அக்னிபத் | எதிர்ப்புக்கு வழி பொதுச்சொத்து அழிப்பா?

5
அக்னிபாத்

சாதி, மத, கட்சி மோதல்கள், அக்னிபத் போன்ற அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என்றால் பொதுச் சொத்தை அழிக்கும் போக்கு தொடர்வது எரிச்சலை வரவழைக்கிறது. Image Credit

அக்னிபத்

இத்திட்டம் அவசரகதியில் எடுக்கப்பட்ட முடிவல்ல. ஓய்வு பெற்ற பல்வேறு அதிகாரிகள் ஆலோசனை, மற்ற தகுதி வாய்ந்த அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலேயே பல ஆண்டுகள் பரிசீலனைகளுக்குப் பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நான்கு வருட பயிற்சிக்குப் பிறகு தகுதி அடிப்படையில் தேர்வாகவில்லையென்றாலும், கற்ற அனுபவம், ஒழுங்கு ஆகியவை நிச்சயம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.

அதோடு தனியார் நிறுவனங்களும் இப்பயிற்சி முடித்து வரும் நபர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் முன்னுரிமை அளிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன காரணம், இவர்கள் தலைமை பண்புக்குச் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.

பிரிவினைவாதிகளின் மூளைச்சலவைகளுக்கு ஆட்படாமல், நாட்டின் மீது பற்றாக இருக்கும் இளம் தலைமுறையை உருவாக்க இத்திட்டம் உதவுகிறது.

எதிர்ப்புக்கு வழி பொதுச்சொத்து அழிப்பா?

தனிப்பட்ட நபர் மீதோ, சாதி மத மோதல்களோ, அரசு மீதான கோபமோ! இவர்களுக்கு யார் பொதுச்சொத்தை அழிக்கும் உரிமையைக் கொடுத்தது?

மாற்றுக்கருத்து, எதிர்ப்பு இருந்தால் அதை அறவழியில் காண்பிக்காமல், சட்ட ரீதியில் முயற்சிக்காமல், கல் எறிவது, பேருந்து ரயிலைக் கொளுத்துவது, தனிநபர் வாகனத்தை எரிப்பது எப்படி நியாயமாகும்?

இவர்கள் வாகனத்தை இன்னொருவர் கொளுத்தினால் ஏற்றுக்கொள்வார்களா?

பொதுச்சொத்தை அழிப்பது நம் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் தானே! நம் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டதை நாமே அழிப்பது முட்டாள்தனம் இல்லையா?!

அக்னிபத் கலவரத்தில் ரயிலை எரித்தது, ரயில் நிலையத்தைச் சேதப்படுத்தியதில் ₹200 கோடி அளவுக்கு அரசுக்கு / ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

கலவரத்தில் ஈடுபட்டு இது போன்ற கீழ்த்தரமான வேலைகளைச் செய்பவர்களா நாளை நாட்டைக் காக்கப் போகிறார்கள்?!

எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல், பொதுச்சொத்தை அழிப்பவர்கள் எவ்வாறு நாட்டைக் காக்கும் பணியில் நேர்மையாக நடந்து கொள்வார்கள்?

இவர்கள் கையில் அவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுப்பது சரியா? இராணுவத்தில் நாளை இது போல மாற்றுக் கருத்து என்றால், இதே போலக் கலவரத்தில் ஈடுபட மாட்டார்கள் என்று என்ன உறுதி?

எதிர்ப்பைத் தெரிவிக்க உரிமையுண்டு ஆனால், அதற்கு வன்முறை தீர்வல்ல.

சாலையை மறித்துப் போராடிய ஒருவரை நிருபர் கேள்வி கேட்டால், போராடுபவருக்கு அக்னிபத் என்றால் என்னவென்றே தெரியலை!

ஏன் போராட்டம் என்றால், ‘போராட வரக்கூறினார்கள் போராடினேன்‘. இவ்வளவு தான் பிரச்சனை குறித்த இவர்கள் அறிவு, புரிதல்.

