விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய கதை நான் கடவுள். இப்படியொரு கதை களம் கண்டதில்லை, இனியும் இதைப் போலக் கதையை எடுக்கத் துணிவார்களா என்பது சந்தேகமே!
நான் கடவுள்
ஜோசியர் கூறிய காரணத்தால் ஆர்யாவை சிறு வயதில் காசியில் விட்டு வரும் அவரது தந்தை மீண்டும் பிள்ளை பாசத்தால் திரும்ப அழைத்து வருகிறார் இது ஒருபகுதி.
உடல், மன நலம் குன்றியவர்களை அல்லது நன்றாக இருப்பவர்களை ஊனமாக்கி அவர்களைப் பிச்சை எடுக்க வைத்து மிரட்டிப் பிழைப்பு நடத்தும் கும்பல் ஒரு பகுதி.
இது இரண்டையும் இணைத்துக் கடைசியில் முடித்து இருக்கிறார். Image Credit
கமர்சியல் படமல்ல
இவ்வகைப் படங்களில் வேகமான திரைக்கதையை எதிர்பார்க்க முடியாது ஆனால், தெளிவான திரைக்கதையை எதிர்பார்க்கலாம் ஆனால், அது இதில் இல்லை.
எடுக்கப்பட்ட படத்தின் அளவு அதிகம், சொல்லப்பட்ட விஷயங்கள் அதிகம் அதைச் சுருக்க நினைக்கும் போது இதைப் போல நடப்பதையும் தவிர்க்க முடியாது.
பாலா படங்களில் லாஜிக் சரியா இருக்கும் இதில் அவ்வாறு இல்லை.
காசியில் ஆர்யாவை அவர் அப்பா கண்டுபிடிப்பது, காவல் துறை வழக்கத்திற்கு மாறாக ஆர்யாவை கண்டு கொள்ளாமல் இருப்பது / கண்டு நடுங்குவது போன்ற காட்சிகள்.
காசியில் எடுக்கப்பட்ட காட்சிகள் அரை மணி நேரம் வெட்டப்பட்டுள்ளதாக ஊடக நண்பர் ஒருவர் கூறினார், காரணம் தெரியவில்லை.
அவலட்சணமான முகம் கொண்டவர்களைக் காட்டி இருப்பார் ஆனால், இவர்களைக் காட்சிகளில் அதிகம் காட்டி விட்டார்.
இவர்கள் கஷ்டப்படுவது உண்மை என்றாலும் அப்பகுதியை கொஞ்சம் குறைத்து அடிக்கடி க்ளோஸ் அப்பில் காட்டுவதையும் தவிர்த்து இருக்கலாம்.
ஒரு சிலருக்குப் பரிதாபத்திற்குப் பதில் சலிப்பு வர வாய்ப்புண்டு.
உடல் ஊனமுற்றவர்கள் வைத்து எப்படித் தான் எடுத்தார் என்றே தெரியவில்லை, அத்தனை அருமையாக நடித்துள்ளார்கள்.
ஆர்யா
ஆர்யா கோபமாக நடப்பதையும் பேசுவதையும் நடிப்பாகக் கருத முடியாது. இதற்கு மூன்று வருடம் காத்திருந்தார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தன் பங்கைச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார், குறை கூற முடியாது.
மிகக் குறைவாகவே பேசுகிறார், “ஜெய் போலோ நாத்” அடித்தொண்டையிலிருந்து கூறும் போது அனைவரையும் மிரட்டுகிறார்.
நடிக்க அதிக வாய்ப்பு பூஜாவிற்கு, அவரும் தன் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார் அதுவும் கடைசிக் காட்சியில் நம் கண்களில் கண்ணீர் வர வைத்து விடுக்கிறார்.
கண் தெரியாதவர் போல வருவதால் காண்டாக்ட் லென்ஸ் பொருத்தி இருக்கிறார், சிரமமான நடிப்பு தான்.
மன நலம் குன்றிய குழந்தையை இன்னொரு கும்பலுக்கு விற்று விட அவர்கள் இந்தக் குழந்தையை வைத்து இருக்கும் தாத்தாவிடமிருந்து பிடுங்கி சென்று விடுகின்றனர்.
அதற்கு அவர் அழும் அழுகை போலித்தனம் இல்லாதது.
அவர் அழுகையைத் தேற்ற முடியாமல் ஒருவர் “மேல இருந்து கடவுள் இதை எல்லாம் பார்த்துட்டு இருக்கான்” கவலை படாதே! என்று கூறும் போது, கோபமடைந்த அவர் கடவுளைத் தே****** ** என்று திட்டத் திரையரங்கமே நிசப்தம்.
