கொரோனா பிரச்னை காரணமாக ஃபேஸ்புக் சேவைகளின் பயன்பாடு 50% க்கும் மேல் அதிகரித்துள்ளது ஆனால், அதற்கான வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
Facebook, Video calling on Messaging, Instagram, WhatsApp சேவைகளின் பயன்பாடு சமீப வாரங்களில் எகிறியுள்ளது. Image Credit
உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தே பணிபுரிவதால், மற்றவர்களைத் தொடர்பு கொள்ள, பொழுதுபோக்க இவற்றை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.
சில சேவைகளின் பயன்பாடு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் அனைத்து நிறுவன ஊழியர்களும் வீட்டில் இருந்தே பணி புரிகிறார்கள்.
ஏற்கனவே, ஊழியர்கள் குறைவு அதோடு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளும் அதிகம் உள்ளது.
மென்பொருள் ரீதியான பிரச்சனைகள் என்றால், வீட்டில் இருந்தே ஓரளவு சமாளிக்க முடியும் ஆனால், வன்பொருள் (Hardware) பிரச்சனையென்றால், நேரடியாக இருந்து தான் சரி செய்ய முடியும் ஆனால், இதற்கு ஊழியர்கள் இல்லை / குறைவு.
விளம்பரம்
எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், தொடர்ந்து இயங்க, விளம்பரம் அவசியம் ஆனால், தற்போதைய பொருளாதாரச் சிக்கல்களால் விளம்பரங்கள் குறைந்து விட்டது.
WhatsApp சேவைக்குத் தற்போது வரை விளம்பரங்கள் இல்லாமலே நடத்தப்பட்டு வருகிறது ஆனால், சமீபமாக WhatsApp பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.
இதனால் Server Load அதிகரித்துள்ளது.
‘45,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். இது போலச் சூழ்நிலையை, இதுவரை பார்த்தது இல்லை‘ என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் கூறியுள்ளார் .
இந்நிலை ஃபேஸ்புக்குக்கு மட்டுமல்ல, உலகம் முழுக்க இதே பிரச்சனை தான்.
ஃபேஸ்புக் போன்ற அதிக வருமானமுள்ள நிறுவனங்கள் இச்சூழ்நிலையைச் சமாளிக்க முடியும் ஆனால், சிறு நிறுவனங்களுக்குத் தான் பிரச்சனைகள் அதிகம்.
நிலையற்ற பொருளாதார சூழ்நிலை காரணமாக, தங்கள் தயாரிப்புக்கான விளம்பரங்களுக்குச் செலவு செய்வதை நிறுவனங்கள் குறைத்துள்ளன.
விரைவில் அனைவருக்கும் இந்த நிலை மாறி, வழக்கமான சூழ்நிலை திரும்ப வேண்டும் என்று வேண்டுவோம்.
தொடர்புடைய கட்டுரை
ஃபேஸ்புக் தகவல் திருட்டை தடுப்பது எப்படி?
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கற்பனையில் கூட நினைத்து பார்த்திராத நிறைய விஷியங்கள் கண் முன்னே நடை பெறுவதை.. ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தாலும்.. இது தான் உண்மை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.. பாட்டன், புட்டன் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம் இன்று தான் விளங்குகிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
இப்படியெல்லாம் நடக்கும் என்று எவருமே நினைத்து இருக்க மாட்டார்கள்.
மூன்று மாதங்களுக்கு முன்பு இப்படி நடக்கும் என்று கூறி இருந்தால் சிரித்து இருப்பார்கள்.