த்தா.. பயத்தை மட்டும் மூஞ்சில காட்டிடாதே!

9
பயத்தை மட்டும் மூஞ்சில காட்டிடாதே!

மக்கு நேரம் சரியில்லையென்றால் “சனி” எந்தப்பக்கம் இருந்து வரும்னே தெரியாது.

சிங்கப்பூரில் ஒருவர் தன் Tshirt ல் “I’m F**king Special” என்று போட்டு இருந்ததற்குப் பிரச்னையை எதிர்கொண்டு உள்ளார்.

தற்போது Tshirt ல் பல வகையான வாசகங்களைப் போட்டுக்கொள்வது வழக்கமாகி விட்டது.

பல நகைச்சுவையாகவும், சுவாரசியமாகவும், தன் மன ஓட்டங்களைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கும்.

இது போலச் சிங்கப்பூரில் ஒருவர் தன் Tshirt ல் “I’m F**king Special” என்று போட்டு MRT ரயிலில் பயணம் செய்து இருக்கிறார்.

அதே ரயிலில் பயணம் செய்த வெள்ளைக்காரருக்கு என்ன பிரச்சனையோ இந்த வாசகம் அவரைக் கோபப்படுத்தி விட்டது.

தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க

“என்னுடன் சண்டைக்கு வருகிறாயா? ஒத்தைக்கு ஒத்தை பார்த்துக்கலாமா?” என்று நீண்ட நேரம் திட்டி, பின் ஒரு கட்டத்தில் கேப்டன் போல “தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க” என்று ரயிலுக்கு வெளியவே தூக்கி வீசத் தயாராகி விட்டார்.

இந்த நேரத்தில் தான் தமிழ் திரைப்படத்தில் போல Elfy என்ற பெயருடைய மலாய் சிங்கப்பூரர் Entry கொடுத்து “நீ யாருயா? அவர் அப்படிப் போட்டு இருந்தா உனக்கு என்ன பிரச்சனை?” என்று எகிற, வெள்ளைக்காரர் தபதப ன்னு குழறி விட்டார்.

இதற்குள் காவல்துறை வந்து இருவரையும் அழைத்துக்கொண்டது.

இதை வழக்கம் போல ஒருவர் காணொளி எடுத்துப் போட்டு விட்டார். சமூகத்தளங்களில் பட்டையக் கிளப்பிட்டு இருக்கு.

சிங்கப்பூர் சட்ட மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருமான கே. சண்முகம் இந்தச் சம்பவம் குறித்துப் பின்வரும் படி கூறி இருக்கிறார்.

“Came across this video. Unacceptable bullying conduct. People like this are sick in their mind. And try and take it out on others.

“I hope his employer will take some action, against him — he brings his organisation into disrepute.”

Elfy என்ற இந்த நபருக்கு வாழ்த்துக்கள் / பாராட்டுகள் குவிந்து கொண்டு இருக்கிறது. சிலர் பரிசுகள் கூடக் கொடுத்து இருக்கின்றனர் 🙂 . Source

Elfy க்கு இந்த ரம்ஜான் சிறப்பான ஒரு ஆண்டாக அமைந்து விட்டது 🙂 .

இது ஒரு செய்தி. இதை நான் இங்கே கூறக் காரணம் இருக்கிறது

சில வெள்ளைக்காரர்களுக்குப் பொதுவாகவே தான் பெரிய “இவர்ர்ர்ர்ர்ர்” என்ற நினைப்புண்டு.

அந்தத் தில்லில் இன்னொரு நாட்டில் இருந்து கொண்டு சாதாரண விசயத்துக்கு உள்ளூர் ஆசாமியுடன் சண்டைக்குப் போய் இருக்கிறார், அதுவும் பொது இடத்தில்.

இதைச் செய்ய இரு காரணங்கள் இருக்க முடியும்.

 1. ஒன்று தான் பெரிய இவர்ர்ர்ர்ர்ர் என்பது.
 2. இன்னொன்று ஏதாவது மன உளைச்சல் காரணமாக / வேறு இது தொடர்பான சம்பவங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.

ஏனென்றால், இதற்கெல்லாம் சண்டைப்போட்டால், நாட்டுல பாதிப் பேர் Tshirt போடவே முடியாது. அவனவன் சட்டையைக் கிழித்துட்டு அலைய வேண்டியது தான்.

பொதுவாகச் சிங்கப்பூரில் உள்ள மக்கள் அமைதியானவர்கள், பொது இடங்களில் சண்டைக்குப் போவது சத்தம் போடுவது மிகக் குறைவு.

பெரும்பாலும் மொபைலைத் தான் நோண்டிக்கொண்டு இருப்பார்கள். கண்டிப்பாக விதி விலக்குகள் இருக்கும் ஆனால், அது மிக மிகக் குறைந்த சதவீதம்.

எனவே, பிரச்சனை என்றாலும் அமைதியாக இருப்பார்கள்.

