வீடு வாங்க / கட்ட திட்டமிட்டு உள்ளவர்களுக்குச் சிறு பரிந்துரை. Image Credit
இது வீடு கட்டுவதற்கான பரிந்துரையல்ல, கழிவறைகளில் பயன்படுத்தும் Toilet Basin வடிவமைப்பு குறித்து.
ஐரோப்பா மற்றும் மேலை நாடுகளில் தண்ணீர் அதிகம் வீணாவது கழிவறை Flush க்கு தான் என்று பல வருடங்களுக்கு முன்பு ஒரு கருத்துக்கணிப்பு வெளியிட்டார்கள்.
குறைந்த அளவு தண்ணீர்
அக்கா வீட்டில் இருந்த Flush ல் மிகக் குறைந்த அளவு தண்ணீரே எடுத்துக்கொண்டது ஆனால், சுத்தமாக வெளியேற்றி விட்டது.
நான் வீடு கட்டும் போது இது போலக் காணவில்லை. எனவே, இதை நான் குறிப்பிட்டு வாங்காமல் போனேன்.
உதாரணத்துக்கு, வழக்கமான Flush அரை வாளிக்கும் அதிகமாகத் தண்ணீர் எடுத்தால், இது இரு குவளை (Mug) தண்ணீர் மட்டுமே எடுக்கிறது.
பழைய முறையை விட இது சுத்தமாக வெளியேற்றுகிறது, மிகக் குறைந்த நீரில்.
நான் செயல்படுத்த தவறி விட்டேன், இனி வீடு கட்டுபவர்களாவது எச்சரிக்கையாக இருங்கள்.
தண்ணீரின் முக்கியத்துவம்
எதிர்காலத்தில் அனைவருமே தண்ணீருக்காக மிகவும் சிரமப்படப்போகிறோம், எந்தச் சந்தேகமும் வேண்டாம். அதற்கு கொஞ்சம் முன்னேற்பாடாக இருந்தால் நல்லது.
வீட்டுக்கு வீடு மீட்டர் வைத்து, தண்ணீர் கொடுக்கப்படும் காலம் வெகு தூரமில்லை.
எனவே, அப்போது அரை வாளி தண்ணீருக்கும், இரு குவளைக்கும் (Mug) வித்யாசம் மலைக்கும் மடுவுக்குமாக இருக்கும்.
சிறுநீர் கழித்து, அதற்கு அரை வாளி தண்ணீர் என்பதெல்லாம் அநியாயமாக உள்ளது. பொறுமையாக யோசித்துப்பாருங்கள்.
என் கோபி வீட்டிலேயே பழையதை எடுத்து விட்டு, இதை மாற்றலாமா என்று யோசித்தேன் ஆனால், செலவு காரணமாக ஒத்தி வைத்துள்ளேன்.
பயன்படுத்தும் போது இவ்வளவு தண்ணீர் செலவாகிறதே என்று நினைக்காத நாளில்லை.
இதனால் தேவையான அளவு திறந்து மூடி விடுவேன் ஆனால், அவ்வாறு செய்தால் பழுதாகிறது.
எனவே, வீடு கட்டுபவர்கள் / வாங்குபவர்கள், விலை கூடுதல் என்றாலும், குறைவான தண்ணீரை எடுக்கும் Flush உள்ள Toilet Basin வாங்கிப் பயன்படுத்தவும்.
தண்ணீரை பயன்படுத்த ஆகும் மின்சார செலவைக் கணக்கிட்டால், உங்களுக்கு இலாபமே!
தண்ணீரை வீணாக்காதீர்கள்! எதிர்காலத்தில் பணம் கொடுத்தாலும் கிடைக்காது.
கொசுறு
இதை எழுதும் போது நான் சிறு வயதில் படித்த ஒரு சுவாரசியமான ராஜா கதை நினைவுக்கு வந்தது 🙂 . அதை அடுத்தது எழுதுகிறேன்.
பிற்சேர்க்கை – மந்திரியாரே! எப்படி நிதியமைச்சரை தேர்வு செய்வது?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
எனக்கும் இதுபற்றி நிறையதடவை தோன்றும். வீடுகளில் யூரினல் பேசின் அமைக்கணும். நீங்க பிராண்ட் பேர் சொல்லவில்லை. ஆனால் பொதுவா தண்ணீர் யூரின் ஃப்ளஷ்க்குத்தான் அதிகமாக ஆகும்.
அடுத்த ஒரு முறை உலக போர் வந்தால் அது தண்ணீருக்காக தான் இருக்கும் என வரலாற்றார்கள் கணித்து இருக்கின்றனர்.. பெரும்பான்மையான மக்களுக்கு தண்ணிரின் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு இல்லை.. குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கு..
நம் கண் முன்னே 10 / 15 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு தண்ணீர் இருந்தது.. தற்போது எப்படி இருக்கிறது.. எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என எளிதாக நம்மால் யூகிக்க முடியும்.. தண்ணீரை தேவைக்கு பயன்படுத்தி, மீதத்தை சேமிக்க நம் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் கற்று தரவேண்டும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@நெல்லைத்தமிழன் தண்ணீர் Urine Flush க்கு அதிகம் வீணாவது உண்மை தான். Latrine க்கும் அவசியமில்லாமல் வீணாகிறது.
என்ன மாடல் என்று எனக்கும் தெரியவில்லை.. ஆனால், கடைகளில் இது குறித்து விசாரித்தால், நிச்சயம் எளிதாக பெறலாம்.
@யாசின் இந்த வருடம் சென்னை கதிகலங்க போகுது. இப்பவே தண்ணீர் பிரச்னை ஆரம்பித்து விட்டது. இன்னும் எட்டு மாதங்கள் எப்படி சமாளிக்கப்போகிறோம்னு புரியல.
பசங்களுக்கு தண்ணீரின் முக்கியத்துவம் கூறிக்கொண்டு தான் உள்ளேன்.