பொறுப்பற்ற எதிர்க்கட்சிகள்

மத்திய அரசுத் திட்டம் என்றாலே என்ன ஏது என்று கூடப் பார்க்காமல் தமிழக அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் இன்னும் எதிர்க்கட்சி மனநிலையிலேயே உள்ளார்.

எதிர்ப்பு தெரிவித்த கட்சிகளுக்கு என்ன பிரச்சனை என்றே புரிந்து இருக்காது ஆனால், மோடி அரசு அறிவித்த திட்டம் என்பதற்காகவே எதிர்ப்பு.

டாஸ்மாக், கஞ்சா மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களைக் கெடுப்பதை விடவா அக்னிபத் திட்டம் இளைஞர்களின் வாழ்க்கையில் கேடு விளைவித்து விடப்போகிறது!

நேஷனல் ஹெரால்டு சர்ச்சையைத் திசை திருப்பக் காங்கிரஸ் இச்சர்ச்சையை அரசியல் செய்து போராட்டக்காரர்களை ஊக்குவித்து வருகிறது.

இவர்கள் எல்லாம் ஒழிந்தால் தான் நாடு உருப்படும்.

கடுமையான நடவடிக்கை தேவை

ஒரு சில வட மாநிலங்களில் செய்தது போலச் சேதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான இழப்பீட்டையும் வன்முறையாளர்களிடமிருந்தே பெற வேண்டும்.

வன்முறையில் ஈடுபடுபவர்களை, யோகி ஆதித்யநாத் போலச் சுளுக்கு எடுக்க வேண்டும். இனி ஒருமுறை வன்முறை செய்வதை யோசித்துக்கூடப் பார்க்கக் கூடாது.

பொதுச்சொத்தை, தனி நபரின் உடமைக்கு, உயிருக்கு இழப்பு ஏற்படுத்துபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இதில் கருணையே காட்டக் கூடாது.

கோபத்தில், உணர்ச்சி மிகுதியில் இவர்கள் வீட்டை, வாகனங்களைக் கொளுத்தி விடுவார்களா? அடுத்தவரின் சொத்து என்பதால் தானே இந்த அலட்சியம், திமிர்.

கலவரத்தில் ஈடுபட்டு பொதுச்சொத்தை அழித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்ற பயம் இருந்தாலே இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடத் துணிய மாட்டார்கள்.

வன்முறையில் உங்களின் குடும்பத்தினரோ, வாகனமோ, வீடோ பாதிக்கப்பட்டு இருந்தால் ஆதரிப்பீர்களா? என்பதை வன்முறை போராட்டத்துக்கு முட்டுக்கொடுப்பவர்கள், மனசாட்சியுடன் கேட்டுக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய கட்டுரை

சிங்கப்பூர் கலவரம் | தமிழக ஊடகங்களும் அரசியலும்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. அக்னிபத் – ஒரு கருடப் பார்வை!

    திட்டம்:
    ராணுவத்தில் சேர்ந்தால் 21 வருட சர்வீஸ், ப்ளஸ் ரிடையர்மெண்ட் பயன்கள், பென்சன், ex servicemen benefits.

    இதுதான் இத்தனை வருடங்களாக இருந்த நடைமுறை.

    இந்த நடைமுறையில் பென்ஷன் உட்பட, post retirement benefits அரசுக்கு, எந்த அரசாக இருந்தாலும் அதற்கு மிகப் பெரும் சுமை. அதை சமாளிக்க மக்கள் உபயோகிக்கும் பொருட்கள் மீதான வரியை உயர்த்த வேண்டி வரும்!

    இந்த நிலையில் மத்திய அரசு இந்த பொருளாதாரச் சுமையை 75% வரை குறைக்கக் கொண்டு வந்த திட்டம் அக்னிபத். இதை அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லவில்லை எனினும் இதுதான் அதன் உள்ளர்த்தம்.