வெள்ளைக்காரர் அந்த நபரைத் திட்டியதும் அருகே இருந்த யாரும் உள்ளூர் நபருக்கு ஆதரவாகவோ / குறைந்த பட்சம் வெள்ளைக்காரருடன் பேசவோ முயற்சிக்கவில்லை.

என்ன காரணம்?

தட்டிக்கேட்காதற்குக் காரணம், பயம், தயக்கம், வெள்ளைக்காரர்.

ஆள் வேறு பல்க்கா இருக்கிறார், எதற்கு வம்பு?, எதற்கு அடுத்தவர் பிரச்சனை? என்ற வழக்கமாக அனைவருக்குள்ளும் இருக்கும் எண்ணங்கள்.

யாரும் தன்னைத் தட்டிக் கேட்கவில்லை என்றதும் தைரியம் அதிகமாகி, இன்னும் கேள்வி கேட்டு அவரை அடித்து வெளியே போடும் அளவிற்குச் சென்று விட்டார்.

இருந்தும் யாரும் உதவிக்கு வரவில்லை.

இது போலச் சூழ்நிலையில் நான் இருந்தாலும் அந்தப் பெரும்பான்மையானவர்களில் ஒருவனாகத் தான் இருந்து இருப்பேன்.

“தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்” படத்தில் ஒருத்தனை தீவிரவாதி ஒருவன் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் போட்டு அடிப்பான்.

ஆனால், பொதுமக்கள் பார்த்துக்கொண்டே இருப்பார்கள் ஒருவரும் உதவிக்கு வர மாட்டார்கள். அதற்கு அவன் கூறும் பதில் செமையா இருக்கும்.

அது போல இங்கேயும் யாரும் இவருக்கு உதவிக்கு வரவில்லை.

அந்தக் கம்பார்ட்மெண்ட்டில் பெரும்பான்மையானவர்கள் சிங்கப்பூரர்கள், இவர் ஒரே ஆள் அனைவரையும் அசால்ட்டாக மிரட்டிக்கொண்டு இருக்கிறார்.

Elfy Entry

இந்தச் சமயத்தில் தான் Elfy Entry கொடுத்துக் கேள்வி கேட்டவுடன் வெள்ளைக்காரர் மிரண்டு தபதபன்னு வண்டு முருகன் மாதிரி முகபாவனைக் கொடுக்கிறார்.

“வீரபாண்டிய கட்டபொம்மன்” மாதிரி வசனம் பேசிக்கொண்டு இருந்தவர் Elfy எகிறியதும் பம்மி விட்டார்.

Elfy கேட்டதும் தைரியம் வந்து! அருகில் உள்ளவர்கள் முனகுகிறார்கள்.

ஏற்கனவே, வெளிநாட்டு மக்கள் (எங்களைப் போல) எண்ணிக்கையும் அவர்கள் நடந்து கொள்வதும் இங்கே இருப்பவர்களிடையே புகைச்சலை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

இதில் இது போல நடந்ததால் பலர் கொந்தளித்து விட்டனர்.

அறியப்படுவது யாதெனில்…

இதில் இருந்து அறியப்படுவது என்னவெனில் நாம் பயந்து இருந்தால், அடிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதே!

எனவே “புதுப்பேட்டை” படத்தில் கூறுவது போல, “என்ன ஆனாலும்… த்தா.. பயத்தை மட்டும் மூஞ்சில காட்டிடாதே!“.

மன பலம் / தைரியம் 

எதிர்ப்பு இல்லையென்றால், ஒரு அடி அடிப்பவன் கூட நாலு அடி சேர்த்துப் போடுவான்.

எதிர்ப்பு என்பது எதிராளியை திகைக்க வைக்க வேண்டும், தொடர்ந்து கைகலப்பிற்கு ஊக்குவிப்பது போல இருக்கக் கூடாது.

இது மேலும் சேதாரத்தை ஏற்படுத்தும்.

Elfy அடிக்கச் செல்லவில்லை ஆனால், அவர் கேட்ட கேள்வியில் தடுமாறி மற்றவர்கள் இவருக்கு ஆதரவு கொடுக்கும் சூழ்நிலை உருவானதும் வெள்ளைக்காரர் தன் மன பலத்தை இழந்து விட்டார்.

“யார் முதலில் ஆரம்பிப்பது?” என்பது தான் இங்கே பிரச்சனையே!

எனவே, அடங்கிப் போனால் ஏய்த்து விடுவார்கள்.

கொஞ்சமாவது எதிர்ப்பைக் காட்டினால் தான் எதிராளி யோசிப்பார் இல்லையென்றால் நமக்குத் தர்ம அடி உறுதி 🙂 .

நாம் பயப்படப் பயப்பட எதிராளியின் “மன பலம்” கூடிக்கொண்டே செல்லும்.

அதனால் மக்களே…..!

கொசுறு 1

எனக்குத் திருமணம் ஆகும் முன்பு என் ஒரு Tshirt ல் “Not all men are stupid, still some stay bachelors!” என்று வாசகம் போட்டு இருந்ததைப் பார்த்துத் திருமணமான ஒருவர் காண்டாகி சிரித்தபடி!! பேசியது நினைவுக்கு வருகிறது 🙂 .

