இயக்குநர் பாலாவின் ரசிகன் ஏன்? (பாகம் 2)

16
இயக்குநர் பாலாவின் ரசிகன் 2

னக்கு இது வரை வந்த படங்களிலே மிகவும் ரசித்த சண்டை காட்சி “பாட்ஷா”.

இடைவேளை காட்சியில் ரஜினி தன் தங்கை ஒருவரால் தாக்கப்பட்டதால் கோபம் அடைந்து வில்லன் ஒருவரை அடித்து அவர் மின்சாரக் கம்பத்தில் மோதி விழும் காட்சி. Image Credit

அதற்கு கொடுக்கப்பட்ட பின்னணி இசையும், அந்த விறுவிறுப்பான காட்சியைக் கொஞ்சமும் கெடுக்காமல் அதற்கு ரஜினி கொடுக்கும் முகபாவனைகளும் நம் உடலில் மின்சார அலைகளை ஏற்படுத்தும்.

நடைமுறையில் இவ்வாறு அடிப்பது சாத்தியம் இல்லை என்றாலும் ரசிக்கும் படி விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட காட்சி.

இதை எத்தனை முறை ரிவைண்ட் செய்து பார்த்தேன் என்று எனக்கே தெரியாது.

ஒரு சில படத்தில் சண்டை போட ஆரம்பித்தால் எப்படா! முடிப்பாங்க என்று கொட்டாவி விட்டுக் காத்திருப்பார்கள் 🙂 .

ஒரு சில பாடல் காட்சி போல, ஆனால் ஒரு சில படத்தில் சண்டையுடன் ஒன்றி அடடா! அதற்குள் முடிந்து விட்டதே என்று வருத்தப்படுவார்கள் அதைப் போலப் படங்களில் “பாட்ஷா“க்கு ஒரு இடம் கண்டிப்பாக உண்டு.

நந்தா

அதன் பிறகு பிடித்த காட்சி “நந்தா” படத்தில் வருவது.

அதில் வரும் வில்லன் அருமையாக நடித்து இருப்பார், இந்தப் படத்திற்குப் பிறகு உண்மையாகவே அனைவரும் அவரைப் பார்த்தாலே கண்டபடி திட்டியதாக ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

அது அவரது நடிப்புக்கு கிடைத்த வெற்றி.

ஒரு பெண்ணை ராகிங் செய்வார், அவருக்கு அனைத்து பசங்களையும் முத்தம் கொடுக்கக் கூறி, அனைவரையும் வரிசையாக வரவைத்து கட்டாயப்படுத்துவார்.

அதில் சூர்யா முறை வரும் சூர்யாவிடமும் கொடுக்கச் சொல்லும் போது அவர் முறைத்துப் பார்த்துக்கொண்டு எதுவும் செய்யாமலே இருப்பார்.

டேய் மொட்டை! ஓசி தாண்டா!! காசு கொடுக்க வேண்டாம்.. கொடுடாடான்னு கூறி மிரட்டியும் சூர்யா முறைத்துக்கொண்டே இருப்பார்.

பிறகு சூர்யாவின் தாடியை பிடித்து இழுத்து, கன்னத்தில் அறை விட்டு அவரைக் கடுப்பாக்கிகொண்டு இருப்பார்.

அதற்கு இவர் சைகையில் வேண்டாம் வேண்டாம் என்று கூறியதை பொருட்படுத்தாமல் தொடர்வார்.

அப்போது அவர் எதிர்பார்க்காத சமயத்தில் தன் தலையால் அவரது தலையை வேகமாக மோத ..ஒரு நிமிடம் அவர் அதிர்ச்சியில் கலங்கி விடுவார்.

இந்தக் காட்சி “பாட்ஷா” விற்குப் பிறகு ரொம்ப ரொம்ப ரசித்த காட்சி.

இதன் பிறகு நடக்கும் சண்டை காட்சியில் எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை.

சண்டை காட்சி

அதில் ஒரு காட்சியில் மரத்திலிருந்து கிளையை ஒடித்து அதிலும் செம அடி விழும் (பொதுவாகத் தயாராகக் கட்டை அடிப்பதற்கு வைக்கப்பட்டு இருக்கும் 🙂 ) அந்தச் சண்டையைப் பார்த்தால் திட்டமிட்டு செய்ததைப் போல இல்லாமல் இயல்பான கோபத்தில் வரும் சண்டை போலவே இருக்கும்.