    இந்த திட்டம் மூலம் 25% பேர்கள் நிரந்தரப் பணியாளர்களாக ஏற்கப் படுவார்கள். 75% பேர்கள் 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு, காண்ட்ராக்ட் முறையில் பணி அமர்த்தப் பட்டு, சம்பளம், படி, மற்றும் நாலாம் வருட முடிவில் ஒரு முதிர்வுத் தொகை, பணியில் இருக்கும்போதே அவர்களுக்கு விருப்பமான படிப்பு, படித்து வெளியேறியதும் சொந்தமாக தொழில் தொடங்க கடன்…. மத்திய அரசின் வேலைக்கு 3% உத்திரவாத முன்னுரிமை!

    இது அத்தனையும் நாலு வருடம் பணி செய்தவர்களுக்கு.

    இனி ஏன் போராட்டம் என்பது பற்றிப் பார்ப்போம்!

    – ‘உனக்கு வயசானா என்ன? உன்னை வெச்சு ஔவையார் படம் எடுக்கிறேன்!’ என்று நாகேஷ் சொல்வது போல, அவர்களை 21 வருடமும் பணியில் இருத்தி, முதுமையானதும் அனைத்து பண உதவிகளும் தந்து, பென்ஷன் தந்து, exserviceman வசதிகளும் வேண்டுமாம்.

    ‘நான்கு வருடங்களுக்குப் பின் எங்களது எதிர்காலம் கவலைக்குரியதாக ஆகி விடும்!’

    அதை விடுங்க! போராடும் இந்தக் கூட்டம் எது?

  2. எங்கெங்கு எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ளதோ அங்கு.

    போராட்டக்காரர்கள் அனைவரும் SFI கம்யூனிஸ்ட் இயக்கம். இப்போது பின்புலம் யாரென்று தெரிந்திருக்கும். தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காத கும்பல்.

    திட்டத்தில் சேர்ந்து விட்டவன் போராடினால் கூட அர்த்தம் உள்ளது. சம்பந்தமே இல்லாதவன் ரயிலைக் கொளுத்தறான். இதை ஊதிப் பெருசாக்கும் ஒரு நாசகாரக் கும்பல். அவர்களுக்கு இடப்பட்ட டூல்கிட் மாநிலம் மாநிலமாக இந்த விஷ விதையை விதைத்துப் போராட்டத்தை வீரியப் படுத்த வேண்டும்.

    சரிடா! உன் வாழ்க்கை சீராகாது என ஏன் கருதுகிறாய்?

    ‘என்னால் படிக்க முடியாது. பாஸ் பண்ண முடியாது. ஆனால் எனக்கு அரசு வேலை வேணும். அதுவும் நிரந்தர வேலை. வருஷா வருஷம் இன்க்ரிமெண்ட் வேணும். பணி முடிந்ததும் மொத்தப் பணம் வேணும். பென்சன் வேணும். நான் பென்ஷன் வாங்கிச் செத்தால் என் மனைவிக்கு குடும்பப் பென்ஷன் கொடுக்க வேணும்!… தவிர மிலிட்டரி கேன்டீனில் சகாய விலையில் சாராயம் முதல், ஃப்ரிட்ஜ், மருந்து, குக்கர் போன்றவை மானிய விலையில் கொடுக்க வேண்டும்!’

    சரி… வெண்டைக்காயை உடைச்சு வாங்கிற உனக்கு இந்த வேலை செய்ய தகுதி, திறமை இருக்கா?

    ‘அதெல்லாம் பேசக் கூடாது! நாலு வருஷத்திலே நான் இஞ்சினியருக்கு படிச்சு பெரிய ஆளாப் போயிருப்பேன்.’