இயலாமையில், பொறுமை இழந்து வரும் சொல் எனவே, இதை அந்த இடத்தில் திட்டுவதாகக் கருத தேவையில்லை.
வில்லன் ராஜேந்திரன்
வில்லன் ராஜேந்திரன் பயங்கரமாக நடித்து இருக்கிறார். அதுவும் பூஜாவை அடிப்பது ரொம்பக் கொடுமை. பாலா இது எல்லாம் ரொம்ப அதிகம்.
ராஜேந்திரன் அடித்த அடிக்குப் பூஜா அப்பவே ஸ்பாட் அவுட் ஆகி இருக்க வேண்டும்.
வழக்கமான பாலா படத்தின் சண்டையை விட மூர்க்கம் அதிகம், பாவம் அடி வாங்கினவங்க! உண்மையிலே செம அடி விழுந்து இருக்கும்.
படத்தில் நடு நடுவே கதையோடு ஒட்டிய நகைச்சுவை வசனங்களும் உண்டு, சிரிக்காமல் இருக்கவே முடியாது, இயல்பான வசனங்கள்.
உடல் ஊனமுற்ற நபரில் ஒரு சிறுவன் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.
ஒரு காட்சியில் ஆர்யாவை அங்கே உள்ள போலி சாமியார்கள், ‘சாமி! வாயில இருந்து லிங்கம் வருமா?‘ என்று கேட்டதும் ‘ம்ம் உன் வாயில அடிச்சா ரத்தம் வேணா வரும்‘ என்று கூற அவர் கப் என்று இருப்பது செம காமெடி 🙂 .
இசைஞானி பின்னணி இசையில் சிறப்பாகச் செய்துள்ளார், இரு பாடல்கள் மட்டுமே படத்தில் உள்ளது.
வசனம் ஜெயமோகன்.
ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவும் சிறப்பாக உள்ளது, குறிப்பாகக் காசி காட்சிகள்.
அதை எப்படி எடுத்தார்கள் என்றே தெரியவில்லை, அத்தனை கூட்டத்தில் எடுத்து இருக்கிறார்கள் ஆனால், ஒருவர் கூடக் கேமரா பார்க்கவில்லை.
சில குறைகள் இருந்தாலும் விளிம்புநிலை மக்களின் துன்பங்கள், ஏக்கங்கள் பற்றிப் படம் எடுக்கப் பாலா ஒருவரால் தான் முடியும் என்பதை நிரூபித்து உள்ளார்.
இன்னும் பார்க்கலை. தியேட்டரில் பார்க்கலாமான்னு இருக்கேன்.
அருமையாக வந்துருக்கு விமர்சனம்!
பாலாவின் படங்களில் நகைச்சுவை கதையோடு பின்னி பிணைந்து வரும்!
நந்தாவில் கருணாஸ் தவிர!
நான் படம் பார்க்க போறதில்லை
எனக்கு வன்முறை என்றாலே அலர்ஜி
//பாண்டித்துரை said…
பாலாவின் முந்தைய படங்களை விட இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.//
உண்மை தான் அதற்கு நீண்ட நாட்களாக (வருடங்களாக) எடுத்ததும் ஒரு காரணம்
===================================================================
//ஜோ / Joe said…
Thumbsup Giri!//
நன்றி ஜோ
===================================================================
//துளசி கோபால் said…
இன்னும் பார்க்கலை. தியேட்டரில் பார்க்கலாமான்னு இருக்கேன்.//
கண்டிப்பாக பாருங்க, எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு
===================================================================
//Mahesh said…
கிரி… விமர்சனத்துல தேறிட்டீங்க… சூப்பரா எழுதறீங்களே !!//
நன்றி மகேஷ்
===================================================================
//vengatesh said…
உங்கள் விமர்சனத்தை படித்தேன்.மகிழ்ச்சி சில விழயங்களை வெளிப்படையாக எழுதி இருக்கீறிர்கள்.//
நன்றி வெங்கடேஷ்
//உடல் நலம் மற்றும் மன நலம் பாதிக்க பட்டவர்களை அப்டி காட்டி இருக்க தேவை இல்லை என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை//
நான் கூறவந்தது என்னவென்றால், எந்த ஒரு விசயத்தையும் அதிகம் காட்டினால் நல்ல விசயமாக இருந்தாலும் திகட்டி விடும். நாம் கூறவந்ததை மிகவும் அழுத்தி கூறினால் அதை கேட்க யாரும் இருக்க மாட்டார்கள், ஓவர் டோஸ் ஆகி விடும்.
