எங்குப் பார்த்தாலும் கொரோனா வைரஸ் பற்றியே பேச்சு. யார் இருவர் பேசினாலும் கொரோனா பற்றிய பேச்சு வராமல் இருக்காது.
வைரஸ், ஊரடங்கு, அத்தியாவசிய தேவை, வருமானம், பொருளாதாரம், உடல் நலம் என்று ஏராளமான பிரச்சனைகள் நம் முன்னே நிற்கிறது. Image Credit
இவை எல்லாவற்றையும் விட மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது எதிர்மறை செய்திகள்.
கொரோனாவால் உயிரிழப்புகள், பொருளாதாரத் தேக்கம், பணியிழப்பு, அத்தியாவசிய தேவைகள், உடல்நலம் குறித்த பயம் இருப்பது இயல்பு.
இதையொட்டி ஏராளமான எதிர்மறை காணொளிகள், கட்டுரைகள் இணையம், WhatsApp, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதை அனைவருக்கும் பகிர்வதையே பலர் வேலையாக வைத்துள்ளார்கள்.
இதனால் சாதிக்கப்போவது என்ன?
நடக்கப்போவதை தடுக்க முடியுமா? பொருளாதாரத்தை தனி ஒருவரால் மேம்படுத்த முடியுமா? நமக்கு ஏற்படப்போகும் நடைமுறை சிக்கல்களைத் தவிர்க்க முடியுமா?
நமக்கு என்ன நடந்தாலும் உலகம் இயங்கி கொண்டே தான் இருக்கும். இதற்காகக் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தால், சரியாகி விடுமா?
நாம் மன உளைச்சல் அடைவதோடு மற்றவர்களையும் மன உளைச்சல் அடைய செய்வதால் என்ன நடக்கப்போகிறது?
நமக்கு நடக்கப்போவதை யாராலும் தடுக்க முடியாது. நாம் எச்சரிக்கையாக இருந்து கொள்ள முயற்சி எடுக்கலாமே தவிர, வேறு எதுவும் நம் கையில் இல்லை.
எனவே, தேவையற்ற கொரோனா வைரஸ் செய்திகளை, கட்டுரைகளை, காணொளிகளைப் பார்த்து யாரும் கலக்கம் அடைய வேண்டாம்.
கடினமான சூழ்நிலை வந்தால், அதை நினைத்துக் கலங்குவதை விட, அதை ஒரு சவாலாக எடுத்து முடித்துக் காட்டுகிறேன் என்று நினையுங்கள், உங்களுக்கான மனவலிமை கூடும்.
மன உளைச்சலை ஏற்படுத்தும், மனவலிமையை இழக்க செய்யும் கட்டுரைகள், செய்திகள், காணொளிகளைப் புறக்கணியுங்கள்.
இவற்றால், உங்களுக்கு நல்லதும் நடக்கப்போவதில்லை. முடிந்தால், இது போலச் செய்திகளைப் பரப்பும் WhatsApp குழுவில் இருந்து விலகுங்கள்.
எதிர்மறை செய்திகளைப் புறக்கணித்தாலே, பாதி பிரச்சனைகள் சரியாகும்.
அரசு கூறியுள்ள வழிமுறைகளை, கட்டுப்பாடுகளைப் பின்பற்றுங்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
கிரி, சரியான நேரத்தில் சரியான பதிவு.. உண்மையில் எதிர்மறை செய்திகள் தான் முன்னுக்கு நிற்கின்றது… இது குறித்த எந்த செய்திகளிலும் அதிகம் கவனம் கொள்வதில்லை நான்.. ஒன்றிரண்டு நம்பகமான நண்பர்களின் பதிவை தவிர்த்து.. மனைவியிடமும் இதுகுறித்து அறிவுறுத்தியுள்ளேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
உண்மை தான் யாசின். எதிர்மறை செய்திகள் அதிகளவில் உள்ளது. இதற்கு மக்களும் காரணம்.
மக்கள் இச்செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தால், ஊடகங்களும் இதை அதிகமாகக் கொடுக்கிறார்கள். மக்கள் திருந்தால் இதற்கு விடிவு இல்லை.