ரஜினிக்கு ரசிகனாக இருப்பதில் என்ன தவறு?

63
ரஜினிக்கு ரசிகனாக இருப்பதில்

விமர்சனங்களைப் பற்றி என்றும் கவலைப்படாமல் ஒதுக்கித் தள்ளும் குறிப்பிடத்தக்கவர்களுள் எனக்கு முன்மாதிரி என்றால் அது ரஜினி தான். Image Credit

ரஜினி

பதிவுலகம் வந்த பிறகு தான் விமர்சனங்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது,

முதலில் மன உளைச்சலில் இருந்தாலும் பின் கிடைத்த பல அனுபவங்கள் என்னைப் பக்குவப்படுத்தியது.

எப்போதுமே பிரச்சனைகளைக் கண்டு துவளாமல் அதில் இருந்தே பாடங்கள் கற்றுக்கொள்கிறேன்.

இதில் எப்போதும் என்னுடன் வருவது ரஜினியும் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளும் மற்றும் விமர்சனங்களும் தான்.

முன் மாதிரி

பொதுவாக அனைவரும் உங்களுக்கு முன்மாதிரியாக யாரை நினைக்கிறீர்கள்? என்றால் அப்துல் கலாம் போன்ற ஒருவரையோ பல சாதனைகள் புரிந்த ஒருவரையோ குறிப்பிடுவார்கள் ஆனால், யாரும் நடிகரைக் குறிப்பிடமாட்டார்கள்.

காரணம் பலருக்கு நடிகன் என்றாலே ஒரு இளக்காரமான எண்ணம் தான், அதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

ஒரு நடிகனுக்கு ரசிகன் என்றாலே என்னவோ தீண்டத் தகாத செயலைச் செய்ததை போலப் பார்க்கப்படுகிறது அல்லது நடிகனுக்கு ரசிகனாக இல்லாமல் இருப்பது அறிவாளித்தனமாக பார்க்கப்படுகிறது.

அதிலும் ரஜினியை போல மசாலா பட நடிகர் என்றால் சொல்லவே தேவையில்லை!

ரசிகன் என்ற சொல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் வைத்து இருக்கிறார்கள் இதுவே பலரின் குழப்பத்திற்கு காரணம்.

ரசிகன் என்றாலே அவன் ஊதாரித்தனமாக இருப்பான் என்றே பலரும் அர்த்தம் கொண்டுள்ளார்கள்.

இப்படியொரு எண்ணம் கொண்டுள்ளவர்களுக்கு எப்போதும் ரசிகன் என்பவன் தவறாகத்தான் தெரிவான்.

பெரும்பான்மை அனைவரையும் உள்ளடிக்கியது அல்ல

பெரும்பான்மையானவர்கள் அவ்வாறு நடந்து கொள்வதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பெரும்பான்மை என்பது அதிகமாக இருக்கலாம் ஆனால் அனைவரையும் உள்ளடக்கியது அல்ல என்பதை புரிந்து கொண்டால் நல்லது.

ரசிகன் என்றாலும் என்னுடைய குடும்ப, அலுவலக கடமைகளை நான் சரிவரவே செய்து வருகிறேன், உடன் ரஜினியையும் ஒரு ரசிகனாக ரசிக்கிறேன்.

இதில் என்ன தவறு?

இதில் ரசிகன் என்ற முறையில் எந்த விதத்தில் மற்றவர்களிடத்திலிருந்து குறைந்து விடுகிறேன்! அல்லது என்னைப் போல இருப்பவர்கள் குறைந்து விடுகிறார்கள்.

ரஜினி என்றாலே உடன் பல விமர்சனங்கள் வரும் அவர் அப்படி இப்படி என்று.

தவறு செய்யாதவர்கள் யார்?

இந்த உலகில் 100% உண்மையானவர்கள், தவறு செய்யாதவர்கள் யார் என்று கூற முடியுமா?

தவறே செய்யாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா? அனைவரையும் திருப்தி படுத்த எவராலும் முடியுமா? இது கடவுளால் கூட முடியாது.

அப்படி இருக்கும் போது ரஜினி என்ன செய்து விட முடியும்?

அவரவர் வாழும் சூழ்நிலைக்கேற்ப அவரவர் தவறுகள் நடக்கின்றன.

நாம் தவறு செய்யவில்லை என்று கருதும் பல விஷயங்கள் நமக்கு கீழே உள்ளவர்களுக்கு பெரும் தவறாக தெரியலாம், தெரியும்.

பிரபலமாக இருப்பவர்கள் செய்யும் தவறு அதிலும் குறிப்பாக ரஜினியும் செய்யும் அனைத்தும் காரியங்களும் ஊடகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக்கப்படுகின்றன / மிகைப்படுத்தி காட்டப்படுகின்றன.

ஏற்றுக்கொண்டதாக ஆகி விடுமா?

ரஜினியிடமும் பல தவறுகள் இருக்கும், இதையே ரஜினியே மறுக்க மாட்டார் மறுத்ததில்லை மறுக்கவும் முடியாது.

அதற்காக ரசிகன் என்பதால் அவரின் அனைத்து செயல்களையும் ஏற்றுக்கொண்டதாக ஆகி விடுமா?

நமக்கு ஏற்புடைய, நமக்கு சரி என்று படுகின்ற செயலைக் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறோம் மற்றவற்றை ஒதுக்கி விடுகிறோம்.

நாம் ஒருவருக்கு நண்பர் என்பதாலே அவர் என்ன செய்தாலும் சரி என்று ஏற்றுக்கொள்கிறோமா! இல்லையே!

ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கிவிட்டு நட்புடன் தானே இருக்கிறோம்.

அதே போல ரசிகன் என்பதால் பிடிக்காததை ஒதுக்கி விட்டு நமக்கு பிடித்த செயல்களை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு!

இதில் என்ன கேவலம் இருக்கிறது….இப்படி நினைப்பவர்கள் எண்ணம் தான் கேவலமாக உள்ளது.

பலர் ரசிகன் என்ற பெயரில் கேவலமாக நடந்து கொள்வதால் அனைவரும் அப்படித்தான் என்று நினைத்தால்.. அது யார் தவறு!

என்னைப் போல இருப்பவர்கள் தவறா! அல்லது அனைத்தையும் ஒரே மாதிரிப் பார்ப்பவர்கள் தவறா!

ரஜினியின் பெருந்தன்மை

நான் ரஜினிக்கு ரசிகன் என்று சொல்வதில் எனக்கு எந்த வித வருத்தமோ அவமானமோ தகுதிக்குறைவோ எதுவுமில்லை, இப்படிக்கூறுவதையே தவறாக நினைக்கிறேன்.

ரஜினியை ரஜினியாக மட்டுமே ரசிக்கிறேன் மற்றும் பொறுமையையும் யாரையும் குறை கூறாத பழக்கத்தையும் ரஜினியிடமே கற்றுக்கொண்டேன்.

இதுவரை ரஜினியை எத்தனையோ பேர் கேவலமாக விமர்சித்துள்ளார்கள் விமர்சித்துக்கொண்டுள்ளார்கள் நடிகர்கள் உட்பட.

ஒருமுறையாவது ரஜினி அதற்கு திரும்ப அசிங்கமாக பதில் கூறி இருக்கிறாரா! சொல்லப்போனால் இதைப் போன்ற விமர்சனங்களை ஒதுக்கித் தள்ளிவிடுகிறார் என்பதே உண்மை.

தன்னை திட்டியவர்களிடம் கூடப் பெருந்தன்மையாகவே நடந்து கொண்டுள்ளார்.

தனக்கு ஒரு விஷயம், திரைப்படம், செயல் பிடித்து இருந்தால் மனம் விட்டுப் பாராட்டுவதில் ரஜினிக்கு நிகர் ரஜினியே.

ரஜினி மட்டும் சரியாக இருக்க வேண்டுமா?

ரஜினி ஒரு நடிகன் என்பதால் பிரபலம் என்பதால் அவர் அனைத்து விசயங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.

அவரைக் கேள்வி கேட்பவர்கள் எவ்வளவு பேர் நேர்மையாக இருக்கிறார்கள்?

நாம் சரியாக இருந்தால் தானே அடுத்தவரைக் கேள்வி கேட்பதில் நியாயம் இருக்க முடியும்.

விமர்சனங்கள்

முன்பெல்லாம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள என்னால் முடியாது அல்லது அதைத் தாங்கக்கூடிய அளவிற்கு மனது பக்குவப்படவில்லை (இப்பவும் ஓரளவு தான்).

ஆனால் ரஜினிக்கு நேர்ந்த அவமானங்களைப் பார்த்து இவர் எப்படி உயிரோடு இருக்கிறார் என்று ஆச்சர்யப்பட்டு போனேன்!

