எதிர்காலத் திட்டங்கள்

மக்குப் பிடித்த விசயங்களை செய்வதில் இருக்கும் இன்பமே அலாதியானது 🙂 . எனக்குப் பிடித்த விசயங்களை எழுதுவது இதில் இன்னும் பல விசயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ரொம்ப அதிகம்.

அது போல, படிப்பவர்களுக்கு புதிய செய்திகளை / அனுபவங்களை கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதற்காக சில விசயங்களில் அதிக உழைப்பை செலவிட்டு இருக்கிறேன்.  Image Credit – graphyquotes.com

இது போல இந்த Blog எழுதுவதில் எனக்கு நீண்டகால சில ஆசைகள் / லட்சியங்கள் உண்டு. இவற்றை செய்து அதை தொடர்ந்து படிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

இதில் சுயநலம் கலந்த பொதுநலம் உள்ளது. இவற்றை செய்ய வேண்டும் என்பது என்னுடைய சுயநலம் இதை அனைவருக்கும் பகிர்ந்து படிப்பவர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பது பொது நலம். இனி என்னுடைய எதிர்கால திட்டங்களைக் கூறுகிறேன்.

இது வரிசைப்படி / இந்த நாளில் என்றெல்லாம் கிடையாது. எப்போது வாய்ப்புக் கிடைக்கின்றதோ அப்போது செய்து விட வேண்டும் என்பது என்னுடைய முடிவு. எனக்கு காத்திருப்பது ரொம்ப பிடித்தமானது, அது நடக்குமென்றால் 🙂 .

ரஜினி 

தலைவர் ரஜினியை நேரில் சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட வருட காத்திருப்பாக உள்ளது ஆனால், இதற்காக நான் இன்னும் முயற்சிக்கவில்லை. இது இப்படி சென்று கொண்டு இருக்கும் போது நான் Blog எழுத ஆரம்பித்தேன்.

அதன் பிறகு நிறைய ரஜினி பற்றி எழுதி இருக்கிறேன்.

Blog எழுதுவதால், தலைவரை நேரில் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தால் அவரிடம் பேட்டி என்ற பெயரில் இரண்டு கேள்வியாவது கேட்டு அதை என்னுடைய தளத்தில் வெளியிட வேண்டும் என்பதை ஒரு லட்சியமாக வைத்து இருக்கிறேன்.

சும்மா இல்லங்க.. “கிரி Blog Exclusive” ன்னு போடணும் 🙂 இதற்காக நான் அவசரப்படவில்லை, பொறுமையாக இருக்கிறேன். சரியான நேரம் வரும் போது இதற்காக முயற்சி எடுத்து இதை செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எதிர்காலத்தில் சில பிரபலங்கள் / சாமானியர்களை சந்தித்து அது பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. எனக்கு பேட்டி எல்லாம் எடுக்கத் தெரியாது, அனுபவமில்லை ஆனால், சந்திப்பை சுவாரசியமாக விவரிக்கத் தெரியும்.

எனவே எப்படியாவது சமாளித்து விடலாம் என்று நினைக்கிறேன்.

தள வடிவமைப்பு 

தள வடிவமைப்பை படிக்க எளிமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். மினுமினுக்கும், கண்ணை உறுத்தும் படங்கள் எல்லாம் ஓரத்தில் வைப்பது தேவையில்லாத ஆணி என்று அனைத்தையும் ஆரம்ப காலத்திலேயே பிடுங்கி விட்டேன்.

எனக்கு ஃபோட்டோஷாப் தெரிந்தால் இன்னும் சில மாற்றங்கள் செய்து விடுவேன் இருந்தாலும், ஓரளவாவது கற்றுக்கொண்டு Blog லோகோ, கவர் படம், வாட்டர் மார்க் போன்றவை Professional ஆக போடும் திட்டம் உள்ளது.

தள வடிவமைப்பை மாற்ற நினைத்துள்ளேன், அதற்கு கொஞ்சம் செலவு பிடிக்கும் என்பதால் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

பிற்சேர்க்கை 2015 Jan – தற்போது “Responsive Theme” எனப்படும் Mobile, Tablet உட்பட அனைத்துச் சாதனங்களிலும் படிக்க எளிதாக இருக்கும் படியான வசதியை செயல்படுத்தியிருக்கிறேன்.

பயணம் 

புதிய இடங்கள், மக்கள் பற்றி தெரிந்து கொள்ள நிறைய பயணம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நான் எழுதுவதிலேயே எனக்கு ரொம்ப திருப்தி தருவது பயணக் கட்டுரைகள் தான்.