இதைப் போல இயல்பான காட்சிகள் பாலாவின் படத்தில் ஏராளம்.

பாலா படத்தில் குறிப்பிடத்தக்க காட்சியில் நீதிமன்றத்திற்கு முக்கியப் பங்குண்டு.

வழக்கமாக நீதிமன்றம் எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இவரது படத்தைக் கூறலாம், வக்கீல் மற்றும் நீதிபதி உட்பட.

சேது

இவரது முதல் படமான “சேது” படம் வெளிவராமலே ஒரு சாதனை செய்தது.

100 ப்ரிவியு ஷோ போட்டுக் காட்டியதற்காக. ஆமாம்! இத்தனை முறை போட்டுப் பலர் பார்த்தும் படம் வாங்க யாரும் வரவில்லை.

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் பல போராட்டங்களுக்கு இடையே ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து, அதைக் கஷ்டப்பட்டு இயக்கி அதை விட நம்ம விக்ரம் உடலை வருத்திக் கடுமையாக நடித்து இருந்தும் படத்தை வாங்க யாரும் வரவில்லை என்றால் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கந்தசாமி, அவருக்கு எப்படி இருக்கும்.

பின்னர் இவர்களே படத்தின் மீது இருந்த நம்பிக்கையால் நேரடியாக வெளியிட்டார்கள். சென்னை கிருஷ்ணவேணி என்ற செகண்ட் ரிலீஸ் திரைஅரங்கில் தான் முதன் முதலாகவே வெளியாகியது.

பிறகு இந்தப் படம் மக்களின் வார்த்தைகளாலே அறியப்பட்டு வெற்றிப் பெற்றது.

அதன் பிறகு எடுத்த படம் தான் “நந்தா”, இது பெரிய வெற்றி படமில்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடியது.

ஆனால், நடிப்புக்காக ராஜ்கிரண் உட்படப் பலர் பாராட்டுப் பெற்றார்கள். இந்தப் படம் தான் சூர்யாவிற்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

சூர்யாவை வேறொரு பரிமாணத்தில் இந்தப் படத்தின் மூலம் அனைவருக்கும் அறியப்படுத்தினார் பாலா.

பாலாவின் படத்தில் பாடல் காட்சிகள் எடுக்கப்படும் விதம் அருமையாக இருக்கும், வெளிநாட்டில் ஆடும் ஆட்டம் எல்லாம் இருக்காது.

அந்தக் கதாபாத்திரம் எந்த அளவிற்கான செயலில் ஈடுபட முடியுமோ அந்த அளவில் மட்டும் இருக்கும்.

முன்பனியா

நந்தாவில் “முன்பனியா” பாடல் எடுக்கப்பட்ட விதத்தை எடுத்துக்காட்டாகக் கூறலாம். மிக நாகரீகமாக எடுக்கப்பட்டு இருக்கும்.

லைலா ஒரு காட்சியில் படுத்துக்கொண்டு இருப்பார்.

சூர்யா அவரைத் தொட நினைத்துக் கையைக் கொண்டு சென்று, நாகரீகம் கருதி தொடாமலே இருந்து விடுவார், அது ரசிக்கும் படி இருக்கும்.

விக்ரம் சூர்யா இருவரையும் ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்தது பாலா என்றால் மிகை அல்ல.

பிதாமகன்

பின் இந்த இருவரையும் வைத்து “பிதாமகனை” இயக்கினார், இதில் விக்ரமிற்கு தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்தார்.

இதில் விக்ரம் அதிகம் பேசாமாலே நடிப்பின் மூலமே தேசிய விருதைப் பெற்றார்.

சூர்யாவிடம் இருந்த நகைச்சுவை நடிப்பையும் இந்தப் படம் வெளி கொண்டு வந்தது. முன்பே கூறியபடி இந்தப் படத்திலும் பல இயல்பான சண்டை காட்சிகள், காட்சி அமைப்புகள்.

அதிலும் விக்ரம் பரோட்டா கடையில் போடும் சண்டையும், போலீஸ் ஸ்டேசனில் போடும் சண்டையும் ரணகளம். நடித்தவர்களில் எத்தனை பேர் உண்மையாகவே அடி வாங்கினார்களோ!

