காங்கிரஸ் டூல் கிட் சர்ச்சை | COVID-19

2
காங்கிரஸ் டூல் கிட்

காங்கிரஸ் டூல் கிட் (Tool Kit) வெளியிட்டதாகச் சர்ச்சையானது. Image Credit

காங்கிரஸ் டூல் கிட் (Tool Kit)

ஒவ்வொரு கட்சியும் தனது போட்டி கட்சியை எப்படிச் சமாளிக்க வேண்டும், என்ன மாதிரியான வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்த வேண்டும், எதைச் சர்ச்சையாக்க வேண்டும் என்று கூடிப்பேசும்.

இது எந்தக் கட்சிக்கும் வழக்கமானது, வியப்படைய எதுவுமில்லை.

ஆனால், காங்கிரஸ் டூல் கிட் விஷயத்தில் பிரச்சனையானது அதன் வார்த்தை பிரயோகங்கள் மோடியைத் தாக்கியதை விட இந்தியாவைத் தாக்கி இருந்ததே சர்ச்சைக்குக் காரணம்.

இதை நாங்கள் வெளியிடவில்லை, பாஜக வினர் மீது வழக்குத்தொடுக்கப் போகிறோம் என்று காங் கூறினாலும் அதில் கூறப்பட்டுள்ள Indian Variant வார்த்தையைக் காங் தலைவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இக்கட்டுரையில் Indian Variant என்று குறிப்பிட்டதை பற்றி மட்டும் கூறப்பட்டுள்ளது. காரணம், தற்போதும் இவார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.

Indian Variant

காங் டூல் கிட்டில் குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டு, அனைவரும் Indian Variant என்று இந்தியாவில் உள்ள கொரோனாவை அடையாளம் காட்ட வேண்டும் என்று கூறுகிறது.

கொரோனா சீனாவில் உருவாகியது.

இதன் பிறகு அதன் தாக்கம் இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்பெயின் உட்படப் பல நாடுகளில் தீவிரமாகப் பரவிய பிறகே இந்தியாக்கு வந்தது.

ட்ரம்ப் மட்டுமே கொரோனாவை சீன வைரஸ் என்று குறிப்பிட்டார். இதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

சீனாவிலிருந்து உருவாகிய வைரஸை சீன வைரஸ் என்று கூறாமல், கொரோனா என்று கூற வலியுறுத்தும் போது Indian Variant என்று எப்படிக் கூறலாம்?

இந்தியாவில் பரவியுள்ள உருமாற்றம் அடைந்த வைரஸுக்கு B.1.617 என்ற அடையாளம் இருக்கும் போது எதற்காக Indian Variant என்று குறிப்பிட வேண்டும்?

உலகம் முழுக்க பரப்பி உலகையே நாசக்கேடு ஆக்கிய சீனா வைக் கண்டுகொள்ளாமல் இந்தியாவை விமர்சிப்பது நியாயமா?

எங்கே வைரஸ் உருவாகியதோ அவர்களை மறைத்து இந்தியாவை உலகக் குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கும் முயற்சி இது.

Indian Variant என்றால், அந்த Variant மூலம் எது?!

வெளிநாட்டு ஊடகங்கள்

வெளிநாட்டு ஊடகங்களுக்கு இந்தியாவைப் பற்றி மோசமாகச் செய்திகளைக் கொடுத்து இந்தியாவின் பெயரை உலக அரங்கில் நாறடிக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள 80% ஊடகங்கள் இடது சாரி ஊடகங்கள்.

எனவே, மோடியை விமர்சிப்பதாக நினைத்து இந்தியாவை உலக அரங்கில் அசிங்கப்படுத்திக்கொண்டுள்ளன.

இந்திய ஊடகங்களின் துணையோடு Washington Post, New York Times, BBC, Al Jazeera, The Guardian உட்படப் பல்வேறு ஊடகங்கள் இந்தியாவை மிக மோசமாகக் கட்டமைத்து வருகின்றன.

முதலாம் அலையில் அமெரிக்காவில் தற்போது இந்தியாவில் நடந்தது போல நடந்ததை மறைத்து, இந்தியாவை மட்டும் மிக மோசமாகச் சித்தரிக்கிறார்கள்.

அமெரிக்காவில் தினமும் 5000 பேர் இறந்தார்கள், மருத்துவச் சாதனங்கள் கிடைக்காமல் அல்லாடினார்கள், கொத்துக் கொத்தாக இறந்தார்கள்.

இந்தியாவின் மக்கள் தொகை அமெரிக்காவின் மக்கள் தொகையை விட நான்கு மடங்கு அதிகம், இந்தியா வளர்ந்த நாடல்ல வளர்ந்து வரும் நாடு.

அவர்கள் நூற்றுக்கணக்கான சடலங்களைக் கல்லறையில் வரிசையாக வைத்து ரோஜா வைத்தார்கள், நம் நாட்டில் சடலங்களை வரிசையாக வைத்து எரித்தார்கள்.

அவர்கள் பொருளாதாரத்துக்கு, வசதிக்கு அதை ஒழுங்கோடு செய்தார்கள், நம்மால் அதைச் செய்ய முடியவில்லை. அவ்வளவே!

அசாதாரணமான சூழ்நிலையில் எந்த நாடும், அரசும் திணறித்தான் போகும்.

இந்நிலையில் தொடர்ச்சியாக இந்தியாவை மட்டும் குறி வைப்பதேன்? இந்தியாவின் வளர்ச்சியை அழிப்பதே அவர்கள் குறிக்கோள்.