குசேலன் சமயத்தில் இவரைக் காய்ச்சிய மாதிரி யாரும் எவரையும் காய்ச்சி எடுத்து இருக்கமாட்டார்கள்.

இதே வேறு ஒருவராக இருந்தால் விமர்சித்தவர்களை பற்றி எதிர் பேட்டி கொடுத்து இருப்பார் மற்றும் மற்றவரின் மேல் பழியை போட்டுத் தப்பித்து இருப்பார்.

இது எதையும் செய்யாமல் அனைத்தையும் அமைதியாக ஏற்றுக்கொண்டு இந்தப் பிரச்னையைக் கடந்து வந்தார்.

இந்த ஒரு விஷயம் ரஜினிக்கு அனுபவத்தைக் கொடுத்ததோ இல்லையோ! எனக்கு அதிகளவில் மன தைரியத்தை கொடுத்தது.

ரஜினி ரசிகனுக்கு மட்டும் ஒரு நியாயமா?

ரஜினி ரசிகன் என்பதால் அவர் செய்யும் அனைத்து செயல்களையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

அப்படி செய்கிறவர்கள் இருக்கிறார்கள் மறுக்கவில்லை அவர்கள் அரசியல், எழுத்து, விளையாட்டு என்று எங்கும் வியாபித்து இருப்பார்கள் அது மனித இயல்பு.

கலைஞர் ஜெ செய்வது அனைத்தும் சரி என்று அவர்களது கட்சிக்காரர்கள் வாதிடுவதில்லையா!

சாரு ஜெயமோகன் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த எழுத்தாளரின் அனைத்து செயல்களுக்கும் காரணம் கூறுவதில்லையா!

சச்சினை தெய்வமாக நினைத்து அவருக்காக வாதிடுவதில்லையா!

அப்படி பார்த்தால் உலகம் முழுவதும் பெரும்பாலும் தனக்காக அல்லது தங்களுக்கு பிடித்த ஒருவருக்காக தவறு என்று தெரிந்தாலும் தங்கள் ஆதரவை தெரிவித்தே வருகிறார்கள்.

நானும் பலர் ரஜினியை விமர்சித்த போது ரஜினிக்காக பரிந்து பேசி இருக்கிறேன் அது எனக்கு ஏற்புடையதாக இருந்தால்.

தவறே செய்யாதவர் கூடத்தான் நண்பராக இருப்பேன்! என்றால் இந்த உலகத்தில் ஒருவர் கூட நண்பராக இருக்க தகுதி கிடையாது.

இதே விஷயம் அனைத்திற்கும் பொருந்தும்.

ரஜினிக்கு ரசிகனாக இருப்பதில் எனக்குப் பெருமையே!

பலருக்கு ரஜினிக்கு ரசிகனாக இருந்தால் என்னவோ கேவலமான விசயமாக தெரிகிறது.

எனக்கு புரியவில்லை மசாலா பட நடிகர் என்பதால் ரஜினி எந்த விசயத்தில் குறைந்து விட்டார்!

என்னைப் போலப் பலருக்கு அவரது படங்கள் பெரும் மகிழ்ச்சியை தருகிறது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்.

அவரது போலித்தனம் இல்லாத எளிமையான நடவடிக்கைகள் அவர் மீதான மரியாதையை அதிகரிக்கிறது.

மற்றவர்களைச் சின்ன வயதினராக இருந்தாலும் மனம் விட்டுப் பாராட்டும் நல்ல மனசு பிடித்து இருக்கிறது.

மற்றவர்களைப் பற்றி என்றும் குறை கூறாத பெரிய மனது பிடித்து இருக்கிறது.

உலக அரங்கில் ஹிந்தி படங்கள் மட்டுமே இந்திய படங்கள் என்று நினைத்துகொண்டு இருந்தவர்களுக்கு தனது படத்தின் மூலம் மற்றவர்களைத் தமிழ் திரையுலகை நோக்கித் திரும்ப வைத்த பெருமைக்குரியவர்.

தென் மாநிலங்கள் என்றாலே இளக்காரமாய் நினைக்கும் வடமாநில சேனல்களைத் தனது ஒரு பேட்டிக்காக இன்னமும் எதிர்பார்க்க வைக்கிறவர்.

இதைப் போல் பல விசயங்களைக் கூறலாம்..இப்படிப்பட்ட ஒருவருக்கு (நடிகருக்கு) ரசிகராக இருப்பதில் எனக்கு பெருமையே!

திரை ரசிகர்கள்

பொதுவாக திரை ரசிகர்களிடம் வைக்கப்படும் குற்றச்சாட்டு “போய் முதல்ல குடும்பத்தைக் கவனிங்கப்பா” என்பது தான்!

என்னவோ ரசிகனாக இருப்பதால் எல்லோரும் நடிகரைக் கட்டிக்கொண்டு அழுவது போலவும் மற்ற வேலைகள் எதுவுமே செய்யாதது போலவும், குடும்பத்தைக் கவனிக்காதது போலவும், வெட்டித்தனமாக திரிவது போலவும், 24 மணி நேரமும் திரையரங்கிலே கிடப்பது போலவும் தாங்கள் ரொம்ப ஒழுங்காக இருப்பது போலவும் “நினைத்துக்கொண்டுள்ளார்கள்”.

எப்படிப்பா உங்களால முடியுது! இதைப் போலப் பேசுபவர்கள் வாதமே இது தான்.

இதைப் போலச் செய்பவர்கள் இருக்கிறார்கள் மறுக்கவில்லை அதற்காக இதைப்போலவே இருப்பவர்கள் தான் அனைவரும் என்று நினைக்காதீர்கள்.

ஒவ்வொருவரும் எப்படி என்பதில் அவரவர் நடந்து கொள்ளும் முறையில் தான் இருக்கிறதே தவிர நடிகர்களுக்கு ரசிகராக இருப்பதில் இல்லை.

இதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

கண்ணா! நடிகர்களுக்கு ரசிகராக இருப்பவர்கள் அனைவரும் பொறுப்பில்லாதவர்கள் கிடையாது. அதே போல ரசிகராக இல்லாதவர்கள் அனைவரும் பொறுப்புள்ளவர்களும் கிடையாது.

பிறந்த நாள் காணும் ரஜினிக்கு ரசிகர்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பொதுவாக ரஜினியை கோபக்கார நடிகராகத்தான் அனைவருக்கும் தெரியும், ஆனால் அமைதியான கதாப்பாத்திரத்தில் அழகிய ரொமான்ஸ் காட்சிகளில் வாய்ப்பு கிடைத்தால் பட்டயகிளப்புவேன் என்று நிரூபித்த படங்களில் “ஜானி”யும் ஒன்று.

இதில் ஸ்ரீதேவி தன் காதலை ரஜினியிடம் கூறுவார் ஆனால் ரஜினி தன் நிலை கருதி மறுத்து விடுவார், ஆனால், “நான் பாட்டு பாடுகிறவள் என்பதால் தானே இப்படி கூறுகிறீர்கள்” என்று ஸ்ரீதேவி அழுவதும் அவரை ரஜினி சமாதானப்படுத்தி தன் காதலை தெரிவிப்பார்.

கண்ணியமாகக் காதலை வெளிப்படுத்திய காட்சிகள் என்று ஒரு பட்டியலிட்டால் இயக்குனர் மகேந்திரன் எடுத்த இந்தக் காட்சி மிக முக்கிய இடம் பிடிக்கும்.

ரஜினி “அதற்குள் என்னைத் தவறா நினைத்து விட்டீர்களே! ஏன் அப்படி எல்லாம் பேசினீங்க” என்று கேட்க.. அதற்கு ஸ்ரீதேவி “நான் அப்படித்தான் பேசுவேன்” என்று கூறுவதும் அதற்கு ரஜினி தன் ஸ்டைலில் வேகமாக ஏன்! ஏன்! என்று கேட்க அது அப்படித்தான் என்பது போல ஸ்ரீதேவி உதட்டைக் குவித்து தலையாட்டுவது.. அருமையான இயல்பான காட்சி 🙂 .

உடன் இளையராஜாவின் அட்டகாசமான பின்னணி இசை.

Read : தலைவர் ரஜினி

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

63 COMMENTS

  1. நீங்கள் சொல்லும் கருத்தில் உடன்படுகிறேன் தல. சும்மா சொல்லிகிட்டு திரியக்கூடாது.

    இந்த பாலாபிஷேகம் எனக்கு புடிக்கல. அது உங்களுக்கும் புடிக்காதுன்னு நினைக்கிறேன். 🙂

  2. சின்னக் கோடம் பாக்கம் சின்ன ரஜினி கிரி வாழ்க !