படத்திற்குச் சம்பந்தம் இல்லாத பாடல்களா எதையும் கூற முடியாது.

அத்தனை அற்புதமாகப் பாடல்கள் இருக்கும், இளையராஜா இசையமைத்த விதமும் அதற்கு எடுக்கப்பட்ட காட்சி அமைப்பும்.

சிம்ரன்

சிம்ரனை அரைகுறை ஆடையிலே அனைவரும் காண்பித்துக்கொண்டு இருந்தார்கள்.

பாலா அவரை ஒரு அழகான காட்சியில் நாகரீகமான உடையுடன் நடிக்க வைத்து அசத்தினார் அவர் நடிகையாகவே நடித்தும்.

கிராமத்திற்கு ஒரு நடிகை வந்தால் அவரை எப்படிக் கமெண்ட் செய்வார்கள் என்று இதில் கலக்கலாக எடுக்கப்பட்டு இருக்கும்.

அதற்கு ஒரு (நிஜ) நடிகையாகச் சிம்ரன் காட்டும் முகபாவனைகள் அருமை.

இந்தப் படத்தின் இறுதி காட்சியைப் பார்த்துப் பலர் கண்டபடி திட்டியிருக்கிறார்கள்.

சரியான சைக்கோவா இருக்கிறாரு! இந்த மாதிரிக் காட்சி எடுத்து வைத்து இருக்கிறார் என்று பலர் கரித்துக் கொட்டி விட்டனர் 🙂 .

அந்தக் கதாப்பாத்திரத்தின் படி பார்த்தால் அது வேண்டும் என்றே வைத்த காட்சி போலத் தெரியாது.

அதிலும் அவரைக் கொன்று விட்டு விக்ரம் வித்யாசமாகச் சிரிப்பாரே!!! அதுவே அவருடைய கதாப்பாத்திரத்தின் தன்மையைக் காட்டி விடும்.

இந்தப் படத் தயாரிப்பாளர் V.A.துரைக்கும் பாலாவிற்கும் மனஸ்தாபம் வந்ததால் விளம்பரம் செய்யாமலே விட்டு விட்டார்கள்.

சூர்யா கை காசை போட்டு விளம்பரம் செய்தார்.

விளம்பரம் செய்யாததால் நன்றாகப் போய் இருக்க வேண்டிய படம் சுமாராக ஓட வேண்டியதாகி விட்டது, எனக்கு ரொம்ப வருத்தம்.

தற்போது “நான் கடவுள்” பல தயாரிப்பாளர்கள் நடிகர்கள் நடிகைகள் மாறி முழுமை அடைந்து இருக்கிறது.

இந்தப் படத்தைப் பற்றியும் இதில் நான் படித்த சில சுவாராசியமான தகவல்களையும், பாலா மீது எனக்கு இருக்கும் அதிருப்தியையும் அடுத்த இறுதி பதிவில் கூறுகிறேன்

இயக்குநர் பாலாவின் ரசிகன் ஏன்? (இறுதி பாகம்)

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

16 COMMENTS

  1. //jackiesekar said…
    கடைசி வரை சிம்ரன் தொப்புள் கொஞ்சமும்தெரியாத பாட்டு அதுதான் என்பேன்//

    ஹா ஹா ஹா உண்மை தான்.

    //எனக்கு இன்றளவும் ஜாக்கியாட சண்டைக்காட்சிகளுக்கு உலகில் எந்த நடிகருக்கும் ஈடு இனை இல்லை என்பேன். //

    “ஜாக்கி” னா ஜாக்கி சானை சொல்றீங்களா!!!

    ஏங்க! நான் தமிழ் படங்களுடன் ஒப்பிட்டு மட்டுமே கூறி இருக்கேன்..அவரோட சண்டை காட்சிகளுடன் ஒப்பிட முடியுமா!

    அவர் சண்டைகாட்சிகள் எங்கே! நாம் எங்கே! மலைக்கும் மடுவிற்கும் உள்ள ஒப்பீடு.

    எனக்கு ரஜினி பிடிக்கும் அதற்காக அநியாயத்திற்கு ஜாக்கி சானுடன் எல்லாம் ஒப்பிட மாட்டேன் ஹா ஹா :-)))

    //சினிமாவை பற்றி பார்வை ஓரளவுக்கு ஓத்து வருகிறது என்கிறேன் //

    நன்றி ஜாக்கி சேகர்.

