குழந்தைக்குப் பெயர் வைப்பது எளிதல்ல

20
குழந்தைக்குப் பெயர் வைப்பது எளிதல்ல

குழந்தைக்குப் பெயர் வைக்கும் வேலை ரொம்பக் கஷ்டம்.

எனக்கு இரண்டாவது, பெண் குழந்தை என்று முடிவே செய்து ஒரு பெயர் தேர்வு செய்து வைத்து இருந்தேன் ஆனால், கடவுள் கணக்கு வேறு ஆயிற்றே!

இரண்டாவது பையன். Image Credit

ஏற்கனவே வினய்க்கே (முதல் மகன்) பலவித ரணகளத்திற்கு பிறகு தான் தேர்வு ஆகியது. எனக்கும் என் மனைவிக்கும் ரத்தம் பார்க்காதது தான் பாக்கி 🙂 .

ஒரு வழியாக “யுவன்” என்று வைத்து விட்டோம்.

பெயர்க்கட்டுப்பாடு

என்னுடைய கட்டுப்பாடு என்னவென்றால், பெயர் தமிழில் மூன்று எழுத்தைத் தாண்டக் கூடாது, ஜ, ஜி, ஜ், ஷா, ஷ் போன்ற “வடா தோசா” மொழி சொற்கள் இடம்பெறக் கூடாது, A to H பெயர் வரக் கூடாது என்பவை.

மூன்று எழுத்து எதுக்கு என்றால், எப்படி வைத்தாலும் பாதிப் பெயரைத் தான் அழைக்கிறார்கள்.

அனைவரும் அழைக்கக் கொஞ்சம் எளிதாக இருக்க வேண்டும்.

எதிர்காலத்தில் வெளிநாட்டுப் பயணம் சாதாரணமானதாக இருக்கும். 

இதைப் போன்ற சமயங்களில் பெயர் சிரமமாக இருந்தால் கடுப்பு தான் வரும். வெளிநாட்டவர்களும் நமது பெயரைக் கொலை செய்து விடுவார்கள்.

ஒருமுறை விமான நிலையத்தில் சண்முகத்தை “ஷுண்முகம்” என்று அழைத்துக்கொண்டு இருந்தார்கள். அவரும் வேற யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று போகவே இல்லை 🙂 .

பெரிய பெயராக இருந்தால் அலுவலகங்களில் மின்னஞ்சல் பெரியதாக வரும், குறிப்பாகப் பாஸ்போர்ட்டில் பெரிய தலைவலியாக இருக்கும்.

இது போன்ற காரணங்களுக்காகத் தான், பெரிய பெயரைப் பரிந்துரைப்பதில்லை.

நியுமராலஜி, பயாலஜி போன்றவற்றில் நம்பிக்கை இல்லை, பிடிக்கவும் பிடிக்காது.

தமிழ்ப் பெயர் மாடர்னாகக் கிடைப்பது சிரமமாக இருக்கிறது, கிடைத்தது திருப்தி அளிப்பதில்லை. எத்தனையோ தமிழ் பெயர் தளங்களில் பார்வையிட்டுத் திருப்தி வரவில்லை.

தமிழ்ப் பற்று உண்டு அதற்காக, ரொம்ப செந்தமிழாகப் பெயர் வைக்கும் அளவுக்கு இல்லை.

நம்முடைய விருப்பத்தோடு, நாளை அவர்கள் எதிர்கொள்ளும் சில நடைமுறைப் பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியது உள்ளது.

நமது முடிவுக்கு ஆயிரம் சமாதானம் கூறினாலும், நாளை அதை எதிர் கொள்ளபோவது அவர்கள் தானே!  எனவே, சிலவற்றில் பிடிவாதம் பிடிப்பது சரியல்ல.

வினய்

வினய் [நான்கு வயது] கொஞ்சம் மெச்சூர்டாகத் தான் இருக்கிறான், நான் இவன் மாதிரி இருந்த போது ரொம்ப பிடிவாதமாகவும், குறும்பு செய்பவனாகவும் இருந்தேன்.

சொன்னால் புரிந்து கொள்வான், சில நேரங்களில் அவன் பேசுவதைக் கேட்டு, யாரோ சொல்லித் தருகிறார்களோ! என்று சந்தேகம் வந்து என் மனைவியிடம் கேட்பேன்.

