுட்டு வந்து மீதி பதிவ படிக்கிறேன்//
ஏற்கனவே தலைவலி இருந்ததா இல்லை என் பதிவை படித்து தலைவலி வந்ததா :-)))
=======================================================
// arun said…
very nice informative article Giri//
நன்றி அருண் உங்கள் தொடர் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு.
நல்ல பதிவு! வாழ்துக்கள்!
உபயோகத்தகவல்…
//Mohan said…
நல்ல பதிவு! வாழ்துக்கள்!//
நன்றி மோகன் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து
========================================================
// கீழை ராஸா said…
உபயோகத்தகவல்…//
நன்றி கீழை ராஸா
======================================================
// Bleachingpowder said…
டாக்டர் டாகடர் எனக்கு ஆபிஸ் போனா மேனேஜரை பார்த்தா கோவம் கோவமா வருது. அப்ரைசலை பார்த்தா வயிரு எறியுது. பே சிலிப்பை பார்த்தால் அப்படியே மயக்கமா வருது.லே ஆஃப் பத்தி ஏதாவது ஆர்டிகள் படிச்சா பிபி வேற எகிறுது. இது என்ன டாக்டர் மருந்து??//
அருண் இதற்க்கு நீங்க “சிவராஜ் சித்தவைத்திய சாலை” தான் போகணும் ஹி ஹி ஹி
டாக்டர் டாகடர் எனக்கு ஆபிஸ் போனா மேனேஜரை பார்த்தா கோவம் கோவமா வருது. அப்ரைசலை பார்த்தா வயிரு எறியுது. பே சிலிப்பை பார்த்தால் அப்படியே மயக்கமா வருது.லே ஆஃப் பத்தி ஏதாவது ஆர்டிகள் படிச்சா பிபி வேற எகிறுது. இது என்ன டாக்டர் மருந்து??
பேசாம வேலையை விட்டுட்டு கோடீஸ்வரி கரகாட்ட (ஆடியே சம்பாதிச்ச?) மோகனாம்பாள் கிட்ட அப்பரசெண்டா சேந்துடுங்க…
நல்ல பயனுள்ள பதிவு.
//மங்களூர் சிவா said…
நல்ல பயனுள்ள பதிவு.//
நன்றி சிவா
நான் தலைவலி என்றால் மாத்திரை எடுத்து கொள்வது கிடையாது முடிந்தவரை சமாளிக்க பார்ப்பேன் டாக்டரிடம் போக முடியவில்லை என்றால் ஒரு டோஸ் எடுத்து கொள்வேன்
எனக்கு தலைவலியே வந்தது கிடையாது … ஹி ஹி 🙂
அண்ணா ஒரு நல்ல பதிவு கொடுத்ததுக்கு முதல்ல ஒரு நன்றி(அப்போ இதுக்கு முன்னாடி எழுதனது எல்லாம் மொக்கைன்னு அர்த்தம் இல்லை ),,
இரண்டாவது உங்கள் விசிறிகளுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு ஒரு பெரிய நன்றி …..
மூன்றாவது நன்றி இல்ல வாழ்த்துக்கள் எதுக்குன்னா கமெண்ட் பாக்ஸ் வருவதற்குள் நான் நொந்து விட்டேன் …இவ்ளோ பேர் இன்று மட்டும் படித்துவிட்டு கருத்துக்கள் எழுதியதற்கு (ஊரு பக்கம் வந்திங்கனா இதுக்கு முடிந்தா விருந்து கொடுக்க வேண்டும் )
\\முதலில் தலைவலிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டவர்கள், போகப் போக இரண்டு மூன்று சாப்பிட்டால் தான் சரி ஆகும் என்ற நிலைமை வந்து விடும் அல்லது அதிக சக்தி மருந்து உட்கொண்டால் மட்டுமே கேட்கும் படி நம் உடல் பழகி விடும்.\\\
இது நூற்றுக்கு நூறு உண்மை அண்ணா … என் அம்மா இப்படி சின்ன சின்ன தலைவலி, கழுத்து வலி, கைகால் வலி போன்றவற்றிற்கு எல்லாம் மெடிக்கலில் இவர்களாகவே மருந்து வாங்கி இரண்டு வேளைக்கு சாப்பிடுவார்கள் .
எவ்வளவோ எடுத்து சொல்லியும் இந்த பழக்கத்தை அவர்கள் விடவே இல்லை அல்லது விட முடியவில்லை. இதனால் எனக்கும் அம்மாவும் பல முறை கடுமையான சண்டை வந்து நாட்கணக்கில் பேசாமல் இருந்தது உண்டு. இப்படியே போக ஒரு நாள் உடல் நிலை மோசமடைந்தது. நடக்ககூட முடியாமல் போக மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு மருத்துவர்கள் பல சோதனைகள் எடுத்து பார்த்ததில் என் அம்மா மெடிக்கலில் வாங்கி சாப்பிட்ட மருந்துகளால் அம்மாவின் எலும்புகள் வலுவிழந்து தேய ஆரம்பித்து விட்டன . கிட்டத்தட்ட எலும்பு புற்றுநோய் என்னும் நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் சொன்னார்கள். எலும்பு தேய்மானம் மட்டும் இல்லாமல் உடலில் ரத்தம் குறைந்து கொண்டே போனது … சிறிது காலத்தில் அம்மா கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையில் இறந்து விட்டார்கள்.