சிறப்பான நடிப்பு என்று கூறமுடியாமல் என்னடா இதையே சும்மா காட்டிட்டு இருக்காங்க என்ற வெறுப்பு வந்து விடும். அவ்வாறானால் நம் சொல்லவந்ததன் விஷயம் பலரை சென்றடையாமலே போய்விடும். அதையே நான் அவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
//நான் கூறிய கருத்துகளில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்//
நீங்கள் உங்கள் கருத்தை கூறுகிறீர்கள் இதில் தவறு காண என்ன இருக்கிறது!
உங்கள் முதல் வருகைக்கு நன்றி வெங்கடேஷ்
===================================================================
//வால்பையன் said…
அருமையாக வந்துருக்கு விமர்சனம்//
நன்றி அருண்
//பாலாவின் படங்களில் நகைச்சுவை கதையோடு பின்னி பிணைந்து வரும்!//
இதிலும் அவ்வாறே…நகைச்சுவைக்கு என்று காட்சி அமைக்காமல் கதையோடு வருவது தான்.
===================================================================
//Bleachingpowder said…
இருக்கும் ஒரிரெண்டு இயக்குனர்களையும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால் பின் யார் தான் இது போன்ற முயற்சிகளை எடுப்பார்கள்.//
எனக்கு இதை கூறி சலித்து விட்டது.
//நல்ல பதிவு கிரி.வாழ்த்துகள்.//
நன்றி அருண்
இன்னும் பார்க்கலை
படத்தை சொன்னேன்
பாலாவின் முந்தைய படங்களை விட இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.
//என்ன கூறியும் குழந்தையுடன் அவர்களை விடமாட்டேன் என்று கூறி விட்டார்கள். பின் நான் மட்டுமே பார்த்தேன்//
This happened to me also.
//குறைந்த பட்சம் விமர்சனம் என்கிற பெயரில் அவரை குதறாமலாவது இருக்க வேண்டும்//
Thumbsup Giri!
மிக அருமையாக அலசியிருக்கிறீர்கள். நீங்கள் சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகள் இல்லாமல் பார்க்க முயற்சிக்கிறேன்:)!
கிரி… விமர்சனத்துல தேறிட்டீங்க… சூப்பரா எழுதறீங்களே !!
ஜோ / Joe said…
//என்ன கூறியும் குழந்தையுடன் அவர்களை விடமாட்டேன் என்று கூறி விட்டார்கள். பின் நான் மட்டுமே பார்த்தேன்//
This happened to me also.
///
But Oorula?
திரு , கிரி அவர்களே,
உங்கள் விமர்சனத்தை படித்தேன்.மகிழ்ச்சி சில விழயங்களை வெளிப்படையாக எழுதி இருக்கீறிர்கள். எனக்கும் அந்த காவல் துறை மற்றும் நீதிமன்ற காட்சிகளில். உடன்பாடு இல்லை..
ஆனால் நீங்கள் கூறிய ஒரு விழயத்தை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை ( என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை ) உடல் நலம் மற்றும் மன நலம் பாதிக்க பட்டவர்களை அப்டி காட்டி இருக்க தேவை இல்லை என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.. காட்சிகளில் இரண்டு மணி நேரம் கூட காண முடியவில்லை என்று கூறினால். அவர்களை காப்பாற்றுவது யார் ? என்ற கேள்விகளை உருவாக்கும். அன்னை தெரசா போன்ற நிறைய மனிதர்கள் இன்னும் இது போன்ற உடல் நலம் மற்றும் மன நலம் பாதிக்க பட்டவர்களுடன் காலத்தை கழித்து வருகிறனர் அவர்கள் கூட மனிதர்கள் என்றே நான் நினைக்கிறேன். இது போன்ற மனிதர்களை உருவாக்க இது போன்ற காட்சிகள் மிக அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
நீங்கள் கேட்க்கலாம். பாலா வின் இந்த ஒரு திரைகவியம் இது போன்ற மனிதர்களை உருவாக்கி விடுமா என்று ??? எப்போது உருவாக்கும் என்று எனக்கு தெரியாது அப்டி பல வருடங்கள் கழித்து உருவாகினால் அதை உருவாகிய பெருமை என் அருமை பாலா வாய் சேரும் என்பதில் எல் அளவும் சந்தேகம் இல்லை. தேவர் மகனில் கமல் கூறியது போல இது பெருமை இல்லை அனைவரின் கடமை……
நான் கூறிய கருத்துகளில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்…..
ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்தப் படம் நிச்சயமாக ஒரு நல்ல படம் தான்..
ஆளுக்காள் விமர்சனம் எழுதி நொங்கெடுத்து விட்டதால் நான் பதிவு போடவில்லை..:-)
ஆனால் நீங்கள் வழமை போல் சரியான விமர்சனம் தந்துள்ளீர்கள்..
சிங்கையில் உள்ளூர் சென்சார் நல்லாகவே விளையாடி விட்டது..:-))
//Never give up said…
Really a very good movie after a long time. First we should appreciate for a non-commercial movie. //
பலர் இதை செய்வதில்லை, வருத்தமாக உள்ளது,
உங்கள் முதல் வருகைக்கு நன்றி கீதா
===================================================================
//எம்.எம்.அப்துல்லா said…
படம் பார்த்து முடித்தபோது என் மனதில் ஓடியதும் இதுதான் :)//
ஒரே சிந்தனை 🙂
===================================================================
// vengatesh said…
” மருத்துவர் ஊசி போடுவது வலி தான் அனால் அந்த வலி தான் நம் நோய் போக்கும் மருந்து//
பிரச்சனை என்னவென்றால் இங்கே யாரும் ஊசி போட்டுக்கொள்ள தயாராக இல்லை 🙂
===================================================================
//ஜோ / Joe said…
//But Oorula?//
No .Singapore Golden Mile theatre.//
நான் கோல்டன் வில்லேஜ்
===================================================================
//வண்ணத்துபூச்சியார் said…
விமர்சனத்திற்கு நன்றி.. //
நன்றிக்கு நன்றி
//எழுத்தாளர் பா.ரா வின் விமர்சனம் பார்க்கவும்//
படிக்கிறேன்
//உலகம் சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும். நிறை / குறை கூறவும்.//
கண்டிப்பாக.. உங்கள் முதல் வருகைக்கு நன்றி வண்ணத்து பூச்சியார்
===================================================================
//ராமலக்ஷ்மி said…
மிக அருமையாக அலசியிருக்கிறீர்கள்.//
நன்றி ராமலக்ஷ்மி
//நீங்கள் சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகள் இல்லாமல் பார்க்க முயற்சிக்கிறேன்//
திரை அரங்கில் பாருங்கள்.
===================================================================
//நட்புடன் ஜமால் said…
காலை முதல் நிறைய வலைகளில் இதே விமர்சனம் தான்.//
:-((
//ஆனாலும் உங்கள் வித்தியாசம்//
அப்பாடா! நன்றி ஜமால் 🙂
===================================================================
//’டொன்’ லீ said…
ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்தப் படம் நிச்சயமாக ஒரு நல்ல படம் தான்..//
வழிமொழிகிறேன்
//ஆனால் நீங்கள் வழமை போல் சரியான விமர்சனம் தந்துள்ளீர்கள்..//
நன்றி டொன் லீ
//சிங்கையில் உள்ளூர் சென்சார் நல்லாகவே விளையாடி விட்டது..:-))//
அப்படித்தான் நினைக்கிறேன்..பல காட்சிகள் தொடர்பில்லாமல் இருந்தது.
//அதற்காக அவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும், குறைந்த பட்சம் விமர்சனம் என்கிற பெயரில் அவரை குதறாமலாவது இருக்க வேண்டும்.//
பதிவுலகம் இந்த படத்தை கூறு போடுவதை நினைத்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
இருக்கும் ஒரிரெண்டு இயக்குனர்களையும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால் பின் யார் தான் இது போன்ற முயற்சிகளை எடுப்பார்கள்.
நல்ல பதிவு கிரி.வாழ்த்துகள்.
Really a very good movie after a long time. First we should appreciate for a non-commercial movie.
Regards
Geetha
//அதற்காக அவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும், குறைந்த பட்சம் விமர்சனம் என்கிற பெயரில் அவரை குதறாமலாவது இருக்க வேண்டும்.