  3. ரஜினிக்கு "ரசிகனாக" இருப்பதில்
    தவறேதுமில்லை…

  4. கிரி,
    ரஜினி ரசிகர்கள் என்றாலே நினைவிற்கு வருவது “ஜாலியோ ஜிம்கானா”தான்.
    ரசிகர்கள் செய்யும் பல நல்ல விஷயங்கள் வெளியே அவ்வுளவாகத் தெரிவதில்லை. ஆனால் பாலாபிஷேகமும், 60/70 அடி போஸ்டர் மற்றும் முதல் நாள் ஷோவும்தான் பிரதானப் படுத்தப்படுகிறது.

  5. இது மட்டுமா கிரி
    தலைவர் நடிப்பில் ஏராளம் காட்சிகள் உள்ளன
    பார்க்க, ரசிக்க, சிலாகிக்க, மற்றவருக்கு பரிந்துரைக்க
    தலைவர் ரசிகனாய் இருப்பதில் ஒரு தவறும் இல்லை

  6. கற்றுக் கொண்டவற்றை கூறியிருக்கும் விதம் அருமை. தன் படங்கள் மூலம் மக்களை மகிழ்த்துவரும் அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

    சிங்கக்குட்டி said…

    // முள்ளும் மலரும் விட்டு விட்டீர்களே??!! //

    ஆமாம் எப்போதும் கிரி அந்தப் படத்தை மறந்து விடுவார்:))!

  7. ஜெகதீசன் கோவி கண்ணன் ஸ்ரீ கிருஷ்ணா வருகைக்கு நன்றி

    கோவி கண்ணன் வழக்கம் போல ரஜினி பதிவு என்பதால் படிக்காமலே பின்னூட்டம் போட்டுட்டீங்க போல 😉

    ======================================================================

    // ரோஸ்விக் said…
    இந்த பாலாபிஷேகம் எனக்கு புடிக்கல. அது உங்களுக்கும் புடிக்காதுன்னு நினைக்கிறேன். 🙂

    அதே! 🙂

    ======================================================================

    // தர்ஷன் said…

    இது மட்டுமா கிரி
    தலைவர் நடிப்பில் ஏராளம் காட்சிகள் உள்ளன
    பார்க்க, ரசிக்க, சிலாகிக்க, மற்றவருக்கு பரிந்துரைக்க
    தலைவர் ரசிகனாய் இருப்பதில் ஒரு தவறும் இல்லை//

    தலைவரை ரசிக்க 1000 காரணங்கள் உண்டு, ஒரு சிலர் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து கிண்டல் செய்கிறார்கள்.. உங்களின் ரஜினி பற்றி இடுகைகளின் தொடர் வருகைக்கு நன்றி

    ======================================================================

    // Vijay said…

    கிரி,
    ரஜினி ரசிகர்கள் என்றாலே நினைவிற்கு வருவது “ஜாலியோ ஜிம்கானா”தான்.
    ரசிகர்கள் செய்யும் பல நல்ல விஷயங்கள் வெளியே அவ்வுளவாகத் தெரிவதில்லை. ஆனால் பாலாபிஷேகமும், 60/70 அடி போஸ்டர் மற்றும் முதல் நாள் ஷோவும்தான் பிரதானப் படுத்தப்படுகிறது.//

    இவர்களை போன்றவர்களுக்கு இது மட்டுமே கண்ணுக்கு தெரியும். இவர்கள் எல்லாம் அர்ஜுனன் மாதிரி … 😉 ஹி ஹி

    ======================================================================

    //சிங்கக்குட்டி said…

    யப்பா யப்பா யப்பா… என்னா கிரி பொறுத்திருந்த எரிமலை வெடித்த மாதிரி சுர்ர்ர்ர்ன்னு ஒரு கலக்கல் பதிவு :-//

    நன்றி சிங்கக்குட்டி

    //எனக்கென்னவோ இது உடனடியாக எழுதிய பதிவு போல் தெரியவில்லை, நிறுத்தி நிதானித்து வார்த்தைகளை தேடி தேடி எழுதியது போல் தோன்றுகிறது//

    நான் எந்த இடுகையும் பல முறை திருத்தம் செய்த பிறகே வெளியிடுவேன், அது ரஜினி போன்ற சென்சிடிவான இடுகை என்றால் அதிக கவனம் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.. இல்லை என்றால் "நம்ம" ஆளுங்க பாய்ந்துடுவான்களே! 😉

    //முள்ளும் மலரும் விட்டு விட�

  8. //ராமலக்ஷ்மி said…
    கற்றுக் கொண்டவற்றை கூறியிருக்கும் விதம் அருமை. தன் படங்கள் மூலம் மக்களை மகிழ்த்துவரும் அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)//

    நன்றி ராமலக்ஷ்மி

    //ஆமாம் எப்போதும் கிரி அந்தப் படத்தை மறந்து விடுவார்:))//

    :-))) அந்த படம் கோபக்கார ரஜினிங்க 🙂

    இப்ப தான் ரீடர் பிரச்சனை சரி செய்தேன், உடனே நீங்கள் 🙂 நன்றி

    • Ramalakshmi Madame, Mullum Malarum mattum alla, Aarlirundhu Arupadhu Varai, Naan Vazha Vaipen, Sri Ragavendrar, Bhuvana Oru Kelvikuri, Aboorva Ragangal, Bairavi mattrum pala. Negative Characters: 1)Gayathri 2) Moondru Mudichu 3) Pathinaru Vayathinele 4) Mangudi Minor mattrum pala. Sridevi Madame kooda oru thadavai tamil padangalil ennudan endha character rolesgalium nadikka valla ore nadgar Rajini thaan endru koori irukkirar. Kamalai thooki vaithu Superstar Rajiniyai degrade seyyum rasigargal rasanai illathavargal.

  9. //கோவி கண்ணன் வழக்கம் போல ரஜினி பதிவு என்பதால் படிக்காமலே பின்னூட்டம் போட்டுட்டீங்க போல ;-)//

    யப்பா நான் இந்த வெள்ளாட்டுக்கு வரலை. எனக்கு நட்பு தான் முதன்மை

  10. //நமக்கு ஏற்புடைய, நமக்கு சரி என்று படுகின்ற செயலை கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறோம் மற்றவற்றை ஒதுக்கி விடுகிறோம்//

    இது கூட ரஜினி சொன்னது தான், பெரியாரை பார்த்து தான் வியப்புருவதாக ரஜினி கூறியதற்கு பத்திரிகைகள் ஆஸ்திகரான இவர் எப்படி இப்படிக் கூறலாம் என்று விமர்சனங்களை வழமைமாதிரி தொடுத்தனர், அதற்கு கலைஞர் உள்ள மேடையில் ரஜினி வழங்கிய பதில்"ஒரு விருந்துக்கு போகிறோம் அங்கு பத்து பன்னிரண்டு கறிகளை பரிமாறுகிறார்கள் அவற்றில் ஒன்றிரண்டு பிடிக்காவிட்டால் விருந்தே பிடிக்காமல் போய்விடுமா? எமக்கு பிடிக்காததை விடுத்து மீதியை உன்னைத்தானே செய்வோம். " இது எப்பிடி இருக்கு?

  11. ****சிறு திருத்தம்****

    "இல்லை என்றால் "நம்ம" ஆளுங்க பாய்ந்துடுவான்களே! ;-)" இல்லை பாய்ந்துடுவாங்களே! கை ஸ்லிப் ஆகி மெர்ஜ் ஆகிடுச்சு :-))

    ======================================================================

    // கோவி.கண்ணன் said…

    யப்பா நான் இந்த வெள்ளாட்டுக்கு வரலை. எனக்கு நட்பு தான் முதன்மை//

    என்னங்க கோவி கண்ணன் நட்புக்கும் கருத்து வேறுபாடிற்க்கும் சம்பந்தம் இல்லை..நான் அதெல்லாம் தவறா நினைக்க மாட்டேன். கோதால இறங்குங்க :-))

    எத்தனையோ சண்டை வந்தும் உங்களை பிடித்த பதிவரா சொல்லவில்லையா! அப்புறம் என்ன!

    anyway! உங்க விருப்பம் 🙂

    ======================================================================

    // எப்பூடி … said…

    இது கூட ரஜினி சொன்னது தான், பெரியாரை பார்த்து தான் வியப்புருவதாக ரஜினி கூறியதற்கு பத்திரிகைகள் ஆஸ்திகரான இவர் எப்படி இப்படிக் கூறலாம் என்று விமர்சனங்களை வழமைமாதிரி தொடுத்தனர், அதற்கு கலைஞர் உள்ள மேடையில் ரஜினி வழங்கிய பதில்"ஒரு விருந்துக்கு போகிறோம் அங்கு பத்து பன்னிரண்டு கறிகளை பரிமாறுகிறார்கள் அவற்றில் ஒன்றிரண்டு பிடிக்காவிட்டால் விருந்தே பிடிக்காமல் போய்விடுமா? எமக்கு பிடிக்காததை விடுத்து மீதியை உன்னைத்தானே செய்வோம். " இது எப்பிடி இருக்கு?//

    சூப்பரு! 🙂

  12. யப்பா யப்பா யப்பா… என்னா கிரி பொறுத்திருந்த எரிமலை வெடித்த மாதிரி சுர்ர்ர்ர்ன்னு ஒரு கலக்கல் பதிவு :-).