எனவே, எனக்குப் பிடித்த இடங்களுக்குச் சென்று அது குறித்த பயண அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக எழுத வேண்டும். Image Credit – www.morefm.co.nz

மலேசியா தைப்பூசம் 

மலேசியாவில் நடைபெறும் தைப்பூச திருவிழா சென்று அது குறித்து எழுத வேண்டும். உலகிலேயே மிகப்பெரிய அளவில் நடைபெறும் தைப்பூச திருவிழா, மலேசியா பத்து மலையில் நடைபெறுவது தான்.

சிங்கப்பூரிலேயே இருந்தும் இங்கே இது வரை செல்ல முடியாதது எனக்கு பெரிய குறை தான்.

அடுத்த தைப்பூச திருவிழா வரை சிங்கப்பூரில் இருந்தால் நிச்சயம் செல்ல வேண்டும் என்று இருக்கிறேன். பார்ப்போம் முடிகிறதா என்று. இருக்கும் போது அருமை தெரிவதில்லை புரியும் போது அருகில் இருப்பதில்லை 🙂 .

பிற்சேர்க்கை  2015 Feb – என்னால் தைப்பூசத்திற்கு செல்ல முடியவில்லை ஆனால், முடிந்த பிறகு செல்ல வாய்ப்புக் கிடைத்தது. மலேசியா பயணம் – பத்து மலை

அமெரிக்கா 

உலகின் கனவு தேசமான அமெரிக்கா சென்று வர வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. இங்கே செல்ல இன்னொரு வித்யாசமான முக்கியக் காரணமும் உண்டு. எனக்கு திரைப்படங்கள் மீதான Passion பற்றி அறிந்து இருப்பீர்கள்.

அமெரிக்காவில் உள்ள நீண்ட சாலைகள், அங்கே உள்ள காடுகள், வறட்சியான பகுதிகள், வீடு அமைப்புகள் இவற்றை திரைப்படங்களில் கண்டு இவற்றைச் சென்று பார்க்க வேண்டும் என்று ஆர்வம் அதிகம் ஆகி விட்டது.

மசினகுடி சென்றதையே வளைச்சு வளைச்சு எழுதினேன்… இங்கே போனால் பிரிச்சி மேஞ்சுட வேண்டியது தான் 🙂 .

அமெரிக்கா செல்வது ரொம்ப சிரமம் என்றே தோன்றுகிறது காரணம் பணம் தான் வேறு ஒன்றுமில்லை. இங்கே செல்வது கனவாகவே போய் விட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

அமெரிக்கா தவிர்த்து நம் இந்தியா அருகே செல்ல விரும்பும் நாடுகள் அந்தமான், இலங்கை (ஆமாம்! இலங்கையே தான்). இன்னும் சில நாடுகள் உள்ளது அவை பிறகு சேர்க்கப்படும்.

அடுத்தது இந்தியாவில் உள்ள இடங்களான ராஜஸ்தான் (“I am Kalam” படம் பார்த்த பிறகு ராஜஸ்தான் ஆசை வந்தது), அஜ்மீர் தர்கா, இமயமலை, ரிஷிகேஷ், வாரணாசி, காசி, காஷ்மீர் [உயிரோட திரும்பி வந்துடலாமா 🙂 ], வாகா எல்லை, கைலாஷ், பஞ்சாப் ஆகிய “வடா தோசா” இடங்களுக்குச் சென்று அது குறித்த பயணக் கட்டுரை எழுத வேண்டும்.

இந்தப் பயணம் ரொம்ப சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த டிஸ்கவரி சேனலில் வருகிறவர்கள் சுற்றுவார்களே.. அது மாதிரி. கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ!

இங்கே செல்வதற்காக இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற துணை விருப்பமும் உள்ளது. இந்தி தெரியாம இங்கே சென்றால், இந்த சப்பாத்தி பசங்க நம் தலையில் மிளகாயை தேய்ச்சுடுவாங்க.

இதற்காக மட்டுமல்ல இந்தியாவில் அதிகம் புழங்கும் ஒரு மொழியைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது தான்.

இந்தப் பயணத் துணைக்கு ஆர்வமுள்ள, என் எண்ணங்களுக்கு ஒத்துப்போகிற நபர் உடன் இருந்தால் தான் இந்தப் பயணம் சிறப்பாக இருக்க முடியும். ஏனென்றால் இது நம் ஊரில் உள்ள இடத்திற்கு போவது போல ஒரு நாளில் சென்று வரக்கூடிய இடங்கள் அல்ல.