  2. எனக்கும் அந்த இரண்டு சண்டை காட்சிகளும் பிடிக்கும்…

    நந்தா நான் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். நான் எதிர்பார்க்காத அந்த கிளைமாக்ஸ் என்னை ரொம்ப கவர்ந்தது.

    அந்த படத்தில் முதலில் சிவாஜி நடிக்க இருந்தது, சிவாஜிக்கு பாலா நடிக்க சொல்லி கொடுத்தது, சிவாஜி விலகியது போன்ற தகவல்களையும் கொடுங்கள்.

    “சிம்ரனை இடுப்பை மறச்சு படம் எடுத்தான்யா பாலா” என்று ஒரு பேட்டியில் சீமான் உணர்ச்சி பொங்க கூறினார். எப்பவும் பொங்குறதுதான்.

    அவருக்கு ஏன் தயாரிப்பாளர்களிடம் மோதல் வருகிறது என்று தெரியவில்லை. நான் கடவுள் வரை அது தொடர்கிறது.

    சூர்யா பாலாவை அண்ணன் என்றுதான் சொல்லி வருகிறார். பாலா கல்யாணத்தில் ஓடியாடி வேலை செய்து பாசத்தை காட்டினாராம்.

    மணிரத்னம், சமீபத்தில் தான் பாலா ரசிகன் என்று கூறி இருக்கிறார். பாலா தன் கல்யாணத்தில் மணிரத்னம் கலந்து கொண்டதை பற்றி தன் புத்தகத்தில் ஏதோ சுவாரஸ்யமாக குறிப்பிட்டு இருந்ததாக ஞாபகம்.

  3. பாலாவின் படங்களில் எப்படியாவது அவருக்கு தயாரிப்பாளர், நடிகர்களிடையே உரசல் வந்து விடுகின்றது (பிதா மகன், இப்ப நான் கடவுள்).

    படங்கள் மட்டும் ஒருவரது திறமையை எடை போடுவது இல்லை. அவர் மற்றவர்களிடம் சம்பாதிக்கும் பெயரும் முக்கியம். அது பாலாவிடம் மிஸ்ஸிங் என்று தோன்றுகின்றது…

  4. //சரவணகுமரன் said…
    எனக்கும் அந்த இரண்டு சண்டை காட்சிகளும் பிடிக்கும்…//

    🙂

    //நந்தா நான் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். நான் எதிர்பார்க்காத அந்த கிளைமாக்ஸ் என்னை ரொம்ப கவர்ந்தது.//

    நானும் தான். வழக்கமான படமாக இருந்தால் சுபமான முடிவாக இருந்து இருக்கும், அதாவது சூர்யா லைலா இணைத்து இருப்பார்கள். இதில் தவறு செய்தவன் (நன்மைக்காகவே செய்து இருந்தாலும்) தண்டனை அடைவது போல காண்பிக்கப்பட்டு இருக்கும்.

    //அந்த படத்தில் முதலில் சிவாஜி நடிக்க இருந்தது, சிவாஜிக்கு பாலா நடிக்க சொல்லி கொடுத்தது, சிவாஜி விலகியது போன்ற தகவல்களையும் கொடுங்கள்.//

    நீங்கள் கூறுவது உண்மை தான். முதலில் நடிகர் திலகம் அவர்களே நடிப்பதாக இருந்தது, பின் அவர் மறுத்ததால் ராஜ்கிரண் நடித்து இருந்தார், பேட்டியில் கூட நடிகர் திலகம் அளவிற்கு என்னால் செய்ய முடியாது முயற்சி செய்கிறேன் என்று கூறி இருந்தார். பாலாவும் அவரை நன்கு நடித்து வைத்து இருப்பதாக கூறி இருந்தார், அதை ஓரளவு நிரூபித்தும் இருந்தார்.

    இந்த தகவல்களே அதிகம் ஆகி விட்டதால் நீங்கள் கூறியதை குறிப்பிடமுடியவில்லை.