    எனக்கென்னவோ இது உடனடியாக எழுதிய பதிவு போல் தெரியவில்லை, நிறுத்தி நிதானித்து வார்த்தைகளை தேடி தேடி எழுதியது போல் தோன்றுகிறது, மொத்தத்தில் சூப்பர் 🙂

    //பட்டையைகிளப்புவேன் என்று நிரூபித்த படங்களில் "ஜானி"யும் ஒன்று.//

    முள்ளும் மலரும் விட்டு விட்டீர்களே??!!

    "ரெண்டு கை ரெண்டு கால் போனாலும் பொழச்சுக்குவான் சார், கெட்ட பய சார் காளி" என்பதும் முடிவில் "இப்ப என்னங்கடா சொல்றீங்க" என்று தங்கையை கொடுத்துவிட்டு, "இப்ப கூட எனக்கு உங்கள பிடிக்கல சார்" என்று சொல்லும் அந்த ஸ்டைல் ஒன்னு போதுமே கிரி 🙂

  13. // அன்புடன்-மணிகண்டன் said…

    நானும் தலைவர் பற்றி இன்னும் சில தினங்களில் ஒரு பதிவினை போடலாமென்று இருக்கிறேன்..அவசியம் வாங்க//

    கண்டிப்பா! 🙂 புகைப்படம் நானும் இணையத்தில் இருந்து தான் எடுத்தேன்

    ======================================================================

    ILA(@)இளா said…
    விஜய்க்கு ரசிகனாக இருப்பது என்ன தவறு?//

    உங்க கேள்விக்கு ஏற்கனவே பதில் கூறி விட்டேன். இது ரஜினி பற்றிய இடுகை எனவே ரஜினி பற்றி மட்டும் கேளுங்கள் அல்லது பொதுப்படையாக நடிகரை பற்றி மட்டும் பேசுங்கள்.

    ======================================================================

    // அம்மாக்கண்ணு said…

    வளரனும் தம்பி !!!//

    அண்ணா! ஏற்கனவே நான் வளர்ந்து தானுங்கணா இருக்கிறேன், இதற்க்கு மேல் வளர்ந்தால் ரொம்ப பிரச்சனை ஆகிடும் 🙂

  14. உண்மையில் ரஜினி என்ற நல்ல மனிதருக்கு ரசிகனாய் இருப்பதில் பெருமையே…
    கிரி சார்… நானும் தலைவர் பற்றி இன்னும் சில தினங்களில் ஒரு பதிவினை போடலாமென்று இருக்கிறேன்..
    அவசியம் வாங்க…
    அப்புறம்.. அந்த போட்டோ எடுத்துக்கறேங்க… ரொம்ப நாளா தேடிக்கிட்டிருக்கேன்… 🙂

  15. //ரஜினிக்கு "ரசிகனாக" இருப்பதில் என்ன தவறு//
    விஜய்க்கு ரசிகனாக இருப்பது என்ன தவறு?

  16. தன்னடக்கம், தலைக்கனமின்மை, அமைதி,… நாம் அவர் கிட்ட கத்துக்க வேண்டியது நெறைய இருக்கு பாஸ்.

  17. நடிகரின் நடிப்பை ரசிப்பதில் என்ன தவறு? ஒவ்வொருத்தருக்கு ஒரு ரசனை. அது இருக்கட்டும்……

    புதிய வள்ளுவர் * வாசுகி தமிழ்நாட்டுக்குக் கிடைச்சுட்டாங்க(ளாம்)

    நேத்து ஒரு போஸ்டர் பார்த்தேன்.

    என்னமோ போங்க:-)

  18. தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    பதிவுக்கு நன்றி கிரி

    பிண்ணனி இசையை இப்போத்தான் கவனிக்கிறேன். காதல்கொண்டேன் படத்தோட பிண்ணனி இசை இங்கே தான் இருந்து எடுக்கப்பட்டிருக்கு 🙂

  19. யாருக்காவது ரசிகராக இல்லையென்றால் மனித வாழ்க்கை முழுமையடையாதா?

  20. நல்ல பதிவு கிரி..

    ரசிகன் என்பவன்…ரசிப்பவன்.. தங்கள் கூறி இருப்பது போல் விளையாட்டை, இசையை, இயற்கையை என்று பலவற்றை ரசிப்பவனுக்கு என்னென்ன ஈடுபாடு உண்டோ அதேபோலத்தான் திரைத்துறையை ரசிப்பவனுக்கும்.. ஒவ்வொரு துறையிலும் யாரையாவது மிக அதிகமாக நேசிப்பவர்களுக்கு அவர்கள் தம்முள் ஒருவர் என்ற உணர்வு ஏற்பட்டு விடுகிறது.. இது இயற்கை.. சில பேருக்கு இந்த உணர்வு சில நாட்கள் இருக்கும், சிலருக்கு பல வருடங்கள் இருக்கும்.

    உண்மையில் எவரையும் ரசிக்கமாட்டேன் என்று சொல்பவர் எவரையும் விமர்சிக்கவும் மாட்டார்..சினிமா இல்லாமல் இலக்கியத்தில் ஈடுபாடு இருப்பவர்களுக்கு சினிமா பிடிக்காது.. மொழி வளம் குன்றியவர்களுக்கு இலக்கியம் வேப்பங்காய்..

    ஐந்து விரல்களும் ஒன்று போல் இருப்பது இல்லை.. நீங்கள் சொல்வது போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.

    ரஜினியைப் பிடிக்காது என்று சொல்பவர்களுக்கு அவர்கள் கோணத்தில் நூறு சதவீதம் உரிமை இருக்கிறது.. அதே போல ரஜினியை பிடிப்பவர்களுக்கும் நூறு சதவீதம் உரிமை இருக்கிறது. இதில் யாரும் தாழ்வு மனப்பான்மை கொள்ளத்தேவையில்லை..

    என்னைப் பொறுத்தவரை மற்ற நடிகர்களை விட ரஜினியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது மிக அதிகம் என்றே நினைக்கிறேன்.

    எனது தளத்திற்கு வந்து வாழ்த்துக்களை தெரிவித்ததற்கு நன்றி…

    சி டி வந்ததும் கவிதையை அப்லோட் செய்ய முயல்கிறேன்.

  21. கண்ணா…உங்களை மாதிரி கடமையை சரியா செய்துகிட்டு ரசிகரா இருக்குறது தப்பே இல்லை. குடும்ப பொறுப்பைத் தட்டிக் கழிச்சுட்டு எதிர்காலத்தை தொலைச்சுட்டு சொதப்புறவங்களைத்தான் குறை சொல்லுவோம். நடிகர் என்றில்லை…நாம் பார்க்கும் ஒவ்வொரு மனிதனிடமும் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் நிச்சயம் இருக்கும். அவற்றில் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும். அப்படி முன்மாதிரியாகக் கொண்டவர்கள் நாம் அணுகும் தொலைவில் இருந்தால் அவர்களிடம் உள்ள கெட்டதை சொல்லித் திருத்தப் பார்க்கலாம். இல்லை என்றால் நாம் நம்மைப் பொறுத்த வரை மனசாட்சி சொல்லும் சரியான பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டியதுதான்.

  22. ரஜினி அவர்களுக்கு என் பிறந்த தின வாழ்த்துக்கள்.

    பிறந்த நாளுக்கு ரஜினி பற்றி பதிவு எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன். பதிவும் ரஜினி படங்களும் நன்றாக உள்ளது.

    //அவரை கேள்வி கேட்பவர்கள் எவ்வளவு பேர் நேர்மையாக!! இருக்கிறார்கள்? நாம் சரியாக இருந்தால் தானே அடுத்தவரை கேள்வி கேட்பதில் நியாயம் இருக்க முடியும்.//
    இது நல்லா இருக்கு.

    ரஜினியின் பொறுமையைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். குசேலன் பட பிரச்சினையில் அவர் நடந்து கொண்ட‌ விதம் கூட.