குறைந்தது ஒரு வாரப் பயணம் இருக்கும்.

மாறுபட்ட கலாச்சாரம், வசதிகள் எப்படி இருக்கும் என்று தெரியாது, மொழிப் பிரச்சனை என்று இருக்கும் போது உடன் ஒரு துணை இருந்தால் நமக்கும் தைரியமாக இருக்கும் அதோடு ஒத்த கருத்துடையவராக இருக்கும் போது பயணம் சுவாரசியமாகவும் இருக்கும்.

எப்போதுமே நீண்ட தூர பயணம் என்றால் துணை இருப்பது நல்லது. கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம்.

இது குறித்து பலரிடம் பேசி இருக்கிறேன் ஆனால், விடுமுறை மற்றும் பல தனிப்பட்ட காரணங்களுக்காக வருவது சிரமம் என்று கூறி விட்டார்கள்.

இப்படி இருக்கும் போது எதேச்சையாக இது பற்றி என் நண்பன் சோம்ஸ் கிட்ட பேசிட்டு இருந்த போது இது போல பயணத்தில் ரொம்ப ஆர்வம் இருப்பது தெரிந்தது.

இருந்தும், இது போல என்னிடம் பலர் கூறி பின் அது பற்றி அவர்களுக்கு இறுதியில் ஆர்வம் குறைந்து விடுவதால், நானும் இதை மறந்து விட்டேன். பின்னர் சமீபத்தில் பேசிக்கொண்டு இருந்த போது அதே ஆர்வத்தில் இருந்ததால், ரொம்ப சந்தோசமாக இருந்தது.

இன்னொரு நண்பனுடன் சேர்ந்து மூவராக பயணம் செய்யலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். மூன்று பேருக்கு மேல் கிடையாது.

நம் தென் இந்தியாவில் இதுவரை செல்லாத இடங்கள் ஏராளமாக உள்ளன. இங்கெல்லாம் செல்ல வேண்டும். இந்தியாவில் உள்ள இடங்களுக்கு செல்ல முடியாததற்கு அடிப்படைப் பிரச்சனை விடுமுறை தான்.

சப்போர்ட்டில் இருப்பதால் அனுமதிக்கப்பட்ட விடுமுறை கூட எடுக்க முடிவதில்லை. என்ன கொடுமை சார்.

வட மாநிலங்களில் நிழல் படம் எடுக்க ஏராளமான பழமையான இடங்கள், மக்கள் இருக்கிறார்கள். நிழற்படம் எடுப்பவர்களுக்கு வட மாநிலம் விருப்பமான இடம் என்று  நிழற்படம் எடுக்கும் என் நண்பர் கூறினார். அது உண்மை தான் என்று நானும் கருதுகிறேன்.

எனக்கு நிழற்படம் எடுப்பதில் (பார்ப்பதில்!) ரொம்ப ஆர்வம் ஆனால், நான் எடுத்தால் அது மொக்கையாகவே வருகிறது 🙂 .

எனவே, நான் செல்லும் இடங்களை நிழற்படம் எடுப்பதற்காகவது இதில் கொஞ்சம் பயிற்சி எடுக்க வேண்டும் என்று இருக்கிறேன் ஆனால், அது அவ்வளவு சுலபலமல்ல. இதற்கு நிறைய உழைப்பும் பொறுமையும் தேவை, அது இந்த விசயத்தில் எனக்கு குறைவு தான். பார்ப்போம்.

நான் ரசித்த மற்றும் எடுத்த படங்களை இங்கே வைத்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம்.

உலகில் ரசிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்க, ஒரே மாதிரியான தின / இயந்திர வாழ்க்கையைத் தான் நாம் அனைவரும் வாழ்கிறோம். இதில் இருந்து விலகி புதிதாக செய்ய நாமும் முயற்சிப்பதில்லை.

குறைந்த பட்சம் எனக்கு இந்த Blog எழுதுவது ஒரு வகையில் திருப்தியை அளிக்கிறது. ஒரே மாதிரி எழுதாமல் அனைத்தையும் பகிர நினைக்கிறேன் இதுவே, எழுதுவதில் இருந்து என்னை சலிப்படையாமல் வைக்கிறது.

அதே போல Blog எழுதுவதை ஒரு Passion என்ற அளவிலே வைத்து இருப்பதால், அதற்கு மேல் ரொம்பப் போக விருப்பமில்லை. சென்றால், இதற்காக அதிக நேரம் செலவழிக்க வேண்டி வரும், அதற்குண்டான விலையை கொடுக்க வேண்டி வரும்.