    அப்போ எதுக்குடா ராணுவத்திலே படிப்பும் இல்லாதவனும், நாளைய அப்துல் கலாமும் சேரத் துடிக்கிறீங்க? ராணுவத்திலே சேராமலேயே சர் சி பி ராமசாமி அய்யராவோ, அய்யா அப்துல் கலாமாகவோ நேரடியாக மாறிட்டுப் போயேன்? பொது மக்கள் வரியைக் கொண்டு ஏன் நீ உல்லாச வாழ்க்கை வாழ நினைக்கிறே?

    போராடும் பீகார்க்காரனில் படித்தவன் ஒருத்தனையாவது சென்னையிலே பார்த்திருக்கீங்களா? எந்த பீகார் டாக்டரையோ, இஞ்சினியரையோ, சார்ட்டட் அக்கௌண்டண்டையோ நீங்கள் சந்தித்தது உண்டா?

    10 ஆம் கிளாஸ் பரிட்சையை ஜன்னல் வழியே பிட் வாங்கி பரிட்சை எழுதினவன்தான் இப்போ போராடறான். ரயிலை எரிக்கிறான்…

    இப்போது சொல்லுங்கள்… உங்கள் ராணுவம் யார் கையில் இருக்க வேண்டும் என்று!

    இப்போது சொல்லுங்கள் தகுதியற்றவனின் போராட்டங்களை நீங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் என்று.

    உங்கள் வரிச்சுமையை நீங்களே கூடுதலாக்கிக் கொள்வீர்களா?

    இங்கே தமிழ்நாட்டில் இஞ்சினியரிங் படிச்சுட்டு பத்தாயிரம் பதினைந்தாயிரம் ரூபாய் வேலைக்கு அல்லாடறான்.

    பீடா வாயனிடம் பானிபூரி திங்கலாம். துப்பாக்கியைத் தரக்கூடாது!

    படிச்சு பட்டம் வாங்கினவன் போராடறதில்லை… போலி சர்ட்டிஃபிகேட், ஜன்னலில் பிட், புத்தகம் காப்பி இவனுக்கு வேறென்ன வரும்? போலி துப்பாக்கி செய்யத் தெரியும்.

    போலி பட்டங்களைத் தந்து MFL மற்றும் ஐசிஎஃப்பில் வேலைக்குச் சேர்ந்தானுங்க… போலி நீட் சர்ட்டிஃபிகேட் செஞ்சு தந்தானுங்க…. தமிழ்நாட்டில் படித்ததாகவே போலிச் சான்றிதழ் தந்து வேலைக்குச் சேர்ந்தவர்கள் 456 பேரை கொஞ்ச நாள் முன் தமிழக அரசு பணியிலிருந்து நீக்கியது கவனம் இருக்கட்டும். இவனுங்களா ராணுவத்திலே சேர்ந்து நம்மைக் காப்பாத்தப் போறானுங்க?

    இந்த நாட்டின் அழிவு கம்யூ தொழிற்சங்கங்களாலும், பீகாரிகளால் மட்டுமே இருக்கும். இந்தப் போராட்டங்களின் பின் துணை வீணாய்ப் போன கம்யூ மற்றும் அரசை விமர்சிப்பவர்கள்தான்.

    தமிழக அரசோ, கேரள அரசோ, ஆந்திர அரசோ ஏன் அக்னிபத்தை எதிர்க்கவில்லை?

    நாளை இதே டெம்ப்ளேட்டை வைத்து தங்களது செலவையும் குறைக்க முடியும் என நம்புவதால்…

    இந்தத் திட்டத்தால் பலன் என்ன என்பதை விட, கண்ணை மூடிக் கொண்டு மோடியை எதிர் என்பதே… அந்தக் கூட்டத்தில் முதல் ஆள் கெஜ்ரிவால்….

    ஒரு அற்புதமான திட்டத்தை கண்ணை மூடிக் கொண்டு தகுதியற்றவன் எதிர்ப்பதை நீங்கள் ஆதரிப்பீர்களா?

    டிமி!