    'ஆறிலிருந்து அறுபது வரை' படத்தில் ரஜினியின் நடிப்பு பிடிக்கும். ஆனால் (படத்தில் கூட ) அவர் கவலைப்படுவதை பார்ப்பதை விட சந்தோசமாக, Style ஆக நடிப்பதை பார்க்கவே விரும்புவதால் அண்மைக்காலப் படங்கள்
    (முத்து, படையப்பா, சந்திரமுகி…..) மிக பிடிக்கும்.
    அப்புறம் தில்லு முல்லு

    பேரரசு ரஜினியை இயக்க விரும்புகிறாராம். 'என்வழி'யில் உங்கட comment நன்றாக இருந்தது.

  23. //என் நடை பாதையில்(ராம்) said…
    தன்னடக்கம், தலைக்கனமின்மை, அமைதி,… நாம் அவர் கிட்ட கத்துக்க வேண்டியது நெறைய இருக்கு பாஸ்.//

    உண்மை தான் ராம்

    ======================================================================

    // துளசி கோபால் said…

    நடிகரின் நடிப்பை ரசிப்பதில் என்ன தவறு? ஒவ்வொருத்தருக்கு ஒரு ரசனை. அது இருக்கட்டும்……//

    இதைக்கூறினால் எங்களை முட்டாள்னு சொல்றாங்க! என்ன உலகமடா இது!

    //புதிய வள்ளுவர் * வாசுகி தமிழ்நாட்டுக்குக் கிடைச்சுட்டாங்க(ளாம்) நேத்து ஒரு போஸ்டர் பார்த்தேன்.//

    ஐயையோ! மேடம் யாருங்க அது.. ஒரு வேளை தலைவர வள்ளுவராக்கிட்டாங்களா! ஹி ஹி ஹி

    தயவு செய்து சொல்லுங்க இல்லைனா "சிந்து பைரவி" படத்துல வர ஜனகராஜ் தலை மாதிரி ஆகிடும் :-)))

    ======================================================================

    // கிஷோர் said..

    பிண்ணனி இசையை இப்போத்தான் கவனிக்கிறேன். காதல்கொண்டேன் படத்தோட பிண்ணனி இசை இங்கே தான் இருந்து எடுக்கப்பட்டிருக்கு :)//

    ஹி ஹி ஹி நானும் இந்த பின்னணி இசையை யு டியுபில் பார்க்கும் போது தான் ரசிக்க முடிந்தது ..படம் பார்க்கும் போது கவனிக்கவில்லை. காதல் கொண்டேன் No comments 🙂

    ======================================================================

    // நட்புடன் ஜமால் said…

    ஜோவின் பதிவும் இதுவும் நல்லாயிருந்திச்சி – சொல்லியிருக்கும் மேட்டர்ஸை விட விதம் ரொம்ப நல்லாயிருந்திச்சி.//

    அப்ப விஷயம் சரி இல்லைங்கறீங்க! 😉

    ======================================================================

    // ஈ ரா said…

    ரசிகன் என்பவன்…ரசிப்பவன்.. தங்கள் கூறி இருப்பது போல் விளையாட்டை, இசையை, இயற்கையை என்று பலவற்றை ரசிப்பவனுக்கு என்னென்ன ஈடுபாடு உண்டோ அதேபோலத்தான் திரைத்துறையை ரசிப்பவனுக்கும்.. ஒவ்வொரு துறையிலும் யாரையாவது மிக அதிகமாக நேசிப்பவர்களுக்கு அவர்கள் தம்முள் ஒருவர் என்ற உணர்வு ஏற்பட்டு விடுகிறது.//

    வழிமொழிகிறேன்

    //ஐந்து விரல்களும் ஒன்று போல் இருப்பது இல்லை.. நீங்கள் சொல்வது போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.//

    இதை பலர் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்கிறார்கள்

    ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும் என்பதை ஏன் உணர மாட்டேன் என்கிறார்கள் தெரியவில்லை. இவர்கள் நினைப்பது மட்டுமே உயர்ந்தது என்று கருதுவதே இதற்க்கு காரணம்.

    ======================================================================

    //வாசுகி said…

    பிறந்த நாளுக்கு ரஜினி பற்றி பதிவு எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன் //

    நானும் நீங்கள் இந்த பதிவிற்கு பின்னூட்டம் இடுவீர்கள் என்று நினைத்தேன்!

    //ஆறிலிருந்து அறுபது வரை' படத்தில் ரஜினியின் நடிப்பு பிடிக்கும். ஆனால் (படத்தில் கூட ) அவர் கவலைப்படுவதை பார்ப்பதை விட சந்தோசமாக, Style ஆக நடிப்பதை பார்க்கவே விரும்புவதால் அண்மைக்காலப் படங்கள் (முத்து, படையப்பா, சந்திரமுகி…..) மிக பிடிக்கும். அப்புறம் தில்லு முல்லு//

    எனக்கு ஆறிலிருந்து அறுபது வரை தாறுமாறாக பிடிக்கும் 🙂

  24. // வால்பையன் said…

    யாருக்காவது ரசிகராக இல்லையென்றால் மனித வாழ்க்கை முழுமையடையாதா?//

    ஆஹா! வாங்க வாங்க! உங்களை தான் எதிர்பார்த்தேன் (நிஜமாத்தான்)

    ரசிகருக்கும் மனிதனின் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? அது ஒரு ஓரமா இருக்கிறது, அதுவே வாழ்க்கை இல்லை. வாழ்க்கை என்பது அம்மா அப்பா உடன் பிறந்தவர்கள் கணவன் மனைவி குழந்தைகள் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் நமது கடமைகள் சம்பந்தப்பட்டது.

    ரசிகன் என்பதால் என்பதால் நான் என்ன ரஜினி பற்றிய பதிவாகவே எழுதிக்கொண்டு இருக்கிறேனா! அனைத்தும் தான் எழுதுகிறேன்.. ஆனால் அனைவருக்கும் ரசிகன் என்பவன் மட்டும் அழுத்தமாக தெரிகிறான் 🙂 அது அதன் மீதான கவர்ச்சி! வெறுப்பு!

    ======================================================================

    // சரண் said…

    குடும்ப பொறுப்பைத் தட்டிக் கழிச்சுட்டு எதிர்காலத்தை தொலைச்சுட்டு சொதப்புறவங்களைத்தான் குறை சொல்லுவோம்//

    சரண் குறை சொல்வது என்ன பகுதி நேர வேலை மாதிரி சொல்றீங்க! மற்றவர்களை குறை கூறும் நேரம் நம்மிடம் உள்ள நிறைகளை மேம்படுத்திக்கொள்ளலாம் இல்லையா! அப்புறம் குறை கூறுவது என்ன ஏதாவது கடமையா! கூறியே ஆக வேண்டும் என்று! நம்மை நாமே திருத்திக்க ஏகப்பட்ட விஷயம் இருக்குங்க.

    எதிகாலத்தை தொலைச்சுட்டு சொதப்புறவங்களை தான் குறை சொல்வோம்னு சொல்றீங்க! சரி அதை நீங்க எப்படி தீர்மானிக்க முடியும்..இனொருவர் பார்வைக்கு நீங்க செய்வது கூட வெட்டி வேலையா தெரியுமே! அதற்க்கு என்ன செய்வது? இதையே படிக்கும் ஒருவர் இவர் எதுக்கு இங்கே தேவை இல்லாம விளக்கம் கொடுத்துட்டு இருக்காரு உருப்படியா செய்யாம! என்று நினைத்தால்.. அவர் பார்வையில் நீங்களும் காலத்தை விரயம் செய்பவராக தானே அர்த்தம்.

    //நடிகர் என்றில்லை…நாம் பார்க்கும் ஒவ்வொரு மனிதனிடமும் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் நிச்சயம் இருக்கும். அவற்றில் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும்//

    சந்தேகமே இல்லை வழிமொழிகிறேன்

    //அப்படி முன்மாதிரியாகக் கொண்டவர்கள் நாம் அணுகும் தொலைவில் இருந்தால் அவர்களிடம் உள்ள கெட்டதை சொல்லித் திருத்தப் பார்க்கலாம்//

    திருத்த பார்க்கலாம் என்பதெல்லாம் ரொம்ப அதிகமா எனக்கு படுதுங்க! நாம கூறி யாரும் திருந்தும் நிலையில் காலம் இல்லை. இப்பெல்லாம் தடுக்கி விழுந்தால் அறிவுரை தான். நம்ம கருத்தை கூறலாம் இது தவறு என்று எடுத்துக்கூறலாம்(இதையே எவனும் கேட்க மாட்டேன்குறான்)..திருத்துவதெல்லாம் நடக்கிற காரியமா எனக்கு தெரியல!

