இயக்குநர் பாலாவின் ரசிகன் ஏன்? (இறுதி பாகம்)

12
இயக்குநர் பாலாவின் ரசிகன் 3

நான் கடவுள்” முன்னோட்டம்

இந்தப் படத்தில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகள் என்று அனைவரும் மாறி விட்டார்கள். Image Credit

முதலில் அஜித் இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது அதனால் அஜித் ம் தலை முடி எல்லாம் வளர்த்துக் காத்திருந்தார்.

ஆனால், பாலா, தலை முடியே கொட்டி போகும் அளவிற்குப் பொறுமையைச் சோதித்ததால் அஜித் விலகிக் கொண்டார்.

இவருக்குக் கொடுக்கப்பட்ட முன் பணத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் அஜித்தை இவர் மிரட்டி அநாகரிகமாக நடந்து கொண்டதாகச் செய்திகளில் வந்தது.

இது பற்றி அஜித் எதுவும் கூறவில்லை ஆனால், மிரட்டப்பட்டது உண்மை என்று ஊடகங்களில் வந்தது.

ஊடகங்களில் வந்ததை விடஅதிகமாக நடந்து இருக்கும் என்று நம்பப்படுகிறது. அஜித் போலவே விக்ரம் பெயரும் இதில் அடிப்பட்டது.

ஆர்யா பூஜா

முடிவில் ஆர்யா தேர்வானார்.

கதாநாயகிக்கு முதலில் தேர்வானது பாவனா,பார்வதி, மீனாட்சி(கருப்பசாமி குத்தைகைதாரர்) பின் “கார்த்திகா” (“கருவா பையா” பாடலில் வருபவர்) சில காட்சிகள் எடுத்துத் திருப்தி அளிக்கவில்லை என்று கடைசியாகப் பூஜாவை தேர்வு செய்தார்.

பார்வை இழந்த பிச்சைக்கார பெண்ணாக நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் முதலில் தேர்வானது P.L.தேனப்பன்.

ஏற்கனவே “வல்லவனால்” நொந்து போய் இருந்தவர், விட்டால் போதும் என்று மாற்றிக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்.

இவரிடமிருந்து வாங்கியவர் K.S ஸ்ரீனிவாசன் (பிரமிட் சாய்மீரா)

ஆர்யாவிற்குத் தற்போது கிடைத்துள்ள இந்தக் கதாப்பாத்திரம் அவருடைய அனுபவத்திற்கும் வயதிற்கும் சம்பந்தமே இல்லை, அந்த அளவிற்குக் கனமான பாத்திரம்.

பல படங்கள் செய்த பிறகு கிடைத்து இருக்க வேண்டிய வாய்ப்பு, முன்னாடியே கிடைத்து விட்டது, நல்ல அனுபவம் இவருக்கு.

இந்தப் படத்திற்காகப் பல தியாகங்களைச் செய்துள்ளார், பல படங்களை இழந்துள்ளார்.

முக்கியமாக மூன்று வருடம் ஜடா முடி மற்றும் தாடியுடனே சுற்ற வேண்டியதாகி விட்டது, பொறுமை இழந்து இருப்பார் என்றே கருதுகிறேன்.

இந்தக் கஷ்டம் அவருக்குக் கண்டிப்பாக 10 படங்களின் அனுபவத்தைக் கொடுத்து இருக்கும்.

அவர் பேட்டியில் பல சுவாராசியமான தகவல்களைக் கூறினார்.

படத்தின் பெரும்பகுதி “காசி” யில் எடுக்கப்பட்டது. அங்குப் பல வகை மனிதர்களைச் சந்தித்ததாகவும் வித்யாசமான சாமியார்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததாகக் கூறினார்.

எப்போதும் பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். அங்கு வரும் வெளிநாட்டினர் அங்கே உள்ள சாமியார்கள் உடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள், அதற்கு 10 டாலர் தருவார்கள்.

தன்னையும் ஒரு சாமியார் என்று எண்ணி புகைப்படம் எடுத்துப் பணம் கொடுத்ததாகவும்.

அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டால் என்ன செய்துவது என்று வாங்கிக் கொண்டதாகக் கூறினார் 🙂 .

சிரசாசனம்

இந்தப் படத்தில் சிரசாசனம் செய்வது போலக் காட்சி உண்டு.

அதை 30 நாட்களில் எப்படியாவது கற்று கொண்டு வா என்று பாலா கூறியுள்ளார்.

இதைக் கற்று கொடுக்கும் இடத்தில் இதை முறைப்படி கற்றுக் கொள்ள ஒரு வருடம் ஆகும் என்று கூறியதால் தானே சுவற்றின் அருகே தலைக்கீழாக நின்று பழகியதாகக் கூறினார்.

குறிப்பிட்ட நாளில் பாலா கேட்ட படி தலை கீழாக நின்று விட்டதாகவும் கூறினார்.

இவ்வாறு சிரசாசனம் (இவரது பாஷையில் தலை கீழாக) செய்யும் போது மொத்த ரத்தமும் தலைக்கு வரும் மிகவும் கஷ்டமான விஷயம் என்று கூறினார்.

உண்மையில் சிரமமான விஷயம் தான், நம்பாதவங்க தலை கீழா நின்று பார்க்கலாம் 😉 .

தனக்குத் திருப்தி அளிக்கும் வரை காட்சி வரும் வரை விடுவதில்லை என்றும், ஒரு சில நாள் மூன்று நாட்கள் கூட ஒரு காட்சியை எடுக்க ஆனதாகக் கூறினார்.

போதுமான நேரம் எடுத்துக்க அனுமதிக்கிறார் உடனே வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்று கூறி இருந்தார்.

இதில் பல (நிஜ) பிச்சைக்காரர்கள் நடித்துள்ளனர்

இளையராஜா பாலாவின் முதல் படமான சேதுவிலேயே கலக்கி இருப்பார்.

தற்போது இந்தப் படம் அவருக்கு இசையமைக்கப் போதுமான அவகாசம் இருந்தது மற்றும் அவருக்கு மிகவும் பிடித்த கடவுள் சப்ஜெக்ட்.

ஏற்கனவே, பாடல்களில் சிறப்பாக இசையமைத்து இருந்தார் (கமர்சியல் பாடல்கள் கிடையாது) பின்னணி இசையமைப்பிலும் கலக்கி இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

பாலா இந்தப் படத்தையும் சேர்த்து நான்கு படங்கள் தான் இயக்கி உள்ளார்.

ஆனால், தனது திறமையின் மூலம் அனைவரும் அறிந்த நபராகி விட்டார்.

இந்தப் படமும் தமிழ் திரையுலகை ஒரு மரியாதைக்குரிய இடத்திற்கு உயர்த்தும், பல விருதுகளைப் பெற்று தரும்.

பாலா திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை ஆனால், மற்றவர்களுடன் ஒத்து போக மாட்டேங்கிறார்.

பெரும்பாலனவர்களுடன் சண்டை, படத்தை இயக்குவதில் ஏற்படும் காலத் தாமதம் என்று பல குறைகள்.

இவரது தாமதத்தால் தயாரிப்பாளருக்குக் கடும் நஷ்டம் ஏற்படும், பெரும்பாலனவர்கள் வட்டிக்கு வாங்கியே படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இவ்வாறு காலத் தாமதம் ஏற்படும் போது கட்டப்படும் வட்டியின் அளவு கன்னாபின்னாவென்று ஆகிறது.

எத்தனை தான் பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் மூன்று வருடம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத காலம். இதை எப்படித் தாங்கப் போகிறார் என்பது படம் வெளிவந்தால் தான் தெரியும்.

படம் கமர்சியல் படமல்ல, குத்து பாட்டையும் பிரம்மாண்டத்தையும் ரசிக்கும் நம் ரசிகர்களிடையே “கடவுள்” வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நான் படத்தை ஆவலுடன் எதிபார்க்கிறேன் என்றாலும் எந்த எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளவில்லை.