//
படம் பார்த்து முடித்தபோது என் மனதில் ஓடியதும் இதுதான் 🙂
திரு , கிரி அவர்களே,
//சிறப்பான நடிப்பு என்று கூறமுடியாமல் என்னடா இதையே சும்மா காட்டிட்டு இருக்காங்க என்ற வெறுப்பு வந்து விடும். அவ்வாறானால் நம் சொல்லவந்ததன் விஷயம் பலரை சென்றடையாமலே போய்விடும். அதையே நான் அவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.//
மஹாநதி யில் அமிர்தத்தை அமிர்தமாக கொடுத்தார் கமல் மிஞ்சியது அன்பே சிவம் திரைபடத்தின் தோல்வி… என் பார்வை இல் சில விழயங்களை நெஞ்சை கிரினால் போல சொன்ன தான் பல பேருக்கு புரியும்…. அறுவை சிகிட்சை கூட சில நேரம் சரியே…. அமிர்தம் என்று சொல்லி சினிமாத்தனத்தை கலந்து இருந்தால் பாலா வின் இந்த இந்த திரைக்காவியம் ஒப்பனை பூசி என் தமிழ் மக்களை ஏமாற்றும் நடிகர்களின் திரைப்படமாக மாறி இருக்கும். ” மருத்துவர் ஊசி போடுவது வலி தான் அனால் அந்த வலி தான் நம் நோய் போக்கும் மருந்து ” என் பாலா போட்ட ஊசி பொருளாதாரம் என்ற போர்வையில் தோற்றாலும், ஒரு நாள் வெற்றி பெற போகும் மனித உரிமைகளுக்கு உயிர் எழுத்து என்பதில் ஐயமில்லை.
நன்றி
//But Oorula?//
No .Singapore Golden Mile theatre.
காலை முதல் நிறைய வலைகளில் இதே விமர்சனம் தான்.
ஆனாலும் உங்கள் வித்தியாசம்
\\படத்தில் சில குறைகள் இருந்தாலும் குத்து பாட்டு, வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகள், ஒன்றுக்கும் உதவாத கதை, ஹீரோயிசம் என்று சம்பாதிக்க படம் எடுக்கும் மற்றவர்களிடையே இருந்து விலகி, கவனிக்கப்படாத மக்களை பற்றி அவர்கள் படும் துன்பங்கள்,அவர்களின் ஏக்கங்கள் பற்றி படம் எடுக்க பாலா ஒருவரால் தான் முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார், அதற்காக அவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும், குறைந்த பட்சம் விமர்சனம் என்கிற பெயரில் அவரை குதறாமலாவது இருக்க வேண்டும்.\\
விமர்சனம் அருமை, கண்டிப்பா தியேட்டர்ல பார்கிறேன்
//ஒரு காட்சியில் ஆர்யாவை அங்கே உள்ள போலி சாமியார்கள், சாமி! வாயில இருந்து லிங்கம் வருமா? என்று கேட்டதும் ..ம்ம் உன் வாயில அடிச்சா ரத்தம் வேணா வரும் என்று கூற அவர் கப் என்று இருப்பது செம காமெடி:-))//
கிரி,
இந்த படத்தில் போலி சாமியார்களை நன்றாகவே சாடியுள்ளார் பாலா/ஜெ.மோ 🙂 . அதுவும் ஒரு இடத்தில் காஞ்சி பெரியவரையும் இழுத்திருப்பார்கள்.
இந்த படத்தில் ஜெயமோகன் தனது மென்மையான RSS கருத்துக்களை கண் அசரும் நேரத்தில் தூவி உள்ளார். மற்ற RSS குண்டர்களை போல் இல்லாமல் தன்னுடைய கருத்தில் உறுதியுடன் நின்று மற்ற மதத்தவர்கள் குறிப்பாக கிறிஸ்துவர்களின் கருத்துக்கு அரோக்கியமான எதிர் விவாதம் செய்பவர். நான் கிறிஸ்துவனாக இருந்தும் சில தானைத் தலைவர்களான சிறு கிறிஸ்துவ அமைப்புகள், தேடித்தேடி மத மாற்றம் செய்வதை எதிர்பவன். இந்த படத்தில் ஒரு கிறிஸ்துவ NUN வார்த்தையால் பூஜா சட்டென்று மதமாற்றம் செய்யப்படுவது போன்று காட்டுவது விவாதத்திற்குரியது. அப்படி கத்தோலிக்கர்கள் பெரும்மளவில் மதமாற்றத்தில் ஈடுபடிருந்தாள் அத்வானி, ஜெயலலிதா போன்றோர் என்றோ கத்தோலிக்கர்கள் ஆகா மாற்றபட்டிருபார்கள். ஆகவே தான் யாரை குறிப்பிட வந்தாரோ அவர்களை தைரியமாக காட்டி இருக்கலாம். -நித்தியானந்