    //இல்லை என்றால் நாம் நம்மைப் பொறுத்த வரை மனசாட்சி சொல்லும் சரியான பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டியதுதான்.//

    இதை சொன்னீங்களே! வாஸ்தவமான பேச்சு! தாறுமாறா வழிமொழிகிறேன் 🙂

  25. நேத்து ஒரு போஸ்டரைப் பார்த்தேன் கிரி.

    லதா நாற்காலியில் அமர்ந்திருக்க ரஜினி பக்கத்துலே நிற்பது போல.

    வெள்ளை உடை இருவருக்கும்.

    வள்ளுவன் வாசுகியை வாழ்த்துக்கிறோமுன்னு இருந்துச்சு.

    ரஜினி, லதான்னு கூப்புட்டவுடன்,

    கிணத்துக் கயித்தை அப்படியே விட்டுட்டு ஓடிவரும் லதாவைக் கற்பனை செஞ்சு பார்த்தேன்:-)))))

    இன்னும் ஏராளமா, விதவிதமான போஸ்டர்கள் எக்கச் சக்கம்.

    நம்ம நேரம் பாருங்க. ட்ராஃபிக் ஃப்ளோ ஆகிக்கிட்டு இருக்கு. எடுக்கத் தோதுப்படலை!

  26. //துளசி கோபால் said…

    ரஜினி, லதான்னு கூப்புட்டவுடன்,

    கிணத்துக் கயித்தை அப்படியே விட்டுட்டு ஓடிவரும் லதாவைக் கற்பனை செஞ்சு பார்த்தேன்:-)))))//

    ஹா ஹா ஹா இப்படி தலைவரை டோட்டல் டேமேஜ் பண்ணிட்டீங்களே! :-)))))))))

    //நம்ம நேரம் பாருங்க. ட்ராஃபிக் ஃப்ளோ ஆகிக்கிட்டு இருக்கு. எடுக்கத் தோதுப்படலை//

    அது உங்க நேரம் இல்லை எங்க நேரம் ஹா ஹா ஹா

  27. //அனைவருக்கும் ரசிகன் என்பவன் மட்டும் அழுத்தமாக தெரிகிறான் 🙂 அது அதன் மீதான கவர்ச்சி! வெறுப்பு!//

    ரசிகன் என்பவன் மட்டுமல்ல,
    எதன் மீதாவது தீராத பற்று கொண்டிருந்தாலே எனக்கு வித்தியாசமாக தான் தெரிகிறது!

    ஆயிரம் தான் நாம் ஜால்ஜாப்பு சொன்னாலும் ஒன்றின் மீது அளவுகடந்த பற்று ஏற்படும் போது அதன் போட்டியாளர்கள் மீது நம்மையறியாமலேயே வெறுப்பு ஏற்படுகிறது,

    நான் இதுவரை யாரையும் திட்டி பதிவு போட்டதில்லையெவென நீங்கள் கூறலாம், அன்பையோ, வெறுப்பையோ பதிவு போட்டு தான் காட்டனும்னு ஒன்னும் அவசியமில்லையே!

    ரசிகர்களும், மதவாதிகளும் எனக்கு ஒரே மாதிரி தான் தெரிகிறார்கள்!

  28. தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  29. // வால்பையன் said…

    //அனைவருக்கும் ரசிகன் என்பவன் மட்டும் அழுத்தமாக தெரிகிறான் 🙂 அது அதன் மீதான கவர்ச்சி! வெறுப்பு!//

    ரசிகன் என்பவன் மட்டுமல்ல,
    எதன் மீதாவது தீராத பற்று கொண்டிருந்தாலே எனக்கு வித்தியாசமாக தான் தெரிகிறது!//

    ஓ! அப்படி வருகிறீர்களா! அது இயற்கை அருண். பாருங்க உங்களுக்கு இப்படி தோன்றுது என்னை போன்றவர்களுக்கு வேற மாதிரி தோன்றுது. நான் இதை தவறா நினைக்கலை நீங்க சொல்வதையும் மாற்றுக்கருத்தாகத்தான் நினைக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி..

    //ஆயிரம் தான் நாம் ஜால்ஜாப்பு சொன்னாலும் ஒன்றின் மீது அளவுகடந்த பற்று ஏற்படும் போது அதன் போட்டியாளர்கள் மீது நம்மையறியாமலேயே வெறுப்பு ஏற்படுகிறது//

    சந்தேகமே வேண்டாம் ..100% வழிமொழிகிறேன் ..இதை இல்லை என்றால் அவர் அதிசயப்பிறவியாகத்தான் இருக்கணும் 🙂

    //நான் இதுவரை யாரையும் திட்டி பதிவு போட்டதில்லையெவென நீங்கள் கூறலாம், அன்பையோ, வெறுப்பையோ பதிவு போட்டு தான் காட்டனும்னு ஒன்னும் அவசியமில்லையே!//

    இதையும் ரிப்பீட்டிக்குறேன் 🙂

    உண்மையில் இப்படி இருக்கவே பிடிக்கவில்லை அருண்! நிஜமாத்தான் நம்புங்க. என்னால் முழுதும் உடனே மாற முடியவில்லை ஆனால் மாற முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன்.. எலோருக்கும் நல்லவன் வேஷம் போடுற மாதிரி தான் இதுவும்.

    சுருக்கமா கூறினால் என்னய்யா பிழைப்பு இது என்று இருக்கிறது! 🙂

    இந்த விசயத்துல உங்களை ரொம்ப பிடிக்கும், நண்பர் என்றாலும் மாற்றுக்கருத்து இருந்தால் தைரியமாக கூறுவீர்கள்..அதனாலையே உங்களை எதிர்பார்த்தேன் என்று கூறினேன்.

    //ரசிகர்களும், மதவாதிகளும் எனக்கு ஒரே மாதிரி தான் தெரிகிறார்கள்!//

    ஏற்றுக்கொள்ளும்படி தான் உள்ளது..ஒரு சில விதி விலக்குகளுடன் 🙂

  30. கடையம் ஆனந்த் வருகைக்கு நன்றி

    ======================================================================

    //குறை ஒன்றும் இல்லை !!! said…

    பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு சொன்னது கருடா சௌக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது !!//

    என்னய்யா இது! ராஜ் ரஜினிக்கு வாழ்த்து!! 😉 சொல்லுவாருன்னு பார்த்தால் இப்படி பாட்டுப்பாடிட்டு இருக்காரு! :-))) இதுல யாரு பரமசிவன், பாம்பு, கருடன்னு தெரியலையே! "ராஜ் ரஜினி" ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு ஹி ஹி ஹி ஆனா எதோ செட் ஆகலை! 😉

    ராஜ் பொங்குவாருன்னு பார்த்தால் இப்படி சப்புன்னு பாட்டை பாடிட்டு போயிட்டாரே! :-))) என்ன கொடுமை சார் இது! சரி பாப்ப்ப்ப்ப்போம் 🙂

  31. பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு சொன்னது கருடா சௌக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது !!

  32. நானும் ரஜினி ரசிகைதான் என்கிற முறையில் உங்கள் பதிவு முழுமையையும் ஆமோதிக்கிறேன். ரஜினிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் இதன் மூல தெரிவிச்சுக்கறேன்!

  33. //தவறே செய்யாதவர் கூடத்தான் நண்பராக இருப்பேன்! என்றால் இந்த உலகத்தில் ஒருவர் கூட நண்பராக இருக்க தகுதி கிடையாது//

    இது மாதிரி முடிவு எடுத்தா ஒரு மெயில் தட்டிவிடுங்க. நான் இருக்கேன் உங்களுக்கு :)-

    கிரிக்கெட் ரசிகனான நான் நடிகர்களை ரசிப்பவர்களை கீழ்நோக்கி பார்ப்பதில் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா ? அதை கெடுக்க முயற்சி செயாதீர்கள் :)- விளைவுகள் விபரீதமாக இருக்கும்.

  34. மிகத் தெளிவான பார்வை. சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்…

    ரஜினி என்ற பண்பாளர், நல்ல மனிதர் நீடு வாழ வாழ்த்துவோம்… என்றும் அவர் ரசிகர்களாக!

    -வினோ

  35. Dear Giri,

    Excellent article….superb..Particularly

    கண்ணா! நடிகர்களுக்கு ரசிகராக இருப்பவர்கள் அனைவரும் பொறுப்பில்லாதவர்கள் கிடையாது அதே போல ரசிகராக இல்லாதவர்கள் அனைவரும் பொறுப்புள்ளவர்களும் கிடையாது.