கொசுறு 2

தற்போது தமிழ் வாசகங்களில் Tshirt பிரபலமாகி வருகிறது. ஊருக்கு வரும் போது வாங்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன் 🙂 .

முன்பு அதிகளவில் இதுபோலப் போட்டுக்கொண்டு இருந்தேன் ஆனால், அலுவலகங்களில் வாசகத்துடன் அணிவதற்குக் கட்டுப்பாடு இருப்பதால், Plain Tshirt வாங்க வேண்டியதாகி விட்டது.

கொசுறு 3

உங்களுக்கு இது போல அனுபவம் இருக்கிறதா? யாராவது உங்களிடம் சண்டை போட்டு இருக்கிறார்களா? அல்லது எதற்கு இது போல வாசகம் வைத்து அணிகிறாய்? என்று கேட்டு இருக்கிறார்களா?

வாசகத்துடன் அணிவதில் உங்களுக்கு விருப்பம் உண்டா?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

9 COMMENTS

 1. கிரி, வித்தியாசமான பதிவாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  (உங்களுக்கு இது போல அனுபவம் இருக்கிறதா? யாராவது உங்களிடம் சண்டை போட்டு இருக்கிறார்களா? அல்லது எதற்கு இது போல வாசகம் வைத்து அணிகிறாய்? என்று கேட்டு இருக்கிறார்களா? வாசகத்துடன் அணிவதில் உங்களுக்கு விருப்பம் உண்டா?)

  அனுபவம் – இதுவரை இல்லை
  சண்டை – அதுவும் இல்லை
  அணிவதில் விருப்பம் – உண்டு, ஆனால் கட்டுப்பாடு இருப்பது நன்று.

 2. உங்கள் பதிவு அனைத்தும் மிக சூப்பர்.உங்களிடம் நான் சில சந்தோகங்களை கேட்க விரும்புகிறேன்.தயவுசெய்து pssaravanan0@gmail.com ல் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது உங்கள் Email id-யை கிழே பதிவு ஙெய்யுங்கள்.இந்த கருத்தை படிப்பிர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.ஜீலை 16 மாலை 6 மணி

 3. நல்ல நடையில், சுவாரஸயமாக எழுதப்பட்ட கட்டுரை. /மன பலத்தை இழந்து விட்டார்/ தேர்ந்தெடுத்த வார்த்தை.

 4. ஒரு முறை திருப்பூர் காதர் பேட்டையில் சல்லிசாக [ரூ100/-] branded t-shirt கிடைக்கிறது என்று என்ன ஏது எழுதியிருக்கு என்பதை எல்லாம் பார்க்காமல், பிடிச்ச கலர் பிடிச்ச டிசைனில் நிறைய அள்ளிட்டு வந்துட்டேன்.

  அலுவலகத்துக்கு தினமும் ஒவ்வொன்றாக புதுசு புதுசாக போட்டுட்டு போயி கலக்கிக்கிட்டு இருந்தேன். அப்படி ஒரு நாள் போட்டுட்டு போன டி-ஷர்ட்டில் “bastard coach” என்று எழுதியிருந்தது போல, நான் கவனிக்கவேயில்லை. நைட் வீடு திரும்புற வரைக்கும் ஓட்டியே கொண்ணுட்டாங்க ஆணும் பொண்ணும் சேர்ந்து.

 5. தல,
  வீடியோ செமையா இருக்கு. வாசகம் போட்டு Tshirt செல்பி ப்ளீஸ் 🙂

  “வாசகத்துடன் அணிவதில் உங்களுக்கு விருப்பம் உண்டா?” – எனக்கு விருப்பம் இல்லை தல..10 பேருக்கு நடுல தனியா எனக்கு தெரிய விருப்பம் இல்லை கூச்சத்து நால 🙂

  – அருண் கோவிந்தன்

  – அருண் கோவிந்தன்

 6. அதுக்காக எந்த வாசகம் வேணுமினாலும் போடலாமா கிரி ..

  வாசகங்கள் உள்ள டிஷர்ட் எனக்கு விருப்பமில்லை.. நான் எப்போதும் அணிவது விளம்பரங்கள் இல்லா ப்ளைன் டிஷர்ட் தான்.. அதிலும்…

  கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு..

 7. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @காத்தவராயன் 🙂

  @அருண் செல்ஃபி 🙂 ஆர்வமில்லை.

  @ராஜ்குமார் என்ன வாசகம் என்றாலும் என்பது தவறு தான். சில நேரங்களில் நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் பிறரை கேள்வி கேட்டு விட முடியாது.

 8. அப்பப்போ உதார் விட்டுட்டே இருக்கனும்கறீங்க.

  நீங்க சொல்வதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ‘Self confidence’ மற்றும் ‘self esteem’ அப்படீங்கரதுல என்னவோ வடா தோசா ஆளுங்கள அடிச்சிக்க முடியாது. நம்மாளுங்க இன்னும் தேரனும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here