    // எப்பவும் பொங்குறதுதான்.//

    :-))))))))

    //அவருக்கு ஏன் தயாரிப்பாளர்களிடம் மோதல் வருகிறது என்று தெரியவில்லை. நான் கடவுள் வரை அது தொடர்கிறது.//

    தயாரிப்பாளருடன் மட்டுமல்ல…

    //சூர்யா பாலாவை அண்ணன் என்றுதான் சொல்லி வருகிறார். பாலா கல்யாணத்தில் ஓடியாடி வேலை செய்து பாசத்தை காட்டினாராம். //

    நீங்கள் கூறுவது சரி தான். இப்பவும் மேடையில் பேசும் போது கூட அண்ணன் என்று தான் கூறுவர். திருமணத்திலும் நீங்கள் கூறியது போலவே தான் நடந்து கொண்டார். தன்னை ஒரு நிலைக்கு கொண்டு வந்ததற்கான நன்றி கடனாக கருத்துகிறார் என்று நினைக்கிறேன்.

    //மணிரத்னம், சமீபத்தில் தான் பாலா ரசிகன் என்று கூறி இருக்கிறார்.//

    ஆமாம், பெருமை அளிக்கும் விஷயம் தான்.

    //பாலா தன் கல்யாணத்தில் மணிரத்னம் கலந்து கொண்டதை பற்றி தன் புத்தகத்தில் ஏதோ சுவாரஸ்யமாக குறிப்பிட்டு இருந்ததாக ஞாபகம்.//

    இது பற்றி எனக்கு தெரியாது. படிக்க விருப்பபடுகிறேன். தகவலுக்கு நன்றி.

  5. //’டொன்’ லீ said…
    பாலாவின் படங்களில் எப்படியாவது அவருக்கு தயாரிப்பாளர், நடிகர்களிடையே உரசல் வந்து விடுகின்றது (பிதா மகன், இப்ப நான் கடவுள்).//

    உண்மை தான்.

    //படங்கள் மட்டும் ஒருவரது திறமையை எடை போடுவது இல்லை. அவர் மற்றவர்களிடம் சம்பாதிக்கும் பெயரும் முக்கியம்.//

    சம்பாதிக்கும் பெயர் முக்கியம் தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதற்கும் ஒருவருடைய திறமைக்கும் குணத்திற்கும் சம்பந்தமில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. திறமை வேறு ஒருவருடைய தனிப்பட்ட குணம் வேறு.

    ===================================================================

    //malar said…
    பிரிவு பிரபலங்களுக்கு இழப்பு ரசிகர்களுக்கு பகுதியில் மோகனை பற்றி எழுத வில்லை//

    🙂

    மலர், மோகன் இளையராஜா பற்றி கூறுகிறார்களா! இவர்கள் கூட்டணி வெற்றி பெற்றது உண்மை தான், அதற்கும் இவர்களது திறமைக்கும் சம்பந்தம் இல்லை. பாடலின் வெற்றிக்கும் காரணம் இளையராஜா மட்டுமே, மோகன் அதில் நடித்து இருந்தது அவரது அதிர்ஷ்டம் அல்லது அவருக்கு கிடைத்த வாய்ப்பு அவ்வளவே. இந்த வெற்றியில் அவருக்கு எந்த பங்கும் இருப்பதாக நான் கருதவில்லை. அதுவுமில்லாமல் அவர்கள் பிரியவில்லை, அதன் பிறகு இணையும் வாய்ப்பு அமையவில்லை. பிரியா கூடிய அளவிற்கு அவர்களுக்கு நெருக்கம் இல்லை என்பதே உண்மை.

    ===================================================================

    //நட்புடன் ஜமால் said…
    ஆஹா … அருமை.

    இருங்க முழுசா படிச்சிட்டு வாரேன்.//

    படிக்கும் முன்னாடியே அருமை ….. :-((( அவ்வ்வ்வ்வ்வ்வ்

    //நட்புடன் ஜமால் said…
    பாட்ஷா – பாலா படமா

    இப்படி(க்) கேட்டதுக்கு கோபிச்சிக்காதீங்க//

    பாட்ஷா பாலா படம் அல்ல, ஒரு காட்சியை பற்றி கூறும் போது அதனுடன் தொடர்புடைய இந்த காட்சியையும் கூற வேண்டியதாக இருந்தது, அப்போது தான் நான் கூறிய நந்தா காட்சிக்கு வலு சேர்க்க முடியும்.