    Chancea illa….superb.

    Viji

  36. கிரி, தலைவரை பற்றி உங்கள் அற்புதமான இடுகைகளை கவுரவிக்கும் வகையில், என் பதிவில் உங்கள் இடுகைகளுக்கு ஒரு இணைப்பு கொடுத்து, http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_12.html என் நன்றியை தெரிவிப்பதில், நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  37. புதுவை சிவா ஜோ நந்தினி மற்றும் நரேன் வருகைக்கு நன்றி

    ======================================================================

    // மணிகண்டன் said…

    இது மாதிரி முடிவு எடுத்தா ஒரு மெயில் தட்டிவிடுங்க. நான் இருக்கேன் உங்களுக்கு :)-//

    :-)))) ரொம்ப நல்லவங்களை நான் நம்பறது இல்லை

    //கிரிக்கெட் ரசிகனான நான் நடிகர்களை ரசிப்பவர்களை கீழ்நோக்கி பார்ப்பதில் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா ? அதை கெடுக்க முயற்சி செயாதீர்கள் :)- விளைவுகள் விபரீதமாக இருக்கும்//

    இதில் ஓர் ஆனந்தமா! நல்ல இருக்குங்கையா உங்க ஆனந்தம் 🙂 ஆனா எனக்கு கிரிக்கெட்டும் பிடிக்கும்.

    ======================================================================

    வினோ லக்ஷ்மி விஜயகுமார் வருகைக்கு நன்றி

    சிங்கக்குட்டி சுட்டி கொடுத்தமைக்கு நன்றி

  38. //குறை ஒன்றும் இல்லை !!! said…
    ஹா ஹா ஹா.. பால் தான் பொங்கும் பச்ச தண்ணி எப்படி பொங்கும்?//

    அருவி மாதிரி பொங்குவீங்க என்று சொன்னேன் ஹி ஹி ஹி

    //எனக்கு எந்த நடிகனையும் பிடிக்காது, உங்களுக்கு ஒரு நடிகனை பிடிக்கும்.. நான் என்ன சொன்னாலும் நீங்க ஏத்துக்க போறதில்லை நானும் .. அதான் ..//

    சூப்பரு! ராஜ் நீங்க மனுசனே இல்லை! டென்ஷன் ஆகிடாதீங்க அதையும் தாண்டி புனிதமானவர்னு சொல்ல வந்தேன் 😉

  39. //ராஜ் பொங்குவாருன்னு பார்த்தால் இப்படி சப்புன்னு பாட்டை பாடிட்டு போயிட்டாரே! :-))) என்ன கொடுமை சார் இது! சரி பாப்ப்ப்ப்ப்போம் :-)//
    ஹா ஹா ஹா.. பால் தான் பொங்கும் பச்ச தண்ணி எப்படி பொங்கும்?

    எனக்கு எந்த நடிகனையும் பிடிக்காது, உங்களுக்கு ஒரு நடிகனை பிடிக்கும்.. நான் என்ன சொன்னாலும் நீங்க ஏத்துக்க போறதில்லை நானும் .. அதான் ..

  40. ரஜினியை மக்களுக்கு பிடித்திருப்பதற்கு காரணம் "ரொம்ப சிம்பிள். வெரி டெடிகேட்டட் ஆர்டிஸ்ட், இதர..இதர" – என்று சொல்லபட்டாலும், அவருக்கு இயற்கையிலேயே, உண்மை என்னவென்றால் பிறப்பிலேயே அமைந்திருக்கும் தனித்தன்மையும், ஆங்கிலத்தில் charm, charisma எனப்படும் பார்ப்பவர்களை ஈர்க்கும் தோற்றமும் தான். என்னதான் உயிரைக் கொடுத்து வெறியாய் நடித்தாலும் இதெல்லாம் வராது, ஏனெனில் இது இயற்கையாய் அமையப் பெறுவது. இந்த விஷயங்கள் அமையப் பெற்ற நடிகர்கள் வெகுசிலர் தான். Clint Eastwood, Charlie chaplin, Al pacino மற்றும் இளைய தலைமுறையில் Johnny Depp. இந்தியாவில், ஏன் ஆசியாவில் ரஜினி மட்டுமே

    ரஜினியின் "ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி" போன்ற வசனங்களை இந்தியாவில் வேறு யார் சொன்னாலும் பொருத்தமில்லாமல் தான் இருக்கும். ஆனால் ரஜினி அதை சொல்லும்போது அவரைப் பிடிக்காதவர்களுக்குக் கூடப் பிடிக்கும்.

    – எங்கேயோ படிச்சது…. ஆனால் மேல் சொன்னவை தான் நிதர்சனம்

    simple, spiritual, stylish = our Super star

    சொல்றவங்க சொல்லட்டும், நான் ரஜினி ரசிகன் யாருக்காகவும் மாற்றி கொள்ள முடியாது, சின்ன புத்தி உள்ளவங்க பேச்சை நம்ம எதுக்கு கண்டுக்கணும்.. சரி தானே?

  41. கிரி… என்ன கிரி… இப்புடி கொதிச்சி எழுந்துப்பூட்டீங்க. சரி… சரி.. வுடுங்க…! ஒரு நடிகருக்கு ரசிகனாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. நடிப்பு ஒரு கலை. அந்த கலை‌யில் திறமையை காட்டி முன்னேறியிருக்கிற ஜீவனுக்கு ரசிகனாக இருந்து ஊக்குவிப்பதுதான் ஒரு ரசிகனின் கடமை.

    பிறந்த நாள் வாழ்த்து பதிவு போடுவீங்க. ரஜினி பற்றிய மலரும் நினைவுகள் போடுவீங்க(ஏற்கனவே நெறய நீங்க போட்டுருக்கீங்க… இருந்தாலும்)ன்னு நெனச்சு உள்ள வந்தா… வெளுத்து கட்டிருக்கீங்களே கிரி.! ஓகே. தலைவர் என்னிக்குமே தலைவர்தான். அன்பு… பணிவு… துணிவு… இவைதான் தலைவரிடம் நான் கற்றுக் கொண்ட பாடம். வாழ்த்துக்கள் கிரி!

  42. to be a fan of thalaivar,or anybody is a matter of choice and taste, one cant comment that anyothers taste as inferior or bad, for some reading the great works of marx, may bring infinite joy, for some watching a class iranian movie may bring joy, for some watching bradman or sachin bat is a pure joy, similairly for fans like us watching rajini gives a great joy,
    i believe that we can do anything until and unless we are not disturbing the lives of others.
    a fan of rajini doesnt mean that he hates all the other actors and all the things, only a prejudiced mind can think like that. fans at ther own levels do several social acts, in a burst of joy sometimes they may go overboard by doing milk abhisekam etc, its just the expression of love, i ont want to justify the acts, but its a comparitively smaller thing,its like a dedicating a special day for our loved one, we may do weird things for the sake of love, just in thalaivars bday and the release day,fans are not frantics to do palabhisekam everyday,
    giri sir thanks for ur great post, i wanted to type in tamil but couldnt type !!

  43. கிரி: உங்க பதிவு ரொம்ப நல்லாயிருக்கு!
    பாராட்டுக்கள்! 🙂

  44. ஒரு நடிகராக சினிமா வியபாரியாக இருந்திருந்தால் அவருக்கு இவ்வளாவும் விமர்சனம்க்கள் வந்திருக்காது

    அவர் அரசியலில் தலையிட்டு செய்த காமெடிகளும்,வ்ருவேன் மாட்டேன் என சொல்லாமல் நடிப்பதுமே அவர் மேல் பலருக்கு எரிச்சலை உண்டாக்கி விமர்சனம் செய்ய வைத்துள்ளது

  45. ரஜீனி மட்டுமில்லங்க… எந்த ஒரு நடிகனுக்கும் ரசிகனாய் இருப்பதில் தப்பில்லை. ஆனால் ரசிகன் என்ற எல்லையைத்தாண்டி நடிகனை கடவுளாகவும், ரசிகனாய் இருந்தவன் பக்தனாய் மாறும்போதுதான் பிரச்சனை. நீங்களும் ரசிகனாகவே இருங்கள்…

  46. Nothing wrong in being a FAN of any actor/actress. When the so called fan starts to "see" that particular cine actor/actress as a GOD, problem starts. Most of us do not know the boundaries, do not want to accept that the personality on screen is also a mere HUMAN.

  47. // suki said…
    to be a fan of thalaivar,or anybody is a matter of choice and taste, one cant comment that anyothers taste as inferior or bad//

    இதுவே என் கருத்தும்

    //some reading the great works of marx, may bring infinite joy, for some watching a class iranian movie may bring joy, for some watching bradman or sachin bat is a pure joy, similairly for fans like us watching rajini gives a great joy, //

    இதை ஏன் சிலர் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று தெரியவில்லை. ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபட்டது.