நான் கடவுள்” படம் பிப் 6 ம் தேதி வெளியாவதாக அறிவித்து இருக்கிறார்கள். இந்தத் தேதியும் தள்ளிப் போகாமல் இருக்க “கடவுள்” துணை இருப்பாராக!

இயக்குநர் பாலாவின் ரசிகன் ஏன்? (பாகம் 1)

பிற்சேர்க்கை

“நான் கடவுள்” வரை மட்டுமே பாலாவின் இயக்கத்தில் வந்த தரமான படங்களாகக் கருத முடிகிறது.

இதன் பிறகு இவ்வாறு எடுப்பதை ஒரு அடையாளமாகக் கருதி, காட்சிகள் கதாப்பாத்திரங்களில் வித்யாசத்தை புகுத்துகிறேன் என்று அவருடைய இயல்பை மீறி விட்டார்.

அவன் இவன், பரதேசி படங்கள் எல்லாம் அடிதடி இருக்கிறதே தவிர இயல்புத்தன்மை இல்லை.

சில நேரங்களில் அதிக பாராட்டைப் பெறும் போது, இயல்பாக ஒருவருக்கு ஏற்படும் தலைக்கனம் இவருக்கும் வந்து விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

காரணம், நான் எடுப்பது தான் படம் என்கிற மனநிலையில் இருப்பதாகவே தோன்றுகிறது.

மீண்டும் துவக்கப் படங்களைப் போன்று எடுப்பார் என்று நம்புகிறேன்.

காரணம், அவர் சிறந்த இயக்குநர் என்ற அடையாளத்திலேயே தொடர வேண்டும் என்று ரசிகனாக விரும்புகிறேன்.

அன்புள்ள இயக்குநர் பாலா!

பரதேசியும் எரியும் பனிக்காடும்

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

12 COMMENTS

  1. ஒரு முக்கியமான விசயத்தை விட்டுவிட்டீர்கள்.
    ஆர்யா ஒரு முஸ்லீம் அவர் சாமியார் பாத்திரத்தில் நடித்ததற்க்காக சில முஸ்லீம் அமைப்புகளும் இணையத்திலேயே சில முஸ்லீம் நண்பர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்களாம்.

    சினிமா என்பது ஒரு தொழில் என்று கூட தெரியாத இந்த கூமுட்டைகள் பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்

  2. பாலா, சும்மா ஒரு இடத்துல உக்கார்ந்து இருப்பது போல் நடிப்பதற்கு ஒரு மணி நேரம் பயிற்சி கொடுப்பாராம். எப்படி காலை வைக்கணும், எங்க பார்க்கணும், கையை எங்க வைக்கணும், இப்படி….

  3. //வால்பையன் said…
    ஒரு முக்கியமான விசயத்தை விட்டுவிட்டீர்கள்.
    ஆர்யா ஒரு முஸ்லீம் அவர் சாமியார் பாத்திரத்தில் நடித்ததற்க்காக சில முஸ்லீம் அமைப்புகளும் இணையத்திலேயே சில முஸ்லீம் நண்பர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்களாம்.//

    நீங்கள் கூறுவது சரி தான் மறந்து விட்டேன், நான் அவரை அந்த கதாப்பாத்திரமாக கருதி வந்ததால் அவர் ஒரு முஸ்லீம் என்பதையே மறந்து விட்டேன்.

    //சினிமா என்பது ஒரு தொழில் என்று கூட தெரியாத இந்த கூமுட்டைகள் பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்//

    :-))))

    இவ்வாறு நினைப்பவர்கள் எந்த காலத்திலும் திருந்த போவதில்லை. இவர்களிடம் பேசுவதும் வாதிடுவதும் பயனில்லாத ஒன்று.

    தொழிலை தொழிலாக பார்க்காதவர்களே அதிகம்.

    ===================================================================

    //சரவணகுமரன் said…
    பாலா, சும்மா ஒரு இடத்துல உக்கார்ந்து இருப்பது போல் நடிப்பதற்கு ஒரு மணி நேரம் பயிற்சி கொடுப்பாராம். எப்படி காலை வைக்கணும், எங்க பார்க்கணும், கையை எங்க வைக்கணும், இப்படி//

    அவருக்கு திருப்தி வரும் வரை காட்சி எடுத்துள்ளார், பார்ப்போம் படம் எப்படி உள்ளது என்று. விருது நிச்சயம்.