//நசரேயன் said…
விமர்சனம் அருமை,//
நன்றி நசரேயன்
//கண்டிப்பா தியேட்டர்ல பார்கிறேன்//
நன்றி
===================================================================
//சம்பத் said…
கிரி,
இந்த படத்தில் போலி சாமியார்களை நன்றாகவே சாடியுள்ளார் பாலா/ஜெ.மோ :)//
ஹா ஹா ஹா ஆமாம் அவங்க பண்ணுற லூட்டியும் கமெண்ட் ம் சரியான காமெடி
===================================================================
//vengatesh said…
இந்த மசாலா திரைப்படம் வெளி வருவது நிறுத்த படுமானால் ஊசி போட்டு கொள்ள அனைவரும் தயார் //
இது ரொம்ப கஷ்டம்
===================================================================
//B+ said…
இந்த படத்தில் ஜெயமோகன் தனது மென்மையான RSS கருத்துக்களை கண் அசரும் நேரத்தில் தூவி உள்ளார்//
இது பற்றி அதிகம் எனக்கு தெரியாததால் கருத்து கூற விரும்பவில்லை.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி B+
//பிரச்சனை என்னவென்றால் இங்கே யாரும் ஊசி போட்டுக்கொள்ள தயாராக இல்லை :-)\\
இந்த கருத்து ஒரு ஒரு கமல் இயக்கிய திரைப்படம் வரும் போதும் நடக்கும். கமல் இயக்கத்தில் ஒரு ஒரு படம் வெளி வரும் போதும் முதல் விமர்சனம் கமல் சொல்ல வருவது என் பின் தங்கிய தமிழ் மக்களுக்கு புரியாது என்று திரைப்படம் வந்த முதல் நாளில் இருந்தே விமர்சிக்க ஆரம்பித்து கமலின் திரைப்படத்தை பொருளாதர ரீதியில் தோல்வி அடைய செய்கின்றனர். இதில் வருத்தம் மற்றும் வலி திரைப்படம் தோல்வி என்பதை விட என் தமிழ் மக்களை இன்னும் முட்டாள்கள் போலவே விமர்சனம் செய்கிறார்கள் என்பது தான்.
இதை நான் சொல்ல காரணம் நீங்கள் சொன்ன ஊசி போட்டுக்கொள்ள யாரும் தயறாங்க இல்லை என்ற கருத்துக்கு… நம் நாட்டில் ஊசி போட்டு கொள்ள அனைவரும் தயார் ஆனால் ஊசி இல்லாமல் தப்பிக்க வழி இருக்கும் பொது எதற்கு ஊசி என்று யோசிக்கின்றனர் நான் சொல்வது மாசாலா திரைப்படத்தை இந்த மசாலா திரைப்படம் வெளி வருவது நிறுத்த படுமானால் ஊசி போட்டு கொள்ள அனைவரும் தயார் ( என் பாலா வின் கமலின் திரைபடத்தை ஏற்று கொள்ள அனனைவரும் தயார் )
//இது ரொம்ப கஷ்டம்//
கஷ்டம் என்று சொல்வதை விட
இன்னும் காலம் வர வில்லை என்பது தான் சரி…..
//வழக்கமான பாலா படத்தின் சண்டையை விட இதில் மூர்க்கம் அதிகம், //
இதற்கும் கம்மியாக அதனை காண்பித்தால் அதன் வீரியத்தை உணரவைக்க முடியாது .
பா.ராகவன் அவர்களுக்கு நீங்கள் எழுதிய கருத்து மூலம் உங்கள் இணையதளத்தின் முகவரியை அறிந்து கொண்டேன் நன்றி. பா.ராகவனுக்கு நான் எழுதிய கருத்தையே உங்கள் பார்வைக்கும் வைக்கிறேன்.
பா.ராகவனுக்கு,
படங்களில் ஏது சார் நல்ல படம், தவறான படம் அதை தீர்மானிக்க நாம் யார்?? இல்லை படங்களுக்கு மசாலா, காரம், இனிப்பு என அறுசுவை உள்ளதாக யார் உங்களுக்கு கூறியது??
படங்களை இவ்வாறு பிரிக்கலாமே 1. மக்கள் ரசிக்கும் படம் 2. மக்கள் ரசிக்காத படம் இவ்விரண்டினுள்ளும் 1. ஓடும் படம் 2. ஓடாத படம். இத்தகைய உட்பிரிவு வரக்காரணம் சமீபத்திய மீடியா (குறிப்பாக சன் டி.வி மற்றும் இணையதளம்) மற்றும் நம்முடைய கருத்தை பிறர் மீது திணிப்பது.