    சரி! இதுக்கு எதுக்குங்க கோவித்து கொள்ளபோறாங்க 🙂

    //நட்புடன் ஜமால் said…
    நல்ல இரசணை தங்களுக்கு.
    நானும் கிட்டதட்ட இவ்வாறே உணர்ந்தேன் வெளிப்படுத்த தெரியவில்லை//

    நன்றி ஜமால்

  6. //அத்தனை அற்புதமாக பாடல்கள் இருக்கும், இளையராஜா இசையமைத்த விதமும் அதற்க்கு எடுக்கப்பட்ட காட்சி அமைப்பும்.//

    உண்மை. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்க்காத விதத்தில் இருக்கும்.

  7. சிம்ரனை அரைகுறை ஆடையிலே அனைவரும் காண்பித்துக்கொண்டு இருக்க, பாலா அவரை ஒரு அழகான காட்சியில் நாகரீகமான உடையுடன் நடிக்க வைத்து அசத்தினார்//

    கடைசி வரை சிம்ரன் தொப்புள் கொஞ்சமும்தெரியாத பாட்டு அதுதான் என்பேன், உங்கள் கட்முரை அருமை இருப்பினும் பாட்சா சண்டை காட்சி ஏதோ ஒரு வகையில் அந்த காட்சி உங்களை பாதித்து இருக்கிறது.

    எனக்கு இன்றளவும் ஜாக்கியாட சண்டைக்காட்சிகளுக்கு உலகில் எந்த நடிகருக்கும் ஈடு இனை இல்லை என்பேன். கிரி உங்களை குற்றம் சொல்ல வரவில்லை.

    உங்கள் ரசனைக்கும் என்ரசனைக்குமான வேறுபாடு மட்டும் இது. மற்றபடி சினிமாவை பற்றி பார்வை ஓரளவுக்கு ஓத்து வருகிறது என்கிறேன் வாழ்த்துக்கள்.

  8. பிரிவு பிரபலங்களுக்கு இழப்பு ரசிகர்களுக்கு பகுதியில் மோகனை பற்றி எழுத வில்லை

  9. பாட்ஷா – பாலா படமா

    இப்படி(க்) கேட்டதுக்கு கோபிச்சிக்காதீங்க

    அந்த நாட்களில் கவணிக்கவில்லை.

    ஆனால் தாங்கள் சொல்லியிருக்கும் காட்சி மிக அருமையானது.

    நீங்கள் சொல்லியதற்கும் மேலேயே அதனை இரசித்தேன்.

  10. \\சிம்ரனை அரைகுறை ஆடையிலே அனைவரும் காண்பித்துக்கொண்டு இருக்க, பாலா அவரை ஒரு அழகான காட்சியில் நாகரீகமான உடையுடன் நடிக்க வைத்து அசத்தினார் அவர் நடிகையாகவே நடித்தும். கிராமத்திற்கு ஒரு நடிகை வந்தால் அவரை எப்படி கமெண்ட் செய்வார்கள் என்று இதில் கலக்கலாக எடுக்கப்பட்டு இருக்கும்,\\

    நல்ல இரசணை தங்களுக்கு.

    நானும் கிட்டதட்ட இவ்வாறே உணர்ந்தேன் வெளிப்படுத்த தெரியவில்லை

  11. \\ ’டொன்’ லீ said…

    பாலாவின் படங்களில் எப்படியாவது அவருக்கு தயாரிப்பாளர், நடிகர்களிடையே உரசல் வந்து விடுகின்றது (பிதா மகன், இப்ப நான் கடவுள்).

    படங்கள் மட்டும் ஒருவரது திறமையை எடை போடுவது இல்லை. அவர் மற்றவர்களிடம் சம்பாதிக்கும் பெயரும் முக்கியம். அது பாலாவிடம் மிஸ்ஸிங் என்று தோன்றுகின்றது…\\

    இதுவே பாலா மேல் வரும் அதிருப்திக்கு காரணம்.

  12. அலசி துவைச்சு காய போட்டுடிங்களே!

    நான் கடவுள் எப்போ ரீலிஸ்

  13. //ராமலக்ஷ்மி said…
    உண்மை. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்க்காத விதத்தில் இருக்கும்.//

    “இளங்காத்து” பாடல் உண்மையாகவே தென்றல் தான்.

