தமிழகத்தில் நடந்த மிக மோசமான வன்முறைகளில் கள்ளக்குறிச்சி கலவரம் ஒன்றாகி உள்ளது. Image Credit
கள்ளக்குறிச்சி கலவரம்
இப்பள்ளியின் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளதாகச் சமூகத்தளங்களில் செய்திகள் வந்தன.
தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர் புகாரைக் கண்டுகொள்ளாத காவல்துறை மீது கோபத்தில் இருந்த மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட, அதில் சமூக விரோதிகள் நுழைந்து கலவரத்தை ஏற்படுத்தி விட்டனர்.
வன்முறை எதற்கும் தீர்வாகாது
அந்தப்பள்ளியின் மீது 1000 புகார் இருந்தாலும், தற்போது அனைத்தையும் அடித்து நொறுக்கி தள்ளியாச்சு. தற்போது அங்குப் படித்த மாணவர்கள் நிலை என்ன?
அவர்கள் எப்படிப் பள்ளிக்குச் செல்ல முடியும்? வகுப்புகள், பேருந்துகள் அனைத்தையும் கொளுத்தியாச்சு.
சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் உட்படப் பல்வேறு முக்கியக் கோப்புகள் தீக்கிரையாகி விட்டன. இனி இவற்றுக்கெல்லாம் என்ன செய்வது?
பள்ளியைத் திரும்பப் பழைய நிலைக்குக் கொண்டு வர இரு மாதங்கள் ஆகும் என்கிறார்கள்.
இந்த இரு மாதங்களும் இப்பள்ளியில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் என்ன செய்வார்கள்? எங்கே சென்று படிப்பார்கள்?
இரு வருடங்களாகக் கொரோனா காரணமாக இணைய வழியில் படித்துப் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்குத் திரும்பப் பழைய நிலைக்கே செல்ல வேண்டும்.
மாற்று ஏற்பாடுகள் செய்தாலும் அதனால் ஏற்படும் நடைமுறை சிக்கல்களுக்கு என்ன செய்வது? எவ்வளவு பேரின் தின வாழ்க்கை பாதிப்பாகிறது?
பல ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்திய பெற்றோர்கள் நிலையென்ன?
காவல்துறை
இவ்வளவு பெரிய கலவரத்தைச் சாவகாசமாக நடத்தியுள்ளார்கள் ஆனால், காவல்துறை தடுக்க முடியவில்லை! எப்படி ஏற்றுக்கொள்வது?
விசாரிக்கும் முன்பே தீர்ப்பைக் கூறுகிறார் சைலேந்திர பாபு.
இப்படியொரு கலவரம் நடக்கப்போகிறது என்றால், உளவுத்துறைக்குத் தெரியாமல் இருக்குமா?! தெரியவில்லை என்றால் யார் தவறு?
சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து இருந்தால், இக்கலவரத்தை தவிர்த்து இருக்கலாமே!
பேருந்தைக் கொளுத்தினால் கூட வேறு பேருந்தை வைத்துச் சமாளிக்க முடியும் ஆனால், வகுப்பு அறை, சான்றிதழ்கள் அனைத்தையும் நாசம் செய்து விட்டார்கள்.
மாணவர்கள் வகுப்புக்குச் சென்று படிப்பது எப்படி?
வன்முறையில் ஈடுபட்டவர்கள் அங்குப் படிக்கும் மாணவர்கள் நிலையிலிருந்து யோசித்து இருந்தால், இது போல நடந்து கொள்ளத் தோன்றியிருக்காது.
சமூகவிரோதிகள்
தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பொதுமக்கள் அல்ல, சமூக விரோதிகள் என்று கூறிய போது ரஜினியை திட்டியவர்கள், கிண்டலடித்தவர்கள் எத்தனை பேர்!
ஊடகங்கள் ஒவ்வொன்றும் நாள் முழுக்க ரஜினியை எப்படிக் கிழித்தன?
சமூகவிரோதிகள் என்று இன்று கூறினால் காறி துப்புவார்கள் என்று கலவரக்காரர்கள் என்று தற்போது கூறிக்கொண்டுள்ளார்கள்.
வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று ரஜினி கூறிய போது வன்மத்துடன் திட்டிய வாய்கள் தான் இன்று கலவரம் செய்தவர்களை விமர்சித்துக்கொண்டு உள்ளன.
இன்றைக்குக் கலவரத்தில் ஈடுபட்டது பொதுமக்களா? சமூக விரோதிகளா?
வயதானவர்கள் வீட்டிலிருந்து கொள்ளுங்கள் என்று ரஜினியை அன்று நக்கலடித்து ட்வீட் செய்த உதயநிதி எங்கே போனார்?
அன்றைக்குப் பொதுமக்களாக இருந்தவர்கள் இன்றைக்குக் கலவரக்காரர்கள் ஆகி விட்டனரா?! வன்முறை யார் செய்தாலும் தவறு தானே.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தனி நபர் சம்பந்தப்பட்டதல்ல, பல ஆயிரம் மாணவர்கள் படிப்புச் சம்பந்தப்பட்டது.
மாணவியின் தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டனையை வழங்க வேண்டும்.
மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
சட்டத்தைப் பொதுமக்களே கையில் எடுத்துக்கொள்வது தவறான செயல். வன்முறையை எந்த நிலையிலும் எந்தக் காரணத்துக்காகவும் ஆதரிக்காதீர்கள்.
அடுத்தவருக்கு நடக்கும் போது ஆயிரம் நியாயங்கள் கூறலாம். நாளை நமக்கே நடக்கும் போது தான் அதன் வலி புரியும்.
தொடர்புடைய கட்டுரைகள்
உச்சநீதிமன்ற நீதிபதி என்ன சொல்ல வருகிறார்?
இந்த செய்திகளை பார்த்த போது மிகவும் கவலை அடைந்தேன்..
==============================================
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தனி நபர் சம்பந்தப்பட்டதல்ல, பல ஆயிரம் மாணவர்கள் படிப்புச் சம்பந்தப்பட்டது.
==============================================
மாணவியின் தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டனையை வழங்க வேண்டும்.
==============================================
மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
==============================================
சட்டத்தைப் பொதுமக்களே கையில் எடுத்துக்கொள்வது தவறான செயல். வன்முறையை எந்த நிலையிலும் எந்தக் காரணத்துக்காகவும் ஆதரிக்காதீர்கள்.
==============================================
அடுத்தவருக்கு நடக்கும் போது ஆயிரம் நியாயங்கள் கூறலாம். நாளை நமக்கே நடக்கும் போது தான் அதன் வலி புரியும்.
==============================================
மிகவும் சரியாக சொல்லி இருக்கீங்க கிரி.. உங்கள் கருத்துடன் ஒத்து போகிறேன்.. அரசாங்கம் இதில் எடுக்கும் நடவடிக்கை, எதிர்காலத்தில் இன்னொரு முறை இது போல ஒரு நிகழ்வை பற்றி எந்த சமூக விரோதிகளும் யோசிக்கவே கூடாது.. சரியான முறையில் விசாரணை செய்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும்..
@யாசின்
குற்றங்களிலிருந்து குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். நீதிமன்றத்திலும் சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி ஏமாற்றி தப்பித்து விடுகிறார்கள்.
சட்டங்களைப் புதுப்பிக்க வேண்டும்.