“இல்லைங்க! அவனே தான் பேசுறான்” என்று கூறுவார்.

எது கூறினாலும் சிரிப்பான். ஏதாவது அவனைக் கலாயித்துட்டே இருப்பேன், இல்லைனா பொழுது போகாது. மனைவிக்கும் அவனுக்கும் நடந்த உரையாடல்.

மனைவி : வினய்! குட்டித்தம்பிய பார்த்துக்கோ! அம்மா வெளியே போயிட்டு வரேன்.

வினய் : அம்மா! அவனுக்குத் தான் யுவன்னு பேரு வச்சாச்சுல்ல அப்புறம் எதுக்கு குட்டி தம்பி னு கூப்பிடுறீங்க! யுவன்னு கூப்பிடுங்க.

மனைவி : !!??

குழந்தைக்குப் பெயர் வைப்பதில் பிரச்சனை வந்ததா? எப்படி சமாளித்தீர்கள்? 🙂 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

20 COMMENTS

  1. சில பெயர்கள் பிடித்துபோய் குறித்துவைத்துள்ளேன்.அதில் யுவன் என்ஆ பெயரும் உண்டு

  2. எதிர்காலத்தில் வெளிநாட்டுப் பயணம் என்பது சாதாரணமாகி விடும், இப்போதே அப்படித்தான் உள்ளது. இதைப் போன்ற சமயங்களில் பெயர் சிரமமாக இருந்தால் கடுப்பு தான் வரும். வெளிநாட்டவர்களும் நமது பெயரைக் கொலை செய்து விடுவார்கள். சிங்கப்பூர் விமான நிலையத்தில் சண்முகத்தை “ஷுண்முகம்” என்று அழைத்துக்கொண்டு இருந்தார்கள். அவரும் வேற யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று போகவே இல்லை . பெரிய பெயராக இருந்தால் அலுவலகங்களில் மின்னஞ்சல் பெரியதாக வரும், குறிப்பாக பாஸ்போர்ட் ல் பெரிய தலைவலியாக இருக்கும். இது போன்ற காரணங்களுக்காகத் தான், நான் பெரிய பெயரை பரிந்துரைப்பதில்லை. //

    அடேங்கப்பா இந்த மாதிரி G .D . நாயுடு கூட யோசிச்சிருக்க மாட்டார்

  3. குட்டி பையன் பேரு நல்லா இருக்கு!!!

    இந்த பெரிய பெயர்களால வருற பிரச்சினைகள் இருக்கே!!! அதை வைச்சு ஒரு பதிவே எழுதலாம். ஆ…ங்… அட ஒரு பதிவு எழுத ஒரு ஐடியா 🙂

  4. வாழ்த்துகள் கிரி. ஒரு வேளை எதிர்காலத்தில் பிரபல இசை அமைப்பாளர் போல வருவாரோ?

  5. பலவித ரணகளத்திற்கு பிறகு தான் தேர்வு ஆகியது. எனக்கும் என் மனைவிக்கும் ரத்தம் பார்க்காதது தான் பாக்கி

    ஹி ஹி

    குழந்தைகளுக்கு எனது மனபூர்வமான வாழ்த்துக்கள்

    எனக்கே சில நேரங்களில் “ரொம்ப” எழுதறமோ! என்று தோன்றுகிறது.

    அப்படிலாம் இல்லே கிரி நான் தங்களின் சினிமா விமர்சனம், மற்றும் அனுபவ பகிர்வுகள் கொசுறு செய்திகள் எனக்கு பிடித்தமானவை

  6. 2 நிமிடம் பேசினாலே அதிகம்.

    —————————————————————–
    என் கிட்ட பேசும்போது, குச்சி வச்சு என் வாயில குத்தி தான் பேச்சு வர வைக்கணும்னு சொல்லுவீங்க…………..ROFL …….சில பேரு அப்படிதான் கிரி . :ப

  7. எல்லாமே நல்லா இருக்கு தல ஆனா கொசுறு 4 கு எதிர்ப்பு சொல்லிடுறேன் ஏற்கனவே நீங்க எழுதுறது பத்தல நு சொல்லுற சங்கம் எங்களோடது (சங்கர் சார் சேர்த்துடுங்க)
    அதனால கொசுறு 4 பதில் இன்னும் நிறைய எழுதுங்க

    – அருண்

  8. // A to H பெயர் வரக்கூடாது//

    இது ஏன் சொல்லவேயில்லையே……………

    பரீட்சை பேப்பர் திருத்தும் போது மார்க் குறையும்ன்னா??? 🙂

  9. குழந்தைகளுக்கு வாழ்த்துகள்.. பகிர்வுகள்.. அருமை.. பாராட்டுக்கள்..