நீங்கள் கூறியது போல மசாலா படங்கள் என்ன அவ்வளவு கேவலமானதா??? இல்லை நீங்கள் எந்த ஒரு மசாலா படத்தையோ அல்லது அதிலுள்ள காட்சிகளையோ ரசித்தது இல்லையா??? அவ்வாறு ரசிக்க முடியாவிட்டால்………… டாக்டர் ருத்ரனையோ, ஷாலினியையோ முதலில் பார்க்க வேண்டியது நீங்கள் தான்.
நான் கடவுளுக்கு வருகிறேன்……..
படத்தின் முதல் நோக்கம் இதுவரை நாம் அறியாத பிச்சைக்காரர்களின் உலகத்தை காட்டுவது (இதுதான் படத்தின் உயிர், உடல் எல்லாமும்), அதில் பாலா வெற்றி பெற்று மக்கள் மனதில் அழியாத இடம் பெற்று விட்டார். இதில் உங்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்து இருக்கிறதா???
உறவை துறந்த எந்த ஒரு முனிவருக்கும் சாமியாருக்கும் குரு இருந்ததில்லையா???? என்ன பிதற்றல் இது???? என்ன எழுதிகிறோம் என்று புரிந்துதான் எழுதுகிறீர்களா???????
இப்படத்திற்கு தவறான ஆண்மீக சட்டையை பாலா அணிவித்துள்ளார் என்பது தானே உங்கள் வாதம். பாலா அணிவித்தது ஆண்மீக சட்டையை அல்ல “அகோரி” சட்டையை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
கிளைமாக்ஸின் அடிநாதம் ” கருணைக்கொலை”
இது இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் விஷயம், கால காலமாக நம் நாட்டில் பின்பற்றி வருகிற விஷயம் (சாககிடப்பவர்களுக்கு பால்லூற்றுவது முதல் கள்ளிப்பால் கொடுத்து சாகடிப்பது வரை). அவ்வாறு கருணைக்கொலை செய்ய பாலா அழைத்து வரும் கதாபாத்திரம்தான் “அகோரி” . அந்த அகோரி போகிற போக்கில் இரண்டு வாழவக்கத்தவர்களையும் பதம் பார்த்துவிட்டு போகிறான் இது சினிமா என்பதற்காக.
கடைசியாக உங்களுக்கு ஒரு கேள்வி………..
நான் கடவுள் என கூறிக்கொண்டு திரியும் “அகோரிகள்” நாட்டில் இருக்கிறார்களா? இல்லையா? அவர்களை திரையில் காட்டியது தவறா? இத்தகைய அகோரிகளை சாதாரண மசாலா (நீங்கள் கூறியது தான்) சினிமா பார்க்கும் மக்களுக்கு அறிமுகப்படுத்தியதிலும் பாலாவிற்கு வெற்றியே…….
தயவு செய்து உங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள்.
இது மக்கள் ரசிக்க கூடிய படம் மட்டுமல்ல ஓடவேண்டிய படமும் கூட ( பெங்களுரில் தமிழ் மொழி தெரியாதவர்களும் ரசித்து பார்த்தார்கள் என்பதால் கூறுகிறேன்).
பாலா என்னும் படைப்பாளியை திண்ணும் அகோரியாக நாம் இருக்க கூடதல்லவா????????
//vengatesh said…
கஷ்டம் என்று சொல்வதை விட
இன்னும் காலம் வர வில்லை என்பது தான் சரி…..//
🙂 பார்ப்போம்.
===================================================================
//பாஸ்கர் said… //
பாஸ்கர் இதை அப்பவே பார்த்துட்டேன் .. 🙂
//இதற்கும் கம்மியாக அதனை காண்பித்தால் அதன் வீரியத்தை உணரவைக்க முடியாது//
உண்மை தான், ஆனால் அதன் வீரியத்தை உணர்ந்து கொள்ள பலர் தயாராக இல்லை.
===================================================================
//Karthik said…
படங்களில் ஏது சார் நல்ல படம், தவறான படம் அதை தீர்மானிக்க நாம் யார்??//
நெத்தியடியா சொன்னீங்க கார்த்திக். நமக்கு கெட்ட படம் இன்னொருவருக்கு நல்ல படமாக தெரிகிறது. சிறப்பான கருத்து உண்மையாகவே..என்னுடைய கருத்தும் இதுவே.
