Boy Missing (2016 Spanish) | பையனைக் கடத்தியது யார்?

2
Boy Missing movie review

மிகப்பெரிய கிரிமினல் வழக்கறிஞரான Patricia de Lucas மகன் விக்டர் கடத்தப்பட்டதாக அறிகிறார் ஆனாலும், மகன் கிடைத்து விடுகிறான். Image Credit

யார் கடத்தியது என்று காவல்துறை அவனிடம் விசாரிக்க, ஒருவரை தவறாக விக்டர் அடையாளம் காட்ட அதனால் மிகப்பெரிய பிரச்சனையாகி விடுகிறது.

இறுதியில் என்ன ஆகிறது என்பதே Boy Missing.

Boy Missing

துவக்கத்தில் சாதாரணமாகத் துவங்கி நடுவில் பரபரப்பாகி இறுதியில் செம ட்விஸ்ட்டோடு முடிகிறது.

மகன் அடையாளம் காட்டிய நபர், மகனை மிரட்டுவதாகத் தனது முன்னாள் கணவரிடம் Patricia de Lucas உதவிக்குப் போகிறார்.

சின்னதாகத் தட்டி வைக்க நினைத்து மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

விக்டர் தவறாகக் கூறி இருக்கலாம் என்று சந்தேகப்பட்டுக் கண்டுபிடிக்கக் காவல் அதிகாரி முயற்சிக்கும் ஒரு யோசனை பலே ரகம் 🙂 .

சின்னப் பையனான விக்டருக்கு பிறவியிலேயே பேச்சு வராது, காது கேட்காது எனவே, அவனிடம் விவரங்களை அவன் போக்கிலேயே சென்று பிடிப்பது சிறப்பு.

இறுதி ட்விஸ்டுக்காக இடையில் நடக்கும் சம்பவத்தில் சில சமரசங்களைச் செய்துள்ளார்கள். அதைக் கூறினால், சுவாரசியமாக இருக்காது.

மகனைக் காப்பாற்ற, அவனுக்குப் புரிய வைக்கப் பொறுமையாக Patricia de Lucas விளக்கும் காட்சிகள் அம்மாவின் அன்பை வெளிப்படுத்துகிறது.

என்ன தான் பெரிய கிரிமினல் வழக்கறிஞராக இருந்தாலும், பிரச்சனை தனக்கென்று வரும் போது படபடப்பாவது இயல்பு.

அறிவுரை, யோசனை அடுத்தவருக்குக் கூறுவது எளிது ஆனால், அதே நமக்கு என்றால் அதே பயம் 🙂 .

இப்படத்தில் புரிந்து கொண்டது..

குழந்தைகள் கூறுவதை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. பதட்டத்தில் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தான் தோன்றும்.
நிதானம் ரொம்ப அவசியம்!

யார் பார்க்கலாம்?

அனைவரும் பார்க்கலாம்.

துவக்கத்திலும் இடையிலும் இப்படித் தான் நடக்கும் என்று நினைத்தால், இறுதியில் செம ட்விஸ்ட்டோடு முடிக்கிறார்கள்.

இதில் என்ன சுவாரசியம் என்றால், இந்த ட்விஸ்ட்டால் நம்மால் மகிழ்ச்சியும் அடைய முடியாது, வருத்தமும் அடைய முடியாது 🙂 .

வித்யாசமா இருக்குல்ல.. அவசியம் பாருங்க.

NETFLIX ல் காணலாம்.

Genre Suspense thriller
Spanish title Secuestro
Directed by Mar Targarona
Starring Blanca Portillo, Jose Coronado, Nausicaa Bonnín
Duration 105 minutes
Release date 19th August, 2016
Country Spain
Language Spanish

தொடர்புடைய திரை விமர்சனங்கள்

AK Vs AK (2020) | நீ ஹீரோ தானே! கண்டுபிடி பார்க்கலாம்

Helen (மலையாளம் 2019) Survival of the fittest

I Care A Lot (2020) | அவசரப்பட்டு தூக்கிட்டோமோ!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, பதிவை படித்த பின் படத்துல இருக்குற ட்விஸ்ட் விட, நீங்கள் வைக்கிற ட்விஸ்ட் அதிகமா இருக்கு!!! இதன் காரணமாக படத்தை பார்க்க ஆர்வம் கூடி கொண்டே போகிறது.. 5 வருடத்திற்கு முன்பு ரிலீஸ் ஆன படமா இருந்தாலும் உங்களுக்கும் பிடித்து இருக்கிறது என்பதாலும் நிச்சயம் படம் ஏமாற்றம் தராது.. அதனால் படத்தை விரைவில் பார்க்க முயற்சி செய்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. “கிரி, பதிவை படித்த பின் படத்துல இருக்குற ட்விஸ்ட் விட, நீங்கள் வைக்கிற ட்விஸ்ட் அதிகமா இருக்கு!!!”

    பாருங்க.. நிச்சயம் எதிர்பாராததாக இருக்கும் 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here