என்னுடைய சுதந்திரத்தை தீர்மானிக்க வேண்டியது நான், என் எழுத்தல்ல. எனக்கு இந்த அளவான எழுத்தே திருப்தி அளிக்கிறது என்பதால், தற்போது இதுவே போதும்.

மேற்கூறியது எல்லாம் உடனே நடக்கும் விசயங்களல்ல ஆனால், நடக்கப் போகும் விஷயங்கள் .

இறுதியாக, காலம் எடுத்தாலும் என்னுடைய தளத்தை முக்கியமான தளமாக, ஒரு Professional Blog ஆக கொண்டு வர வேண்டும் என்பது தான் என் விருப்பம். இதன் காரணமாக என்னுடைய எழுத்து, Blog  facebook page முதற்கொண்டு கவனம் செலுத்தி வருகிறேன்.

எனவே இதை உங்களின் ஆதரவுடன் அடைவேன் என்பதில் முழு நம்பிக்கை இருக்கிறது.

Think BIG 🙂 .

குறிப்பு : இந்தப் பக்கத்தில் உள்ள தகவல்கள் நிரந்தரமானதல்ல… அவ்வப்போது சேர்க்கப்பட்டு / மாற்றப்பட்டு கொண்டே  இருக்கும்.

{ 10 comments… add one }
 • Rajasekaran February 4, 2014, 4:57 PM

  ராஜஸ்தானில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் 1 ஜெய்சல்மர் 2 உதய்பூர் 3 ஜெய்பூர் 4 மவுன்ட் அபு

 • kolangi February 5, 2014, 4:13 PM

  Evlo periya plana…. Super G

 • Ramesh February 15, 2014, 12:42 PM

  Naan அமெரிக்கா பாத்துட்டேன். Enga போனாலும் நம்ம இட்லி தோச போல வருமா

 • Fahim March 5, 2014, 8:00 PM

  இலங்கைக்கு வரும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.
  எப்போதும் எதுவும் நடக்கலாம். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு.
  ஏனென்றால், எங்கள் நாட்டின் நிலைமை அவ்வாறு. 🙂

 • Radika October 20, 2014, 10:18 AM

  வாருங்கள்……! இலங்கைக்கு…..அன்புடன் வரவேற்கிறேன்….ஒன்றுக்கும் அச்சம் கொள்ளத்தேவையில்லை….இங்கு பிசாசுகள் இல்லை…..

 • Arun March 5, 2015, 4:04 PM

  bro, romba suvaarasiyama iruku unga blogsa padika padika..
  naa unga blog post totaly 2 r 3 thaan padichuruken athuvey enaku romba pidichuruku..
  ayyo solla maranthuten naanum ThalaivarVeriyan thaan bro (mothalaye solirukanum)..
  unga post padichathuleynthu 80% <> nu purunjukitten..
  thanks bro..

 • someswaran October 6, 2016, 1:31 PM

  அப்படியே வடகிழக்கு மாநிலங்களையும் (அஸ்ஸாம், மேகாலாயா, அருணாசல்பிரதேசம், சிக்கிம், காங்டாக்) உங்க திட்டத்தில சேத்துகோங்க ஸார்.Wonderful places for Nature lovers. ஒரு மாற்று கருத்து உள்ளவரையும் கூட்டிட்டுப்போங்க அப்பத்தான் பயணம் சுவாரசியமாய் இருக்கும்.

 • someswaran October 14, 2016, 6:05 PM

  15 Amazing Places In India That Deserve More Travelers (http://traveltriangle.com/blog/places-in-india-that-deserve-more-travelers/)

 • Arun January 8, 2017, 8:33 PM

  சூப்பர் ஜி… சூப்பர் ஜி… இன்னிக்கு தான் முதல் தடவையா உங்க ப்ளாக் பக்கம் வர்றேன்… நல்ல variety ஆனா டாபிக்லாம் பேசிருக்கீங்க போல… இனிமே தான் படிக்கணும்… facebook லயும் follow போட்டிருக்கிறேன்… பயணம் எனக்கும் மிகவும் பிடித்த விஷயம்… உங்களுக்கு இருக்கிற அதே பிரச்சனை தான்… நண்பர்கள் யாரும் ஒத்து வர மாட்டாங்க… ஆனா என் குடும்பமே ரெடியா இருக்கிறதுனால ஓரளவுக்கு பயண பட்டுடிருக்கேன்..
  will keep in touch!!!

 • rajesh March 1, 2017, 6:19 AM

  படிக்க ரொம்ப அருமையா இருக்கு . வாழ்த்துக்கள் .

Leave a Comment