    அதில் ஒரு காட்சியில் விக்ரம் பீடி குடித்து கொண்டு சைக்கிள் ஓட்டுவது போல இருக்கும் முதலில் பார்க்கும் போது, பின் அனைவரையும் காண்பிக்கும் போது தான் தெரியும் சங்கீதா சைக்கிள் ஓட்டுவதும், இவர் அந்த பாரில் உட்கார்ந்து இருப்பதும் ரசிக்கும் படி இருக்கும் 🙂

    ===================================================================

    //வாசுகி said…
    அப்புறம் “பாலாவின் ரசிகன்” என்ற பதிவுக்குள் நீங்கள் எப்படி பாட்ஷாவை
    கொண்டுவந்தீர்களோ. அதை போல எனக்கும் comment இல் ரஜினி வந்திட்டார்.
    பதிவுடன் தொடர்பில்லாத comment என்று கோவிக்கப்படாது.//

    🙂 பாட்ஷாவை கொண்டு வந்ததற்கான காரணம் கூறி விட்டேன்

    //கடைசியா, பாகம் 2 நல்லா இருக்கு.//

    நன்றி வாசுகி

    //இளகிய மனம் என்பதால் video clip பார்க்கவில்லை. //

    🙂

    //அமாம் அந்த படிக்காதவன் விமர்சனம் நீங்கள் எழுதியது தானே.//

    நான் எழுதியது தான்

    //ஏன் உங்கட blog இல் போடவில்லை.//

    Envazhi.com வினோ கேட்டு கொண்டதற்காக அவருடைய தளத்திற்கு எழுதி கொடுத்தேன், அதை எனக்கு பயன்படுத்துவது நாகரீகமில்லை என்பதால் போடவில்லை. உங்கள் பாராட்டிற்கு நன்றி

    ===================================================================

    //வால்பையன் said…
    அலசி துவைச்சு காய போட்டுடிங்களே!//

    🙂 நன்றி அருண்.

    ஒரு விஷயத்தை பற்றி எழுதுகிறேன் என்றால் அனைத்தை பற்றியும் விரிவாக எழுதுவது என் வழக்கம். ஆனால் இது மற்றவர்களுக்கு போர் அடிக்குதான்னு தான் தெரியல 😉

    //நான் கடவுள் எப்போ ரீலிஸ்//

    ஜன 30 என்று கேள்வி பட்டேன், ஆனா அதற்கான அறிகுறியே தெரியல. எனக்கு இங்கே சிங்கப்பூர் ல் வருமா என்று சந்தேகமாக உள்ளது, வன்முறை படங்கள் என்றால் இங்கே காட்சிகளை கட் செய்து விடுவார்கள், இது படமே அப்படி தான் இருக்கும் போல உள்ளது.. அதனால் வருமா என்று பெரும் கவலையாக உள்ளது :-((

  14. envazhi இல் படிக்காதவன் விமர்சனம் வாசித்தேன். நல்லா இருக்கு.
    “படிக்காதவன்” என்றாலே இப்பவும் எப்பவும் எல்லோருக்கும் நினைவில் வருவது
    ரஜினி மட்டுமே.ரஜினியின் அப்பாவித்தனமான நடிப்பு எல்லோரையுமே கட்டிப்போட்டு விடும்.( that english matter, yes yes yes)

    ரஜினியின் படிக்காதவனோடு தனுஷின் படிக்காதவனை ஒப்பிட கூட முடியல.

    பாட்ஷாவில் எனக்கு சண்டை காட்சிகளைவிட style தான் பிடிக்கும்.
    அதுவும் ரஜினிக்காகவே எழுதப்பட்ட அந்த பாட்டு.

    நீ நடந்தால் நடை அழகு……………
    ‍‍‍‍‍.—————
    ————–
    அந்த முடி கோதி விடும் ஐந்து விரல் அழகு.

    அப்புறம் “பாலாவின் ரசிகன்” என்ற பதிவுக்குள் நீங்கள் எப்படி பாட்ஷாவை
    கொண்டுவந்தீர்களோ. அதை போல எனக்கும் comment இல் ரஜினி வந்திட்டார்.
    பதிவுடன் தொடர்பில்லாத comment என்று கோவிக்கப்படாது.

    கடைசியா, பாகம் 2 நல்லா இருக்கு.
    இளகிய மனம் என்பதால் video clip பார்க்கவில்லை.

    அமாம் அந்த படிக்காதவன் விமர்சனம் நீங்கள் எழுதியது தானே.
    ஏன் உங்கட blog இல் போடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here