    அருண், சரவணகுமரன் இந்த தொடரின் தொடர் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  4. பாலா மீது நீங்கள் கூறிய ஆதங்கங்களுடன் நானும் உடன்படுகிறேன்…

    அடுத்ததும் சினிமா தொடரா..? வாழ்த்துகள்…

  5. //முரளிகண்ணன் said…
    நல்ல பதிவு கிரி//

    நன்றி முரளிகண்ணன்

    ===================================================================

    //’டொன்’ லீ said…
    பாலா மீது நீங்கள் கூறிய ஆதங்கங்களுடன் நானும் உடன்படுகிறேன்…//

    🙂

    //அடுத்ததும் சினிமா தொடரா..? //

    ஏங்க! டொன் லீ போர் அடிக்குதா :-)))

    உண்மையில் நான் தொடராக நினைத்து எழுதவில்லை, நான் எழுத் நினைத்ததை ஒரு பதிவில் அடக்க முடியவில்லை எனவே பாகமாக போட வேண்டியதாகி விட்டது.

    தொடராகவே எழுத நினைத்தது சிங்கப்பூர் பதிவும் ஹாஸ்டல் அனுபவமும் மட்டுமே 🙂

    //வாழ்த்துகள்…//

    நன்றி

    ===================================================================

    //நசரேயன் said…
    சீக்கிரம் படம் வெளியாகும் தேதியை சொன்னா, நான் மீள் பதிவு போட ரெம்ப வசதியா இருக்கும்//

    நசரேயன்! பதிவை படிக்காமலே பின்னூட்டம் போடுகிறீர்களா! :-)))) என் பதிவின் கடைசியில் கூறி இருக்கிறேன் பிப் 6 என்று

    ===================================================================

    //பாஸ்கர் said…
    பாடல்கள் நம் ஆன்மாவை தட்டி எழுப்புகின்றன !//

    உண்மையில் அருமையான இசை, குத்து பாட்டை எதிர்பார்கிறவர்களுக்கு இதை பிடிக்காது.

    //பாலாவை போன்ற படைப்பாளிகள் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் வழங்கப்படும் விருதுகளை கால் தூசுக்கு சமமாகவே மதிப்பார்கள் //

    நீங்கள் கூறுவது சரி தான். விருதை எதிர்பார்த்து படம் எடுக்கிறவர் அல்ல.

  6. சீக்கிரம் படம் வெளியாகும் தேதியை சொன்னா, நான் மீள் பதிவு போட ரெம்ப வசதியா இருக்கும்

  7. பாடல்கள் நம் ஆன்மாவை தட்டி எழுப்புகின்றன !

  8. //விருது நிச்சயம்.//

    பாலாவை போன்ற படைப்பாளிகள் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் வழங்கப்படும் விருதுகளை கால் தூசுக்கு சமமாகவே மதிப்பார்கள் .

  9. ஆமாங்க, உங்களை போலவே நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறோம். கடந்த ஒரு வருடத்தில் நான் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இது.

  10. Giri,
    If possible could you please post about the current Eelam issue + TamilNadu, Central Govt. politicians way of looking at that problem + your view. The reason why i am asking is I like your style of narrating the issue and your suggestion. If possible please write a post on this.

    Thanks,
    Arun

  11. //ஊர் சுற்றி said…
    கடந்த ஒரு வருடத்தில் நான் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இது.//

    நான் தாறுமாறா காத்துக்கொண்டு இருக்கிறேன் :-))) எனக்கு தற்போதைய கவலை இதை சிங்கப்பூர் ல் வெளியிடுவார்களா! என்பது தான் 🙁

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி ஊர் சுற்றி

    ===================================================================

    //arun said…
    If possible please write a post on this.//

    அருண் உண்மையிலே நான் இதை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன், விரைவில் எழுதுகிறேன்.

    உங்கள் அன்பிற்கு நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!