  3. திட்டத்தின் முழு புரிதல் என்னவென்று தெரியாமலே போராட்டம் மேற்கொள்பவர்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை??? நாளுக்கு நாள் போராட்டத்தின் வீரியம் அதிகமாகி கொண்டிருக்கிறது.. மத்திய அரசு பொது சொத்துக்கு சேதாரமாக்குபவர்களை தன் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.. (எதிர்ப்பைத் தெரிவிக்க உரிமையுண்டு ஆனால், அதற்கு வன்முறை தீர்வல்ல..) சரியான கூற்று..

    பொதுச்சொத்தை, தனி நபரின் உடமைக்கு, உயிருக்கு இழப்பு ஏற்படுத்துபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இதில் கருணையே காட்டக் கூடாது. – சட்டங்கள் கடுமையாக்க படும் போது தான் தவறு செய்யவே யோசிப்பார்கள்..

    டாஸ்மாக், கஞ்சா மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களைக் கெடுப்பதை விடவா அக்னிபத் திட்டம் இளைஞர்களின் வாழ்க்கையில் கேடு விளைவித்து விடப்போகிறது – உண்மை கிரி.. எதை ஒழிக்க வேண்டுமோ அதை பற்றி எந்த அரசும் யோசிக்காமலே காலத்தை கடத்தி வருகிறது..

    கலவரத்தில் ஈடுபட்டு பொதுச்சொத்தை அழித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்ற பயம் இருந்தாலே இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடத் துணிய மாட்டார்கள். – இந்த திட்டம் மட்டும் அல்ல, எதிர்காலத்தில் அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களுக்கும் ஏதேனும் வகையில் எதிர்ப்பு இருக்கும்.. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை அடக்கும் வண்ணம் சட்டம் கடுமையாக்க பட வேண்டும்..

  4. @ஹரிஷ் நன்றி

    @ஸ்ரீனிவாசன் தகவலுக்கு நன்றி. அக்னிபத் மிகச்சிறந்த திட்டம்.

    தற்போது 55000+ பேர் பதிவு செய்துள்ளதாக செய்திகளில் பார்த்தேன். போராடுபவர்கள் வாழ்க்கையை வீணடிக்கட்டும், இணைபவர்கள் வாழ்க்கை செழிக்கட்டும்.

    @யாசின்

    “திட்டத்தின் முழு புரிதல் என்னவென்று தெரியாமலே போராட்டம் மேற்கொள்பவர்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை?”

    இது தான் பலரின் நிலை. அவன் போராடுறான்.. அதனால நானும் போராடுறேன்.

    வேண்டும் என்ற பிரச்சனையைக் கிளப்புபவர்கள் பலரின் வாழ்க்கை அழிய காரணமாக உள்ளார்கள். உணர்ந்தவர்கள் தப்பிக்கிறார்கள், உணராதவர்கள் வாழ்க்கையை சீரழித்துக்கொள்கிறார்கள்.

    “எதை ஒழிக்க வேண்டுமோ அதை பற்றி எந்த அரசும் யோசிக்காமலே காலத்தை கடத்தி வருகிறது..”

    தமிழகத்தில் தினமும் கஞ்சா குடியால் ஏராளமான குற்றங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன. செய்திகளில் பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    கடைகளில் மிரட்டுவது, வெட்டுவது, பணத்தை பறிப்பது, பாலியல் குற்றங்கள் என்று இதனால் அதிகரித்து வருகிறது.

    இதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்காமல் அக்னிபத் திட்டத்தை எதிர்த்துக்கொண்டுள்ளார்கள்.

    “இந்த திட்டம் மட்டும் அல்ல, எதிர்காலத்தில் அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களுக்கும் ஏதேனும் வகையில் எதிர்ப்பு இருக்கும்.. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை அடக்கும் வண்ணம் சட்டம் கடுமையாக்க பட வேண்டும்..”

    சமீபமாக எந்தத் திட்டம் அறிவித்தாலும் போராட்டம் அறிவிக்கிறார்கள். வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.

    கடுமையான நடவடிக்கைகள் மட்டுமே இதை தடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here