மோடி அரசு இரண்டாம் அலையை எப்படிக் கையாண்டது?

இரண்டாம் அலையை மோடி அரசு சரியாகக் கையாளவில்லை. அனைவருக்கும் தேவையான பொருட்கள் அனுப்பட்டாலும், மேலாண்மை சரியில்லை.

இணையத்தில் வெளிப்படைத்தன்மை இருந்தாலும் அதை மக்களுக்குப் புரிகிற மாதிரியான விதத்தில் கொண்டு செல்லவில்லை.

முதலாம் அலையில் முழுக்கட்டுப்பாட்டையும் மத்திய அரசு வைத்து இருந்தது.

இதனால் மாநில சுயாட்சி பாதிக்கப்படுவதாக மாநிலங்கள் கூறியதால், இரண்டாம் அலையில் மாநிலங்களுக்கே பொறுப்பை வழங்கி விட்டது.

ஆனால், ஊரடங்கு போன்ற விஷயங்களில் அது சரிப்பட்டு வரவில்லை.

ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி காலங்களில் ஊரடங்கு போட்டதால், மக்கள் பரவல் இருந்து கொண்டே இருந்தது.

ஊரடங்கை மாநிலங்களின் பொறுப்பில் விட்டதே இரண்டாம் அலை மோசமானதுக்குக் காரணம். மத்திய அரசு செய்த மிகப்பெரிய தவறு.

மத்திய அரசுக்கென்று உள்ள பொறுப்பை இரண்டாம் அலையில் சரிவர நிறைவேற்றவில்லை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

முதலாம் அலையில் முழு ஊரடங்கு போடப்படாமல் இருந்து இருந்தால், கற்பனையே செய்ய முடியாத அளவுக்குச் சேதமாகி இருக்கும்.

காரணம், இந்தியா அதற்குத் தயாராகவில்லை.

தற்போது முதலாம் அலையில் கற்றுக்கொண்டதை வைத்து இரண்டாம் அலையில் ஓரளவு சமாளிக்க முடிந்தது.

எனவே, மத்திய அரசை விமர்சிக்கக் காங் க்கு மட்டுமல்ல, அனைவருக்குமே காரணம் உள்ளது.

விமர்சிக்கப்பட வேண்டியது இந்தியா அல்ல

இடது சாரியினர் & மோடியை எதிர்ப்பவர்கள் அனைவருக்கும் மோடியை எப்படி எதிர்ப்பது என்பதில் குழப்பம் உள்ளதா? அல்லது தெரிந்தே செய்கிறார்களா?

நமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம் அது வேறு ஆனால், மற்றொரு நாட்டுடன் ஒப்பிட்டு எக்காலத்திலும் இந்தியாவை விட்டுத்தரக் கூடாது.

மோடி மீது விமர்சனம் உள்ளது என்றால், தாராளமாக விமர்சிக்கட்டும் ஆனால், அவ்விமர்சனம் இந்தியாவை அவமானப்படுவதாக இருக்கக் கூடாது.

காங் தலைவர் கமல்நாத் இரு நாட்களுக்கு முன்பு கூட ‘Indian Variant என்று கூறுவதில் என்ன பிரச்சனை?‘ என்று கேட்டு இருந்தார்.

எப்போதாவது Chinese Virus என்று இவர் கூறி கேட்டுள்ளீர்களா? Indian Variant என்று மட்டும் கூறுவதில் இவர்கள் ஆர்வம் காட்டுவதேன்?

காங் போன்ற இந்தியாவின் பாரம்பரியம் மிக்கக் கட்சி இவ்வாறு நடந்து கொள்வது சரியல்ல.

இந்தியா இந்நிலையை நிச்சயம் கடந்து செல்லும்.

தொடர்புடைய கட்டுரைகள்

Drug Mafia | உலக மருந்து அரசியல் | COVID-19

SICK Mind ஊடகங்களும் அரசியல்வாதிகளும் | COVID-19

இந்தியாவை கிண்டலடிக்கும் சைக்கோ இந்தியர்கள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, கொரோனவை குறித்து பல செய்திகள் பல்வேறு வகையாக வந்து கொண்டு இருக்கிறது.. சில செய்திகளை விரும்பினாலும், விரும்பாவிடினும் நம்மை வந்து சேர்க்கிறது.. நெருங்கிய நண்பனின் அக்காவை கொரோனா தாக்கி உயிரிழந்து உள்ளார்.. எல்லாம் கண் மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்து விட்டது.. இந்த நிகழ்வு என்னை வெகுவாக பாதிக்க வைத்தது..

    உலகின் ஏதோ ஒரு மூலையில் தோன்றி இன்று மனித காலடி படாத இடம் முதல் எவெரெஸ்ட் சிகரம் வரை கொரோனா சென்று உள்ளது.. நிறைய கேள்விகளுக்கு விடைகள் தெரியவில்லை.. உலகமே இன்று பதறி கொண்டிருக்க சீனா மட்டும் தன் தினசரி அலுவலில் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறது.. ஓன்னுமே புரியல கிரி..

  2. @யாசின் அதே தான்… உலகத்துக்கே பரப்பி விட்டுட்டு இவனுக நிம்மதியா இருக்கானுங்க.

    இதை வைத்துப் பணம் பண்ணவும் ஆரம்பித்து விட்டார்கள். செம்ம காண்டாகுது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here