வறட்டு இருமலை குணப்படுத்துவது எப்படி என்று இக்கட்டுரை விளக்குகிறது. மருந்துகளைக் கண்டாலே எனக்கு வெறுப்பு தான்.
தலைவலி, சிறு காய்ச்சல், சளி, இருமலுக்கு மருந்து உட்கொள்ள மாட்டேன். இதைக் கடந்த 20 வருடங்களுக்கு மேலாகப் பின்பற்றி வருகிறேன். Image Credit
எதிர்ப்புச் சக்தி
எனக்கு இதுபோலத் தொந்தரவுகள் வெகுகுறைவு. காரணம், மருந்துகள் நம்முடைய எதிர்ப்புச் சக்தியைப் பலமிழக்க செய்து விடும்.
சமீபத்தில் மாத்திரை உட்கொள்ள வேண்டிய நிலையானது, வெரிகோஸ் பிரச்சனைக்கு மட்டுமே! இதைக் கூடச் சில உடற்பயிற்சிகளைச் செய்து இருந்தால், வராமலே செய்து இருக்கலாம். சிகிச்சை முடிந்த பிறகு இது பற்றி விரிவாக எழுதுகிறேன்.
தற்போது இதை எழுதக்காரணம், ‘இருமல்’ பிரச்சனை.
வறட்டு இருமலை குணப்படுத்துவது எப்படி?
சில வருடங்களுக்கு முன் வறட்டு இருமல் ஏற்பட்டது. இதை எப்படிச் சரி செய்வது என்று யோசித்து, கொஞ்சம் தண்ணீர் குடித்துப் பார்ப்போம் என்று முயற்சி செய்தேன்.
சரியானது போலத் தெரிந்தது. அதன் பிறகு மறந்து விட்டேன்.
பிறகு கடந்த வருடம் இதே போல இருமல் வந்தது. கடந்த முறை போல முயற்சித்துப்பார்ப்போம் என்று 5 நிமிட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சம் (தொண்டை நனையும் அளவுக்கு) தண்ணீர் குடித்தேன். இருமல் சரியானது.
இருப்பினும் எனக்குச் சந்தேகம். இதனால தான் சரியானதா என்று?! திரும்பச் சோதித்துப் பார்க்க, இப்பிரச்சனை திரும்ப வரவில்லை.
சமீபத்தில் இருமல் பிரச்னை வர, இந்தமுறை உறுதிப்படுத்திப்போம் என்று கொஞ்சமாக, தொண்டை நனையும் படி 5 நிமிட இடைவெளியில் தண்ணீர் குடித்தேன் சரியாகி விட்டது.
மருந்துகள் சாப்பிட மாட்டேன் என்பதால், எனக்கு விரைவிலேயே (30 நிமிடங்கள்) சரியாகி இருக்கலாம். மருந்துகள் சாப்பிடுவர்களுக்குக் கூடுதல் நேரம் எடுக்கலாம்.
எனவே, இருமல் வந்தால், மருந்தை முயற்சிக்கும் முன் இவ்வழியை முயற்சியுங்கள்.
முடிந்தவரை மருந்து உட்கொள்வதைத் தவிர்க்கவும். தேவையான பிரச்சனைக்கு மருந்து சாப்பிட வேண்டும், நாமே மருத்துவராகி விடக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
தொடர்புடைய கட்டுரை
சிறு தலைவலிக்குக் கூட மாத்திரை சாப்பிடுபவரா?
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, எவ்வளவு பெரிய மேட்டர சும்மா பொசுக்குன்னு சொல்லிடுங்க!!! இந்த இருமலால நான் பட்டபாடு கொஞ்ச நஞ்சம் இல்ல!!! நான் திருமணம் செய்தது 2010 டிசம்பர் 26. திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு ஊர்க்கு செல்வதாக திட்டம்.. ஆனால் டிசம்பர் முதல் வாரத்திலிருந்தே ஒரே இருமல்.. (நான் தற்போது வரை உடல் ரீதியா எந்த பிரச்சனைக்கும் மருத்துவமனைக்கு செல்லமாட்டேன்).. முடிந்தவரை இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தி குணமாக்க பார்ப்பேன்..
கிட்டத்திட்ட ஒரு வாரத்திற்கு மேல், இருமல் நிற்கவே இல்லை.. எல்லா விதமான மருத்துவமும் பார்த்துவிட்டாச்சி.. மருந்து சாப்பிடும் போது மட்டும் இருமல் நிற்கும்.. பின்பு மீண்டும் அதே பிரச்சனை.. ஒரு கட்டத்தில் மண மேடையிலும் இரும்பி கொண்டுதான் இருக்க வேண்டும் என்ற மன நிலைக்கு வந்து விட்டேன்..
திருமணம் என்பது வாழ்நாள் கனவு.. அதை இந்த இருமல் வந்து தடையா இருக்குமோ என்று கனவிலும் நினைக்கவில்லை.. நாலைந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றாலும், எல்லா இடத்திலும் ஒரு பதில் : CLIMATE பிரச்சனை.. (வழக்கமா டிசம்பர் ல இங்கு குளிர் அதிகம் இருக்கும்..)
ஊருக்கு போற நாளும் வந்தது. விமானத்திலும் இருமல்.. என என் பயணம் இருமலிலே சென்றது.. வீட்டுக்கு போய், தூங்கி காலைல 11 மணிக்கு எந்திரிச்சி, குளிச்சிட்டு வந்தேன்.. இரும்பலை காணோம்!!!! எனக்கு சந்தோசம் ஒரு பக்கம்!!! கடுப்பு ஒரு பக்கம்!!! அந்த இருமல் எப்படி நின்றது என்று காரணம் எனக்கு இன்னும் தெரியவில்லை!!!! ஒரு வேளை துபாய்ல நான் எடுத்த மருந்து மொத்தமா ஒண்ணா இந்தியாவுல வேலை சேஞ்சுக்கானு தெரியல?????? பகிர்வுக்கு நன்றி கிரி..
யாசின் உங்க பிரச்னை படிக்கச் சுவாரசியமாக! இருந்தது. நல்லவேளை திருமணத்தின் போது சரியாகி விட்டது 🙂 .
திருமணத்தின் போது இருமிட்டு இருந்தால், எப்படி இருந்து இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன் 😀