    //sometimes they may go overboard by doing milk abhisekam etc, its just the expression of love, i ont want to justify the acts, but its a comparitively smaller thing,its like a dedicating a special day for our loved one, we may do weird things for the sake of love, just in thalaivars bday and the release day,fans are not frantics to do palabhisekam everyday//

    நீங்கள் கூறுவதை போல அவர்கள் தினமும் செய்வது இல்லை என்றாலும் இது தவறு எனபது என் கருத்து..கடவுளுக்கு பாலை அபிஷேகம் செய்யும் போதே மனது வலிக்கிறது..பசியால் அழும் குழந்தைகளை நினைத்து.. அப்படி இருக்கும் போது இவற்றை ஜீரணிக்க முடியவில்லை. இது என் கருத்து மட்டுமே.

    //giri sir thanks for ur great post, i wanted to type in tamil but couldnt type !!//

    நன்றி சுகி உங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு, தமிழில் எழுத நீங்கள் இங்கே செல்லலாம் "http://www.google.com/transliterate/indic/TAMIL"

  48. // பிரியமுடன் பிரபு said…

    அவர் அரசியலில் தலையிட்டு செய்த காமெடிகளும்,வ்ருவேன் மாட்டேன் என சொல்லாமல் நடிப்பதுமே அவர் மேல் பலருக்கு எரிச்சலை உண்டாக்கி விமர்சனம் செய்ய வைத்துள்ளது//

    அவர் அரசியலில் தலையிட்டு செய்த காமெடிகள் என்று எதை கூறுகிறீர்கள்?

    அவர் 96 தேர்தலில் வாய்ஸ் கொடுத்த போது அப்போது இருந்த நிலைமைக்கு ஜெயாவின் எதிர்ப்புக்கு மேலும் உதவியாக இருந்தது, எனவே திமுக பெரும் வெற்றி பெற்றது.

    பாபா பட வெளியீட்டின் போது பாமக செய்த ரகளையால் பாதிக்கப்பட்ட ரஜினி அவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறினார், ராமதாசை ராட்ஷசன் என்று கூறினார். அதை பொது மக்கள் எண்ணத்தில் கூறாமல் தன் தனிப்பட்ட இழப்பிற்காக கூறியதால் மற்றும் அபோது அந்த கூட்டணிக்கு நல்ல ஆதரவு இருந்ததாலும் பாமக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

    பிறகு மத்தியில் BJP தேர்தலில் வெற்றி பெரும் என்று அனைவரும் கருதினார்கள் நிலையான ஆட்சி வரும் என்று கருதி ரஜினி அவர்கள் கூட்டணியை ஆதரித்தார் அதில் மாநிலத்தில் ஜெ ஆதரவு என்பதால் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டியதாக இருந்தது, ஆனால் முடிவு எவரும் எதிர்பார்க்காத முடிவாக அந்த தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது, இதற்க்கு முக்கிய காரணம் மாநிலத்தில் நிலவிய ஆளும் கட்சிக்கான ஆதரவு எதிர்ப்பு சூழல்.

    இவை இரண்டு மட்டுமே ரஜினி அரசியல் ரீதியாக செய்தது. முதல் கூறியது அனைவரும் அறிந்தது அப்போது ரஜினிக்கு இருந்த மாஸ் அனைவரும் அறிந்தது, தேர்தலில் நின்று இருந்தால் வெற்றி பெறக்கூட அதிக வாய்ப்பு இருந்தது.

    அதன் பிறகு இன்றுவரை அரசியல் ரீதியாக எந்த கருத்தையும் அவர் கூறுவதில்லை, தனக்கு கிடைத்த பாடங்களில் இருந்து அமைதியாகவே இருந்து வருகிறார். அரசியல் வசனங்களையும் பாபா படத்தோடு ஏறக்கட்டி விட்டார். அதன் பிறகு வந்த சந்திரமுகி, சிவாஜி குசேலன் எதிலும் அரசியல் வசனங்கள் இல்லை.

    அரசியல் ரீதியாக கருத்து கூறுவது அவரவர் தனிப்பட்ட விஷயம், இதில் காமெடியாக நினைக்க என்ன இருக்கிறது? நீங்கள் கூட சில நேரங்களில் திமுக அல்லது அதிமுக வெற்றி பெற நினைத்து இருக்கலாம் எதோ காரணத்தால் ஆனால் நீங்கள் நினைப்பதற்கு மாறாக வேறு ஒருவர் வெற்றி பெற்றால் நான் உங்களை காமெடியன் என்று கூறினால் அது சரியா? அல்லது நியாயம் தான் ஆகுமா!

    ரஜினி செய்த செய்து கொண்டு இருக்கிற தவறு, தான் அரசியலுக்கு வருகிறேனா இல்லையா என்பதை தெளிவாக கூறவில்லை, இது மட்டுமே அவர் செய்த தவறு காரணம் முந்தைய படங்களில் அரசியல் பன்ச் வனசங்கள் வைத்து ரசிகர்களை ஒரு எதிர்பார்ப்பில் வைத்து இருந்து விட்டார், இப்போது அதை தெளிவாக கூறாமல் இழுத்தடிப்பது தவறான ஒன்று. இதை தவிர அவர் அரசியலில் எந்த தவறும் செய்யவில்லை, அதற்கு அவர் அரசியல்வாதியும் அல்ல.

    எனக்கு இந்த விளக்கத்தை கொடுக்க வாய்ப்பளித்த உங்களுக்கு என் நன்றி பிரபு.

    ======================================================================

    நாஞ்சில் பிரதாப் மற்றும் அழகன் கருத்திற்கு நன்றி.

    நீங்கள் கூறுவது போல ரசிகனாக மட்டும் அனைவரும் இருந்து விட்டால் பல பிரச்சனைகள் குறையும், ஆனால் பலர் தங்கள் அன்பு அல்லது ஆதரவை கண்மூடித்தனமாக தெரிவிக்கும் போது இதைப்போல பல சங்கடங்கள் ஏற்படுகிறது. இதை எக்காலத்திலும் தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம்.

    வருண் உங்கள் பாராட்டிற்கு நன்றி 🙂

  49. Girri Thala,
    Yennna thallla Pongiteenga
    Romba sry Giri avasarama orruku poyitu ippa than vanthu pathennn.. Kalakkal PAthivu thalaivaaa… Ore varthai la sollanum naaa – Thalaivaroda rasigarkal la nee oru superbbb rasigann paaa..

    Thalaivar birthday kumm, intha year end kumm sethuu seriyana pathivuuuu.. nandri Giri ivalavu azhaga unga karuthukal sonnathuku

  50. அருண் வாங்க! வாங்க! உங்களை எதிர்ப்பார்த்தேன், என்னடா! இன்னும் ஆளை காணலையே சரி வேலை இருந்து இருக்கும் போல என்று நினைத்துக்கொண்டேன்.

    உங்கள் பாராட்டிற்கு நன்றி அருண்.

  51. நடிகர்களுக்கு ரசிகராக இருப்பவர்கள் அனைவரும் பொறுப்பில்லாதவர்கள் கிடையாது அதே போல ரசிகராக இல்லாதவர்கள் அனைவரும் பொறுப்புள்ளவர்களும் கிடையாது.

    very good giri

  52. நடிகர்களுக்கு ரசிகராக இருப்பவர்கள் அனைவரும் பொறுப்பில்லாதவர்கள் கிடையாது அதே போல ரசிகராக இல்லாதவர்கள் அனைவரும் பொறுப்புள்ளவர்களும் கிடையாது.

    very good giri

  53. கிரி நீங்கள் எப்போதும் கூடிய மட்டும் சூப்பர் ஸ்டார் பற்றி உங்கள் கிரி ப்ளோகில் கொடுக்க வேண்டும் மட்டற்ற நல்ல nigaichiigalayum கொடுத்தால் சந்தோஷம்

  54. கிரி நீங்கள் தலைவரின் சிறந்த ரசிகர்களில் ஒருவர். தயவு செய்து கமல்ஹாசன் நடிப்பில் குறை காண வேண்டும். ஏனென்றால் கமல்ஹாசன் பெர்பெக்ட் நடிகர் இல்லை, நடிகர் திலகம் கூட விமர்சனம் செய்ய படும்போது ஏன் நீங்கள் கமல்ஹாசன் பற்றி குறை கூறுவது எப்படி தவறு? ரஜினி பற்றி நீங்கள் உட்பட பல ரசிகர்கள் nyanamana முறையில் ஏற்று கொண்டார்களே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here