தளர்வுகளுடனான ஊரடங்கா இருந்தாலும், முழுமையான ஊரடங்கு என்றாலும் மக்கள் கடைகளில் குவிந்து விடுகிறார்கள். அப்படி என்ன தான் வாங்குகிறார்கள்?!
அப்படி என்ன தான் வாங்குகிறார்கள்?!
மளிகை, காய்கறி கடைகள் உட்பட அடிப்படை தேவைக்கு அனுமதி அளித்து ஊரடங்கு அறிவித்தாலும், ஊரடங்குக்கு முந்தைய இரண்டு நாட்கள் குவிகிறார்கள்.
ஒருவாரம் முழு ஊரடங்கு என்று அறிவித்தாலும் குவிகிறார்கள். Image Credit
உலகமே முடங்கி, இனி எந்தப் பொருட்களும் கிடைக்காது என்பது போல, கடைகளில் குவிகிறார்களே! என்ன? எவ்வளவு தான் வாங்குகிறார்கள்?
என்ன தான் பிரச்சனை?!
சிலர் ஒரு வாரத்துக்கு வாங்கி வைக்காமல், தினமும் செல்கிறார்கள் என்றார்கள்.
இறைச்சி சாப்பிடாமல் 14 நாட்கள் இருக்க முடியாதா? அவ்வளவு கூட்டத்தில் சென்று வாங்கித் தின்றே ஆக வேண்டுமா?!
ஆகப்பெரிய கொடுமை மற்றும் சகிக்கவே முடியாத சம்பவம் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்த பிறகு நடந்தது.
துணிக்கடை, நகைக்கடைகளில் குவிந்த கூட்டம்!
சத்தியமா எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?! இங்கே சென்று அடித்துப் பிடித்து ஒரு வாரத்துக்கு வாங்க என்ன தேவை உள்ளது?
துணி வாங்கவில்லை என்றால், ஒரு வாரத்துக்கு நிர்வாணமாக இருக்க வேண்டிய சூழலா?! இப்படியும் முட்டாளாக இருப்பார்களா?!
இக்கடைகளுக்குத் தமிழக அரசு ஏன் அனுமதி அளித்தது?! உணவுப்பொருட்களுக்கு மட்டுமான கடைகளைத் திறக்க அனுமதி கொடுத்தால் போதாதா?
மக்கள் எதைத் தேடி இப்படி அலைகிறார்கள்? எது இனிமேல் கிடைக்கவே கிடைக்காது என்று கூறினார்கள்? ஏன் இந்தப் பதட்டம்?
நிவாரண நிதி
இந்த ரணகளத்தில் தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியை நியாய விலைக் கடைகளில் கொடுப்பதாக அறிவிக்கிறது!
இதை ஏன் வங்கிக்கணக்கில் செலுத்த கூடாது?!
சமீபத்தில் விவசாயிகளுக்கான உதவித்தொகையை இந்தியா முழுக்க மத்திய அரசு நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தும் போது தமிழக அரசால் ஏன் முடியாது?!
அரசியல் காரணம் என்றால், ஏராளமான வாய்ப்புகள் அடுத்து வரும் ஐந்து வருடங்களில் வரப்போகிறது. அப்போது இது போல நேரடியாகக் கொடுக்கலாமே!
தற்போது நேரடியாகக் கொடுப்பது சரியா?! அனைவரும் பணத்துக்குச் சிரமப்படுகிறார்கள் எனும் போது பணம் வாங்க குவியத்தானே செய்வார்கள்.
இந்நிலை கொரோனா பரவலை மேலும் மோசம் தானே ஆக்கும்!
இது போதாதென்று முழு ஊரடங்கு சமயத்தில் நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் 12 வரை திறந்து இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
மக்கள் தான் தங்கள் பொறுப்பை உணராமல் நடந்து கொள்கிறார்கள் என்றால், அரசும் இவ்வாறு செய்தால் எப்படி?!
நல்லா இருங்க…!
தொடர்புடைய கட்டுரை
தடுப்பூசி போடுவது கட்டாயமா? | COVID-19
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
நம்முடைய மக்கள் ஏதோ சாகசம் செய்வதாக நினைத்துக்கொண்டு ஓடுகிறார்கள்,அந்த இரண்டு நாட்களும்!
கடந்த காலங்களை அரசும் சௌகர்யமாய் மறந்துவிட்டு,ஏதோ சகாயம் செய்வதாய் நினைத்துக் கொண்டது!
ஆண்டவன்தான் காப்பத்தனும்.
கிரி, உங்கள் மனதில் எழுகின்ற கேள்விகளை போல் என் மனதிலும் எழுகிறது.. ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு பொறுப்புணர்வு என்பது இல்லை என்பதை தான் சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகிறது.. இரண்டு சம்பவம் என்னை சமீபத்தில் ஆச்சரியமளித்தது.. ஒரு நண்பனிடம் ஊரில் பேசும் போது (கட்சியில் கடைநிலையில் இருக்கிறான்) முழு ஊரடங்கிலும் என்னால் எல்லா இடமும் சுற்றி வர முடியும். எனக்கு பிரச்சனை இல்லை என்றான்..
மற்றொரு நிகழ்வு என் நண்பனின் உறவினரின் திருமணம் நடைபெற இருந்தது, குறைந்த பட்சம் 100 /150 பேரையாவது அழைக்க வேண்டும் என்பது மணமகன் தந்தையின் விருப்பம் என்றான்.. கேட்டவுடன் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.. நம்மை சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கூட உணர முடியாமல் இருப்பவர்களை நினைத்து பரிதாபப்படுவதா இல்லை..திட்டுவதா என்று தெரியவில்லை..
இந்த இரு சம்பவங்களும் எனக்கு தற்போது வரை அதிர்ச்சியாக இருக்கிறது.. தங்கம் வாங்கவும், துணி கடைகளிலும், இறைச்சி கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருப்பதை பார்க்கும் போது பேரதிர்ச்சியாக இருக்கிறது.. நடக்கின்ற நிகழ்வுகள் மூலம் பாடம் இன்னும் கற்கவில்லை என்றால் என்ன சொல்வது என்று தெரியவில்லை..
@KRISHNAMOORTHY அதே தான் சார். கடவுள் தான் காப்பாத்தணும்.
@யாசின் ஆமாம். பொறுப்புணர்வு கொஞ்சம் கூட இல்லை. பைத்தியக்காரனுக மாதிரி திரிந்துட்டு இருக்கானுங்க.
ஒரு வாரத்துக்கு துணி வாங்கி என்ன பண்ணப்போறானுக என்று எப்படி யோசித்தும் பிடிபடவில்லை.