//படங்களை இவ்வாறு பிரிக்கலாமே 1. மக்கள் ரசிக்கும் படம் 2. மக்கள் ரசிக்காத படம் இவ்விரண்டினுள்ளும் 1. ஓடும் படம் 2. ஓடாத படம். இத்தகைய உட்பிரிவு வரக்காரணம் சமீபத்திய மீடியா (குறிப்பாக சன் டி.வி மற்றும் இணையதளம்) மற்றும் நம்முடைய கருத்தை பிறர் மீது திணிப்பது.//
க்ளாஸ்
//நீங்கள் கூறியது போல மசாலா படங்கள் என்ன அவ்வளவு கேவலமானதா??? இல்லை நீங்கள் எந்த ஒரு மசாலா படத்தையோ அல்லது அதிலுள்ள காட்சிகளையோ ரசித்தது இல்லையா??? //
அடி பின்னறீங்களே! நமக்கு பிடிக்கவில்லை என்பதாலே அந்த படம் நல்ல படம் இல்லை என்று ஆகி விடுமா!
//இப்படத்திற்கு தவறான ஆண்மீக சட்டையை பாலா அணிவித்துள்ளார் என்பது தானே உங்கள் வாதம். பாலா அணிவித்தது ஆண்மீக சட்டையை அல்ல “அகோரி” சட்டையை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.//
ஹாரர் படம் பார்க்க போயிட்டு, படம் பார்த்து விட்டு என்னையா! இது படம் முழுவதும் ரத்தம் வெட்டு குத்து கொலையா இருக்குன்னு சொன்னா ..என்ன செய்வது?
//அவ்வாறு கருணைக்கொலை செய்ய பாலா அழைத்து வரும் கதாபாத்திரம்தான் “அகோரி” .//
மிகச்சரி.
பாலா கூற வந்தது அந்த பெண் குற்றுயிரும் குலையிருமாக சாக கிடக்கிறாள், இனி எந்த வாய்ப்பும் வாழ வகை செய்யாது என்ற கடைசி கட்டத்துக்கு வந்துவிட்டாள், துடிதுடித்து சாவதை அவன் கருணை கொலையாக செய்து விட்டான்.
இவர்கள் அதை எல்லாம் விட்டு விட்டார்கள் அப்ப! கஷ்டப்படுகிறவங்களை எல்லாம் கொலை செய்ய வேண்டும் என்பதே முடிவா? என்று கேட்டு அதை மட்டும் பிடித்து கொண்டார்கள். கருணை கொலைக்கும் சாதா கொலைக்கும் உள்ள வித்யாசம் புரியாமல்.
//இது மக்கள் ரசிக்க கூடிய படம் மட்டுமல்ல ஓடவேண்டிய படமும் கூட //
வழிமொழிகிறேன்
//பாலா என்னும் படைப்பாளியை திண்ணும் அகோரியாக நாம் இருக்க கூடதல்லவா????????//
அருமை கார்த்திக்.
நான் சமீபத்தில் படித்த சிறந்த பின்னூட்டம் இது.
//அருமை கார்த்திக்.
நான் சமீபத்தில் படித்த சிறந்த பின்னூட்டம் இது.//
நான் வழிமொழிகிறேன் !
படம் பார்த்துட்டு வந்து அப்புறமா சொல்லுறேன்.
//மோகன் said…
படம் பார்த்துட்டு வந்து அப்புறமா சொல்லுறேன்.//
கண்டிப்பா பாருங்க
===================================================================
//Shivaji(formerly Shivaji Rao Admirer) said…
நல்ல விமர்சனங்கள் கிரி !//
நன்றி சிவாஜி
//பழைய படி ஆசை , கோபம் ஆதிக்கம் செலுத்தும் ! இது தானே நம் வழக்கம் //
:-)) நாம் தான் அரசியல்வாதிகள் செய்யும் தவறையே மறந்து விடுகிறோமே! இதை எல்லாம் எங்கே நினைவு வைக்க போறோம் 😉
நல்ல விமர்சனங்கள் கிரி !
இந்த படங்களை பார்க்கும் போது ஒன்று ஒண்ணும் புரியாது ! இல்லை புரிந்து விட்டால் மனது வலிக்கும் ! ஒரு 2 அல்லது 3 நாட்களுக்கு வாழ்க்கை பற்றிய நம் கண்ணோட்டமே வேறு மாதிரியாக இருக்கும் ! பிறகு சகஜ நிலைக்கு திரும்பிவிடுவோம் ! பழைய படி ஆசை , கோபம் ஆதிக்கம் செலுத்தும் ! இது தானே நம் வழக்கம் ! இதில் நான் கடவுள் இந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பார்க்க வேண்டும் ! அவ்வளவு தான் !
என்ன சொல்றீங்க நண்பர்களே !
என்றும் அன்புடன்
Shivaji(formerly shivaji rao admirer)
Very good comments , Movie is really superb !!!
May God bless Bala !!!