அம்மா இறந்ததில் இருந்து யாரவது மெடிக்கலில் மருந்துசீட்டு இல்லாமல் வாங்குவதை கண்டால் அங்கேயே அவர்களிடம் எடுத்து சொல்லி மருத்துவரை பார்க்க சொல்வேன் . இதனால் பல மெடிக்கல் காரர்களிடம் நான் திட்டு, ஒரு இடத்தில் அடி வாங்கி இருக்கிறேன்.
உங்கள் கட்டுரை படிக்கும் போது முழுவதும் என் அம்மாவின் செயல் தான் எனக்கு ஞாபகம் தான் வந்தது
ஆங்கில மருத்துவத்தை 90 சதவிகிதம் நிறுத்திவிட்டேன். ஆனால் தீர்க்க முடியாத வேதனையில் பல முறை தலைவலி மாத்திரையை மட்டும் பயன்படுத்தி விடுகின்றேன்.
எப்பொழுதாவது வரும் தலைவலிக்கு ஒரு மாத்திரை போடுவதோடு சரி (குறிப்பாக விமான நிலையத்திலிருந்து ஊருக்கு – 8 மணி நேர பயணம்) மாத்திரை என்றால் விழுங்குவது கிடையாது.. பல்லால் மென்று தூளாக்கி அப்புறம் தண்ணீர் குடிப்பது. என் மனைவிக்கும் என் அப்பாவிற்கும் மாத்திரை கொடுத்தால் அதை நான்காக உடைத்து கொடுக்கவேண்டும். (நான் பலமுறை வேண்டுமென்றே கேட்டிருக்கிறேன் சோறு குலோப்ஜாமூன் அல்வா எல்லாம் உடனே உள்ள போகுது மாத்திரை மட்டும் விழுங்க முடியலையா என்று)
மூக்கடைப்பு இருந்தால் இடதுபுறம் (கீழே படுமாறு) ஒருக்களித்து படுத்து ஒரு நிமிடம் மூச்சு தம்கட்டி நிறுத்தி சுவாசித்தால் மூக்கடைப்பு போய்விடும்.
how will you chew tablet ???
OMG :0
அது ஒருத்தர் எனக்கு சொல்லிகொடுத்தது.. உடனே நிவாரணம் வேண்டுமென்றால் மென்ற பிறகு தண்ணீரை குடியுங்கள் என்றார்.
சிறு வயதில் அம்மா வேப்பிலை உருண்டை கொடுப்பார்.
ஹாஸ்டலில் படித்தபோது ஒரு வாளி பாகற்கா பொரியலையே அஞ்சு பேர் சேர்ந்து காலி பண்ணியிருக்கோம்… இதெல்லாம் எம்மாத்திரம்..
வேப்பிலை உருண்டை, ஒரு வாளி பாகற்கா, tablet பல்லால் மென்று தூளாக்கி அப்புறம் தண்ணீர் குடிப்பது…Great :0
கிரி..எனது சொந்த அனுபவத்தில் ஆங்கில மருத்துவத்தை காட்டிலும், பழைய கை வைத்தியத்தில் நம்பிக்கை உண்டு.. பழைய வைத்திய முறைகளில் உடனடி தீர்வை எதிர்பார்க்க முடியாது. ஆனால் பக்க விளைவுகள் இல்லாத, பாதுகாப்பான ஒன்று என நான் கருதுகிறேன். மீண்டும் பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி.
அனைவரின் வருகைக்கும் நன்றி
@என்னது தலைவலியே வந்தது இல்லையா… வேற யாருக்காவது தலைவலி வர வைத்து இருக்கீங்களா 😉
@கார்த்திகேயன் கார்த்தி மேலே இருப்பதெல்லாம் 2009 ல் போட்ட பின்னூட்டங்கள். துவக்கத்திலேயே எழுதி இருக்கிறேனே இது ஒரு மறுபதிப்பு என்று.
நீ கூறியது போல மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நாமே மருந்து வாங்கி சாப்பிடுவது தவறான ஒன்று.
@ராஜ்குமார் நீங்க ஒரு அதிசயப் பிறவி பாஸ் 🙂 எப்படி இப்படி எல்லாம்… எப்படித்தான் இப்படி கசப்பு சாப்பிடுறீங்களோ! எனக்கு வாந்தி வந்துடும்.
உங்களை பழி வாங்கத் தான் இப்படி யோசனை கூறி இருக்கிறார் போல 🙂 🙂
@யாசின்… பக்க விளைவுகள் இல்லை என்று ஒரு பக்கமாக இழுத்துக்காம இருந்தா சரி 🙂
நல்ல மறு பதிவு கிரி..
உடலின் மொழி (author- umar fharuk) புத்தகம் sameebathil padithen. migavum arumaiyana புத்தகம். udal, unavugal, marunthugal kurithu naam tharpothu kadaipidithu kondirukum muraigal evvalavu thavaraanavai enbathai namaku nangu உணர்த்தும் சிறந்த புத்தகம் இது.
kandipaaga vaaipirunthaal anaivarum padikavum.:-)
Nice re post giri… my boss is a South African (White) and he says if you get fever once in a while relax and have rest… the body is getting used to fight the germs and all.. basically enakku doctor na allergy… ennala onnum mudiyala appadinna thaan I will go for doc… enakku patti vaithyam thaan… jorama… lankanam parama aushatham… thalai vali yaa.. sooda sukku cofee… vayithuvaliya.. More saatham.. odambu valiya.. nalla vennerla oru amsamana kuliyal.. ippadi sila pala problem nammalana kai vaithyam thaan..
Kamesh