  10. //அவனுக்குத் தான் யுவன்னு பேரு வச்சாச்சுல்ல அப்புறம் எதுக்கு குட்டி தம்பி னு கூப்பிடுறீங்க! யுவன்னு கூப்பிடுங்க.//

    சரியாகதான் சொல்லியிருக்கிறார் வினய்:))!

    யுவன். அழகான பெயர்!

  11. எனக்கும் என் மனைவிக்கும் ரத்தம் பார்க்காதது தான் பாக்கி

    ————————————————————————–
    உங்க மனைவி உங்கள மாதிரி appearance ah ? இல்ல என்ன மாதிரி appearence ah ?
    பார்த்து multiple facture ஆகிட போகுது….:D

  12. இந்த காலத்து குழந்தைகள் மிகவும் IQ உடனும், குறும்பும், துடிப்புடனும் இருக்கிறார்கள்..அதில் வினய் விதிவிலக்கல்ல..உங்க பையன் வேற..சொல்லவா வேணும்..வாழ்த்துக்கள் குட்டி யுவனுக்கு..
    என் friendoda பையன் பெயரும் யுவன் தான்..
    நீங்க சொன்ன மாதிரி அதுவும் சுருங்கி யுவி ன்னு தான் கூப்பிடுறாங்க..hi hi ..
    பெயர் வெக்க நீங்க கொடுத்த விளக்கங்கள் நன்றாக இருந்தது.
    நீங்க நிறைய எழுதுங்க..கொசுறு,விமர்சனங்கள் எல்லாத்திலயும் புதுசா எதாச்சும் கத்துக்க முடியுது..bore கண்டிப்பா இல்லவே இல்ல..

  13. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @துளசிகோபால் உங்கள் ஆசிக்கும் மிக்க நன்றி.

    @சரவணன் நன்றி

    @ராஜேஷ் குழந்தைகள் எப்போதுமே அப்படித்தான். நீங்கள் குழந்தை அல்ல…. 😉

    @அருண் ரைட்டு 🙂 நீங்க ஒருத்தர் தான் இதை தொடர்ந்து சொல்லிட்டு இருக்கேங்க.. வேற யாரும் சொல்ற மாதிரி தெரியல 🙂

    @காத்தவராயன் சரி தான் 🙂 யாம் பெற்ற துன்பம் என் மகனும் பெற வேண்டாம் என்ற நல்ல எண்ணம் தான் 😉

    @தனபாலன் உங்கள் லொள்ளுக்கு அளவே இல்லையா!

    @ராஜேஷ் அவங்க என்னை மாதிரியும் இல்ல உங்கள மாதிரியும் இல்ல 🙂

    @அகிலா நன்றி. நீங்க கோபி தானே!

  14. yuvan nice name , intha குழந்தைக்கு பேர் வெக்கர நேம் method நான் futurela use பண்ணிகறேன் , உங்க மனைவி குழந்தை உரையாடல் ரொம்ப நல்லா இருக்கு, அடிகடி அப்டேட் பண்ணுங்க உங்க குழந்தை பற்றி 🙂

  15. @மஞ்சுளா முயற்சிக்கிறேன். சில நேரங்களில் அடிக்கடி கூறுவது படிப்பவர்களுக்கு சலிப்பை வரவழைக்கலாம் 🙂

  16. படிக்க சுவாரசியமாக உள்ளது ….
    இதுதான் என் முதல் கமன்ட் உங்கள் தளத்தில் பொதுவா நான் யாருக்கும் அவ்ளோ சீக்கிரத்தில் கமன்ட் எழுத மாட்டேன் படிச்சா திருப்தியா இருக்கணும் படிச்ச நாமளும் சந்தோசமா இருக்கணும் அப்படி எழுதுறவங்க களுக்கு மட்டும் தான் கமன்ட் எழுதி உர்சாசக படுத்துற மூடு வருது .. நீங்கள் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் என்றே கூறுவேன் இன்னும் பல அடுத்த அடுத்த கமன்ட் கலீல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!